Today rasi palan – 21.07.2019

Today rasi palan – 21.07.2019

இன்றைய ராசிப்பலன் –  21.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

21-07-2019, ஆடி 05, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.40 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. சதயம் நட்சத்திரம் காலை 07.25 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

ராகு சுக்கி
சந்தி திருக்கணித கிரக நிலை

21.07.2019

செவ் சூரிய

புதன் (வ)

கேது

சனி (வ)

குரு(வ)

 

இன்றைய ராசிப்பலன் –  21.07.2019

மேஷம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

ரிஷபம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.

மிதுனம்

இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் சற்று மந்த நிலை, கை கால் அசதி உண்டாகும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிட்டும். சிலருக்கு ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

கன்னி

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிட்டும்.

துலாம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

விருச்சிகம்

இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். பிள்ளைகளால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மகரம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.

கும்பம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

மீனம்

இன்று எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் சற்று குறையும்.

வார ராசிப்பலன் – ஜுலை 21 முதல் 27 வரை 

வார ராசிப்பலன் – ஜுலை 21 முதல் 27 வரை 

ஆடி 5 முதல் 11 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

ராகு சுக்கி
சந்தி திருக்கணித கிரக நிலை

 

செவ் சூரிய

புதன் (வ)

கேது

சனி (வ)

குரு(வ)

 

கிரக மாற்றம்

23-07-2019 கடகத்தில் சுக்கிரன் பகல் 12.49 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

கும்பம்      19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.

மீனம்       22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.

மேஷம்     24-07-2019 மாலை 03.40 மணி முதல் 27-07-2019 அதிகாலை 01.10 மணி வரை.

ரிஷபம்     27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

21.07.2019 ஆடி 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம்.  தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இவ்வாரத்தில் சூரியன், செவ்வாய் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் நலத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்– வாங்கல் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் –  21, 25, 26.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் விலகி மனமகிழ்ச்சி அடைவீர்கள். பனவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி மற்ற கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். சனி பகவான் வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  22, 23, 27.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது பிரச்சினைகள் விலகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ பெருமானை வணங்குவதும் முருக வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –  22, 23, 24, 25, 26.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்ப்பதும், சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றங்களை உங்களுக்கு தரும் அமைப்பாகும். தற்போது நிலவும் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொள்வதாலும், உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்   25, 26, 27.

சந்திராஷ்டமம் –   19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் சில ஏற்படும் என்றாலும் சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் சிறப்பான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சஷ்டி அன்று முருக பெருமானை வணங்கி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  21, 27.

சந்திராஷ்டமம் –   22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாராள தனவரவுகள் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்வதில் எந்த தடையும் இருக்காது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். சனிக்கிழமை சனிபகவானை வழிபடுவதும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் நன்மையை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள்   21, 22, 23.

சந்திராஷ்டமம் – – 24-07-2019 மாலை 03.40 மணி முதல் 27-07-2019 அதிகாலை 01.10 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும் தொழில் வியாபார ரீதியாக வெற்றி மேல் வெற்றி தரும் அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வளர்ச்சிக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். தாராள தனவரவுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்மன் வழிபாட்டையும், விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்   22, 23, 24, 25, 26.

சந்திராஷ்டமம் –   27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டு. போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும். கூட்டாளிகளும் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். சிறப்பான பண வரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். சனி, கேது 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது நிதானத்தை கடைப்பிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கினால் சகல நன்மைகளும் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  24, 25, 26, 27.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரமாகும். தேவையற்ற அலைச்சல்கள், வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். முடிந்த வரை புதிய முயற்சிகளை தவிர்ப்பது பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் கிட்டும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் ஆதரவால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான நிலை இருக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு செய்வது, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  21, 27.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் ராகு, 7-ல் சுக்கிரன், 11-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் உன்னத அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவான் வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  22, 23, 24.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவிடையே இருந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் சந்தோஷமும் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். வியாழக்கிழமை குருபகவான் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்   21, 25, 26.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், சூரியன், புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் எந்தவித பிரச்சனைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தாராள தனவரவால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து சென்றால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். முடிந்த வரை உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த கடன்க-ளும் வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  22, 23, 27.

 

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

Today rasi palan – 20.07.2019

Today rasi palan – 20.07.2019

இன்றைய ராசிப்பலன் –  20.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

20-07-2019, ஆடி 04, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 09.14 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. நாள் முழுவதும் சதயம் நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

ராகு சுக்கி
சந்தி திருக்கணித கிரக நிலை

20.07.2019

செவ் சூரிய

புதன் (வ)

கேது

சனி (வ)

குரு(வ)

 

இன்றைய ராசிப்பலன் –  20.07.2019

மேஷம்

இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.

ரிஷபம்

இன்று உத்தியோகஸ்தர்கள் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

சிம்மம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வருமானம் பெருகும்.

கன்னி

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத விதமாக திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதார பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். வியாபார ரீதியாக பண நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் நிலை சற்று சுமாராக இருக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் தொடங்க உகந்த நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். எதிர்பாராத உதவி கிட்டும்.

Today rasi palan – 19.07.2019

Today rasi palan – 19.07.2019

இன்றைய ராசிப்பலன் –  19.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

19-07-2019, ஆடி 03, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 06.55 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

ராகு சுக்கி
திருக்கணித கிரக நிலை

19.07.2019

செவ் சூரிய

புதன் (வ)

  சந்தி
கேது

சனி (வ)

குரு(வ)

 

இன்றைய ராசிப்பலன் – 19.07.2019

மேஷம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 2.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். மன அமைதி உண்டாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 2.58 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வண்டி வாகனங்கள் பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுத்த காரியம் வெற்றி அடைய மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். வேலையில் பணிசுமை குறையும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலப்பலன் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

Today rasi palan – 18.07.2019

Today rasi palan – 18.07.2019

இன்றைய ராசிப்பலன் –  18.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

18-07-2019, ஆடி 02, வியாழக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை துதியை திதி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 01.34 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

ராகு சுக்கி
திருக்கணித கிரக நிலை

18.07.2019

செவ் சூரிய

புதன் (வ)

  சந்தி
கேது

சனி (வ)

குரு(வ)

 

இன்றைய ராசிப்பலன் –  18.07.2019

மேஷம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

கடகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கன்னி

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் கைகூடும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணம் கொடுக்கல் வாங்கலில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

மகரம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெற்றோரின் ஆதரவு கிட்டும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.

Today rasi palan – 17.07.2019

Today rasi palan – 17.07.2019

இன்றைய ராசிப்பலன் –  17.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

17-07-2019, ஆடி 01, புதன்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.51 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திராடம் நட்சத்திரம் இரவு 10.58 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் இரவு 10.58 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தட்சிணாயண புண்யகால ஆரம்பம்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

ராகு சுக்கி
திருக்கணித கிரக நிலை

17.07.2019

செவ் சூரிய

புதன் (வ)

  சந்தி
கேது

சனி (வ)

குரு(வ)

 

இன்றைய ராசிப்பலன் –  17.07.2019

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் மன ஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

கடகம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சுபசெலவுகள் உண்டாகும். பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கன்னி

இன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன்கள் ஓரளவு குறையும்.

துலாம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

விருச்சிகம்

இன்று தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

தனுசு

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

மகரம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். எந்த செயலிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் யாவும் அனுகூலப் பலனை அளிக்கும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை உண்டாகும். வீட்டில் பெற்றோருடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும். வேலையில் புதிய நட்பு கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. அனைத்து தேவைகளும் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

Today rasi palan – 16.07.2019

Today rasi palan – 16.07.2019

இன்றைய ராசிப்பலன் –  16.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

16-07-2019, ஆனி 31, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 03.08 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூராடம் நட்சத்திரம் இரவு 08.43 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் இரவு 08.43 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். குருபூர்ணிமா முருக வழிபாடு நல்லது. சந்திர கிரகணம். பின்இரவு 01.30-04.30 (இந்தியாவில் தெரியும்)

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சூரிய ராகு சுக்கி
திருக்கணித கிரக நிலை

16.07.2019

செவ்

புதன் (வ)

கேது சந்தி சனி (வ) குரு(வ)

 

இன்றைய ராசிப்பலன் – 16.07.2019

மேஷம்

இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் புதிய முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும்.

கடகம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வு கிட்டும். வருமானம் பெருகும். கடன் பிரச்சினை தீரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வேலை விஷயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவி கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

மகரம்

இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். திடீர் பயணங்கள் செல்ல நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வேலையில் ஊதியம் உயர்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும்.

மீனம்

இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேல் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கும்.

Today rasi palan – 15.07.2019

Today rasi palan – 15.07.2019

இன்றைய ராசிப்பலன் –  15.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

15-07-2019, ஆனி 30, திங்கட்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.48 வரை பின்பு பௌர்ணமி. மூலம் நட்சத்திரம் மாலை 06.51 வரை பின்பு பூராடம். சித்தயோகம் மாலை 06.51 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சூரிய ராகு சுக்கி
திருக்கணித கிரக நிலை

15.07.2019

செவ்

புதன் (வ)

கேது சந்தி சனி (வ) குரு(வ)

 

இன்றைய ராசிப்பலன் –  15.07.2019

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் நிலவும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மிதுனம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ற உயர் பதவிகள் அடையும் வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

துலாம்

இன்று குடும்பத்தில் மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவர். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எடுத்த காரியம் வெற்றி அடைய மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை குறையும்.

தனுசு

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் சந்திப்பால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.

மகரம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். வியாபார ரீதியான பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் கைகூடும்.

Today rasi palan – 14.07.2019

Today rasi palan – 14.07.2019

இன்றைய ராசிப்பலன் –  14.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

14-07-2019, ஆனி 29, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 12.55 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. கேட்டை நட்சத்திரம் மாலை 05.26 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 05.26 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

சூரிய ராகு சுக்கி
திருக்கணித கிரக நிலை

14.07.2019

செவ்

புதன் (வ)

கேது சனி (வ) குரு(வ)

சந்தி

இன்றைய ராசிப்பலன் –  14.07.2019

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 05.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளை தவிர்க்கவும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.  உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு மாலை 05.25 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மிதுனம்

இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். திடீரென்று பயணம் செல்ல நேரிடும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். லாபம் உண்டாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படலாம். முயற்சி செய்தால் மட்டுமே எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனக்குழப்பம் சற்று குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். பழைய கடன் பிரச்சினை தீரும்.

கன்னி

இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் பெருகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பணவரவு உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

மகரம்

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்-கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் சற்று குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலப் பலன் கிட்டும்.