sani peyarchi 2017 to 2020 Rishaba rasi

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 ரிஷபம்கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்
  இனிமையான சுபாவமும், எல்லாரையும் வசீகரப்படுத்தக் கூடிய ஆற்றலும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 7-ல் சஞ்சரித்த சனி வாக்கிய கணிதப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை ராசிக்கு 8-ல் சஞ்சரிக்க உள்ளதால் அஷ்டமச்சனி தொடங்குகிறது. இதனால் தேக ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், உடல்நிலையில் சோர்வு, மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். உற்றார்- உறவினர்களிடமும் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங்கங்களைச் சந்திக்க நேரிடும். எந்த ஒரு காரியத்தையும் எதிர்நீச்சல் போட்டே முடிக்க வேண்டியிருக்கும். பண விஷயங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறமுடியாமல் போகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். தொழில், வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்பட்டு அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். பெரிய முதலீடுகள் கொண்ட செயல்களைச் செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். அஷ்டமச்சனி நடைப்பெற்றாலும் உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சனி பகவான் தர்மகர்மாதிபதியாகி யோகக்காரகன் என்பதால் பெரிய கெடுதலைச் செய்ய மாட்டார்.
  சனி அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கவுள்ள இக்காலத்தில் ஆண்டுக் கோளான குரு உங்கள் ராசிக்கு 5-10-2018 முதல் 28-10-2019 வரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம் செய்கின்ற காலத்தில் எதிர்பாராத தனச் சேர்க்கைகள் ஏற்பட்டு குடும்பத் தேவைகள் ஓரளவுக்குப் பூர்த்தியாகும். நெருங்கியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலமானப் பலனை அடையலாம். கொடுக்கல்-வாங்கலில் ஓரளவுக்கு லாபம் அமையும். உங்கள் ராசிக்கு 27-7-2017 முதல் 13-2-2019 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால்  எதிர்பாராத உதவிகள் கிடைத்து எந்தவித நெருக்கடி களையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். 

உடல் ஆரோக்கியம்  
   உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உண்டாகக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதியற்ற நிலை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாவதால் மனநிம்மதி குறைவடையும். தேவையற்ற பயணங்களால் உடல்நிலை சோர்வடையும்.

குடும்பம், பொருளாதார நிலை
   கணவன்- மனைவியிடையே ஒற்றமை குறையும். பொருளாதார நிலையிலும் தடைகள் ஏற்பட்டு குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே கஷ்டப்பட வேண்டியிருக்கும். கடன்கள் மேலோங்கும். உற்றார்- உறவினர்களிடையே உண்டாகக்கூடிய கருத்து வேறுபாடுகளால்  சுபகாரியங்கள் தடைப்படும். புத்திரர்கள் உங்கள் பேச்சை மதிக்காமல் நடப்பதால் வீண் மனசஞ்சலங்கள் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்
  கமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் துறையில் உள்ளவர்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் சுமாரான லாபத்தைத் தரும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது உத்தமம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை இருக்கும். உடன்பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் 
தொழில், வியாபாரத்தில் மந்தமான நிலையே நிலவும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். நிறைய போட்டி பொறாமைகள் நிலவுவதால் லாபம் குறைந்து அபிவிருத்தி தடைப்படும். கூட்டாளிகளை மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டியிருக்கும். புதிய முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே லாபத்தினைப் பெறமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்து வதில் கவனமுடன் நடந்து கொண்டால் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும்.

உத்தியோகம் 
  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். பணியில் கவனக்குறைவுடன் செயல்பட்டு அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்காததால் வேலைப்பளு அதிகரிக்கும்.

பெண்கள்
   உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பொருளாதார நிலையில் பற்றாக்குறைகள் ஏற்படும். உற்றார்-உறவினர்கள் உங்களுக்கு வீண் செலவுகளையும், பிரச்சினைகளையும் உண்டாக்கு வார்கள். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுவதால் கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது உத்தமம்.
அரசியலில் எதிர்பார்க்கும் பெரிய பதவிகள் கிடைக்காவிட்டாலும் பெயர், புகழுக்கு பங்கம் ஏற்படாது. பணவருவாய் சுமாராக இருக்கும். உடனிருப்பவர்களே துரோகம் செய்ய எண்ணுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் அவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் இருப்பது நல்லது.

விவசாயிகள்
   பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் பொருளாதார நிலையும் சுமாராகத்தானிருக்கும். பூமி, மனை போன்றவற்றால் சிறுசிறு வீண் செலவுகள் உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்றுத் தாமதப்படும். பங்காளிகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானம் தேவை.

கலைஞர்கள் 
   தொழிலில் நிறைய போட்டிகள் உண்டாவதால் வரவேண்டிய வாய்ப்புகள் குறையும். பணவிஷயத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆடம்பரச் செலவுகளால் கடன்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் மந்த நிலை உண்டாகும். உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டு அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளையும் பழக்கவழக்கங்களையும் தவிர்ப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப்பெற கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. கல்விக்காகப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை
   சனி பகவான் மூல நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 8-ல் சனி சஞ்சரிப்பதும், 6-ல் குரு சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் ராகு இருப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தியளிக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். தொழில், வியாபாரம் சற்று மந்தநிலையில் நடை பெற்றாலும் தேக்கம் அடையாது. உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைப் பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை
  சனி 8-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலகி ஓரளவுக்கு அனுகூலப்பலன்களை உண்டாக்கும். ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை உண்டாகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உங்களுக் குள்ள வம்பு வழக்குகளில் சற்றே சாதக நிலை ஏற்படும். பல்வேறு பொது நலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும், வேலை யாட்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பதும் நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மனக்கவலைகள், செலவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. தேவையற்ற செலவுகளைக் குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் சேமிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர் பார்க்கும் உயர்வுகளைப் பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை
  சனி பகவான் 8-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற பலனை ஏற்படுத்தும் என்பதால் உடல்நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக்கொள்வது, வாகனங்களில் பயணம் செய்யும்போது சற்று கவனமுடனிருப்பது நல்லது. 5-10-2018 முதல் குரு ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உயர்வுகள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். உறவினர் களிடையே சற்று விட்டுக்கொடுத்து நடப்பது சிறப்பு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் அமையும். செல்வம், செல்வாக்கு உயரும். பழைய கடன்கள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் சிறப்பான லாபம் தரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆன்மிக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை
  சனி பகவான் தனுசு ராசியில் ராசியதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரித்தாலும், 7-ல் குரு சஞ்சரிப்பதால்  சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். எதிர்பாராத தனவரவுகள் கிடைத்து மனமகிழ்ச்சியை உண்டாக்கும். பொன்பொருள், ஆடை, ஆபரணம் சேரும். பணம் பல வழிகளில் தேடிவரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் அமையும். புத்திரவழிகளில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பார்கள். 13-2-2019 முதல் 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்-மனைவி இருவரும் அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் லாபம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை
   சனி பகவான் 8-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 7-ல் குரு சஞ்சரிப் பதாலும் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பணவரவு ஓரளவுக்கு சரளநிலையில் இருக்கும். எதிர்பாராத வீண்செலவுகள் உண்டாகக்கூடும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அமையும். கூட்டாளிகளால் ஓரளவுக்கு சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் கணவன்-மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன்மூலம் சாதகமான பலன் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும். 

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை
  சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், ஆண்டுக்கோளான குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள்,  பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிட்டும். செல்வம், செல்வாக்கு உயரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். இக்காலங் களில் சனிப்ரீதியாக ஆஞ்சநேயர், அம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை
  சனி பகவான் தனுசு ராசியில் 8-ல் சஞ்சரித்தாலும், தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் நன்மை தீமை கலந்த பலன்களைப் பெறமுடியும். குரு 7-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில், வியாபார நிலையிலிருந்த போட்டிகள் விலகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நற்பலனை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். நினைத்தது நிறைவேறும். 29-10-2019 முதல், குரு 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை
  சனி பகவான் தனுசு ராசியில், தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது உத்தமம். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படும். 2-ல் ராகு, 8-ல் குரு, சனி, கேது போன்ற கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துகளால் வீண்விரயங்கள் உண்டாகும். உடல்நிலையில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி ஈடுபடாமலிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டி வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் ஏற்பட்டு வாய்ப்புகள் தடைப்படும். சர்ப்ப சாந்தி செய்வது, சனிக்குப் பரிகாரம் செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை
  சனி பகவான் ஜென்ம ராசிக்கு 8-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது.  குருவும் 8-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. புத்திரர்களால் வீண் மனசஞ்சலங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் வீண்விரயங்களை எதிர்கொள் வீர்கள். உற்றார்-உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலையும் பொருட்தேக்கமும் உண்டாகும். உடனிருக்கும் கூட்டாளிகளிடம் வாக்குவாதங்கள் தோன்றுவதால் அபிவிருத்திக்க குறையும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை
  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சினைகள் சற்றே குறையும் என்றாலும், 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெறமுடியும். பணவரவுகளிலிருந்த தடைகள் படிப்படியாக விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். சொத்துகள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத ஊதிய உயர்வுகள் கிடைக்கும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். சர்ப்ப சாந்தி செய்யவும்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை
  சனி பகவான் தனுசு ராசியில் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல்-வாங்கல் லாப மளிக்கும். அசையும், அசையா சொத்துகளால் சுபச்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் லாபம் தடைப்படாது. கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நெருக்கடிகள் உண்டானாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். சனிக்கு எள் தீபமேற்றி வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண் : 5, 6, 8,     நிறம் : வெண்மை, நீலம்,     கிழமை : வெள்ளி, சனி, கல் :  வைரம், திசை : தென்கிழக்கு, தெய்வம் : விஷ்ணு, லக்ஷ்மி.

Aayilyam natchathira palangal

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

இருப்த்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஒன்பதாவது இடத்தை பெறுவது ஆயில்ய  நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டி, டு, டே, டோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மெ, மை ஆகியவை யாகும்.

குண அமைப்பு;  ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித்தைகளையும் கற்றறியக்கூடிய ஆர்வமும் இருக்கும். அழகிய கண்களையும் சுருட்டை முடியையும் கொண்டவர்கள். எதிரிகளையும் நண்பர்களாக்கி கொள்வார்கள். தங்களுடை கனிவான பேச்சினால் கல்லையும் கரைய வைக்கும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் மன வலிமை¬யும், உடல் வலிமையும் ஒருக்கே பெற்றவர்கள். எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள கூடிய திறனிருக்கும். நாளை நடப்பதை கூட முன் கூட்டியே அறிவர். மற்றவர்களின் ஆலோசனைகளை எளிதில் ஏற்க மாட்டார்கள் கண்களால் ஆயிரம் கதை பேசுவார்கள். சற்றே சஞ்சல குணமும் உண்டு. இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேரிப்பவர்கள் பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

குடும்பம்;     ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் விரைவிலேயே திருமண வாழ்க்கை அமைந்து விடும். இளமையில் வறுமை வயப்பட்டாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் இவர்களின் தேவைகளுக்காக அதிகம் செலவு செய்தால் பல தகிடு தத்த வேலைகளிலும் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள். பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்கள். ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதால் வண்டி வாகனம், பூமி மனை அனைத்தையும் சேர்ப்பார்கள். வாழ்க்கையையும் திட்டமிட்டு வாழ்வார்கள் நொறுக்கு தீனி விரும்பிகள் என்பதால் எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டு கொண்டேயிருப்பார்கள்.

தொழில்;     ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் நீதி நேர்மை தவறாமல் நாணயத்துடன் நடப்பார்கள். மனசாட்சிக்கு மீறி எந்த பணியிலும் ஈடுபடமாட்டார்கள். குறிப்பாக கெட்டவர்களுக்கு துணை போக மாட்டார்கள். அதிக மன தைரியம் கொண்டவர்கள் இவர்களில் பலர் கல்லூரிகளில் பேராசியர்களாகவும், ஆய்வு கூடத்தில் அறிவியல் அறிஞர்களாகவும், இருப்பார்கள். மற்றவர்களை போல நடித்து காட்டுவதிலும், பழமொழிகளை உதாரணமாக கொண்டு பேசுவதிலும் வல்லவர்கள். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள். பெயர் புகழ் அந்தஸ்து யாவும் பெருகும். அதிகாரமிக்க பதவிகளிலும் அமர்வார்கள். பலரை நிர்வாகிக்கும் ஆற்றல் ஆலோசனை கூற கூடிய வல்லமையும் உண்டாகும் மெக்கானிக்கல், பொறியியல் துறைகளிலும் வல்லவர்கள்.

நோய்கள்;      இவர்களுக்கு, நுரையீரல், வயிறு, உணவு குழாய் மற்றும் குடலுக்கு இடையிலுள்ள ஜவ்வு கல்லீரல், கணையம், ஈரல் போன்ற பாகங்களில் பிரச்சனைகள் உண்டாவதுடன், மூச்சு விடுவதில் சிக்கல்களும், மூட்டுகளில் வலியும், கால்களில் வீக்கமும், நரம்பு சம்மந்த பிரச்சனைகளும் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும்.

திசை பலன்கள்;     ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை வரும். இதன் மொத்த வருடங்கள் 17 என்றாலும் பிறந்த நேரத்தைக் கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள புதன்  தசா காலங்களை அறியலாம். முதல் திசையாக வரும் புதன் திசை காலங்களில் கல்வியில் உயர்வு நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று பண்டைய நூல்களில் எழுதியிருந்தாலும் அது உண்மையா என்ற பல கேள்விகள் இன்றும் உள்ளது.

     இரண்டாவதாக வரும் கேது திசையானது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் கேது திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கல்வியில் மந்த நிலை ஆகியவை உண்டாகும்.

     மூன்றாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை, செல்வம் செல்வாக்கு சேரும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

     சூரியன் 6வருடம் சந்திரன் 10 வருடம் செவ்வாய் 7 வருடம் என நடைபெறும் இத்திசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் மேன்மையான பலன்களை பெற முடியும். பலமிழந்திருந்தால் அதற்கேற்றபடி நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்.

     ஆயில்ய நட்சத்திர காரங்களுக்கு ராகு திசை மாரக திசையாகும். ஆயில்ய நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் இரவு பதினோறு மணியளவில் வானத்தில் காணலாம்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்     நவ கிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

வழி பாட்டு  ஸ்தலங்கள்

சங்கரன் கோவில்;

     திருநெல்வேலிக்கு  வடக்கே 50.கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலத்தில் சங்கரலிங்கத்துக்கும், கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணன் சந்தியில் வழங்கப்படும் புன்னை மரப்பட்டையில் செல்லரித்து உருவான புற்று மண் பிரசாதம் எல்லா வித நோய்களையும் தீர்க்கும்.

புள்ள பூதங்குடி;

     கும்பகோணத்து வடமேற்கில் 11.கி.மீ தொலையில் உள்ள புஜாங்க சயனராக காட்சி தரும் ஸ்ரீராமர் ஸ்தலம் இங்கும் புண்ணை மரம் உள்ளது.

திருப்புகலூர்;

     திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள அக்னிஸ்வரர் அருள் பாலிக்கும் ஸ்தலம்.

நாகூர்;

     நாகை மாவட்டம் நாகபட்டினத்திற்கு வடக்கே 4.கி.மீ தொலைவில் உள்ள நாகநாதர் நாகவல்லி உள்ள ஸ்தலம். தல மரம் புன்னை.

திருவாரூர்;

     அருகிலுள்ள எண்கண் என்ற ஊரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமிகள் ஸ்தலம். இவற்றை வழிபாடு செய்வது சிறப்பு.

கூற வேண்டிய மந்திரம்

     ஓம் ஸஹஸ்ரபனாய வித்மஹே

     சர்ப்ப ராஜாய தீமஹி

     தந்நோ அனந்த ப்ரசோதயாத்

ஆயில்ய நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

     அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

 

Birth Date palan 5, 14, 23

எண் 5 (5, 14, 23) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

ஒரு ஜாதகத்தை கணிப்பதென்றால் கூட திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் பார்க்க பஞ்சாங்கம் தேவைப்படுகிறது. பஞ்ச என்பது 5 ஐ குறிக்கும். மனித வாழ்க்கை ஆகாயம் பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும் பஞ்ச பூதங்களுக்குள் அடங்கியுள்ளது. அது மட்டுமின்றி தமிழ் இலக்கியங்களில் ஐம்பால்களான ஆண்பால், பெண் பால், பலர் பால், பலவின்பால், ஒன்றன் பால் போன்றவை ஐந்து வகையாகத்தான் அமைந்துள்ளன. நாம் பூமியின் வகைகளைக்கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான கத்தான் பிரித்துள்ளோம். வீட்டில் ஏற்றக்கூடிய குத்து விளக்கில் கூட இந்து முகங்கள் உள்ளதை நாம் அறிவோம். எனவே ஐந்து என்ற எண்ணும் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ள சிறப்பான எண்ணாகும். 5, 14, 23 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 5ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக உள்ளார்கள்.  ஐந்தாம் எண்ணுக்குரிய கிரகம் புதன் பகவானாவார். ஐந்தாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் ணி. E, H, N, X ஆகும்.

குண அமைப்பு     ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிடமாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால்  நடக்கப் போவதைக்கூட முன் கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வெளித் தோற்றத்திற்கு வெகுளியாக காட்சியளிக்கும் இவர்கள் மிகுந்த காரியவாதிகள். பிக்காதவர்களின் தொடர்பை உடனே  அறுத்தெறிவார்கள். இவர்களின் பேச்சில் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். மற்றவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் மனத்ரரிற்குள் சந்தோஷப்படுவார்கள். எதையும் அவசர அவசரமாக செய்து முடிப்பார்கள். சிரிக்க சிரிக்கப் பேசி தன்னுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்களுக்குத் தனிமை பிடிக்காது. சமூக வாழ்வில் ஈடுபட்டு தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கிக் கொள்வார்கள். அறிவும் சாமர்த்தியம்அதிகம் இருந்தாலும் ஆழ் மனதில் ஏதோ ஒரு பயமும், சந்தேகமும் குடி கொண்டிருக்கும். இவரது பேச்சுத் திறமை பிறரை ரசிக்கும்படி வைக்கும். புத்தி கூர்மையும், அறிவாற்றலும் நிறைந்திருப்பதால் எந்தப் பிரச்சினைகளிலும் மாட்டிக் கொள்ளலாமல6 நழுவி விடுவார்கள். அனுபவமும் அறிவாற்றலும் நிறைய உடையவர்கள் என்றாலும், தங்களுடைய குண அமைப்புகளை நேரத்திற்கேற்றார் போல் மாற்றிக்கொள்வார்கள். எந்த விதமான கடின வேலைகளை எடுத்துக் கொண்டாலும், அதை பொறுப்போடு தவறுதலின்றி செய்து முடிப்பார்கள். முடிந்தவரை கடினமான பணிகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் இவர்களுக்கு உண்டாவதுண்டு.

உடலமைப்பும், ஆரோக்கியமும்  ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், அழகான முக அமைப்பும் கொண்டிருப்பார்கள். கண்களில் ஒருவிதமான கவர்ச்சி இருக்கும். வேகமாக நடப்பார்கள். பேச்சில் இனிமை இருக்கும். இவர்கள் அதிகமாக சிந்தனை செய்வதால் நரம்பு பலவீனம் அடைந்து நரம்பு தளர்ச்சி நோய் உண்டாகும். தலைவலி, உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.  சரியான ஓய்வு இல்லாமல் தூக்கமின்மை, முதுகு வலி, கை, கால் வலி, உடல் வலி போன்றவை உண்டாகும். வாயுத் தொல்லையும் இருக்கும் சரியான நேரத்திற்கு சாப்பிடாததால் குடல் புண்ணும் ஏற்படும். நன்றாக ஓய்வெடுப்பதும், உணவு பழக்க வழக்கத்தில் சரியான முறையைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

குடும்ப வாழ்க்கை  –   ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடுமப வாழ்க்கை என்பது திருப்தி அளிப்பதாகவே இருக்கும். கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக் குடும்பமாக இருந்தாலும் வரக்கூடிய வாழ்க்கையை அனுசரித்து நடப்பவராக இருப்பார். நல்ல அறிவாற்றலும், கல்வித் தகுதியும் உடையவராக இருப்பார. சிறுசிறு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும். இவர்கள் சுகமாக வாழ்க்கை வாழ்வதையே விரும்புவார்கள். விருப்பத்திற்கேற்ற வாழ்க்கையே இவர்களுக்கு அமையம். கிடைக்காதவற்றிற்கு ஏங்காமல், இருப்பதை வைத்து திருப்திளளிப்பதாக இருக்கும். உற்றால், உறவினர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு தடையின்றி கிடைக்கும்.

பொருளாதாரம் – ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு போது மென்கிற அளவிற்கு பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக இருக்கும். பகட்டான செல்வாக்கு நிறைந்த வாழ்க்கை அமையும.  ஓய்வு நேரங்களிலும் உடலுழைக்காமல் மூளையை பயன்படுத்தி  ஏதோ, ஒரு வழியில் சம்பாதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஆதலால் பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். சேமிப்பும் ஓரவுக்கு சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.

தொழில்  –  ஐந்தாம் எண் அறிவு சம்பந்தமான எண் என்பதால் அறிவுப் பூர்வமான பணிகளும், எதையும் புதிதாக கண்டுபிடிப்பதில் ஆர்வமும் அதிகமிருக்கும். வங்கி கணக்கர் தொழில், ஆடிட்டர் தொழில், கணிப்பொறி சம்பந்தப்பட்ட துறைகளில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு என இது போன்றவற்றில் உயர்வு கிட்டும். ஜோதிடம், வானவியல், காண்ட் ராக்ட் தொழில்,  எழுத்தர் துறை, பத்திரிகை, புத்தகம் வெளியிடுதல் போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கிட்டும். கலைத்துறை, இசைத்துறையிலும் உயர்வு ஏற்படும். உடல் உழைப்பு இவர்களால் முடியாத காரியமாகும். அறிவு பலத்தால் எதையும் சாதிப்பார்கள்.

நண்பர்கள், பகைவர்கள்  –  ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் சிரிக்க சரிக்க  பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்பதால், இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும். இவரின் நகைச்சுவையுணர்வால் பலரை கவர்ந்திழுப்பர். 1 மற்றும் 6ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நெருங்கிய  நண்பர்களாக இருப்பார்கள். 2ம் எண்ணைத் தவிர மற்ற எண்ணில் பிறந்தவர்களும் நட்பாகவே அமைவார்கள்.

புதனுக்குரிய காலம்  –  ஒவ்வொரு ஆண்டிலும் மே மாதம் 21 ம் தேதி முதல் ஜுன் மாதம் 22ம் தேதி வரையிலும், ஆகஸ்டு மாதம் 23ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரையிலான காலமும் புதனுக்குரியது. புதன் கிழமை புதனுக்குரியது.

புதனுக்குரிய திசை   –  வடக்கு திசை புதனுக்குரியது. மலைகள், கல்வி நிலையங்கள், விளையாடும் இடங்கள், வாசக சாலைகள் யாவும் புதனுக்குரியவை. ஐந்தாம் எண்ணில் புறந்தவர்கள் வடக்கு முகமாக எந்த காரியங்களைத் தொடங்கினாலும் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட கல் – ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் என்பதால் மரகதப் பச்சை என்ற கல்லை அணிய வேண்டும். இதனால் நோய்கள் நீங்கும் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். செய்யும் தொழிலில் வெற்றியும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். நரம்பு பலவீனப்பட்டவர்களுக்கு நலம் கிட்டும்.

பரிகாரம்  –  ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் ஸ்ரீவிஷ்ணு பகவானை வழிபடுதல் நல்லது. புதனுக்கு பரிகாரம் செய்வதும்  உத்தமம்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி, 5,14,23,6,15,24

அதிர்ஷ்ட நிறம் – சாம்பல், வெளிர் நீலம், வெளிர் பச்சை

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட கல் – வைரம், மரகதப் பச்சை

அதிர்ஷ்ட தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு

Today Rasi palan 31.10.2017

இன்றைய ராசிப்பலன் –  31.10.2017

முனைவர் முருகு பால முருகன்  cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

31-10-2017, ஐப்பசி -14, செவ்வாய்கிழமை, ஏகாதசி திதி மாலை 06.56 வரை பின்பு வளர்பிறை துவாதசி. சதயம் நட்சத்திரம் காலை 07.37 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 0. ஏகாதசி விரதம். பெருமாள் – முருக வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 சந்தி  திருக்கணித கிரக நிலை

31.10.2017

ராகு
கேது
சனி சூரிய குரு புதன்  சுக்கி செவ்

 

இன்றைய ராசிப்பலன் – 31.10.2017

மேஷம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நட்பு உண்டாகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலையில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தையில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கன்னி

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் அனுபவமுள்ள பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைபடலாம். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சனை ஓரளவு குறையும்.

விருச்சிகம்

இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள்.

தனுசு

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வரும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமற்ற பலன் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளிப்பீர்கள். தெய்வ வழிபாடு நல்லது.

sani peyarchi 2017 to 2020 Mesha rasi

மேஷம்
 
அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 10,11-க்கு அதிபதியும் ராசியதிபதி செவ்வாய்க்கு பகை கிரகமுமான சனி இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்ததால் பல்வேறுவகையில் இன்னல்களை சந்தித்து வந்தீர்கள். வாக்கிய கணிதப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை பாக்கிய ஸ்தானத்தில், குருவின் வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கிருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து, ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப்பெற்று செல்வம், செல்வாக்கு உயரும். பழைய கடன்கள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிலவும். வீடு, மனை,வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு புதுவீடு கட்டும் யோகம் கிட்டும். உடல்நிலையில் தெம்பும், உற்சாகமும் உண்டாகி எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். கடந்தகால மருத்துவச் செலவுகள் குறையும். கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று எதிர்பாராத லாபமும், அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும்.  
  
   சனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள இக்காலத்தில், உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் 2-9-2017 முதல் 4-10-2018 வரையும், 9-ஆம் வீட்டில் 29-10-2019 முதல் 15-11-2020 வரையும் குரு சஞ்சரிக்க உள்ளதால் இக்காலங்களில் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலை உயரும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடும். நல்லவரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். 13-2-2019 முதல் 1-9-2020 வரை ராகு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள்.

உடல்ஆரோக்கியம்   
  உடல்நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செல்படுவீர்கள். அன்றாடச் செயல்களை சிறப்பாகச் செய்து முடிக்கமுடியும். மருத்துவச் செலவுகள் யாவும் படிப்படியாகக் குறையும். மனைவி, பிள்ளைகள் மற்றும் நெருங்கியவர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று மனநிம்மதி உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை 
   குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். வீட்டைக் கட்டிக் குடிபுகும் அமைப்பு, வீடு, மனை வாங்கும் யோகம், வாகனச் சேர்க்கை யாவும் சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் மிகச்சிறப்பாக அமைந்து சேமிப்பு பெருகும். பிரிந்த உறவினர்களும் ஒன்றுகூடி மகிழ்வார்கள். நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட காரியங்களும் கைகூடும்.

கொடுக்கல்- வாங்கல்
  கமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் போன்றவற்றில் அற்புதமான லாபம் உண்டாக்கும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடையமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சேமிக்கமுடியும்.

தொழில், வியாபாரம்
   தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் அபிவிருத்தியும் உண்டாகும். இதுநாள் வரை இருந்துவந்த போட்டி பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் மறைந்து தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தக்கசமயத்தில் கிடைக்கும். நண்பர்களாலும், உடனிருக்கும் தொழிலாளர்களாலும் சாதகமான பலன்கள் உண்டாகும்.

உத்தியோகம் 
  உத்தியோக நிலையில் இதுநாள் வரை தடைப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வுகள் யாவும் சிறப்பாக அமையும். மேலதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவும் உங்களின் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள உதவும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலப்பலன்களும் ஏற்படும்.

பெண்கள் 
  பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும். பொன்பொருள், ஆடை, ஆபரணங்கள் சேரும். சிலர் புது வீடுகட்டிக் குடிபுகும் யோகப்பலனையும் பெறுவீர்கள். உற்றார் -உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிலவும். பணிபுரியும் பெண்களுக்கு வேலையில் திருப்தியும் மனநிறைவும் உண்டாகும்.

அரசியல்
உங்கள் வாழ்வில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடிய காலமாக இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும்விலகி பதவிகளில் மேன்மை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மக்களின் ஆதரவு பெருகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உங்கள்மீது இருந்த அவப்பெயர்கள் நீங்கும். 

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும்  முதலீட்டினை எடுத்துவிட முடியும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே சுபச்செலவுகளைச் சந்திப்பீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பங்காளிகள்வழியில் இருந்த பிரச்சினைகள் குறையும்.

கலைஞர்கள்
இசை, நாட்டியம் சங்கீதத்துறைகளில் உள்ளவர்கள் ஏற்றம்பெறுகின்ற காலமாகவே அமையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். பெயர், புகழ் யாவும் உயரும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்
  மந்தநிலை விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். கல்வியிலும், விளையாட்டுத்துறைகளிலும் ஈடுபட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை மனமகிழ்ச்சியை உண்டாக்கும். மேற்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகமும் உண்டாகும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை
    சனி பகவான் தனுசு ராசியில், கேது நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். குரு 7-ல் இருப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்-மனைவி  ஒற்றுமை பலப்படும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமானப் பலன்கள் கிட்டும். எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடைவார்கள். ராகு-கேதுவுக்குப் பரிகாரமாக அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ரா
சியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை
  ஜென்ம ராசிக்கு 9-ல் வக்ரகதியில் சனி சஞ்சரிப்பதால், எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் இக்காலங்களில் அனுகூலமான பலன்களை அடையலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகக்கூடும் என்பதால் கணவன்-மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. குருவும் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்றாலும் கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தியளிக்கும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. 4-ல் ராகு இருப்பதால் தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடுவது கெடுதியைக் குறைக்கும். 

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை
   சனி பகவான் தனுசு ராசியில், கேது நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ஏற்றம் மிகுந்த பலன்களையே அடைவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 5-10-2018 முதல், குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடையலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் அமையும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடப்பதும் நன்மையளிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் உயர்வான பதவிகளைப் பெறுவார்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மையைத் தரும்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை
  சனி பகவான் தனுசு ராசியில் 2,7-க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக அமையும். உடல்நிலைகளில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. சுபகாரிய முயற்சிகள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தியளிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. 13-2-2019 முதல், ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்றுத் தாமதப்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை
  ஜென்ம ராசிக்கு 9-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கமுடியும். கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாமலிருக்கும். சிலருக்கு பூமி, மனையால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குரு 8-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் விரோதங்களை சந்திக்க நேரிடும். வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதம் ஏற்படும். ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களில் ஒத்துழைப்புகள் வேலைப்பளுவைக் குறைக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை
  சனி பகவான் தனுசு ராசியில், கேது நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், சர்ப்ப கிரகமான ராகு முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் நிலவும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய பொற்காலமாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் தடைக்குப் பின்பு நிறைவேறும். தனவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். பொன், பொருள் சேரும். நீண்ட நாள் கனவுகள் யாவும் நிறைவேறக்கூடும். நீங்கள் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் நிதானமாக இருந்தால் லாபத்தை அடையலாம். எந்த போட்டிகளையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை, வல்லமை உண்டாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம். 

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை
  சனி பகவான் 2, 7-க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை திருப்தியளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, அனுகூலங்கள் உண்டாகும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் லாபம் தரும். நண்பர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். 29-10-2019 முதல், குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நினைவாகும். பொன் பொருள் சேரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்வர்களுக்கு இருந்த போட்டிகள் குறைந்து லாபம் பெருகும்.  விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை
  சனி பகவான் 5-க்கு அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதாலும், 9-ல் குரு சஞ்சரிப்பதாலும் தடைப்பட்ட சுப காரியங்கள் அனைத்தும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவன்-மனைவி  ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கொடுக்கல்-வாங்கல்கள் சரளமாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களைத் தடையின்றிப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிட்டும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். உங்களது கனவுகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். அசையா சொத்துகளை வாங்கமுடியும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடன்கள் யாவும் குறையும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை
  ஜென்ம ராசிக்கு 9-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 9-ல் சஞ்சரிக்கும் குருவும் வக்ரம்பெற உள்ளதாலும் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடல்நிலையில் சோர்வு, கைகால், மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மறையும். கணவன்-மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை தோன்றினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெறும், வேலைப்பளுவும் குறைந்தே காணப்படும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை
  சனி பகவான் 2, 7-க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சினைகள் விலகி எதிலும் முன்னேற்ற மான நிலை இருக்கும்.திருமண சுபகாரியங்களும் கைகூடும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும். 2, 8-ல் ராகு-கேது சஞ்சரிப்பதால் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, அனை வரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். உற்றார்- உறவினர்களிடமும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலும் திறமையும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு  முதலீட்டினை எடுத்துவிடக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் அபிவிருத்தியைப் பெருக்குவதற்கு உதவிகரமாகவே செயல்படுவார்கள். ராகு-கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை
   சனி பகவான் ராசியதிபதிக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்தி ரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கடன் களும் குறையும். சற்றே அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எதிர் பாராத உதவிகளும் கிடைக்கும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும் என்றாலும் கூட்டாளிகளிடன் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட் டினைச் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். பணியில் பிறர்செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். 
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 1, 2, 3, 9, நிறம்: ஆழ்சிவப்பு, கிழமை: செவ்வாய், கல் : பவளம்,      திசை: தெற்கு, தெய்வம்: முருகன்.

Poosam natchathira palangal

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

     இருபத்தேழு  நட்சத்திரங்களின் வரிசையில் எட்டாவது இடத்தை பெறுவது பூச நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு, நெஞ்செலும்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஹீ, ஹே, ஹோ, ட ஆகியவை தொடர் எழுத்துக்கள் கொ, கௌ ஆகியவையாகும்.

குண அமைப்பு;      பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால் மனதில் ஏதோவொரு சோகம் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும் என்றாலும் எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வை காணாமல் விடமாட்டார்கள். இந்த நட்சத்தரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு என்பதால் சமுதாயத்தில் பெயர் புகழை எளிதில் பெறுவார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். மற்றவர்களுக்கு சவாலாக விளங்கும் விஷயங்கள் இவர்களை பொறுத்த வரை மிகவும் எளிமையானதாக இருக்கும். நன்னெறிவும் ஒழக்கமும் தவறாதவர்கள். தயவு தாட்சண்யம் பார்பத்திலும் மனசாட்சிக்கு பயந்து நடப்பதிலும் விரும்தோம்பலிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். வாசனை திரவியங்களை அதிகம் விரும்புவார்கள். சகல விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் என்றாலும் சட்டென முன் கோபம் வந்து கெடுத்து விடும். சுய கௌரவத்தை விட்டு கொடுக்காமல் தன்னம்பிக்கையும் தளராத தைரியமும் கொண்டு பூஜ்ஜியத்திலிருந்தாலும் ராஜ்ஜியத்தை பிடிப்பார்கள். முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

குடும்பம்;     காதலில் தோல்வியுற்றவராக இருந்தாலும் வரும் வாழ்க்கையிடம் இன்புறவே நடந்து கொள்வார்கள். காம வேட்கை அதிக மிருந்தாலும் பரிசுத்தமானவர்கள். தாத்தா பாட்டி, தாய் தந்தை, மனைவி பிள்ளைகள், பேரன் பேத்திகள் என கூட்டு குடும்பமாக கும்பலில் வாழவே விரும்புவார்கள். குடும்பத்தில் எந்தவொரு விஷேசம் என்றாலும் அது தன்னால் தான் நடந்தாக பெருமைபட்டு கொள்வார்கள். அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். புதுமை விரும்பிகள் என்பதால் குடும்பத்திற்கு தேவையான சின்ன சின்ன பொருட்களை கூட பார்த்து பார்த்து வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்கள் செய்த உதவிகளை மறக்காமல்  தக்க சமயத்தில் அவர்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள். குடும்ப தலைவன் என்ற பொறுப்பை விட்டு கொடுக்க மாட்டார்கள். பசியை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது  என்றாலும் அமிர்தமென்றாலும், விஷயமென்றாலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்தே உண்பார்கள். நண்பர்களுக்கு எதிலும் முன்னுரிமை கொடுப்பார்கள்.

தொழில்;     பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரிப்பர் என்பதால் கதை கவிதை கட்டுரை எழுதுவதெல்லாம் சாதாரண விஷயமாகும்.  இளமை வாழ்வில் பல போராட்டாங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் நன்றாக சம்பாதிக்கும் யோகம் உண்டு. சினிமா துறையில் இயக்குனர், கதாநாயகன், கதையாசிரியர், பாடலாசிரியர் என பலவகையில் புகழ் பெறுவார்கள். மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் எவ்வளவு சாதித்தாலும் சம்பாதித்தாலும் தன்னடக்கத்துடனேயே இருப்பார்கள். இரும்பு சார்ந்த துறை, கப்பல் துறை, கடலில் எண்ணெய் ஆய்வு செய்யும் துறை போன்றவற்றிலும் ஈடுபட்டு நிறைய சம்பாதிப்பார்கள்.

நோய்கள்;     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காச நோய், ரத்த சோகை, மார்க புற்று நோய், தோல் வியாதி, மஞ்சள் காமாலை விக்கல், இருமல் போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும்.

திசை பலன்கள்;    பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சனி திசை வரும். சனி திசை மொத்தம் 19 வருடங்களாகும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு சனி திசை எத்தனை வருடங்கள் நடைபெறும் என்பதினை அறியலாம். சனி திசை காலங்களில் பெற்றோருக்கு சோதனைகள், உற்றார் உறவினர்களிடையே கருத்து  வேறுபாடுகள், கல்வியில் மந்த நிலை, பேச்சில் வேகம் போன்றவை ஏற்படும் என்றாலும் சனி பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களிலிருந்தால் நல்லது அடைய முடியும்.

இரண்டாவதாக வரும் புதன் திசை காலங்களில் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும் வாழ்வில் நன்மை தீமை இரண்டும் கலந்தப் பலன்களை பெற முடியும்.

முன்றாவதாக வரும் கேது திசை காலங்களில் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சனைகள், எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

நான்காவதாக வரும் சுக்கிர திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது, சொந்த தொழில் தொடங்கும் யோகம், பூமி வீடு, வண்டி வாகன சேர்க்கை போன்றவை யாவும் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும்.

சூரிய திசையும், சந்திர திசையும் ஒரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும். சமுதாயத்தில் ஒர் உயர்வான நிலையிலேயே இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

பூச நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் அரச மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் சுமார் பத்தரை மணியளவில் வானத்தில் பார்க்க முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்    மஞ்சள் நீராட்டு, திருமணம், சீமந்தம் பெயர் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம், வண்டி வாகனம், வீடு மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், மனை கோலுதல், வங்கியில் சேமிப்பு தொடங்குதல், விதை விதைத்தல், உயர் பதவிகளை வகித்தல், விருந்துண்ணல், புதிய பணியில் சேருதல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில் தொடங்கலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருச்சேறை;

      கும்பகோணம், திருவாரூர் சாலையில் 15.கி.மீ தெலைவில் அமைந்துள்ள சாரநாகத பெருமாள் மற்றும் காவிரித்தாய் வீற்றிருக்கும் திருஸ்தலம்

ஒழுந்தியாப்பட்டு;

     திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் வழயில் உள்ள அரசிலி நாதர் பெரிய நாயகி குடி கொண்டுள்ள ஸ்தலம்

கோனேரி ராஜபுரம்;

      கும்பகோணம்& காரைக்கால் சாலையில் எஸ் புதூர் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள உமாமகேஸ்வரர் மங்களாம்பிகை அருள் பாலிக்கும் ஸ்தலம்

திருச்சி;     விருதுநகர் அருப்பு கோட்டைக்கு தென் மேற்கில் உள்ள திருமேனி நாதர் துனை மாலை நாயகி குடி கொண்டுள்ள ஸ்தலம்

      மேற்கூறிய கோயில்களின் ஸ்தல விருட்சம் அரசமரமாகும் ஆதலால் இக்கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன்களை அடைய முடியும்

குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருசெந்தூரில் நடைபெறும் தைபூசத் திருவிழாவில் பங்கு கொண்டு வழிபாடு செய்வது சிறப்பு

கூற வேண்டிய மந்திரம்

    ஓம் நமோ பகவதே தட்சிணா மூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஜ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா

பூச நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்    பரணி, அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

 

 

Birth Date palan 4, 13, 22, 31.

எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என  நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு. 4,13,22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D,M,T. ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.

குண அமைப்பு நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்ட வட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தைய«£, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையேலல பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலைநிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள். சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்பள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும்.

இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்கமாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு.  அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறிவிட முடியாது. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே  அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள்.

உடலமைப்பும், ஆரோக்கியமும்  நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத்தோற்றமு இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கு கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுற பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். மன உளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். காரசாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு போன்றவைகளால்  அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.

குடும்ப வாழ்க்கை  நான்காம் எண்ணுரிக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்ட சாலிகள் என்றே  கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றார7போல இவர்களுகுகு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராக இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.

பொருளாதாரம்  நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும் இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராளமனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும் என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.

தொழில்  நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர் களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும், ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ், பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.

நண்பர்கள், பகைவர்கள்  நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்வவு உண்டு. 5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1,29 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

ராகுவுக்குரிய காலம்  ராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடைகயாது. ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.

ராகுவுக்குரிய திசை  தெற்கு திசை ராகுவுக்குரியது. பாலைவனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள், உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.

ராகுவுக்குரிய அதிர்ஷ்ட கல்  நான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயரும். அனைத்து நற்பலன்களும் உண்டாகும்.

பரிகாரங்கள்  நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி, 1,10,19,28

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

அதிர்ஷ்ட திசை – கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு

அதிர்ஷ்ட கல் – கோமேதகம்

அதிர்ஷ்ட தெய்வம் – துர்க்கை

Today Rasi palan 30-10-2017

இன்றைய ராசிப்பலன் –  30.10.2017

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை — 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 இன்றைய  பஞ்சாங்கம்

30-10-2017, ஐப்பசி -13, திங்கட்கிழமை, தசமி திதி இரவு 07.04 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அவிட்டம் நட்சத்திரம் காலை 06.44 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 சந்தி  திருக்கணித கிரக நிலை

30.10.2017

ராகு
கேது
சனி சூரிய குரு புதன்  சுக்கி செவ்

 

 

இன்றைய ராசிப்பலன் –  30.10.2017

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை கூடும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கடன்கள் குறையும்.

கடகம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.  வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

சிம்மம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபம் பெருகும்.

கன்னி

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

இன்று எதிர்பாராத பணவிரயங்கள் கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் பிரச்சனைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

Punarpoosam natchathira palangal

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

     இருபத்தேழு நட்சத்திரங்களில் ஏழாவது இடத்தை பெறுவது புனர்பூச நட்சத்திரமாகும். இதன் அதிபதி குருபகவானாவார். இது ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. புனர்பூச நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்கள் மிதுன ராசியிலும், 4ம் பாதம் மட்டும் சந்திரனின் ராசியான கடகத்திலும் உள்ளது. இதில் 1,2,3ம் பாதங்கள் உடலில் காது தொண்டை, தோள் மார்பு போன்றவற்றையும், 4&ம் பாதம் நுரையீரல் மார்பு, வயிறு கல்லீரல் போன்றவற்றையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கே, கோ, ஹ, ஹி ஆகியவை தொடர் எழுத்துக்கள் கெ,கை ஆகியவையாகும்.

குணஅமைப்பு;     புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் என்பதால் பலருடன் நட்பாக பழகும் இயல்பும், பொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் இருக்கும். நன்றி மறக்காதவர்கள். பிறருக்கு நன்மை செய்யும் குணமிருக்கும். அழகான அங்க லட்சனங்கள் அமைந்திருக்கும். சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடப்பார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படகூடியவர்கள். அதிக தன் மானம் உள்ளவர்கள் என்பதால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். எதிரிகளிடம் எப்பொழுதும் கவனமாக நடந்து கொள்வார்கள். ஒருவரை பார்த்தவுடன் அவரிடம் உள்ள நல்லது கெட்டதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். பொதுவாகவே மௌனமாக எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். படிப்பறிவு, எழுத்தறிவு இவற்றை விட அனுபவ அறிவே அதிகமிருக்கும் மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள்.

குடும்பம்;     புனர்பூச நட்சத்திரகாரர்களுக்கு காதல் செய்ய கூடிய அமைப்பு உண்டு என்றாலும் பெற்றோருக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் காதலையே தியாகம் செய்வார்கள். திருமண வாழ்க்கை நன்றாக அமையும். சிக்கனமானவர் என்றாலும் மனைவி பிள்ளைகளின் தேவையறிந்தும், உணர்வுகளை புரிந்து கொண்டும் செலவு செய்ய தயங்க மாட்டார்கள். குடும்பத்தேவைகளை சரியாக பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கும் முன்னுதாரணமாக நேர்மையுடன் வாழ்வார்கள். 37 வயதிலிருந்து செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் அமையும்.

தொழில்;     புனர்பூச நட்சத்திரகாரர்கள் அரசு பணிகளில் இருப்பவர்களை விட, தனியார் துறைகளில் பணிபுரிபவர்களே அதிகம். தெரியாது என்று எதையும் ஒதுக்கீடு வைக்காமல் எந்த வேலையையும் எளிதில் கற்று கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். யாருக்கும் அஞ்சாமல் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பலரை வழி நடத்தும் ஆற்றல் உள்ளவர்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பைனான்ஸ் போன்ற துறைகளிலும், வங்கி, வர்த்தகதுறை, நீதித்துறை மதம் சார்ந்த கல்வித்துறை போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கதை கவிதை எழுதுவதிலும் கதைகள் சொல்வதிலும் வல்லவர்களாக இருப்பதால் இதனாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டு மற்றவர்களுக்கு கீழ் அடிமையாக பணிபுரிய விரும்ப மாட்டார்கள். உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

நோய்கள்;      சிலருக்கு சிறு வயதிலேயே முடக்கு வாதங்கள் ஏற்படகூடிய சூழ்நிலை உண்டாகும். நுரையிரலில் பாதிப்பு உண்டாகும். அதிக இனிப்பு வகைகளை விரும்பி உண்பதால் சர்க்கரை நோயும் தாக்கும்.

திசை பலன்கள்;       புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக குரு திசை வரும். குரு திசை மொத்தம் 16 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு குரு திசை எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்பதனை அறியலாம். குரு பலம் பெற்று அமைந்து பிறக்கும் போதே குரு திசை வருமேயானால் கல்வியில் நல்ல மேன்மை, பெற்றோர் பெரியோர்களை மதிக்கும் பண்பு, எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

    இரண்டாவதாக வரும் சனி திசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சொந்த தொழில் செய்யும் யோகம், பூமி மனை வாங்கும் யோகம், செய்யும் தொழிலில் உயர்வு சமுதாயத்தில் பெயர் புகழ் மேன்மையடையும் வாய்ப்பு போன்றவை உண்டாகும்.

    மூன்றாவது திசையாக வரும் புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை பெற முடியும்.

    நான்காவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு சமூக நல சேவைகளில் நாட்டம் கொடுக்கும். என்றாலும் ஆரோக்கிய ரீதியாகவும் சில பிரச்சனைகள் உண்டாகும்.

    ஐந்தாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்கள் வாழ்வில் பலவிதமான முன்னேற்றத்தை கொடுக்கும். சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும்.

    மேற்கூறிய தசா காலங்களில் அந்த கிரகங்கள் பலம் பெற்று சுபர் பார்வையுடன் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை அடைய முடியும். இல்லை எனில் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தே முன்னேற வேண்டியிருக்கும்.

    புனர்பூச நட்சத்திரர்களின் ஸ்தல விருட்சம் மூங்கிலாகும். இதை வழிபட்டு வந்தால் நற்பலன்களை அடையலாம். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதத்தில் சுமார் பன்னிரெண்டு மணியளவில் வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;    விவாகம், சீமந்தம், பூ முடித்தல், புதிய ஆபரணம் வாங்குதல், பெயர் சூட்டுதல், பந்த கால் நடுதல் கிரக பிரவேசம், வியாபாரம் தொடங்குதல், மாடு வாங்குதல், அதிகார பதவிகளை ஏற்று கொள்ளுதல், வேத சாஸ்திரங்களை கற்றல் போன்றவற்றை புனர்பூச நட்சத்திரத்தில் செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள் 

திருந்து தேவன் குடி;         கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நண்டாங் கோயிலில் குடிகொண்டுள்ள அருமருந்துடையார். அருமருந்து நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருவேட்களம்;     கடலு£ர் மாவட்டம், சிதம்பரத்திற்கு கிழக்கில் 3,கி.மீ தொலைவிலுள்ள பாசுபதேசுவரர் அன்னை நல்ல நாயகி எழுந்தருளியுள்ள திருக்கோயில்

திருவெண்ணெய் நல்லூர்     விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூருக்கு தென்கிழக்கில் 20.கி.மீ தொலைவிலுள்ள இருபாபுரீசுவரர்&மங்களாம்பிகை அருள் பாலிக்கும் திருத்தலம்.

திருப்பாச்சூர்;     சென்னைக்கு மேற்கில் 50.கி.மீ தொலைவிலுள்ள தீண்டாத் திருமேனியாக மூங்கில் அடியில் முளைத் தெழுந்த பாசூர்நாதர் திருக்கோயில் ஆகியவையாகும். இக்கோயில்களில் எல்லாம் மூங்கில் ஸ்தல மரமாக உள்ளது.

கூற வேண்டிய மந்திரம்;

   ஓம் தசரத குமாராய வித்மஹே

                ஸ்தா வல்லபாய தீமஹி

                தன்னோ ராம ப்ரசோத யாத்

புனர்பூச நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்                     கிருத்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர ஆண் பெண்களை திருமணம் செய்ய கூடாது.

 

Birth Date palan 3,12,21,30.

எண் 3 (3, 12, 21, 30)  ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என மூன்று வகையாகப்பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் முழக்கம் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவை இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. முன்றாம் எண்ணில் பிறந்தவர்கள்  குருவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள்  C, G, L, S. ஆகியவை. 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.

குண அமைப்பு மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும், அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள். தன்னைச் சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். எந்த காரித்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. சுயநலம் பாராமல் உதவி செய்யக்கூடிய குண மிருப்பதால், இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம். முகஸ்துதிக்கு  அடிமையாவார்கள். உண்மையே பேசி நீதிநியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள். பெரிய கருத்தரங்குகளிலும் மணிக்கணக்கில்பேசக்கூடிய திறமை இருக்கும். எவ்வளவு வேமாகப்பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். தரம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி  பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள்.

இவர்களிடம் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல கடுமையானதாக இருக்கும். முன் கோபக்காரர்கள். ஆனாலும் கோபம் தணிந்து பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள்  தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பு இருந்தாலும் அடிமைத் தொழில் செய்வது அறவே பிடிக்காது. பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.

உடலமைப்பும் ஆரோக்கியமும் மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரத்தை உடையவர்கள், நீண்ட கழுத்தும், திரண்ட புஜங்களும் கூரிய மூக்கும், நல்ல நிறமம் இருக்கும். இவர்கள் குரலில் அதிகாரமும், கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். தலையில் சீக்கிரமே வழுக்கை விழும்.  சாதாரணமாக சரும நோய் தோன்றும். நரம்புத் தளர்ச்சி, மூட்டு வாதம் முதலியவை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும்.  இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது-

குடும்ப வாழ்க்கை மூன்றாம் எண்ணில்  பிறந்தவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக  சமாளித்து விடுவார்கள். காதல் விவாகாரங்களில் ஈடுபட்டாலும் ஒர சிலருக்கு மட்டுமே காதல் திருமணம் கைகூடும். பலருக்கு வெவவரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்ல ªய்வ நம்பிக்கை மிக்கவராகவும், கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து வ செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும். சில நேரங்களில் அவர்களுடன் ஒத்துப் போக முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.

பொருளாதாரம் மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். எதிர்பாரத வகையில் திடீர் தனவரவுகளையும் கிடைக்கப்பெறுவார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் பணமுடை இருக்காது. பல்வேறு பொதுக்காரலியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.

தொழில் மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்தி சாலிகள் என்பதால் இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும்போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்புயாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்திலிருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும்.

நண்பர்கள், பகைவர்கள் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்துடன் பழக்க்கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வார்கள். நன்றிக்கு உதாரணமாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1,2, 9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நட்பாக இருப்பாரர்கள்.  5,6 ம் எண்ஙணில் பிறந்தவர்களுடன் இவர்களால் ஒத்துப் பேகமுடியாது.

குருவுக்குரிய காலம் நவம்பர் மாதம் 22 ந்தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு மாத காலமும், மற்றும் பிப்ரவரி 19 ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலான காலமும் குருவைச்  சேர்ந்தவை. பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்கள். வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள்.

குருவுக்குரிய திசை குருவுக்குரிய திசை வடகிழக்கு மூலை எனக்குறிப்பிடக்கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட கல்  குருவுக்குரிய ரத்தினம் புஷபராகம் ஆகும். புஷ்பராக கல் பதிந்த மோதிரம், சங்கிலி போன்றவற்றை அணிந்து  கொள்வதால் எல்லாவகையிலும் மேன்மைகளையும், வெற்றிகளையும் அடையலாம்.

பரிகாரங்கள்  குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மல்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது உத்தமம். குருவுக்கு ப்ரீதியாக  தட்சிணாமூர்த்தியையும், வழிபடலாம். ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி, 3,12,21,30

அதிர்ஷ்ட நிறம் – பொன் நிறம், மஞ்சள்

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட கிழமை – வியாழன்

அதிர்ஷ்ட கல் – புஷ்பராகம்

அதிர்ஷ்ட தெய்வம் – தட்சிணாமூர்த்தி