Today rasipalan 01.12.2017

இன்றைய ராசிப்பலன் –  01.12.2017

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-12-2017, கார்த்திகை 15, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி காலை 07.13 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 04.20 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அசுவினி நட்சத்திரம் பகல் 02.28 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பகல் 02.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. பரணி தீபம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

சந்தி

 

                திருக்கணித கிரக நிலை

01.12.2017

ராகு
கேது
சனி புதன் சூரிய சுக்கி குரு செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  01.12.2017

மேஷம்

இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

மிதுனம்

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மிகடாட்சமும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்

இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் வெளியூர் பயணத்தால் அனுகூலம் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

கன்னி

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

துலாம்

இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வருமானம் பெருகும்.

தனுசு

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.

மகரம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

December 2017 Rasi palan

டிசம்பர் மாத ராசிப்பலன்

                திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது
சனி

புதன்

 

சூரிய

சுக்கி

செவ்

குரு

             

கிரக   மாற்றம்

03&12&2017 புதன் வக்ர ஆரம்பம் பகல் 01.04 மணி

11&12&2017 விருச்சிகத்தில் புதன் (வ) அதிகாலை 04.18 மணி

16&12&2017 மகரத்தில் சூரியன் அதிகாலை 03.01 மணி

20&12&2017 தனுசில் சுக்கிரன் மாலை 06.32 மணி

23&12&2017 புதன் வக்ர நிவர்த்தி காலை 07.21 மணி

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7&ஆம் வீட்டில் குருவும் பாக்கிய ஸ்தானத்தில் புதனும் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். இம்மாத முற்பாதியில் சூரியன் 8&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எனவே ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்& வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையிருந்தாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை பெற்றுவிடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபறு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்றுவிடலாம்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. முடிந்தால் சூரியனுக்குரிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவதாலும் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்  15.12.2017 மாலை 06.53 மணி முதல் 18.12.2017 காலை 07.04 மணி வரை

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3&ல் ராகு 6&ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். கணவன்& மனைவியிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். 6&ல் குரு 7,8&ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவு தேவைக்கேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் சிக்கனமாக இருப்பதும், முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்:: சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், சனிக் கவசங்கள் படிப்பதாலும் பாதிப்புகள் குறையும்.

சந்திராஷ்டமம்  18.12.2017 காலை 07.04 மணி முதல் 20.12.2017 இரவு 07.57 மணி வரை

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 6&ல் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உங்கள் ராசிக்கு சர்ப கிரகங்களான ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்& மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் கோபத்தைக் குறைத்துக் கொண்டு விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம்:: துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதும், சர்ப கிரக வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்  20.12.2017 இரவு 07.57 மணி முதல் 23.12.2017 காலை 08.29 மணி வரை

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும்.

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5&ல் சுக்கிரன் 6&ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். மாத கோளான சூரியன் மாத பிற்பாதியில் 6&ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த எதிர்ப்புகள் மறைந்து ஏற்றங்கள் ஏற்படும். போட்டி பொறாமைகள் குறையும். பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். அபிவிருத்தி பெருகும். லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கணவன்& மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும்.  பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்& வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை விரதமிருந்து ஆறுமுக பெருமானை வணங்குவதாலும், அங்காரகனாகிய செவ்வாயை வணங்குவதாலும் உண்டாகும் துயரங்கள் குறையும்.

சந்திராஷ்டமம்  23.12.2017 காலை 08.29 மணி முதல் 25.12.2017 மாலை 06.55 மணி வரை

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3&ல் செவ்வாய் 4&ல் சுக்கிரன் 6&ல் கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். கணவன்& மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களில் தாமதத்திற்கு பின் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும் குரு பகவான் 3&ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்& வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டினை பெற்று மன மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும் சற்று முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

பரிகாரம்:: வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலையை  அணிவித்து, நெய் தீபமேற்றி, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

சந்திராஷ்டமம்  25.12.2017 மாலை 06.55 மணி முதல் 28.12.2017 அதிகாலை 01.41 மணி வரை

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2&ல் குரு, 3&ல் சூரியன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் அதிகப்படியாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். 2&ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன்& மனைவி விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.  புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்& வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கிடைக்கும் புதிய வாய்ப்புகளால் நல்ல லாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேரும் வாய்ப்பும் அமையும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றியும் பெறுவார்கள்.

பரிகாரம்:: அல்லல் போக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவதாலும், ஹனுமன் துதிகளை சொல்வதாலும் சனியால் ஏற்படும் தொல்லைகள் விலகும்.

சந்திராஷ்டமம்  30.11.2017 மாலை 04.17 மணி முதல் 02.12.2017 மாலை 05.32 மணி வரை. மற்றும்  28.12.2017 அதிகாலை 01.41 மணி முதல் 30.12.2017 அதிகாலை 04.29 மணி வரை

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2&ல் சுக்கிரன் 3&ல் சனி சஞ்சரிப்பது நல்ல ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். இம்மாத பிற்பாதியில் சூரியன் 3&ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன்& மனைவியிடையே சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் வகையில் அமையும். மாணவர்கள் உழைப்பிற்கேற்ற பலனை அடைவார்கள்.

பரிகாரம்:: கருணை வடிவான கந்தனை வணங்குவதாலும் சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் வாழ்வில் நற்பலன்களை பெறலாம்.

சந்திராஷ்டமம்  02.12.2017 மாலை 05.32 மணி முதல் 04.12.2017 மாலை 04.53 மணி வரை மற்றும் 30.12.2017 அதிகாலை 04.29 மணி முதல் 01.01.2018 அதிகாலை 04.27 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 12&ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளை எளிதில் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டு கொடுத்து நடந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவுகள் சற்று சுமாராக இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் சில தடைகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண்விரயங்கள் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகளும் கை நழுவிப் போகும் சூழ்நிலை உருவாகும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபடுவதாலும், பிரதோஷ விரதம் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்  04.12.2017 மாலை 04.53 மணி முதல் 06.12.2017 மாலை 04.33 மணி வரை

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே ராசியதிபதி குரு செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் பல இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். சூரியன் 12&ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகள் வீண் அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்& மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்:: சனிபகவானை வழிபடுவதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்  06.12.2017 மாலை 04.33 மணி முதல் 08.12.2017 மாலை 06.28 மணி வரை

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11&ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 10&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எந்த வித சிக்கலையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்& மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்& வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்:: சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டால் துன்பம் ஏதும் ஏற்படாது.

சந்திராஷ்டமம்  08.12.2017 மாலை 06.28 மணி முதல் 10.12.2017 இரவு 11.42 மணி வரை

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசியை குரு பார்ப்பதும் 10&ல் சூரியன் சுக்கிரன் 11&ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். கணவன்-& மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். சிலருக்கு புதிய பூமி, வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்& வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு உயர் பதவிகளை அடையக்கூடிய யோகம் உள்ளது. வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம்:: முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபடுவதாலும் சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பதாலும் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகும்.

சந்திராஷ்டமம் 10.12.2017 இரவு 11.42 மணி முதல் 13.12.2017 காலை 08.08 மணி வரை

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன  ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் 11&ல் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். குரு, செவ்வாய் 8ல் இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகலாம்.  பணம் கொடுக்கல்& வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும். நிதானத்துடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கு சற்று காலதாமதமாகலாம். மாணவர்கள் கல்விக்கான பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்:: சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தியை வணங்குவதாலும், குரு யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதாலும் இறை அருள் பரிபூரணமாய் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்  13.12.2017 காலை 08.08 மணி முதல் 15.12.2017 மாலை 06.53 மணி வரை

சுப முகூர்த்த நாட்கள்.

01.12.2017 கார்த்திகை 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரயோதசிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

06.12.2017 கார்த்திகை 20 ஆம் தேதி புதன்கிழமை திரிதியைதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை

07.12.2017 கார்த்திகை 21 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்திதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை

13.12.2017 கார்த்திகை 27 ஆம் தேதி புதன்கிழமை ஏகாதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம்.தேய்பிறை

14.12.2017 கார்த்திகை 28 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம்.தேய்பிறை

28.12.2017 மார்கழி 13 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

31.12.2017 மார்கழி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரியோதிசி திதி ரோகினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் இலக்கினம். வளர்பிறை

Weekly rasi palan December 3 to 9 of 2017

வார ராசிப்பலன்  டிசம்பர் 3 முதல் 9 வரை   2017

கார்த்திகை 17 முதல் 23 வரை

சந்தி
திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது

 

சனி 

புதன்

 

சூரிய

சுக்கி

குரு

செவ்

கிரக மாற்றம்

03–12-2017 புதன் வக்ரம் ஆரம்பம் பகல் 01.04 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

ரிஷபம்              02.12.2017 மாலை 05.32 மணி முதல் 04.12.2017 மாலை 04.53 மணி வரை 

மிதுனம்             04.12.2017 மாலை 04.53 மணி முதல் 06.12.2017 மாலை 04.33 மணி வரை

கடகம்                 06.12.2017 மாலை 04.33 மணி முதல் 08.12.2017 மாலை 06.28 மணி வரை

சிம்மம்               08.12.2017 மாலை 06.28 மணி முதல் 10.12.2017 இரவு 11.42 மணி வரை

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

06.12.2017 கார்த்திகை 20 ஆம் தேதி புதன்கிழமை திரிதியைதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை

07.12.2017 கார்த்திகை 21 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்திதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 9-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது என்றாலும் 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் சற்று பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்புங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 5, 6.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் ஜென்ம ராசியை பார்ப்பதாலும் 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். எதிர்பாராத பணவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. முடிந்தவரை அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் உழைத்தால் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 7, 8.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். 2-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமையும், நிம்மதியும் சிறப்பாகவே இருக்கும். விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 5, 6, 9.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

கற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் ராகு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் படிப்பில் முன்னேற பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். முருக வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 7, 8.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்த்து விடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 4-ல் சுக்கிரன், 6-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சாதகமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் தனவரவு ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5, 6, 9.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், 11-ல் ராகு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் கிட்டும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனை தரும். வெளிவட்டார தொடர்புகளும் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். கல்வி தரமும் உயர்வடையும். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்தால் மனக்கவலைகள் விலகும்.

வெற்றி தரும் நாட்கள் – 5, 6, 7, 8.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளித்து விடுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை இருந்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் விலகும்.

வெற்றி தரும் நாட்கள் – 7, 8, 9.

சந்திராஷ்டமம் 02.12.2017 மாலை 05.32 மணி முதல் 04.12.2017 மாலை 04.53 மணி வரை

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

முன்கோபம் உடையவராகவும், எளிதில்  உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் வீண் வாக்கு வாதங்கள் செய்யாமல் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. முருக கடவுளை வழிபட்டால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 9.

சந்திராஷ்டமம்  – 04.12.2017 மாலை 04.53 மணி முதல் 06.12.2017 மாலை 04.33 மணி வரை

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு செவ்வாய் சேர்க்கை பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். ஜென்ம ராசியில் சனியும், 12-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்றே ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும்.  மாணவர்களுக்கு உடல் நல பாதிப்புகளால் நிம்மதி குறையும். சனி பகவானை வழிபடுவதாலும், சனிக் கவசங்கள் படிப்பதாலும் பாதிப்புகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5,

சந்திராஷ்டமம்  – 06.12.2017 மாலை 04.33 மணி முதல் 08.12.2017 மாலை 06.28 மணி வரை

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டால் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாயும், லாப ஸ்தானத்தில் சூரியனும், சுக்கிரனும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்களே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணியில் சிறப்புடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். கணவன்- மனைவி உறவு சுமூகமாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் கிட்டும்.

வெற்றி தரும் நாட்கள் – 5, 6, 7.

சந்திராஷ்டமம்  – 08.12.2017 மாலை 06.28 மணி முதல் 10.12.2017 இரவு 11.42 மணி வரை

கும்ம்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் அமோகமான நற்பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவர்கள். தினமும் விநாயரை வழிபடுவதும், சதுர்த்தி விரதம் இருப்பதும் பல நன்மைகளை கொடுக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 7, 8, 9.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மற்றவர்களின் சுக துக்கங்களை தன்னுடையதாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். 8-ஆம் வீட்டில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாவதால் சிறிது மருத்துவ செலவு ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்வர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். கூட்டாளிகளாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் கல்விக்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாழக்கிழமை விரதமிருந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 9.

 

Today rasipalan 30.11.2017

இன்றைய ராசிப்பலன் –  30.11.2017


இன்றைய 
பஞ்சாங்கம்

30-11-2017, கார்த்திகை 14, வியாழக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.26 வரை பின்பு வளர்பிறை துவாதசி. ரேவதி நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு அசுவினி. சித்தயோகம் மாலை 04.12 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. தனியநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சந்தி

 

                திருக்கணித கிரக நிலை

30.11.2017

ராகு
கேது
சனி புதன் சூரிய சுக்கி குரு செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  30.11.2017

மேஷம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமின்றி செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

ரிஷபம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்

இன்று செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிடைக்கும். மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாக நேரிடும். உங்களுக்கு இன்று மாலை 4.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.

கன்னி

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 4.12 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். எந்த விஷயத்திலும் கவனம் தேவை.

துலாம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

தனுசு

இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும்.

மகரம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

கும்பம்

இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகள் எடுக்க அனுகூலமான நாளாகும்.

Today rasipalan 29.11.2017

இன்றைய ராசிப்பலன் –  29.11.2017

இன்றைய  பஞ்சாங்கம்

29-11-2017, கார்த்திகை 13, புதன்கிழமை, தசமி திதி பகல் 10.52 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 05.12 வரை பின்பு ரேவதி. சித்தயோகம்  மாலை 05.12 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சந்தி

 

                திருக்கணித கிரக நிலை

29.11.2017

ராகு
கேது
சனி புதன் சூரிய சுக்கி குரு செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  29.11.2017

மேஷம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

மிதுனம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். வேலையில் பணிச்சுமை குறையும்.

கடகம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.

கன்னி

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப்பெறும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேல்அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் மேலோங்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.

மகரம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்க கூடும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

 

Today rasipalan 28.11.2017

இன்றைய ராசிப்பலன் –  28.11.2017

 

இன்றைய  பஞ்சாங்கம்

28-11-2017, கார்த்திகை 12, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 11.24 வரை பின்பு தசமி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.21 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் மாலை 05.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1/2. முருக வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

  சந்தி திருக்கணித கிரக நிலை

28.11.2017

ராகு
கேது
சனி புதன் சூரிய சுக்கி குரு செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  28.11.2017

மேஷம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் விலகும்.

ரிஷபம்

இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மிதுனம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிட்டும்.

கடகம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.14 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்வதை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை மதியத்திற்கு பின் செய்யவும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உங்கள் ராசிக்கு பகல் 11.14 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.

கன்னி

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

துலாம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் கிட்டும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும்.

மீனம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

Today rasipalan 27.11.2017

இன்றைய ராசிப்பலன் –  27.11.2017

 

இன்றைய  பஞ்சாங்கம்

27-11-2017, கார்த்திகை 11, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.03 வரை பின்பு வளர்பிறை நவமி. சதயம் நட்சத்திரம் மாலை 04.37 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 04.37 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

  சந்தி திருக்கணித கிரக நிலை

27.11.2017

ராகு
கேது
சனி புதன் சூரிய சுக்கி குரு செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  27.11.2017

மேஷம்

இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.

கடகம்

இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

கன்னி

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

தனுசு

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும்.

மகரம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கும்பம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.

மீனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

 

Today rasipalan 26.11.2017

இன்றைய ராசிப்பலன் –  26.11.2017

இன்றைய  பஞ்சாங்கம்

26-11-2017, கார்த்திகை 10, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி காலை 09.51 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 03.04 வரை பின்பு சதயம். மரணயோகம் பகல் 03.04 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

  சந்தி திருக்கணித கிரக நிலை

26.11.2017

ராகு
கேது
சனி புதன் சூரிய சுக்கி குரு செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  26.11.2017

மேஷம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.

ரிஷபம்

இன்று- உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய குறைவு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானம் தேவை.

சிம்மம்

இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். நண்பர்கள் வருகை சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

துலாம்

இன்று சுபகாரிய முயற்சிகளில் சில தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். செய்யும் செயல்களில் ஆர்வம் குறையும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

மீனம்

இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் மதிப்பை பெறுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும்.

Vrichika rasi – Sani peyarchi 2017 to 2020

விருச்சிகம்  விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
  எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் எடுக்கும் முயற்சிகளில் அயராது பாடுபடக்கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 3,4-க்கு அதிபதியும், ராசியதிபதி செவ்வாய்க்கு பகை கிரகமுமான சனி கடந்த காலங்களில் ஜென்ம ராசியில் சஞ்சரிந்து ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெற்றதால் இதுநாள் வரை பல்வேறுவகையில் துன்பங்களைச் சந்தித்து வந்தீர்கள். வாக்கியப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி முடிவடைந்து பாதச்சனி தொடங்குகிறது. உடல் ஆரோக்கிய ரீதியாக சற்று மந்தநிலை, சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் கடந்த காலங்களில் இருந்த பெரிய பிரச்சினைகள் யாவும் படிப்படியாக மறைந்து மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். குடும்பத்தில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச செல்வது, உற்றார்- உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். தொழில், வியாபார நிலையில் சில போட்டிகளையும் மந்தமான சூழ்நிலைகளையும் சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய லாபத்தைப் பெற்று விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப்பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். புதிய வேலை தேடு பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. 
சனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 4-11-2019 வரை குருவும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்க மாகவே இருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக் கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தெய்வ தரிசனங் களுக்காகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பல பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் 5-11-2019 முதல் 20-11-2020 வரை சஞ்சாரம் செய்ய விருப்பது அனுகூலமான அமைப்பாகும். இக்காலங்களில் குடும்பத்தில் சுபகாரிங்கள் கைகூடும். மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொருளா தார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். 13-2-2019 வரை கேது முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து முன்னேற்றம் அடையக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்  
   உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தூக்கமின்மை, உடல்நிலையில் சோர்வு, மந்த மான நிலை, ஞாபகமறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல் குறையும். குடும்பத்தி லுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திரவழியில் மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பதன்மூலம் மனஉளைச்சலைத் தவிர்க்கலாம்.

குடும்பம், பொருளாதார நிலை 
   கணவன்-மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமையும். உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. சுப காரிய முயற்சிகள் தடையுடன் நிறைவேறும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும். எதிர் பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். 

கொடுக்கல்- வாங்கல்
   கமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் போன்றவற்றில் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில்  நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும்.

தொழில், வியாபாரம்
   தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சிறுசிறு சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதப்பட்டாலும் தக்க சமயத்தில் கிடைக்கப்பெறும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பைப் பெற சற்றே சங்கடங்களை எதிர் கொண்டாலும் அனுசரித்து நடந்து கொள்வதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள்.

உத்தியோகம் 
  உத்தியோகஸ்தர்களுக்கு எவ்வளவுதான் பாடுபட்டாலும் அதன் பலனை அடையமுடியாது. உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைப்பளுவும் அதிகரிக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் சமாளித்து முன்னுக்கு வரமுடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் பதவி உயர்வுகளால் அதிகநேரம் உழைக்க நேரிடும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப்பிரிய நேரிடும். 

பெண்கள்
  பெண்களுக்குத் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தியளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். சிலருக்கு சிறப்பான புத்திரபாக்கியம் அமையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. பணிபுரிவோருக்கு வேலைப்பளு சற்று அதிகரித்து காணப்படும்.

அரசியல்
  அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரும் என்றாலும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதில்  சில தடைகளைச் சந்திக்க நேரிடும். தொண்டர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பொருளாதாரம் உயரும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும் மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.

விவசாயிகள்
   பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். போதிய நீர்வரத்து இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை உண்டாகும். அரசுவழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்கும். முதலீட்டினை எடுக்கவே நிறைய உழைப் பினை மேற்கொள்ள நேரிடும். கடந்தகால பிரச்சினைகள் சற்று குறைந்து முன்னேற்றம் அடைவீர்கள்.

கலைஞர்கள் 
  கலைஞர்களுக்கு வாய்ப்புகள் சுமாராக அமையும் என்றாலும் பட வசூல் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக அமையும். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தி அளிக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் சிறுசிறு இடையூறுகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மாணவ-மாணவியர்
  கல்வியில் சற்று மந்தநிலை உண்டாகக்கூடிய காலம் என்பதால் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தா லும் மனதில் வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மனம் அலைபாயும். தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது நல்லது.பெற்றோர், ஆசிரியர்களின் சொற்படி நடந்தால் அனுகூலமான பலன் கிடைக்கும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை
  சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் குரு வீடான 2-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் குடும்பச்சனி நடைபெறு கிறது. குருவும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்-உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூட தாமதமாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்து விடமுடியும். கேது முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டிவரும். உத்தியோகஸ்தர்கள் பிறர்செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ஆஞ்ச நேயரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை
  சனி 2-ல் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு பகவானும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உடல்நிலையிலும், உணவு விஷயங்களிலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். எடுக்கும் காரியங்களில் அதன் முழுப்பலனைப் பெற சில தடைகளை எதிர்கொண்டாலும் வெற்றி உங்களுக்கே கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளைப் காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் ஏற்பட லாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். தொழில், வியாபாரம் லாபம் தரும் என்றாலும் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கேது 3-ல் சஞ்சரிப்பதால்  உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கப்பெறும். எதையும் சமாளித்துவிட முடியும். ஆஞ்சநேயரை வழபிடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை
  சனி பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். நெருங்கியவர்களால் ஓரளவுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடந்தகால பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டி யிருக்கும். 5-10-2018 முதல், குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரித்தாலும் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறமுடியும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை களுக்குப்பின் வெற்றி கிட்டும். கைக்குக் கிடைக்க வேண்டிய பணத்தொகை சற்றுத் தாமதப்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை
  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 2-ல் சஞ்சரிப்பதாலும், குருவும் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதாலும் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற நிறைய உழைக்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விடமுடியும். 13-2-2019 முதல், கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். முடிந்தவரை நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண்பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை
   சனி 2-ல் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குருவும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் சங்கடங்கள் நிலவும். கொடுக்கல்- வாங்கலில் வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல்நிலை, ஜலத்தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்திலும் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றி மறையும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு நற்பலன் ஏற்படும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது கடன்களைக் குறைக்க உதவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோ கஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டி யிருக்கும். இக்காலங்களில் ஆஞ்சநேயர் மற்றும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை
   சனி பகவான் சர்ப்ப கிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று குடும்ப ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பொருளா தார நிலை சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்து வதைத் தவிர்ப்பது சிறப்பு. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் உத்தமம். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் சாதகப்பலன் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்றே நிம்மதியுடன் பணிபுரிய முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது கெடுதியைக் குறைக்கும்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை
  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உற்றார்-உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்து வார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. 29-10-2019 முதல், குரு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் இருந்த தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய் பவர்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கடன்கள் படிப்படியாகக் குறையும். ராகு, கேதுவுக்குப் பரிகாரம் செய்யவும்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை
 சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் உடல் நிலையில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதில் இடையூறுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து நடப்பது நல்லது. இக்காலத்தில் குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையிலிருந்த தடைகள் விலகி கடன்கள் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த விதமான பிரச்சினை களையும் சமாளித்து லாபம் அடையக்கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் வேலைப்பளு சற்று அதிக மாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள்.  சனிக்குப் பரிகாரம் செய்வது, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை
 உங்களுக்கு ஏழரைச்சனியில் குடும்பச்சனி நடைப்பெற்றாலும் சனி வக்ர கதியிலிருப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்டத் திருமண சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். நல்லவரன்கள் தேடிவரும். உற்றார்- உறவினர்களிடமிருந்தும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்-வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். தொழில், வியாபார ரீதியாகவும் முன்னேற் றங்கள் உண்டாகும். போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர் களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைவார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை
  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் 2-ல் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனி தொடருவதும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது என்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குரு 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபார ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலிலும், பெரிய தொகை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங் களிலும்  சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையினை அடையமுடியும். உற்றார்-உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சர்ப்ப சாந்தி செய்வது நற்பலனைத் தரும்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை
 சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதும், 3-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் மட்டுமே அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டி வரும். வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும் என்பதால் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும் என்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வுகள் சற்றுத் தாமதப்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். நவகிரக வழிபாடு செய்வது சிறப்பு.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் : 1, 2, 3, 9, நிறம் : ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை : செவ்வாய், வியாழன், கல் : பவளம், திசை : தெற்கு, தெய்வம் : முருகன்.

Sani transit Yagam & Astrological Conference

அனைவரும் யாகத்தில் கலந்து கொண்டு இறையருளைப் பெறவும், ஜோதிட மாமேதைகளின் உரையாடலை கேட்கவும் குடும்பத்துடன் வரும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு

முருகுபாலமுருகன்