Today rasi palan – 01.01.2018

Today rasi palan – 01.01.2018

இன்றைய ராசிப்பலன் –  01.01.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-01-2018, மார்கழி 17, திங்கட்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.44 வரை பின்பு பௌர்ணமி. மிருகசீரிஷம்  நட்சத்திரம் பகல் 02.53 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. பௌர்ணமி. நடராஜர் அபிஷேகம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சந்தி
                திருக்கணித கிரக நிலை

01.01.2018

ராகு
கேது
சூரிய சனி

சுக்கி

புதன்

 

செவ் குரு

     

இன்றைய ராசிப்பலன் –  01.01.2018

மேஷம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாகலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் பொறுப்புடன் நடந்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்த்து எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

மிதுனம்

இன்று உங்களுக்கு இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கடகம்

இன்று சுப செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் சற்று குறையும்.

சிம்மம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். பெற்றோர் பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஓரளவு சேமிக்க முடியும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் உதவியால் நற்பலன்கள் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க முடியும்.

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உடல் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.

கும்பம்

இன்று குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வண்டி வாகனங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

மீனம்

இன்று குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

Chithirai natchathira palangal

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

எழுதியவர்  முனைவர் முருகுபாலமுருகன்,

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினான்காவது இடத்தைப் பெறுவது  சித்திரை நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இந்த நட்சத்திரதின் 1,2 ஆம் பாதங்கள் கன்னி ராசிக்கும், 3,4&ம் பாதங்கள் துலா ராசிக்கும் உரியதாகும். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் 1,2&ம் பாதங்கள் தொந்தி அடிவயிறு போன்றவற்றையும், 3,4&ம் பாதங்கள் சிறு நீரகம், பிறப்புறுப்பு, அடிவயிறு போன்றவற்றையும் ஆளுமை செய்கின்றன. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பே, போ, ர, ரி போன்றவை. தொடர் எழுத்துக்கள், பை, பௌ போன்றவையாகும்.

குண அமைப்பு;

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால் முன்கோபம் அதிகமிருக்கும். அழகிய உடல் வாகும், நீலவிழியும், கட்டான உடலமைப்பும், சிறந்த ஒழக்கமும் அமைந்திருக்கும். பலவகை கலையம்சம் கொண்ட ஆடை அணிகலன்களை விரும்பி அணிபவர்களாக இருப்பார்கள். பிரபஞ்சம் சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள். தெய்வ பக்தியும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் பிறருக்கு கொடுத்து உதவக் கூடிய தாராள குணமும் இருக்கும். சொன்ன சொல்லை தன் தலையை வைத்தாவது காப்பாற்றுவார்கள். நல்ல அறிவு கூர்மையும் நடைமுறையை பற்றி பேசுபவர்களாகவும் இருப்பார்கள். வாசனை பொருட்களை விரும்பி உபயோகிப்பார்கள்.

குடும்பம்;

 தெரிந்தோ தெரியாமலோ சில நட்சத்திரங்களைப் பற்றி தவறான பழ மொழிகள் வழங்கி வருகின்றன. சித்திரைக்கு அப்பன் தெருவிலே என்ற பழமொழியும் இதில் ஒன்று. ஆனால் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறப்பான குடும்பமும் தந்தை தாய்க்கு குறையில்லா வாழ்க்கையும் அமையும். மனைவியின் மேல் அதிக பிரியம் உடையவராகவும் மனைவியின் பேச்சை கேட்பவராகவும் இருப்பார்கள். பரம்பரை கௌரவத்தை எளிதில் விட்டு கொடுக்க மாட்டார்கள் நந்தி வாக்யம் என்ற நூலில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களை பற்றி கூறுகையில் பாதி வாழ்க்கை சுக போகமாகயும் மீதி வாழ்க்கை துறவறத்திலும் கழியும் என்று கூறுகிறது. அதிகம் பேசுபவராக இருந்தாலும் அதில் அர்த்தம் நிறைய இருக்கும். 23 வயது வரை கொஞ்சம் கஷ்டமும் சிறு சிறு விபத்துக்களும், பொருள் அழிவும் கெட்ட நண்பர்களின் சகவாசமும் இருக்கும் என்றாலும் அதன் பிறகு வாழ்வில் ராஜயோகமும், செல்வம் செல்வாக்கும் உயர் வடைந்து அனைவரும் அண்னாந்து பார்க்கும் உயரத்திற்கு வந்து விடுவார்கள். மணவாழ்க்ககை சற்று தாமதமாகவே அமையும்.

தொழில்;

  சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த துறையை சார்ந்திருந்தாலும் அதில் சாதனைகள் பல செய்ய கூடிய வல்லமையை பெற்றிருப்பார்கள். எதிலும் முதலிடத்தை பிடித்துவிடுவார்கள்.  பல பட்ட படிப்புகள் படித்திருந்தாலும் பார்க்கும் வேலைக்கும் படிப்பிற்கும் சம்மந்தம் இருக்காது. எல்லோரிடத்திலும் கனிவாக பேசி வேலை வாங்குவார்கள். பலரை வைத்து நிர்வகிக்க கூடிய நிர்வாகத் திறன் இருக்கும். மற்றவர்களை அடக்கி ஆளும் திறன் கொண்டவர்கள். நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் இருந்து கொண்டேயிருப்பதால் சம்பாதிக்க வேண்டும் என்ற கவலையும் நிறையவே இருக்கும் தொழில் மீது அதிக பற்று உள்ளவர்களாக இருப்பதால் தங்களுடைய தூக்கத்தைக் கூட தூக்கி யெறிந்து விட்டு பணி புரிவார்கள் மக்களால் போற்றி புகழ் கூடிய அளவிற்கு வாழ்வில் உயர்வடைவார்கள்.

நோய்கள்;

     சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தோல் வியாதியும், சிறு நீரக பாதிப்பும், கர்ப்பப்பை, சிறு நீர் குழாய்கள் போன்றவற்றில் பாதிப்பும் உண்டாகும். உடலில் நீர் சத்து குறைவு, ஹார்ட் அட்டாக், வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்,  அப்பன்டிஸ் போன்றவற்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை, ரத்த சம்மந்தப் பட்ட பாதிப்புகள் போன்றவை உண்டா-கும்.

திசைப்பலன்கள்;

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் செவ்வாய் திசை மொத்தம் வருட காலம் 7 என்றாலும் பிறந்த நேரத்தை கொண்டு மீதமுள்ள தசா புக்திகளை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்களாகும். இத்திசை காலங்களில் ராகு நின்ற வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் மட்டுமே இளமை கால வாழ்வில் கல்வியில் முன்னேற்றமும், சுகவாழ்வும் கிட்டும். ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் கல்வியில் ஈடுபாடு இருக்காது. பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களிடம் அவப் பெயரை எடுக்க நேரிடும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையும் அதனால் வம்பு வழக்குகளும் ஏற்படும்.

அடுத்து 3&வதாக வரும் குரு திசை காலங்கள் 16 வருடம் நடைபெறும். இத்திசை காலங்களில் கடந்த கால பிரச்சனைகள் விலகி முன்னேற்றமான நிலை, முரட்டு சுபாவம் மறைந்து அனைவரிடமும் அன்பாக பழகும் பண்பு உண்டாகும். சுகவாழ்வும் கிட்டும்.

நான்காவதாக வரும் திசை சனி திசையாகும். இது 19 வருட காலங்கள் நடைபெறும் சனி திசை மாராக திசை என்றாலும் சனி பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால்  பலவகையில் மேன்மைகளும் சமுதாயத்தில் உயர்வும் உண்டாகும். உடனிருப்பவர்களால் உயர்வுகள் கிட்டும். சமுதாயத்தில் பெயர் புகழ் உயர்வடையும்.

ஸ்தல விருட்சம்;

  சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஸ்தல விருட்சம் வில்வ மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலனை அடைய முடியும். இந்த நட்சத்திரம் மீனின் கண் போல பளிச்சென்று இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இரவு சுமார் ஒரு மணிக்கு  உச்சிக்கு நேராக விண்ணில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

 சித்திரை நட்சத்திரத்தில் திருமணம் பூ முடித்தல், குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெயர் வைத்தல், புது மனை புகுதல், அன்னதானம் செய்தல், கல்வி, ஜோதிடம், மருத்துவம், சங்கீதம் வண்டி வாகனங்கள் வாங்குவது, நாட்டிய அரங்கேற்றம் போன்றவற்றை தொடங்கலாம். புத்தகம் வெளியிடுதல், குளம் கிணறு வெட்டுதல் தானியத்தை  களஞ்சியத்தில் சேர்த்தல் போன்ற வற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

அண்ணன் கோயில்;

     நாகை, சீர்காழிக்கு தென் கிழக்கே 8 கி.மீ தொலைவிலுள்ள திருமால் கோயில்

நன்னிலம்;

     மயிலாடுதுறை, திருவாரூர் இடையேயுள்ள செஞ்சடை நாதர்&பெரிய நாயகி திருக்கோயில்

நாச்சியார் கோயில்;

     கும்பகோணத்துக்கு தென் கிழக்கே 9 கி.மீ தொலைவிலுள்ள ஸ்ரீநிவாச பெருமாள் தாயாரை மணம் புரிந்த காட்சியிலுள்ள கோயில்

திரு நெடுங்களம்;

     திரு வெறும்பூருக்கு கிழக்கே 10.கி.மீ தொலைவிலுள்ள நித்ய சுந்தரர்&ஒப்பிலா நாயகி திருக்கோயில்

திருக்கோயிலூர்;

     பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்த விரட்டுடேசுவரர் சிவானந்த வல்லி திருக்கோயில்

திருநாராயணபுரம்;

     கரூர்&முசிறிக்கு மேற்க்கில் 15.கி.மீ தொலைவில் காளமேக பெருமாள்&பூதேவி&ஸ்ரீதேவி சந்நிதி

திருக்கண்டியூர்;

     வடக்கில் 10.கி.மீ தொலைவிலுள்ள சிரக் கண்டீசுவரர்&மங்கள நாயகி திருக்கோயில்

கூற வேண்டிய மந்திரம்

ஓம் நமோ பகவதே, மஹா ஸீதர் சனாய தீப்த்ரே            

ஜ்வாலா பரீதாய ஸர்வ திக்ஷோபணகராய

ஹீம் பட் ப்ரஹ்மனே பரஞ் ஜ்யோ திஷே நம!

சித்திரை நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

அவிட்டம், மிருகசீரிஷம், போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்ய கூடாது.

 

Rahukalam Yamakandam Today 31.12.2017

Date: 31.12.2017

Day: Sunday

ராகு காலம் மாலை 4:30 to 6 PM
எமகண்டம் மதியம் 12:00 to 1:30 PM
குளிகை மதியம் 3 to 4:30 PM

 

Rahu Kaalam 4:30 PM to 6 PM
Yamagandam Noon 12:00 to 1:30 PM
Gulikai 3 PM to 4:30 PM

 

Goto Main Page

Hasta natchathira palangal

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

முனைவர் முருகுபாலமுருகன்,

     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதிமூன்றாவது இடத்தை பெறுவது அஸ்த நட்சத்திரமாகும். இதன் அதிபதி சந்திர பகவானாவார். இது கன்னி ராசிக்குரிய நட்சத்திரமாகும். இது உடலில் சிறு நீர்ப்பை, குடல் சுரப்பிகள் போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பூ,ஷ,ந,ட ஆகியவை. தொடர் எழுத்துக்கள் பூ கே ஆகியவையாகும்.

குண அமைப்பு;

     அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சந்திர பகவான் என்பதால் அழகான முகமும் வசீகரமான உடலமைப்பும் கொண்டவர்களால் இருப்பார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்களாகவும், சிறந்த நகைச்சுவையாளர்களாகவும் இருப்பார்கள். அதிக உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருப்பதால் சட்டென கடினமான வார்த்தைகளை உபயோகிப்பார்கள். என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய கூடிய பரோகார சிந்தனைப் பெற்றவர்கள். வெகுளியான குணமிருக்கும். மிகவும் சிக்கனமாக செயல்படுவார்கள். அதிக சுயநலமும் இருக்குமாதலால் பண விஷயத்தில்  மிகவும் கவனமுடன் இருப்பார்கள். இயற்கையை ரசிப்பார்கள்.

குடும்பம்;

 சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் மத்திய வயதிலிருந்து வசதி வாய்ப்பபுகள் பெருகும். தாய் சொல்லை மதித்து நடப்பார்கள். காதல் வயப்படக்கூடியவர்கள். மனைவி சொல்லே மந்திரம் என நினைப்பார்கள். எந்த முடிவாக இருந்தாலும் மனைவியை கலந்தாலோசித்தே முடிவெடுப்பார்கள். அளவான குடும்பத்தை பெற்றவர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தேவையின்றி தலையிட மாட்டார்கள். இனிப்பாக பேசியே பெண்களை கவர்ந்திழுத்து விடுவார்கள். பிற மதத்தினரைக் கூட மதிக்கும்  பண்பும், உற்றார் உறவினர்களுக்கும் உதவி செய்யும் ஆற்றலும் கொண்டவர்கள். தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றும் இரக்க சுபாவம் உடையவர்களாதலால் பாவ புண்ணியம் பார்த்து உதவுவார்கள். உணவுப் பிரியர்கள்.

தொழில்;

     அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியங்களை முடித்தே தீர வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்களாகவும், சிறந்த நகைச்சுவையாளர்களாகவும் பல துறைகளில் அனுபவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். சித்தர் பீடாதிபதி, அறிவியல் அறிஞர், வரலாற்று பேராசிரியர், கல்வெட்டு ஆய்வாளர் போன்ற துறைகளில் சாதனை செய்வார்கள். வெளியூர் பயணங்கள் என்றால் தடையின்றி மேற்கொள்வார்கள். கமிஷன் கட்டிட காண்டிராக்ட், ஏஜென்ஸி, வண்டி வாகனம் மற்றும் உணவு வகை போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும். இசை ஆர்வம் உடையவர்கள் என்பதால் பணியில் ஈடுபடும் போது பாடிக் கொண்டோ அல்லது பாடல்களை கேட்டுக் கொண்டோ இருப்பார்கள் எதிரிகளை தோல்வியுற செய்வதில் வல்லவர்கள். எந்த துன்பம் வந்தாலும் தடையின்றி உழைத்து கொண்டேயிருப்பார்கள். சில நெருக்கடி காலங்களில் பிறரின் மேலேறி சவாரி செய்து முன்னேறவும் தயங்க மாட்டார்கள். கொள்கைகளில் சற்று அழுத்தமானவர்கள் என்பதால் ஆறு மாதத்திற்கொரு முறை பணியாளர்களை மாற்றி கொண்டேயிருப்பார்கள். செய்வது தொழிலோ, உத்தியோகமோ அதில் சாதனைகள் பல படைப்பார்கள்.

நோய்கள்;

     அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தோல் வியாதி, கண்கள் மற்றும் மூக்கில் பிரச்சனைகள், உடலில் கெட்ட நீர் சேரக் கூடிய சூழ்நிலை போன்றவற்றால் மருத்துவ செலவுகள் உண்டாகும்.

திசை பலன்கள்;

அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சந்திர திசையின் மொத்த காலங்கள் பத்து வருடம் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள சந்திர தசா காலங்களை அறிய முடியும். இத்திசை காலங்களில் உடல் நிலையில்  ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தாய்க்கு சிறு சிறு சோதனைகள் தோன்றி மறையும்.

    இரண்டாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். இத்திசை காலங்களில் செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் இல்லையெனில் கல்வியில் மந்த நிலையையும், உடல் ரீதியாக ஆரோக்கிய பாதிப்பினையும் உண்டாக்கும்.

மூன்றாவதாக வரும் ராகு திசை காலங்கள் 18 வருடங்களாகும். இத்திசை காலங்களில் கல்வியை தொடர முடியாத நிலை, குடும்பத்தில் பிரச்சனை, எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற நட்புகளாலும் பிரச்சனைகள் உண்டாகும்.

    நான்காவதாக குரு திசை சாதிக்க வைக்கும் நல்ல தொழில் யோகத்தையும் பொருளாதார மேன்மையையும் கொடுக்கும். ஐந்தாவதாக வரும் சனி திசை காலங்கள் யோகத்தை அள்ளி தரும் சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும். பொருளாதாரம் உயர்வடையும் பூமி, மனை, வண்டி வாகனம், ஆடை ஆபரணம் யாவும் சேரும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

அஸ்த நட்சத்திரத்தில் உபநயனம், தாலிக்கு பெண் உருக்குதல், மஞ்சள் நீராட்டுதல், சீமந்தம், காதணி விழா, கல்வி கற்க தொடங்குதல், யாத்திரை செல்லுதல் ஆடை ஆபரணம், வண்டி வாகனம் வாங்குதல், புது மனை புகுதல் கடற் பயணம் மேற்கொள்ளுதல், விதைவிதைத்தல், களஞ்சியத்தில் தானியம் சேர்த்தல் மந்திரம் கற்றல், நோய்க்கு மருந்துண்ணுதல் புதிய வேலைக்கு விண்ணப்பித்தல் வியாபாரம் தொடங்குதல், கிணறு வெட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

வழி பாட்டு ஸ்தலங்கள்

புவனகரி;

     கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு வடமேற்கில் 7 கி.மீ தொலைவிலுள்ள வேதபுரீசுவரர்&மீனாட்சியம்மன் அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருவாதவூர்;

     மதுரைக்கு வடகிழக்கில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் அவதாரத் தலத்திலுள்ள புருஷா மிருக தீர்த்தமும் வேதநாதர் ஆரணி வல்லியம்மையும் அருள் பாலிக்கும் தலமும் சிறப்பு வாய்ந்தது.

செய்யாறு;

    காஞ்சிபுரத்திற்கு தெற்கே 28 கி.மீ தொலைவிலுள்ள திருவத்திரத்திலுள்ள இறைவன் வேதபுரீசுவரர் இளமுலை நாயகி திருத்தலம்.

எழிலூர்;

     திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு மேற்கில் 4 கி.மீ தொலைவிலுள்ள வேதபுரீசுவரர் ஸ்தலம்.

தர்மபுரி;

     தர்மபுரி மாவட்ட தலை நகரத்தில் கோட்டை கோயில் என்றழைக்கப்படும் தருப் தலத்தில் அருள் பாலிக்கும் வேளாலீசுவரர் காமாட்சியம்மன் திருக்கோயில்

     இத்தலங்களை வழிபாடு செய்வதால் அஸ்த நட்சத்திர காரர்கள் நற்பலனை அடைய முடியும்.

அஸ்த நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் அத்திர மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலனை அடையலாம். இந்த நட்சத்திரத்தை ஏப்ரல் மாதத்தில் இரவு சுமார் பன்னிரண்டரை மணிக்கு வானத்தில் காண முடியும்.

கூற வேண்டிய மந்திரம்

     ஓம் பூர்புவஸ்ஸீவ தத்ஸவிதுர் வரேண்யம்

     பர்கோ தேவஸ்ய தீமஹி

     தியோயோ ப்ரசோதயாத்!!

பொருந்தாத நட்சத்திரங்கள்

     ரோகிணி, திருவாதிரை, சுவாதி, திருவோணம், சதயம் போன்ற ஆண் பெண் நட்சத்திரங்களை அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்ய கூடாது.

 

Today rasi palan – 31.12.2017

Today rasi palan – 31.12.2017

இன்றைய ராசிப்பலன் –  31.12.2017

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

31-12-2017, மார்கழி 16, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பகல் 03.28 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. ரோகிணி நட்சத்திரம் மாலை 05.53 வரை பின்பு மிருகசீரிஷம்.  நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

சந்தி
                திருக்கணித கிரக நிலை

31.12.2017

 

ராகு
கேது
சூரிய சனி சுக்கி   புதன்

 

செவ் குரு

     

இன்றைய ராசிப்பலன் –  31.12.2017

மேஷம்

இன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உறவினர்கள் வருகையால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளால் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சி நிலவும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

துலாம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்

இன்று வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கும்பம்

இன்று தேவையற்ற பிரச்சனைகளால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். பெரியோர்களிடம் மனஸ்தாபங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பணவரவு சிறப்பாக இருக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

Rahukalam Yamakandam Today 30.12.2017

Date: 30.12.2017

Day: Saturday

ராகு காலம் காலை 9 to 10:30 AM
எமகண்டம் மதியம் 1:30 to 3 PM
குளிகை காலை 6 to 7:30 AM

 

Rahu Kaalam 9 AM to 10:30 AM
Yamagandam 1:30 PM to 3 PM
Gulikai 6 AM to 7:30 AM

 

Goto Main Page

Vaara Rasi Palan (31-12-2017 to 06-01-2018) | Weekly Astrosign Predictions | Murugu Balamurugan

Today rasi palan – 30.12.2017

Today rasi palan – 30.12.2017

இன்றைய ராசிப்பலன் –  30.12.2017

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-12-2017, மார்கழி 15, சனிக்கிழமை, துவாதசி திதி மாலை 06.55 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 08.38 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் இரவு 08.38 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. கிருத்திகை விரதம். சனி பிரதோஷம். முருக-சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சந்தி
                திருக்கணித கிரக நிலை

30.12.2017 

ராகு
கேது
சூரிய

சனி சுக்கி

  புதன் செவ்

குரு

 

இன்றைய ராசிப்பலன் –  30.12.2017

மேஷம்

இன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மன மகிழ்ச்சியை தரும்.

கடகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.

கன்னி

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.  கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

துலாம்

இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

தனுசு

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

மகரம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். சிக்கனமுடன் செயல்பட்டால் பணபிரச்சினையை தவிர்க்கலாம்.

கும்பம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மீனம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

Uthiram natchathira palangal

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

     இருப்தேழு நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது இடத்தை பெறுவது உத்திர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசிக்கும்,  2,3,4,&ம் பாதங்கள் கன்னி ராசிக்கும் உரியதாகும். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் முதுகெலும்பு பகுதியை முதல் பாதமும்,  2,3,4&ம் பாதங்கள் குடல், சிறு நீர்பை, கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டே, டோ, ப, பி ஆகியவை. தொடர் எழத்துக்கள் பா, டீ ஆகியவையாகும்.

குண அமைப்பு;

     உத்திர நட்சத்திரல் பிறந்தவர்களுக்கு நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நல்ல மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவாகளாகவும் இருப்பார்கள். கம்பீரமான நடையும், பெண்களை கவரும் உடலமைப்பும் இருக்கும். இவர்களை கண்டவர்கள் மேலும் மேலும் பேசவும் பழகவும் ஆசைப்படுமளவிற்கு வசீகர தோற்றமிருக்கும். அனைவரையும் கவரக் கூடிய பேச்சாற்றல் இருந்தாலும் குறைகளை கண்டால் முகத்தில் அடித்தாற் போல பேச கூடியவர்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் தங்களுடைய நிலைமையிலிருந்து தடம் மாறாமல் சமாளிப்பார்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களிலில் ஈடுபாடு அதிகமிருக்கும். எவரையும் அலட்சியம் செய்ய மாட்டார்கள். தன்னலத்தை விட பிறர் நலத்தை பேணி காப்பார்கள். சிக்கனத்தை கையாள்பவராகவும் சுயமரியாதையும் கண்ணியமும் உடையவராகவும் இருப்பார்கள்.

குடும்பம்;

     உத்திர நட்சத்திரகாரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரையும் பாசமும் கொண்டிருப்பார்கள். முன்கோபத்தால் சிறுசிறு வாக்கு வாதங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். இளமை காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், முப்பது வயதிலிருந்து செல்வம், செல்வாக்கு யாவும் சேரும். பூர்வீக சொத்துக்கள் அதிகமிருந்தாலும் தங்களுடைய சொந்த முயற்சியால் வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை சேர்ப்பார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். அடிக்கடி பசியெடுப்பதால் சிறுக சிறுகவே உணவுகளை உண்பார்கள். சிறு வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழக்க வேண்டியிருக்கும். மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கரை உடையவராக இருப்பார்கள்.

தொழில்;

     உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோதிடமும் அறிவாற்றலும் அதிகம் இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களாகவோ அல்லது பெரிய பெரிய நிறுவனங்களை அமைத்து அதில் பல ஆட்களை வைத்து வேலை வாங்குபவராகவோ இருப்பார்கள். தொழிலாளி முதலாளி என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துவதால் நல்ல மனதுள்ளவர்கள் என்று பெயரெடுப்பார்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவார்கள். வேத சாஸ்திரம் மற்றும் ஜோதிடம், கலை, இசை போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். எந்தவொரு போட்டி பொறாமைகளையும் தவிடு பொடியாக்க கூடிய அளவிற்கு மனோதிடம் பெற்றவர்கள்.

நோய்;

  இவர்களுக்கு முதுகில் வலியும் கழுத்து வலியும், இரத்த கொதிப்பு, ரத்த நாளங்களில் அடைப்பும் மூளை  நரம்புகளில் ரத்த அடையும் உண்டாகும். உடல் நிலையில் பல ஹீனமாக இருப்பார்கள்.

திசை பலன்கள்;

  உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சூரிய திசை 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சூரிய திசை காலங்களை அறியலாம். சூரிய பகவான் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், தந்தைக்கு முன்னேற்றம் கொடுக்கும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் தந்தைக்கு கெடுபலன்களையும் உண்டாகும்.

  இரண்டாவதாக வரும் சந்திர திசை காலங்களிலும் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழலை உண்டாக்கும்.

   மூன்றாவதாக வரக் கூடிய  செவ்வாய் திசையிலும் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படாது என்றாலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற்றத்தை அடைந்து விடமுடியும்.

நான்காவதாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். ராகு நின்ற விட்டதிபதி பலம் பெற்று இருந்தால் பலவகையில் யோகத்தையும்  உண்டாக்கும்.

குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை அளிக்கும். 6வதாக வரும் சனி திசை காலங்கள் உயர்வான அந்தஸ்தினை அள்ளிக் கொடுக்கும்.

    உத்திர நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் அலரி மரமும், இலந்தை மரமுமாகும். இம்மரத்தை தொடர்ந்து வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திர ஜோடியை மார்ச் மாதத்தில் இரவு பன்னிரெண்டு மணிக்கு வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;

     உத்திர நட்சத்திரத்தில், பூ முடித்தல், தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம், புதிய வாகனம், ஆடை அணிகலன்களை வாங்குதல், வியாதிக்கு மருந்து உட்கொள்ள மேற்கொள்ளுதல், தெய்வ பிரதிஷ்டை செய்தல், விதை விதைத்தல், வியாபாரம் தொடங்குதல்,  புதிய வேலையில் சேருதல் குளம் கிணறு வெட்டுதல், ஆயுத பயிற்சி மேற்கொள்தல் போன்ற நல்ல காரியங்களை செய்யலாம்.

வழி பாட்டு ஸ்தலங்கள்;

கரவீரம்;

வடகண்டம் என தற்போது அழைக்கப்படும் கருவீர ஸ்தலத்தில் கர வீரநாதராகவும் அன்ன பிரத்யட்ச மின்னம்மையாகவும் அருள் பாலி ஸ்தலத்தின் ஸ்தல விருட்சம் அலரி மரமாகும். இது திருவாரூர்&கும்பகோணம் சாலையில் 10.கி.மீ தொலைவில் உள்ளது.

காஞ்சிபுரத்து மேற்கேயிருக்கும் திருப்பனங்காட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் உடனுரை பனங்காட்பீஸ்வரரையும் வணங்கலாம்.

ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகிலுள்ள திருக்குளத்தை என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ குளந்தைவல்லி தாயார்,ஸ்ரீஅலமேலு மங்கை தாயார் உடனுறை ஸ்ரீசோரநாத பெருமானையும் வழியலாம்.

சென்னை பாடியில் திருவலிதாயத்தில் உள்ள ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லிசரரையும் வழிபடுவது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்

    ஓம் மஹாதேவ்யை சவித்மஹே

     விஷ்ணுபத்ன்யை ச தீமஹி

     தன்னோ லஷ்மி பிரசோதயாத்

பொருந்தாத நட்சத்திரங்கள்

     கிருத்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரங்களை திருமணம் செய்ய கூடாது.

 

Puram natchathira palangal

பூரம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினோறாவது இடத்தை பெறுவது பூர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூர நட்சத்திரம் சிம்ம ராசிக்குரியதாகும். இது உடலில் முதுகெலும்பு, இதயம் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் மோ,ட,டி,டு ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மொ.மௌ ஆகியவையாகும்.

குண அமைப்பு;

     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சுக்கிரன் என்பதால் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகி கொண்டவர்களாக இருப்பார்கள். அழகாக ஆடை ஆணிகலன்களை அணிவதிலும் மிடுக்கான நடை நடப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். காம உணர்வு அதிகமிருப்பதால் மனம் அலை பாயந்து கொண்டேயிருக்கும். பகட்டான வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். நல்ல அறிவும் அறிவுக் கூர்மையும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும் அதிகமிருக்கும். மற்றவர்களை அனுசரித்து சென்று அவர்களின் மனம் புண்படாதபடி நடந்து கொள்வார்கள் என்றாலும் கோபம் வந்து விட்டால் கட்டு படுத்த முடியாது. பின்னால் வரக்கூடிய விளைவுகளை முன் கூட்டியே அறியும் திறமை இருக்கும். எதார்த்த குணமும், ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். கற்பனை உலகில் சஞ்சரிப்பதுடன் தத்துவங்களையும் பேசுவார்கள்.

குடும்பம்;

     காதலில் வெற்றி பெற கூடிய ஆற்றல் மிக்கவர்கள் இவர்களின் பேச்சாற்றலால் மனைவி பிள்ளைகளை மட்டுமில்லாது உற்றார் உறவினர்களையும் வசப்படுத்தி வைத்து இருப்பார்கள். பிறர் நலனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். இளம் வயதில் நெருங்கியவர்களை இழக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் மனதில் எப்பொழுதும் ஒரு சோகம் இழையோடி கொண்டிருக்கும். இயற்கை உணவுகளை விரும்பி உண்பார்கள். பெற்ற பிள்ளைகளால் நற்பலன்களை அடைவார்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். 30 வயதிற்கு மேல் அதிரடி மாற்றங்கள்  ஏற்பட்டு வீடு, வண்டி வாகனங்களை வாங்கி சேர்ப்பார்கள். சுகவாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வதால் சேமிப்பு இல்லாமல் அடிக்கடி கடன் வாங்க கூடிய நிலையும் உண்டாகும்.

தொழில்;

     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒயாது  உழைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நடிப்பு துறையில் அதிக ஆர்வம் உண்டு. அரசு உத்தியோகமோ, சொந்த தொழிலோ எதிலும் சம்பாதிக்கும் யோகம் அதிகமிருக்கும், சுற்றுலா துறை, பொது மக்கள் தொடர்பு துறை, வர்த்தக துறை போன்றவற்றில் பணி புரியும் ஆற்றல் உடையவர்கள். சிலர் புத்தக வியாபாரிகளாகவும், பெண்கள் உபயோக படுத்தக் கூடிய பொருட்களை விற்பனை செய்ய கூடியவர்களாகவும் வாகன திரவியங்களை விற்பவராகவோ இருப்பார்கள். சூதாடத்திலும் எதிர்பாராத வகையில் பண வரவுகள் உண்டாகும். கலை, இசை, அரசியல், ஆன்மீகம், ஆடல் பாடல் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள்.

நோய்;

     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட நோய்களால் பின் விளைவுகளை மத்திம வயதில் சந்திப்பார்கள் சிற்றின்ப பிரியர்கள் என்பதால் பால்வினை நோய்களும் தாக்கும். சர்க்கரை வியாதியாலும் அவதிபடுவார்கள். மின்சாரம் தாக்கும், மனநிலையில் பாதிப்புகளும் உண்டாகும்.

திசை பலன்கள்;

     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சுக்கிர திசை வரும். இதன் மொத்த வருட காலங்கள் 20 என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சுக்கிர திசா காலங்களை பற்றி அறியலாம். இளம் வயதில் சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சுக்கிர திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சம் ஆடை அணிகலன்களின் சேர்க்கை, உற்றார் உறவினர்களின் ஆதரவு, கல்வியில் முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அடைய முடியும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இளமை கால வாழ்க்கையில் பல போராட்டங்கள் உண்டாகும்.

    இரண்டாவதாக வரும் சூரிய திசையின் மொத்த காலங்கள் 6 வருடங்களாகும். இத்திசை காலங்களில் சிறு சிறு உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும் சூரியன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஏற்றம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

                மூன்றாவதாக வரக்கூடிய சந்திர திசையின் காலங்கள் 10 வருடங்களாகும். இத்திசை காலங்களில் தேவையற்ற மனக் குழப்பங்களும் முன்னேற்ற தடையும், தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.

                நான்காவதாக வரும் செவ்வாய் திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் பொருளாதார மேன்மையையும், பூமி மனை வாங்க கூடிய யோகத்தையும், சுகவாழ்வையும் உண்டாக்கும். அடுத்து வரும் ராகு திசையின் காலங்கள் 18 வருடங்களாகும். இத்திசை காலங்களின் முற்பாதியானது யோகத்தை கொடுத்தாலும் பிற்பாதியில் கண்டங்களை உண்டாக்கி உடல் உஷ்ணத்தையோ, மாரகத்தையோ ஏற்படுத்தும்.

விருட்சம்;

     பூர நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பலா மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை மார்ச் மாதம் இரவு சுமார் பதினோரு மணியளவில் உச்சி வானத்தில் பார்க்க முடியும்.

செய்ய கூடிய நல்ல காரியங்கள்

     பூர நட்சத்திர நாளில் நவகிரக சாந்தி செய்வது. நோயாளிகள் மருந்து உண்பது, குளிப்பது, சித்திரம் வரைவது,  வழக்குகளை வாதிடுவது போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

கஞ்சனூர்;

     கும்பகோணம்&மயிலாடுதுறை கல்லணை சாலையில் உள்ள அக்னீசுரர் கற்பகாம்பிகை அருள் பாலிக்கும் சுக்கிரனின் பரிகார ஸ்தலம்.

நாவலூர்;

     தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் திருவாரூர் சாலையில் திருச்சேறை மாடக் கோயில் எழுந்தருளியுள்ள பலாசவனநாதர்&பெரிய நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

தலைச்சங்காடு;

     நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருக்கடையூர் சாலையில் உள்ள ஆக்கூருக்கு வடக்கில் 1.கி.மீ தூரத்திலுள்ள கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலில் அருள் பாலிக்கும் சங்கருணா தேவசுவரர்&சௌந்தர நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம் இவற்றை வழிபாடு செய்தால் நற்பலனை பெற முடியும்.

கூற வேண்டிய மந்திரம்;

ஸம் பூஜயாமி அர்ய மானம் பல்குனி தார தேவதாம் தூம் ரவர்ணம் ரதாருடம் ஸ சக்திகர சோயினம்

பூர நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்தரங்கள்

பரணி,  பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி போன்ற ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.