Today rasi palan – 01.02.2018

Today rasi palan – 01.02.2018

இன்றைய ராசிப்பலன் –  01.02.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-02-2018, தை 19, வியாழக்கிழமை, பிரதமை திதி பகல் 03.44 வரை பின்பு தேய்பிறை துதியை. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 03.06 வரை பின்பு மகம். சித்தயோகம் மாலை 03.06 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. நவகிரக வழிபாடு நல்லது.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

                திருக்கணித கிரக நிலை

01.02.2018

 

ராகு சந்தி
சூரிய கேது 

சுக்கி புதன்

சனி   செவ்                 குரு 

 

இன்றைய ராசிப்பலன் –  01.02.2018

மேஷம்

இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாககூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் மனசங்கடங்கள் உண்டாகும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன்கள் குறையும். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெறலாம்.

ரிஷபம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

மிதுனம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். பொன் பொருள் சேரும்.

கடகம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

சிம்மம்

இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் பெரியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். லாபம் பெருகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த மன ஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சிறு இழப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப உயர்வு கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 03.06 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.06 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

கும்பம்

இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

மீனம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியம் கைகூடும். பழைய கடன்கள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

Vaara rasi palan – February 4 to 10

வார ராசிப்பலன் – பிப்ரவரி 4 முதல் 10 வரை 

தை 22 முதல் 28 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

                                திருக்கணித கிரக நிலை

04.02.2018

 

ராகு
கேது  சுக்கி சூரிய புதன்
சனி   செவ் குரு       சந்தி

கிரக மாற்றம்

06-02-2018 கும்ப சுக்கிரன் பகல் 11.59 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

கன்னி                               03-02-2018 மாலை 05.08 மணி முதல் 05-02-2018 இரவு 10.32 மணி வரை.

துலாம்                             05-02-2018 இரவு 10.32 மணி முதல் 08-02-2018 காலை 07.45 மணி வரை.

விருச்சிகம்  08-02-2018 காலை 07.45 மணி முதல் 10-02-2018 இரவு 07.49 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

04.02.2018 தை 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

05.02.2018 தை 23 ஆம் தேதி திங்கட்கிழமை பஞ்சமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

07.02.2018 தை 25 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் 6-ஆம் தேதி முதல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் இருக்காது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். மாணவர்களுக்கு பெற்றோர்கள் மூலம் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6, 7.

சந்திராஷ்டமம் –   08-02-2018 காலை 07.45 மணி முதல் 10-02-2018 இரவு 07.49 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் திறம்பட செயல்பட்டு ஏற்றங்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஜென்ம ராசிக்கு 6-ல் குரு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டிகள் வம்பு வழக்குகள் எல்லாம் குறைந்து லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம். குரு பகவான் வழிபாடு மற்றும் சனி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8, 9, 10.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை மேலோங்கி இருப்பதுடன் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 4, 5.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன், கேது, புதன் சேர்க்கைப் பெற்று 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், அலைச்சல், டென்ஷன் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்களுக்கு பிறகு அனுகூலப் பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக செயல்பட்டால் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். பொருட் தேக்கம் ஏற்படாது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 6, 7.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் பஞ்சம ஸ்தானத்தில் சாதமாக சஞ்சரிப்பதாலும் 2-ல் குரு, 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் விலகி சாதகப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 4, 5, 8, 9, 10.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன், கேது சஞ்சரிப்பது உங்கள் மன அமைதியை குறைக்கும் அமைப்பாகும். குடும்பத்தில் நிம்மதி குறைவு, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே பிரச்சனைகளை சமாளிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் – 6, 7.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பது அனுகூலத்தை தரும் அமைப்பாகும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 4, 5, 8, 9, 10.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதாலும், 2-ல் புதன், 6-ஆம் தேதி முதல் 3-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். ஜென்ம ராசியில் சனி, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி  லாபம் அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது மற்றும் முருக கடவுளை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6, 7.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் தக்க சமயத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்கள் பிரச்சினைகள் யாவும் குறையும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். துர்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்தால் மேன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8, 9, 10.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்திலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்ககூடிய வாராமாகும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் திருமண முயற்சிகளில் நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி நிலவும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கான பலனை எளிதில் அடைவீர்கள். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பர். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10.

சந்திராஷ்டமம்      03-02-2018 மாலை 05.08 மணி முதல் 05-02-2018 இரவு 10.32 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீனராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களது பலமும் வலிமையும் கூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் தக்க சமயத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். திங்கட்கிழமை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 4, 5.

சந்திராஷ்டமம் –   05-02-2018 இரவு 10.32 மணி முதல் 08-02-2018 காலை 07.45 மணி வரை.

 

Rahukalam Yamakandam Today 31.01.2018

Date: 31.01.2018

Day: Wednesday

ராகு காலம் மதியம் 12:00 to 1:30 PM
எமகண்டம் காலை 7:30 to 9 AM
குளிகை காலை 10:30 AM to 12

 

Rahu Kaalam Noon 12:00 to 1:30 PM
Yamagandam 7:30 AM to 9 AM
Gulikai 10:30 AM to 12 Noon

 

Goto Main Page

Today rasi palan – 31.01.2018

Today rasi palan – 31.01.2018

இன்றைய ராசிப்பலன் –  31.01.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

31-01-2018, தை 18, புதன்கிழமை, பௌர்ணமி திதி மாலை 06.57 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூசம் நட்சத்திரம் மாலை 05.35 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. பௌர்ணமி. தைபூசம். முருக வழிபாடு நல்லது. சந்திர கிரகணம் மாலை 5.18 மணி முதல் 8.42 மணி வரை.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

               

               

திருக்கணித கிரக நிலை

31.01.2018

 

ராகு சந்தி
சூரிய கேது 

சுக்கி புதன்

சனி   செவ்                 குரு 

 

இன்றைய ராசிப்பலன் –  31.01.2018

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகமாகும். சிக்கனமாக செயல்பட்டால் பண பிரச்சனையை தவிர்க்கலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமா£க இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

மிதுனம்

இன்று பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் அ-னுகூலம் உண்டாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சனை தீரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன்கள் குறையும். பொருளாதார தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.

தனுசு

இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

மகரம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

கும்பம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பிறந்த தேதி நவரத்தினம்

பிறந்த தேதியும் நவரத்தினங்களும்

ஒரு மாதத்தில் 1 லிருந்து 30 அல்லது 31 தேதிகள் உள்ளது. இதில் செப்டம்பர், ஏப்ரல், ஜுன், நவம்பர் ஆகிய மாதங்களில் 30 நாட்கள் வரும். பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களாகும். லீப் வருடம் என்றால் 29 நாட்கள் வரும். இதுவும் 4 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும்.

ஜனவரி, மார்ச், மே, ஜுலை, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 31 நாட்கள் வரும்.

ஒருவர் 1,10,19 ஆகிய தேதிகளில் பிறக்கிறார் என்றால் அவர் 1ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராகிறார். இது சூரியனின் ஆதிக்கத்திற்குட்பட்ட எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய நவரத்தினம் மாணிக்கமாகும்.

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் அவர் 2ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராவார். இது சந்திரனின் ஆதிக்கமாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய நவரத்தினம் முத்தாகும்.

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 3ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராகிறார். இது குருவின் ஆதிக்கம் கொண்ட எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் புஷ்ப ராகமாகும்.

4,13,22 ஆகியவை 4ஆம் எண்களாகும். இவை ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டதால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் கோமேதகமாகும்.

5,14,23 ஆகிய 5ஆம் எண்களாகும். இவை புதனின் ஆதிக்கத்திற்குட்பட்டவை யாதலால் இவர்கள் அணியவேண்டிய ரத்தினம் மரகத பச்சை.

6,15,24 ஆகியவை 6ஆம் எண்களாகும்.இவை சுக்கிரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவை யாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் வைரமாகும்.

7,16,25 ஆகிய 7ஆம் எண்களாகும். இவை கேதுவின்  ஆதிக்கத்திற்குட்பட்டவை யாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் வைடூரியம்.

8,17,26 ஆகியவை 8ஆம் எண்களாகும். இவை சனியின்  ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் நீலக்கல்லாகும்.

9,18,27 ஆகியவை 9ஆம் எண்களாகும். இவை செவ்வாயின்  ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டியது பவளமாகும்.

Rahukalam Yamakandam Today 30.01.2018

Date: 30.01.2018

Day: Tuesday

 

ராகு காலம் மதியம் 3 to 4:30 PM
எமகண்டம் காலை 9 to 10:30 AM
குளிகை மதியம் 12:00 to 1:30 PM

 

Rahu Kaalam 3 PM to 4:30 PM
Yamagandam 9 AM to 10:30 AM
Gulikai Noon 12:00 to 1:30 PM

 

Goto Main Page

Today rasi palan – 30.01.2018

Today rasi palan – 30.01.2018

இன்றைய ராசிப்பலன் –  30.01.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-01-2018, தை 17, செவ்வாய்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 10.23 வரை பின்பு பௌர்ணமி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 08.18 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. முருக வழிபாடு நல்லது. கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சந்தி
கேது  சூரிய

சுக்கி   புதன்

திருக்கணித கிரக நிலை

30.01.2018

 

ராகு
சனி   செவ் குரு    

 

இன்றைய ராசிப்பலன் –  30.01.2018

மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சனைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

கடகம்

இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.

சிம்மம்

இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

கன்னி

இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான லாபம் பெருகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் மீது தேவையற்ற கோபம் எரிச்சல் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.59 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை பொறுமையுடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களையும், பயணங்களையும் தவிர்ப்பது உத்தமம்.

தனுசு

இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு பகல் 02.59 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம்.

மகரம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். பொன் பொருள் சேரும்.

கும்பம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரக்கூடும். தொழில் ரீதியான செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். பணவரவு  சுமாராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல் விரயங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும்.

 

தசா புக்தியும் நவரத்தினங்கள்

நவகிரகங்களின் தசா புக்திக்குரிய நவரத்தினங்கள்

ஓருவரின் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைக் கொண்டு தான் அவர்களுடைய தலை எழுத்தானது நிர்ணயிக்கப்படுகிறது. 12 கட்டங்களும் 9 கிரகங்களுமா நம்வாழ்வை நிச்சயிக்கின்றன? என பலர் ஆச்சர்யப்படலாம். யாரையும் நம்ப வைப்பதோ, கட்டாயத்திற்குட்படுவதோ நோக்கமல்ல. ஆனால் ஒன்றை மட்டும்தெளிவாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பிறக்கும்போது எந்ததெந்த கிரகங்கள் என்னென்ன நிலையில் உள்ளதோ அவை இறக்கும் வரை அப்படியேதான் இருக்கும். பிறந்த நட்சத்திரத்துக்குரிய  கிரகத்தின் திசையில் ஆரம்பித்து அடுத்தடுத்து என்னென்ன கிரகங்கள் வருமோ அந்தந்த திசைகள் வந்தே தீரும்.

உதாரணமாக ஒருவர் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்திருப்பாரேயானால் அவருக்கு முதலாவதாக வரக்கூடிய திசை சூரிய திசையாக இருக்கும். ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கர்ப செல் நீக்கி இருப்பு என கணக்கிட்டு 3 வருடம் 2 மாதம் 27 நாட்கள் என கொடுத்திருப்பார்கள். அதாவது இவரின் சூரிய திசை 3 வருடங்கள் 2 மாதங்கள் 27 நாட்கள்  மீதமிருப்பதாக கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து சந்திர திசை 10 வருடங்கள்,செவ்வாய் 7வருடங்கள், ராகு 18  வருடங்கள், குரு 16 வருடங்கள் என தொடர்ந்து சனி, புதன், கேது, சுக்கிரன் என திசைகள் நடைபெறும்.

ஜெனன ஜாதகத்தில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்து அதன் திசை புக்தி காலங்களில் ஜாதகர் சுபிட்சமானப் பலனைப் பெறுவார். அதுவே கிரக நிலைகள் சாதகமின்றி அமைந்து விட்டால் அதற்குரிய கெடுபலன்களை அடைந்தே தீர வேண்டும். ஒரு கிரகத்திற்கு பலத்தை கொடுப்பதற்கோ, பலமிழக்க செய்வதற்கோ மனிதனாக பிறந்த நமக்கு எந்த சக்தியுமில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கெடுபலன்களை குறைப்பதற்காகவும் அதன் பிடியிலிருந்து தப்பித்து கொள்வதற்காகவும் தான் இப்படி நவரத்தின கற்களை அணிந்து கொண்டு இறைவழிபாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இது மட்டுமல்லாமல் நவகிரகங்களுக்குரிய பரிகாரங்களைச் செய்வதும் நல்லது. நவரத்தின கற்களை எந்த கிரகத்திற்காக அணிகிறோமோ அந்த ஒளிக்கதிரானது நம் மீது பட்டு அதனால் உண்டாகக்கூடிய கெடுபலன்கள் விலகி வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை

Rahukalam Yamakandam Today 29.01.2018

Date: 29.01.2018

Day: Monday

 

ராகு காலம் காலை 7:30 to 9 AM
எமகண்டம் காலை 10:30 AM to 12 PM
குளிகை மதியம் 1:30 to 3 PM

 

Rahu Kaalam 7:30 AM to 9 AM
Yamagandam 10:30 AM to 12 PM
Gulikai 1:30 PM to 3 PM

 

Goto Main Page

Today rasi palan – 29.01.2018

Today rasi palan – 29.01.2018

இன்றைய ராசிப்பலன் –  29.01.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-01-2018, தை 16, திங்கட்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 01.53 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.03 வரை பின்பு புனர்பூசம். சித்தயோகம் இரவு 11.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. சோம வார பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சந்தி
                திருக்கணித கிரக நிலை

29.01.2018

 

ராகு
சூரிய கேது புதன் சுக்கி
சனி   செவ் குரு    

 

இன்றைய ராசிப்பலன் –  29.01.2018

மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.

ரிஷபம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சனை தீரும்.

மிதுனம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை கொடுக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது நல்லது.

சிம்மம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியுடன் முடியும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ், செல்வம், செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.

கன்னி

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.

துலாம்

இன்று உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமத பலனே உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

தனுசு

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மகரம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகள் மேலதிகாரிகளால் பாரட்டப்படும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருக்கும்.  சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மீனம்

இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். அசையும் அசையா சொத்து ரீதியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.