Guru Peyarchi Palangal 2018 | Murugu Balamurugan

வார ராசிப்பலன் — செப்டம்பர் 2 முதல் 8 வரை 

வார ராசிப்பலன் — செப்டம்பர் 2 முதல் 8 வரை 

ஆவணி 17 முதல் 23 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சந்தி
திருக்கணித கிரக நிலை

02.09.2018

புதன் ராகு
கேது  செவ் சூரிய
சனி (வ) குரு  சுக்கி

 

கிரக மாற்றம்

02–09-2018 சிம்ம புதன் இரவு 09.56 மணிக்கு

06-09-2018 சனி வக்ர நிவர்த்தி மாலை 05.49 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

ரிஷபம்                            02-09-2018 அதிகாலை 03.03 மணி முதல் 04-09-2018 காலை 07.32 மணி வரை

மிதுனம்                          04-09-2018 காலை 07.32 மணி முதல் 06-09-2018 காலை 09.46 மணி வரை.

கடகம்                              06-09-2018 காலை 09.46 மணி முதல் 08-09-2018 காலை 10.31 மணி வரை.

சிம்மம்                            08-09-2018 காலை 10.31 மணி முதல் 10-09-2018 காலை 11.10 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

06.09.2018 ஆவணி 21 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் வலுவாக சஞ்சரிப்பதும் சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தனவரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும், ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப காரியங்களும் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். ராகு காலங்களில் அம்மன் வழிபாடு செய்வதும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 4, 5.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். 4-ல் சூரியன் 6-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் ஏற்படும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பபவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். சிவ பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது உத்தமம்-.

வெற்றி தரும் நாட்கள் – 2, 3, 6, 7.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த தடங்கல்கள் எல்லாம் விலகி குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். முன் கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 4, 5, 8.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. வரும் 6-ஆம் தேதி முதல் 6-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவது சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கு நிலவிய தடங்கல்கள் எல்லாம் விலகி முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவக்கூடும் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் – 2, 3, 6, 7.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 3-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவும் என்றாலும் 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி இடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்தால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 2, 3, 4, 5, 8.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சனி 4-ல், சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமாக இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கப் பெற்று லாபங்களை அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சிவ வழிபாடு மற்றும் சனி பகவான் வழிபாடு மேற்கொண்டால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6, 7.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். வரும் 6-ஆம் தேதி முதல் 3-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8.

சந்திராஷ்டமம் 02-09-2018 அதிகாலை 03.03 மணி முதல் 04-09-2018 காலை 07.32 மணி வரை

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் நற்பலன்களை அடைவீர்கள். சூரியன், புதன் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான பதவி உயர்வுகளையும் அந்தஸ்துகளையும் பெற முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது நல்லது. மேலும் அம்மன் வழிபாடும் மேற்கொள்ளலாம்.

வெற்றி தரும் நாட்கள் – 2, 3.

சந்திராஷ்டமம் – 04-09-2018 காலை 07.32 மணி முதல் 06-09-2018 காலை 09.46 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது நற்பலன்களை தரும் அமைப்பாகும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். ஜென்ம ராசியில் சனி, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சிறு சிறு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்ற அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி இருவரும் விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சுமாரான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 2, 3, 4. 5.

சந்திராஷ்டமம் 06-09-2018 காலை 09.46 மணி முதல் 08-09-2018 காலை 10.31 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக செயல்படும் மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். உடல்நிலை சோர்வாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் தடைபடும். கூட்டாளிகளும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக செயல்பட்டால் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6, 7.

சந்திராஷ்டமம்  08-09-2018 காலை 10.31 மணி முதல் 10-09-2018 காலை 11.10 மணி வரை

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பதாலும் வரும் 6-ஆம் தேதி முதல் 11-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவதாலும் தொழில் வியாபார ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். வெளி வட்டார தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் வழியிலும் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்களால் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதாலும், மாத கோளான சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். குரு 8-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் போது கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 2, 3.

 

2018 – செப்டம்பர் மாத ராசிப்பலன்

2018 – செப்டம்பர் மாத ராசிப்பலன்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

       
   

 

ராகு புதன்
கேது செவ் சூரிய
சனி ()   குரு சுக்கி 

               

கிரக   மாற்றம்

1-9-2018 – துலாத்தில் சுக்கிரன்

2-9-2018 – சிம்மத்தில் புதன்

7-9-2018 – சனி வக்ர நிவர்த்தி

17-9-2018 – கன்னியில் சூரியன்

19-9-2018 – கன்னியில் புதன்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் பலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குரு, சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியை உண்டாக்கும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மாத பிற்பாதியில் வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருப்பதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலைபளு குறைவாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் சற்றே அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த நற்பலனை அடைய முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும்.

சந்திராஷ்டமம்  – 14-09-2018 இரவு 07.12 மணி முதல் 17-09-2018 அதிகாலை 04.51 மணி வரை.

பரிகாரம்  -சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது, நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன், 6-ல் குரு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராகு 3-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவால் எதையும் எதிர் கொள்ளகூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறிது கஷ்டப்பட்டாலும் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சற்று மந்தநிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராது வகையில் கிடைக்கும் உதவியினால் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். வேலை பளுவும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேவையற்ற நட்புகளின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். பயணங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்  – 17-09-2018 அதிகாலை 04.51 மணி முதல் 19-09-2018 மாலை 05.22 மணி வரை.

பரிகாரம்  – சனிபகவானை வழிபாடு செய்வதாலும், அனுமனை வழிபடுவதாலும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவுவதாலும் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

சந்திராஷ்டமம்  – 19-09-2018 மாலை 05.22 மணி முதல் 22-09-2018 காலை 06.15 மணி வரை.

பரிகாரம்  -விநாயகர் வழிபாடு செய்வதும், விநாயகர் துதிகளை படிப்பதும் மற்றும் நவகிரக வழிபாடு செய்வதும் நல்லது.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் 6-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கு நிலவிய தடங்கல்கள் எல்லாம் விலகி முன்னேற்றம் ஏற்படும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மாத பிற்பாதியில் தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.      

சந்திராஷ்டமம்  – 22-09-2018 காலை 06.15 மணி முதல் 24-09-2018 மாலை 05.21 மணி வரை.

பரிகாரம்  – ஞாயிற்றுக் கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவவழிபாடு செய்வதும், ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. நம்பியவர்களே சில நேரங்களில் துரோகம் செய்ய துணிவார்கள். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை  ஏற்படாது. எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். வேலைபளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க முடியாமல் போகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.

சந்திராஷ்டமம்  – 24-09-2018 மாலை 05.21 மணி முதல் 27-09-2018 அதிகாலை 01.58 மணி வரை.

பரிகாரம்  -வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே தனக்கராகன் குரு 2-ல் வலுவாக சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். இம்மாதம் சூரியன் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

சந்திராஷ்டமம்  – 30-08-2018 இரவு 08.05 மணி முதல் 02-09-2018 அதிகாலை 03.03 மற்றும் 27-09-2018 அதிகாலை 01.58 மணி முதல் 29-09-2018 காலை 08.28 மணி வரை.

பரிகாரம்  – தினமும் விநாயகர் வழிபாடு செய்வது ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே வரும் 7-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சரளமாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். கடன்களும் சற்றே குறையும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது மட்டும் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிட்டும்.

சந்திராஷ்டமம்02-09-2018 அதிகாலை 03.03 மணி முதல் 04-09-2018 காலை 07.32 மற்றும் 29-09-2018 காலை 08.28 மணி முதல் 01-10-2018 மதியம் 01.18 மணி வரை.

பரிகாரம்  – சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் நல்ல பலன்களை அடைவீர்கள். மாத கோளான சூரியன் இம்மாதம் 10, 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும். பயணங்களால் தேவையற்ற அலைசல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை கால் அசதி சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 04-09-2018 காலை 07.32 மணி முதல் 06-09-2018 காலை 09.46 மணி வரை.

பரிகாரம்  – சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது மூலம் மன சங்கடங்கள் குறையும்.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் இம்மாதம் மாத கோளான சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு நற்பலன்களை தரும் அமைப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்புடன் செயல்பட்டு நற்பெயரை பெறுவீர்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெற அவர்களிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் அனுகூலப் பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த பணத்தை வசூலித்து விட முடியும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலப்பலனை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருப்பது உத்தமம்.

சந்திராஷ்டமம்  – 06-09-2018 காலை 09.46 மணி முதல் 08-09-2018 காலை 10.31 மணி வரை.

பரிகாரம்  – சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. உடல் நிலையில் அஜீரணகோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு போன்றவை ஏற்பட கூடும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக தான் இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். ஆன்மீக காரியங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். விளையாடும் போது கவனம் தேவை.

சந்திராஷ்டமம்  – 08-09-2018 காலை 10.31 மணி முதல் 10-09-2018 காலை 11.10 மணி வரை.

பரிகாரம்  – செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் 11-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவதால் தொழில் வியாபார ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலையும் உயரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் அன்றாட பணிகளை சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் சேமிக்க முடியும். ஒரு சிலரின் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலப்பலன் ஏற்படும். உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்           — 10-09-2018 காலை 11.10 மணி முதல் 12-09-2018 மதியம் 01.30 மணி வரை.

பரிகாரம்  –  பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரித்து அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பணம் கொடுக்கல்- சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் அவர்களால் வீண் பிரச்சினைகளும் ஏற்படும் என்பதால் சற்று அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளத் தொகைகள் கைக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

சந்திராஷ்டமம்           – 12-09-2018 மதியம் 01.30 மணி முதல் 14-09-2018 இரவு 07.12 மணி வரை.

பரிகாரம்  – சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.

சுப முகூர்த்த நாட்கள்

06.09.2018 ஆவணி 21 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

12.09.2018 ஆவணி 27 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

20.09.2018 புரட்டாசி 04 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை

23.09.2018 புரட்டாசி 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்தசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

27.09.2018 புரட்டாசி 11 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

30.09.2018 புரட்டாசி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

 

Today rasi palan – 01.09.2018

 

இன்றைய ராசிப்பலன் –  01.09.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01.09.2018 ஆவணி 16, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.44 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பரணி நட்சத்திரம் இரவு 09.02 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சந்தி
திருக்கணித கிரக நிலை

01.09.2018

புதன் ராகு
கேது  செவ் சூரிய
சனி (வ) குரு   சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் – 01.09.2018

மேஷம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதமாகும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்

இன்று இல்லத்தில் இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் அலட்சியத்தால் வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். எதிலும் நிதானம் தேவை.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் கவனம் தேவை.

துலாம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமைக்கேற்ப பதவி உயர்வு கிட்டும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை விஷயமாக அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உணடாகும். பொருளாதார பிரச்சனை ஓரளவு குறையும்.

கும்பம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். செய்யும் செயல்களை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் நல்ல நட்புறவு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு  தேவையில்லாத இடமாற்றத்தால் மன நிம்மதி கெடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். கடன்கள் குறையும்.

 

Rahukalam Yamakandam Today 31.08.2018

Date: 31.08.2018

Day: Friday

ராகு காலம் காலை 10:30 AM to 12
எமகண்டம் மதியம் 3 to 4:30 PM
குளிகை காலை 7:30 to 9 AM

 

Rahu Kaalam 10:30 AM to 12 Noon
Yamagandam 3 PM to 4:30 PM
Gulikai 7:30 AM to 9 AM

 

Goto Main Page

Today rasi palan – 31.08.2018

Today rasi palan – 31.08.2018

இன்றைய ராசிப்பலன் –  31.08.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

31-08-2018, ஆவணி 15, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 10.12 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 08.46 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் இரவு 08.46 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சந்தி
திருக்கணித கிரக நிலை

31.08.2018

புதன் ராகு
கேது  செவ் சூரிய
சனி (வ) குரு   சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் –  31.08.2018

மேஷம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பால் நற்பலன் கிட்டும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகலாம். சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று விலகும். சிக்கனமுடன் செயல்பட்டால் கடன் பிரச்சனை குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்ததியாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சனைகள் தீரும். பொன் பொருள் சேரும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் புதிய முயற்சிகளில் தாமதப் பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியால் ஓரளவு பிரச்சனைகள் குறையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப்பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.

Rahukalam Yamakandam Today 30.08.2018

Date: 30.08.2018

Day: Thursday

ராகு காலம் மதியம் 1:30 to 3 PM
எமகண்டம் காலை 6 to 7:30 AM
குளிகை காலை 9 to 10:30 AM

 

Rahu Kaalam 1:30 PM to 3 PM
Yamagandam 6 AM to 7:30 AM
Gulikai 9 AM to 10:30 AM

 

Goto Main Page

Today rasi palan – 30.08.2018

Today rasi palan – 30.08.2018

இன்றைய ராசிப்பலன் –  30.08.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-08-2018, ஆவணி 14, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 10.09 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. ரேவதி நட்சத்திரம் இரவு 08.01 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் இரவு 08.01 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சந்தி
திருக்கணித கிரக நிலை

30.08.2018

புதன் ராகு
கேது  செவ் சூரிய
சனி (வ) குரு   சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் –  30.08.2018

மேஷம்

இன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதமாகும். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சனை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

சிம்மம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.

கன்னி

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

துலாம்           

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

மகரம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மீனம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும்.

Rahukalam Yamakandam Today 29.08.2018

Date: 29.08.2018

Day: Wednesday

ராகு காலம் மதியம் 12:00 to 1:30 PM
எமகண்டம் காலை 7:30 to 9 AM
குளிகை காலை 10:30 AM to 12

 

Rahu Kaalam Noon 12:00 to 1:30 PM
Yamagandam 7:30 AM to 9 AM
Gulikai 10:30 AM to 12 Noon

 

Goto Main Page

Today rasi palan – 29.08.2018

Today rasi palan – 29.08.2018

இன்றைய ராசிப்பலன் –  29.08.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-08-2018, ஆவணி 13, புதன்கிழமை, திரிதியை திதி இரவு 09.38 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.48 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் மாலை 06.48 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சந்தி

 

திருக்கணித கிரக நிலை

29.08.2018

புதன் ராகு
கேது  செவ் சூரிய
சனி (வ) குரு   சுக்கி

இன்றைய ராசிப்பலன் –  29.08.2018

மேஷம்

இன்று உத்தியோக ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகள் தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மகரம்

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும்.

மீனம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.