வார ராசிப்பலன் – டிசம்பர் 2 முதல் 8 வரை

வார ராசிப்பலன் – டிசம்பர் 2 முதல் 8 வரை

கார்த்திகை 16 முதல் 22 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ் திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது 
சனி சூரிய குரு புதன் (வ)   சுக்கி சந்தி

 

கிரக மாற்றம்

07-12-2018 புதன் வக்ர நிவர்த்தி அதிகாலை 2.53 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

கன்னி              01-12-2018 காலை 10.06 மணி முதல் 03-12-2018 மதியம் 02.51 மணி வரை.

துலாம்            03-12-2018 மதியம் 02.51 மணி முதல் 05-12-2018 இரவு 09.20 மணி வரை.

விருச்சிகம்                05-12-2018 இரவு 09.20 மணி முதல் 08-12-2018 காலை 06.04 மணி வரை.

தனுசு               08-12-2018 காலை 06.04 மணி முதல் 10-12-2018 மாலை 05.20 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

02.12.2018 கார்த்திகை 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.15 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் ராசியதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையப்பெற்று பொருளாதார நிலை மேன்மையடையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் சூரியன், குரு 8-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் – 2, 3, 4, 5.

சந்திராஷ்டமம் –   05-12-2018 இரவு 09.20 மணி முதல் 08-12-2018 காலை 06.04 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். செவ்வாய் 10-ல் இருப்பதால் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு பொறுப்பான பதவி உயர்வுகளும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.  கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். அம்பாள் வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5, 6, 7.

சந்திராஷ்டமம் –   08-12-2018 காலை 06.04 மணி முதல் 10-12-2018 மாலை 05.20 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் மாத கோளான சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 5-ல் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு  பிரச்சினைகள் வாக்குவாதங்கள் தோன்றலாம். சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் பேச்சில் மட்டும் சற்று நிதானத்துடன் இருந்து உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமதம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தி வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். துர்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

வெற்றி தரும் நாட்கள் – 2, 3, 8.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

பிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 4-ல் சஞ்சரிப்பதும் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நெருங்கியவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்களாலும் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்ககூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், சேர்க்கைப் பெற்று 3-ல் இருப்பதாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியமும் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். அரசு வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். விநாயகரையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் – 2, 3, 6, 7.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலமானப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5, 8.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முருக பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

வெற்றி தரும் நாட்கள் – 2, 3, 6, 7.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பொன், பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களையும் வசூலித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு உண்டானாலும் எடுக்கும் காரியத்தை செய்து முடித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 2, 3, 4, 5, 8.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன் குரு புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிறப்பான பணவரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிட்டாலும் அனுகூலமான பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5, 6, 7.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விநாயகர் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8.

சந்திராஷ்டமம் –   01-12-2018 காலை 10.06 மணி முதல் 03-12-2018 மதியம் 02.51 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.

சமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு, புதன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை பெற்று கடந்த கால சோதனை எல்லாம் மறையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். அம்மன் வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 8.

சந்திராஷ்டமம் –   03-12-2018 மதியம் 02.51 மணி முதல் 05-12-2018 இரவு 09.20 மணி வரை.

 

Today rasi palan – 01.12.2018

Today rasi palan – 01.12.2018

இன்றைய ராசிப்பலன் –  01.12.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-12-2018, கார்த்திகை 15, சனிக்கிழமை, நவமி திதி பகல் 03.19 வரை பின்பு தேய்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 03.30 அஸ்தம். நாள்முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

செவ் திருக்கணித கிரக நிலை

01.12.2018

ராகு

 

கேது  சந்தி
சனி சூரிய குரு புதன் (வ)   சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் –  01.12.2018

மேஷம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.

கடகம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

கன்னி

இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்து தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 10.04 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். பணவரவு தாராளமாக கிடைத்து வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.04 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.

மீனம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.

 

Rahukalam Yamakandam Today 30.11.2018

Date: 30.11.2018

Day: Friday

ராகு காலம் காலை 10:30 AM to 12
எமகண்டம் மதியம் 3 to 4:30 PM
குளிகை காலை 7:30 to 9 AM

 

Rahu Kaalam 10:30 AM to 12 Noon
Yamagandam 3 PM to 4:30 PM
Gulikai 7:30 AM to 9 AM

 

Goto Main Page

Today rasi palan – 30.11.2018

Today rasi palan – 30.11.2018

இன்றைய ராசிப்பலன் –  30.11.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-11-2018, கார்த்திகை 14, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.55 வரை பின்பு தேய்பிறை நவமி. பூரம் நட்சத்திரம் பின்இரவு 04.17 வரை பின்பு உத்திரம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

செவ் திருக்கணித கிரக நிலை

30.11.2018

ராகு

 

கேது  சந்தி
சனி சூரிய குரு புதன் (வ)   சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் –  30.11.2018

மேஷம்

இன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

மிதுனம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் கிட்டும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து சென்றால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு அறுதலை தரும்.

கன்னி

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

துலாம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த மறைமுக பிரச்சினைகள் சற்று குறையும்.

தனுசு

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

Rahukalam Yamakandam Today 29.11.2018

Date: 29.11.2018

Day: Thursday

ராகு காலம் மதியம் 1:30 to 3 PM
எமகண்டம் காலை 6 to 7:30 AM
குளிகை காலை 9 to 10:30 AM

 

Rahu Kaalam 1:30 PM to 3 PM
Yamagandam 6 AM to 7:30 AM
Gulikai 9 AM to 10:30 AM

 

Goto Main Page

Today rasi palan – 29.11.2018

Today rasi palan – 29.11.2018

இன்றைய ராசிப்பலன் –  29.11.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-11-2018, கார்த்திகை 13, வியாழக்கிழமை, சப்தமி திதி மாலை 06.46 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.38 வரை பின்பு மகம் நட்சத்திரம் பின்இரவு 05.20 வரை பின்பு பூரம். சித்தயோகம் காலை 06.38 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 05.20 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. நவகிரக வழிபாடு நல்லது.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

செவ் திருக்கணித கிரக நிலை

29.11.2018

ராகு

சந்தி

கேது 
சனி சூரிய குரு புதன் (வ)   சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் –  29.11.2018

மேஷம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும். கடன்கள் குறையும்.

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

சிம்மம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

விருச்சிகம்

இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

கும்பம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலப்பலன் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

Rahukalam Yamakandam Today 28.11.2018

Date: 28.11.2018

Day: Wednesday

ராகு காலம் மதியம் 12:00 to 1:30 PM
எமகண்டம் காலை 7:30 to 9 AM
குளிகை காலை 10:30 AM to 12

 

Rahu Kaalam Noon 12:00 to 1:30 PM
Yamagandam 7:30 AM to 9 AM
Gulikai 10:30 AM to 12 Noon

 

Goto Main Page

Today rasi palan – 28.11.2018

Today rasi palan – 28.11.2018

இன்றைய ராசிப்பலன் –  28.11.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

28-11-2018, கார்த்திகை 12, புதன்கிழமை, சஷ்டி திதி இரவு 08.51 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூசம் நட்சத்திரம் காலை 08.08 வரை பின்பு ஆயில்யம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

செவ் திருக்கணித கிரக நிலை

28.11.2018

ராகு

சந்தி

கேது 
சனி சூரிய குரு புதன் (வ)   சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் –  28.11.2018

மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மிதுனம்

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்

இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

துலாம்

இன்று உறவினர்களால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். உடன்பிறப்பிடம் ஒற்றுமை குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்ப்பது உத்தமம்.

மகரம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

மீனம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிலிருந்து வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். சேமிப்பு உயரும்.

2018 – டிசம்பர் மாத ராசிப்பலன்

2018 – டிசம்பர் மாத ராசிப்பலன்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

செவ்  

திருக்கணித கிரக நிலை

 

ராகு 
கேது 
சனி குரு சூரிய புதன் (வ)  சுக்கி

கிரக   மாற்றம்

7-12-2018 புதன் வக்கிர நிவர்த்தி

16-12-2018 தனுசில் சூரியன்

23-12-2018 மீனத்தில் செவ்வாய்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும் சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் தொழில், உத்தியோக ரீதியாக நற்பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்களும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவுபடுத்த நினைக்கும் எண்ணமும் தடையின்றி நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்புங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 8-ல் குரு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சற்று பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது சிறப்பு. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். சிறப்பான பணவரவால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் திங்கட்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வணங்கி வழிபடுவது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் 05-12-2018 இரவு 09.20 மணி முதல் 08-12-2018 காலை 06.04 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, புதன் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் இம்மாதம் அற்புதமான பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமையும், நிம்மதியும் சிறப்பாகவே இருக்கும். விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கஷ்டங்கள் குறையும். சிவ வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்  08-12-2018 காலை 06.04 மணி முதல் 10-12-2018 மாலை 05.20 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை பெறுவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் 6-ல் குரு சஞ்சரிப்பதால் வீண் செலவுகளை குறைப்பது, பணவிஷயத்தில் சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாவதால் சிறிது மருத்துவ செலவு ஏற்படும். 2-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்வர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். கூட்டாளிகளாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் கல்விக்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

பரிகாரம் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்தால் நன்மைகள் உண்டாகும். அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம் 10-12-2018 மாலை 05.20 மணி முதல் 13-12-2018 காலை 06.17 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பது சகல விதத்திலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். இம்மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்ககூடிய அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலமான பலன் கிடைக்கும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் அமோகமான நற்பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவர்கள்.

பரிகாரம் செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து ஆறுமுக கடவுளான முருக பெருமானை வணங்கி வழிபட்டால் மேன்மையான பலன்களை அடையலாம். சஷ்டி விரதம் இருப்பது நல்லது.

சந்திராஷ்டமம்  13-12-2018 காலை 06.17 மணி முதல் 15-12-2018 மாலை 06.45 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதும் சமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் இருப்பதை அனுபவிக்க தடை குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டா-கும். நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் வீண் வாக்கு வாதங்கள் செய்யாமல் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம். எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். புதிய வாய்ப்புகளுக்காக காத்திருப்பதை விட கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரியும் யோகம் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது.

பரிகாரம் பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் நந்தியையும் வணங்கி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். முருக வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்  15-12-2018 மாலை 06.45 மணி முதல் 18-12-2018 அதிகாலை 04.20 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்களே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணியில் சிறப்புடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி உறவு சுமூகமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களின் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள்.

பரிகாரம் புதன் கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணு வழிபாடு மேற்கொண்டால் காரிய தடைகள் விலகி வெற்றி கிட்டும். சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

சந்திராஷ்டமம்  18-12-2018 அதிகாலை 04.20 மணி முதல் 20-12-2018 காலை 09.59 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பது எல்லா வகையிலும் முன்னேற்றத்தை தரக்கூடிய சிறப்பான அமைப்பாகும். இம்மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சியில் எளிதில் வெற்றி அடையகூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்றாலும் அவர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. வெளிவட்டார தொடர்புகளும் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கல்வி தரமும் உயர்வடையும்.

பரிகாரம் துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்   20-12-2018 காலை 09.59 மணி முதல் 22-12-2018 மதியம் 12.22 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஜென்ம ராசியில் குரு, 2-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருப்பது, பணவிஷயத்தில் சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை இருந்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

பரிகாரம் பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு மேற்கொள்வதும், முருக வழிபாடு செய்வதும் மேன்மையான பலன்களை அளிக்கும்.

சந்திராஷ்டமம்  22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். ஜென்ம ராசியில் சனியும், 12-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்றே ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும்.  மாணவர்களுக்கு உடல் நல பாதிப்புகளால் நிம்மதி குறையும்.

பரிகாரம் சனிபகவான் வழிபாடு மேற்கொள்வதாலும் நவகிரஹ வழிபாடு செய்வதாலும் நன்மைகள் பல உண்டாகும். கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  24-12-2018 மதியம் 01.01 மணி முதல் 26-12-2018 மதியம் 01.41 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு சஞ்சரிப்பதும் வலமான பலனை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். பணம் பலவழிகளில் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை மேன்மையடையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி  எளிதில் கைகூடும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் படிப்பில் முன்னேற பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

பரிகாரம் சனிக்கிழமைகளில் சனிபகவான் வழிபாடு செய்வது, ஆஞ்சநேயருக்கு வெற்றிமாலை சாற்றி வழிபடுவது, சனிக்கவசம் மற்றும் ஹனுமன் துதிகளை படிப்பது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்  29-11-2018 காலை 06.40 மணி முதல் 01-12-2018 காலை 10.06 மணி வரை மற்றும் 26-12-2018 மதியம் 01.41 மணி முதல் 28-12-2018 மதியம் 03.48 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதாலும், 9-ல் சுக்கிரன், 10, 11-ல் சூரியன் இம்மாதம் சஞ்சரிப்பதாலும் கடந்த கால சிக்கல்கள் எல்லாம் குறைந்து எல்லா வகையிலும் ஏற்றங்களை பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகளை பெற சாதகமான சூழ்நிலை உருவாகும். எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பதற்கான ஆற்றலும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.

பரிகாரம்  ஆனை முக கடவுளையும், ஆறுமுக கடவுளையும் வணங்கி வழிபட்டால் எல்லையில்லா தொல்லைகள் கூட இல்லாமல் போய் விடும்.

சந்திராஷ்டமம்  01-12-2018 காலை 10.06 மணி முதல் 03-12-2018 மதியம் 02.51 மணி வரை மற்றும் 28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.16 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதும், இம்மாதம் 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் சகல விதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக மேன்மை, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் நல்ல நிலை உண்டாகும். எதிர்பாராத பணவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முடிந்தவரை அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் உழைத்தால் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.

பரிகாரம் வெள்ளி கிழமைகளில் விரதமிருந்து மகாலட்சுமி தேவிக்கு அர்ச்சனை ஆராதனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சமும், சகல செல்வங்களும் வந்து சேரும்.

சந்திராஷ்டமம்  03-12-2018 மதியம் 02.51 மணி முதல் 05-12-2018 இரவு 09.20 மணி வரை மற்றும்

30-12-2018 இரவு 08.16 மணி முதல் 02-01-2019 அதிகாலை 03.19 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

02.12.2018 கார்த்திகை 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.15 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

09.12.2018 கார்த்திகை 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

12.12.2018 கார்த்திகை 26 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

13.12.2018 கார்த்திகை 27 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

14.12.2018 கார்த்திகை 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

17.12.2018 மார்கழி 02 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

27.12.2018 மார்கழி 12 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

31.12.2018 மார்கழி 16 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

Rahukalam Yamakandam Today 27.11.2018

Date: 27.11.2018

Day: Tuesday

 

ராகு காலம் மதியம் 3 to 4:30 PM
எமகண்டம் காலை 9 to 10:30 AM
குளிகை மதியம் 12:00 to 1:30 PM

 

Rahu Kaalam 3 PM to 4:30 PM
Yamagandam 9 AM to 10:30 AM
Gulikai Noon 12:00 to 1:30 PM

 

Goto Main Page