புத்தாண்டு பலன் – 2019 சிம்மம்

புத்தாண்டு பலன் – 2019 சிம்மம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சிம்மம்   மகம்,  பூரம்,  உத்திரம் 1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, அஞ்சா நெஞ்சமும் தாராள மனப்பான்மையும், பெருந்தன்மையும் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் குரு, 5-ல் சனி சஞ்சரிப்பது அவ்வளவு சாதமான அமைப்பு என்று கூற முடியாது. வரும் 07.03.2019-ல் ஏற்பட இருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு பகவான் 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் எதையும் ஓரளவுக்கு சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் முடிந்த வரை ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பிறகே அனுகூலப்பலன் உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் நெருங்கியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் மற்றவர்களுக்கு பண உதவி செய்வது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போவதால் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் தேவையற்ற பிரச்சினைகளை சந்தித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். இந்த வருட இறுதியில் 05.11.2019-ல் ஏற்படவிருக்கும் குரு பெயர்ச்சியின் மூலம் குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்படையும். அஜீரண கோளாறு, தூக்கமின்மை, மன அமைதி குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகளும், வீண் விரயங்களும் உண்டாகும். மனைவிக்கு வயிறு கோளாறு, மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் உடல் அலைச்சலை குறைக்க முடியும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது மன உளைச்சலை குறைக்கும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் விலகும். உறவினர்களின் வருகை அதிகமாகி வீண் செலவுகள் உண்டாகும். பொருளாதார நிலையில் சங்கடங்கள் நிலவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தையில் தடைக்கு பின் அனுகூலபலன் உண்டாகும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி இருக்கும். புத்திரர்களும் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட மாட்டார்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அவப்பெயர்களால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தாமதப்படும். தேவையற்ற இடமாற்றத்தால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் அதனால் அனுகூலமும் இருக்கும். அது மட்டுமின்றி பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். உயர்அதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

தொழில் வியாபாரம்  

தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற இடையூறுகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் வீண் விரயம் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். நவீன கருவிகளும் பழுதடைந்து வீண் செலவுகளை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் கடின உழைப்பிற்கு பின்பு அனுகூலப்பலனை பெற முடியும். நெருக்கடி நிலைகளை சமாளிக்க கடன் வாங்கினாலும், அதை திருப்தி செலுத்த கூடிய அளவிற்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் சிந்தித்து செயல் பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். எதிர்பார்த்த லாபம் தடைகளுக்குப் பின் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் மற்றவர்களை நம்பி வாக்குறுதி, முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். வம்பு வழக்குகளில் இழுபறியான நிலை நீடிக்கும். பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அரசியல்

அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவை பெற முடியும் மேடை பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். அமைச்சர்களின் ஆதரவு குறையும். பொருளாதார நிலையில் மறைமுக வருவாய்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின்பு அனுகூலம் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகள் சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும் மகசூல் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கு ஏற்ற விலையை சந்தையில் பெற முடியாமல் போகும் என்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்த முடியாமல் போகும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் கை நழுவி போகும். இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வது நல்லது. உடல் நிலை பாதிப்படையும். எதிர்பாராத உதவிகளால் கொடுத்த வாக்கு உறுதிகளை காப்பாற்ற முடியும். பொருளாதார நிலையில் சங்கடங்கள் உண்டாகும். வரவேண்டிய பாக்கி தொகைகளில் இழுபறியான நிலை உண்டாகும்.

பெண்கள்

புகுந்த வீட்டில் நிம்மதியற்ற நிலை ஏற்பட்டாலும் பிறந்த வீட்டின் ஆதரவு மகழ்ச்சி அளிக்கும். எடுக்கும் காரியங்களில் தடைக்கு பின்பு நற்பலன் ஏற்படும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது.  புத்திர வழியில் வீண் செலவுகள் மனசஞ்சலங்கள் உண்டாகும். வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு, மாதவிடாய் பிரச்சினை போன்றவற்றால் மருத்துவ சற்று செலவுகளை சந்திக்க நேரிடும். பண வரவு ஏற்ற இறக்கமாக இருக்குமு.

மாணவ- மாணவியர்

மாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகம் வைத்து கொள்ள முடியாத நிலை உண்டாகும். மதிப்பெண்கள் குறைய கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சற்றே நிம்மதி அளிக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

ஜனவரி

சுகஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், ராசியாதிபதி சூரியன் மாதபிற்பாதியில் 6-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஓரளவுக்கு நற்பலன்களை ஏற்படுத்தும் என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலங்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது  உத்தமம்.

சந்திராஷ்டமம் – 12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.

பிப்ரவரி

பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் 6-ல் கேது சஞ்சரிப்பதும், ராசியாதிபதி சூரியன் மாதமுற்பாதியில் 6-ல் சஞ்சாரம் செய்வதும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் நெருங்கியவர்களால் நற்பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 08-02-2019 காலை 08.18 மணி முதல் 10-02-2019 இரவு 07.37 மணி வரை.

மார்ச்

உங்கள் ராசிக்கு 4-ல் குரு 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். 7-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் ராகு 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலன்களை பெற முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு பிரச்சனைகள், வாக்குவாதங்கள் போன்றவை ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் சற்று தாமத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி எந்த வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்கள் முழு முயற்சியுடன் படித்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ பெருமானை வணங்குதல் உத்தமம்.

சந்திராஷ்டமம் – 07-03-2019 பகல் 02.15 மணி முதல் 10-03-2019 அதிகாலை 01.19 மணி வரை.

ஏப்ரல் 

இம்மாதம் அதிசாரமாக 5-ல் குரு சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடனிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 03-04-2019 இரவு 08.48 மணி முதல் 06-04-2019 காலை 07.23 மணி வரை.

மே

இம்மாதம் 10, 11-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. பெண்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நினைத்ததை சாதிக்க முடியும். அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 01-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 03-05-2019 பகல் 02.39 மணி வரை மற்றும்  28-05-2019 பகல் 12.18 மணி முதல் 30-05-2019 இரவு 11.04 மணி வரை.

ஜுன்

ராசியாதிபதி சூரியன் 10, 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வதும் பல்வேறு வகையில் நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பெற முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கும். விநாயகர் வழிபாடு உத்தமம்.

சந்திராஷ்டமம் – 24-06-2019 இரவு 08.20 மணி முதல் 27-06-2019 காலை 07.44 மணி வரை.

ஜுலை

ராசிக்கு 11-ல் சூரியன், சுக்கிரன், ராகு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.

ஆகஸ்ட்

ராசிக்கு 11-ல் ராகு சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்றாலும், 12-ல் செவ்வாய், சூரியன், சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகலாம். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில் வியாபாரத்திலும் கடுமையான நெருக்கடி ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறலாம். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 18-08-2019 காலை 10.10 மணி முதல் 20-08-2019 இரவு 10.30 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசியில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். முன்கோபத்தை குறைப்பது பெரியவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் போன்றவற்றை வாங்க முடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபிட்சத்தை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம் – 14-09-2019 மாலை 04.10 மணி முதல் 17-09-2019 அதிகாலை 04.20 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசிக்கு 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் கைகூடும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும்.  மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 11-10-2019 இரவு 10.25 மணி முதல் 14-10-2019 காலை 10.20 மணி வரை.

நவம்பர் 

ஜென்ம ராசிக்கு 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன், 5-ஆம் தேதி முதல் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபத்தையும் பெற முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்ற குறையும்.  உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை தட்டி செல்வார்கள்.  ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 08-11-2019 அதிகாலை 05.30 மணி முதல் 10-11-2019 மாலை 05.20 மணி வரை.

டிசம்பர் 

ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் குரு, 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வாய்ப்புகளும் கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 05-12-2019 பகல் 01.20 மணி முதல் 08-12-2019 அதிகாலை 01.30 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9

நிறம் – வெள்ளை, சிவப்பு

கிழமை – ஞாயிறு, திங்கள்

கல் – மாணிக்கம்

திசை- கிழக்கு

தெய்வம் – சிவன்

 

புத்தாண்டு பலன் – 2019 கடகம்.

புத்தாண்டு பலன் – 2019 கடகம்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கடகம்.  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே, விடா முயற்சியுடன் செயல்பட்டு எதிலும் வெற்றிகளை குவிக்க கூடிய திறமைசாலிகளான உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும், ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதாலும் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். தாராளமான தனவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். தற்போது 1, 7-ல் சஞ்சரிக்கும் சர்ப கிரகங்கள் வரும் 07.03.2019 முதல் மாறுதலாகி கேது 6-லும், ராகு 12-லும் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற உறவுகளும் மீண்டும் வந்து நட்பு கரம் நீட்டுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெற்று மனதில் பூரிப்பு உண்டாகும். வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். அசையா சொத்துக்கள் வழியில் இருந்து வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வந்து தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை நிலவுவதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கஷ்டங்களும், போட்டிகளும் விலகி எதிர்பார்த்த லாபங்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் ஏற்றமிகு பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் அனுகூலமான இடமாற்றமும் எளிதில் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் மனநிறைவை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உங்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கடந்த கால உடல் நல பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் குறையும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரநிலை

உங்கள் ராசிக்கு 5-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், தாராள தனவரவுகளும் உண்டாகும். புதிய பொருட் சேர்க்கைகள் அமையும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பணி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவர்களின் நோக்கம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்றபடி வேலை வாய்ப்பு கிட்டும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் தொழிலை அவிபிருத்தி செய்யும் நோக்கம் நிறைவேறும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் நல்ல லாபம் உண்டாகும். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மறைமுக போட்டி பொறாமைகள் விலகி வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பொருளாதார மேன்மையும் உண்டாகும்.

கமிஷன்- ஏஜென்ஸி

குரு, சனி சாதகமாக சஞ்சரிப்பதால் கமிஷன்- ஏஜென்ஸி கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பெரிய தொகைகளையும் எளிதாக ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு புகழ் பெருமை உயரும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அனுகூலம் தரும். மறைமுக வருவாய்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சாதகமான பலனை ஏற்படுத்தும். கட்சி பணிகளுக்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலனை அளிக்கக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். மகசூல் பெருகும். விளை பொருளுக்கு ஏற்ற விலையினை சந்தையில் பெறுவீர்கள். கால்நடைகளாலும் லாபம் அமையும். புதிய பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். அசையாச் சொத்து வகையிலிருந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் அனைத்தும் விலகும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு தடைப்பட்ட பணவரவுகள் கிடைக்கும். எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமைந்து பொருளாதார நிலை உயரும். இசை துறை, நடன துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

பெண்கள் 

பெண்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். வண்டி வாகனம் வாங்க கூடிய உன்னத அமைப்பு உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகி மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். நல்ல நண்பர்களின் நட்புக்கள் கிட்டும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளைப் பெறுவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். ஆரோக்கியத்தில் மந்த நிலை உண்டானாலும் எடுக்கும் காரியத்தை திறம்பட செய்து முடித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ராகு, கேதுவுக்கு சர்பசாந்தி செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 09-01-2019 பகல் 01.14 மணி முதல் 12-01-2019 அதிகாலை 02.03 மணி வரை.

பிப்ரவரி

இம்மாதம் ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு, பலவகையில் லாபகரமான பலன்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 05-02-2019 இரவு 07.35 மணி முதல் 08-02-2019 காலை 08.18 மணி வரை.

மார்ச்

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, சஞ்சரிப்பதாலும் 10,11-ல் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். 1, 7-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது 7-ஆம் தேதி முதல் மாறுதலாகி கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறைந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 05-03-2019 அதிகாலை 01.45 மணி முதல் 07-03-2019 பகல் 02.15 மணி வரை.

ஏப்ரல் 

ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, கேது, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். இம்மாதம் மாதபிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது.  மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம் – 01-04-2019 காலை 08.22 மணி முதல் 03-04-2019 இரவு 08.48 மணி வரை மற்றும் 28-04-2019 மாலை 03.45 மணி முதல் 01-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.

மே

மாதகோளான சூரியன் சாதகமாக 10,11-ல் சஞ்சரிப்பதாலும், 9,10-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 25-05-2019 இரவு 11.44 மணி முதல் 28-05-2019 பகல் 12.18 மணி வரை.

ஜுன்

மாதகோளான சூரியன் மாத முற்பாதியில் 11-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 22-06-2019 காலை 07.40 மணி முதல் 24-06-2019 இரவு 08.20 மணி வரை.

ஜுலை

ஜென்ம ராசியில் புதன், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். குரு பகவானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 15-08-2019 இரவு 09.27 மணி முதல் 18-08-2019 காலை 10.10 மணி வரை.

செப்டம்பர்

பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சிறப்பாக கிடைக்கும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 12-09-2019 அதிகாலை 03.28 மணி முதல் 14-09-2019 மாலை 04.10 மணி வரை.

அக்டோபர்

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், சூரியன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சாரம் செய்வதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை முதலீடு செய்து நல்ல லாபம் காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 09-10-2019 காலை 09.40 மணி முதல் 11-10-2019 இரவு 10.25 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற்றத்தை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. 5-ஆம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 05-11-2019 மாலை 04.45 மணி முதல் 08-11-2019 அதிகாலை 05.30 மணி வரை.

டிசம்பர் 

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 03-12-2019 அதிகாலை 00.55 மணி முதல் 05-12-2019 பகல் 01.20 மணி வரை மற்றும் 30-12-2019 காலை 09.35 மணி முதல் 01-01-2020 இரவு 09.40 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9

நிறம் – வெள்ளை, சிவப்பு

கிழமை – திங்கள்,வியாழன்

கல் – முத்து

திசை – வடகிழக்கு

தெய்வம் – வெங்கடாசலபதி

 

புத்தாண்டு பலன் – 2019 மிதுனம்

புத்தாண்டு பலன் – 2019 மிதுனம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மிதுனம்   மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள்,  திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

 அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, சிறப்பான அறிவு ஆற்றலால் பலரை வழி நடத்தும் திறமை கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமாக 6-ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதும், 7-ஆம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். 2, 8-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது வரும் 07.03.2019 முதல் 1, 7-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. புத்திர வழியில் மன சஞ்சலங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூட இடையூறுகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. அசையா சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டி பொறாமைகளும் உண்டாவதால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தொழிலாளர்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடித்தால் நல்ல பெயரை எடுக்க முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. 05.11.2019-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குருபகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆண்டின் இறுதியில் உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மனைவி வழியில் உடல் நிலை பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் கவனமாக நடந்து கொள்வதே நல்லது. தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதன் மூலம் உடல்நிலையும், மனநிலையும் சிறப்பாக அமையும்.

குடும்பம் பொருளாதாரநிலை

பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும், குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் வீண் விரயங்களும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ராகு கேது சாதகமற்று சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும், குடும்பத்தில் வீண் பிரச்சினைகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் சிறு தடைக்கு பின் சாதகப்பலன்கள் உண்டாகும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். வேலைபளு அதிகரித்தாலும் சிரமம் பாராது எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பதவி உயர்வுகளால் பொறுப்புகள் அதிகரிக்கும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு தாமதப்படும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். அந்நிய நாட்டு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபத்தை அடைய முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதமாக அமையும். பெரிய தொகைகள் கொண்டு செய்யும் முயற்சிகளில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். மறைமுக எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும்.

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சற்று தடைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருந்தாலும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாவதில் தடைகள் ஏற்படும்.

அரசியல் 

உங்கள் பதவிகளுக்கு சிறுசிறு பிரச்சனைகள் தோன்றும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும், தலைவர்களின் ஆதரவுகளும் சிறப்பாக இருக்கும். மக்கள் மத்தியில் நல்லதொரு செல்வாக்கினைப் பெறுகின்ற நிலை உண்டாகும். 

விவசாயிகள்

பயிர் விளைச்சல்களில் நிறைய இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் சிறுசிறு சங்கடங்கள், வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும், உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். காய், கனி, பூ வகைகளாலும் கால் நடைகளாலும் ஓரளவுக்கு லாபம் அமையும்,

கலைஞர்கள்

புதிய வாய்பபுகள் உங்களை தேடி வந்து பூரிப்படைய செய்யும். எதிர்பாராத பண வரவுகளால் பொருளாதார நிலை உயரும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பாக இருக்கும். இசை துறையில் உள்ளவர்களுக்கும் முன்னேற்றமான பலன்களே உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும்.

பெண்கள்

பெண்களுக்கு உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றால் மருத்துவ செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் தருவதை தவிர்க்கவும். பொருளாதார நிலையில் சில சங்கடங்கள் இருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். புத்திர பாக்கியம் சற்று தாமதப்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நல்லது நடக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். படித்த பாடங்களை மனதில் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்கள் சகவாசத்தையும் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் குறையும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற முடியும்.

ஜனவரி

உங்கள் ராசியாதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்றாலும் குரு 6-ல் இருப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 07-01-2019 அதிகாலை 00.25 மணி முதல் 09-01-2019 பகல் 01.14 மணி வரை.

பிப்ரவரி

லாப ஸ்தானத்தில் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். 7-ல் சனி சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, சோர்வு, கை, கால் வலி போன்ற பாதிப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்கள் உண்டாகும். கொடுத்த பணத்தை திரும்ப வெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 03-02-2019 காலை 06.39 மணி முதல் 05-02-2019 இரவு 07.35 மணி வரை.

மார்ச்

செவ்வாய் 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு லாபங்களை பெற முடியும் என்றாலும் 6-ல் குரு, 7-ல் சனி சஞ்சரிப்பதும், 2, 8-ல் சஞ்சரிக்கும் ராகு கேது வரும் 7-ஆம் தேதி முதல் மாறுதலாகி ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேதுவாக சஞ்சரிக்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய தாமதநிலை ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 02-03-2019 பகல் 12.40 மணி முதல் 05-03-2019 அதிகாலை 01.45 மணி வரை மற்றும் 29-03-2019 இரவு 07.23 மணி முதல் 01-04-2019 காலை 08.22 மணி வரை.

ஏப்ரல்

இம்மாதம் அதிசாரமாக குரு 7-ல் சஞ்சாரம் செய்வதும், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாதகோளான சூரியன் 10, 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 29-03-2019 இரவு 07.23 மணி முதல் 01-04-2019 காலை 08.22 மணி வரை மற்றும் 26-04-2019 அதிகாலை 03.14 மணி முதல் 28-04-2019 மாலை 03.45 மணி வரை.

மே

மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசிக்கு 10, 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 23-05-2019 பகல் 11.45 மணி முதல் 25-05-2019 இரவு 11.44 மணி வரை.

ஜுன்

ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமதநிலை ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஏற்பட கூடிய வாக்கு வாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற சற்று தாமத நிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 19-06-2019 இரவு 08.00 மணி முதல் 22-06-2019 காலை 07.40 மணி வரை.

ஜுலை

ஜென்ம ராசியில் ராகு, சூரியன், சுக்கிரன், 2-ல் செவ்வாய், 7-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது சிறப்பு. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 17-07-2019 அதிகாலை 03.15 மணி முதல் 19-07-2019 பகல் 02.55 மணி வரை.

ஆகஸ்ட் 

இம்மாதம் 9-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 13-08-2019 காலை 09.25 மணி முதல் 15-08-2019 இரவு 09.27 மணி வரை.

செப்டம்பர் 

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது உத்தமம். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 09-09-2019 மாலை 03.10 மணி முதல் 12-09-2019 அதிகாலை 03.28 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மேலதிகாரிகளிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. விநாயகர் வழிபாடு நல்லது.

சந்திராஷ்டமம் – 06-10-2019 இரவு 09.35 மணி முதல் 09-10-2019 காலை 09.40 மணி வரை.

நவம்பர் 

இம்மாதம் 5-ஆம் தேதி முதல் 7-ல் குரு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 03-11-2019 அதிகாலை 05.25 மணி முதல் 05-11-2019 மாலை 04.45 மணி வரை மற்றும் 30-11-2019 பகல் 02.30 மணி முதல் 03-12-2019 அதிகாலை 00.55 மணி வரை.

டிசம்பர் 

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். முருக வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம் – 27-12-2019 இரவு 11.45 மணி முதல் 30-12-2019 காலை 09.35 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8,

நிறம் – பச்சை, வெள்ளை

கிழமை – புதன், வெள்ளி

கல் – மரகதம்

திசை – வடக்கு

தெய்வம் -விஷ்ணு

Today rasi palan – 26.12.2018

Today rasi palan – 26.12.2018

இன்றைய ராசிப்பலன் –  26.12.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

26-12-2018, மார்கழி 11, புதன்கிழமை, சதுர்த்தி திதி பகல் 10.47 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 01.39 வரை பின்பு மகம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. நவகிரக வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

செவ்
திருக்கணித கிரக நிலை

26.12.2018

ராகு

சந்தி

கேது 
சனி சூரிய குரு புதன் சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் –  26.12.2018

மேஷம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் பெருகும், மறைமுக பகை நீங்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும். கடன்கள் குறையும்.

கன்னி

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு பகல் 01.39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சுப காரியங்களில் பிற்பகலுக்கு பின் நற்பலன் கிடைக்கும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 01.39 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். தூர பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எதிலும் நிதானமாக செயல்படுவது சிறப்பு.

கும்பம்

இன்று உறவினர்கள் வருகையால் சுபசெலவுகள் உண்டாகும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் மூலம் உதவிகள் அறுதலை தரும்.

மீனம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும்.

Rahukalam Yamakandam Today 25.12.2018

Date: 25.12.2018

Day: Tuesday

 

ராகு காலம் மதியம் 3 to 4:30 PM
எமகண்டம் காலை 9 to 10:30 AM
குளிகை மதியம் 12:00 to 1:30 PM

 

Rahu Kaalam 3 PM to 4:30 PM
Yamagandam 9 AM to 10:30 AM
Gulikai Noon 12:00 to 1:30 PM

 

Goto Main Page

Today rasi palan – 25.12.2018

Today rasi palan – 25.12.2018

இன்றைய ராசிப்பலன் –  25.12.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

25-12-2018, மார்கழி 10, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பகல் 01.47 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பூசம் நட்சத்திரம் பகல் 03.55 வரை பின்பு ஆயில்யம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

செவ்
திருக்கணித கிரக நிலை

25.12.2018

ராகு

சந்தி

கேது 
சனி சூரிய குரு புதன் சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் –  25.12.2018

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகலாம். பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன்கள் ஓரளவு குறையும்.

கடகம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

கன்னி

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

துலாம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினை தீரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

மகரம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலைபளு சற்று குறையும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.

கும்பம்

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.

மீனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

புத்தாண்டு பலன் – 2019 ரிஷபம்

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

புத்தாண்டு பலன் – 2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையே அதிகம் விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் முழுவதும் உங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தேவையற்ற ஆரோக்கிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் சனி உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும். உங்களது கடன் பிரச்சினைகள் குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விருப்பமும் நிறைவேறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கை கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புத்திர பாக்கியமும் உண்டாவதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். வரும் 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்கள் உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பபாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமானப் பலன்களை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். வெளி வட்டாரத் தொடர்புகளால் அனுகூலங்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு முடக்கங்கள் ஏற்பட்டாலும் லாபங்கள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படும் அளவிற்கு உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களால் சற்று மருந்து செலவுகள் ஏற்பட்டாலும் உற்சாகம் குறையாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உணவு விஷயத்தில் கட்டுபாடாக இருந்தால் நல்ல ஆரோக்கியம் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தாராள தன வரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். வண்டி வாகனம் வாங்கும் யோகமும், வீடுமனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனும் உண்டாகும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்கள் அனுகூலமான பலனை அடைவார்கள் என்றாலும் கூடுதல் பொறுப்புகளும் வேலைபளுவும் சற்று அதிகரித்தே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வும், மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். பேச்சில் சற்று கவனமாக நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும்.

தொழில் வியாபாரம் 

தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்தித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். எதிர்பாராத பணவரவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு அமையும். கூட்டு தொழில் செய்பவர்கள் சற்று அலைச்சலை சந்திக்க நேரிடும் என்றாலும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியினை ஏற்படுத்தும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும். பெரிய தொகைகளையும் எளிதாக ஈடுபடுத்தி லாபங்களை அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் வெளியாட்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும்.

அரசியல்

உங்களின் செல்வம் செல்வாக்கு உயர கூடிய காலம் என்றாலும் மக்களின் தேவையறிந்து அவற்றை பூர்த்தி செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உங்களின் பேச்சுகளுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உயர்வை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களால் சற்று அலைச்சல் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் பட்டபாட்டிற்கான பலன்களைப் பெற்று விடுவீர்கள். வங்கிக் கடன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்க தாமதம் ஆகும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் நோக்கங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. புழு பூச்சிகளின் தொல்லைகளால் சில வீண் விரயங்களும் உண்டாகும்.

கலைஞர்கள் 

தொழிலில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் சிக்கல்கள் குறையும். தடைப்பட்ட பண வரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கும். உடன் இருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை பெறுவீர்கள். நீங்கள் நடித்த படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும்.

பெண்கள் 

குடும்ப வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மனம் பூரிப்படையும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து புதிய பொருட்சேர்க்கைகள் உண்டாகும். பணி புரியும் பெண்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற முடியும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற பொழுது போக்குகளில் நேரத்தை செலவழிக்காமல் பாடங்களில் முறையுடன் கவனம் செலுத்துவதால் அனைவரின் ஆதரவையும் பெற முடியும்.

ஜனவரி

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபமும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை மற்றும் 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை.

பிப்ரவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவானுக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை மற்றும் 28-02-2019 அதிகாலை 00.46 மணி முதல் 02-03-2019 பகல் 12.40 மணி வரை.

மார்ச்

மாத கோளான சூரியன் சாதகமாக 10, 11-ல் சஞ்சரிப்பதும், 7-ல் குரு, 9-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பலவழிகளில் தேடி வரும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். இம்மாதம் 7-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 27-03-2019 காலை 08.19 மணி முதல் 29-03-2019 இரவு 07.23 மணி வரை.

ஏப்ரல்

இம்மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதும், 10,11-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்தும் நல்ல அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வதால் அவர்களால் நற்பலன்களை பெற முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 23-04-2019 மாலை 05.14 மணி முதல் 26-04-2019 அதிகாலை 03.14 மணி வரை.

மே

உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சனி, கேது, 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்க்கவும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 21-05-2019 அதிகாலை 02.30 மணி முதல் 23-05-2019 பகல் 11.45 மணி வரை.

ஜுன்

உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு, 8-ல் சனி கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 17-06-2019 காலை 10.42 மணி முதல் 19-06-2019 இரவு 08.00 மணி வரை.

ஜுலை

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 14-07-2019 மாலை 05.25 மணி முதல் 17-07-2019 அதிகாலை 03.15 மணி வரை.

ஆகஸ்ட்

இம்மாதம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், சூரியன், 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் நல்ல லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 10-08-2019 இரவு 11.05 மணி முதல் 13-08-2019 காலை 09.25 மணி வரை.

செப்டம்பர் 

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 4, 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். 8-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.  சனிக்குரிய பரிகாரங்களை செய்து நல்லது.

சந்திராஷ்டமம் – 07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 04-10-2019 பகல் 12.20 மணி முதல் 06-10-2019 இரவு 09.35 மணி வரை மற்றும் 31-10-2019 இரவு 09.30 மணி முதல் 03-11-2019 அதிகாலை 05.25 மணி வரை.

நவம்பர்

மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும், 10-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். 5-ஆம் தேதி முதல் குரு 8-ஆம் வீட்டில் சஞசாரம் செய்ய இருப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 28-11-2019 காலை 07.35 மணி முதல் 30-11-2019 பகல் 02.30 மணி வரை.

டிசம்பர்

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்றாலும் 8-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். சிவனை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம் – 25-12-2019 மாலை 04.40 மணி முதல் 27-12-2019 இரவு 11.45 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8.

நிறம் – வெண்மை, நீலம்,

கிழமை – வெள்ளி,சனி

கல் – வைரம்,

திசை – தென்கிழக்கு,

தெய்வம் – விஷ்ணு, லட்சுமி

புத்தாண்டு பலன் – 2019 மேஷம்

புத்தாண்டு பலன் – 2019 மேஷம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, எதிலும் தைரியம் துணிவுடன் செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை அடையும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் பாக்கிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்கள் உண்டாகும் என்றாலும் பூர்வீக சொத்துக்களாலும், தந்தை வழி உறவுகளாலும் சில மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மற்றவர்களுக்கு பண உதவி செய்வது முன் ஜாமீன் அளிப்பது போன்றவற்றினை தவிர்க்கவும். வரும் 07.03.2019-ல் ஏற்பட இருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.  திருமண சம்மந்தப்பட்ட விஷயங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். அரசாங்க வழியில் நீங்கள் தேவையில்லாத நெருக்கடியினை சந்திர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வீண் பழி சுமத்த கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளிவட்டாரங்களில் எதிர்பார்க்கும் உதவிகள் அவ்வளவு சீக்கிரமாக கிடைக்காது. இந்த வருட கடைசியில் 5.11.2019-ல் ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளதால் எல்லா பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். மனைவிக்கு வயிற்று வலி, மாதவிடாய் பிரச்சினைகள் உண்டாகும். புத்திர வழியில் ஜல தொடர்புடைய பாதிப்புகளாலும், உஷ்ண  சம்மந்தபட்ட பாதிப்புகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, நேரத்திற்கு உணவு உண்பது போன்றவற்றால் நற்பலன்களை அடைய முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை 

குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மன அமைதி குறையும். உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாரத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும்.

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். பொறுப்புகள் அதிகமாகி அதிக நேரம் பணிபுரிய வேண்டி வரும். உடல் நிலை சோர்வடையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் சற்று சிரமபட்டாலும் சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

தொழில் வியாபாரம் 

தொழில் வியாபாரம் செய்பவர்கள் அதிக போராட்டங்களை சந்திக்க நேரிட்டாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். மறைமுக எதிரிகளால் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கூட்டாளிகளே போட்டிகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும்.

கமிஷன்- ஏஜென்ஸி  

கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் முதலியவற்றில் ஈடுபடுபவர்கள் நிதானமாக செல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயமும், கொடுத்த கடன்களை வசூலிப்பதில் பிரச்சினைகளும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பண வரவுகளும் தாமதப்படும். வம்பு, வழக்குகள் சற்று இழுபறி நிலையில் இருக்கும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு புகழ், பெருமை மங்ககூடிய காலம் என்பதால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவது நல்லது. உடன் இருப்பவர்களே கெடுதிகளை ஏற்படுத்துவார்கள். எடுக்கும் காரியங்களை சரி வர செய்து முடிக்க முடியாமல் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் ஓரளவுக்கு கிடைக்கும். பூமி, மனை, வாங்கும் யோகம் உண்டு என்றாலும் சில தடைகளுக்கு பின் வாங்குவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத்தில் சுபகாரியங்களையும் நிறைவேற்ற முடியும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளாலும் லாபம் கிட்டும். கடன்களை அடைக்க கூடிய அளவிற்கு ஆற்றலும் உண்டாகும்.

கலைஞர்கள் 

தொழிலில் நிறைய போட்டிகள் உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாகவே இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நத்தமம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனும் உடல் நல கோளாறுகளும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் கிட்டும். உடனிருக்கும் கலைஞர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏறப்படுத்துவார்கள்.

பெண்கள் 

குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். என்றாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் ஏற்படாது. சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூரம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் பண வரவுகள் சிறப்பாகவே இருக்கும். உடல் நிலையில் பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். பணி புரியும் பெண்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும்.

மாணவ- மாணவியர்

எவ்வளவு தான் கஷ்டப்பட்டு படித்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற இடையூறு ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் நிதானம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைப்பது நல்லது.

ஜனவரி

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதும் ராசிக்கு 8-ல் குரு, சுக்கிரன், சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூட சற்று தாமத நிலை உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நிலையே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 02-01-2019 அதிகாலை 03.23 மணி முதல் 04-01-2019 பகல் 12.54 மணி வரை மற்றும் 29-01-2019 காலை 08.59 மணி முதல் 31-01-2019 மாலை 06.40 மணி வரை.

பிப்ரவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு 10, 11-ல் புதன், சூரியன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் இருந்த தடைகள் சற்று விலகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 25-02-2019 மாலை 04.42 மணி முதல் 28-02-2019 அதிகாலை 00.46 மணி வரை.

மார்ச்

உங்கள் ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான சூரியன் இம்மாத முற்பாதி வரையில் 11-ல் சஞ்சாரம் செய்வதும், 7-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சாரம் செய்ய இருப்பதும் சுமாரான நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் தாராளமாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் சிறு விரயம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 25-03-2019 அதிகாலை 01.08 மணி முதல் 27-03-2019 காலை 08.19 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும், இம்மாதம் அதிசாரமாக குரு 9-ல் தனுசு ராசியில் 23-ஆம் தேதி வரை சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். முடிந்தவரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்படலாம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சனிபகவானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 21-04-2019 பகல் 11.10 மணி முதல் 23-04-2019 மாலை 05.14 மணி வரை.

மே

ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும், 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் இம்மாதம் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 18-05-2019 இரவு 08.30 மணி முதல் 21-05-2019 அதிகாலை 02.30 மணி வரை.

ஜுன்

இம்மாதம் 3-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வதாலும், மாதபிற்பாதியில் சூரியன் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 15-06-2019 அதிகாலை 04.02 மணி முதல் 17-06-2019 காலை 10.42 மணி வரை.

ஜுலை

உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 4-ல் புதன் சஞ்சரிப்பதாலும், மாதமுற்பாதியில் சூரியன் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் சற்று குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமதநிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்பட்டு ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.

ஆகஸ்ட் 

இம்மாதம் 3-ல் ராகு, 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. அசையா சொத்துக்களால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும்.  தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 08-08-2019 மாலை 03.25 மணி முதல் 10-08-2019 இரவு 11.05 மணி வரை.

செப்டம்பர்

உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும், மாதபிற்பாதியில் சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று கவனம் தேவை. முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 04-09-2019 இரவு 10.15 மணி முதல் 07-09-2019 அதிகாலை 04.55 மணி வரை.

அக்டோபர்

உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 02-10-2019 காலை 07.10 மணி முதல் 04-10-2019 பகல் 12.20 மணி வரை மற்றும் 29-10-2019 மாலை 05.35 மணி முதல் 31-10-2019 இரவு 09.30 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் ராகு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். பண வரவுகளில் சரளமான நிலையிருக்கும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 26-11-2019 அதிகாலை 03.45 மணி முதல் 28-11-2019 காலை 07.35 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பண வரவுகள் சிறப்பாக அமைந்து ஆடம்பர தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 23-12-2019 பகல் 11.50 மணி முதல் 25-12-2019 மாலை 04.40 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9,

நிறம் – ஆழ் சிவப்பு

கிழமை – செவ்வாய்

கல் – பவளம்

திசை – தெற்கு

தெய்வம் – முருகன்

Rahukalam Yamakandam Today 24.12.2018

Date: 24.12.2018

Day: Monday

 

ராகு காலம் காலை 7:30 to 9 AM
எமகண்டம் காலை 10:30 AM to 12 PM
குளிகை மதியம் 1:30 to 3 PM

 

Rahu Kaalam 7:30 AM to 9 AM
Yamagandam 10:30 AM to 12 PM
Gulikai 1:30 PM to 3 PM

 

Goto Main Page

Today rasi palan – 24.12.2018

Today rasi palan – 24.12.2018

இன்றைய ராசிப்பலன் –  24.12.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

24-12-2018, மார்கழி 09, திங்கட்கிழமை, துதியை திதி மாலை 04.58 வரை பின்பு தேய்பிறை திரிதியை. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 06.22 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் மாலை 06.22 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

செவ் சந்தி
திருக்கணித கிரக நிலை

24.12.2018

ராகு
கேது 
சனி சூரிய குரு புதன் சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் –  24.12.2018

மேஷம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படலாம். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.

மிதுனம்

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கன்னி

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சிறு மனக்குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் ஒற்றுமை குறையும். உங்கள் ராசிக்கு பகல் 01.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

தனுசு

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 01.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது உத்தமம்.

மகரம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மீனம்

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.