2019- மே மாத ராசிப்பலன்

2019- மே மாத ராசிப்பலன்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

புதன் சுக்கி சூரிய செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

 

கேது சனி(வ) குரு(வ)

கிரக   மாற்றம்

03-05-2019 மேஷத்தில் புதன் மாலை 05.03 மணிக்கு

07-05-2019 மிதுனத்தில் செவ்வாய் காலை 06.53 மணிக்கு

10-05-2019 மேஷத்தில் சுக்கிரன் இரவு 07.06 மணிக்கு

15-05-2019 ரிஷபத்தில் சூரியன் பகல் 11.01 மணிக்கு

18-05-2019 ரிஷபத்தில் புதன் இரவு 11.35 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் ராசியதிபதி செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிட்டும். பொன், பொருள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்காமல் இருப்பது, மற்றவர்கள் வாங்கும் கடனுக்கு முன் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை அடையலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கு தடை தாமதங்கள் உண்டாகும்.  தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்களின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் –  18-05-2019 இரவு 08.30 மணி முதல் 21-05-2019 அதிகாலை 02.30 மணி வரை.

பரிகாரம் – வியாழக்கிழமைகளில் தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சிவ வழிபாடு செய்வதும் நல்லது.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் ராகு, 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பார்க்கும் பணவரவுகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்-க தடங்கல்கள் ஏற்படும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தடை தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.

சந்திராஷ்டமம் –  21-05-2019 அதிகாலை 02.30 மணி முதல் 23-05-2019 பகல் 11.45 மணி வரை.

பரிகாரம் –  ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே மாத கோளான சூரியன் லாப ஸ்தானமான 11-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதாலும் சுக்கிரன், புதன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.

சந்திராஷ்டமம் –  23-05-2019 பகல் 11.45 மணி முதல் 25-05-2019 இரவு 11.44 மணி வரை.

பரிகாரம் –  சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் மனகுழப்பங்கள் நீங்கும். சகல நன்மைகளும் உண்டாகும்.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 10,11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அனுகூலமும் உண்டாகும். சிலரின் அசையும் அசையா சொத்துக்கள் வாங்க நினைக்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமான பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த லாபமும் உண்டாகும். வேலையாட்களை மட்டும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தி அதிக லாபம் அடையலாம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பள்ளிக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பார்கள்.

சந்திராஷ்டமம் –  28-04-2019 மாலை 03.45 மணி முதல் 01-05-2019 அதிகாலை 04.15 மணி வரை மற்றும் 25-05-2019 இரவு 11.44 மணி முதல் 28-05-2019 பகல் 12.18 மணி வரை.

பரிகாரம் –  ஆறுமுக கடவுளாம் முருக பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் மேன்மையான பலன்களை அடையலாம்.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 11-ல் ராகு சஞ்சரிப்பதும் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அற்புதமான அமைப்பாகும். தொழில் உத்தியோகத்தில்  அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் எண்ணம் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்கள் சற்றே குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் – 01-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 03-05-2019 பகல் 02.39 மணி வரை மற்றும் 28-05-2019 பகல் 12.18 மணி முதல் 30-05-2019 இரவு 11.04 மணி வரை.

பரிகாரம் –  வெள்ளிக்கிழமைகளில் விரத இருந்து மஹா லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் சற்று விட்டு கொடுத்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் முழுமுயற்சியுடன் செயல்படுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 03-05-2019 பகல் 02.39 மணி முதல் 05-05-2019 இரவு 10.30 மணி வரை மற்றும் 30-05-2019 இரவு 11.04 மணி முதல் 02-06-2019 காலை 06.45 மணி வரை.

பரிகாரம் –  சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ விரதம் மேற்கொள்வதாலும், பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வதாலும் சிறப்பான பலன்களை அடைய முடியும்.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் வரும் 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். 7,8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் நிம்மதி குறையாது. புத்திர வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

சந்திராஷ்டமம் – 05-05-2019 இரவு 10.30 மணி முதல் 08-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.

பரிகாரம் –  லட்சுமி தேவி வழிபாடு மேற்கொள்வது, ஆறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு ஸ்தலத்திற்கு சென்று முருக கடவுளை வணங்குவது மிகவும் நல்லது.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே இம்மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு அனுகூலங்களை உண்டாக்கும் நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது நல்ல பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். அசையும் அசையா சொத்துகளாலும் எதிர்பாராத விரயங்களை எதிர்கொள்வீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது.  வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடுதல் முயற்சி செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 08-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 10-05-2019 காலை 08.35 மணி வரை.

பரிகாரம் –  செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருக பெருமானை வணங்குவது, கிருத்திகை மற்றும் சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது நற்பலன்களை அளிக்கும். அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே இம்மாதம் புதன், சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சிறப்பான பணவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வீடு, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துக்காளலும் அனுகூலங்கள் உண்டாகும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள்.

சந்திராஷ்டமம் – 10-05-2019 காலை 08.35 மணி முதல் 12-05-2019 பகல் 11.53 மணி வரை.

பரிகாரம் –  சனி பகவானை வழிபடுவதாலும், சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதாலும், சனிக்கவசங்கள் படிப்பதாலும் மனகவலைகள் நீங்கி இன்பம் உண்டாகும்.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ராகு ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் உங்களுக்கு பல்வேறு வகையில் முன்னேற்றத்தை தரும் அனுகூலமான அமைப்பாகும். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமானப் பலனைப் பெறுவீர்கள். திருமண சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் நவீனகரமான பொருட் சேர்க்கையும் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் லாபகரமான பலனை அடைவீர்கள். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.

சந்திராஷ்டமம் – 12-05-2019 பகல் 11.53 மணி முதல் 14-05-2019 பகல் 02.30 மணி வரை.

பரிகாரம் –  சனி பகவான் வழிபாடு செய்வது, கருப்பு நிற வஸ்திரம், நல்லெண்ணெய் போன்றவற்றை கோவில்களில் தானம் செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்களுடைய முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றியை தரும் அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். சிலருக்கு புதிய வாய்ப்புகளும் எதிர்பார்த்த உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் – 14-05-2019 பகல் 02.30 மணி முதல் 16-05-2019 மாலை 04.58 மணி வரை.

பரிகாரம் –  செவ்வாய் கிழமைகளில் முருக வழிபாடும் ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடும் செய்து வந்தால் நற்பலன்கள் உண்டாகும்.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால்  எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். குரு 9-ல் இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் குடும்பத்தில் கைகூடும். தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை அடையலாம். சுக ஸ்தானமான 4-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலன்களை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் – 16-05-2019 மாலை 04.58 மணி முதல் 18-05-2019 இரவு 08.30 மணி வரை.

பரிகாரம் –  சனி பகவான் வழிபாடு செய்வது, சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி செல்வ நிலை உயரும்.

சுப முகூர்த்த நாட்கள்

02.05.2019 சித்திரை 19 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

08.05.2019 சித்திரை 25 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

10.05.2019 சித்திரை 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

16.05.2019 வைகாசி 02 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

17.05.2019 வைகாசி 03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

24.05.2019 வைகாசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம்.

29.05.2019 வைகாசி 15 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

Today rasi palan – 01.05.2019

Today rasi palan – 01.05.2019

இன்றைய ராசிப்பலன் –  01.05.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-05-2019, சித்திரை 18, புதன்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.05 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 10.52 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பகல் 10.52 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. 

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

புதன் சுக்கி சந்தி சூரிய செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

01.05.2019

சனி(வ) கேது குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  01.05.2019

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

ரிஷபம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.

மிதுனம்

இன்று தொழில் வியாபரம் செய்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு மேலோங்கி இருக்கும். அரசு துறை சார்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பொருளாதார மேன்மையால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கலாம். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களது அன்பை பெற முடியும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் சற்று குறையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.

கன்னி

இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் கடின உழைப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் மாற்று கருத்தால் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

தனுசு

இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகளை வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கும்பம்

இன்று உடன் பிறந்தவர்கள் வழியில் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில்  தடை தாமதங்கள் உண்டாகும். வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வெளி வட்டார தொடர்புகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

Today rasi palan – 30.04.2019

Today rasi palan – 30.04.2019

இன்றைய ராசிப்பலன் –  30.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-04-2019, சித்திரை 17, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.18 வரை பின்பு தேய்பிறை துவாதசி. சதயம் நட்சத்திரம் காலை 08.14 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

புதன் சுக்கி சூரிய செவ் ராகு
சந்தி திருக்கணித கிரக நிலை

30.04.2019

சனி கேது குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  30.04.2019

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் இருந்த தடை தாமதங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும்.

ரிஷபம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும்.

மிதுனம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வண்டி வாகனங்களால் எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

கடகம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்வது நல்லது.

சிம்மம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்விக்கான வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறையும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.

கன்னி

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றத்துடன் கூடிய உயர்வுகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். திடீர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

தனுசு

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு விரிவடையும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.

கும்பம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலையில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

மீனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய சற்று யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வியாபாரத்தில் இதுவரை வராத பாக்கிகள் வசூலாகும்.

 

Today rasi palan – 29.04.2019

Today rasi palan – 29.04.2019

இன்றைய ராசிப்பலன் –  29.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-04-2019, சித்திரை 16, திங்கட்கிழமை, தசமி திதி இரவு 10.04 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் சதயம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

புதன் சுக்கி சூரிய செவ் ராகு
சந்தி திருக்கணித கிரக நிலை

29.04.2019

சனி கேது குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  29.04.2019

மேஷம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி தேடி வரும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் மறையும். வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்

இன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.

கடகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.  உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கன்னி

இன்று குடும்பத்தில் தாராள தனவரவும், சுபிட்சமும் உண்டாகும். பிள்ளைகள் கல்வி விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வியாபாரத்தில் தேக்க நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வெளி நபர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். தொழில் வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பொறுப்புடனும், சிக்கனத்துடனும் செயல்பட்டால் பண நெருக்கடிகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள்.

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் அறிமுகம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

மகரம்

இன்று உங்களுக்கு பயணங்களால் வீண் அலைச்சலும் உடல் சோர்வும் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலனை அடையலாம்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

Today rasi palan – 28.04.2019

Today rasi palan – 28.04.2019

இன்றைய ராசிப்பலன் –  28.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

28-04-2019, சித்திரை 15, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி இரவு 07.34 வரை பின்பு தேய்பிறை தசமி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 05.17 வரை பின்பு சதயம். மரணயோகம் பின்இரவு 05.17 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். புதியமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

புதன் சுக்கி சூரிய செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

28.04.2019

  சந்தி
சனி கேது குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  28.04.2019

மேஷம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 03.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் சுபகாரியங்களையும் மதியத்திற்கு பிறகு மேற்கொள்வது உத்தமம். இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

கடகம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 03.45 மணிக்கு பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது.

சிம்மம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும். குடும்பத்தில் சுப செலவுகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக இருந்த அலைச்சல் சற்று குறையும்.

கன்னி

இன்று நீங்கள் பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எந்த செயலிலும் நிதானம் தேவை.

விருச்சிகம்

இன்று வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மன அமைதி இருக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைந்து காணப்படும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை பெற அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை.

மீனம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

 

Today rasi palan – 27.04.2019

Today rasi palan – 27.04.2019

இன்றைய ராசிப்பலன் –  27.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

27-04-2019, சித்திரை 14, சனிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 05.01 வரை பின்பு தேய்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் இரவு 02.12 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஹயக்ரீவர் – கால பைரவர் வழிபாடு நல்லது. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

புதன் சுக்கி சூரிய செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

27.04.2019

  சந்தி
சனி கேது குரு(வ)

இன்றைய ராசிப்பலன் – 27.04.2019

மேஷம்

இன்று பிள்ளைகள் வழியில் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் நீங்கும். ஆன்மீக காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

ரிஷபம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் இருந்த தேக்க நிலை பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் மாறும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகளை  சமாளிக்க முடியும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

துலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதுவரை இருந்த குழப்பங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

தனுசு

இன்று உறவினர்கள் வருகையால் மனநிம்மதி குறையலாம். கொடுத்த கடன் பெறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். புதிய பொருட்களை வாங்கும் போது கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்றார் உறவினர்களுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறையும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும். சேமிப்பு உயரும்.

வார ராசிப்பலன்- ஏப்ரல் 28 முதல் மே 4 வரை 

வார ராசிப்பலன்- ஏப்ரல் 28 முதல் மே 4 வரை 

சித்திரை 15 முதல் 21 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

புதன் சுக்கி சூரிய செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

 

  சந்தி
சனி கேது குரு(வ)

    

கிரக   மாற்றம்

30-4-2019 சனி வக்ர ஆரம்பம் காலை 06.39 மணிக்கு

03-5-2019 மேஷத்தில் புதன் மாலை 05.02 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மகரம்     26-04-2019 அதிகாலை 03.14 மணி முதல் 28-04-2019 மாலை 03.45 மணி வரை

கும்பம்    28-04-2019 மாலை 03.45 மணி முதல் 01-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.

மீனம்           01-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 03-05-2019 பகல் 02.39 மணி வரை.

மேஷம்    03-05-2019 பகல் 02.39 மணி முதல் 05-05-2019 இரவு 10.30 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

29.04.2019 சித்திரை 16 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

02.05.2019 சித்திரை 19 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு வீண் விரயங்கள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் மேலதிகாரிகளின் ஆதரவை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெற முடியும். முருக வழிபாடு செய்வது, பிரதோஷ நாளில் சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –     28, 29, 30, 3, 4.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

இனிமையாக பேசும் சுபாவம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும் 7-ல் குரு சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் பொருளாதார ரீதியாக மேன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்-. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –     29, 30, 1, 2.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன்கள் கிட்டும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற பெரிதும் உதவும். வெளித் தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெற முடியும். புதிய பொருட் சேர்க்கை அதிகமாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய பெரிய தொகை கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முருக வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –     1, 2, 3, 4.

சந்திராஷ்டமம் – 26-04-2019 அதிகாலை 03.14 மணி முதல் 28-04-2019 மாலை 03.45 மணி வரை

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்று நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை மேலோங்கும். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிட்டும். பார்வதி தேவியையும் துர்கையம்மனையும் வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –    3, 4.

சந்திராஷ்டமம் – 28-04-2019 மாலை 03.45 மணி முதல் 01-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக இருந்த தடைகள் விலகி ஏற்றங்களை பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்களும் படிப்படியாக குறையும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் உற்றார் உறவினர்களின் உதவிகளும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். லட்சுமி தேவிக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –    28, 29, 30.

சந்திராஷ்டமம் – 01-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 03-05-2019 பகல் 02.39 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சனி, கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும், எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளும் செய்ய நேரிடும் என்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குரு 3-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது சிறப்பு. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிமித்தமாக மேற்கொள்ளும் வெளியூர் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் உண்டானாலும் அதற்கேற்ப அனுகூல பலன்களும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சிவ பெருமானையும் விநாயகரையும் வணங்கி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –    29, 30, 1, 2.

சந்திராஷ்டமம் – 03-05-2019 பகல் 02.39 மணி முதல் 05-05-2019 இரவு 10.30 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

உயர்ந்த நிலையை அடைய கூடிய ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குரு 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சொந்தமாக வீடு, வாகனங்கள், நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் அற்புதமான நற்பலன்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தாராள தன வரவுகளால் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது, சிவ மந்திரங்கள் சொல்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    1, 2, 3, 4.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் மறைமுக எதிர்ப்புகள் கூட மறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் உடனிருப்பவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். அம்மன் வழிபாடு செய்வது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 28, 3, 4.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைச் சனி நடைப்பெற்றாலும் 4-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலங்களை பெறுவீர்கள். போட்டிகள் பல இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் அனுகூலப் பலனை பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சுமாராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாகவே நடைபெறும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கேற்ப அனுகூலப்பலன்கள் கிட்டும். விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –    28, 29, 30.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 12-ல் சனி, கேது, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், வரவுக்கு மீறிய செலவுகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் கணவன்– மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும். உடன் பிறப்புகளால் சில தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும். முடிந்தவரை உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புகளால் தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் ஏற்பட்டு லாபம் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் ஓரளவுக்கு ஏற்றமானப் பலன்களை பெற முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் ––   28, 1, 2, 3.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்கள் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் சிறப்பாகவே இருக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமையை பாராட்டி புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. முருக வழிபாட்டையும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும் செய்து வந்தால் சுபிட்சமான நிலை ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள் –28, 29, 30, 4.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.

புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத மீன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் செவ்வாய், 9-ல் குரு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் உங்களை தேடி வரும். உங்களது செயல்களுக்கு பரிபுரண அனுகூலங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் படிபடியாக குறையும். எதையும் எளிதில் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். 2-ல் சூரியன் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களால் இருந்த பிரச்சினைகள் விலகி அனுகூலப் பலன்கள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபத்தை அடையலாம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பிரதோஷ காலங்களில் சிவ பார்வதி வழிபாட்டை மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –    28, 1, 2, 3.

Today rasi palan – 26.04.2019

Today rasi palan – 26.04.2019

இன்றைய ராசிப்பலன் –  26.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

26-04-2019, சித்திரை 13, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 02.40 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 11.14 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் இரவு 11.14 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

புதன் சுக்கி சூரிய செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

26.04.2019

  சந்தி
சனி கேது குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  26.04.2019

மேஷம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

ரிஷபம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் சில இடையூறுகள் உண்டாகலாம். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும்.

மிதுனம்

இன்று உடலில் சிறு உபாதைகள் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்  செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம்.

கடகம்

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வழியில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்

இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். எதிலும் கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். கடன் பிரச்சினை ஓரளவு தீரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

தனுசு

இன்று நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கொடுத்த கடனை வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் குறையும்.

மகரம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும்.

கும்பம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க சில இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

மீனம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

Today rasi palan – 24.04.2019

Today rasi palan – 24.04.2019

இன்றைய ராசிப்பலன் –  24.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

24-04-2019, சித்திரை 11, புதன்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.32 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. மூலம் நட்சத்திரம் மாலை 06.35 வரை பின்பு பூராடம். மரணயோகம் மாலை 06.35 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

புதன் சுக்கி சூரிய செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

24.04.2019

சனி கேது சந்தி குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  24.04.2019

மேஷம்

இன்று நீங்கள் குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்கலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், கவலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் தோன்றும். வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும்.

கடகம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கன்னி

இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். குடும்பத்தில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

துலாம்

இன்று குடும்பத்தினருடன் இருந்த மனசங்கடங்கள் குறையும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

கும்பம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணபுழக்கம் சற்று குறைந்து காணப்படும்-. தேவைகள் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் பிற மொழி நபர்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்.

இன்றைய ராசிப்பலன் –  25.04.2019

Today rasi palan – 25.04.2019

இன்றைய ராசிப்பலன் –  25.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் இரவு 08.37 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

புதன் சுக்கி சூரிய செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

25.04.2019

சனி கேது சந்தி குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  25.04.2019

மேஷம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணபிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

ரிஷபம்

இன்று எதிர்பாராத விண் செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களை செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

மிதுனம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளி வட்டார நட்பு கிட்டும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகள் வழியில் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் தோன்றும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வருமானம் பெருகும்.

துலாம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மன சங்கடங்கள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெண்களால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.

மீனம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும்.