2019-ஜுன் மாத ராசிப்பலன்

2019-ஜுன் மாத ராசிப்பலன்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

சுக்கி சூரிய புதன் ராகு செவ்
திருக்கணித கிரக நிலை

 

கேது சனி (வ) குரு (வ)

கிரக   மாற்றம்

02-06-2019 மிதுனத்தில் புதன் அதிகாலை 00.17 மணிக்கு

04-06-2019 ரிஷபத்தில் சுக்கிரன் பகல் 11.20 மணிக்கு

15-06-2019 மிதுனத்தில் சூரியன் மாலை 05.38 மணிக்கு

21-06-2019 கடகத்தில் புதன் அதிகாலை 02.27 மணிக்கு

22-06-2019 கடகத்தில் செவ்வாய் இரவு 11.23 மணிக்கு

29-06-2019 மிதுனத்தில் சுக்கிரன் அதிகாலை 01.34 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சகல விதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உன்னதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகள் வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். உற்றார், உறவினர்களின் வருகையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும்.

பரிகாரம் –  வெள்ளிக்கிழமைகளில் விரத இருந்து மஹா லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           -15-06-2019 அதிகாலை 04.02 மணி முதல் 17-06-2019 காலை 10.42 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் ராகு 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்றாலும் வரும் 22-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளையும், கூட்டாளிகளையும் அனுசரித்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கு ஏற்றப் பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம்.

பரிகாரம் –  சிவ ஆலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வது, அபிஷேகப் பொருட்களை வாங்கி தருவது, பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வருவது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்           -17-06-2019 காலை 10.42 மணி முதல் 19-06-2019 இரவு 08.00 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், சுகவாழ்வில் பாதிப்பு, வீண் விரயங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்க கூடும். முடிந்தவரை முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாகவும் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம்.

பரிகாரம் –  சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், சனிகவசங்கள் படிப்பதாலும் நன்மைகள் உண்டாகும். ஒருமுறை திருநள்ளாரு சென்று வருவது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்           -19-06-2019 இரவு 08.00 மணி முதல் 22-06-2019 காலை 07.40 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் மாத முற்பாதியில் சூரியன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக நற்பலன்களை தரும் அமைப்பாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தாராள தன வரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வரும் 4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். சிலருக்கு வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது.

பரிகாரம் –  செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாட்டை மேற்கொள்வதாலும், கிருத்திகை, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பதாலும் சிறப்பான பலன்களை அடையலாம். அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்           -22-06-2019 காலை 07.40 மணி முதல் 24-06-2019 இரவு 08.20 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதாலும், இம்மாதம் ராசியதிபதி சூரியன் 10,11-ல் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.

பரிகாரம் – குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்           -24-06-2019 இரவு 08.20 மணி முதல் 27-06-2019 காலை 07.44 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 9,10-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பணதேவைகளை சமாளிக்க முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலாளர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஏற்பட கூடிய உடல்நலக் குறைவுகளால் மருத்துவ செலவு ஏற்படும்.

பரிகாரம் –  சனி பகவான் வழிபாட்டை மேற்கொள்வது, கருப்பு வஸ்திரம், நல்லெண்ணெய் போன்றவற்றை கோவில்களில் தானம் செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்           -30-05-2019 இரவு 11.04 மணி முதல் 02-06-2019 காலை 06.45 மணி வரை மற்றும் 27-06-2019 காலை 07.44 மணி முதல் 29-06-2019 மாலை 04.03 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே இம்மாதம் முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பது உங்களுக்கு நெருக்கடிகளை தரும் அமைப்பு என்றாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் உங்களது பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். பலரை வழிநடத்திச் செல்லக் கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சற்று அனுகூலமான பலனை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம் –  விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று விஷ்ணு பகவானை வழிபாடு செய்வது நல்லது. திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தால் இனிய செய்து இல்லம் தேடி வரும்.

சந்திராஷ்டமம்           -02-06-2019 காலை 06.45 மணி முதல் 04-06-2019 பகல் 11.40 மணி வரை மற்றும் 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதாலும் 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் வீண் வாக்குவாதங்கள் ஆரோக்கிய ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது, உற்றார், உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்களும் பண விரயங்களும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் –  பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் அம்பிகையையும் நந்தி வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம்           -04-06-2019 பகல் 11.40 மணி முதல் 06-06-2019 பகல் 02.50 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் சனி, குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது, குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்றப் பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலாளர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம் –  சனி பகவானை வழிபடுவாலும், சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடுவதாலும் ஹனுமன் துதிகளை படிப்பதாலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           -06-06-2019 பகல் 02.50 மணி முதல் 08-06-2019 மாலை 05.22 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பது மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் எல்லா வகையிலும் முன்னேற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். தாராள தனவரவுகள் உண்டாகி தேவைகள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கடன்கள் குறையும். குரு 11-ல் இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் கிட்டும்.

பரிகாரம் –  வெள்ளிக்கிழமைகளில் மகா லட்சுமி வழிபாடு செய்வதாலும் தேவி துதிப்பாடல்களை படிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பசுவுக்கு அகத்தி கீரை கொடுப்பது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்           -08-06-2019 மாலை 05.22 மணி முதல் 10-06-2019 இரவு 08.00 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆன்மீக பயணத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். இடமாற்றம், ஊர்மாற்றம் விரும்புவோர்களுக்கும் அவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம் – சிவ வழிபாட்டையும், அம்பிகை வழிபாட்டையும் செய்து வந்தால் வாழ்வில் மேன்மைகள் ஏற்படும். பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வருவது நல்லது.

சந்திராஷ்டமம்           -10-06-2019 இரவு 08.00 மணி முதல் 12-06-2019 இரவு 11.20 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் நிம்மதி, சகல விதத்திலும் ஏற்றங்கள் உண்டாகும். பணவரவுக்கு பஞ்சமிருக்காது. உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். சிறப்பான பண வரவால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று வீண் செலவுகளை சந்திப்பீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொதுநலக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் – செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாட்டை மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும்.

சந்திராஷ்டமம்           -12-06-2019 இரவு 11.20 மணி முதல் 15-06-2019 அதிகாலை 04.02 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

06.06.2019 வைகாசி 23 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியை திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

13.06.2019 வைகாசி 30 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

14.06.2019 வைகாசி 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

20.06.2019 ஆனி 05 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியை திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

27.06.2019 ஆனி 12 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

28.06.2019 ஆனி 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

Today rasi palan – 01.06.2019

Today rasi palan – 01.06.2019

இன்றைய ராசிப்பலன் –  01.06.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-06-2019, வைகாசி 18, சனிக்கிழமை, திரியோதசி திதி மாலை 05.16 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. பரணி நட்சத்திரம் பின்இரவு 12.42 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சந்தி சுக்கி சூரிய புதன் செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

01.06.2019

சனி(வ) கேது  குரு(வ)

இன்றைய ராசிப்பலன் – 01.06.2019

மேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களின்  திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகமாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்கள்  நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.

கன்னி

இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் கவனம் தேவை.

துலாம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமா£க இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். உடன்பிறப்புக்கள் வழியில் மனநிம்மதி குறையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

மகரம்

இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Today rasi palan – 31.05.2019

Today rasi palan – 31.05.2019

இன்றைய ராசிப்பலன் –  31.05.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

31-05-2019, வைகாசி 17, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி மாலை 05.17 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 12.11 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் இரவு 12.11 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சந்தி சுக்கி சூரிய புதன் செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

31.05.2019

சனி(வ) கேது  குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  31.05.2019

மேஷம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைபடலாம். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தையில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை மேலோங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வரும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலையில் கவனம் தேவை.

துலாம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் அனுபவமுள்ள பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நட்பு உண்டாகும்.

மகரம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமற்ற பலன் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளிப்பீர்கள். தெய்வ வழிபாடு நல்லது.

கும்பம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மீனம்

இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.

வார ராசிப்பலன் — ஜுன் 2 முதல் 8 வரை 

வார ராசிப்பலன் — ஜுன் 2 முதல் 8 வரை 

வைகாசி 19 முதல் 25 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

சுக்கி

சந்தி

சூரிய செவ் ராகு

புதன்

திருக்கணித கிரக நிலை

 

சனி(வ) கேது  குரு(வ)

    

கிரக மாற்றம்

04-06-2019 ரிஷபத்தில் சுக்கிரன் பகல் 11.20 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

ரிஷபம்    02-06-2019 காலை 06.45 மணி முதல் 04-06-2019 பகல் 11.40 மணி வரை.

மிதுனம்   04-06-2019 பகல் 11.40 மணி முதல் 06-06-2019 பகல் 02.50 மணி வரை.

கடகம்     06-06-2019 பகல் 02.50 மணி முதல் 08-06-2019 மாலை 05.22 மணி வரை.

சிம்மம்    08-06-2019 மாலை 05.22 மணி முதல் 10-06-2019 இரவு 08.00 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

06.06.2019 வைகாசி 23 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியை திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்று குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்க முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும், சிவ வழிபாட்டையும் மேற்கொண்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –  4, 5, 6.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்களிடம் பேச்சை குறைப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது. அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்த நிலை உண்டாகும். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், நற்பலனைத் தரும். குரு 7-ல் இருப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்களால் தேவையற்ற அலைச்சல், சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாட்டை செய்து வந்தால் தொல்லைகள் நீங்கும், நன்மைகள் கூடும்.

வெற்றி தரும் நாட்கள் –    2, 3, 4, 7, 8.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத் துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வரவிற்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டிகள் இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகத்தில் வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போட்டிகளிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். சஷ்டியன்று ஆறுமுக கடவுளை வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –    4, 5, 6.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி மற்றவர்களால் ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்களை தரும் அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் கிடைக்கும். பொன், பொருள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பால் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். விஷ்ணு பகவானை வணங்கி வழிபட்டால் வாழ்வில் வலம் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள் –    2, 3, 4, 7, 8.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 10-ல் பலமாக சஞ்சரிப்பதும் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், ராகு, புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலனை அடைய முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் தேவையற்றப் பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி சங்கு மலர்களால் அர்ச்சனை செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –    4, 5, 6.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு தான் கற்று அறிந்து இருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல பணவரவுகள் கிடைத்து உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் குறையும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். கடன்களும் படிப்படியாக குறையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் மங்கள செய்திகள் தேடி வரும்.

வெற்றி தரும் நாட்கள் –    5, 6, 7, 8.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் பண்பும் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் பாக்கிய ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம் இருக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். சிவ வழிபாட்டையும், அம்பிகை வழிபாட்டையும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    6, 7, 8.

சந்திராஷ்டமம் – 02-06-2019 காலை 06.45 மணி முதல் 04-06-2019 பகல் 11.40 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதாலும் சூரியன் 7-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானமாக இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமானப் பலனை பெற முடியும். மாணவர்கள் உடன் பழகும் நண்பர்களிடம் கவனமாக செயல்படுவது உத்தமம். சஷ்டியன்று முருக வழிபாட்டை மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –    2, 3.

சந்திராஷ்டமம் – 04-06-2019 பகல் 11.40 மணி முதல் 06-06-2019 பகல் 02.50 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன் 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை தேவை. கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டானாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதபலன் ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துக்கள் விஷயத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஒரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். சதுர்த்தியன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் வினைகள் தீரும், நன்மைகள் சேரும்.

வெற்றி தரும் நாட்கள் –    2, 3, 4, 5.

சந்திராஷ்டமம் – 06-06-2019 பகல் 02.50 மணி முதல் 08-06-2019 மாலை 05.22 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வலமான பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிட்டும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டால் கவலைகள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –    5, 6, 7.

சந்திராஷ்டமம் – 08-06-2019 மாலை 05.22 மணி முதல் 10-06-2019 இரவு 08.00 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 5-ல் புதன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக ஏற்றங்களை அடைவீர்கள். சிறப்பான பணவரவு ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் சாதகமான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் சற்றே விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். சிவ வழிபாட்டையும், அம்பிகை வழிபாட்டையும் செய்து வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –  6, 7, 8.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் உங்களுடைய முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு, மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதில் சிறு தடை தாமதத்திற்கு பின் அ-னுகூலப் பலன் கிட்டும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்த்து கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். முருக வழிபாடு செய்வது, கிருத்திகை, சஷ்டி விரதங்கள் மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    2, 3, 4.

Today rasi palan – 30.05.2019

Today rasi palan – 30.05.2019

இன்றைய ராசிப்பலன் –  30.05.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-05-2019, வைகாசி 16, வியாழக்கிழமை, ஏகாதசி திதி மாலை 04.38 வரை பின்பு தேய்பிறை துவாதசி. ரேவதி நட்சத்திரம் இரவு 11.03 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் இரவு 11.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சந்தி சுக்கி சூரிய புதன் செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

30.05.2019

சனி(வ) கேது  குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  30.05.2019

மேஷம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை கூடும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கடன்கள் குறையும்.

ரிஷபம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபகரமான பலன்கள் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.  வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கன்னி

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

துலாம்

இன்று எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் உண்டா-கும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். வங்கி சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

மகரம்

இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கும்பம்

இன்று ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்

இன்று தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலம் கிட்டும். செலவுகள் குறையும்.

Today rasi palan – 29.05.2019

Today rasi palan – 29.05.2019

இன்றைய ராசிப்பலன் –  29.05.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-05-2019, வைகாசி 15, புதன்கிழமை, தசமி திதி பகல் 03.21 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 09.17 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் இரவு 09.17 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். அக்னி நட்சத்திரம் முடிவு காலை 07.46 மணிக்கு.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சந்தி சுக்கி சூரிய புதன் செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

29.05.2019

சனி(வ) கேது  குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  29.05.2019

மேஷம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காணலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் உதவியும் மகிழ்ச்சியை அளிக்கும்.

கடகம்

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொன் பொருள் சேரும்.

துலாம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஊழியர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் உதவியால் கடன் சுமை ஓரளவு குறையும்.

தனுசு

இன்று வியாபாரத்தில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் யோசித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மகரம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். செலவுகள் வரவுக்கு மீறி இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாக சிக்கனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

Today rasi palan – 28.05.2019

Today rasi palan – 28.05.2019

இன்றைய ராசிப்பலன் –  28.05.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

28-05-2019, வைகாசி 14, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 01.31 வரை பின்பு தேய்பிறை தசமி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 06.58 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் மாலை 06.58 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சுக்கி சூரிய புதன் செவ் ராகு
சந்தி திருக்கணித கிரக நிலை

28.05.2019

சனி(வ) கேது  குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  28.05.2019

மேஷம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று சுபசெய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.

ரிஷபம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கடகம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் ராசிக்கு பகல் 12.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.18 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

கன்னி

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். குடும்பத்தினரால் நிம்மதி குறைவு உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உற்றார் உறவினர்கள் வழியில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சக நண்பர்களின் அதரவு  கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணி சுமை கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.

மீனம்

இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், மன மகிழ்ச்சியும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

Today rasi palan – 27.05.2019

Today rasi palan – 27.05.2019

இன்றைய ராசிப்பலன் –  27.05.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

27-05-2019, வைகாசி 13, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.16 வரை பின்பு தேய்பிறை நவமி. சதயம் நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 04.12 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சுக்கி சூரிய புதன் செவ் ராகு
சந்தி திருக்கணித கிரக நிலை

27.05.2019

சனி(வ) கேது  குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  27.05.2019

மேஷம்

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிட்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் வெளி வட்டார நட்பு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

மிதுனம்

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் தரும். எதையும் சிந்தித்து செய்வது நல்லது.

கடகம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். பேச்சில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.

சிம்மம்

இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும்.

துலாம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது உத்தமம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து சற்று முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோருடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.

கும்பம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பொன் பொருள் சேரும்.

மீனம்

இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.

Today rasi palan – 26.05.2019

Today rasi palan – 26.05.2019

இன்றைய ராசிப்பலன் –  26.05.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

26-05-2019, வைகாசி 12, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி காலை 08.49 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 01.13 வரை பின்பு சதயம். மரணயோகம் பகல் 01.13 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

சுக்கி சூரிய புதன் செவ் ராகு
சந்தி திருக்கணித கிரக நிலை

26.05.2019

சனி(வ) கேது  குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  26.05.2019

மேஷம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.

ரிஷபம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன நிம்மதி குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடல்நிலை சீராகும்.

கன்னி

இன்று எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.  வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணி சுமை குறையும்.

தனுசு

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

மகரம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கும்பம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மீனம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.