Today rasi palan – 29.06.2019
/0 Comments/in Daily Tamil Rasipalan /by MURUGU BALAMURUGANToday rasi palan – 29.06.2019
இன்றைய ராசிப்பலன் – 29.06.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
29-06-2019, ஆனி 14, சனிக்கிழமை, ஏகாதசி திதி காலை 06.45 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பரணி நட்சத்திரம் காலை 09.57 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
சந்தி | ராகு சூரிய சுக்கி | ||
திருக்கணித கிரக நிலை
29.06.2019 |
புதன் செவ் | ||
கேது
சனி (வ) |
குரு(வ)
|
இன்றைய ராசிப்பலன் – 29.06.2019
மேஷம்
இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி சேமிப்பு உயரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.
கடகம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறையும்.
கன்னி
இன்று உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு மாலை 04.02 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
துலாம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு மாலை 04.02 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் கைகூடும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.
மீனம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களோடு சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. புதிய நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.
வார ராசிப்பலன் – ஜுன் 30 முதல் ஜுலை 6 வரை
/0 Comments/in Weekly rasi palan /by MURUGU BALAMURUGANவார ராசிப்பலன் – ஜுன் 30 முதல் ஜுலை 6 வரை
ஆனி 15 முதல் 21 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
சந்தி | ராகு சூரிய சுக்கி | ||
திருக்கணித கிரக நிலை
|
புதன் செவ் | ||
கேது
சனி (வ) |
குரு(வ)
|
கிரக மாற்றம் இல்லை
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
ரிஷபம் 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.
மிதனம் 01-07-2019 இரவு 08.55 மணி முதல் 03-07-2019 இரவு 11.10 மணி வரை.
கடகம் 03-07-2019 இரவு 11.10 மணி முதல் 06-07-2019 அதிகாலை 00.15 மணி வரை.
சிம்மம் 06-07-2019 அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
01.07.2019 ஆனி 16 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்தசி திதி ரோகிணி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை
04.07.2019 ஆனி 19 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்துடன் இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். கிருத்திகையன்று முருக கடவுளுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் – 2, 3.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் – 30, 1, 4, 5.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சனி, கேது 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்குப்பின் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடனை பெறுவதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும் என்பதால் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் தங்கள் பணிகளை மட்டும் செய்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 2, 3, 6.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
கற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 30, 1, 4, 5.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், ராகு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். சிலருக்கு வெளியூரில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் பல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சனி பகவானை வழிபடுவதாலும், சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் – 30, 1, 2, 3, 6.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரும் அமைப்பாகும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் – 2, 3, 4, 5.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதாலும் 10-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களின் உதவியால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் சற்று கால தாமதமாகும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் இல்லத்தில் மங்கள செய்திகள் தேடி வரும்.
வெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6.
சந்திராஷ்டமம் – 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் நெருங்கியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கும் சூழ்நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. பிரதோஷ காலத்தில் சிவ வழிபாடு செய்தால் வாழ்வில் வலமான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் – 30, 1, 6.
சந்திராஷ்டமம் – 01-07-2019 இரவு 08.55 மணி முதல் 03-07-2019 இரவு 11.10 மணி வரை.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடு செய்வது, கிருத்திகை, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 30, 1, 2, 3.
சந்திராஷ்டமம் – 03-07-2019 இரவு 11.10 மணி முதல் 06-07-2019 அதிகாலை 00.15 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். தாராள பணவரவு ஏற்பட்டு பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டார தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் – 2, 3, 4, 5.
சந்திராஷ்டமம் – 06-07-2019 அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் மேன்மைகளை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் ஏற்படும். பயணங்களால் பெரிய மனிதர்களின் நட்பும் அதன் மூலம் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் மேன்மையான பலன்கள் கிட்டும்.
வெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்– மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் சற்று குறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் கொடுத்த கடனை பெறுவதில் சற்று தாமதம் உண்டாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேலும் தொழிலை விரிவு படுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் – 30, 1, 6.
Today rasi palan – 28.06.2019
/0 Comments/in Daily Tamil Rasipalan /by MURUGU BALAMURUGANToday rasi palan – 28.06.2019
இன்றைய ராசிப்பலன் – 28.06.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
28-06-2019, ஆனி 13, வெள்ளிக்கிழமை, தசமி திதி காலை 06.36 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. அஸ்வினி நட்சத்திரம் காலை 09.11 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் காலை 09.11 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
சந்தி | சுக்கி | ராகு சூரிய | |
திருக்கணித கிரக நிலை
28.06.2019 |
புதன் செவ் | ||
கேது
சனி (வ) |
குரு(வ)
|
இன்றைய ராசிப்பலன் – 28.06.2019
மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.
ரிஷபம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். வேலையில் பணிச்சுமை குறையும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.
துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் கிட்டும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
தனுசு
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.
மகரம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.
கும்பம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.
மீனம்
இன்று நீங்கள் சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். தெய்வ வழிபாடு நல்லது.
Today rasi palan – 27.06.2019
/0 Comments/in Daily Tamil Rasipalan /by MURUGU BALAMURUGANToday rasi palan – 27.06.2019
இன்றைய ராசிப்பலன் – 27.06.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
27-06-2019, ஆனி 12, வியாழக்கிழமை, நாள் முழுவதும் தசமி திதி. ரேவதி நட்சத்திரம் காலை 07.43 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் காலை 07.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
சந்தி | சுக்கி | ராகு சூரிய | |
திருக்கணித கிரக நிலை
27.06.2019 |
புதன் செவ் | ||
கேது
சனி (வ) |
குரு(வ)
|
இன்றைய ராசிப்பலன் – 27.06.2019
மேஷம்
இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் கிட்டும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். சகோதர சகோதரிகள் வழியில் அனுகூலப் பலன் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.
கடகம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
கன்னி
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது உத்தமம்.
துலாம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.
தனுசு
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். தொழிலில் பெரிய முதலீடு கொண்டு தொடங்கும் காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிட்டும்.
மீனம்
இன்று உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மனஅமைதி குறையும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும்.
Today rasi palan – 26.06.2019
/0 Comments/in Daily Tamil Rasipalan /by MURUGU BALAMURUGANToday rasi palan – 26.06.2019
இன்றைய ராசிப்பலன் – 26.06.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
26-06-2019, ஆனி 11, புதன்கிழமை, நவமி திதி பின்இரவு 05.44 வரை பின்பு தேய்பிறை தசமி. நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
சந்தி | சுக்கி | ராகு சூரிய | |
திருக்கணித கிரக நிலை
26.06.2019 |
புதன் செவ் | ||
கேது
சனி (வ) |
குரு(வ)
|
இன்றைய ராசிப்பலன் – 26.06.2019
மேஷம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.
மிதுனம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.
கடகம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
சிம்மம்
இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
கன்னி
இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
தனுசு
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். மன நிம்மதி குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மகரம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும்.
கும்பம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
மீனம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.
Today rasi palan – 25.06.2019
/0 Comments/in Daily Tamil Rasipalan /by MURUGU BALAMURUGANToday rasi palan – 25.06.2019
இன்றைய ராசிப்பலன் – 25.06.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
25-06-2019, ஆனி 10, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 04.13 வரை பின்பு தேய்பிறை நவமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.37 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் பின்இரவு 05.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர்-முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
சந்தி | சுக்கி | ராகு சூரிய | |
திருக்கணித கிரக நிலை
25.06.2019 |
புதன் செவ் | ||
கேது
சனி (வ) |
குரு(வ)
|
இன்றைய ராசிப்பலன் – 25.06.2019
மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். சுபகாரியம் கைகூடும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
கடகம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
சிம்மம்
இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
துலாம்
இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைப்பெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
விருச்சிகம்
இன்று உடல் நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பண நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைய சற்று நிதானத்துடனும் கவனத்துடனும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும்.
மகரம்
இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கும்பம்
இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
மீனம்
இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும் தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். சேமிப்பு உயரும்.
Today rasi palan – 24.06.2019
/0 Comments/in Daily Tamil Rasipalan /by MURUGU BALAMURUGANToday rasi palan – 24.06.2019
இன்றைய ராசிப்பலன் – 24.06.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
24-06-2019, ஆனி 09, திங்கட்கிழமை, சப்தமி திதி பின்இரவு 02.13 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 03.01 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பின்இரவு 03.01 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
சுக்கி | ராகு சூரிய | ||
சந்தி | திருக்கணித கிரக நிலை
24.06.2019 |
புதன் செவ் | |
கேது
சனி (வ) |
குரு(வ)
|
இன்றைய ராசிப்பலன் – 24.06.2019
மேஷம்
இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது மூலம் லாபம் அடையலாம். வேலையில் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
தனுசு
இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
மகரம்
இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிப்பு உயரும்.
மீனம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் இடையூறுகள் உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அனுகூலப் பலன் கிடைக்கும்.
Interesting links
Here are some interesting links for you! Enjoy your stay :)Pages
Categories
- Astrology
- Birth Date palan
- Daily Tamil Rasipalan
- Gen stones
- guru peyarchi palangal 2018 2019
- Guru peyarchi palangal 2018-2019
- guru peyarchi palangal 2019-2020
- Monthly rasipalan
- natchathira palangal
- New year rasi palan – 2018
- New year rasi palan – 2019
- New year rasi palan 2020
- Ragu ketu palanagal 2020 2022
- Rasi palan
- Sani peyarchi 2017 to 2020
- Sani peyarchi 2020 to 2023
- Tamil Good Times and Bad Times
- Tamil New year palangal 2018 19
- Tamil New year palangal 2019-20
- Tamil New year palangal 2020-21
- Uncategorized
- Vaara rasi palan
- Vasthu
- Weekly rasi palan
- Yagam
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020
Archive
- April 2021
- March 2021
- February 2021
- January 2021
- October 2020
- September 2020
- August 2020
- July 2020
- June 2020
- May 2020
- April 2020
- March 2020
- February 2020
- January 2020
- December 2019
- November 2019
- October 2019
- September 2019
- August 2019
- July 2019
- June 2019
- May 2019
- April 2019
- March 2019
- February 2019
- January 2019
- December 2018
- November 2018
- October 2018
- September 2018
- August 2018
- July 2018
- June 2018
- May 2018
- April 2018
- March 2018
- February 2018
- January 2018
- December 2017
- November 2017
- October 2017