Today rasi palan – 01.08.2019

Today rasi palan – 01.08.2019

இன்றைய ராசிப்பலன் –  01.08.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-08-2019, ஆடி 16, வியாழக்கிழமை, அமாவாசை திதி காலை 08.42 வரை பின்பு வளர்பிறை பிரதமை பின்இரவு 05.11 வரை பின்பு துதியை. பூசம் நட்சத்திரம் பகல் 12.11 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. நவகிரக வழிபாடு நல்லது.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

ராகு

புதன் (வ)

திருக்கணித கிரக நிலை

01.08.2019

சூரிய சுக்கி

செவ் சந்தி

கேது சனி  (வ) குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் –  01.08.2019

மேஷம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக இருப்பீர்கள். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாக முடியும். பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். போட்டி பொறாமைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் சகோதர, சகோதரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து சென்றால் இருக்கும்  பிரச்சினைகள் சற்று குறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகள் மற்றவர்களால் பாராட்டப்படும். புதிய நபர் அறிமுகம் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண பேச்சு வார்த்தைகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வங்கி கடன் பெறுவதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

Today rasi palan – 31.07.2019

Today rasi palan – 31.07.2019

இன்றைய ராசிப்பலன் –  31.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

31-07-2019, ஆடி 15, புதன்கிழமை, சதுர்த்தசி திதி பகல் 11.57 வரை தேய்பிறை பின்பு அமாவாசை. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 02.41 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. ஆடி அமாவாசை.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

ராகு சந்தி புதன் (வ)
திருக்கணித கிரக நிலை

31.07.2019

சூரிய சுக்கி

செவ்

கேது சனி  (வ) குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் –  31.07.2019

மேஷம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வங்கி சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.  உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.

கன்னி

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

துலாம்

இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த டென்ஷன்கள் விலகி நிம்மதி ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். நவீனகரமான பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வியாபார ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

மீனம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் தேவை.

Today rasi palan – 30.07.2019

Today rasi palan – 30.07.2019

இன்றைய ராசிப்பலன் –  30.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-07-2019, ஆடி 14, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பிற்பகல் 02.49 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.47 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் மாலை 04.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ-முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

ராகு சந்தி
திருக்கணித கிரக நிலை

30.07.2019

சூரிய சுக்கி

புதன் (வ) செவ்

கேது சனி  (வ) குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் –  30.07.2019

மேஷம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

ரிஷபம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு.

கடகம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சிக்கனமுடன் செயல்பட்டால் பணபிரச்சினையை தவிர்க்கலாம்.

சிம்மம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காண்பீர்கள். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

மகரம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

கும்பம்

இன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டால் சிக்கலை சமாளித்து லாபம் அடையலாம்.

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

Today rasi palan – 29.07.2019

Today rasi palan – 29.07.2019

இன்றைய ராசிப்பலன் –  29.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-07-2019, ஆடி 13, திங்கட்கிழமை, துவாதசி திதி மாலை 05.09 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 06.22 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சந்தி ராகு
திருக்கணித கிரக நிலை

29.07.2019

சூரிய சுக்கி

புதன் (வ) செவ்

கேது சனி  (வ) குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் –  29.07.2019

மேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் நடக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல் படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். செலவுகள் குறையும்.

கன்னி

இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும்.

துலாம்

இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மன உளைச்சல் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.

தனுசு

இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மகரம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது.

கும்பம்

இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். தேவையற்ற அலைச்சல்கள் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும்.

 

Today rasi palan – 28.07.2019

Today rasi palan – 28.07.2019

இன்றைய ராசிப்பலன் –  28.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

28-07-2019, ஆடி 12, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி மாலை 06.50 வரை பின்பு தேய்பிறை துவாதசி. ரோகிணி நட்சத்திரம் இரவு 07.18 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

சந்தி ராகு
திருக்கணித கிரக நிலை

28.07.2019

சூரிய சுக்கி

புதன் (வ) செவ்

கேது சனி  (வ) குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் –  28.07.2019

மேஷம்

இன்று வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கடகம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் விலகும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு ஆச்சிரியப்படுத்தகூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். பெரியோர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

தனுசு

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

மகரம்

இன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உறவினர்கள் வருகையால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை அளிக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மீனம்

இன்று குடும்பத்தில் இருந்த ஒற்றுமை குறைவுகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

2019 – ஆகஸ்ட் மாத ராசிப்பலன்

2019 – ஆகஸ்ட் மாத ராசிப்பலன்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

.

ராகு

புதன் (வ)

திருக்கணித கிரக நிலை

 

செவ் சூரிய

சுக்கி

கேது

சனி (வ)

குரு(வ)

 

கிரக   மாற்றம்

1-8-2019 புதன் வக்ர நிவர்த்தி காலை 09.27 மணிக்கு

3-8-2019 கடகத்தில் புதன் காலை 06.00 மணிக்கு

9-8-2019 சிம்மத்தில் செவ்வாய் அதிகாலை 04.47 மணிக்கு

11-8-2019 குரு வக்ர நிவர்த்தி இரவு 07.35 மணிக்கு

16-8-2019 சிம்மத்தில் சுக்கிரன் இரவு 08.39 மணிக்கு

17-8-2019 சிம்மத்தில் சூரியன் பகல் 01.02 மணிக்கு

26-8-2019 சிம்மத்தில் புதன் பகல் 02.07 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். மாத முற்பாதியில் சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் நன்றாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வி மட்டுமின்றி விளையாட்டு துறைகளிலும் உயர்வடைவார்கள்.

பரிகாரம் – சிவாலயங்களுக்குச் சென்று சிவனுக்கு வில்வ இலைக் கொண்டு அர்ச்சனை அபிஷேகம் செய்வதாலும் முருக கடவுளை வழிபாடு செய்வதாலும் வாழ்வில் சிறப்பான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம்     —  08-08-2019 மாலை 03.25 மணி முதல் 10-08-2019 இரவு 11.05 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். பகைமை பாராட்டியவர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.

பரிகாரம் – சனிக்கிழமை சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனியின் அருள் கிடைக்கப் பெற்று கஷ்டங்கள் குறையும். மேலும் அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்     — 10-08-2019 இரவு 11.05 மணி முதல் 13-08-2019 காலை 09.25 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 17-ஆம் தேதி முதல் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். மாத ஆரம்பத்தில் சில இடையூறுகளை சந்தித்தாலும் உங்களது சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு சிறப்புடன் இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவை விட செலவுகள் அதிகமாக காணப்பட்டாலும் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் உதவிகள் கொண்டு எதையும் சமாளித்து விடுவீர்கள். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குடும்ப ஒற்றுமை சற்று குறையும் காலம் என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, மற்றவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது மிகவும் நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல் டென்ஷன்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தடை, தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதும் உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும்.

பரிகாரம் – துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் மங்களம் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்     — 13-08-2019 காலை 09.25 மணி முதல் 15-08-2019 இரவு 09.27 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சை குறைத்துக் கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம் – செவ்வாய் கிழமை விரதமிருந்து ஆறுமுக கடவுளான முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது. மேலும் சஷ்டி விரதம் மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம்     — 15-08-2019 இரவு 09.27 மணி முதல் 18-08-2019 காலை 10.10 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்குப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். விரய ஸ்தானமான 12-ல் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் – சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் வணங்கி வழிபட்டு வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம். பிரதோஷ விரதம் இருப்பது, பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது நல்லது.

சந்திராஷ்டமம்     — 18-08-2019 காலை 10.10 மணி முதல் 20-08-2019 இரவு 10.30 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு திருப்தகரமாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குரு 3-ல் இருப்பதால் பணவிஷயத்தில் மட்டும் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை பொருளாதார நெருக்கடிகள் போன்றவை மாறி முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் – குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதாலும், விநாயக கடவுளை வழிபாடு செய்வதாலும் வாழ்வில் ஏற்படும் தொல்லைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்     —  20-08-2019 இரவு 10.30 மணி முதல் 23-08-2019 காலை 08.55 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இம்மாதம் 10, 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும். போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் அவற்றை எல்லாம் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களாலும் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைய முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும். சிலரின் வீடு, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும்.

பரிகாரம் – நவக்கிரகங்களில் ராகுவுக்கு மந்தாரை மலரால் அர்ச்சனை செய்வதாலும், முருக கடவுளை வழிபாடு செய்வதாலும் நற்பலன்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்     — 23-08-2019 காலை 08.55 மணி முதல் 25-08-2019 மாலை 04.13 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 17-ஆம் தேதி முதல் 10-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் தற்போது உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கன்னிய வாழ்க்கை அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது-. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் ஏற்பட்டு சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் கல்வியில் உயர்வடைய முடியும்.

பரிகாரம் – அம்மன் வழிபாட்டையும், சனி பகவான் வழிபாட்டையும் மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்     —  25-08-2019 மாலை 04.13 மணி முதல் 27-08-2019 இரவு 07.40 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். மாத தொடக்கத்தில் 8-ல் சஞ்சரிக்கும் சூரியன், செவ்வாயால் உடல் ஆரோக்கியத்தில் கை கால் சோர்வு, மந்த நிலை போன்ற உபாதைகள் ஏற்படலாம். பாக்கிய ஸ்தானமான 9-ல் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதாலும், 17-ஆம் தேதி முதல் 9-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் மாத பிற்பாதியில் ஆரோக்கிய ரீதியாக இருக்கும் பாதிப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் யாவும் விலகி அனுகூலங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை குறைத்து கொள்வது நல்லது.

பரிகாரம் – துர்கையம்மன் வழிபாடு செய்வது, மேலும் பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ வழிபாட்டை மேற்கொள்வது நன்மையை கொடுக்கும்.

சந்திராஷ்டமம்     —  31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை மற்றும் 27-08-2019 இரவு 07.40 மணி முதல் 29-08-2019 இரவு 08.10 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட உபாதைகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது உத்தமம். இம்மாதம் சூரியன், செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. முடிந்த வரை உடனிருப்பவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபார ரீதியாக சாதகமான பலன்கள் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம் – சிவ பெருமானையும் முருக கடவுளையும் வணங்கி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் உள்ள தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்     — 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை மற்றும் 29-08-2019 இரவு 08.10 மணி முதல் 31-08-2019 இரவு 07.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் மாத தொடக்கத்தில் சூரியன், செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத அனுகூலங்களை எளிதில் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலமான பலனை பெறலாம். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பெறும் வாய்ப்பு அமையும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

பரிகாரம் – வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை சாற்றி தீபம் ஏற்றி வழிபட்டால் குருவின் அருள்பார்வை பரிபூரணமாக கிட்டும். விஷ்ணு வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்     — 04-08-2019 காலை 09.30 மணி முதல் 06-08-2019 பகல் 11.00 மணி வரை மற்றும் 31-08-2019 இரவு 07.20 மணி முதல் 02-09-2019 இரவு 07.25 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 17-ஆம் தேதி முதல் 9-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் நல்லது நடக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு ஊர் மாற்றம், இடமாற்றம் உண்டாவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். வெளி தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் – சனிக்கிழமை சனி பகவானை வழிபாடு செய்வதும் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

சந்திராஷ்டமம்     — 06-08-2019 பகல் 11.00 மணி முதல் 08-08-2019 மாலை 03.25 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

04.08.2019 ஆடி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

07.08.2019 ஆடி 22 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

11.08.2019 ஆடி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

14.08.2019 ஆடி 29 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

25.08.2019 ஆவணி 08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மிருகசீர்ரும் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 09.30 மணிக்குள் கன்னி இலக்கினம்.தேய்பிறை

28.08.2019 ஆவணி 11 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

Today rasi palan – 27.07.2019

Today rasi palan – 27.07.2019

இன்றைய ராசிப்பலன் –  27.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

27-07-2019, ஆடி 11, சனிக்கிழமை, தசமி திதி இரவு 07.46 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 07.30 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் இரவு 07.30 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஆடி கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. வாஸ்து நாள். காலை 07.30 மணி முதல் 08.06 மணி வரை

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சந்தி ராகு
திருக்கணித கிரக நிலை

27.07.2019

செவ் சூரிய

புதன் (வ) சுக்கி

கேது

சனி (வ)

குரு(வ)

 

இன்றைய ராசிப்பலன் –  27.07.2019

மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் பணிச்சுமை குறையும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

மிதுனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

கடகம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

சிம்மம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.

கன்னி

இன்று நீங்கள் கடினமான காரியங்களையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். தொழில் ரீதயான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் ஏற்படும்.

துலாம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் ஓரளவு குறையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் பணவரவு உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

Today rasi palan – 26.07.2019

Today rasi palan – 26.07.2019

இன்றைய ராசிப்பலன் –  26.07.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

26-07-2019, ஆடி 10, வெள்ளிக்கிழமை, நவமி திதி இரவு 07.56 வரை பின்பு தேய்பிறை தசமி. பரணி நட்சத்திரம் மாலை 06.56 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

சந்தி ராகு
திருக்கணித கிரக நிலை

26.07.2019

செவ் சூரிய

புதன் (வ) சுக்கி

கேது

சனி (வ)

குரு(வ)

 

 

இன்றைய ராசிப்பலன் –  26.07.2019

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு தாராள தனவரவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் மகிழச்சி நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை அதிகரிக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

கன்னி

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.

துலாம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு தாராள தன வரவும், சுபிட்சமும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

வார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை 

வார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை 

ஆடி 12 முதல் 18 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சந்தி ராகு
திருக்கணித கிரக நிலை

 

செவ் சூரிய

புதன் (வ) சுக்கி

கேது

சனி (வ)

குரு(வ)

 

கிரக மாற்றம்

30-07-2019 மிதுனத்தில் புதன் பகல் 12.00 மணிக்கு

01-08-2019 புதன் வக்ர முடிவு காலை 09.27 மணிக்கு

03-08-2019 கடகத்தில் புதன் காலை 06.00 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

ரிஷபம்         27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.

மிதுனம்         29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.

கடகம்          31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை.

சிம்மம்         02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

28.07.2019 ஆடி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

29.07.2019 ஆடி 13 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரனும், 3-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சிறப்பான பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். முடிந்தவரை பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலமும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –          29, 30.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும், பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். துர்கையம்மனையும் சனி பகவானையும் வணங்கி வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –          28, 31, 1.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றலும், சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் திறனும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாரம் என்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழுவ கூடும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் இறையருள் பரிபூரணமாக கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –          29, 30, 2, 3.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நினைத்தது நடக்கும் யோகம், தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் அமைப்பு உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். முருக வழிபாட்டையும் துர்கையம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டால் குடும்பத்தில் சுபசெய்திகள் வந்து சேரும்.

வெற்றி தரும் நாட்கள் –          28, 31, 1.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்றாலும் விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது பல்வேறு நெருக்கடிகளை உண்டாக்கும். எதிலும் நிதானமாக செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் நெருங்கியவர்கள் மூலமாக கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வணங்கினால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –          28, 29, 30, 2, 3.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தொழில் வியாபாரத்தில் லாபகரமான நிலை உண்டாகும். இருக்கும் பிரச்சினைகள் குறைந்து ஏற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து மனமாறி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். சிலருக்கு வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சனி பகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –          29, 30, 31, 1.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, சகல விதத்திலும் ஏற்றம் அடையக்கூடிய நல்ல வாரமாக இவ்வாரம் இருக்கும். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டால் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகளிலும் சாதிக்க முடியும். அம்மன் வழிபாடு செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –          31, 1, 2, 3.

சந்திராஷ்டமம் – 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் சிறு சிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பேச்சில் கவனமாக இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருந்தாலும் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –          28, 2, 3.

சந்திராஷ்டமம் – 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு இவ்வாரத்தில் ஜென்ம ராசியில் சனி, கேது, அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். தொழில், வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலங்கள் ஏற்பட்டாலும் அலைச்சல்களும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் சற்று பொறுப்புடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று விட முடியும். முருக வழிபாட்டை மேற்கொண்டால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

வெற்றி தரும் நாட்கள் –          28, 29, 30.

சந்திராஷ்டமம் – 31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –          29, 30, 31, 1.

சந்திராஷ்டமம் – 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய, அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி, கேது 11-ல் இருப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சாதகமான பலன்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைப்பதுடன் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலப்பலன் உண்டா-கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நற்பலனை அடைவீர்கள். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். மகா லட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். செல்வ நிலை உயரும்.

வெற்றி தரும் நாட்கள் –          31, 1, 2, 3.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

தயாள குணம், பொறுமை, தன்னம்பிக்கை, உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதாலும் பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகி உங்களது அனைத்து பிரச்சினைகளும் விலக கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சூரியன், செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் வழியில் சாதகப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அம்மன் வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம். ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –     28, 2, 3.