Today rasi palan – 01.02.2020

Today rasi palan – 01.02.2020

இன்றைய ராசிப்பலன் –  01.02.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01.02.2020 தை 18, சனிக்கிழமை, சப்தமி திதி மாலை 06.11 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 08.53 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ரத சப்தமி.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சந்தி ராகு
சுக்கி புதன் திருக்கணித கிரக நிலை

01.02.2020

சனி சூரிய
கேது குரு செவ்

இன்றைய ராசிப்பலன் – 01.02.2020

மேஷம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.

மிதுனம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

கடகம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

கன்னி

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

துலாம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். பழைய கடன்கள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

தனுசு

இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் மனசங்கடங்கள் உண்டாகும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன்கள் குறையும். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெறலாம்.

மகரம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். பொன் பொருள் சேரும்.

கும்பம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் பெரியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். லாபம் பெருகும்.

இன்றைய ராசிப்பலன் –  31.01.2020

 

இன்றைய ராசிப்பலன் –  31.01.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

31-01-2020, தை 17, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி பகல் 03.52 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ரேவதி நட்சத்திரம் மாலை 06.09 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் மாலை 06.09 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சந்தி ராகு
சுக்கி புதன் திருக்கணித கிரக நிலை

31.01.2020

சனி சூரிய
கேது குரு செவ்

இன்றைய ராசிப்பலன் –  31.01.2020

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகமாகும். சிக்கனமாக செயல்பட்டால் பண பிரச்சினையை தவிர்க்கலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறப்புகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்

இன்று பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம்  பெருகும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் அ-னுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் டென்ஷன் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்து லாபத்தை அடைவீர்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பொருளாதார தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

2020 பிப்ரவரி மாத ராசிப்பலன்

2020 பிப்ரவரி மாத ராசிப்பலன்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

      ராகு
புதன் சுக்கி  

 

 
சூரிய சனி  
குரு கேது செவ்      

         

கிரக   மாற்றம்

03-02-2020 மீனத்தில் சுக்கிரன் அதிகாலை 02.18 மணிக்கு

08-02-2020 தனுசில் செவ்வாய் அதிகாலை 03.52 மணிக்கு

13-02-2020 கும்பத்தில் சூரியன் பகல் 03.03 மணிக்கு

18-02-2020 புதன் வக்கிர ஆரம்பம் அதிகாலை 06.19 மணிக்கு

29-02-2020 மேஷத்தில் சுக்கிரன் அதிகாலை 01.33 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 11-ல் புதன் சஞ்சரிப்பதும் இம்மாதத்தில் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவு ஏற்பட்டு அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். மாத தொடக்கத்தில் 8-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வரும் 7-ஆம் தேதி முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வரன்களும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். தொழில் அபிருத்திக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சிலருக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் போன்றவையும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் – தை கிருத்திகை நாளில் விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் – 15-02-2020 இரவு 11.18 மணி முதல் 18-02-2020 அதிகாலை 05.13 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் புதன் 10-ல் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, நெருங்கியவர்களின் ஆதரவால் சிறப்பான வளர்ச்சியினை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். கணவன்- மனைவி வீண் பேச்சை குறைப்பது நல்லது. செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் குரு 8-ல் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள்.

பரிகாரம் – அம்மன் வழிபாடு செய்வதாலும், தை கிருத்திகை நாளில் முருக வழிபாடு செய்வதாலும் சிறப்பான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம் – 18-02-2020 அதிகாலை 05.13 மணி முதல் 20-02-2020 பகல் 01.52 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 9-ல் புதன் சஞ்சரிப்பது குடும்பத்தில் பொருளாதார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்கள் குறையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும், அசையா சொத்துகளால் வீண் அலைச்சல் இருந்தாலும் ஓரளவு அனுகூலப் பலனும் உண்டாகும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சிறு தடை தாமதத்திற்கு பின் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம் – சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும் சனிக் கவசம் படிப்பதாலும் மனகவலைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டமம் –  20-02-2020 பகல் 01.52 மணி முதல் 23-02-2020 அதிகாலை 00.29 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வரும் 7-ஆம் தேதி முதல் 6-ல் , கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். இம்மாதத்தில் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். அவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம் – வெள்ளிக்கிழமைகளில் மகா லட்சுமி தேவியை வெண் தாமரை மலர் கொண்டு வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் –  23-02-2020 அதிகாலை 00.29 மணி முதல் 25-02-2020 பகல் 12.27 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் இம்மாத முற்பாதியில் 6-ல் சஞ்சரிப்பதும் குரு 5-ல், சனி 6-ல் சஞ்சரிப்பதும் மிகச் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப் பலன் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அனைவரையும் அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிறப்பான பணவரவால் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன் பொருள் வாங்கும் யோகமும் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும். சிலருக்கு புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின உழைப்பு தேவை.

பரிகாரம் – மஹா சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் வலமான பலன்களை பெறலாம்.

சந்திராஷ்டமம் –  25-02-2020 பகல் 12.27 மணி முதல் 28-02-2020 அதிகாலை 01.08 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, மாத தொடக்கத்தில் செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேற கூடிய வாய்ப்பும் ஏற்படும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். உங்கள் ராசிக்கு குரு 4-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம் – சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்களான எள் தீபம் ஏற்றுவது, கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம் –  31-01-2020 இரவு 06.09 மணி முதல் 03-02-2020 அதிகாலை 05.40 மணி வரை மற்றும் 28-02-2020 அதிகாலை 01.08 மணி முதல் 01-03-2020 பகல் 01.18 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் குரு 4-ல் சூரியன் சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வரும் 7-ஆம் தேதி முதல் கேது சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் நிலவிய சின்ன சின்ன பிரச்சினைகள் குறையும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்றாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். புத்திர வழியில் ஒருசில அனுகூலங்களை அடையலாம். அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும்.

பரிகாரம் – குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குருவின் அருள்பார்வை கிட்டும்.

சந்திராஷ்டமம் –  03-02-2020 அதிகாலை 05.40 மணி முதல் 05-02-2020 பகல் 02.00 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 4-ல் புதன் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தாராள தன வரவால் பொருளாதார நிலை மேன்மை அடையும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் படிப்படி குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த தடைகள் விலகி சாதகப்பலன் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களால் ஒருசில அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து எதிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பல பொது நலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். வேலைபளு குறைவாகவே இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும்.

பரிகாரம் – தை கிருத்திகை நாளில் முருக பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

சந்திராஷ்டமம் –  05-02-2020 பகல் 02.00 மணி முதல் 07-02-2020 மாலை 06.24 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, கேது, 2-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய மாதமாகும். பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக குறையும். பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீடு, மனை வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளி வைப்பது உத்தமம். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

பரிகாரம் – சனி பகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டால் தொல்லைகள் நீங்கும். செல்வ நிலை உயரும்.

சந்திராஷ்டமம் – 07-02-2020 மாலை 06.24 மணி முதல் 09-02-2020 இரவு 07.43 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், சனி, 12-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிறுசிறு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். நேரத்திற்கு உணவு உண்பது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை பெறுவதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம் – மகா சிவராத்திரி நன்னாளில் சிவ பெருமானை தரிசிப்பதாலும் சிவ ஸ்தோத்திரங்கள் படிப்பதாலும் இறைவனின் அருளால் சகல நன்மைகளும் அடையலாம்.

சந்திராஷ்டமம் –  09-02-2020 இரவு 07.43 மணி முதல் 11-02-2020 இரவு 07.43 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குரு கேது சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக மேன்மையை தரும் அமைப்பாகும். சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடையலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சூரியன் 12-ல் இருப்பதால் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். சிலருக்கு புதிய வீடு, வண்டி, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். கொடுத்த கடனை பெறுவதில் இருந்த சிக்கல்களும் விலகும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியை அளிக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிட முடியும். கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த உயர்வை பெற்று விட முடியும்.

பரிகாரம் – ராகு காலத்தில் துர்கையம்மன் வழிபாடு செய்வதும், மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்வதும், பௌர்ணமியன்று கிரிவலம் சென்று வருவதும் நற்பலன்களை அளிக்கும்.

சந்திராஷ்டமம் –  11-02-2020 இரவு 07.43 மணி முதல் 13-02-2020 இரவு 08.22 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். இம்மாதம் 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் – புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விஷ்ணு வழிபாடு செய்வதாலும், சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபடுவதாலும் நன்மைகள் பல உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 13-02-2020 இரவு 08.22 மணி முதல் 15-02-2020 இரவு 11.18 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

05.02.2020 தை 22 ஆம் தேதி புதன்கிழமை ஏகாதசி திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

07.02.2020 தை 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரயோதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

12.02.2020 தை 29 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

14.02.2020 மாசி 02 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

20.02.2020 மாசி 08 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

26.02.2020 மாசி 14 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

Today rasi palan – 30.01.2020

Today rasi palan – 30.01.2020

இன்றைய ராசிப்பலன் –  30.01.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-01-2020, தை 16, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.19 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 03.12 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சந்தி ராகு
சுக்கி திருக்கணித கிரக நிலை

30.01.2020

சனி புதன் சூரிய
கேது குரு செவ்

இன்றைய ராசிப்பலன் – 30.01.2020

மேஷம்

இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.

ரிஷபம்

இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மிதுனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம்  உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிட்டும். திடீர் பயணங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் தரும்.

துலாம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் ஏற்படலாம். தடைப்பட்ட காரியம் கைகூடும் வாய்ப்பு அமையும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

இன்று பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

மகரம்

இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

கும்பம்

இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும்.

மீனம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

Today rasi palan – 29.01.2020

Today rasi palan – 29.01.2020

இன்றைய ராசிப்பலன் –  29.01.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-01-2020, தை 15, புதன்கிழமை, சதுர்த்தி திதி பகல் 10.46 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 12.13 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பகல் 12.13 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சந்தி ராகு
சுக்கி திருக்கணித கிரக நிலை

29.01.2020

சனி புதன் சூரிய
கேது குரு செவ்

இன்றைய ராசிப்பலன் –  29.01.2020

மேஷம்

இன்று உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.  கடன் பிரச்சினைகள் குறைவதுடன் தேவைகளும் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.

கடகம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமத பலனே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

கன்னி

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாரட்டப்படும்.  தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

துலாம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் குறையும். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியான பிரச்சினைகளால் மனஅமைதி சற்று குறையலாம். பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும்.

தனுசு

இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். அசையும் அசையா சொத்து ரீதியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.

மகரம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியுடன் முடியும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெய்தி கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ், செல்வம், செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். புதிதாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மீனம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

Today rasi palan – 28.01.2020

Today rasi palan – 28.01.2020

இன்றைய ராசிப்பலன் –  28.01.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

28-01-2020, தை 14, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் காலை 09.23 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

ராகு
சுக்கி சந்தி திருக்கணித கிரக நிலை

28.01.2020

சனி புதன் சூரிய
கேது குரு செவ்

இன்றைய ராசிப்பலன் – 28.01.2020

மேஷம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பொன் பொருள் சேரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தாமதமான காரியங்கள் கூட எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் டென்ஷனை ஏற்படுத்தும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கன்னி

இன்று மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். வீட்டில் ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சிக்கனமுடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர பொருட்களால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். நண்பர்கள் உதவியால் கடன்கள் பைசல் ஆகும்.

தனுசு

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும். திருமண சம்பந்தமான முயற்சிகள் நற்பலனை தரும். கடன் பிரச்சினை குறையும்.

மகரம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம்

இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். வியாபார ரீதியான கொடுக்கல்& வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

Today rasi palan – 27.01.2020

Today rasi palan – 27.01.2020

இன்றைய ராசிப்பலன் –  27.01.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

27-01-2020, தை 13, திங்கட்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை திரிதியை திதி. அவிட்டம் நட்சத்திரம் காலை 06.48 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

ராகு
சுக்கி சந்தி திருக்கணித கிரக நிலை

27.01.2020

சனி புதன் சூரிய
கேது குரு செவ்

இன்றைய ராசிப்பலன் –  27.01.2020

மேஷம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

ரிஷபம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். உடல் நிலை சீராகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மிதுனம்

இன்று உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது சிறப்பு. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

கன்னி

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.

துலாம்

இன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

தனுசு

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.

Today rasi palan – 26.01.2020

Today rasi palan – 26.01.2020

இன்றைய ராசிப்பலன் –  26.01.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

26-01-2020, தை 12, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி பின்இரவு 06.16 வரை பின்பு வளர்பிறை திரிதியை. நாள் முழுவதும் அவிட்டம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். வாஸ்து நாள். மனை பூஜை செய்ய உகந்த நேரம் 10.46 மணி முதல் 11.22 மணி வரை.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

ராகு
சுக்கி திருக்கணித கிரக நிலை

26.01.2020

சனி சந்தி புதன் சூரிய
கேது குரு செவ்

இன்றைய ராசிப்பலன் –  26.01.2020

மேஷம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

ரிஷபம்

இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் குறையும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் இருப்பது நல்லது.

கடகம்

இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெண்கள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். பெண்களால் அனுகூலப் பலன் கிடைக்கும்.

கன்னி

இன்று தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை. வீட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

துலாம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். சொத்துக்கள் வாங்க விற்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப் பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்

இன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

வார ராசிப்பலன் – ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை 

வார ராசிப்பலன் – ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை 

தை 12 முதல் 18 வரை

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

ராகு
சுக்கி திருக்கணித கிரக நிலை

26.01.2020

சனி சந்தி புதன் சூரிய
கேது குரு செவ்

கிரக மாற்றம்

31-01-2020 கும்பத்தில் புதன் அதிகாலை 02.53 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மகரம்

24-01-2020 காலை 07.39 மணி முதல் 26-01-2020 மாலை 05.39 மணி வரை.

கும்பம்

26-01-2020 மாலை 05.39 மணி முதல் 29-01-2020 அதிகாலை 05.29 மணி வரை.

மீனம்

29-01-2020 அதிகாலை 05.29 மணி முதல் 31-01-2020 மாலை 06.09 மணி வரை.

மேஷம்

31-01-2020 மாலை 06.09 மணி முதல் 03-02-2020 அதிகாலை 05.40 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

27.01.2020 தை 13 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

30.01.2020 தை 16 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சஷ்டியன்று விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28, 1.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும் 9-ல் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். 2-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். பண விஷயத்தில் சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் சற்று கால தாமதமாகும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். சிவ வழிபாடும், துர்கையம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  27, 28, 29, 30, 31.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பது தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. இவ்வாரத்தில் சூரியன், சனி, புதன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  29, 30, 31, 1.

சந்திராஷ்டமம் –   24-01-2020 காலை 07.39 மணி முதல் 26-01-2020 மாலை 05.39 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

கற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டியதை அடைந்து விடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குரு 6-ல், சூரியன், சனி 7-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, கணவன் மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் நன்மைகள் பல அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –  26, 1.

சந்திராஷ்டமம் –   26-01-2020 மாலை 05.39 மணி முதல் 29-01-2020 அதிகாலை 05.29 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதும் பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே இருந்த சின்ன சின்ன பிரச்சினைகள் கூட மறைந்து குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்ஷன் போன்றவற்றை குறைத்துக் கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். விநாயகர் வழிபாடும் முருக வழிபாடும் நற்பலன்களை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –  26, 27, 28.

சந்திராஷ்டமம் –   29-01-2020 அதிகாலை 05.29 மணி முதல் 31-01-2020 மாலை 06.09 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றியை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.  தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குரு, கேது 4-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, சனிக்கவசங்கள் படிப்பது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  27, 28, 29, 30.

சந்திராஷ்டமம் –   31-01-2020 மாலை 06.09 மணி முதல் 03-02-2020 அதிகாலை 05.40 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. உங்களுக்கு வீண் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் நெருங்கியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கும் சூழ்நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  29, 30, 31, 1.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், நீங்கள் நினைத்தது நடக்கும் யோகம் இவ்வாரத்தில் உள்ளது. கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பயணங்களால் பெரிய மனிதர்களின் நட்பும் அதன் மூலம் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளிலும் சிறப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் – –      26, 1.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடனை பெறுவதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும் என்பதால் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் தங்கள் பணிகளை மட்டும் செய்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சதுர்த்தி நாளில் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எண்ணியது நிறைவேறும்.

வெற்றி தரும் நாட்கள் –  27, 28.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன், 6-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைத்து கடன் பிரச்சினைகள் குறையும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டார தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  26, 29, 30, 31.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் குரு, கேது சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். கடன்கள் ஓரளவு குறையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். செவ்வாய் 10-ல் இருப்பதால் தொழில் ரீதியாக லாபகரமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். மகா லட்சுமி தேவியை தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  27, 28, 1.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சனி, புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்– மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் சற்று குறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் கொடுத்த கடனை பெறுவதில் சற்று தாமதம் உண்டாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேலும் தொழிலை விரிவு படுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். விநாயகர் வழிபாடும், ஆஞ்சநேயர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  26, 29, 30, 31.

Today rasi palan – 25.01.2020

Today rasi palan – 25.01.2020

இன்றைய ராசிப்பலன் –  25.01.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

25-01-2020, தை 11, சனிக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.31 வரை பின்பு வளர்பிறை துதியை. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 04.35 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

ராகு
சுக்கி திருக்கணித கிரக நிலை

25.01.2020

புதன் சந்தி சனி சூரிய
குரு கேது செவ்

இன்றைய ராசிப்பலன் –  25.01.2020

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும்.

ரிஷபம்

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தேவைகள் பூர்த்தியாகும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கடன் வாங்குவதோ கொடுப்பதோ தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

கடகம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

கன்னி

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

துலாம்

இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் தீரும்.

விருச்சிகம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

தனுசு

இன்று எதிர்பாராத வகையில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருந்தால் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும்.

மகரம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.