Today rasi palan – 01-05-2020

Today rasi palan – 01-05-2020

இன்றைய ராசிப்பலன் –  01-05-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

01-05-2020, சித்திரை 18, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 01.27 வரை பின்பு வளர்பிறை நவமி. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 01.05 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. நவகிரக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சூரிய

புதன்

சுக்கி

 

ராகு

 

திருக்கணித கிரக நிலை

01.05.2020

சந்தி
சனி செவ் குரு
கேது 

இன்றைய ராசிப்பலன் –  01.05.2020

மேஷம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்

இன்று  நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக தூர பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.

மிதுனம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்கள் உண்டாகலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். உடன்பிறந்தவர்கள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள்.

சிம்மம்

இன்று வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை உருவாகும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

கன்னி

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் எளிதில் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உடல் நலம் சீராக இருக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.

விருச்சிகம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தூர பயணங்களில் கவனம் தேவை.

மகரம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வரும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

 

Today rasi palan –  30-04-2020

Today rasi palan –  30-04-2020

இன்றைய ராசிப்பலன் –  30-04-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-04-2020, சித்திரை 17, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 02.39 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூசம் நட்சத்திரம் இரவு 01.52 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சூரிய

புதன்

சுக்கி

 

ராகு

 

திருக்கணித கிரக நிலை

30.04.2020

சந்தி
சனி செவ் குரு
கேது 

இன்றைய ராசிப்பலன் –  30.04.2020

மேஷம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மன சங்டங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் நிலவும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். தெய்வ வழிபாடு நல்லது.

ரிஷபம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ரிதியாக தூர பயணங்களால் நல்லது நடக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் குறையும்.

கடகம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர் பார்த்திருந்த பண உதவி கிடைக்கும். உடல்நிலை சீராகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

கன்னி

இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். ஆரோக்கியத்துக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.

துலாம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும்.

விருச்சிகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். சுப முயற்சிகளை தள்ளி வைக்கவும். எதிலும் நிதானம் தேவை.

மகரம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.  உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக நடைபெறும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

Today rasi palan – 29-04-2020

Today rasi palan – 29-04-2020

இன்றைய ராசிப்பலன் –  29-04-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-04-2020, சித்திரை 16, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 03.12 வரை பின்பு வளர்பிறை சப்தமி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 02.01 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சூரிய

புதன்

சுக்கி

 

ராகு

சந்தி

திருக்கணித கிரக நிலை

29.04.2020

சனி செவ் குரு
கேது 

இன்றைய ராசிப்பலன் – 29.04.2020

மேஷம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால்  அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு உத்தியோக ரீதியாக தூர பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான தூர பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல்& வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். தூர பயணம் செல்ல நேரிடும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் சற்று குழப்பதுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.

தனுசு

இன்று வியாபாரத்தில் உங்களின் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.

மகரம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

 

மே மாத ராசிப்பலன் 2020

மே மாத ராசிப்பலன் 2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

சூரிய

புதன்

சுக்கி

 

ராகு

 

திருக்கணித கிரக நிலை

 

சனி செவ் குரு
கேது 

கிரக மாற்றம்

04-05-2020 கும்பத்தில் செவ்வாய் இரவு 08.40 மணிக்கு

09–05-2020 ரிஷபத்தில் புதன் காலை 09.46 மணிக்கு

11-05-2020 சனி வக்ர ஆரம்பம் காலை 08.33 மணிக்கு

14-05-2020 சுக்கிரன் வக்ர ஆரம்பம் பகல் 12.33 மணிக்கு

14-05-2020 ரிஷபத்தில் சூரியன் மாலை 05.18 மணிக்கு

14-05-2020 குரு வக்ர ஆரம்பம் இரவு 07.44 மணிக்கு

24–05-2020 மிதுனத்தில் புதன் இரவு 11.54 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன் 3-ல் ராகு சஞ்சரிப்பதும் உங்கள் ராசியாதிபதி செவ்வாய் வரும் 4-ஆம் தேதி முதல் 11-ல் சஞ்சரிக்க உள்ளதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். வரும் 14-ஆம் தேதி முதல் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உங்களுக்கு இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் அனுகூலப்பலன் ஏற்படும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். கல்வி தரமும் உயர்வடையும்.

பரிகாரம் – — சனி பகவான் வழிபாடு செய்வதாலும், சிவ வழிபாடு செய்வதாலும் பிரச்சினைகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்     — 08-05-2020 அதிகாலை 03.13 மணி முதல் 10-05-2020 அதிகாலை 05.03 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன், பாக்கிய ஸ்தானத்தில் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் என்றாலும் சூரியன் 12-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளும் ஓரளவுக்கு கிடைத்து குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் நலத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுத்தால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். வியாபார விருத்திக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தேவையற்ற இடையூறு ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பெயர் பெற முடியும்.

பரிகாரம் – — செவ்வாய் கிழமைகளில் முருக பெருமானையும் துர்கையம்மனையும் வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்     — 10-05-2020 அதிகாலை 05.03 மணி முதல் 12-05-2020 காலை 10.16 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 8-ல் குரு சனி சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் ராகு 7-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் மாத முற்பாதியில் -சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் அனுகூலங்கள் ஏற்பட்டு இருக்கும் பிரச்சினைகள் மாத முற்பாதியில் குறையும். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும்.

பரிகாரம் – — சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானை வழிபடுவதாலும் சனிக்கவசங்கள் படிப்பதாலும் ஏற்படும் கஷ்டங்கள் ஓரளவு குறையும். எள் கலந்த அன்னத்தை காகத்திற்கு படைப்பது நல்லது.

சந்திராஷ்டமம்     —  12-05-2020 காலை 10.16 மணி முதல் 14-05-2020 இரவு 07.20 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதும், 11-ல் சுக்கிரன், இம்மாதத்தில் 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். உங்கள் பலமும் வலிமையும் கூடக்கூடிய காலமாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். 7-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்வர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்க கூடிய வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவார்கள்.

பரிகாரம் – — முருக வழிபாடு, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதும் மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்     — 14-05-2020 இரவு 07.20 மணி முதல் 17-05-2020 காலை 07.15 மணி வரை

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் சனி, லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். 5-ல் கேது வரும் 5-ம் தேதி முதல் 7-ல் செவ்வாய் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும், கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமான பலன் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்ணை பெற்று கல்வியில் உயர்வடைவார்கள்.

பரிகாரம் – — வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலை சாற்றி, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்     — 17-05-2020 காலை 07.15 மணி முதல் 19-05-2020 இரவு 07.54 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், வரும் 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க உள்ளதாலும் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாத கோளான சூரியன் வரும் 14-ஆம் தேதி வரை 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்– வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம் – — ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. மேலும் சிவ வழிபாடும் மேற்கொள்ளலாம்.

சந்திராஷ்டமம்     — 19-05-2020 இரவு 07.54 மணி முதல் 22-05-2020 காலை 07.35 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சனி, குரு 7-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் முன்னேற்றங்களை அடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறு ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் ஏற்படும். எதிர்பார்த்த அனுகூலங்களை அடைய கூடுதல் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் – — விநாயகரையும் சிவ பெருமானையும் வணங்கி வழிபட்டால் வாழ்வில் மேன்மையான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம்     — 22-05-2020 காலை 07.35 மணி முதல் 24-05-2020 மாலை 05.34 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும், நிம்மதியும் சிறப்பாகவே இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். நவீன பொருட்கள் சேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சிக்கல்கள் குறைந்து நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த மாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும்.

பரிகாரம் – — தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால்  குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். மேலும் முடிந்த உதவிகளை ஏழைகளுக்கு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்     — 24-05-2020 மாலை 05.34 மணி முதல் 27-05-2020 அதிகாலை 01.25 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசியாதிபதி குரு 2-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் வரும் 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க உள்ளதும் சாதகமாக அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் எவ்வளவு சிக்கல் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் நற்பலனை அடைவீர்கள். வெளியூர் வெளிநாட்டு மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்களின் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.

பரிகாரம் – — சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வதாலும் சனிப்ரீதி ஆஞ்நேயரை வழிபாடு செய்வதாலும், துர்க்கை வழிபாட்டை மேற்கொள்வதாலும் துன்பங்கள் துயரங்கள் குறையும்.

சந்திராஷ்டமம்     — 29-04-2020 இரவு 07.57 மணி முதல் 02-05-2020 அதிகாலை 01.05 மணி வரை மற்றும் 27-05-2020 அதிகாலை 01.25 மணி முதல் 29-05-2020 காலை 06.59 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ஜென்ம ராசியில் சனி, குரு, வரும் 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 2-ல் சஞ்சரிக்க உள்ளதால் இருப்பதை அனுபவிக்க தடை தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்றே ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. பூமி மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் உதவியால் நெருக்கடிகள் சற்று குறையும். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் – — சிவ வழிபாடு செய்வதும் பிரதோஷ காலங்களில் விரதம் மேற்கொண்டு நந்தி வழிபாடு செய்வதும் மேலும் அபிஷேக பொருட்களை கோவில்களில் வாங்கி கொடுப்பதும், முருக வழிபாடு மேற்கொள்வதும் மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்     — 02-05-2020 அதிகாலை 01.05 மணி முதல் 04-05-2020 அதிகாலை 03.08 மணி வரை மற்றும் 29-05-2020 காலை 06.59 மணி முதல் 31-05-2020 காலை 10.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பென்பதால் உங்களுக்கு இருந்து வந்த தடைகள் எல்லாம் விலகி ஏற்றங்களை அடைவீர்கள். சிறப்பான பண வரவுகளால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். 5-ல் ராகு 12-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றங்கள் ஏற்படும். போட்டிகள் பல அதிகரித்தாலும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகி நற்பலன்களை பெறுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.

பரிகாரம் – — விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி தொடர்ந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் ஏற்படும் தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். முருக வழிபாடு செய்வதும் உத்தமம்.

சந்திராஷ்டமம்     — 04-05-2020 அதிகாலை 03.08 மணி முதல் 06-05-2020 அதிகாலை 03.15 மணி வரை மற்றும்  31-05-2020 காலை 10.20 மணி முதல் 02-06-2020 பகல் 12.00 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, குரு சஞ்சரிப்பதும், மாத கோளான சூரியன் மாத பிற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி உதவி செய்வார்கள். தாராள தனவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு 10-ல் கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருக்கும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் பல இருந்தாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் சிறப்பான ஒத்துழைப்புகளால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

பரிகாரம் – — புதன் கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணு பகவான் வழிபாடு செய்வதும், அம்மன் வழிபாடு செய்வதும் மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்     — 06-05-2020 அதிகாலை 03.15 மணி முதல் 08-05-2020 அதிகாலை 03.13 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

04.05.2020 சித்திரை 21 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

06.05.2020 சித்திரை 23 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

10.05.2020 சித்திரை 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

13.05.2020 சித்திரை 30 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

18.05.2020 வைகாசி 05 ஆம் தேதி திங்கட்கிழமை ஏகாதசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

24.05.2020 வைகாசி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துதியை திதி மிருகசிரீஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

27.05.2020 வைகாசி 14 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

 

Today rasi palan – 28-04-2020

Today rasi palan – 28-04-2020

இன்றைய ராசிப்பலன் –  28-04-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

28-04-2020, சித்திரை 15, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி பகல் 03.08 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 01.32 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 01.32 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி. கரி நாள். சுபமுயற்சிகளை  தவிர்க்கவும்

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சூரிய

புதன்

சுக்கி

 

ராகு

சந்தி

திருக்கணித கிரக நிலை

28.04.2020

சனி செவ் குரு
கேது 

இன்றைய ராசிப்பலன் –  28.04.2020

மேஷம்

இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக உள்ள தடைகள் விலகி நல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாள். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல்-& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். கடன்கள் குறையும்.

கன்னி

இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும்.

துலாம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதயான தூர பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.

தனுசு

இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் மனஅமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் வழியில் சுபசெய்திகள் வரும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

மீனம்

இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் ரீதியாக உள்ள நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். எதிலும் கவனம் தேவை.

 

Today rasi palan –  27-04-2020

Today rasi palan –  27-04-2020

இன்றைய ராசிப்பலன் – 27-04-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

27-04-2020, சித்திரை 14, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 02.30 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 12.29 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சூரிய

புதன்

சுக்கி

சந்தி

ராகு
திருக்கணித கிரக நிலை

27.04.2020

சனி செவ் குரு
கேது 

இன்றைய ராசிப்பலன் –  27.04.2020

மேஷம்

இன்று ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். கடன்கள் ஓரளவு குறையும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்

இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

துலாம்

இன்று  உங்கள் ராசிக்கு பகல் 11.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கொடுக்கல்& வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம்

இன்று தூர பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.46 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.  முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது.

தனுசு

இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோக ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து மன அமைதி ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அரசுத்துறை ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தூர பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

மீனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பு மன நிம்மதியை தரும்.

Today rasi palan – 26-04-2020

Today rasi palan – 26-04-2020

இன்றைய ராசிப்பலன் – 26-04-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

26-04-2020, சித்திரை 13, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பகல் 01.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. ரோகிணி நட்சத்திரம் இரவு 10.56 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. அட்சய திருதியை. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

சூரிய

புதன்

சுக்கி

சந்தி

ராகு
திருக்கணித கிரக நிலை

26.04.2020

சனி செவ் குரு
கேது 

இன்றைய ராசிப்பலன் –  26.04.2020

மேஷம்

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புகள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

மிதுனம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்க நல்ல நாளாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.

சிம்மம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்ககூடும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தல் இருந்து உதவி கிட்டும். மனதில் நிம்மதி குறையும்.

துலாம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் இருப்பீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

தனுசு

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படவேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன்& மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும்.

 

Today rasi palan – 25-04-2020

Today rasi palan – 25-04-2020

இன்றைய ராசிப்பலன் –  25-04-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

25-04-2020, சித்திரை 12, சனிக்கிழமை, துதியை திதி பகல் 11.52 வரை பின்பு வளர்பிறை திரிதியை. கிருத்திகை நட்சத்திரம் இரவு 08.57 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் இரவு 08.57 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சூரிய

புதன்

சுக்கி

சந்தி

ராகு
திருக்கணித கிரக நிலை

25.04.2020

சனி செவ் குரு
கேது 

இன்றைய ராசிப்பலன் –  25.04.2020

மேஷம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். செலவுகள் குறையும்.

கடகம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். இது வரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

துலாம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.  வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல்& வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனை தரும். ஒரு சிலர் பொன் பொருள் வாங்கி மகிழ்வர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

தனுசு

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனகசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினை குறையும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும்.

 

வார ராசிப்பலன் – ஏப்ரல் 26 முதல் மே 2 வரை  2020

வார ராசிப்பலன் – ஏப்ரல் 26 முதல் மே 2 வரை  2020

சித்திரை 13 முதல் 19 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

சூரிய

புதன்

சுக்கி

சந்தி

ராகு
திருக்கணித கிரக நிலை

 

சனி செவ் குரு
கேது 

கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

ரிஷபம்

25-04-2020 அதிகாலை 01.15 மணி முதல் 27-04-2020 பகல் 11.45 மணி வரை.

மிதுனம்

27-04-2020 பகல் 11.45 மணி முதல் 29-04-2020 இரவு 07.57 மணி வரை.

கடகம்

29-04-2020 இரவு 07.57 மணி முதல் 02-05-2020 அதிகாலை 01.05 மணி வரை.

சிம்மம்

02-05-2020 அதிகாலை 01.05 மணி முதல் 04-05-2020 அதிகாலை 03.08 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

26.04.2020 சித்திரை 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

27.04.2020 சித்திரை 14 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 06.50 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

29.04.2020 சித்திரை 16 ஆம் தேதி புதன்கிழமை சஷ்டி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 06.45 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

30.04.2020 சித்திரை 17 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் உங்களுக்குள்ள சிக்கல்கள் விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலப் பலனை அடைவீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்துக் கொண்டால் ஒற்றுமை நிலவும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் வியாபார ரீதியாக உள்ள தேக்கங்கள் சற்று விலகும். பெரிய முதலீடு கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் ஆதாயங்களை அடைய இடையூறுகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். புதிய வாயப்பை எதிர்ப்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்களது எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் ரீதியாக சாதகமான பலனை அடைய முடியும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் உற்றார் உறவினர்களின் ஆதரவால் நல்லது நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது, முருக வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  28, 29.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

இனிமையான சுபாவம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 9–ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகள் விலகி மன நிம்மதி ஏற்படும். சூரியன் 12-ல், ராகு 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ளவது நல்லது. தேவையற்ற வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். திருமண சுபகாரிய முயற்சிகளில் உள்ள இடையூறுகள் விலகி நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொறுமையை கடைபிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் உள்ள தேக்க நிலையால் மன நிம்மதி குறைவு இருந்தாலும் ஆறுதல் தரும் நல்ல செய்தி மற்றும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் தாமதம் ஆகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவால் மன நிம்மதி ஏற்படும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் கிட்டும். சிக்கனமுடன் செயல்பட்டால் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம். சிவ வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  26, 27, 30, 1.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி புதன் சூரியன் சேர்க்கை பெற்று 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து மன நிம்மதி உண்டாகும். உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனி- செவ்வாய் இனைந்து அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு அனுகூலத்தை அளிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிள்ளைகளால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு நல்ல நடக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உங்களுக்கு உடல் சோர்வு இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது-. ராகு காலங்களில் துர்கையம்மனை மனதார நினைத்து வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  28, 29, 2.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்து நடக்கும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பழைய கடன்கள் தீர்ந்து போகும். 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும் வெளி இடங்களிலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பதும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பதும் உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். முருக பெருமானை வணங்கி வழிபட்டால் குடும்பத்தில் நல்லது நடைபெறும்.

வெற்றி தரும் நாட்கள் –  26, 30, 1.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சனி- செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியும். நல்ல இடத்து நட்பு மூலம் தக்க சமயத்தில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவுடன் செயல் படுவார்கள். பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். இதுவரை தடைப்பட்ட திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நவீன பொருட்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் நிறைவேறும். கடந்த கால கடன்கள் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அனுகூலங்கள் உண்டாகும். கௌரவமான நிலை உண்டாகி மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தர கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்து வழியில் நற்பலன் கிடைக்கும். சிவ வழிபாட்டையும், விநாயகர் வழிபாட்டையும் செய்து வந்தால் வாழ்வில் மேன்மைகளை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –  26, 27, 28, 29.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதாலும் பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பண வரவுகள் நன்றாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷத்தில் கவனத்துடன் இருப்பது மூலம் எதையும் சமாளிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் உதவியுடன் தற்போது உள்ள சூழ்நிலையை எதிர் கொள்ள முடியும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளை கூட திறமையுடன் செய்து முடித்து மற்றவர்களின் மதிப்பையும் மரியாதையும் பெறுவார்கள். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடந்த கால சோதனைகள் விலகி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சிவ வழிபாடு, துர்க்கையம்மன் வழிபாடு செய்வதன் மூலம் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  28, 29, 30, 1.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சனி, செவ்வாய், சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் மன அமைதி குறைவு, வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணவரவுகள் சுமாராக தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் கடன்கள் சற்று குறையும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்படலாம். சிலருக்கு வீடு வாகனம், போன்றவற்றால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். கொடுக்க- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க கூடும். உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு மேலதிகாரிகளிடம் கருத்து வேறுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வதும், முருக வழிபாடு மேற்கொள்வதும் மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  30, 1, 2.

சந்திராஷ்டமம் –   25-04-2020 அதிகாலை 01.15 மணி முதல் 27-04-2020 பகல் 11.45 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் முன்னேற்றதை உண்டாக்கும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர்பார்த்த அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட வாயப்புகள் கிடைக்கும் யோகம் நல்ல செய்தி வரும் சூழ்நிலை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் திறன் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சிலருக்கு சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் சுமூகமான முடிவுக்கு வருவதற்கான நல்ல செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலனை காண முடியும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலனை அடையலாம். துர்க்கையம்மனை வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –  26, 2.

சந்திராஷ்டமம் –   27-04-2020 பகல் 11.45 மணி முதல் 29-04-2020 இரவு 07.57 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய தனுசு ராசி நேயர்களே, ஜென்ம  ராசிக்கு 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புதன் 5-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் ராசியதிபதி குரு தன ஸ்தானமான 2-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதாலும் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தற்போது உள்ள பொருளாதார ரீதியான நெருக்கடிகள் விலகி ஒரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். நீண்ட நாட்களாக தடைப்பட்ட சுபகாரியங்கள் கூட கைகூட கூடிய சூழ்நிலை உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்றாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்

வெற்றி தரும் நாட்கள் –  26, 27, 28, 29.

சந்திராஷ்டமம் –   29-04-2020 இரவு 07.57 மணி முதல் 02-05-2020 அதிகாலை 01.05 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன்  5-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை நாடி வரும். பணம் வரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். சனி- செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை குறைத்து கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உதவியால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரிய முயற்சியில் இருந்த தடை விலகி நல் செய்தி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான பலன்கள் இருக்கும் என்றாலும் மேலதிகாரிகளிடம் பேசும் போது பொறுமை தேவை. வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த  படி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். சிவ வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொண்டால் துன்பங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்

வெற்றி தரும் நாட்கள் –  28, 28, 30, 1.

சந்திராஷ்டமம் –   02-05-2020 அதிகாலை 01.05 மணி முதல் 04-05-2020 அதிகாலை 03.08 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் திறன் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் மாத கோளான சூரியன் சஞ்சரிப்பதும், 4-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக வலமான பலன்களை தரும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் சாதகமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். உங்களின் புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கூட்டாளிகளின் ஆதரவால் இருக்கும் நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். குரு, சனி, செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். நெருங்கியவர்களின் உதவியால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் இருந்தாலும் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். முருக வழிபாடு செய்வது, துர்க்கையம்மனை மனதார நினைத்து கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  30, 1, 2.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு அதிசாரமாக 11-ல் சனி- செவ்வாய் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொறுமையுடன் செயல்பட்டால் நற்பலனை அடையலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதால் மன நிம்மதி இருக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் தக்க நேரத்தில் திருப்பி வந்து உங்களது நெருக்கடிகளை குறைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்துடன் இனையும் அமைப்பு உண்டாகும். சகோதர சகோதரிகள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிவ வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொண்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  26, 27, 2.

 

Today rasi palan – 24-04-2020

Today rasi palan – 24-04-2020

இன்றைய ராசிப்பலன் –  24-04-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

24-04-2020, சித்திரை 11, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 10.01 வரை பின்பு வளர்பிறை துதியை. பரணி நட்சத்திரம் மாலை 06.39 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

புதன்

 

சூரிய

சந்தி

சுக்கி ராகு
திருக்கணித கிரக நிலை

24.04.2020

சனி செவ் குரு
கேது 

இன்றைய ராசிப்பலன் –  24.04.2020

மேஷம்

இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அரசு துறை ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

இன்று தொழில் வளர்ச்சிகாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.

மிதுனம்

இன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

கடகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் நல்லது நடக்கும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். உத்தியோகத்தில் எளிதில் முடியும் காரியங்கள் கூட காலதாமதமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது கடன் பெறுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்

இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இருக்கும் நெருக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.