Today rasi palan – 07.08.2020

Today rasi palan – 07.08.2020

இன்றைய ராசிப்பலன் –  07.08.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

07-08-2020, ஆடி 23, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.06 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 01.33 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மஹா சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

செவ் சுக்கி ராகு
சந்தி திருக்கணித கிரக நிலை

07.08.2020

சூரிய புதன்
சனி (வ)

 

குரு (வ)

கேது

இன்றைய ராசிப்பலன் –  07.08.2020

மேஷம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் தலையீட்டால் திருமண முயற்சிகளில் இடையூறு ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும்.

கடகம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் போது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.

கன்னி

இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் செய்ய நேரிடும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்

இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இந்த நாள் இருக்கும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிட்டும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவு செய்ய வேண்டி வரும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். வேலையில் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் அதிக கவனம் தேவை. உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வெளியிலிருந்து கிடைக்க வேண்டிய தொகை திரும்ப கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்கள் நட்புடன் செயல்படுவார்கள். புதிய வாய்ப்புகள் கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியை தரும்.

மீனம்

இன்று நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் மற்றவருடைய நன்மதிப்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு தேடி வரும்.

வார ராசிப்பலன் — ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை 2020

வார ராசிப்பலன் — ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை 2020 

ஆடி 25 முதல் 31 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ் சந்தி சுக்கி ராகு
திருக்கணித கிரக நிலை

09.08.2020

சூரிய புதன்
 சனி (வ)
குரு (வ) கேது

கிரக மாற்றம் இல்லை

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மீனம்             07-08-2020 காலை 06.58 மணி முதல் 09-08-2020 இரவு 07.05 மணி வரை.

மேஷம்          09-08-2020 இரவு 07.05 மணி முதல் 12-08-2020 காலை 07.35 மணி வரை.

ரிஷபம்          12-08-2020 காலை 07.35 மணி முதல் 14-08-2020 மாலை 06.05 மணி வரை.

மிதுனம்         14-08-2020 மாலை 06.05 மணி முதல் 17-08-2020 அதிகாலை 00.50 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

09.08.2020 ஆடி 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

10.08.2020 ஆடி 26 ஆம் தேதி திங்கட்கிழமை சப்தமி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

14.08.2020 ஆடி 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமி திதி மிருகசிரீஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ராகு 3-ல், குரு 9-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எந்த சிக்கலையும் எளிதில் எதிர்கொள்ளும் ஆற்றலை பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்– மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்– வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப் பலன் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் சிறப்பு. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –     10, 11, 15.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு அமையும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். கணவன்– மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். புத்திர வழியில் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதமாக கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபட்டு வந்தால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –     9, 12, 13, 14.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியில் ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குரு பகவான் 7-ல் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பண வரவானது சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். குடும்பத்தில் உள்ளவர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்– வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். ராகு காலத்தில் துர்கையம்மனை வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –     9, 10, 11, 15.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 7-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரமாகும். கணவன்– மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்ககூடும் என்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவு செய்ய நேரிடும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்– வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக்கூடும் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் கேது 6–ல் இருப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணவிஷயத்தில் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையிடாமல் தம் பணிகளை மட்டும் செய்வது உத்தமம். சிவ பெருமானையும் சனி பகவானையும் வழிபடுவது, சனிக்கவசங்கள் படிப்பது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –     10, 11, 12, 13, 14.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, 11-ல் சுக்கிரன், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று சாதகமான பலனை அடைவீர்கள். கணவன்– மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். ஆடிக்கிருத்திகை நாளில் விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –     12, 13, 14, 15.

சந்திராஷ்டமம் – 07-08-2020 காலை 06.58 மணி முதல் 09-08-2020 இரவு 07.05 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், ராகு, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளிதொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். தாராள தனவரவு உண்டாகி பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்—- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளை மட்டும் ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பலரை வழி நடத்திச் செல்லக் கூடிய கௌரவமான பதவிகள் தேடி வரும். ஆடிக்கிருத்திகை நாளில் முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –     9, 15.

சந்திராஷ்டமம் – 09-08-2020 இரவு 07.05 மணி முதல் 12-08-2020 காலை 07.35 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் செவ்வாய், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வலமான பலன்களை பெறுவீர்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாட்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்– வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன்– மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –     9, 10, 11.

சந்திராஷ்டமம் –12-08-2020 காலை 07.35 மணி முதல் 14-08-2020 மாலை 06.05 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு குரு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதும் 3-ல் சனி, 9-ல் புதன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம், தொழில் ரீதியாக மேன்மை ஏற்படும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லது பல நடக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்– மனைவி அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். வீடு மற்றும் வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளாலும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பாலும் அபிவிருத்தி பெருகி முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். ஆடிக்கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் உள்ளம் மகிழும் இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்.

வெற்றி தரும் நாட்கள் –     10, 11, 12, 13, 14.

சந்திராஷ்டமம் – 14-08-2020 மாலை 06.05 மணி முதல் 17-08-2020 அதிகாலை 00.50 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடி, தேவையற்ற பிரச்சினை ஏற்படும் என்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்– வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டால் தடைப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும்.

வெற்றி தரும் நாட்கள் –     12, 13, 14, 15.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.  

எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் ராகு, 7-ல் புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் அனுகூலங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை அடைவீர்கள். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். கணவன்– மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்– வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிவ வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –     9, 15.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பு என்பதால் சகல விதத்திலும் நற்பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். செவ்வாய் 2-ல் இருப்பதால் கணவன்– மனைவி இடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் விலகி ஏற்றங்கள் உண்டாகும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். கொடுக்கல்– வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். ஆடிகிருத்திகை நாளில் முருக வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –     10, 11.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள இடர்பாடுகள் எல்லாம் விலகி அனுகூலமான பலன்களை அடைவீர்கள். செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. செய்யும் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் உங்கள் ராசிக்கு குரு சாதகமற்று இருப்பதால் எதிலும் அகல கால் வைக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்– மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடனிருப்பவர்களையும், உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –     9, 12, 13, 14.

Today rasi palan – 06.08.2020

Today rasi palan – 06.08.2020

இன்றைய ராசிப்பலன் –  06.08.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

06-08-2020, ஆடி 22, வியாழக்கிழமை, திரிதியை திதி இரவு 12.15 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் பகல் 11.18 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் பகல் 11.18 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

செவ் சுக்கி ராகு
சந்தி திருக்கணித கிரக நிலை

06.08.2020

சூரிய புதன்
சனி (வ)

 

குரு (வ)

கேது

இன்றைய ராசிப்பலன் –  06.08.2020

மேஷம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் விஷயமாக வெளியூர் நபர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களை ரீதியாக அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பது அல்லது மற்றவர் வாங்கும் கடனுக்கு முன்ஜாமீன் தருவது போன்ற செயல்களை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத  இடமாற்றம் கிடைக்கப்பெற்று மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று முடியும் என்று நினைத்த காரியம் பாதியிலேயே தடைபடலாம். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டு என்றாலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

தனுசு

இன்று உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திடீர் என்று வரும் நல்ல செய்தியால் திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.

மகரம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும்.  சொத்து ரீதியான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளையும் விரயங்களையும் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அமையும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும்.

Today rasi palan – 05.08.2020

Today rasi palan – 05.08.2020

இன்றைய ராசிப்பலன் –  05.08.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

05-08-2020, ஆடி 21, புதன்கிழமை, துதியை திதி இரவு 10.51 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் காலை 09.30 வரை பின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.30 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

செவ் சுக்கி ராகு
சந்தி திருக்கணித கிரக நிலை

05.08.2020

சூரிய புதன்
சனி (வ)

 

குரு (வ)

கேது

இன்றைய ராசிப்பலன் –  05.08.2020

மேஷம்

இன்று உங்களுக்கு காலையிலேயே ஆச்சிரியப்படும் படியான தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார தேவைகள் எளிதில் நிறைவேறும், வழக்கு சம்பந்தபட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வருமானம் இரட்டிப்பாகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு தனவரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். திருமண முயற்சி தாமதமாகும்.

கடகம்

இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் சற்று பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனைத் தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சிறப்பான பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்க இன்று அனுகூலமான நாளாகும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

துலாம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, அசதி இருந்தாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். வரவும் செலவும் சமமாகவே இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கடன்கள் குறையும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணிகளில் கவனம் தேவை.

தனுசு

இன்று நீங்கள் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று கூடுதலாகவே இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். எடுத்த காரியம் எளிதில் முடியும். எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் மன நிம்மதி அதிகரிக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால்  அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

Today rasi palan – 04.08.2020

Today rasi palan – 04.08.2020

இன்றைய ராசிப்பலன் –  04.08.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

04-08-2020, ஆடி 20, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி இரவு 09.55 வரை பின்பு தேய்பிறை துதியை. திருவோணம் நட்சத்திரம் காலை 08.11 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது. கரி நாள். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.          

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

செவ் சுக்கி ராகு
திருக்கணித கிரக நிலை

04.08.2020

சூரிய புதன்
சனி (வ)

சந்தி

குரு (வ)

கேது

இன்றைய ராசிப்பலன் –  04.08.2020

மேஷம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் கிட்டும். வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கடகம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம். நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கன்னி

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணவரவு சற்று சுமாராகத் தான் இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. வேலையில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு  பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்களும் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவு சிறப்பாக இருக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், செய்யும் வேலைகளில் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மீனம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுப செய்தி வந்து சேரும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் தொடர்புகள் கிடைக்கும்.

Today rasi palan – 03.08.2020

Today rasi palan – 03.08.2020

இன்றைய ராசிப்பலன் –  03.08.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

03-08-2020, ஆடி 19, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி இரவு 09.28 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திராடம் நட்சத்திரம் காலை 07.19 வரை பின்பு திருவோணம். மரணயோகம் காலை 07.19 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஆவணி அவிட்டம். பௌர்ணமி விரதம். ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

செவ் சுக்கி ராகு
திருக்கணித கிரக நிலை

03.08.2020

சூரிய புதன்
சனி (வ)

சந்தி

குரு (வ)

கேது

இன்றைய ராசிப்பலன் –  03.08.2020

மேஷம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும்.                தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து சென்றால் இருக்கும்  பிரச்சினைகள் சற்று குறையும். வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் அனுகூலப் பலன் கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.

கடகம்

இன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த செயலை செய்தாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அதில் வெற்றி அடையலாம். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் ரீதியாக இருந்த எதிர்ப்புகள் குறையும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை. நட்பும் பகையாக மாறலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

மீனம்

இன்று உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய நாளாக இந்த நாள் அமையும். மிக கடினமான காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளால் லாபகரமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

Today rasi palan – 02.08.2020

Today rasi palan – 02.08.2020

இன்றைய ராசிப்பலன் –  02.08.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

02-08-2020, ஆடி 18, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 09.29 வரை பின்பு பௌர்ணமி. பூராடம் நட்சத்திரம் காலை 06.52 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் காலை 06.52 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஆடி 18-ம் பெருக்கு. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

செவ் சுக்கி ராகு
திருக்கணித கிரக நிலை

02.08.2020

சூரிய புதன்
சனி (வ) 
குரு (வ)

சந்தி கேது

இன்றைய ராசிப்பலன் – 02.08.2020

மேஷம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். சிலருக்கு ஆடம்பர பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.56 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்பட்டால் தொழிலில் உள்ள சிக்கல்கள் ஓரளவு குறையும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.56 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம்

உங்களுக்கு இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று நீங்கள் மனமகிழ்ச்சி அடைவீர்கள், ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைப்பதற்கான  வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் சற்று பலவீனமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிறமொழியை சேர்ந்தவர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு நிம்மதியின்மையும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சிறு தடங்கலுக்கு பின்  கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.

துலாம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

இன்று உடல் நிலையில் சற்று மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். சுப செலவுகள் உண்டாகும்.

மீனம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். தேவைகள்  பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.