Today rasi palan – 01-07-2021

Today rasi palan – 01-07-2021

இன்றைய ராசிப்பலன் –  01-07-2021 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

01-07-2021, ஆனி 17, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 02.02 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 03.49 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. பைரவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சந்தி புதன்  ராகு சூரிய
 

குரு (வ)

திருக்கணித கிரக நிலை

01.07.2021

செவ் சுக்கி
சனி (வ)

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் – 01.07.2021

மேஷம்

இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கடகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களால் சாதகமான பலன்கள் கிட்டும்.

சிம்மம்

இன்று நீங்கள் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

கன்னி

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

துலாம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மை அடையலாம்.

தனுசு

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

கும்பம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காணலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

Today rasi palan – 30-06-2021

Today rasi palan – 30-06-2021

இன்றைய ராசிப்பலன் –  30-06-2021 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

30-06-2021, ஆனி 16, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 01.19 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 02.03 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பின்இரவு 02.03 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

புதன்  ராகு சூரிய
சந்தி

குரு (வ)

திருக்கணித கிரக நிலை

30.06.2021

செவ் சுக்கி
சனி (வ)

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் –  30.06.2021

மேஷம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்

இன்று உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மனஅமைதி குறையும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். சகோதர சகோதரிகள் வழியில் அனுகூலப் பலன் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

கன்னி

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிட்டும்.

துலாம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். தொழிலில் பெரிய முதலீடு கொண்டு தொடங்கும் காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தினரால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மகரம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

இன்று பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

Today rasi palan – 29-06-2021

Today rasi palan – 29-06-2021

இன்றைய ராசிப்பலன் –  29-06-2021 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

29-06-2021, ஆனி 15, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.23 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. சதயம் நட்சத்திரம் பின்இரவு 01.02 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

புதன்  ராகு சூரிய
சந்தி

குரு (வ)

திருக்கணித கிரக நிலை

29.06.2021

செவ் சுக்கி
சனி (வ)

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் –  29.06.2021

மேஷம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

ரிஷபம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். எதிலும் யோசித்து செயல்பட்டால் நற்பலன் கிட்டும்.

கடகம்

இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

துலாம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

தனுசு

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.

மகரம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

கும்பம்

இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். மன நிம்மதி குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

Today rasi palan – 28-06-2021

Today rasi palan – 28-06-2021

இன்றைய ராசிப்பலன் –  28-06-2021 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

28-06-2021, ஆனி 14, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 02.16 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 12.48 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

புதன்  ராகு சூரிய
குரு (வ) திருக்கணித கிரக நிலை

28.06.2021

செவ் சுக்கி
சனி (வ)

சந்தி

கேது

 

இன்றைய ராசிப்பலன் –  28.06.2021

மேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் ராசிக்கு பகல் 01.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

கடகம்

இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடனும் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் கிட்டும்.

கன்னி

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

துலாம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று நீங்கள் சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

தனுசு

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று நீங்கள் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

கும்பம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். வேலையில் பணிச்சுமை குறையும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.

Today rasi palan – 27-06-2021

Today rasi palan – 27-06-2021

இன்றைய ராசிப்பலன் –  27-06-2021 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

27-06-2021, ஆனி 13, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பகல் 03.54 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 01.21 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பின்இரவு 01.21 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

புதன்  ராகு சூரிய
குரு (வ) திருக்கணித கிரக நிலை

27.06.2021

செவ் சுக்கி
சனி (வ)

சந்தி

கேது

 

இன்றைய ராசிப்பலன் –  27.06.2021

மேஷம்

இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களின் உதவி உரிய நேரத்தில் கிடைக்கும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.

கடகம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

கன்னி

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் தனவரவு உண்டாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.

விருச்சிகம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெற்றோருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் குறையும்.

மகரம்

இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

கும்பம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

மீனம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.

Today rasi palan – 25-06-2021

Today rasi palan – 25-06-2021

இன்றைய ராசிப்பலன் –  25-06-2021 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

25-06-2021, ஆனி 11, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 08.59 வரை பின்பு தேய்பிறை துதியை. மூலம் நட்சத்திரம் காலை 06.40 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு உத்திராடம். அமிர்தயோகம் காலை 06.40 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 04.25 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

புதன்  ராகு சூரிய
குரு (வ) திருக்கணித கிரக நிலை

25.06.2021

செவ் சுக்கி
சனி (வ)
சந்தி கேது

இன்றைய ராசிப்பலன் –  25.06.2021

மேஷம்

இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைய சற்று நிதானத்துடனும் கவனத்துடனும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும்.

மிதுனம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

சிம்மம்

இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உடல் நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பண நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். சுபகாரியம் கைகூடும்.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

கும்பம்

இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைப்பெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

Today rasi palan – 26-06-2021

Today rasi palan – 26-06-2021

இன்றைய ராசிப்பலன் –  26-06-2021 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

26-06-2021, ஆனி 12, சனிக்கிழமை, துதியை திதி மாலை 06.11 வரை பின்பு தேய்பிறை திரிதியை. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.36 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

புதன்  ராகு சூரிய
குரு (வ) திருக்கணித கிரக நிலை

26.06.2021

செவ் சுக்கி
சனி (வ)
சந்தி கேது

இன்றைய ராசிப்பலன் –  26.06.2021

மேஷம்

இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறையும்.

ரிஷபம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு காலை 09.55 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

மிதுனம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு காலை 09.55 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம்

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

சிம்மம்

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

கன்னி

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களோடு சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. புதிய நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.

தனுசு

இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி கடன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்

இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் கைகூடும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.

Today rasi palan – 25-06-2021

Today rasi palan – 25-06-2021

இன்றைய ராசிப்பலன் –  25-06-2021 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

25-06-2021, ஆனி 11, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 08.59 வரை பின்பு தேய்பிறை துதியை. மூலம் நட்சத்திரம் காலை 06.40 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு உத்திராடம். அமிர்தயோகம் காலை 06.40 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 04.25 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

புதன்  ராகு சூரிய
குரு (வ) திருக்கணித கிரக நிலை

25.06.2021

செவ் சுக்கி
சனி (வ)
சந்தி கேது

இன்றைய ராசிப்பலன் –  25.06.2021

மேஷம்

இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைய சற்று நிதானத்துடனும் கவனத்துடனும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும்.

மிதுனம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

சிம்மம்

இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உடல் நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பண நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். சுபகாரியம் கைகூடும்.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

கும்பம்

இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைப்பெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

Today rasi palan – 24-06-2021

Today rasi palan – 24-06-2021

இன்றைய ராசிப்பலன் –  24-06-2021 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

24-06-2021, ஆனி 10, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 12.09 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கேட்டை நட்சத்திரம் காலை 09.10 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.10 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

புதன்  ராகு சூரிய
குரு (வ) திருக்கணித கிரக நிலை

24.06.2021

செவ் சுக்கி
சனி (வ)
கேது சந்தி

இன்றைய ராசிப்பலன் –  24.06.2021

மேஷம்

இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 09.10 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.10 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.

கடகம்

இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

துலாம்

இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

தனுசு

இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது மூலம் லாபம் அடையலாம். வேலையில் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

Today rasi palan – 23-06-2021

Today rasi palan – 23-06-2021

இன்றைய ராசிப்பலன் –  23-06-2021 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

23-06-2021, ஆனி 09, புதன்கிழமை, வளர்பிறை திரியோதசி திதி காலை 07.00 வரை பின்பு சதுர்த்தசி பின்இரவு 03.33 வரை பின்பு பௌர்ணமி. அனுஷம் நட்சத்திரம் பகல் 11.48 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

புதன்  ராகு சூரிய
குரு (வ) திருக்கணித கிரக நிலை

23.06.2021

செவ் சுக்கி
சனி (வ)
கேது சந்தி

இன்றைய ராசிப்பலன் – 23.06.2021

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கன்னி

இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். வண்டி, வாகனங்கள் மூலம் வீண்செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

விருச்சிகம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான செய்தி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் புதிய நட்பு உண்டாகும். எதிர்பார்த்து இருந்த உதவி கிடைக்கும்.

தனுசு

இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினரால் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். கடன் பிரச்சினைகள் குறையும்.

மகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கும்பம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களால் அனுகூலங்கள் கிட்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சினைகள் தோன்றும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.