பூர்வ புண்ணிய ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் 

பூர்வ புண்ணிய ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் 

வாழ்வில் சோகமும் சந்தோஷமும் நிலையாய் இருப்பதில்லை. சமய சந்தர்ப்பங்களில் தடுமாறி விழ நேர்ந்தாலும், நம்மை தூக்கி நிறுத்த தோள் கொடுக்க சொந்த பந்தங்கள் இருப்பது அவசியம். நல்ல தாய் தந்தையர் அமைவது என்பது கூட குழந்தைகள் செய்த வரமாக இருக்கும். வாழுகின்ற மக்களுக்கு முன்னாள் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை தான் பாடம். நம் பிள்ளைகளுக்கு சொத்து, சுகங்கள் சேர்த்து வைப்பது மட்டுமின்றி நாம் செய்யும் புண்ணியங்களும் தான தர்மங்களும் நம் சந்ததியினரை காப்பதாக இருக்க வேண்டும். 

ஜென்ம லக்னத்திற்கு பஞ்சம் ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 5ஆம் வீடு மிகவும் சக்தி வாய்ந்த வீடாகும். 5ஆம் வீடானது புத்திரன், புத்திரி, பூர்வீகம், உயர்கல்வி போன்றவற்றை பற்றி அறிய உதவும். 5ஆம் வீடு பலம் பெற்றிருந்தால் நல்ல புத்திரர்களை பெறும் யோகம், பூர்வீக வழியில் கிடைக்க வேண்டிய லாபங்களை தடையின்றி அடையும் வாய்ப்பு உண்டாகும். 5ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 5ஆம் வீட்டில் குரு, சுக்கிரன், சந்திரன், சூரியன் போன்ற  கிரகங்கள் அமையப் பெற்றருந்தாலும், 5ஆம் வீட்டை சுபர் பார்வை செய்து 5ல் பாவிகள் இல்லாமல் இருந்தாலும் முன்னோர்கள் சேர்ந்து வைத்த சொத்து ஜாதகருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி ஜாதகரின் தலை முறைக்கு பின்பும் அழியாமல் இருக்கும்.

 ஒருவரது ஜாதகம் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்தாலும் ஒருவரது பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்க பட்டிருந்தால் புத்திர தோஷம், களத்திர தோஷம், போன்றவை ஏற்பட்டு அவரது வாழ்க்கை சங்கடங்கள் நிறைந்ததாக இருக்கும். முன்னோர்கள் நாகங்களை துன்புறுத்தி இருந்தாலோ, கொன்று இருந்தாலோ, நாகதோஷம் உண்டாகி திருமணத் தடை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, ஏற்படுகிறது. இதற்கு பரிகாரமாக ராகு கேதுவுக்கு பரிகாரங்கள் செய்கின்ற போது கெடுதிகள் சற்று குறைந்து நற்பலன்கள் ஏற்படுகின்றது. மற்ற பெண்களின் வாழ்க்கையில் ஏதாவது கெடுதல்களை செய்து இருந்தாலும் அது களத்திர தோஷமாக மாறி திருமணவாழ்க்கை அமையதடை, அப்படி அமைந்தாலும் குடும்ப வாழ்வில் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகிறது.

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் சனி, ராகு கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் 5ஆம் அதிபதி நீசம் பெற்றாலும், வக்ரம் பெற்றாலும், பகை பெற்றிருந்தாலும் 5ஆம் அதிபதி சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் கால புருஷப்படி 5ம் வீடான சிம்மத்தில் சனி, ராகு அமைந்தாலும் பூர்வீகம் பாதிக்கப்பட்டு பூர்வீக வழியில் ஜாதகருக்கு அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகிறது. பூர்வீக வழியில் அதாவது உறவினர்களிடமும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. 5ஆம் வீடு புத்திர ஸ்தானமாகவும் இருப்பதால் தகுந்த காலத்தில் குழந்தை பாக்கியத்தை பெற முடியாத சூழ்நிலை உண்டாகிறது.                                                                                                            

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *