ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மீனம் 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மீனம் 

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் மற்றவர்களுக்கு உதவிகரமாக திகழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மீன ராசி நேயர்களே! தற்போது ஏற்பட உள்ள ராகு கேது பெயர்ச்சி மூலம் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை ராகு ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும், கேது ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. சனி 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பாகும். உங்கள் ராசியாதிபதி குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்வர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது-. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் ஏற்படும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். வரும் 29-10-2019 முதல் குருபகவான் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. ஆன்மீக தெய்வீக தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் காத்துக் கொள்வது நல்லது. கூட்டாளிகளும், வேலையாட்களும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலைபளு அதிகமாக இருப்பதால் உடல்நிலை சோர்வடையும். எடுக்கும் பணிகளை திறம்பட செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் கடந்த காலத்தில் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் குறையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரநிலை

பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார் உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள்.

உத்தியோகம்

பணியில் நிம்மதியற்ற நிலையிருக்கும். எதிலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கப் பெற்று ஓரளவுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலைபளு அதிகமாக இருக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

கொடுக்கல்வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாங்கிய பணத்தை திருப்பித் தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகையாக மாறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

அரசியல்

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்து கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாது இருப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் தொழிலில் சுனக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர் வரத்து சிறப்பாகவே இருக்கும். பங்காளிகளை பகைத்து கொள்ளாமல் இருப்பது தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கலைஞர்கள்

எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுகவாழ்வு சிறப்பாக அமையும். கார், பங்களா வாங்கும் விஷயங்களில் சற்று கடன்கள் ஏற்படும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருக்கவும். மணவயதை அடைந்தவர்களுக்கு தடைகளுக்குப் பின் மணமாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மாணவ மாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 4-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 10-ல் கேது உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் குரு 9-ல் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். உங்களுக்கிருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களிடையே வாக்கு வாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 4-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 10-ல் கேது பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் குரு 9-ல் சஞ்சாரம் செய்வதால் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் சாதகமான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கித்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் சற்றே விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 4-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 10-ல் கேது பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் குரு 9-ல் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்றே குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். 29-10-2019 முதல் குரு 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும் உயர்வும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள்.- சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு கேது ஜென்ம ராசிக்கு 4, 10-ல் தன் சொந்த நட்சத்திரத்திரங்களில் சஞ்சரிப்பதும் குரு, சனி 10-ல் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் விரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சர்பசாந்தி செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 4-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 10-ல் கேது மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் குரு, சனி 10-ல் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9,

கிழமை – வியாழன், ஞாயிறு

திசை – வடகிழக்கு

நிறம் – மஞ்சள், சிவப்பு

கல் – புஷ்ப ராகம்

தெய்வம் – தட்சிணாமூர்த்தி

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 4-லும் கேது 10-லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது. ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது நல்லது. முடிந்த வரை விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை  தானம் தருவது நல்லது.

உங்களுக்கு சனி பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது அனுமன் துதிகளை கூறுவது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கும்பம்

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

எந்த பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்து வைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு நிழல் கிரகமான ராகு 6லும், கேது 12லும் சஞ்சாரம் செய்கின்றனர். தற்போது ஏற்பட உள்ள ராகு கேது பெயர்ச்சியால் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 5-ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பது ஒரளவுக்கு நற்பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். குரு 10-ல் சஞ்சரித்தாலும், லாபஸ்தானமான 11-ல் உங்கள் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் நலமாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடைவதால் பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும்.

29-10-2019 முதல் குரு லாபஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது நல்ல அமைப்பு என்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. உங்களுக்குள்ள கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்டபுடைய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறுவதால் பொருளாதாரநிலை உயரும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும், உயர் அதிகாரிகளின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். எதிலும் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் சற்றே குறையும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை

பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஆகியவை உண்டாகும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

உத்தியோகம்

பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

கொடுக்கல்வாங்கல்

பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

அரசியல்

பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். தலைவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய்கள் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பத்திரிக்கையாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். படப்பிடிப்பிற்க்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக அமையும். சேமிப்புகள் பெருகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடப்பது நல்லது, புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு வாகனங்களையும் வாங்குவீர்கள். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

மாணவமாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்வீர்கள். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்வீர்கள்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 5-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 11-ல் கேது உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் சனி 11-ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிலும் லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. அன்றடாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலை பளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 5-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 11-ல் கேது பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 11-ல் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 5-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 11-ல் கேது பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், சனி 11-ல் சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். 29-10-2019 முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு கேது ஜென்ம ராசிக்கு 5, 11-ல் தன் சொந்த நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதாலும், குரு, சனி 11-ல் சஞ்சாரம் செய்வதாலும் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருப்பதால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயலாற்றுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வது சஷ்டி விரதம் மேற்கொள்வது நல்லது.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 5-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 11-ல் கேது மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், குரு, சனி 11-ல் சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலங்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேன்மையடையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். கடன்கள் யாவும் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல பல வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,7,8

கிழமை – வெள்ளி, சனி

திசை – மேற்கு

நிறம் – வெள்ளை, நீலம்

கல் – நீலக்கல்,

தெய்வம் – ஐயப்பன்

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 5-ல் சஞ்சாரம் செய்வதால் ராகுவுக்கு பரிகாரமாக  ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்கள், மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது, ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது நல்லது.

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 தனுசு

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 தனுசு

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வ பக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 8லும், கேது 2லும் சஞ்சாரம் செய்கின்றனர். தற்போது ஏற்படும் ராகு கேது பெயர்ச்சியால் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7 -ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறு முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் கை, கால் வலி சோர்வு மந்தநிலை போன்றவை உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதும் அனுகூலமற்ற அமைப்பு ஆகும். ராசியாதிபதி குருபகவான் 29-10-2019 வரை விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டிலும் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது சிறப்பு. உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் பல தடைகளுக்குப் பின்பே அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைபளு கூடுதலாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க தடைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் சுறுசுறுப்பற்ற நிலையே இருக்கும். அவ்வப்போது சிறிதளவு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்படகூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதாரநிலை

பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் அனுசரித்து நடப்பது மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச் சொற்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னே பிறர் தட்டிச் செல்வர்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தாமதமாக கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப் போகும். லாபங்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். அரசு வழியில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலில் மந்தநிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமுடன் செயல்படுவது சிறப்பு.

கொடுக்கல்வாங்கல்

பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான நிலைகள் உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாத சூழ்நிலைகள் ஏற்படும்.

அரசியல்

மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. பெயர் புகழுக்கு இழுக்கு நேராத படி பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. பத்திரிக்கை நண்பர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பிற்கு ஏற்ற லாபத்தை பெற முடியாமல் போகும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரி வர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தடை தாமதங்களுக்குப் பின் கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம்.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் அது தகுதிக்கு ஏற்றதாக இருக்காது. ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமல் இருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடமுடியும். கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் கடன்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பத்திரிக்கைகளில் வரும் கிசுகிசுக்களால் மனநிம்மதி குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் ஓரளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

மாணவ மாணவியர்

கல்வியில் மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்பதால் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச் செல்லும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 7-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், ஏழரை சனியில் ஜென்மசனி நடைபெறுவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகளும், வீண் வாக்கு வாதங்களும் உண்டாகும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். சிறப்பான லாபங்களும் கிட்டும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாய்ப்பினை பெறுவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 7-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், ராசியாதிபதி குரு 12-ல் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். முடிந்தவரை ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் – கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்கி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மூலம் நற்பலனை அடையலாம்.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 7-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் ஏழரைசனி நடைபெறுவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். 29-10-2019 முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழுவ கூடும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 7-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதும், ஏழரைசனியில் ஜென்ம சனி நடைபெறுவதும், குரு ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சுகவாழ்வில் பாதிப்பும், வீண் விரயங்களும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சோர்வு உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் தாமதப்படும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். நவகிரக வழிபாடு செய்வது நல்லது.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 7-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ஏழரைசனி நடைபெறுவதாலும் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும், பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஏற்பட கூடிய உடல்நலக் குறைவுகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சர்பசாந்தி செய்வதன் மூலம் நற்பலன் கிட்டும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9       

நிறம் – மஞ்சள், பச்சை  

கிழமை – வியாழன், திங்கள்

கல் – புஷ்ப ராகம்

திசை – வடகிழக்கு              

தெய்வம் – தட்சிணா மூர்த்தி

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சாரம் செய்வதால் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

ஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்புநிற ஆடை அணிவது நல்லது.

குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 விருச்சிகம்

விருச்சிகம்   விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய அழகும், கட்டான உடலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! இது நாள் வரை 3, 9-ல் சஞ்சரித்த கேது, ராகு தற்போது ஏற்படும் மாறுதலால் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரகங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 8-ஆம் வீட்டிலும், கேது 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதுமட்டுமின்றி குரு ஜென்ம ராசியிலும், சனி குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது, சொந்த விஷயங்களை மற்றவர்களிடம்  பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் வீண் விரயங்கள், நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். குரு பகவான் வரும் 29-10-2019 முதல் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. இதுவரை தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். சிலருக்கு சொந்தமாக வீடு, கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் ஓரளவுக்கு லாபங்கள் அமையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நினைத்தது நிறைவேற கூடிய வாய்ப்புகள் அமையும். கடன்களும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் நற்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருக்கும். பெரிய முதலிடுகளை ஈடுபடுத்தி அபிவிருத்தியை பெருக்கி கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கு ஏற்ற உயர்வுகளை பெறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்துவார்கள். முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு குரு பெயர்ச்சிக்குப் பின் (29-10-2019) நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுபகாரியம் கைகூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

உத்தியோகம்

செய்யும் பணியில் சில நிம்மதி குறைவுகளை சந்திக்க நேர்ந்தாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெறும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.  வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்வாங்கல்

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படவும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். நம்பியவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்ய துணிவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். கொடுத்த பணத்தை பல்வேறு தடைகளுக்குப் பின்பே வசூலிக்க முடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பெயர் புகழ் கௌரவம் யாவும் தேடி வரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் அரசு உதவிகள் கிடைப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. காய் கனிகளாலும், கால்நடைகளாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும்.

கலைஞர்கள்

இதுவரை பட்ட துயரங்கள் சற்றே ஒரு முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் ஓரளவுக்கு கிடைக்கப் பெறுவதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகள் சில தடைகளுக்குப் பின் கைக்கு வந்து சேரும். இழந்தவற்றை மீட்க கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும். பயணங்களை குறைப்பதால் அலைச்சல்களும் குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும்.  மங்களகரமான சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினரை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் சேரும். பூர்வீக வழியில் எதிர்பார்க்கும் லாபம் தாமதப்படும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சற்று மந்தநிலை ஏற்படும் என்பதால் கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சுமாராகவே இருக்கும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். தேவையற்ற நட்புக்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 2-ல் உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் குரு, 2-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் இடையூறுகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் கொண்டால் அவர்கள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். பண விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் தேவையற்றப் பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். முருகப் பெருமானை வழிபடுவது அம்மனை வழிபடுவது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 2-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் குரு, 2-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். முன் கோபத்தை குறைப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடுவதில் சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம். ராகு, கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 2-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ஏழரைசனி தொடருவதாலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படுத்தும் என்றாலும் 29-10-2019 முதல் குரு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேற கூடிய வாய்ப்பும் ஏற்படும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் சாதகப்பலன் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கல்வியில் உயர சற்று கடின முயற்சிகளை செய்வது உத்தமம்.  ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 2-ல் மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். தொழிலாளர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். விளையாடும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 2-ல் மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் 2-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதோடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல் ஏற்படாது. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணி புரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகளும், திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாகவே இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உடன் இருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -1,2,3,9

நிறம் –  ஆழ்சிவப்பு, மஞ்சள்

கிழமை – செவ்வாய், வியாழன்

திசை – தெற்கு

கல் – பவளம்

தெய்வம்- முருகன்

பரிகாரம்

விருச்சிக  ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

ஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கன்னி

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கன்னி

கன்னி    உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

அழகிய உடல்வாகும், நீல விழியும், சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 11லும், கேது 5லும் சஞ்சாரம் செய்தனர். வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டிலும், கேது 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறிவிட முடியாது இதனால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். சனி ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதாலும், அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றப் பலனை அடைய முடியும். குரு 29-10-2019 முதல் சுக ஸ்தானமான 4 -ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது இதனால் பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்க பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் -மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் முடிந்த வரை பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும் என்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். செய்யும் தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபமே அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைப்பது நல்லது. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பணிபுரியுமிடத்தில் பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நல்லது. வேலைபளு அதிகமாக இருக்கும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும் என்பதால் உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். தேவையற்ற மனக்குழப்பங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகளில் மனதை செலுத்துவது உத்தமம்.

குடும்பம் பொருளாதாரநிலை

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும் விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நற்பலன் கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் சுமாராக நடைபெறும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் எதிர்பார்க்கும் லாபம் ஓரளவுக்கு கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.

கொடுக்கல்வாங்கல்

பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாமல் போகும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரிடும். தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தினை அடைய முடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாவதால் அவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். மேடை பேச்சுக்களில் கவனமுடன் இருப்பது, பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும்-. என்றாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். உடன் பழகுபவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விலை பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்க சிரமம் ஏற்படும்.  காய், கனி, பூ போன்றவற்றாலும் கால் நடைகளாலும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். சில இடங்களில் நீர் வரத்து குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். புதிய பூமி மனை, வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகளில் இழுபறியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகபோக வாழ்வை அனுபவிக்க இடையூறு ஏற்படும். இசைத் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஓற்றுமை குறையாது. புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயப்பலனை அடைய முடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் நல்ல நண்பர்களை தோந்தெடுத்து பழகுவது உத்தமம். கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் இடையூறுகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 4-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. சர்ப சாந்தி செய்வது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 4-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 3-ல் குரு, 4-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம்.  திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் சில பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்-.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 4-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 3-ல் குரு, 4-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையே பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும்.  எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். 29-10-2019 முதல் குரு 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் ஒரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை இருந்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 4-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும்,  4-ல் குரு, சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சினைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிறுசிறு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். நேரத்திற்கு உணவு உண்பது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 4-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி அடையும் என்றாலும் அதற்காக கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 4,5,6,7,8

நிறம் – பச்சை, நீலம்

கிழமை – புதன், சனி

கல் – மரகத பச்சை

திசை – வடக்கு

தெய்வம்- ஸ்ரீ விஷ்ணு

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

சனி பகவான் 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.

குரு பகவான் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணியவும் அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 சிம்மம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 சிம்மம்

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

வாழ்வில் எதையாவது சாதித்து கொண்டே இருக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இது நாள் வரை 6, 12-ல் சஞ்சரித்த கேது, ராகு வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை உங்கள் ஜென்ம ராசிக்கு 11–ல் ராகுவும் 5-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். 4-ல் குரு, 5-ல் சனி சஞ்சரிப்பதால் குடும்ப வாழ்வில் எதிர்பாராத சிறுசிறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும்.

குரு 29-10-2019 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பூர்வீக சொத்து விஷயங்களில் தொடக்கத்தில் சில பிரச்சினைகளை சந்தித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் சிறப்பாக அமையும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்க சற்று தாமதநிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளில் தொய்வு ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை

கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் குருபெயர்ச்சிக்குப் பின் (29-10-2019) மணமாகாதர்களுக்கு மணமாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார் பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர பாக்கியம் அமையும்.

உத்தியோகம்

பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கை தரம் உயரும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளு குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்றபடி வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

தொழில் வியாபாரம்

செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். தொழிலாளர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி பொறாமைகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடன் உதவி கிடைக்கும். புதிய யுக்திகளை கையாளும் வாய்ப்பு அமையும்.

கொடுக்கல்வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்ற விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

மேலிடத்தில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பங்கம் ஏற்படாது. மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். மறைமுக வருவாய் பெருகும்.

விவசாயிகள்

உழைப்பு அதிகமாக இருந்தாலும் பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்கள்

கிடைத்த வாய்ப்புகளை கைநழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். சுக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலம் கிட்டும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள். மாணவ மாணவியர்

கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகளால் பல நன்மைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் நற்பலன் அமையும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 5-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் தேவையயற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமையும், நிம்மதியும் சிறப்பாகவே இருக்கும். அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற நோக்கங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 5-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் அமையும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 5-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்த வரை அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். 29-10-2019 முதல் 5-ல் குரு சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 5-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். கூட்டாளிகள் தேவையற்ற வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது நல்லது.       

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 5-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் கிட்டும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனை தரும். வெளி வட்டார தொடர்புகளும் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கல்வி தரமும் உயர்வடையும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9

நிறம் – வெள்ளை, சிவப்பு

கிழமை – ஞாயிறு, திங்கள்

கல் – மாணிக்கம்

திசை- கிழக்கு

தெய்வம் – சிவன்

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 5-ல் சஞ்சரிப்பதால் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது. சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது. சர்ப சாந்தி செய்வது நல்லது.

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம்

துலாம்   சித்திரை 3,4 –ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 –ஆம் பாதங்கள்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

அழகான முக அமைப்பும், வசீகரமான தோற்றமும் கொண்ட துலா ராசி நேயர்களே. தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும்  13-02-2019 முதல் 01-09-2020 வரை ராகு ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டிலும், கேது 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சனி பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். வரும் 29-10-2019 வரை குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாவே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட செயல்களில் திறம்பட ஈடுபடுவீர்கள். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மன ஒற்றுமைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் ஏற்படும். பிரிந்த சொந்தங்களும் தேடி வந்து நட்பு பாராட்டும். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தினை அடைய முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி பெரிய மனிதர்களின் ஆதரவுகளைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும். 29-10-2019 முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் சனி, கேது சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து முன்னேற்றமான நிலையினை அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள். நல்ல சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெறுவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். சுப காரியங்கள் தடபுடலமாக நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் யாவும் குறையும்.

உத்தியோகம்

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சிறப்பான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயமானப் பலன்களைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகள் மறையும்.

கொடுக்கல்வாங்கல்

பொருளாதார நிலை மிகவும் முன்னேற்றகரமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

அரசியல்

பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். பத்திரிக்கையாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டு. காய், கனி விளைச்சல் சிறப்பாக இருக்கும் கால் நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும். கடன் சுமைகள் குறையும்.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்கு வராமல் தடை பட்டு கொண்டு இருந்த பணத்தொகைகளும் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார் பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேமிப்பீர்கள். இசை துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். கடன்களும் குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவ மாணவியர்

நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்கள் அமையும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 3-ல் உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தொழில், வியாபாரம், செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நல்ல நட்புகள் தேடி வரும். கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 3-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கைகள் அமையும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் சென்று நல்ல மதிப்பெண்களை பெறுவதோடு ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 3-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். 29-10-2019 முதல் குரு 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்க்கும் இட மாற்றங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 3-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 3-ல் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் என்றாலும் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளிடையே இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 3-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 3-ல் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சோர்வு மந்த நிலை விலகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்      – 5,6,7,8

நிறம்    – வெள்ளை, பச்சை

கிழமை – வெள்ளி, புதன்

திசை   – தென் கிழக்கு

கல்        – வைரம்

தெய்வம் – லட்சுமி

பரிகாரம்

வரும் 29-10-2019 முதல் குரு 3-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மிதுனம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மிதுனம்

 

மிதுனம்மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

பார்வைக்கு வெகுளிப் போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் எளிதில் சாமர்த்தியமாக சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே! வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரங்களான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. குரு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டிலும், சனி சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள், அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும்.

வரும் 29-10-2019 முதல் குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். பொருளாதார நிலையும் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வீடு, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை பெற முடியும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொண்டே முன்னேற்றம் அடைய முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வந்தாலும் சற்று அலைச்சல்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் சிறுசிறு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் பணி புரியவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் நிலை சோர்வடையும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும் என்றாலும் உங்கள் பணியில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்ப சூழ்நிலை ஒரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் நிதானம் தேவை. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சுப காரியங்கள் சில தடைகளுக்குப் பின் நடைபெறும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்க்கொள்வீர்கள்.

உத்தியோகம்

பணியில் வேலைபளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் உங்களது நெருக்கடிகளை குறைக்க உதவும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் குரு மாற்றத்திற்குப் பின் எளிதில் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் குறைவாக இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.  அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்கு பின் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும்.

கொடுக்கல்வாங்கல்

பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகளாலும் சங்கடங்கள் ஏற்படும். குரு மாற்றத்திற்குப் பின் எதிலும் ஓரளவுக்கு முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

அரசியல்

மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் பெயர் புகழை காப்பாற்றி கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். மறைமுக வருவாய்கள் குறைவதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உடன் பழகுபவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது, பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாதிருப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தடை தாமதங்களுக்குப் பின் கிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கு ஏற்ற விலை குரு மாற்றத்திற்குப் பின் கிடைக்கும். பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் உண்டானாலும் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விட முடியும்.

கலைஞர்கள்

தகுந்த பாத்திரங்களுக்காக காத்து இருக்காமல் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. போட்டி, பொறாமைகள் அதிகரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும். சுகபோக வாழ்க்கையிலும் பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். குரு மாற்றத்திற்குப் பின் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வரவேண்டிய பணத் தொகைகள் கிடைத்து கடன்கள் குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், கை, கால் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் அமையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது மூலம் கடன்களை குறைக்க முடியும். உறவினர்களின் ஆதரவு சுமாராக அமையும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும் என்றாலும் சற்று முழு முயற்சியுடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் எதிலும் கவனம் தேவை. எதிர்பார்க்கும் அரசு உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்கள் உதவிகரம் நீட்டுவார்கள்.

 

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசியில் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 7-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதாலும் 6-ல் குரு, 7-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் ஏற்ற, இறக்கமான பலன்களையே அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். முடிந்த வரை பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஏற்படக் கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ராகு, கேதுவுக்கு சர்பசாந்தி செய்வது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசியில் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 7-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 6-ல் குரு, 7-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலையே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகளை சந்திக்க நேரிடலாம். உடல்நிலை சோர்வாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். கூட்டாளிகளும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல் -வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசியில் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 7-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் 29-10-2019 முதல் குரு 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். 

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு ஜென்ம ராசியில் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 7-ல் மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு 7-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிட்டும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அனைவரையும் அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையே இருக்கும். வீடு, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசியில் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 7-ல் மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் குரு 7-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும், அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.  பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகள் சற்று சாதகமற்று செயல்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தினமும் விநாயகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

 

அதிர்ஷடம் அளிப்பவை

எண் – 5,6,8,

நிறம் – பச்சை, வெள்ளை

கிழமை – புதன், வெள்ளி

கல் – மரகதம்

திசை – வடக்கு

தெய்வம் -விஷ்ணு

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 ரிஷபம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 ரிஷபம்

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

தன்னை அழகு படுத்திக் கொள்வதில் அதிக அக்கறையும், ஆடை ஆபரணங்களின் மீது ஆர்வமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில்  கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறைய வாய்ப்பு இருப்பதால் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களால் சாதகப்பலனை அடைய முடியும். சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது உத்தமம். எது எப்படி இருந்தாலும் தனகாரகன் குரு வரும் 29-10-2019 வரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடைபெறும். சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகம் சிலருக்கு உண்டாகும். எடுக்கும் பணிகளை சிறப்புடன் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பொன் பொருள் சேரும்.

29-10-2019 முதல் குரு 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குரு மாற்றத்திற்கு பிறகு பண விஷயங்களில் கவனமுடன் இருப்பது, எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சற்று சுமாராக இருக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் வேலைபளு அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும். மனைவி பிள்ளைகளுக்கு உண்டாக கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவார்கள். நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதாரநிலை

கணவன் -மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்கு பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப்பலன்களை அடைய முடியும்.

உத்தியோகம்

பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையே இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலப்பலன்கள் கிடைக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது உத்தமம்.

கொடுக்கல்வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். கொடுக்கல் -வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். குருபெயர்ச்சிக்குப் பின் கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளிக்க முடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஒரளவுக்கு ஆதாயப் பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும்.

விவசாயிகள்

விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடுபட வேண்டி வரும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பங்காளிகளை அனுசரித்து செல்லவும்.

கலைஞர்கள்

பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சுமாராக அமையும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. வரவேண்டிய நல்ல வாய்ப்புகளில் இழுபறிநிலை நீடிக்கும். சிறுசிறு கடன்களும் ஏற்படும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும்.  கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும்.

மாணவ மாணவியர்

கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 8-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு 7-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் சற்றே குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டி உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 8-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் குரு 7-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 8-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்றாலும் குரு 29-10-2019 வரை 7-ல் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது.  கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் -வாங்கலில் சுமாரான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். முருகபெருமானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் தன் சொந்த நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதும் குரு, சனி, கேது 8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். புத்திரர்களாலும் நிம்மதி குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தேவைற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவக்கூடும் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 8-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் குரு, சனி 8-ல் சஞ்சாரம் செய்வதாலும் முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரம் செய்பபவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது சிறப்பு.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8.

நிறம் – வெண்மை, நீலம்,

கிழமை – வெள்ளி,சனி

கல் – வைரம்,

திசை – தென்கிழக்கு,

தெய்வம் – விஷ்ணு, லட்சுமி

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

சனி 8-ல் சஞ்சரிப்பதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மேஷம்  

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

முன்கோபம் இருந்தாலும் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் ராகுவும், 9-ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பே ஆகும். குரு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. சனி 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். பூர்வீக சொத்து விஷயங்களால் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் தோன்றி மறையும். முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

வரும் 29-10-2019 முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். பொன் பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். நெருங்கியவர்களும் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் லாபம் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் பொடுப்பது போன்றவற்றில் நிதானமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தடை தாமதங்களுக்குப் பின் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலன்களைப் பெற முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல்நிலை சிறப்பாக இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல்நிலை ஓரளவுக்கு முன்னேற்றம் அடையும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்டும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகம்

பணியில் தடைப்பட்ட உயர்வுகள் தடை விலகி கிடைக்கும். கௌரவமும் பெயர் புகழும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உங்களுக்குள்ள வங்கி கடன்கள் குறையும்.

கொடுக்கல்வாங்கல்

பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குருபெயர்ச்சிக்குப் (29-10-2019) பின் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடி வரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

அரசியல்

பெயர் புகழ் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெயர் புகழ் உயர்வடையும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய வரவுகள் வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ மிக்க பதவிகள் கிடைக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும்.

கலைஞர்கள்

திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத் தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். புதிய கார் பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். படபிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். இசைத் துறையில் உள்ளவர்களும் ஜொலிப்பார்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவ மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புக்களையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 9-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலங்கள் உங்களுக்கு அனுகூலமானதாகவே அமையும். எதிர்பாராத திடீர் தன வரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பழைய கடன்கள் படிப்படியாக குறையும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சினைகள் யாவும் விலகும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குரு 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே சாதகப்பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தட்சிணாமூர்த்தி மற்றும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 9-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற வழியில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மட்டும் கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதால் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 9-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். 29-10-2019 முதல் குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும், ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும், பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கமும் நிறைவேறும்.  உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு கேது ஜென்ம ராசிக்கு 3, 9-ல் தன் சொந்த நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதும், குரு 9-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப் பலனை பெறுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். புதிய முயற்சிகளும் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். சிலருக்கு இட மாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 9-ல் மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதாலும், குரு 9-ல் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி லாபம் பெருகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். வேலைபளு குறைவாகவே இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9,    

நிறம் – ஆழ் சிவப்பு

கிழமை – செவ்வாய்

கல் – பவளம்

திசை – தெற்கு

தெய்வம் – முருகன்

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 29-10-2019 முடிய சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணிவதும். குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும்.