பொங்கல் வைக்க உகந்த நேரம்

                          

– முருகு பால முருகன்,

     நிகழும் மங்களகரமான விளம்பி வருஷம் மார்கழி 30ம் தேதி 14.01.2019 திங்கட்கிழமை வளர்பிறை அஷ்டமி திதி, அசுவனி நட்சத்திரம் சித்த கூடிய சுப தினத்தில் இரவு 07.51 மணிக்கு கடக லக்னத்தில் சூரியன் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு தை மாதம் 1ம் தேதி 15.01.2019 செவ்வாய்கிழமை காலை 07.00 மணிக்கு மேல் 09.00 மணிக்கு சூரிய சுக்கிர ஒரையில் அல்லது பகல் 12.00 மணிக்கு மேல் 01.00 மணிக்குள் குரு ஒரையில் பொங்கல் வைப்பது உத்தமம்.

புது பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொடி கொத்தை எடுத்து கங்கணமாக தயாரித்து பானையை சுற்றிக் கட்டி அவரவர் சம்பிரதாய முறைப்படி பொங்கல் வைக்கலாம். மேற்கண்ட நேரத்தில் குல தெய்வத்தை வணங்கி பொங்கல் வைத்து பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று மூன்று முறை கூவி சூரியனை வணங்குவது நல்லது.

கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்பு பூசணி பத்தை, கிழங்கு வகை, மொச்சை, அவரை பழ வகைகள் வைத்து நிவேதனம் செய்து, புஷ்பத்தை எடுத்துத் தூவி வணங்கி பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கு பொங்கலை வாழை இலையில் வைத்து உண்ண வைப்பது, பிறகு நம்முடைய மூதாதையர்களை நினைத்து காகத்துக்கு பொங்கல் வைப்பது உத்தமம்.

   

மாட்டுப் பொங்கல்

மறுநாள் 16.01.2019 புதன் அன்று காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் புதன் ஒரையில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, மாட்டுக் கொட்டைகளை சுத்தம் செய்து காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் குரு ஒரையில் கோ பூஜை செய்து நைவேத்தியம் செய்து, பிறகு மாடுகளை நமஸ்காரம் செய்து விட்டு வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றிற்கு உண்ண கொடுப்பது நல்லது. அவரவர் சம்பிரதாய முறைப்படி மாடுகளை அலங்கரித்து மாலை 4.00 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் குரு ஒரையில் மங்கள வாத்தியத்துடன் மாடுகளை தெருவலம் அழைத்து அல்லது ஆலயத்தில் பூஜை செய்து நண்பர்கள் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று பழம் பட்சணம் மற்றும் காணிக்கைகளை தந்து கௌரவிக்க வேண்டும்.

காணும் பொங்கல்

மறுநாள் காணும் பொங்கலாகும். இன்றைய நாள் முழுவதும் உற்றார்  மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உறவாடி உற்சாகமாக பொழுதுகளை கழிக்கலாம். பல இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். மற்றவர்களுக்கு பொங்கல் இனாம் கொடுப்பது பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்றவற்றால் நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கலாம்.

 

சொந்த தொழில் யோகம்

அட்சயதிருதி 

அட்சயதிருதி 

                                                               

                சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வருகின்ற மூன்றாவது திருதியான வளர்பிறை திருதியைத் தான் அட்சயதிருதி என்கிறோம். சித்திரை மாதத்தில் சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும். இந்த மாதத்தில் சந்திரன் ரிஷபத்தில் உச்சமடையும் பொழுது அட்சயதிருதி வருகிறது.

                தந்தைக்கு அதிபதி சூரியன் தாய்க்கு அதிபதி சந்திரன். சூரியனும், சந்திரனும் பலம் பெற்று சஞ்சரிக்கும் இன்றைய தினத்தில் பெற்றோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவது நற்பலனை தரும். பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது வழிபாடு செய்வது நன்மையளிக்கும்.

                அக்ஷய திருதியை நன்னாளை பொன்னாளாக போற்றி கொண்டாடுவது மக்களின் பழக்கமாக உள்ளது. இந்நாளில் எந்த பொருளை வாங்கினாலும் அது இரட்டிப்பாக பெருகி வளரும் என்பது ஐதீகம். இதனால் மக்கள் தங்கம் வாங்குவதை ஒரு வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். ஒரு சில சமுதயாத்தினர் மட்டுமே கொண்டாடிய இந்த அக்ஷய திருதியை தற்போது ஜாதி, மத பேதமின்றி யாவரும் பொன் நகைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அக்ஷய திருதியை நாளில் தானியங்கள், நகைகள் வாங்குவது மட்டுமின்றி சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து வெற்றியை தாம்பூலம், மஞ்சள் கயிறு, ரவிக்கைத் துணி போன்றவற்றை தானம் கொடுப்பது, லட்சுமி தேவியை வழிபாடு செய்வது, லட்சுமி சமேத நாராயணனை வணங்குவது, தேவிக்குரிய ஸ்தோத்திரங்களை உச்சரிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். விஷ்ணுவுக்கு துளசியுடன் கோதுமையையும், கோதுமையில் செய்த இனிப்பு பண்டங்களையும் படைத்து அவற்றை பிராமணர்களுக்கும் எளியவர்களுக்கும் தானமாக கொடுப்பதாலும், மோர், நீர், பானகம், போன்றவற்றை தானம் செய்வதாலும் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும்.

கஞ்சிக்கே வழியில்லாமல் வறுமையில் வாடிய குசேலன் கண்ணனை சந்தித்து தான் கொண்டு வந்த அவலை கொடுத்து திடீரென்று குபேரன் ஆனது இந்த அக்ஷய திருதியை நன்னாளில் தான். சித்திரை மாதம் முழுவதும் விஷ்ணுவுக்குரியது என்பதால் விஷ்ணு பகவானை வழிபடுவதன் மூலமும் நற்பலன்கள் அமையும்.

நாட்டில் பாவங்களை பெருக பெருக பூமித்தாயால் பாரம் தாங்க முடியாமல் சுனாமி, பூகம்பம், புயல், வெள்ளம் போன்றவை ஏற்படுகிறது. இயற்கை ஏற்படுத்தும் சேதங்களை மனிதனால் தடுக்க முடியாது என்றாலும் அவற்றிலிருந்து தம்மை காத்து கொள்ளவும், பெரியளவில் இழப்புகளை சந்திக்காமல் இருக்கவும் பெரிய அளவில் உதவிகளை செய்ய முடியாவிட்டாலும் இது போன்ற நன்நாட்களில் நம்மால் முடிந்த தானதருமங்களை செய்வோம்.

     இவ்வருடம்  திருக்கணித சித்தாந்தப்படி திருதியை திதியானது 18-04-2017 புதன்கிழமை அதிகாலை 03.45  மணியிலிருந்து பின்இரவு 01.30 மணி வரை உள்ளது.

     18-04-2017 புதன்கிழமை அன்று காலை 06.00-07.00, 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00 – 05.00, இரவு 07.00-09.00, 11.00 -12.00 மணி வரை நகைகள் வாங்க உத்தமம்.

 

பூர்வ புண்ணிய ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் 

பூர்வ புண்ணிய ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் 

வாழ்வில் சோகமும் சந்தோஷமும் நிலையாய் இருப்பதில்லை. சமய சந்தர்ப்பங்களில் தடுமாறி விழ நேர்ந்தாலும், நம்மை தூக்கி நிறுத்த தோள் கொடுக்க சொந்த பந்தங்கள் இருப்பது அவசியம். நல்ல தாய் தந்தையர் அமைவது என்பது கூட குழந்தைகள் செய்த வரமாக இருக்கும். வாழுகின்ற மக்களுக்கு முன்னாள் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை தான் பாடம். நம் பிள்ளைகளுக்கு சொத்து, சுகங்கள் சேர்த்து வைப்பது மட்டுமின்றி நாம் செய்யும் புண்ணியங்களும் தான தர்மங்களும் நம் சந்ததியினரை காப்பதாக இருக்க வேண்டும். 

ஜென்ம லக்னத்திற்கு பஞ்சம் ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 5ஆம் வீடு மிகவும் சக்தி வாய்ந்த வீடாகும். 5ஆம் வீடானது புத்திரன், புத்திரி, பூர்வீகம், உயர்கல்வி போன்றவற்றை பற்றி அறிய உதவும். 5ஆம் வீடு பலம் பெற்றிருந்தால் நல்ல புத்திரர்களை பெறும் யோகம், பூர்வீக வழியில் கிடைக்க வேண்டிய லாபங்களை தடையின்றி அடையும் வாய்ப்பு உண்டாகும். 5ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 5ஆம் வீட்டில் குரு, சுக்கிரன், சந்திரன், சூரியன் போன்ற  கிரகங்கள் அமையப் பெற்றருந்தாலும், 5ஆம் வீட்டை சுபர் பார்வை செய்து 5ல் பாவிகள் இல்லாமல் இருந்தாலும் முன்னோர்கள் சேர்ந்து வைத்த சொத்து ஜாதகருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி ஜாதகரின் தலை முறைக்கு பின்பும் அழியாமல் இருக்கும்.

 ஒருவரது ஜாதகம் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்தாலும் ஒருவரது பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்க பட்டிருந்தால் புத்திர தோஷம், களத்திர தோஷம், போன்றவை ஏற்பட்டு அவரது வாழ்க்கை சங்கடங்கள் நிறைந்ததாக இருக்கும். முன்னோர்கள் நாகங்களை துன்புறுத்தி இருந்தாலோ, கொன்று இருந்தாலோ, நாகதோஷம் உண்டாகி திருமணத் தடை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, ஏற்படுகிறது. இதற்கு பரிகாரமாக ராகு கேதுவுக்கு பரிகாரங்கள் செய்கின்ற போது கெடுதிகள் சற்று குறைந்து நற்பலன்கள் ஏற்படுகின்றது. மற்ற பெண்களின் வாழ்க்கையில் ஏதாவது கெடுதல்களை செய்து இருந்தாலும் அது களத்திர தோஷமாக மாறி திருமணவாழ்க்கை அமையதடை, அப்படி அமைந்தாலும் குடும்ப வாழ்வில் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகிறது.

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் சனி, ராகு கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் 5ஆம் அதிபதி நீசம் பெற்றாலும், வக்ரம் பெற்றாலும், பகை பெற்றிருந்தாலும் 5ஆம் அதிபதி சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் கால புருஷப்படி 5ம் வீடான சிம்மத்தில் சனி, ராகு அமைந்தாலும் பூர்வீகம் பாதிக்கப்பட்டு பூர்வீக வழியில் ஜாதகருக்கு அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகிறது. பூர்வீக வழியில் அதாவது உறவினர்களிடமும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. 5ஆம் வீடு புத்திர ஸ்தானமாகவும் இருப்பதால் தகுந்த காலத்தில் குழந்தை பாக்கியத்தை பெற முடியாத சூழ்நிலை உண்டாகிறது.                                                                                                            

விளையாட்டுத்துறையில் மேன்மை

ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா. இது பாரதி நமக்கு சொல்லி தந்த பாடம். கல்வியில் சாதனைப் படைப்பதைப் போலவே விளையாட்டுத் துறைகளிலும் மற்ற துறைகளிலும் சாதனை படைக்க இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புகின்றனர். வேகமாக வளர்ந்து வரும் காலகட்டங்களில் ஒவ்வொரு மணி நேரமும் பொன்னான நேரமாக கருதப்படுகிறது. காலை 5 மணி தொடங்கியதிலிருந்து யோகா, தியானம், உடற்பயிற்சி, நாட்டியம், இசை, பாடல் பயிற்சி, நீச்சல் பயிற்சி, கிரிக்கெட், கால்பந்து, கைபந்து என பல பயிற்சிகளுக்கு பிள்ளைகளை ஈடுபடுத்துவதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பணம் எவ்வளவு செலவானாலும் பிள்ளைகளை ஏதாவது ஒரு துறையில் முன்னேற்றவே முழு மூச்சுடன் செயல்படுகிறார்கள். பிள்ளைகளை ஊக்குவிப்பது நல்ல செயல் என்றாலும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எதிலும் திணிக்காமல் அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகம் உள்ளது என்பதை ஆராய்ந்து அதில் அவர்களை ஈடுபட செய்வது பெற்றோருக்கும் நல்லது. பிள்ளைகளுக்கும் நல்லது.
ஜென்ம லக்னத்திற்கு 5ஆம் வீட்டை கொண்டு விளையாட்டு, கேளிக்கை, பொழுது போக்கு செயல்கள் பற்றி தெளிவாக அறியலாம். விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுவதற்கு முதலில் நல்ல தைரியமும், மனோ வலிமையும் புத்திக் கூர்மையும் வேண்டும். இவற்றிற்கு காரகனாக விளங்கக் கூடிய சூரியன், சந்திரன், செவ்வாய் புதன் போன்ற கிரகங்களும் பலம் பெற்றிருந்தால் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் வெற்றி பெறக் கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும்.
சூரியன் பலம் பெற்றால் நல்ல உடல் பலமும், சந்திரன் பலம் பெற்றால் மனோபலமும், செவ்வாய் பலம் பெற்றால் தைரியம் துணிவும், புதன் பலம் பெற்றால் புக்தி கூர்மையும், சனி பலம் பெற்றால் கால்களில் பலமும் உண்டாகும்.
சனி, செவ்வாய் பலம் பெற்று 3,12ல் வலுவாக அமையப் பெற்றால் கைபந்து, கால்பந்து, ஒடி விளையாடும் விளையாட்டுகளில் ஈடுபட முடியும்.
சுக்கிரன், சந்திரன் நீர் கிரகங்கள் என்பதால் 5ம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் பலமாக அமையப் பெற்றால் நீச்சல் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
புதன் 5ஆம் அதிபதியாக இருந்தாலும் 5ல் அமையப் பெற்றாலும் புத்திக்கு வேலை தரக்கூடிய செஸ், கேரம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும்.
குறிப்பாக 5ஆம் இடமும் 5ஆம் அதிபதியும் சூரியன், சந்திரன், செவ்வாயும் பலம் பெற்றால் விளையாட்டுத் துறைகளில் தைரியமாக செயல்பட்டு பல வெற்றிகளை குவிக்க முடியும். ஆணுக்கு பெண் குறைந்தவர்கள் இல்லை என்பதை கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம். அதனால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆர்வம் உடையவர்களை முன்னேற விடுங்கள். அவர்களை மட்டம் தட்டி முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காதீர்கள்.

 

காரகத்வ தோஷம்

காரகத்வ தோஷம்

காரகோ பாவநாசா என்ற சொல்லை அடிக்கடி ஜோதிடர் சொல்ல கேட்டிருப்பீர்கள். இதன் விளக்கம் என்ன என பார்த்தால் சகோதரகாரகன் செவ்வாய். சகோதர ஸ்தானம் 3ம் இடம் சகோதரகாரகன் ஆகிய செவ்வாய் சகோதர ஸ்தானமாகிய மூன்றாமிடத்தில் அமையப் பெற்றால் கடுமையான சகோதர தோஷம் உண்டாக்குகிறது. குறிப்பாக இளைய சகோதரர்களிடையே ஒற்றுமை குறைவு, இழப்பு போன்றவை உண்டாகிறது.
தாய்காரகன் சந்திரன் தாய் ஸ்தானமாக கருத கூடிய 4ம் இடத்தில் இருப்பது தாய்க்கு தோஷத்தை உண்டாக்கும். தாய்க்கு ஆரோக்கிய பாதிப்பு, தாயிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.
தந்தைகாரகன் சூரியன் தந்தை ஸ்தானமான 9ம் இடத்தில் இருந்தால் தந்தைக்கு தோஷத்தை உண்டாக்கும். தந்தைக்கு முன்னேற்ற தடை, ஆரோக்கிய பாதிப்பு, தந்தையிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.
புத்திரகாரகன் குரு, புத்திர ஸ்தானமான 5ம் இடத்தில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்பட தடை, தாமதநிலை, பிள்ளைகளால் மன கவலை போன்றவை உண்டாகிறது.
களத்திரகாரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் இருப்பது களத்திர தோஷமாகும். இதனால் கணவன் மனைவிடையே ஒற்றுமை குறைவு, பிரிவு பிரச்சனை போன்றவை ஏற்படும்.
இதில் ஒரு விதி விலக்கு என்னவென்றால் ஆயுள் காரகனான சனி ஆயுள் ஸ்தானமாகிய 8ஆம் இடத்தில் இருக்கும் போது ஆயுள் பலன் அதிகரித்து நீண்ட ஆயுள் ஏற்படுகிறது.
காரகர்கள் அமையும் அந்தந்த வீடுகள் ஆட்சி வீடாக இருந்தால் தோஷம் ஏற்படாமல் கெடு பலன்கள் குறைந்து விடுகிறது.
அது போல காரகர் அந்தந்த பாவங்களில் வீற்றிருந்தாலும் சுப கிரகங்களின் சேர்க்கை, சுபர்களின் பார்வை ஏற்படும் போது காரக தோஷம் அவ்வளவாக பாதிப்புகளை ஏற்படுவதில்லை.

 

கிரகங்கள் வக்ரம் விளைவுகள்           

              கிரகங்கள் வக்ரம் விளைவுகள்             

 

கிரகங்கள் வக்ரம் விளைவுகள்    நவகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம். ஜெனன ஜாதகங்களை கணிக்கும் போது சில கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக்கும். ஆங்கிலத்தில் (ஸி) என குறிப்பிட்டிருக்கும்.  இதற்கு தமிழில் வக்ரம் என்றும் ஆங்கிலத்தில் ஸிமீtக்ஷீஷீரீக்ஷீணீபீமீ  என்றும் அர்த்தமாகும். கிரகங்கள் எப்பொழுது வக்ரம் பெறுகிறது. கிரகங்கள் ஜாதகத்தில் வக்ரம் பெற்றால் நன்மை செய்யுமா? தீமை செய்யுமா?     நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் எப்பொழுதுமே நேர்கதியில் செல்வார்கள். சர்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் எப்பொழுதுமே பின்னோக்கி செல்வார்கள்.     நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள்.     மாதக் கோள்களான புதன், சுக்கிரன் ஆகிய இருவரும் சூரியனை ஒட்டியே எப்பொழுதும் சஞ்சரிக்கும் கிரகங்களாகும். சூரியன் அமைந்திருக்கும் வீட்டிற்கு அதிக பட்சம் முன்பின் 2 வீடுகளில் முன், புதனும், சுக்கிரனும் சஞ்சரிப்பார்கள்.     சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் புதன், சூரியனுக்கு 14 டிகிரியில் சஞ்சரிக்கின்ற போது வக்ரம் பெற்று 20 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தி அடையும். சுமார் 24 நாட்கள் வக்ர நிலையில் சஞ்சரிக்கும்.      சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் மற்றொரு கிரகமான சுக்கிரன் சூரியனுக்கு 29 டிகிரியில் வக்ரம் பெற்று 26 டிகிரிக்கு வரும் போது வக்ரம் நிவிர்த்தியாகும். சுமார் 42 நாட்கள் வக்ரம் பெறும்.     ஒரு ராசியில் ஒன்றரை மாதங்கள் தங்கும் கிரகமான செவ்வாய் சூரியனுக்கு 228 டிகிரியில் வரும் போது வக்ரம் பெற்றும், 132 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 80 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிந்து கொள்ள சூரியனுக்கு 8ல் செவ்வாய் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று சூரியனுக்கு 6ல் செவ்வாய் வரும் போது வக்ர நிவர்த்தியடையும்.     ஆண்டு கோளான குரு சூரியனுக்கு 245 டிகிரியில் இருக்கும் போது வக்ரம் பெற்று 115  டிகிரிக்கு வருகின்ற போது குரு வக்ர நிவர்த்தியடையும். சுமார் 120 நாட்கள் வக்ர நிலையில் இருக்கும். இதனை எளிதாக அறிய ராசி சக்கரத்தில் சூரியனுக்கு 9ல் குரு வருகின்ற போது குரு வக்ரம் பெற்று சூரியனுக்கு 5ல் வரும் போது வக்ர நிவர்த்தியடையும்.     ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய சனி சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 இருக்கும் போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெற்று சூரியனுக்கு 5ல் சனி வரும் போது வக்ர நிவர்த்தியடையும்.    ஜெனன ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்ரம் பெற்றிருந்தால் பல்வேறு எதிர்மறையானப் பலன்களை ஏற்படுத்துகிறது. எந்த வீட்டதிபதி வக்ரம் பெறுகிறதோ அவ்வீட்டின் காரக பலனும், எந்த கிரகம் வக்ரம் பெறுகிறாதோ அக்கிரகத்தின் காரக பலனும் பாதிக்கப்படுகிறது. குரு வக்ரம் பெற்றால் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை, புத்திர பாக்கிய தடை, பெண் என்றால் கர்பபை பிரச்சனைஉண்டாகிறது. புதன் வக்ரம் பெற்றால் கற்ற கல்வியை பயன் படுத்தாமல் வேறு துறைக்கு செல்லும் சூழ்நிலை, நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. செவ்வாய் வக்ரம் பெற்றால் உடன்பிறப்பிடம் பிரச்சனை, பூமி மனை யோகம் அமைய தடை உண்டாகும். சுக்கிரன் வக்ரம் பெற்றால் சகோதரியிடம் கருத்து வேறுப்பாடு, திருமண வாழ்வில் நிம்மதி குறைவு ஏற்படுகிறது. சனி வக்ரம் பெற்றால் வேலை ஆட்கள் மூலம் பிரச்சனை, ஆரோக்கிய ரீதியாக எதிர்ப்பு சக்தி குறைவு உண்டாகிறது. வக்ரம் பெற்ற கிரகங்களின் திசை புக்தி காலங்களில் நற்பலன்கள் ஏற்படுவதில்லை என்பதால் இக்காலங்களில் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. 

பேச்சுத் திறன்

பேச்சுத் திறன்

நேருக்கு நேர் இனிமையாக பேசி விட்டு பின்னர் போக விட்டு புறம் பேசும் மனிதர்களிடம் பழகாமல் தவிர்த்து விடுவது நல்லது. அத்தகைய மனிதர்களோடு நட்பு கொள்வது பசும்பாலில் கடும் விஷத்தை கலப்பதற்கு ஒப்பாகும். ஒருவருக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் இருக்க வேண்டும் என்றால் பேச்சு சாதுர்யமும் நாக்கு சுத்தமும் இருக்க வேண்டும். உடலில் நரம்பில்லாதது நாக்கு. அதை எப்படி வேண்டுமானாலும் சுழல விடாமல் சிந்தித்து பேசுவது சிறப்பு. வசீகரமான பேச்சுத் திறனும், நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர்களை அனைவரும் விரும்புவார்கள்.
மாற்றி மாற்றி பேசுவது தான் என்ற அகங்காரத்தில் பேசுவது, தன்னை மட்டும் உயர்த்தி பேசுவது, பிறரை கேலி கிண்டல் செய்வது பேசுவது, புறம் பேசுவது போன்றவற்றால் மற்றவர்களின் மனம் புண்படுவதுடன் இப்படி பேசுபவர்களிடம் பேசுவதை விட சும்மா இருக்கலாம் என ஒதுங்கி கொள்வார்கள். சிலர் வாயை திறந்தாலே பேச்சுக்கள் அனைத்தும் அபசகுணமாகவே இருக்கும். இவர்களுக்கும் சமுதாயத்தில் மதிப்பிருக்காது.
நரம்பில்லாத நாக்கு ஏன் இப்படி சுழன்று கொண்டிருக்கிறது என்று ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் வீடான வாக்கு ஸ்தானமே காரணமாக இருக்கும்.
வாக்கு ஸ்தானமான 2ஆம் வீடு பலம் பெற்று 2ஆம் அதிபதியும் ஆட்சி உச்சம் பெற்று, பேச்சுக்கு காரகனான புதன் பகவானும் பலம் பெற்று ஒருவர் ஜாதகத்தில் இருக்குமேயானாலும் அவருக்கு வாக்கால் பேச்சால் வாழ்வில் உயரக் கூடிய அமைப்பு கொடுக்கும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவானின் பார்வையும் 2ஆம் வீட்டிற்கும், 2ஆம் வீட்டின் அதிபதிக்கும், புதனுக்கும் இருந்தாலும் அவருடைய பேச்சும் ராசிக்கும் படியாக இருக்கும். பலருக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல், கல்வி போதிக்கும் திறன் யாவும் சிறப்பாக அமையும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார். தன்னுடைய பேச்சிற்கு எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய அளவிற்கு வாக்கு வன்மையை உண்டாக்கி கொள்வார்.
அதுவே 2ஆம் அதிபதியும் புதனும் 6ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று பாவ கிரகங்களின் பார்வை பெற்றாலும், குரு பகவான் 6ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்தில் அமைந்து 2ஆம் அதிபதி வலுவிழந்திருந்தாலும், புதன் 2ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும் கடகம், விருச்சிகம், மீனத்தில் அமைந்து சந்திரனின் பார்வை பெற்றாலும் சனியின் வீடான மகரம், கும்பத்தில் அமைந்து சனிப் பார்வை பெற்றாலும் நாக்கு சுத்தமோ, வாக்கு சாதுர்யமோ இருக்காது. எந்த இடத்தில் எதை பேச வேண்டுமோ அதை விடுத்து சம்மந்தமே இல்லாமல் பேசி கேலிக்குரியவராவார். 2ல் பாவிகள் அமையப் பெற்று அதன் தசா புத்திகள் வரும் காலங்களில் வீண் சண்டை சச்சரவு, தகராறு, வாக்கு வாதங்கள் போன்றவை உண்டாகும். 2ல் சனி அல்லது ராகு அமைந்து சுபர் பார்வையில்லாமல் இருந்தாலும் மேற்கூறிய அசுப பலன்களே ஏற்படும். இப்படி பேசுபவர்களை பார்த்தால் அவன் நாக்கில் சனி எனக் கூறி அனைவரும் ஒதுங்கி கொள்வார்கள்.

பெரியயோர்களின் ஆசியும் பிரச்சனைகளுக்கு தீர்வும்.

பெரியயோர்களின் ஆசியும் பிரச்சனைகளுக்கு தீர்வும்.

வலி மிகுந்த வாழ்க்கை பயணம். வழி நெடுக்க புதுப்புது முகங்கள். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு உறவாக மனதில் பதிந்தாலும் எந்த உறவும் இறுதிவரை வரப்போவதில்லை. வாழும் வரை போராட்டம். வாழ்க்கை ஒரு தேரோட்டம். அவசரமாக இயங்கி கொண்டிருக்கும் இவ்வுலகில் அன்றாடம் பல்வேறு நிகழ்வுகளை எதிர்கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டி உள்ளது.
உறவுகளின் ஒத்துழைப்பும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும் சிறப்பாக இருந்தால் மலை போன்ற பிரச்சனைகளும் கடுகு போல் தெரியும் எதையும் சமாளிக்க கூடிய வல்லமையும் ஆற்றலும் உண்டாகும். எளிதில் முன்னேற்றத்தையும் அடைந்து விட முடியும். பெரியோர்களின் அதரவு என்பது தந்தை, தந்தை வழி உறவினர்கள், வயதில் மூத்தவர்களை குறிக்கும். வேலைக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு மேலதிகாரிகளையும், தொழில் செய்பவர்களுக்கு தொழில் வாய்ப்பை தரும் நபர்களையும், அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளையும் குறிக்கும்.
ஆண் கிரகங்களில் முதன்மை கிரகமான சூரியன் பலமாக இருந்தால் பெரியோர்கள், வயதில் மூத்தவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். சூரியன் ஆட்சி உச்சம் பெற்றாலும், சூரியனுக்கு நட்பு கிரகங்களான குரு, சந்திரன், செவ்வாய், போன்றவற்றின் சேர்க்கை பெற்றாலும் அல்லது இவற்றின் நட்சத்திர சாரத்தில் இருந்தாலும் நற்பலன்களை அடைய முடியும். இதுமட்டுமின்றி சுக்கிரன், புதன் போன்ற சுப கிரக சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும் பெரியோர்களின் ஆசி, ஆதரவு மிக சிறப்பாக இருக்கும், தந்தை, தந்தை வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலனை அடைய முடியும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு, ஒத்துழைப்பு நன்றாக இருக்கும், உழைப்பிற்கான ஊதியம் கிட்டும். பொருளாதார ரீதியாகவும் அனுகூலங்களை அடைய முடியும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிட்டும். வங்கிகள் மூலமும் சாதகமான பலனை அடைய முடியும்.
சூரியன் நீசம் பெற்று துலா ராசியில் இருப்பதும், சூரியன் தனக்கு பகை கிரகங்களான சனி ராகு சேர்க்கை பெறுவதும், சனி ராகுவின் நடசத்திரங்களாகிய பூசம், அனுசம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவற்றில் அமைவதும் நல்லதல்ல. குறிப்பாக சூரியன் ராகுவிற்கு மிக அருகில் இருப்பதும், சூரியன் ராகு அல்லது சனி சேர்க்கை பெறுவதும், சூரியனின் வீடான சிம்மத்தில் சனி, ராகு போன்ற கொடிய பாவ கிரகங்கள் அமைவதும் கடுமையான தோஷம் ஆகும். இதனால் சனி மற்றும் ராகு தசா, புத்தி நடைபெறும் காலங்களில் தந்தையிடம் அல்லது தந்தை வழி உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளால் வீண் பிரச்சனைகள் அதனால் அவப்பெயரை எடுக்கும் சூழ்நிலை உண்டாகும்.
தொழில் செய்வர்களுக்கு அரசு வழியில் பிரச்சனை, சட்ட சிக்கல், வருமான வரி துறை மூலம் திடீர் நெருக்கடிகள் உண்டாகிறது. முடிந்தவரை இக்காலங்களில் வயதில் மூத்தவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது, மேலதிகாரிகளிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. தொழில் செய்பவர்கள் ஏதாவது பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிட்டால் நேரடியாக களத்தில் இறங்காமல் நம்பிக்கைக்குறிய நபர்கள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது, அம்மன் வழிபாடுகளை மேற்கொள்வது மூலம் ஓரளவுக்கு பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.