Today rasi palan – 15.10.2020

Today rasi palan – 15.10.2020

இன்றைய ராசிப்பலன் –  15.10.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

15-10-2020, புரட்டாசி 29, வியாழக்கிழமை, திரியோதசி திதி காலை 08.33 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.53 வரை பின்பு அமாவாசை. உத்திரம் நட்சத்திரம் மாலை 05.58 வரை பின்பு அஸ்தம். மரணயோகம் மாலை 05.58 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

செவ்(வ) ராகு
திருக்கணித கிரக நிலை

15.10.2020

 சனி  

 

சுக்கி
குரு 

 

    கேது  புதன் (வ) சூரிய  சந்தி

 

இன்றைய ராசிப்பலன் –  15.10.2020

மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.

மிதுனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

கன்னி

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

துலாம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். கடன் பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இருந்த இடையூறுகள் விலகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வருமானம் பெருகும்.

Today rasi palan – 14.10.2020

Today rasi palan – 14.10.2020

இன்றைய ராசிப்பலன் –  14.10.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

14-10-2020, புரட்டாசி 28, புதன்கிழமை, துவாதசி திதி பகல் 11.51 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரம் நட்சத்திரம் இரவு 08.41 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

செவ்(வ) ராகு
திருக்கணித கிரக நிலை

14.10.2020

 சனி  

 

சந்தி சுக்கி
குரு 

 

    கேது  புதன் சூரிய

 

 

 

 

இன்றைய ராசிப்பலன் –  14.10.2020

மேஷம்

இன்று உங்களுக்கு பணப்பிரச்சினை சற்று அதிகமாக இருக்கும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடலாம். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை தோன்றும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.

கடகம்

இன்று பொருளாதார ரிதீயாக நெருக்கடி ஏற்படலாம். நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

கன்னி

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் இடையூறுகள் உண்டாகும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

கும்பம்

இன்று பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம்

இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய பொருட்கள் சேரும்.

Today rasi palan – 13.10.2020

Today rasi palan – 13.10.2020

இன்றைய ராசிப்பலன் –  13.10.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

13-10-2020, புரட்டாசி 27, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.36 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மகம் நட்சத்திரம் இரவு 10.54 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

செவ்(வ) ராகு
திருக்கணித கிரக நிலை

13.10.2020

 சனி  

 

சந்தி

சுக்கி

குரு 

 

    கேது  புதன் சூரிய

 

இன்றைய ராசிப்பலன் – 13.10.2020

மேஷம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.

ரிஷபம்

இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் தாமதமின்றி கிடைக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும்.

கடகம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய பாதிப்புகள் தோன்றும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளும் விலகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் சற்று பார்த்து பழகுவது நல்லது. பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

தனுசு

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிட்டும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர் பதவிகளை அடைய முடியும். Ñன நிம்மதி ஏற்படும்.

மீனம்

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல செய்தி கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

Today rasi palan – 12.10.2020

Today rasi palan – 12.10.2020

இன்றைய ராசிப்பலன் –  12.10.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

12-10-2020, புரட்டாசி 26, திங்கட்கிழமை, தசமி திதி மாலை 04.39 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.29 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 12.29 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. நவகிரக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

செவ்(வ) ராகு
திருக்கணித கிரக நிலை

12.10.2020

சந்தி
 சனி  

 

சுக்கி
குரு 

 

    கேது  புதன் சூரிய

 

இன்றைய ராசிப்பலன் –  12.10.2020

மேஷம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். எதிர்பார்த்த உதவி தடையின்றி கிடைக்கும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முடிவுகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று குறையும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிய பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வேலையில் எதிர்பாராத இடமாற்றத்தால் மன குழப்பம் ஏற்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

இன்று சகோதர சகோதரி மூலம் அனுகூலம் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் நிலையில் அசதி சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் கூட்டாளிகளின் உதவியால் இதுவரை இருந்த பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

Today rasi palan – 11.10.2020

Today rasi palan – 11.10.2020

இன்றைய ராசிப்பலன் –  11.10.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

11-10-2020, புரட்டாசி 25, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி மாலை 05.54 வரை பின்பு தேய்பிறை தசமி. பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.18 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

செவ்(வ) ராகு
திருக்கணித கிரக நிலை

11.10.2020

சந்தி
 சனி  

 

சுக்கி
குரு 

 

    கேது  புதன் சூரிய

 

இன்றைய ராசிப்பலன் –  11.10.2020

மேஷம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை மன தைரியத்தோடு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு சிறு சிறு இடையூறுகள் இருந்தாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்ககூடும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

சிம்மம்

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புக்கள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

கன்னி

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் சூழ்நிலை அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியை தரும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும்.

தனுசு

இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.

மகரம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

இன்று உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

Today rasi palan – 10.10.2020

Today rasi palan – 10.10.2020

இன்றைய ராசிப்பலன் –  10.10.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

10-10-2020, புரட்டாசி 24, சனிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.17 வரை பின்பு தேய்பிறை நவமி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.17 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

செவ்(வ) ராகு சந்தி
திருக்கணித கிரக நிலை

10.10.2020

 சனி  

 

சுக்கி
குரு 

 

    கேது  புதன் சூரிய

 

இன்றைய ராசிப்பலன் –  10.10.2020

மேஷம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும்.

ரிஷபம்

இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.

மிதுனம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். உற்றார் உறவினர்களால் மனசங்டங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்லது நடக்கும்.

கன்னி

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

துலாம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். சுப முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

தனுசு

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.  உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

மகரம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பண நெருக்கடிகள் குறையும்.

மீனம்

இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

Today rasi palan – 09.10.2020

Today rasi palan – 09.10.2020

இன்றைய ராசிப்பலன் –  09.10.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

09-10-2020, புரட்டாசி 23, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி மாலை 05.50 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 12.26 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

செவ்(வ) ராகு சந்தி
திருக்கணித கிரக நிலை

09.10.2020

 சனி  

 

சுக்கி
குரு 

 

    கேது  புதன் சூரிய

 

இன்றைய ராசிப்பலன் –  09.10.2020

மேஷம்

இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான லாபம் பெருகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.

மிதுனம்

இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

கடகம்

இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பொன் பொருள் சேரும்.

துலாம்

இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

தனுசு

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

மகரம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

கும்பம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் முடிந்த வரை பொறுமையுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

மீனம்

இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

Today rasi palan – 08.10.2020

Today rasi palan – 08.10.2020

இன்றைய ராசிப்பலன் –  08.10.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

08-10-2020, புரட்டாசி 22, வியாழக்கிழமை, சஷ்டி திதி மாலை 04.37 வரை பின்பு தேய்பிறை சப்தமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 10.50 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

செவ்(வ) ராகு சந்தி
திருக்கணித கிரக நிலை

08.10.2020

 சனி  

 

சுக்கி
குரு 

 

    கேது  புதன் சூரிய

இன்றைய ராசிப்பலன் –  08.10.2020

மேஷம்

இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும்.

ரிஷபம்

இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் மேலோங்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கடகம்

இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். கடன்கள் குறையும்.

துலாம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு காலை 09.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.47 க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

தனுசு

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும்.

மகரம்

இன்று உங்கள் இல்லம் தேடி ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். எதிலும் கவனம் தேவை.

மீனம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.

Today rasi palan – 07.10.2020

Today rasi palan – 07.10.2020

இன்றைய ராசிப்பலன் –  07.10.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

07-10-2020, புரட்டாசி 21, புதன்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.47 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. ரோகிணி நட்சத்திரம் இரவு 08.35 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

செவ்(வ) ராகு சந்தி
திருக்கணித கிரக நிலை

07.10.2020

 சனி  

 

சுக்கி
குரு 

 

    கேது  புதன் சூரிய

இன்றைய ராசிப்பலன் –  07.10.2020

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். கடன் பிரச்சினை தீரும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் பாதிப்படையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்

இன்று நீங்கள் சற்று குழப்பமுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.

தனுசு

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

கும்பம்

இன்று எந்த காரியத்திலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர் வருகையினால் செலவுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதம் உண்டாகும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் ரீதியாக புதிய நட்பு ஏற்படும்.

மீனம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால்  அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

Today rasi palan – 06.10.2020

Today rasi palan – 06.10.2020

இன்றைய ராசிப்பலன் –  06.10.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

06-10-2020, புரட்டாசி 20, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பகல் 12.32 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 05.54 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 05.54 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

செவ்(வ) ராகு சந்தி
திருக்கணித கிரக நிலை

06.10.2020

 சனி  

 

சுக்கி
குரு 

 

    கேது  புதன் சூரிய

 

 

 

இன்றைய ராசிப்பலன் –  06.10.2020

மேஷம்

இன்று உற்றார் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.   

ரிஷபம்

இன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் பணப் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உத்தியோக நிமித்தமாக செல்லும் பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

கடகம்

இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன் உண்டாகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் கடினமான காரியங்கள் கூட எளிதில் முடிந்து விடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்கு போன்ற விஷயங்களில் சாதகப் பலன் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை பெறலாம்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது கடன் பெறுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அரசு துறை ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும்.  பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மகரம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். கையிருப்பு குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும்.

மீனம்

இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும்.