குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – மீனம் 

 

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – மீனம் 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம்,  உத்திரட்டாதி,  ரேவதி

நல்ல அறிவாற்றலுடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குருபகவான் இதுநாள் வரை 8-ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் பல இடையூறுகளை நீங்கள் எதிர்கொண்டு இருந்தாலும் வாக்கிய கணிதப்படி வரும் 4-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்)  ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் கடந்த கால பிரச்சினைகளில் இருந்து படிப்படியாக விடுப்பட்டு மிகவும் சாதகமான பலனை பெறுவீர்கள். தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். சிலர் சிறப்பான புத்திர பாக்கியங்களை பெறுவார்கள். உங்களை வெறுத்து ஓடி ஒளிந்தவர்களும் உங்கள் அருமை பெருமைகளை புரிந்து கொண்டு நட்பு பாராட்ட வருவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதுடன், கடன்களும் படிப்படியாக குறையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம், பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் போன்றவை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுக்கு சனிபகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஜீவனசனி நடைபெறுவதும், வரும் 13-2-2019 முதல் சர்பகிரகமான ராகு 4-ஆம் வீட்டிலும், கேது 10-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் சிறுசிறு பிரச்சினைகள், தேவையற்ற அலைச்சல்கள் போன்றவற்றை சந்திக்க சேர்ந்தாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் அபிவிருத்தியும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் ஓரளவுக்கு முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமதநிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலமானப்  பலன்களை அடைய முடியும். வாழ்க்கை தரமும் முன்னேற்றம் அடையும்.

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியமானது சிறப்பாகவே இருக்கும். நீண்ட நாட்களாக உங்களை தொல்லை படுத்திக் கொண்டிருந்த உடம்பு பாதிப்புகள் படிப்படியாக குணமடையும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. இவ்வளவு நாட்களாக மனதில் நிலவி கொண்டிருந்த சில பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

கடந்த காலங்களால் நீங்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் யாவும் மறையும். இந்த குரு பெயர்ச்சியின் மூலம் உங்களுக்குள்ள சஞ்சலங்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் இருந்த வம்புகள் கருத்து வேறுபாடுகள் யாவும் மறைந்து ஒற்றுமை சிறப்படையும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி கடன்களும் படிப்படியாக விலகும். நண்பர்களின் வட்டாரம் அதிகரிக்கும். பிரிந்தவர்களும் தேடி வந்து ஒற்றுமை கரம் நீட்டுவார்கள். பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டாகும்.

கமிஷன்- ஏஜென்சி

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றமடைய கூடிய காலமிது. பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளிலும் நல்லதொரு தீர்வு ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நற்பலனை உண்டாக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் நிலவினாலும் லாபங்களை பெருக்கி கொள்ள கூடிய அளவிற்கு அபிவிருத்தி பெருகும். கை நழுவிய வாய்ப்புகளும் தேடி வருவதால் பொருளாதார நிலையானது உயர்வடையும். தொழிலாளி முதலாளி என்ற பேதமில்லாமல் அனைவரிடமும் சுமூகமான நிலை நிலவும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்குவதற்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய கிளை நிறுவனங்களையும் நிறுவ கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் லாபம் பெருகும்.

உத்தியோகம்

பணியில் இதுவரை நிலவிய நெருக்கடிகள் குறையும். வீண் பழிச்சொற்களால் மனம் சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் உங்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் தேடி வரும். பெயர் புகழ் உயரும் அளவிற்கு உங்களின் திறமைகளை வெளிப்படுத்த கூடிய வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களுக்கு ஆளாவீர்கள். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் கருத்து வேறுபாடுகள் மறைந்து அவர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும்.

அரசியல்

அரசியல்வாதிகள் அபிரிதமான வளர்ச்சியினை அடையக்கூடிய காலமிது. இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். மக்களிடையே செல்வாக்கு உயரும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மாண்புமிகு பதவிகள் கிட்டும். கட்சி பணிகளுக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்பும் அமையும். நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். 

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். மழை வளம் குறைவாக இருந்தாலும் கையாள வேண்டிய முறைகளைக் கையாள்வதால் லாபங்களைப் பெற்று விடுவீர்கள். பயிர்களை இன்சூரஸ் செய்வதன் மூலமும் அரசு வழியில் ஆதாயங்களைப் பெற முடியும். காய், கனி, பூ, போன்றவற்றாலும் லாபம் கிட்டும். கால் நடைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும். பொருளாதாரம் சிறப்பாக அமையும்.

கலைஞர்கள் 

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் அமையும். எதை தேர்ந்தெடுப்பது என முடிவெடுக்க முடியாத அளவிற்கு வாய்ப்புகள் குவியும். என்றாலும் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கடந்த காலங்களில் இருந்த பொருளாதார நெருக்கடிகளும் குறைந்து சுகவாழ்வு சொகுசு வாழ்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அனுகூலமான பயணங்களும் அதன் மூலம் நற்பலன்களும் உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த பாரங்களும் குறைந்து உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் சிறப்பான புத்திர பாக்கியத்தை பெற்றெடுப்பர். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். புது வீடு கட்டி குடிபுக கூடிய வாய்ப்பும் உண்டாகும். கடன்கள் குறைந்து சேமிப்புகள் பெருகும்.

மாணவ மாணவியர் 

கல்வியில் இருந்து வந்த மந்த நிலைகள் விலகி ஞாபக சக்தி அதிகரிக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளான நீங்கள் தற்போது அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். பேச்சு போட்டி ஓவியப் போட்டி, பாட்டு போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். நல்ல நண்பர்களின் நட்பு தேடி வரும். தேவையற்ற பொழுது போக்குகளில் உள்ள நாட்டம் குறைந்து கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

உங்கள் ராசியாதிபதி குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 11-ல் கேது சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்தால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்த கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

குருபகவான் சனியின் நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், 11-ல் கேது சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் போட்டி பொறாமைகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

குருபகவான் கேந்திராதிபதியான புதனின் நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ஜென்ம ராசிக்கு 10-ல் சனி சஞ்சாரம் செய்வதால் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் சிறுசிறு இடையூகளை சந்தித்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளும் கிட்டும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகளை சந்தித்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு 4-ல், கேது 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்களும் கல்வியில் உயர்வடைவார்கள். துர்கை அம்மனை வழிபாடு நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

இக்காலங்களில் உங்கள் ராசியாதிபதி குரு கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 10-ல் சனி, கேது சேர்க்கைப் பெற்று சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சற்று தாமதமாகும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவீர்கள் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. அன்றாட பணிகளில் ஈடுபடுவதிலேயே மந்தநிலை ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்களை ஏற்படுவதை தவிர்க்கலாம். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடன்பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை

இக்காலங்களில் உங்கள் ராசியாதிபதி குரு புதனின் நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுத்து லாபங்களை காண முடியும். கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைபளுவும் குறையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். சனிபகவானை வழிபாடு செய்வது நல்லது.

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது. ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது உத்தமம். 13-2-2019 முதல் ராகு கேது சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது நல்லது. துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9          கிழமை – வியாழன், ஞாயிறு                      திசை – வடகிழக்கு

கல் – புஷ்ப ராகம்    நிறம் – மஞ்சள், சிவப்பு                      தெய்வம் –  தட்சிணாமூர்த்தி

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – கும்பம்

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – கும்பம்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

கும்பம்    அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று கடமையே கன்னியமாய் செயலாற்றும் பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்கள, உங்களுக்கு இதுவரை பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரித்து பல நற்பலன்களை ஏற்படுத்திய குரு பகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்)  ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில், உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் ராசியாதிபதி சனி லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியையும், லாபத்தையும் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் ஓரளவுக்கு ஆதாயங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக உண்டாவதால் குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்து விட முடியும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. வரும் 13-02-2019-ல் ஏற்படவிருக்கும் சர்ப கிரக மாற்றத்தின் மூலம் ராகு 5-ஆம் வீட்டிலும் கேது லாபஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளார். இதுமட்டுமின்றி குரு பார்வை 2, 4, 6-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறையும். இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகளில் கூட தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். இந்த குரு பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும் என்றாலும் சனி, கேது சாதகமாக சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் திறம்பட எதிர் கொண்டு லாபங்களை பெற முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். ஏதாவது சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் ஒரு சில மருத்துவ செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்த கூடும் என்பதால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயங்களில் சற்று கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையை தவிர்க்கலாம்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். புத்திரர்களால் சில நேரங்களில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகவே இருப்பார்கள். பண வரவுகளும் தாராளமாகத்தான் இருக்கும். ஆடம்பரமாக செலவு செய்வதை சற்று குறைத்து கொள்வது நல்லது. வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். அசையா சொத்து வகைகளில் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஓரளவுக்கு சேமிக்க முடியும்.  கமிஷன்- ஏஜென்சி

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் ஷேர் போன்றவற்றில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை மற்றும் தேவையற்ற விரோதங்களை சம்பாதிப்பீர்கள். சனியின் சாதக சஞ்சாரத்தால் எந்த வித நெருக்கடிகளையும் சமாளித்து எற்றங்களை அடைவீர்கள். உழைப்பிற்கான பலனை அடைவீர்கள்.

தொழில் வியாபாரம் 

நிறைய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய காலமிது. எடுக்கும் எந்தவொரு காரியங்களிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். வேலையாட்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளும் பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள்.

உத்தியோகம் 

பணியில் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமிது. எவ்வளவு தான் பாடுபட்டாலும் திறமைக்கு ஏற்ற உயர்வினை அடைய முடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டி வரும். சில நேரங்களில் வீண் பழிகளை சுமக்க வேண்டி வரலாம். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் அவ்வளவு சாதகமாக இருக்கும் என்று கூற முடியாது. சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் டென்ஷன், குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலைகள் உண்டாக கூடும். உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது உத்தமம்.

அரசியல்

மக்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதாக இருந்தாலும் நல்ல பதவி அடைவதற்கு அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கட்சி பணிகளுக்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும். மறைமுக வருவாய்களால் தேவையற்ற சிக்கல்களில் சிக்கி கொள்வீர்கள். பத்திரிக்கை நண்பர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப் பிடிப்பதும் இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்வதும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். விளைப்பொருளுக்கு ஏற்ற விலையை சந்தையில் எதிர்பார்க்க முடியாது. அரசு வழியில் சிறுசிறு மானியத் தொகைகள் கிடைக்கும். பங்காளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத தனவரவுகளும் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபங்களை பெற முடியும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் சில காரணங்களால் கைமாறிப் போகும். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை போராட்டத்தில் ஆடம்பரமான செலவுகளை செய்ய முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். கையில் இருக்கும் வாய்ப்புக்களையாவது நழுவ விடாமல் காப்பாற்றி கொள்வதும், கௌரவம் பாராமல் எல்லோரிடமும் சகஜமாக பழகுவதும் நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூட சில தடை தாமதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெற முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. புத்திர வழியில் ஒரு சில மன சஞ்சலங்களும் வீண் விரயங்களும் உண்டாகலாம். பணிபுரியும் பெண்களுக்கு சற்று வேலைபளு அதிகரிக்கும். பணவரவுகள் சரளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானம் தேவை.

மாணவ மாணவியர் 

படிப்பில் சற்றே நாட்டம் குறைய கூடிய காலம் என்பதால் முழு முயற்சியுடன் கல்வியில் ஈடுபாடு காட்டுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புகள் உங்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும். சுற்றுலா தளங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் அமைந்து மேலும் மேலும் உங்களின் பொது அறிவினை வளர்த்துக் கொள்ள உதவும். விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி கிட்டும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

இக்காலங்களில் குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். 6-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் படிப்படியாக விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப காரியங்களும் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். உத்தியோகத்தில் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். குருபகவானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

ஜென்ம ராசிக்கு 10-ல் குருபகவான் உங்கள் ராசியாதிபதி சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் சற்று தாமதங்களுக்குப் பிறகு கிடைக்கும். 6-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் மேன்மையும், உயர்வும் உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருளை வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். கடன் பிரச்சனைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

குருபகவான் ஜென்ம ராசிக்கு 5-ஆம் அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் கிடைக்க சற்று தடைகள் ஏற்படும் என்றாலும் 11-ல் சனி சஞ்சரிப்பதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்மாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் அமையும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் ஏற்படும். சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கம் நிறைவேறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ராகுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

இக்காலங்களில் குருபகவான் கேதுவின் நட்சத்திரத்தில் தன் சொந்த வீடான தனுசில் அதிசாரமாக 11-ஆம் வீட்டில் சனி, கேது சேர்க்கைப் பெற்று சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள்  உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். வேலைபளு குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். சனி, கேது 11-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை

குருபகவான் ஜென்ம ராசிக்கு 5-ஆம் அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சிறு சிறு தடைகளுக்கு பின் அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று போட்டிகள் நிலவினாலும் முன்னேற்றமான நிலை இருக்கும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பதால் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சனி, கேது 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும் என்றாலும் திருமணம் நடைபெறுவதில் தாமத நிலை ஏற்படும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலித்து விட முடியும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவிப்பது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு யந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும். கேது 12-ல் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம். 13-02-2019 முதல் ராகு 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் துர்கையம்மனை வழிபடுவது சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8              கிழமை – வெள்ளி, சனி                              திசை – மேற்கு

கல் – நீலக்கல்            நிறம் – வெள்ளை, நீலம்                   தெய்வம் – ஐயப்பன்

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 மகரம் 

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 மகரம் 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

மகரம்  உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அனைவரிடமும் அன்பாக பழகும் ஆற்றலும், உதவிகள் செய்யும் நல்ல குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப் படக்கூடிய குருபகவான் இதுநாள் வரை 10-ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் சிறுசிறு பிரச்சினைகளை சந்தித்து இருந்தாலும் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல்  (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) உங்களின் ஜென்ம ராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் கடந்த காலங்களிலிருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாக கூடிய பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் இருந்த பிரச்சினைகள் விலகும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். உங்களுக்கு ஏழரை சனியில் விரயசனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி ராசியாதிபதி என்பதால் அதிக கெடுதிகளை செய்யமாட்டார். இதுவரை 1, 7-ல் சஞ்சரித்த ராகு கேது வரும் 13-2-2019 முதல் மாறுதலாகி ராகு 6-ஆம் வீட்டிலும் கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் அலைச்சல்கள் டென்ஷன்களும் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அபிவிருத்தியும் பெருகும். பயணங்களாலும் அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வேலைவாய்ப்பு கிட்டும். குருபார்வை 3, 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து உறவு கொண்டாடுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரள நிலை ஏற்படும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும்.

உடல் ஆரோக்கியம் 

உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாகாது. உங்களுக்கு உள்ள அலைச்சல் டென்ஷன் யாவும் குறைந்து மனநிம்மதியான சூழ்நிலைகள் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் விலகி ஒற்றுமையும் சந்தோஷமும் உண்டாகும். உங்களை புரிந்து கொள்ளாமல் விலகிய உறவினர்களும் தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலையானது உயர்ந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். வீடு மனை வண்டி, வாகனங்கள் வாங்க விரும்புபவர்களின் எண்ணங்களும் கனவுகளும் நிறைவேறும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி கைகூடும்.

கமிஷன்- ஏஜென்சி

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் லாபம் காணக் கூடிய காலமிது. தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல்- வாங்கல் நல்ல முறையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி திரும்ப கிடைக்கும். அசையா சொத்து வகையில் இருந்த பிரச்சினைகள், தேவையற்ற வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். லாபம் பெருகும்.

தொழில் வியாபாரம்

நிறைய போட்டிகளையும் வேதனைகளையும் சந்தித்திருந்தாலும் தற்போது உங்களின் தொழில் வியாபார வளர்ச்சியானது மிகுந்த லாபத்தையும் அபிவிருத்தியையும் பெருக்குவதாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவு படுத்த அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடு உங்களுக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும். தொழிலாளர்களும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தை பல இடங்களில் விரிவு படுத்த நீங்கள் மேற்கொள்ளும் யுக்திகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகம்

பணியில் நீங்கள் சந்தித்து வந்த சோதனைகள் வீண் பழிச்சொற்கள் யாவும் விலகி எதிர்பாராத உயர்வினை உண்டாக்கும். மற்றவரை அதிகாரம் செய்ய கூடிய அமைப்பு, பலரை வழிநடத்தி செல்லக்கூடிய பதவிகள் யாவும் தேடிவரும். பதவி உயர்வுகள் உண்டாவதால் அதனுடைய ஊதிய உயர்வும் உண்டாகி பொருளாதார நிலையினை உயர்த்தும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். 

அரசியல்

மக்களுடைய ஆதரவுகளை பெற்று உயர்வடையக்கூடிய பொற்காலமிது. மாண்புமிகு பதவிகள் தேடி வரும் மக்களின் தேவையறிந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதியாக செயல்படுவீர்கள். கட்சி பணிக்காக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். செல்வாக்கு உயரும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய பல யுக்திகளைக் கையாண்டு லாபத்தினைப் பெறுவீர்கள். எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதனையாக மாற்றும் ஆற்றல் உண்டாகும். லாபங்கள் பெருகுவதால் புதிய பூமி, நிலம், நவீன கருவிகள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். அரசு வழியிலும் மானிய உதவிகள் கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும்.

கலைஞர்கள்

நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்க கூடிய மகிழ்ச்சியான வாய்ப்பு அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது. அடிக்கடி படப்பிடிப்புக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்பு உண்டாகும். புதிய வீடு, வாகனங்களை வாங்குவீர்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை அமையும். திருமணமானவர்களுக்கு கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர பாக்கியமும் அமைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து பொருளாதார நிலையும் உயரும். பொன் பொருள் ஆடை ஆபரணமும் சேரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

மாணவ மாணவியர் 

கல்வியில் நல்ல முன்னேற்றமடைய கூடிய காலமிது. முயற்சி செய்வதால் முடியாதது ஒன்றுமில்லை என்ற அளவிற்கு தேர்ச்சிகளை பெறுவீர்கள். பள்ளி கல்லூரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஊக்க மருந்தாக அமையும். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சனி 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளிடம் இருந்த பிரச்சனைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

குருபகவான் லாப ஸ்தானமான 11-ல் உங்கள் ராசியாதிபதி சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். 12-ல் சனி, 1, 7-ல் கேது ராகு சஞ்சாரம் செய்வது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகளை உண்டாக்கும் என்றாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேற கூடிய வாய்ப்பும் ஏற்படும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் சாதகப்பலன் கிட்டும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களையும் எடுப்பீர்கள். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

குருபகவான் ஜென்ம ராசிக்கு 11-ல் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். 12-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வரன்களும் தேடி வரும். 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகத்தில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

குருபகவான் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக 12-ஆம் வீடான தனுசு ராசியில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் நிலவும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையே இருக்கும். வீடு வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்களை ஓரளவுக்கு அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். 12-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை

குருபகவான் ஜென்ம ராசிக்கு 11-ல் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்பதால் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான பதவி உயர்வுகளையும் அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியை வழிபட்டால் சனியால் துன்பம் ஏதும் ஏற்படாது. அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் எள்எண்ணெய் தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்.

13-2-2019 வரை ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது சரபேஸ்வரரை வழிபடுவது, துர்கையம்மனை வழிபடுவதும் உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் –  5,6,8      நிறம் – நீலம், பச்சை            கிழமை – சனி, புதன்

கல் – நீலக்கல்            திசை – மேற்கு                          தெய்வம் – விநாயகர்

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 –  தனுசு

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 –  தனுசு

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

தனுசு   மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

நல்ல அறிவாற்றலும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமும், பலரை வழிநடத்தும் திறனும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குருபகவான் இதுநாள் வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரித்து பல நற்பலன்களை வழங்கி வந்தார். வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள், குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மசனி நடைபெறுகிறது. இதுமட்டுமின்றி வரும் 13-2-2019 முதல் சர்ப கிரகங்களான ராகு, கேது மாறுதலாகி ஜென்ம ராசியில் கேதுவும் 7-ஆம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலங்களை அடைய முடியும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் தேவையற்ற கடன்கள் உண்டாவதை தவிர்க்க முடியும். குருபார்வை 4, 6, 8- ஆம் வீடுகளுக்கு இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். உடல் ஆராக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகளும், போட்டிகளும் குறைந்து எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் தடைப்பட்ட பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப் பின் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் வயிறு கோளாறு, இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்கள், தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். மன¬விக்கும் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். இல்லறவாழ்வில் ஈடுபாடற்ற நிலை ஏற்படும். குல தெய்வ வழிபாடுகளை செய்வது குடும்பத்திற்கு நற்பலனை உண்டாக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும். உற்றார் உறவினர்களின் வருகையால் சுபகாரிய முயற்சிகளுக்கு தடை உண்டாகும். அசையா சொத்துக்களாலும் பூர்வீக சொத்துக்களாலும் எதிர்பாராத அலைச்சல்கள் விரயங்கள் உண்டாக கூடும். பெரியவர்களிடையே வீண் விரோதங்களும் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படுவதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் மிகவும் உத்தமம்.

கமிஷன்- ஏஜென்சி

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். எதிர்பாராத வகையில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். நம்பியவர்களே ஏமாற்றக்கூடிய காலம் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் உண்டாகும். உங்களுக்கு இருந்து வரும் வம்பு வழக்குகளிலும் இழுபறி நிலையே நீடிக்கும். 

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்து செல்வதே நல்லது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பிறர் தட்டி செல்வார்கள். சில நேரங்களில் உடனிருப்பவர்களே சதி செய்வார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்கு பின்பே கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும்.

உத்தியோகம்

உத்தியோஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும். உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள் என்றாலும் பணியில் ஒரு ஈடுபாடற்ற நிலை உண்டாகும். உடல் சோர்வு மந்தமான நிலை போன்றவற்றால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். செய்த வேலையையே திருப்பி திருப்பி செய்ய வேண்டியிருக்கும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும்.

அரசியல்

அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய காலமாகும். மறைமுக எதிர்ப்புகளை உங்களது தேவையற்ற பேச்சுக்களால் சம்பாதித்துக் கொள்ள நேரிடும். கட்சி பணிகளுக்கு நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாதிருப்பது உத்தமம். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் சற்று தாமதப்படும். மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவது நல்லது.

விவசாயிகள்

போதிய நீரின்மை, சரியான வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவற்றால் விளைச்சலை நல்லவிதமாக எதிர்பார்க்க முடியாது. பயிர்களை இன்சூரன்ஸ் செய்வதன் மூலம் அரசு வழியில் சில மானியத் தொகைகளைப் பெற முடியும். விளை பொருளுக்கேற்ற விலையை பெற முடியாமல் போவதால் லாபம் குறையும். புதிய பூமி மனை போன்றவற்றை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

கலைஞர்கள்

புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்றாலும் எதிலும் ஒழுங்காக செயல்பட முடியாத நிலை உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். உடல் நிலையில் சோர்வு உண்டாவதால் படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். உங்களது வாய்ப்புகளை பிறர் தட்டி செல்வார்கள். வரவேண்டிய சம்பள பாக்கிகளும் சற்று தாமதமாக வரும். தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்கள் 

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது உத்தமம். ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வயிறு கோளாறு, கர்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளில் சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சிக்கனமாக செயல்பட்டு எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வீடுமனை வாங்கும் எண்ணங்களை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் சில அலைச்சல்களை சந்திப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்றே மந்தமான நிலை ஏற்பட்டாலும் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி இலக்கை தொடுவீர்கள். உடன் பழகும் நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டு மாநில அளவிலான பெருமைகளை பள்ளி கல்லூரிகளுக்கு சேர்ப்பீர்கள். சுற்றுலா தளங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

உங்கள் ராசியாதிபதி குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது, கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கு தாமதம் உண்டாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

உங்கள் ராசியாதிபதி குருபகவான் 2, 3-க்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் சனி, 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். புத்திர வழியிலும் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். 

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

குருபகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியிலேயே சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்ட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் ராகு கேது மாற்றத்தின் மூலம் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்தித்தாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

இக்காலங்களில் ராசியாதிபதி குருபகவான் அதிசாரமாக ஜென்ம ராசியிலேயே சனி சேர்க்கைப் பெற்று சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பணம் வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். கூட்டாளிகள் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் ஓரளவுக்கு அனுகூலப்பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

குரு இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெற முடியும். கூட்டாளிகளை தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு விரும்பிய இட மாற்றங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை

ராசியாதிபதி குரு புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் சனியும், கேதுவும் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தேவைற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவக்கூடும் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சர்பசாந்தி செய்வது நல்லது.

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது. ஏழரை சனியில் ஜென்ம நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது. வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சர்பசாந்தி செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9          நிறம் – மஞ்சள், பச்சை               கிழமை – வியாழன், திங்கள்

கல் – புஷ்ப ராகம்    திசை – வடகிழக்கு                       தெய்வம் – தட்சிணா மூர்த்தி

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 –  விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 –  விருச்சிகம்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

முன்கோபமும், முரட்டு சுபாவமும் இருந்தாலும் எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்)  முதல் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத அளவுக்கு மந்தநிலை உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். சனி பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. இதுவும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் கணவன்- மனைவியிடையே சண்டை சச்சரவுகள் உண்டாகும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். 13-2-2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் 2-ஆம் வீட்டில் கேதுவும் 8-ல் ராகுவும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். குருபார்வை 5, 7, 9-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்ய கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். செய்யும் தொழிலில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தாமதமாகவே கிடைக்கும். கூட்டாளிகளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அபிவருத்தியை பெருக்கி கொள்ள முடியும். போட்டி பொறாமைகளை சமாளித்து  ஏற்றங்களைப் பெறக் சுடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான நிலையே உண்டாகும். என்னதான் பாடுபட்டாலும் சில நேரங்களில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை பெற முடியாது. உயரதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிப்பு, ஞாபகமறதி, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் போன்றவை உண்டாகும். பெரியோர்களின் சாபத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் உண்டாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை ஏற்படும். ஏழை பிராமணார்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்ப ஒற்றுமை சிறப்பாக தான் இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் நிறைய தடைகளுக்கு பின்பு தான் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளை எதிர்கொள்வீர்கள். புத்திரர்களாலும் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். நினைத்த காரியங்கள் நிறைவேற்றி கொள்ள எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூலமானப் பலனை பெற முடியும்.

கமிஷன்- ஏஜென்ஸி 

கமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் பண விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தினால் வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதாலேயே பல பேரின் விரோதத்தை சம்பாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்புகளும் வெளி வட்டாரத் நட்புகளும் ஓரளவுக்கு நன்மையளிக்கும். 

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் நன்மை தீமை கலந்த பலன்களை அடைவீர்கள். நிறைய போட்டிகள் ஏற்பட்டு புதிய வாய்ப்புகள் கை நழுவி சென்றாலும் எதையும் சமாளித்து ஏற்றத்தை பெறுவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் சில நேரங்களில் அலைச்சல்களை ஏற்படுத்த கூடும் என்பதால் எது நல்லது எது கெட்டது என்பதை ஆராய்ந்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்றே தாமதப்படும். வரவேண்டிய பணத்தொகைகளும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல் தாமதத்தை ஏற்படுத்தும்.

உத்தியோகம்

பணியில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். என்னதான் பாடுபட்டாலும் சில நேரங்களில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை பெற முடியாது. உயரதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைத்தாலும் ஊதிய உயர்வுகள் தாமதமாகும். 

அரசியல் 

மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். மறைமுக வருவாய்களால் சில பிரச்சினைகளை சந்திக்க கூடும் என்பதால் இருக்கும் சொத்துக்களுக்கு சரியான ஆவணங்களை வைத்திருப்பது நல்லது. உடன் இருப்பவர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

விவசாயிகள்

புழு பூச்சிகளின் தொல்லைகள் அதிகரிப்பதால் பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் லாபம் குறைவாக இருக்கும். அரசு வழியில் எந்தவித உதவியையும் எதிர்பார்க்க முடியாது. பங்காளிகளால் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலனைப் பெற முடியாததால் மனநிம்மதி குறையும். பொருளாதார நிலையும் நெருக்கடியாக இருக்கும். வேலை ஆட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

கலைஞர்கள் 

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள் என்றாலும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். வரவேண்டிய பணத்தொகைகள் சற்று தாமதமாகவே வரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலைகள் உண்டாகும். சுக வாழ்வு பாதிப்படையும் என்றாலும் ரசிகர்களின் ஆதரவு உங்களின் எல்லா துன்பங்களையும் மறைய செய்யும்.

பெண்கள் 

உடல் ஆரோக்கியத்தில் வயிறு கோளாறு, மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தோன்ற கூடும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். சிலருக்கு புத்திர பாக்கியங்கள் தாமதப்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பண விவகாரங்களில் பிறருக்கு வாக்குறுதிகள் கொடுப்பதோ பிறரிடம் எந்த பொருளையும் இரவல் வாங்குவதோ கூடாது. பணிபுரியும் பெண்கள் முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

மாணவ மாணவியர் 

கல்வியில் சற்று கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். படித்ததெல்லாம் மறந்து போகும் அளவிற்கு ஞாபக மறதி உண்டாகும். கல்லூரிகளில் பயிலுபவர்கள் மனது அலைபாய கூடிய சூழநிலை ஏற்படும். மனதை போகின்ற போக்கில் விடாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பது கல்வியின் முன்னேற்றத்திற்கு நல்லது. உடன் பயிலுபவர்கள் சாதகமாக இருப்பார்கள். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்பட்டால் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெறமுடியும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் பாத சனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கை கால் வலி போன்றவை தோன்றி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டி ஆதாயங்கள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். 3-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சுமாரானநிலை இருக்கும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேற தாமதநிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். குரு, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

குருபகவான் சனியின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதும். 2-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் ஏற்படும். முடிந்தவரை பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். கேது 3-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

குருபகவான் 8,11- க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு மந்தநிலை உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்ப கிரக மாற்றத்தின் மூலம் 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக முயற்சித்தால் மட்டுமே நற்பலன் கிட்டும். குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

குருபகவான் இக்காலங்களில் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வதால் அனுகூலமான பலன்களை பெற முடியும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சனைகள் யாவும் சற்றே குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். சனி, கேது 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும்.  கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் லாபங்கள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் உயர் கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

குருபகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டி வரும். சனிபகவானை வழிபடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை

குருபகவான் புதனின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வு, மந்த நிலை படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதில் தடைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப் பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது. ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனி யந்திரம் வைத்து வழிபடுவது வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். 13-2-2019 முதல் சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிக்க இருப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சர்பசாந்தி செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9                   நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை – செவ்வாய், வியாழன்

கல் – பவளம்,                              திசை – தெற்கு                           தெய்வம் – முருகன்

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – துலாம்

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – துலாம்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

துலாம்   சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

கள்ளமில்லா உள்ளத்துடன் அனைவரிடமும் அன்பாக பழகும் கருணை உள்ளம் கொண்ட துலா ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் விலகி பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியை உண்டாக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் ஆடை ஆபரணங்கள் சேர்க்கையும், வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுவரை 4, 10-ஆகிய கேந்திர ஸ்தானங்களில் சஞ்சரித்த ராகு கேதுவும் வரும் 13-2-2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் 3-ல் கேது 9-ல் ராகுவாக சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பே ஆகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறுசிறு பாதிப்புகள் கூட விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு பாராட்டும். குருபார்வை 6, 8, 10-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதோடு மறைமுக எதிர்ப்புகளும் மறையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் நெருக்கடிகள் யாவும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகும். தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தடைபட்ட ஊதிய உயர்வு, இடமாற்றம் அனைத்தும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவர். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். சிறுசிறு பாதிப்புகள் அவ்வவ்போது தோன்றினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடுவதால் மனநிம்மதியும் மகிழச்சியும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் மறைந்து கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியமும் அமையும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். கடன்கள் குறையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தி ஒன்று இல்லம் தேடி வந்து சேரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் வண்டி வாகனங்களை புதுப்பிக்கும் வாய்ப்பும் உண்டாகும். தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் விலகியிருந்த உறவினர்கள் இல்லம் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள். 

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் சம்பாதிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். நீண்ட நாட்களாக நடைபெறும் வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பெரிய மனிதர்களின் நட்பு முன்னேற்றத்திற்கு உதவும்.

தொழில் வியாபாரம்

புதிய முயற்சிகள் மூலம் லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறுவீர்கள். புதிய கிளை நிறுவனங்களை நிறுவக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். கூட்டாளிகளும் வேலையாட்களும் உங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பினை தருவார்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினை பெற முடியும். கடந்த காலங்களில் இருந்து வந்த போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் விலகுவதால் துணிவுடனும் தைரியத்துடனும் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் வாய்ப்புகள் குவியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலனை பெறுவீர்கள்.

உத்தியோகம் 

தங்கள் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். எடுக்கும் செயல்களை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உடனிருப்பவர்களும் மிகவும் ஒத்துழைப்பாக செயல்படுவதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு தற்போது தடை இருக்காது. உயரதிகாரிகளின் ஆதரவுகள் மேலும் மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வகையில் வேலை வாய்ப்புகள் கிடைக்க பெறுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

அரசியல்

கட்சியில் உங்களுக்கு பெயர் புகழ் உயரும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். உங்களின் பேச்சிற்கும் நீங்கள் கூறும் ஆலோசனைக்கும் அரசியலில் மதிப்பு மரியாதையும் இருக்கும். சென்ற இடமெல்லாம் சிறப்பினை பெறுவீர்கள். மக்களின் தேவையறிந்து செயல்படுவதால் மக்களின் சிறந்த ஆதரவினை பெறுவீர்கள். பத்திரிக்கை உங்களின் நற்செயல்களை பாராட்டும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும். உழைப்பிற்கான பலனை இருமடங்காகப் பெற முடியும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் அரசு மூலம் உதவி கிடைக்கும். பூமி நிலம் போன்றவற்றையும் வாங்கிப் போடுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் சேமிப்பும் பெருகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கலைஞர்கள்

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் மகிழ்ச்சிகளும் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பத்திரிகையாளர்களும் உங்களை பற்றிய நற்செய்திகளை மட்டுமே வெளியிடுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். உற்றார், உறவினர்களால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். வீடு மனை, வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவுகள் நினைவாகும். சிலர் கட்டிய வீட்டை புதுப்பிப்பார்கள். பணிபுரியும் பெண்கள் பணியிலிருந்த நெருக்கடிகள் விலகி பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மாணவ மாணவியர்

கல்வியில் இருந்த மந்த நிலைகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலனை பெறுவீர்கள். விளையாட்டு போட்டி, பேச்சு போட்டி போன்றவற்றில் மாநில அளவில் பல வெற்றிகளைப் பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதும், 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு கரம் நீட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபங்களை பெறுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்வர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகுவதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவதோடு ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

குருபகவான் கேந்திர திரிகோணாதிபதியாகி உங்கள் ஜென்ம ராசிக்கு யோககாரகனான சனியின் நட்சத்திரத்தில் தன ஸ்தானமான 2- ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், 3- ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் கிட்டும். நல்ல வரன்களும் தேடி வரும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைப்பதால் வெளிவட்டார தொடர்புகளும் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். எதிர்பார்க்கும் அரசு உதவிகளும் கிடைக்கும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் தன ஸ்தானமான 2- ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதும், 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் நற்பலன்களை வாரி வழங்கும் அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் விலகி அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தால் கேது 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.       

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

இக்காலங்களில் குருபகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரித்தாலும் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். சனி, கேது 3-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்கு பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். தொழிலாளர்கள் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளை தட்டி செல்வீர்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சனி, கேது 3-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும் என்பதால் நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப்பலனை பெறுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை

உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் தன ஸ்தானமான 2- ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதும், 3-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13-2-2019 வரை சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சர்பசாந்தி செய்வது உத்தமம். 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 4,5,6,7,8                                நிறம் – வெள்ளை, பச்சை                கிழமை – வெள்ளி, புதன்

கல் – வைரம்                               திசை – தென் கிழக்கு           தெய்வம் – லக்ஷ்மி

 

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – கன்னி

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

கன்னி    உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

மென்மையான குணமும், அனைவரிடமும் இதமாக பழகும் ஆற்றலும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, இதுவரை தனஸ்தானமான 2-ல் சஞ்சரித்து பல நற்பலன்களை வழங்கிய ஆண்டு கோளான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களும் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். இது மட்டுமன்றி சனி 4-ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனியும் நடைபெறுகிறது. இதனால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்ப கிரக மாற்றத்தின் மூலம் கேது 4-ஆம் வீட்டிலும் ராகு 10-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளனர். இதுவும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவுவதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். குருபார்வை 7, 9, 11-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்கு பின்பு அனுகூலப்பலனைப் பெற முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, நேரத்திற்கு உணவு உண்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப் பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை ஏற்படும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்ய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தியபடியே இருக்கும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்தநிலை ஏற்படும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் தடையும் உடன்பிறப்புகளால் தேவையற்ற மனசஞ்சலங்களும் ஏற்படக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டாலும் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களும் உங்களை ஒரு விரோதி போலவே பாவிப்பார்கள். எதிர்பார்க்கும் உதவிகள் கூட பல தடைகளுக்கு பின் தான் கிடைக்கும். அசையா சொத்துகளால் எதிர்பாராத விரயங்கள் அதிகரிக்கும். பண வரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே கடன் வாங்க வேண்டியிருக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம்.

கமிஷன்- ஏஜென்சி

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறைகளில் இருப்போர் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமிது. பணவரவுகளில் இடையூறுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்கள் ஏற்படும்.  கொடுத்த கடன்களை வசூலிப்பதில் பல இடையூறுகளை சந்திப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.

தொழில் வியாபாரம் 

தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய ஆடர்கள் கைமாறி போகும். மறைமுக எதிர்ப்புகள் எங்கிருந்து வருகிற தென்று கண்டு பிடிக்க முடியாமல் மனநிம்மதி குறையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் ஒருசில வாய்ப்புகள் வந்தாலும் குறித்த நேரத்திற்கு டெலிவரி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை விரிவு செய்ய இயலாத சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்களும் டென்ஷன்களும் அதிகரிக்கும். லாபங்கள் குறையும்.

உத்தியோகம்

பணியிலிருப்பவர்கள் மிகவும் வளைந்து கொடுத்து செல்ல வேண்டிய காலமாகும். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகளை பிறர் தட்டி செல்வார்கள். இது மட்டுமின்றி பிறர் செய்யும் தவறுகளுக்கும் உங்களை பொறுப்பேற்க செய்வார்கள். வீண் பழிச்சொற்கள் உங்களின் மன நிம்மதியை குறைக்கும். வேலைபளு அதிகரிப்பதால் உடல் நிலையானது சோர்வடையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

அரசியல்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்ள அதிக பாடுபட வேண்டிய இருக்கும். மக்களின் ஆதரவு குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகள் ஏற்படுவதால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் அவமானப்பட நேரிடும். வீண் விரயங்கள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். வயல் வேலைகளுக்கு சரியான வேலையாட்கள் கிடைக்காமல் பணியில் தடை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் தாமத நிலை ஏற்படும். நீர்மட்டம் குறைவு, அதிக காற்று, மண் வளமின்மை போன்றவற்றால் பயிர்கள் பாதிப்படையும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். விளைநிலங்கள் வாங்கும் முயற்சிகளில் தடை ஏற்படும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொண்டால் மட்டுமே காலத்தை நகர்த்த முடியும். பிடிவாதம், முன்கோபம், அதிகார குணம், போன்ற அனைத்தையும் தவிர்த்து சக கலைஞர்களையும் அனுசரித்து நடப்பதே நல்லது. பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். சுகவாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.

பெண்கள்

பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. மாதவிடாய் கோளாறு, உடல் சோர்வு, புத்திர பாக்கியம் தாமதப்படும் நிலை ஏற்படும். கணவர் வழி உறவுகளை அனுசரித்து நடப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சுமாராக தான் இருக்கும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் சிலரிடம் நல்ல பெயரை எடுக்க முடியாது. மனதில் உள்ள குறைகளை கூறுவதென்றால் கூட தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருப்பதால் பொருளாதாரத்தில் நெருக்கடி உண்டாகும்.

மாணவ- மாணவியர் 

கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. மந்தநிலை, ஈடுபாடுயின்மை, தேவையற்ற பொழுதுபோக்கு மற்றும் நண்பர்களின் சகவாசங்கள் போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மதிப்பெண்கள் குறைவதால் பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாகுவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் குரு சஞ்சரிப்பதும், 4-ல் சனி சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைபப் பெற முடியும். குரு பகவானை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

குருபகவான் ஜென்ம ராசிக்கு 3-ல் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 4-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் ராகு 11-ல் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

குருபகவான் ஜென்ம ராசிக்கு 3-ல் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 4-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தால் 4-ல் கேது 10-ல் ராகு சஞ்சாரம் செய்ய இருப்பது சுமாரான அமைப்பே ஆகும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை ஓரளவுக்கு அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

இக்காலங்களில் குருபகவான் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களை பெற முடியும் என்றாலும், சனி 4-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமதநிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்றே ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் சில ஆதாயங்களை பெற முடியும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். மாணவர்கள் உடல்நல பாதிப்புகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். சனி 4-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சிறுசிறு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம்.  வீடு, மனை வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை

குருபகவான் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்றாலும், ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதும், 4-ல் சனி சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சனைகளால் நடக்க விருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. நேரத்திற்கு உணவு உண்பது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது. வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.

சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆஞ்சநேயரையும், வெங்கடாசலபதியையும் வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது. துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபடுவது ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,7,8                   நிறம் – பச்சை, நீலம்            கிழமை – புதன், சனி

கல் –  மரகத பச்சை               திசை – வடக்கு          தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 சிம்மம் 

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 சிம்மம் 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

சிம்மம்    மகம்,  பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்

தைரியமும் துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்வில் சிறந்த முறையில் முன்னேறும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஆண்டு கோளான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் உங்களுக்கு ஏற்ற தாழ்வுடைய பலன்களையே உண்டாக்கும். குடும்ப ஒற்றுமையானது சுமாராகத்தான் இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலையும், சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பும் உண்டாகும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடைகளுக்கு பின்பு நற்பலனை பெற முடியும். சனிபகவான் 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் புத்திரர்களாலும் சிறுசிறு மனக்கவலைகள் ஏற்படும். அசையா சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் பங்காளிகளிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தற்போது 6-ல் கேது சஞ்சரிப்பதும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு பகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் ஓரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். குரு பார்வை 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் தான் அமையும். எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு அலைச்சலை ஏற்படுத்தும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் பெரிய தொகைகளை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களும் நிறைய நெருக்கடிகள் போட்டி பொறாமைகள் போன்றவற்றை எதிர்கொண்டு ஏற்றம் பெறுவார்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எடுக்கும் முயற்சிகளில் நற்பலனை பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு உடல்நிலை சோர்வடையும். குடும்பத்தில் உள்ளவர்களும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தேவையற்ற அலைச்சல்களும் டென்ஷன்களும் அதிகரிக்கும். அசையா சொத்துக்களால் வீண் கவலைகள் சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்பு உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகளால் அஜீரணக் கோளாறுகள் உண்டாகும். வீண் விரயங்கள் அதிகரிக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமான தான் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் நிறைய தடைகளுக்கு பின் தான் நல்லது நடக்கும். புத்திரர்களால் சிறுசிறு மனக்கவலைகள் ஏற்படும். அசையா சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்கலாம்.

கமிஷன் ஏஜென்சி

கமிஷன் ஏஜென்சி காண்டிராட் துறைகளில் இருப்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சுமாரான நிலை இருக்கும் என்பதால் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எதிர்பாராத வகையில் சிறுசிறு வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரிடும். 

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டிகளும் பொறாமைகளும் ஏற்படக்கூடிய காலமாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதால் தொழிலை விரிவு செய்யும் நோக்கத்தில் சற்று தேக்கம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பும் கூட்டாளிகளின் ஆதரவும் ஓரளவுக்கு உயர்வினை உண்டாக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளின் மூலம் வர வேண்டிய ஆடர்களின் எண்ணிக்கை சற்று குறையும். புதிய வாய்ப்புகள் கைநழுவும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

உத்தியோகம்

பணியில் சற்று கெடுபிடிகள் அதிகரிக்கும். சில நேரங்களில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் உயரதிகாரிகளின் ஏச்சிக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஒத்துழைப்புடன் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலை பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை பிரிய நேரிட்டாலும் அதன மூலம் ஓரளவுக்கு பொருளாதார உயர்வுகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பினை சரியாகி பயன்படுத்தி கொள்வது நல்லது. வேலைபளு அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.

அரசியல்

அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பணியாற்றுவது நல்லது. மக்களின் ஆதரவை பெற இதுவே சிறந்த முயற்சியாகும். பலவகையில் நெருக்கடிகள், எதிர்பாராத வீண் விரயங்கள், எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்படக்கூடும். என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றத்தை பெறக்கூடிய வாய்ப்புக்களை பெறுவீர்கள். உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் பழகுவது உத்தமம். மறைமுக வருவாய்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

விவசாயிகள்

விளைச்சல் சுமாராக இருந்தாலும் பட்ட பாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிட முடியும். பங்காளிகளிடையே ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் வீண்வம்பு வழக்குகளும் உண்டாகும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நன்மையளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிட்டும். கால்நடைகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வதும், உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுப்பதும் உத்தமம். வரவேண்டிய சம்பள பாக்கிகள் சற்று தாமதநிலை ஏற்படுவதால் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவும். பத்திரிக்கை நண்பர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படுவதும், தேவையற்ற கிசு கிசுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.

பெண்கள் 

உடல் ஆரோக்கியத்தில் அவ்வவ்போது ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளால் உடல் சோர்வு மந்த நிலைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அன்றாடப் பணிகளில் திறம்படவே செயல்படுவீர்கள். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களை சமாளிப்பீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. அசையா சொத்துகளால் சற்று அலைச்சல்கள் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணிபுரியும் பெண்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் வேலையில் நிம்மதியான நிலை இருக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட கூடும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு ஓரளவுக்கு வெற்றியினை பெறுவீர்கள். சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதில் மகிழ்ச்சி இருந்தாலும் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நட்புகளை தவிர்ப்பதும் உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 6-ல் கேது சஞ்சாரம் செய்வதாலும் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகி மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வண்டி வாகணங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சனி 5-ல் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்து விஷயங்களில் சில பிரச்சினைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம். குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

குரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4- ல் சஞ்சரிப்பதும், சனி 5-ல் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். துர்கை அம்மனை வழிபாடு செய்வதால் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

குருபகவான் தன, லாபாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4- ல் சஞ்சரிப்பதும், சனி 5-ல் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பே என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வரும் 13-2-2019-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 11-ல் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்புங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

குருபகவான் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் அதிசாரமாக சஞ்சாரம் செய்வதாலும், ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். 5- ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமையும், நிம்மதியும் சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற நோக்கங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சனிபகவானை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதும், 5-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் வீண் விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு உண்டாக கூடிய மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறி விட முடியும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளில் சற்று தாமதநிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பிறகே அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற சற்று தாமத நிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை

குருபகவான் தன, லாபாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4- ல் சஞ்சரிப்பதும், சனி 5-ல் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது. சனி 5-ல் சஞ்சரிப்பதால் ஆஞ்சநேயரையும், வெங்கடாசலபதியையும் வழிபடுவது சிறப்பு.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9                      நிறம் – வெள்ளை, சிவப்பு                 கிழமை – ஞாயிறு, திங்கள்

கல் –  மாணிக்கம்                    திசை – கிழக்கு                          தெய்வம் – சிவன்

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – கடகம்  

 

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – கடகம்  

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

கடகம்   புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அழகான உடலமைப்பும், மற்றவர்களை கவரக்கூடிய பேச்சு திறனும் கொண்ட கடகராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04.10.2018 முதல்(திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்)  உங்களின் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பணவரவுகள் சரளமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்களும் புத்திர வழியில் மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையானது உயர்வடையும். கடன்கள் அனைத்தும் குறையும். உற்றார் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள். சனி ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் இதுவரை ஜென்ம ராசியிலும், 7-ஆம் வீட்டிலும் சஞ்சரித்த ராகு கேது 13-2-2019 முதல் மாறுதலாகி கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் ஏற்றத்தையே ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக குறைவதால் மருத்துவ செலவுகளும் மறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவதால் மனநிம்மதி உண்டாகும் பகைவர்களும் நட்பு கரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடித்து பாராட்டுதல்களை பெறுவீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். குருபார்வை ஜென்ம ராசிக்கும், 9, 11-ஆம் வீடுகளுக்கும் இருப்பதாலும் கிரகங்களின் சாதமான சஞ்சாரத்தாலும் தொட்டதெல்லாம் துலங்கும். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். நினைத்ததெல்லாம் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்த மருத்துவ செலவுகள் குறையும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சிலருக்கு வாரிசு யோகம் உண்டாகி மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களும் நலமுடன் இருப்பதால் எல்லா பிரச்சினைகளும் விலகி மன நிம்மதி உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வரும் ஆரோக்கிய பாதிப்பும் படிப்படியாக குறைந்து உடல் நிலை முன்னேற்றம் அடையும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த சோதனைகளும் வேதனைகளும் படிப்படியாக குறையும். நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்ளக்கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களும் உங்களை புரிந்து கொண்டு நட்பு கரம் நீட்டுவார்கள். பணவரவுகளும் தாராளமாக அமையும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

கமிஷன்- ஏஜென்சி 

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர்க்கு நல்ல லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்க்கும் ஆதாயங்களைப் பெற முடியும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகமானப் பலன்களைப் பெற முடியும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம்

செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறைவதால் வரவேண்டிய வாய்ப்புகளும் லாபங்களும் தடையின்றி வந்து சேரும். புதிய கூட்டாளிகள் இனைவார்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமானப் பலனை அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் நற்பலன்கள் எளிதில் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகளால் அனுகூலமானப் பலன்கள் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய பயணங்களால் நல்ல லாபங்களை அடைவீர்கள்.

உத்தியோகம்

செய்யும் உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். கடந்த கால நெருக்கடிகள் யாவும் குறையும். உயரதிகாரிகளின் ஆதரவுகளும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். ஊதிய உயர்வுகளால் பொருளாதார நிலையானது உயரும். பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வேலை பளு குறையும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

அரசியல்

தங்கள் எதிர்பார்த்த மாண்புமிகு பதவிகள் தடையின்றி கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். மறைமுக வருவாய்கள் அதிகரிப்பதால் பொருளாதாரநிலை உயரும். பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவும், மக்களின் ஆதரவும் உங்கள் பெயர் புகழை உயர்த்தும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலமானப் பலனை பெறுவீர்கள்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலை உயர்வடையும். புதிய பூமி மனை போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கால்நடைகளாலும் லாபம் உண்டாகும். காய், கனி போன்றவற்றாலும் சிறப்பான லாபத்தை பெறமுடியும். வங்கி கடன்கள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகள் அனைத்தும் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலையும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். ஆடம்பர கார் பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். சிலர் சிறப்பான புத்திர பாக்கியங்களை பெறுவர். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து நட்பு கரம் நீட்ட கூடிய அளவிற்கு சந்தர்ப்பங்கள் அமையும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராளமான பண நடமாட்டம் இருப்பதால் வீடு, மனை வாங்க வேண்டுமென்ற கனவுகளும் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு பணியில் உயர்வுகள் கிட்டும்.

மாணவ மாணவியர்

கல்வியில் நல்ல உயர்வினை அடைய முடியும். சிறப்பான மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் அற்புதமாக இருப்பதால் மனநிறைவு உண்டாகும். விளையாட்டு போட்டி, கட்டுரை, பேச்சுப் போட்டி போன்றவற்றில் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். நல்ல நண்பர்களின் நட்புகளால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

உங்கள் ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்வதும், 6-ல் சனி சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் கடந்த கால பாதிப்புகள் விலகி மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். துர்கை அம்மனை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

குருபகவான் சனியின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்வதும், 6-ல் சனி சஞ்சரிப்பதும் நற்பலன்களை ஏற்படுத்தும் என்பதால் எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றி கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவேர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ப்பார்கள். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

குருபகவான் இக்காலங்களில் 3,12-க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதும், சனி 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தற்போது 1, 7-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது வரும் 13-2-2019 முதல் கேது 6-ஆம் வீட்டிலும், ராகு 12-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். ராகுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

இக்காலங்களில் குருபகவான் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய தாமதநிலை ஏற்படும். சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சிறப்பான நிலையே இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

குரு இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சிறுசிறு இடையூறுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றாலும் சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் மேலும் நற்பலன்கள் உண்டாகும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை

குருபகவான் இக்காலங்களில் 3, 12-க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13-2-2019 வரை சர்பகிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9                   நிறம் – வெள்ளை, சிவப்பு                கிழமை – திங்கள், வியாழன்

கல் –  முத்து                       திசை – வடகிழக்கு                தெய்வம் – வெங்கடாசலபதி