2019- ஏப்ரல் மாத ராசிப்பலன்

2019- ஏப்ரல் மாத ராசிப்பலன்

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

சூரிய செவ் ராகு
புதன்(வ)  சுக்கி திருக்கணித கிரக நிலை

 

சனி குரு கேது

                               

கிரக   மாற்றம்

10-4-2019 குரு வக்ர ஆரம்பம் இரவு 10.08 மணிக்கு

12-4-2019 மீனத்தில் புதன் அதிகாலை 04.24 மணிக்கு

14-4-2019 மேஷத்தில் சூரியன் பகல் 02.09 மணிக்கு

16-4-2019 மீனத்தில் சுக்கிரன் அதிகாலை 01.04 மணிக்கு

23-4-2019 விருச்சிகத்தில் குரு அதிகாலை 01.09 மணிக்கு

30-4-2019 சனி வக்ர ஆரம்பம் காலை 06.39 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்குவதில் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி நல்ல லாபம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக போட்டிகள் இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் சாதகமான பலனை அடைய முடியும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள்.

பரிகாரம்- திங்கட்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வணங்கி வழிபடுவது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் –  21-04-2019 பகல் 11.10 மணி முதல் 23-04-2019 மாலை 05.14 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று இம்மாதத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சகல வித்திலும் மேன்மையை தரும் அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறலாம்.

பரிகாரம்-  சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

சந்திராஷ்டமம் –23-04-2019 மாலை 05.14 மணி முதல் 26-04-2019 அதிகாலை 03.14 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரனுடன் 9-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 10, 11-ல் சஞ்சரிப்பதும் வலமான பலனை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றி விட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றங்களும் ஏற்படலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம்-  துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் –  29-03-2019 இரவு 07.23 மணி முதல் 01-04-2019 காலை 08.22 மணி வரை மற்றும் 26-04-2019 அதிகாலை 03.14 மணி முதல் 28-04-2019 மாலை 03.45 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமும் நிறைவேறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது  நல்லது. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் என்றாலும் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

பரிகாரம்-  புதன் கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணு வழிபாடு மேற்கொண்டால் காரிய தடைகள் விலகி வெற்றி கிட்டும்.

சந்திராஷ்டமம் –01-04-2019 காலை 08.22 மணி முதல் 03-04-2019 இரவு 08.48 மணி வரை மற்றும் 28-04-2019 மாலை 03.45 மணி முதல் 01-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்றாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் எல்லாம் ஓரளவு குறையும். தேவைகள் யாவும் பூரத்தியாகும். திருமண சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலரின் அசையும் அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது மட்டும் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

பரிகாரம்-  சிவ பெருமானையும் விநாயக பெருமானையும், வணங்கி வழிபட்டால் எல்லையில்லா தொல்லைகள் கூட இல்லாமல் போய் விடும்.

சந்திராஷ்டமம் –03-04-2019 இரவு 08.48 மணி முதல் 06-04-2019 காலை 07.23 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 7, 8-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பாகும். வீண் அலைச்சல், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் போன்றவை ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சினைகளால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிறுசிறு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தை செலவழிக்காமல் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்- பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் நந்தியையும் வணங்கி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சனி பகவான் வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம் –06-04-2019 காலை 07.23 மணி முதல் 08-04-2019 மாலை 03.53 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் இம்மாதம் முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றியை தரும் உன்னதமான அமைப்பாகும். பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. செவ்வாய் 8-ல் இருப்பதால் வாகனங்களில் செல்கின்ற போது நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அனுகூலங்களும் உண்டாகும். சிறப்பான பண வரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகளும் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். வீடு மனை வாங்கும் விஷயத்தில் சிறு தடை தாமதத்திற்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்-  செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து ஆறுமுக கடவுளான முருக பெருமானை வணங்கி வழிபட்டால் மேன்மையான பலன்களை அடையலாம். சஷ்டி விரதம் இருப்பது நல்லது.

சந்திராஷ்டமம் –  08-04-2019 மாலை 03.53 மணி முதல் 10-04-2019 இரவு 10.33 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து இருக்கும் சிக்கல்கள் குறையும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் 8-ல் ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்.

பரிகாரம்-  பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் நந்தியையும் வணங்கி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். முருக வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம் –10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும் என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக் கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறையும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் முன்னேற்றம் ஏற்படும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துகள் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கடினமாக உழைத்தால் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

பரிகாரம்-  பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு மேற்கொள்வதும், அம்மன் வழிபாடு செய்வதும் மேன்மையான பலன்களை அளிக்கும்.

சந்திராஷ்டமம் –13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவி பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தாராள தனவரவால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்களும் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்-  சனிக்கிழமைகளில் சனிபகவான் வழிபாடு செய்வது, ஆஞ்சநேயருக்கு வெற்றிமாலை சாற்றி வழிபடுவது, சனிக்கவசம் மற்றும் ஹனுமன் துதிகளை படிப்பது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம் –15-04-2019 அதிகாலை 05.57 மணி முதல் 17-04-2019 காலை 07.15 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் எல்லா வகையிலும் நல்ல பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீடு வாகனங்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு சாதகப்பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அபிவிருத்து பெருகி லாபம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை பெற முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும்.

பரிகாரம்-  வெள்ளி கிழமைகளில் விரதமிருந்து மகாலட்சுமி தேவிக்கு அர்ச்சனை ஆராதனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சமும், சகல செல்வங்களும் வந்து சேரும்.

சந்திராஷ்டமம் –17-04-2019 காலை 07.15 மணி முதல் 19-04-2019 காலை 08.25 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறுவதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். ஜென்ம ராசியில் சூரியன் இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

பரிகாரம்- பிரதோஷ சிவ பெருமானையும் அம்பிகையும் வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை அளிக்கும்.

சந்திராஷ்டமம் –  19-04-2019 காலை 08.25 மணி முதல் 21-04-2019 பகல் 11.10 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

10.04.2019 பங்குனி 27 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

17.04.2019 சித்திரை 04 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

18.04.2019 சித்திரை 05 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசி திதி ஹஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

22.04.2019 சித்திரை 09 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியை திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

26.04.2019 சித்திரை 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

29.04.2019 சித்திரை 16 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

 

2019- – பிப்ரவரி மாத ராசிப்பலன்

2019- – பிப்ரவரி மாத ராசிப்பலன்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ்
திருக்கணித கிரக நிலை

 

ராகு
சூரிய கேது  புதன்
சனி குரு  சுக்கி

 

கிரக   மாற்றம்

5-2-2019 மேஷத்தில் செவ்வாய் இரவு 11.48 மணிக்கு

7-2-2019 கும்பத்தில் புதன் பகல் 10.10 மணிக்கு

13-2-2019 கும்பத்தில் சூரியன் காலை 08.48 மணிக்கு

24-2-2019 மகரத்தில் சுக்கிரன் இரவு 10.45 மணிக்கு

25-2-2019 மீனத்தில் புதன் காலை 08.53 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே மாத கோளான சூரியன் புதன் சேர்க்கைப் பெற்று 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபகரமான பலன்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் எற்படும். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமும் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். நல்ல வரன்களும் தேடி வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி புது உற்சாகத்துடனும் தெம்புடனும் செயல்பட்டு முன்னேற்றம் அடைவார்கள்.

பரிகாரம் துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும்.

சந்திராஷ்டமம் 25-02-2019 மாலை 04.42 மணி முதல் 28-02-2019 அதிகாலை 00.46 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தாராள தனவரவு உண்டாகி உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சிறு தடை தாமதம் ஏற்பட்டாலும் வரும் 13-ஆம் தேதி முதல் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம் புதன் கிழமைகளில் விஷ்ணு வழிபாடும் மகா லட்சுமி வழிபாடும் செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம். சனி பகவான் வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம் 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை மற்றும் 28-02-2019 அதிகாலை 00.46 மணி முதல் 02-03-2019 பகல் 12.40 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் செவ்வாய் 10, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் வலமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் படிபடியாக குறையும். உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் மாத முற்பாதியில் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, விட்டு கொடுத்து செல்வது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் நடந்து கொண்டால் அவர்கள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்களுக்குரிய பணிகளை சிறப்புடன் செய்து முடித்து பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில் ஈடுபடாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண் பெறலாம்.

பரிகாரம் சிவ வழிபாடு செய்வதாலும், சதுர்த்தி விரதங்கள் இருப்பதாலும் எடுக்கும் காரியத்தில் சித்தி உண்டாகும்.

சந்திராஷ்டமம் 03-02-2019 காலை 06.39 மணி முதல் 05-02-2019 இரவு 07.35 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே தனகாரகன் குரு பகவான் 5-ல் வலுவாக சஞ்சரிப்பதும் 6-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். வரும் 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்பு கரம் நீட்டுவார்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். பொன் பொருள் சேரும். கடன்களும் குறையும். திருமண சுபமுயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். உடலில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்கி பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவார்கள்.

பரிகாரம் சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்களை கிடைக்கும்.

சந்திராஷ்டமம் 05-02-2019 இரவு 07.35 மணி முதல் 08-02-2019 காலை 08.18 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன், கேது சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதும் பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு ஆரோக்கிய குறைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான நிலை இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வதாலும், குரு யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் 08-02-2019 காலை 08.18 மணி முதல் 10-02-2019 இரவு 07.37 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதும் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக மேன்மையை தரும். மாத கோளான சூரியன் இம்மாதம் 13-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் மாத முற்பாதியில் இருக்ககூடிய சிறு சிறு பிரச்சினைகள் கூட முழுமையாக விலகி அனுகூலங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். சிலரின் வெளிநாட்டு கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் முயற்சி செய்தால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.

பரிகாரம் சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.

சந்திராஷ்டமம் 10-02-2019 இரவு 07.37 மணி முதல் 13-02-2019 அதிகாலை 04.19 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும் தன ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் வெற்றி மேல் வெற்றியை தரும் அமைப்பாகும். எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். கடன்கள் குறையும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஒருசில ஆதாயங்கள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வெளி தொடர்புகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுத்த கடன்களும் வசூலாகும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம் ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் 13-02-2019 அதிகாலை 04.19 மணி முதல் 15-02-2019 காலை 09.32 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே மாத கோளான சூரியன் இம்மாதம் 13-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதாலும் ராசியதிபதி செவ்வாய் 5-ஆம் தேதி முதல் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உங்கள் ராசிக்கு 2-ல் சனி இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்வதில் எந்த பாதிப்பும் இருக்காது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால் இறை அருள் கிட்டும்.

சந்திராஷ்டமம் 15-02-2019 காலை 09.32 மணி முதல் 17-02-2019 பகல் 11.24 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சனி 12-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் மனஅமைதி குறைவு ஏற்படக்கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சிக்கனமாக நடந்து கொள்வது உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். மாத கோளான சூரியன் இம்மாதம் 13-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் மாத பிற்பாதியில் எதிர்பாராத தனசேர்க்கை ஏற்பட்டு உங்களது சிக்கல்கள் ஓரளவிற்கு குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் சற்று குறைய நேரிடும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள்.

பரிகாரம் சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருந்து மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்தால் மன சங்கடங்கள் குறையும்.

சந்திராஷ்டமம் 17-02-2019 பகல் 11.24 மணி முதல் 19-02-2019 பகல் 11.03 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே தனகாரகன் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஜென்ம ராசியில் சூரியன், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக செயல்படுவதும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கடினமாக உழைத்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.

பரிகாரம் பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.

சந்திராஷ்டமம் 19-02-2019 பகல் 11.03 மணி முதல் 21-02-2019 காலை 10.23 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே ராசியதிபதி சனி 11-ல் சஞ்சரிப்பதும் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியை தரும் அமைப்பாகும். செவ்வாய் இம்மாதம் 5-ஆம் தேதி முதல் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, எந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல், குடும்பத்தில் நிலவிய சிறு சிறு பிரச்சினைகள் குறையும் அமைப்பு உண்டாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் அவர்களுடன் பழகும் போது பேச்சில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். உடல் நிலையில் இருந்த சிறுசிறு பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் போட்டி பொறாமைகள் குறையும். விரோதிகள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயர் அதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள்.

பரிகாரம் முருக வழிபாடு செய்வதாலும், சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் அனைத்து துயரங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டமம் 21-02-2019 காலை 10.23 மணி முதல் 23-02-2019 பகல் 11.27 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும் மாத கோளான சூரியன் இம்மாதம் 13-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதாலும் நல்ல பணவரவுகள் இம்மாதம் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்று குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதார மேன்மையால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆரோக்கியத்தல் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் மட்டும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் 23-02-2019 பகல் 11.27 மணி முதல் 25-02-2019 மாலை 04.42 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

01.02.2019 தை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

06.02.2019 தை 23 ஆம் தேதி புதன்கிழமை துவிதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

10.02.2019 தை 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

11.02.2019 தை 28 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

15.02.2019 மாசி 03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

17.02.2019 மாசி 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

18.02.2019 மாசி 06 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்தசி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

22.02.2019 மாசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருதியை திதி ஹஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

24.02.2019 மாசி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

 

2019 – ஜனவரி மாத ராசிப்பலன்

2019 – ஜனவரி மாத ராசிப்பலன்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

செவ்
திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது 
சனி சூரிய குரு புதன்    சுக்கி

கிரக   மாற்றம்

01-1-2019 தனுசில் புதன் காலை 09.50 மணிக்கு

01-1-2019 விருச்சிகத்தில் சுக்கிரன் இரவு 08.43 மணிக்கு

14-1-2019 மகரத்தில் சூரியன் இரவு 07.51 மணிக்கு

20-1-2019 மகரத்தில் புதன் இரவு 09.06 மணிக்கு

29-1-2019 தனுசில் சுக்கிரன் இரவு 11.28 மணிக்கு

மேஷம்   அசுவனிபரணிகிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதாலும் தனகாரகன் குரு 8-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் முயற்சிகள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். மாத கோளான சூரியன் இம்மாதம் வரும் 14-ஆம் தேதி முதல் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை, நெருக்கடிகள் எல்லாம் குறைந்த மாத பிற்பாதியில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் வீண் செலவுகளை குறைப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அசையும், அசையா சொத்துகளால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம் – துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்  –  02-01-2019 அதிகாலை 03.23 மணி முதல் 04-01-2019 பகல் 12.54 மணி வரை மற்றும் 29-01-2019 காலை 08.59 மணி முதல் 31-01-2019 மாலை 06.40 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணிமிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், குரு சேர்க்கைப் பெற்ற சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளியூர், வெளிநாட்டிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். சிறப்பான பணவரவால் பொருளாதார நிலை மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். மாத கோளான சூரியன் உங்கள் ராசிக்கு இம்மாதம் வரும் 14-ஆம் தேதி வரை 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.

பரிகாரம் –  சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

சந்திராஷ்டமம்  – 04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை மற்றும் 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள்திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதாலும் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்துடன் ஈடுபட்டு ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். உங்கள் ராசிக்கு குரு 6-ல் சஞ்சரிப்பதாலும், மாத கோளான சூரியன் வரும் 14-ஆம் தேதி முதல் 8-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எடுத்த வேலையை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள்.

பரிகாரம் – பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.

சந்திராஷ்டமம்  – 07-01-2019 அதிகாலை 00.25 மணி முதல் 09-01-2019 பகல் 01.14 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம்பூசம்ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே தனக்காரகன் எனப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவிற்கு பஞ்சமில்லாமல் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் சுப காரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள் உண்டாகும். போட்டிகள் பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் அனுகூலமாக செயல்படுவதால் நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்ப்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் –  சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருந்து மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்தால் மன சங்கடங்கள் குறையும்.

சந்திராஷ்டமம்  – 09-01-2019 பகல் 01.14 மணி முதல் 12-01-2019 அதிகாலை 02.03 மணி வரை.

சிம்மம் மகம்பூரம்உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 14-ஆம் தேதி முதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் உங்களுக்கு எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைத்து ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலன் கிடைக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் படிப்படியாக குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 4-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடனிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.

பரிகாரம் –  வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால் குருவின் அருள் பார்வை கிட்டும்.

சந்திராஷ்டமம்  – 12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள்அஸ்தம்சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் 4-ல் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு இம்மாதத்தில் கிடைக்கும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். குரு 3-லும், 7-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுப காரியங்கள் கைகூடும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன், பொருள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். எதிர்பார்த்த லாபங்களும் உண்டாகும். வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

பரிகாரம் –  செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

சந்திராஷ்டமம்  – 14-01-2019 பகல் 12.53 மணி முதல் 16-01-2019 இரவு 08.09 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள்சுவாதிவிசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், சனி, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தாராள தனவரவு உண்டாகும். தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேற கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன்கள் சற்றே குறையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மேலதிகாரிகளிடம் பேசும் போது மட்டும் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம் –  தினமும் விநாயகரை வழிபாடு செய்வதாலும், சதுர்த்தி விரதங்கள் இருப்பதாலும் காரிய சித்தி உண்டாகும்.

சந்திராஷ்டமம்  – 16-01-2019 இரவு 08.09 மணி முதல் 18-01-2019 இரவு 11.33 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம்அனுஷம்கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவும் என்றாலும் மாத கோளான சூரியன் இம்மாதம் 14-ஆம் தேதி முதல் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மாத பிற்பாதியில் எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைத்து உங்களது நெருக்கடிகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமாக இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்ஷன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எந்தவொரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் நற்பலன்களை அடைய முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறுவார்கள்.

பரிகாரம் – வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வதாலும், குரு யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்  – 18-01-2019 இரவு 11.33 மணி முதல் 21-01-2019 அதிகாலை 00.05 மணி வரை.

தனுசு  மூலம்பூராடம்உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, சூரியன், 4-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாகவும் கவனத்துடனும் இருக்க வேண்டிய மாதமாகும். முடிந்த வரை முன்கோபத்தை குறைத்துக் கொள்வதும், உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்வதில் மந்தநிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் தாமத நிலை ஏற்படலாம். பொருளாதாரநிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகளும் பூர்த்தியாகும். குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் தெரிந்தவர்கள் கூட ஏமாற்றும் சூழ்நிலை உண்டாகலாம். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிட்டும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் – சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.

சந்திராஷ்டமம்  – 21-01-2019 அதிகாலை 00.05 மணி முதல் 22-01-2019 இரவு 11.32 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள்திருவோணம்அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவால் உங்களது தேவைகள் பூர்த்தியாகும் அமைப்பு இம்மாதத்தில் உண்டு. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் போன்றவற்றை வாங்க முடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். உங்கள் ராசிக்கு சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒருவரையொருவர் அனுசரித்து சென்றால் ஒற்றுமை குறையாது. பெரியவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது மட்டும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்துடன் சேரும் அமைப்பு உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

பரிகாரம் – சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்  –  22-01-2019 இரவு 11.32 மணி முதல் 24-01-2019 இரவு 11.50 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம்பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சூரியன், சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள். பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். செவ்வாய் 2-ல் இருப்பதால் முன்கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைகேற்படி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ளலாம். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி அடைவார்கள்.

பரிகாரம் –  முருக வழிபாடு செய்வதாலும், சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் அனைத்து துயரங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டமம்  – 24-01-2019 இரவு 11.50 மணி முதல் 27-01-2019 அதிகாலை 02.39 மணி வரை.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம்உத்திரட்டாதிரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உங்கள் ராசிக்கு 11-ல் இம்மாதம் மாத கோளான சூரியன் 14-ஆம் தேதி முதல் சஞ்சரிக்க இருப்பதாலும் ஏற்றமான பலன்களை அடைவீர்கள். மாத பிற்பாதியில் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப் பெற்று இதுவரை இருந்த பிரச்சினைகள் நெருக்கடிகள் யாவும் படிப்படியாக குறையும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். தொழில் விருத்திக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். ஒரு சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிட்டும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம் –  ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்  – 30-12-2018 இரவு 08.19 மணி முதல் 02-01-2019 அதிகாலை 03.23 மணி வரை மற்றும் 27-01-2019 அதிகாலை 02.39 மணி முதல் 29-01-2019 காலை 08.59 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

 

02.01.2019 மார்கழி 18 ஆம் தேதி புதன்கிழமை துவாதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை திருக்கணிதம்

03.01.2019 மார்கழி 19 ஆம் தேதி வியாழக்கிழமை திரியோதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

13.01.2019 மார்கழி 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.15 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

23.01.2019 தை 09 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை

27.01.2019 தை 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

30.01.2019 தை 16 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

2018 – செப்டம்பர் மாத ராசிப்பலன்

2018 – செப்டம்பர் மாத ராசிப்பலன்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

       
   

 

ராகு புதன்
கேது செவ் சூரிய
சனி ()   குரு சுக்கி 

               

கிரக   மாற்றம்

1-9-2018 – துலாத்தில் சுக்கிரன்

2-9-2018 – சிம்மத்தில் புதன்

7-9-2018 – சனி வக்ர நிவர்த்தி

17-9-2018 – கன்னியில் சூரியன்

19-9-2018 – கன்னியில் புதன்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் பலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குரு, சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியை உண்டாக்கும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மாத பிற்பாதியில் வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருப்பதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலைபளு குறைவாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் சற்றே அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த நற்பலனை அடைய முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும்.

சந்திராஷ்டமம்  – 14-09-2018 இரவு 07.12 மணி முதல் 17-09-2018 அதிகாலை 04.51 மணி வரை.

பரிகாரம்  -சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது, நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன், 6-ல் குரு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராகு 3-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவால் எதையும் எதிர் கொள்ளகூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறிது கஷ்டப்பட்டாலும் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சற்று மந்தநிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராது வகையில் கிடைக்கும் உதவியினால் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். வேலை பளுவும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேவையற்ற நட்புகளின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். பயணங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்  – 17-09-2018 அதிகாலை 04.51 மணி முதல் 19-09-2018 மாலை 05.22 மணி வரை.

பரிகாரம்  – சனிபகவானை வழிபாடு செய்வதாலும், அனுமனை வழிபடுவதாலும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவுவதாலும் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

சந்திராஷ்டமம்  – 19-09-2018 மாலை 05.22 மணி முதல் 22-09-2018 காலை 06.15 மணி வரை.

பரிகாரம்  -விநாயகர் வழிபாடு செய்வதும், விநாயகர் துதிகளை படிப்பதும் மற்றும் நவகிரக வழிபாடு செய்வதும் நல்லது.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் 6-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கு நிலவிய தடங்கல்கள் எல்லாம் விலகி முன்னேற்றம் ஏற்படும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மாத பிற்பாதியில் தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.      

சந்திராஷ்டமம்  – 22-09-2018 காலை 06.15 மணி முதல் 24-09-2018 மாலை 05.21 மணி வரை.

பரிகாரம்  – ஞாயிற்றுக் கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவவழிபாடு செய்வதும், ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. நம்பியவர்களே சில நேரங்களில் துரோகம் செய்ய துணிவார்கள். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை  ஏற்படாது. எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். வேலைபளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க முடியாமல் போகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.

சந்திராஷ்டமம்  – 24-09-2018 மாலை 05.21 மணி முதல் 27-09-2018 அதிகாலை 01.58 மணி வரை.

பரிகாரம்  -வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே தனக்கராகன் குரு 2-ல் வலுவாக சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். இம்மாதம் சூரியன் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

சந்திராஷ்டமம்  – 30-08-2018 இரவு 08.05 மணி முதல் 02-09-2018 அதிகாலை 03.03 மற்றும் 27-09-2018 அதிகாலை 01.58 மணி முதல் 29-09-2018 காலை 08.28 மணி வரை.

பரிகாரம்  – தினமும் விநாயகர் வழிபாடு செய்வது ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே வரும் 7-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சரளமாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். கடன்களும் சற்றே குறையும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது மட்டும் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிட்டும்.

சந்திராஷ்டமம்02-09-2018 அதிகாலை 03.03 மணி முதல் 04-09-2018 காலை 07.32 மற்றும் 29-09-2018 காலை 08.28 மணி முதல் 01-10-2018 மதியம் 01.18 மணி வரை.

பரிகாரம்  – சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் நல்ல பலன்களை அடைவீர்கள். மாத கோளான சூரியன் இம்மாதம் 10, 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும். பயணங்களால் தேவையற்ற அலைசல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை கால் அசதி சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 04-09-2018 காலை 07.32 மணி முதல் 06-09-2018 காலை 09.46 மணி வரை.

பரிகாரம்  – சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது மூலம் மன சங்கடங்கள் குறையும்.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் இம்மாதம் மாத கோளான சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு நற்பலன்களை தரும் அமைப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்புடன் செயல்பட்டு நற்பெயரை பெறுவீர்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெற அவர்களிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் அனுகூலப் பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த பணத்தை வசூலித்து விட முடியும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலப்பலனை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருப்பது உத்தமம்.

சந்திராஷ்டமம்  – 06-09-2018 காலை 09.46 மணி முதல் 08-09-2018 காலை 10.31 மணி வரை.

பரிகாரம்  – சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. உடல் நிலையில் அஜீரணகோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு போன்றவை ஏற்பட கூடும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக தான் இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். ஆன்மீக காரியங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். விளையாடும் போது கவனம் தேவை.

சந்திராஷ்டமம்  – 08-09-2018 காலை 10.31 மணி முதல் 10-09-2018 காலை 11.10 மணி வரை.

பரிகாரம்  – செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் 11-ல் சஞ்சரிக்ககூடிய சனி வக்ர நிவர்த்தி அடைவதால் தொழில் வியாபார ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலையும் உயரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் அன்றாட பணிகளை சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் சேமிக்க முடியும். ஒரு சிலரின் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலப்பலன் ஏற்படும். உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்           — 10-09-2018 காலை 11.10 மணி முதல் 12-09-2018 மதியம் 01.30 மணி வரை.

பரிகாரம்  –  பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் வரும் 17-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரித்து அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பணம் கொடுக்கல்- சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் அவர்களால் வீண் பிரச்சினைகளும் ஏற்படும் என்பதால் சற்று அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளத் தொகைகள் கைக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

சந்திராஷ்டமம்           – 12-09-2018 மதியம் 01.30 மணி முதல் 14-09-2018 இரவு 07.12 மணி வரை.

பரிகாரம்  – சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.

சுப முகூர்த்த நாட்கள்

06.09.2018 ஆவணி 21 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

12.09.2018 ஆவணி 27 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

20.09.2018 புரட்டாசி 04 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை

23.09.2018 புரட்டாசி 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்தசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

27.09.2018 புரட்டாசி 11 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

30.09.2018 புரட்டாசி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

 

2018- ஜுலை மாத ராசிப்பலன்

2018- ஜுலை மாத ராசிப்பலன்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சூரிய
 

திருக்கணித கிரக நிலை

 

ராகு சுக்கி புதன்
கேது செவ் (வ)
சனி (வ)    குரு (வ)

கிரக   மாற்றம்

05-07-2018 – சிம்மத்தில் சுக்கிரன்

11-07-208 – குரு (வ) நிவர்த்தி

16-07-2018 – கடகத்தில் சூரியன்

26-07-2018 – புதன் (வ) ஆரம்பம்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலத்தை தரக்கூடிய அமைப்பாகும். வரும் 11-ஆம் தேதி முதல் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி சாதகமான பலன்களை அடைவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது மூலம் அன்றாட பணிகளில் தெம்புடன் செயலாற்றுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம் – ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்           — 22-07-2018 அதிகாலை 04.14 மணி முதல் 24-07-2018 மதியம் 03.25 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் வலமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் அபிவிருத்தி பெருகி லாபங்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பாராத திடீர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம் – சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

சந்திராஷ்டமம்           — 24-07-2018 மதியம் 03.25 மணி முதல் 27-07-2018 அதிகாலை 04.11 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவையும் உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். புத்திரர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் தங்கள் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் – பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வழிபாடு செய்வதும், முருக வழிபாடு செய்வதும் முன்னேற்றங்களை கொடுக்கும்.

 

சந்திராஷ்டமம்           — 29-06-2018 இரவு 10.06 மணி முதல் 02-07-2018 பகல் 11.10 மணி வரை மற்றும் 27-07-2018 அதிகாலை 04.11 மணி முதல் 29-07-2018 மாலை 05.09 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். 6-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கைகால் அசதி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலை போன்றவை ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும் என்றாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். நம்பியவர்களே ஏமாற்றுவார்கள் என்பதால் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும்.

பரிகாரம் – சிவ பெருமானை வழிபாடு செய்வதாலும், துர்கையம்மனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்வதாலும் மேன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           — 02-07-2018 பகல் 11.10 மணி முதல் 04-07-2018 இரவு 11.00 மணி வரை மற்றும் 29-07-2018 மாலை 05.09 மணி முதல் 01-08-2018 அதிகாலை 05.00 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதும், ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் – வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           — 04-07-2018 இரவு 11.00 மணி முதல் 07-07-2018 காலை 07.44 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே ராசியதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 10, 11-ல் இம்மாதம் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வரும் 11-ஆம் தேதி முதல் 2-ல் உள்ள குரு வக்ர நிவர்த்தி அடைவதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்ப விஷயங்களை முடிந்தவரை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம் – சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதாலும், விநாயகர் வழிபாடு செய்வதாலும் துன்பங்கள் துயரங்கள் நீங்கும்.

சந்திராஷ்டமம்           — 07-07-2018 காலை 07.44 மணி முதல் 09-07-2018 மதியம் 12.34 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10, 11-ல் இம்மாதம் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் சுபிட்சமான பலன்களை அடைவீர்கள். 3-ல் சனி 10-ல் புதன் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

பரிகாரம் – செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபடுவதும், ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதன் மூலம் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           — 09-07-2018 மதியம் 12.34 மணி முதல் 11-07-2018 மதியம் 02.03 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 2-ல் சனி 12-ல் குரு சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடியை தரும் அமைப்பாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும், எந்த விஷயத்திலும் நிதானமாக இருப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் சிறு சிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக போட்டிகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் லாபத்தை அடையலாம். வியாபார விஷயமாக அடிக்கடி செல்லும் பயணங்களால் அலைச்சல்களை சந்திப்பீர்கள். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம்.

பரிகாரம் –        வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வழிபடுவதும், சிவ பெருமானை வழிபடுவதும் நன்மை தரும்.

சந்திராஷ்டமம்           — 11-07-2018 மதியம் 02.03 மணி முதல் 13-07-2018 மதியம் 01.43 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு வரும் 11-ஆம் தேதி முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் இதுவரை இருந்த தேக்கங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.

பரிகாரம் –        பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபடுவதும் சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.

சந்திராஷ்டமம்           — 13-07-2018 மதியம் 01.43 மணி முதல் 15-07-2018 மதியம் 01.30 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 7-ல் புதன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். பண விஷயத்தில் சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் வெற்றி ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும்.

பரிகாரம் – சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

சந்திராஷ்டமம்           — 15-07-2018 மதியம் 01.30 மணி முதல் 17-07-2018 மதியம் 03.09 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி நற்பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களிடையே வாக்கு வாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்கள¬யும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம்.

பரிகாரம் – முருக வழிபாடு செய்வதாலும், சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் தினமும் விநாயகரை வழிபாடு செய்வதாலும் காரிய சித்தி உண்டாகும்.

சந்திராஷ்டமம்           — 17-07-2018 மதியம் 03.09 மணி முதல் 19-07-2018 இரவு 07.56 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் லாப ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது சாதகமான பலன்களை அடைவீர்கள். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் மாத பிற்பாதியில் மனநிம்மதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் நிலையில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவச் செலவுகளை தவிர்க்கலாம். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.  கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையப் பெற்று குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும்.

பரிகாரம் – துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபடுவதும் சிவ வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும்.

சந்திராஷ்டமம்           — 19-07-2018 இரவு 07.56 மணி முதல் 22-07-2018 அதிகாலை 04.14 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

 

01.07.2018 ஆனி 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

02.07.2018 ஆனி 18 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

05.07.2018 ஆனி 21 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

11.07.2018 ஆனி 27 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

19.07.2018 ஆடி 03 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

30.07.2018 ஆடி 14 ஆம் தேதி திங்கட்கிழமை திரிதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

2018 ஜுன் மாத ராசிப்பலன்-

2018 ஜுன் மாத ராசிப்பலன்

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சூரிய

புதன்

சுக்கி
                திருக்கணித கிரக நிலை

 

ராகு
செவ் கேது
சனி (வ) குரு (வ)      

                               

கிரக   மாற்றம்

9-6-2018  – கடகத்தில் சுக்கிரன்

10-6-2018 – மிதுனத்தில் புதன்

15-6-2018 – மிதுனத்தில் சூரியன்

25-6-2018 – கடகத்தில் புதன்

27-6-2018 – செவ்வாய் (வ) ஆரம்பம்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே ராசியதிபதி செவ்வாய் 10-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும் இம்மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் வலமான பலனை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன், பொருள் சேரும். திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன் கைகூடி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். தொழில்- வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். கூட்டாளிகளின் புதிய ஆலோசனைகளாலும் ஒத்துழைப்பாலும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும். உடன் பிறந்தவர்களாலும் அனுகூலம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.

பரிகாரம் அம்மன் வழிபாடு செய்வதும், வரும் 2-ஆம் தேதி சதுர்த்தியன்று விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபாடு செய்வதும் மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்           —  24-06-2018 இரவு 10.31 மணி முதல் 27-06-2018 காலை 09.31 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். பொன்னவன் எனப் போற்றப்படும் குருபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு அனுகூலமாய் இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்களால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நிதானமாக செயல்படுவதன் மூலம் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்வார்கள்.

பரிகாரம்பிரதோஷ விரதம் மேற்கொள்வதும், சனிக்கிழமை சனிபகவான் வழிபாடு செய்வதும் சிறப்பு.

சந்திராஷ்டமம்           —  31-05-2018 அதிகாலை 03.08 மணி முதல் 02-06-2018 மதியம் 03.35 மணி வரை மற்றும் 27-06-2018 காலை 09.31 மணி முதல் 29-06-2018 இரவு 10.06 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் ராகு 8-ல் செவ்வாய் கேது சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். உடனிருப்பவர்களால் மனநிம்மதி குறையும். தொழில்- வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளால் போட்டி பொறாமைகள் அதிகரிக்க கூடும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் உங்களது மன தைரியத்தால் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியிலும் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். இம்மாதத்தில் எதையும் சிந்தித்து செயல்படுவதன் மூலமும் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலமும் நற்பலன்களை அடையலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்

பரிகாரம்பிரதோஷ காலங்களில் நந்தி பகவானை வணங்குவதும், முருக வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

சந்திராஷ்டமம்           —  02-06-2018 மதியம் 03.35 மணி முதல் 05-06-2018 அதிகாலை 04.36 மணி வரை மற்றும்  29-06-2018 இரவு 10.06 மணி முதல் 02-07-2018 பகல் 11.10 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாத முற்பாதியில் சூரியன், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். திருமண முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில்- வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் லாபகரமான பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த உயர்வை அடைவார்கள்.

பரிகாரம் செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாடு செய்வதும், சஷ்டி விரதம் மேற்கொள்வதும் வாழ்வில் மேன்மையை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம்           —  05-06-2018 அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2018 மதியம் 03.48 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் இம்மாதம் 10, 11-ல் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் கேது சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். போட்டிகள் விலகும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும். எடுக்கும் முயற்சியில் வெற்றிகளை அடைவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். பொருளாதாரமும் மேலோங்கி இருக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்ய முடியும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பொன் பொருள் சேரும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான அந்தஸ்துகளையும் பெற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண் பெற்று பெற்றோர்க்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           —  07-06-2018 மதியம் 03.48 மணி முதல் 09-06-2018 இரவு 11.15 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 9-ல் புதன் 10-ல் சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆலோசனைகளால் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்சனிக்கிழமைகளில் சனி பகவான் வழிபாடு செய்வதும், கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வதும் மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்           — 09-06-2018 இரவு 11.15 மணி முதல் 12-06-2018 அதிகாலை 02.41 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவை ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. முடிந்து வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. திருமண சம்பந்தமான சுப முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ காரியங்களுக்காகவும், பொதுநலத் திட்டங்களுக்காகவும் சிறுசிறு செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதும், பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வதும் நற்பலன்களை அளிக்கும்.

சந்திராஷ்டமம்           —  12-06-2018 அதிகாலை 02.41 மணி முதல் 14-06-2018 அதிகாலை 03.26 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பது எல்லா வகையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்களது முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகளில் இருந்த தேக்கங்கள் விலகி தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சியில் அனுகூலப் பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. புத்திரர்கள் வழியாக சுப செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வகையில் லாபம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கான நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடி தருவார்கள்.

பரிகாரம் சிவ வழிபாடு செய்வதும், நவக்கிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நல்லது.

சந்திராஷ்டமம்           — 14-06-2018 அதிகாலை 03.26 மணி முதல் 16-06-2018 அதிகாலை 03.23 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். இதுநாள் வரை இருந்த தடங்கல்கள் விலகி சகல விதத்திலும் முன்னேற்றம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். உங்களுக்கு இருந்த வந்த கடன் பிரச்சனைகளும் ஓரளவு குறையும். சேமிப்புகள் பெருகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.  தொழில்- வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளும் விலகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம் சஷ்டியன்று ஆறுமுக கடவுளுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் எண்ணிய காரியம் நிறைவேறும்.

சந்திராஷ்டமம்           — 16-06-2018 அதிகாலை 03.23 மணி முதல் 18-06-2018 அதிகாலை 04.21 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5-ல் புதன் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் பல்வேறு வகையில் சாதகமான பலன்களை அடைவீர்கள். இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால்  சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தெய்வீக காரியங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில்- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழிலாளர்களின் ஒத்தழைப்பால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலை மாற்றம் இடமாற்றம் ஏற்படக்கூடும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள்.

பரிகாரம் துர்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           — 18-06-2018 அதிகாலை 04.21 மணி முதல் 20-06-2018 காலை 07.38 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்றாலும் 5-ல் சுக்கிரன் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்வீர்கள். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. உடல் நிலையில் சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில்- வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பெரிய முதலீடு கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து சென்றால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கைகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். இருப்பினும் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்பிரதோஷ காலங்களில் விரதம் மேற்கொண்டு சிவ பெருமானை வழிபாடு செய்தால் வாழ்வில் துயரங்கள் குறையும்.

சந்திராஷ்டமம்           — 20-06-2018 காலை 07.38 மணி முதல் 22-06-2018 மதியம் 01.44 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதும் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் சிறப்பாக கைகூடும். உற்றார் உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் தடையின்றி நிறைவேறும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம்வியாழக்கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           — 22-06-2018 மதியம் 01.44 மணி முதல் 24-06-2018 இரவு 10.31 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

03.06.2018 வைகாசி 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை

04.06.2018 வைகாசி 21 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை

06.06.2018 வைகாசி 23 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை

10.06.2018 வைகாசி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை

25.06.2018 ஆனி 11 ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

Maadha Rasi Palan (June Month) | Monthly Astrosign Predictions | Murugu Balamurugan

Maadha Rasi Palan (April Month) | Monthly Astrosign Predictions | Murugu Balamurugan

April month Rasi palan 2018

ஏப்ரல் மாத ராசிப்பலன் — 2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

புதன் (வ)  சூரிய சுக்கி
                திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது
சனி செவ் குரு(வ)               

                கிரக   மாற்றம்

14-4-2018 – மேஷத்தில் சூரியன்

16-4-2018 – புதன் (வ) நிவர்த்தி

18-4-2018 – சனி (வ) ஆரம்பம்

20-4-2018 – ரிஷபத்தில் சுக்கிரன்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு, ஜென்ம ராசியில் சுக்கிரன், 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்றாலும் மாத கோளான சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று உங்கள் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில்  அனுகூலமான பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் சாதகப் பலன் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் – ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வதும், ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

சந்திராஷ்டமம்  –        — 04-04-2018 அதிகாலை 01.09 மணி முதல் 06-04-2018 பகல் 11.38 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன், புதனுடன் மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சனி, செவ்வாய் 8-ல் இருப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். வெளியூர் வெளிநாட்டு பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள்.

பரிகாரம் – செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக வழிபாடு செய்வதும், சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும் நல்லது.

சந்திராஷ்டமம்  – — 06-04-2018 பகல் 11.38 மணி முதல் 09-04-2018 அதிகாலை 12.19 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சூரியனுடன் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை மேலோங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். சிலருக்கு அரசு வழியிலும் அனுகூலம் கிட்டும். மாணவர்கள் உழைப்பிற்கேற்ற பலன்களை அடைவார்கள்.

பரிகாரம் – தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.

சந்திராஷ்டமம்  –        — 09-04-2018 அதிகாலை 12.19 மணி முதல் 11-04-2018 மதியம் 12.38 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து  முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். உடல்நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவி உயர்வுகளையும் பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

பரிகாரம் – விநாயகர் வழிபாடு செய்வதும், விநாயகர் துதிகளை படிப்பதும் மற்றும் நவகிரக வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்  –        — 11-04-2018 மதியம் 12.38 மணி முதல் 13-04-2018 இரவு 10.08 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்களுக்கு மாத கோளான சூரியன் இம்மாதம் முற்பாதியில் 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை உண்டாக்கும் என்றாலும் உங்கள் ராசிக்கு 6-ல் கேது, பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவு லாபங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் அலைச்சல் டென்ஷன்களை குறைத்துக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் – புதன் கிழமைகளில் விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று பெருமாளை தரிசிப்பதாலும் விஷ்ணு சகஸ்கர நாமம் ஜெபிப்பதாலும் வாழ்வில் மேன்மையான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம்  –        — 13-04-2018 இரவு 10.08 மணி முதல் 16-04-2018 அதிகாலை 04.10 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு, லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் 4-ல் செவ்வாய், சனி, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்ததாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம் – ஞாயிற்றுக்கிழமைகளில் உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வதாலும், கோதுமை வெல்லம் போன்றவற்றை தானம் செய்வதாலும் இருக்கும் கஷ்டங்கள் குறையும்.

சந்திராஷ்டமம்  – — 16-04-2018 அதிகாலை 04.10 மணி முதல் 18-04-2018 காலை 07.39 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்-கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்ற நிலை இருக்கும். வெளியூர் வெளிநாடுகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் கௌரவமான நிலை உண்டாகி நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம் – வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்  –        — 18-04-2018 காலை 07.39 மணி முதல் 20-04-2018 காலை 10.04 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் மாத தொடக்கத்தில் சில சங்கடங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து செல்வதும் உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமான பலனை அடைவீர்கள். திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கடினமாக உழைத்தால் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

பரிகாரம் – செவ்வாய் கிழமைகளில் முருகன் கோவில்களுக்குச் சென்று தீபம் ஏற்றி முருக கடவுளை வழிபாடு செய்வதாலும், கிருத்திகை விரதம், சஷ்டி விரம் மேற்கொள்வதாலும் நன்மைகள் உண்டாகும். தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.

சந்திராஷ்டமம்  –        — 20-04-2018 காலை 10.04 மணி முதல் 22-04-2018 மதியம் 12.39 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய், சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் சில தடைகளுக்குபின் கைகூடும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து நடந்து கொள்வதும் உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவிற்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

பரிகாரம் – சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது, நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம்  –        — 22-04-2018 மதியம் 12.39 மணி முதல் 24-04-2018 மாலை 04.00 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதோடு குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்பட்டால் பெரிய பிரச்சினைகளை கூட எளிதில் சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வெளிவட்டார தொடர்புகளால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபகரமான பலன்களை அடைவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம் – சனிபகவான் வழிபாடு செய்வதாலும், அனுமனை வழிபடுவதாலும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவுவதாலும் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

சந்திராஷ்டமம்  –        — 24-04-2018 மாலை 04.00 மணி முதல் 26-04-2018 இரவு 08.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி- செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் இம்மாதம் பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். தொழில் வியாபார ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். மந்த நிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலப்பலன் உண்டாகும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்–. புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்– வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவுகளும் மன மகிழ்ச்சியை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம் – வியாழக்கிழமைகளில் விரதமிருந்து விநாயக பெருமானை வழிபடுவதும், சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வதும் நல்லது. தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்  –        — 26-04-2018 இரவு 08.20 மணி முதல் 29-04-2018 அதிகாலை 01.58 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், 2-ம் வீட்டில் சுக்கிரன், 10-ல் செவ்வாய் 11-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் ஓரளவிற்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் நிலையில் சற்று மந்த நிலை சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை கூட செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடை தாமதங்களுக்குப் பின் அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும்.

பரிகாரம் – பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ பெருமான வழிபாடு செய்வது மிகவும் நல்லதாகும். மற்றும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பு.

சந்திராஷ்டமம்  – 01-04-2018 மாலை 05.52 மணி முதல் 04-04-2018 அதிகாலை 01.09 மணி வரை மற்றும் 29-04-2018 அதிகாலை 01.58 மணி முதல் 01-05-2018 காலை 09.35 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

04.04.2018 பங்குனி 21 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

05.04.2018 பங்குனி 22 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

20.04.2018 சித்திரை 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

22.04.2018 சித்திரை 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

25.04.2018 சித்திரை 12 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

27.04.2018 சித்திரை 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 06.45 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

 

மார்ச் மாத ராசிப்பலன் 2018

மார்ச் மாத ராசிப்பலன் 2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சுக்கி   சூரிய புதன் திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது
சனி   செவ் குரு 

 

கிரக மாற்றம்

2-3-2018               மீனத்தில் சுக்கிரன்

3-3-2018               மீனத்தில் புதன்

7-3-2018               தனுசில் செவ்வாய்

9-3-2018               குரு (வ) ஆரம்பம்

14-3-2018             மீனத்தில் சூரியன்

23-3-2018             புதன் (வ) ஆரம்பம்

26-3-2018             மேஷத்தில் சுக்கிரன்

மேஷம்  அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் இம்மாதம் முற்பாதியில் மாத கோளான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் படிப்படியாக விலகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும் என்றாலும் உங்கள் ராசிக்கு சுக்கிரன், புதன் அனுகூலமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். பெரிய மனிதர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள்.

பரிகாரம் செவ்வாய் கிழமை விரதமிருந்து ஆறுமுக கடவுளான முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது. மேலும் சஷ்டி விரதம் மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம்j          — 07-03-2018 மாலை 04.07 மணி முதல் 10-03-2018 அதிகாலை 03.23 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு இம்மாதம் 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதாலும் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உங்கள் ராசிக்கு செவ்வாய் சாதகமற்று சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதன் மூலமும் உற்றார் உறவிர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலமும் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம், உடல் நிலையிலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனியின் அருள் கிடைக்கப் பெற்று கஷ்டங்கள் குறையும். மேலும் முருக வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்           — 10-03-2018 அதிகாலை 03.23 மணி முதல் 12-03-2018 மாலை 04.16 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் குருவும் 2-ஆம் தேதி முதல் 10-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். வீட்டுதேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் ராசிக்கு வரும் 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ல் சனியுடன் இணைந்து சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம்.

பரிகாரம் துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் மங்களம் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்           — 12-03-2018 மாலை 04.16 மணி முதல் 15-03-2018 அதிகாலை 04.13 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பதாலும் இம்மாதம் 7-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதாலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்த உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவு அனுகூலமாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம்.

பரிகாரம் புதன்கிழமைகளில் அருகில் உள்ள விஷ்ணு கோவிலுக்கு சென்று மஹா விஷ்ணுவையும் லட்சுமி தேவியையும் வழிபட்டு வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும்.

சந்திராஷ்டமம்           — 15-03-2018 அதிகாலை 04.13 மணி முதல் 17-03-2018 மதியம் 01.36 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் இம்மாதம் 7,8-ல் சஞ்சரிப்பதாலும் 3-ல் குரு சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய காலமாகும். இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக உஷ்ண பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். எதிர்பாராமல் கிடைக்கும் உதவியால் கடன்கள் ஓரளவு குறையும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாககூடும். செய்யும் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நெருங்கியவர்கள் மற்றும் உடனிருப்பவர்களால் பகை ஏற்படக்கூடும் என்பதால் எந்த விஷயத்திலும் கவனமாக இருப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி தீபம் ஏற்றி வழிபட்டால் குருவின் அருள் பார்வை பரிபூரணமாக கிட்டும். முருக வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்           — 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் இம்மாதம் முற்பாதியில் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 2-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைவீர்கள். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் வழியிலும் லாபம் கிட்டும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பு உண்டாகும். திருமணம் சம்பந்தமான  பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப்பெறும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலை பெறுவார்கள். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம் சனிக்கிழமை சனி பகவானை வழிபாடு செய்வதும் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

சந்திராஷ்டமம்           — 19-03-2018 இரவு 08.13 மணி முதல் 22-03-2018 அதிகாலை 12.52 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதும், 7-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய், 14-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் மிகச் சிறப்பான அமைப்பாகும். சிக்கல்கள் குறைந்து முன்னேற்றங்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும்.  புதிய வீடு மனை வாங்கும் யோகம் கிட்டும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் வழியிலும் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெறலாம். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் சில எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதாலும், விநாயகர் வழிபாடு செய்வதாலும் வாழ்வில் ஏற்படும் தொல்லைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           — 22-03-2018 அதிகாலை 12.52 மணி முதல் 24-03-2018 அதிகாலை 04.21 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு சமயசந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது. மற்றவர்களிடம் நிதானமாக செயல்படுவதன் மூலம் எதையும் எதிர்கொள்ளும் பலமும் வளமும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் சில காலம் தள்ளி வைப்பது நல்லது. பணவரவு சுமாராக இருந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது உத்தமம்.

பரிகாரம் சிவாலயங்களுக்குச் சென்று சிவனுக்கு வில்வ இலைக் கொண்டு அர்ச்சனை அபிஷேகம் செய்வதாலும் முருக கடவுளை வழிபாடு செய்வதாலும் வாழ்வில் சிறப்பான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம்           — 24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை 07.17 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடையலாம். ஜென்ம ராசியில் சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். புதிய சொத்து வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும்.

பரிகாரம் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு செண்பக மலரால் அர்ச்சனை செய்வதாலும், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்வதாலும் நற்பலன்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்           —  26-03-2018 காலை 07.17 மணி முதல் 28-03-2018 காலை 10.02 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாயும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியனும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வதென்றாலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திடீர் பணவரவு உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். பொன் பொருள் சேரும். புதிய சொத்து வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே மறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறைவதால் அபிவிருத்தி பெருகி சிறப்பான லாபங்கள் உண்டாகும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில்  ஈடுபாட்டுடன் செல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.

பரிகாரம் சிவ வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்           — 01-03-2018 அதிகாலை 01.45 மணி முதல் 03-03-2018 அதிகாலை 03.49 மணி வரை மற்றும் 28-03-2018 காலை 10.02 மணி முதல் 30-03-2018 மதியம் 01.13 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் இம்மாதம் 7-ஆம் தேதி முதல் 11-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதாலும் 11-ல் சனி சஞ்சரிப்பதாலும் வெற்றி மேல் வெற்றி உண்டாககூடிய உன்னதமான மாதமாகும். தாராள தனவரவு ஏற்பட்டு குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். தொழில் ரீதியான நவீனகரமான பொருட்களை வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் சிவ வழிபாடு செய்வதாலும், விநாயகர் வழிபாடு செய்வதாலும் வாழ்வில் உள்ள தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           — 03-03-2018 அதிகாலை 03.49 மணி முதல் 05-03-2018 காலை 08.13 மணி வரை மற்றும் 30-03-2018 மதியம் 01.13 மணி முதல் 01-04-2018 மாலை 05.52 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு 8-லும், 12-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பொருளாதார நெருக்கடியால் மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் இம்மாதம் 7-ஆம் தேதி முதல் 10-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து சென்றால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேலதிகாரிகளால் கெடுபிடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். சிலருக்கு வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் அனுகூலமான பலனை அடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்ப்பது உத்தமம்.

பரிகாரம் குருப்ரீதி தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது, சிவ வழிபாடு செய்வது மேலும் பிரதோஷ விரதங்கள் மேற்கொள்வது நன்மையை கொடுக்கும்.

சந்திராஷ்டமம்           — 05-03-2018 காலை 08.13 மணி முதல் 07-03-2018 மாலை 04.07 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

04.03.2018 மாசி 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி ஹஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

14.03.2018 மாசி 30 ஆம் தேதி புதன்கிழமை துவாதசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 09.45 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

15.03.2018 பங்குனி 01 ஆம் தேதி வியாழக்கிழமை திரியோதசி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

19.03.2018 பங்குனி 05 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியை திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

26.03.2018 பங்குனி 12 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

30.03.2018 பங்குனி 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தசி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை