புத்தாண்டு பலன் – 2019 விருச்சிகம்

புத்தாண்டு பலன் – 2019 விருச்சிகம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

விருச்சிகம்    விசாகம் 4-ஆம் பாதம்,  அனுஷம்,  கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே குறும்பு தனமும், விஷமத்தனமும் அதிகம் கொண்டவராக இருந்தாலும், பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் ஏழரை சனியில் பாதசனி தொடருவதும், குருபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு செயல் செய்வதென்றாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகும். இதனால் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தாமதநிலை ஏற்படும். 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் கேது 2-ஆம் வீட்டிலும், ராகு 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்று கூற முடியாது என்பதால் கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு நிம்மதி குறைவு உண்டாகும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் மட்டுமே கடன்கள் ஏற்படாமல் சமாளிக்க முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். கொடுத்த கடன்களை திரும்ப பெற முடியாமல் போகும். பண விஷயத்தில் வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் போட்டிகளால் கை நழுவிப்போகும். கூட்டாளிகளும் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் செய்யும் பணியில் முழுமையான ஈடுபாடு ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சலும் வீண் செலவுகளும் உண்டாகும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகளால் மனநிம்மதி குறைவு உண்டாகும். இந்த வருட இறுதியில் ஏற்படவுள்ள குருமாற்றத்தின் மூலம் 05.11.2019-ல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் அதன் பிறகே உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். மனைவி பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்கள் ஏற்படுத்தும் தேவையற்ற பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். எதிரிகளின் பலம் கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதால் மனநிம்மதி கிடைக்கும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்தில் நிம்மதி குறைய கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உற்றார் உறவினர்களிடமும் கருத்து வேறுபாடுகளும், பிரச்சினைகளும் ஏற்படும். புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகும். பொருளாதார நிலையில் தடைகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். எதிலும் சிந்தித்து நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைபளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் உதையும் சமாளிக்க முடியும். நியாயமாக கிடைக்க வேண்டிய பதவிகளையும் பிறர் தட்டி சென்றாலும் மதிப்பு குறையாது. சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில் தாமதநிலை நீடிக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வீண் அலைச்சலும், தேவையற்ற நெருக்கடிகளும் மறைமுக எதிர்ப்புகளும் ஏற்பட்டாலும் மந்தநிலையோ, பொருள் தேக்கமோ ஏற்படாது. பிறரை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதோ பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதோ கூடாது. தெவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். 

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் சிந்தித்து செயல் பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க சிரமப்பட வேண்டி இருக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன், வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம்.

அரசியல் 

அரசியலில் பெயர் புகழ் பாதிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெற முடியும். வெளியூர், வெளி நாட்டு பயணங்களால் சுமாரான அனுகூலங்களை மட்டுமே பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் மறைமுக வருவாய்கள் தடைப்படும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வாழ்வில் ஒரளவுக்கு முன்னேற்றத்தையும், விளைச்சலையும் பெற முடியும். சந்தையில் விளைபொருட்களை சுமாரான விலைக்கே விற்க முடியும்.

கலைஞர்கள் 

தொழில் ரீதியாக நிறைய போட்டிகள் உண்டாகும். அளவுக்கு அதிகமாக உழைப்பினை மேற்கொண்டாலும் வர வேண்டிய சம்பள தொகைகள் ஓரளவுக்கே கிடைக்கும். இருக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தினால் மட்டுமே ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும். ரசிகர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சியினை தரும்.

பெண்கள்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்பு உண்டாகும். மனநிலையில் வீண் குழப்பம் சஞ்சலம் நிம்மதியற்ற நிலை ஏற்படும். கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலபலன் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயர்வுகள் கிட்டும்.

மாணவ- மாணவியர்

ஆசிரியர்கள் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்வது நல்லது. கல்வியில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். மனதை அலைபாய விடாமல் கவனத்துடன் படிப்பது தேவையற்ற நண்பர்கள் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். வண்டி வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைப்பது நல்லது.

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதாலும், மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குரு பகவானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 18-01-2019 இரவு 11.33 மணி முதல் 21-01-2019 அதிகாலை 00.05 மணி வரை.

பிப்ரவரி

ஜென்ம ராசியில் குரு, 2-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் போட்டிகளை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்படும். முடிந்த வரை நேரத்திற்கு உணவு உண்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது, மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சற்று ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது உத்தமம். தினமும் விநாயகரை வழிபடுவது  நல்லது.

சந்திராஷ்டமம் – 15-02-2019 காலை 09.32 மணி முதல் 17-02-2019 பகல் 11.24 மணி வரை.

மார்ச்

இம்மாதம் 5-ல் புதன், ராசியாதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மேம்படும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. 7-ஆம் தேதி முதல் 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க உள்ளதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். சனீஸ்வர வழிபாடு நன்மையை அளிக்கும்.

சந்திராஷ்டமம் – 14-03-2019 மாலை 04.58 மணி முதல் 16-03-2019 இரவு 08.38 மணி வரை.

ஏப்ரல் 

இம்மாதம் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.

மே

இம்மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பதும் நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும்.  கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 08-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 10-05-2019 காலை 08.35 மணி வரை.

ஜுன் 

ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, கேது 8-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது.  மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 04-06-2019 பகல் 11.40 மணி முதல் 06-06-2019 பகல் 02.50 மணி வரை.

ஜுலை 

ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, கேது 8-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு கிடைப்பதால் வேலைபளு சற்றே குறையும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.

சந்திராஷ்டமம் – 01-07-2019 இரவு 08.55 மணி முதல் 03-07-2019 இரவு 11.10 மணி வரை மற்றும் 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.

ஆகஸ்ட்

ராசிக்கு 2-ல் சனி, கேது 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். சர்ப சாந்தி செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 25-08-2019 மாலை 04.13 மணி முதல் 27-08-2019 இரவு 07.40 மணி வரை.

செப்டம்பர்

இம்மாதம் ராசிக்கு 10, 11-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி  கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.  தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 21-09-2019 இரவு 11.40 மணி முதல் 24-09-2019 அதிகாலை 04.50 மணி வரை.

அக்டோபர் 

லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிட்டும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். ராகுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.

நவம்பர் 

ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 5-ஆம் தேதி முதல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 15-11-2019 பகல் 11.03 மணி முதல் 17-11-2019 மாலை 05.05 மணி வரை.

டிசம்பர் 

ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஓற்றுமை குறையாது. உறவினர்களிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 12-12-2019 மாலை 06.25 மணி முதல் 14-12-2019 இரவு 11.15 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -1,2,3,9

நிறம் –  ஆழ்சிவப்பு, மஞ்சள்

கிழமை – செவ்வாய், வியாழன்

திசை – தெற்கு

கல் – பவளம்

தெய்வம்- முருகன்

 

புத்தாண்டு பலன் – 2019 மீனம்

புத்தாண்டு பலன் – 2019 மீனம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம்,  உத்திரட்டாதி,  ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே, தன்னம்பிக்கை உடையவராகவும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராகவும், நீதி நேர்மை தவறாதவராகவும் விளங்கும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் ராசியாதிபதி குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். சனிபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகளை சந்தித்தாலும் லாபங்கள் எந்த வகையிலும் தடைபடாது. வரவேண்டிய வாய்ப்புகளில் சில போட்டிகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகளும், வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் கௌரவ பதவிகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வீடு வாகனங்கள் வாங்க கூடிய அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோயம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத திடீர் பணவரவுகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சில மருத்துவ செலவுகள் தோன்றி மறையும். நவீன பொருட்களையும் வாங்க முடியும். ஆடை ஆபரணம் சேரும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமானநிலை இருப்பதால் பெரிய தொகைகளையும் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.  இது மட்டுமின்றி நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வம்பு வழக்குகளில் எல்லாம் உங்களுக்கு சாதகமான பலன் உண்டாகும். சிலருக்கு தூரபயணமும் அதன் மூலம் சாதகமும் அனுகூலமும் கிட்டும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தக்க சமயத்தில் நிறைவேற்றுவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். 5.11.2019 முதல் குரு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் குரு மாற்றத்திற்கு பிறகு எதிலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அவ்வப்போது சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் சிறிது மருத்துவ செலவுகளுக்கு பின் குணமாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வயதில் மூத்தவர்களாலும் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடலாம். தூரத்து உறவினர்கள் அல்லது வயதானவர்கள் மூலம் மன கவலை ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இதுவரைப் பட்ட கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் நடைபெற கூடிய சுபகாரியங்களும் உங்கள் மன மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மகிழ்ச்சிகரமாக செயல்பட கூடிய வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு தடைப்பட்ட இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேரும் யோகம் உண்டாகும். உத்தியோக உயர்வுகளால் குடும்பத்தின் பொருளாதார நிலையும் உயரும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிரிமிதமான லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள், கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் விலகும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பும் கூட்டாளிகளின் ஆதரவும் மேலும் மேலும் லாபத்தை கொடுக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பு உடையவைகளாலும் லாபம் கிடைக்கும்.

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன், ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுத்த கடன்களும் திருப்தியாக வசூலாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும்.

அரசியல்

அரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். செல்வம் செல்வாக்கு உயரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எந்தவித இடையூறுகளும் இன்றி சாதனைகள் புரிவார்கள். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமைந்து அதன் மூலம் அனுகூலமும், பாராட்டுதல்களும் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நீர் பற்றாக்குறை வரப்பு தகாரறு என சில பிரச்சனைகளை சந்தித்தாலும் பட்ட பாட்டிற்கான பலன் உங்களுக்குச் கிடைத்து விடும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியினை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்குவது, பூமி, மனை வாங்குவது போன்றவற்றில் நற்பலன் அமையும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வந்து கதவை தட்டும். உங்களை புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களின் வசூலும் சிறப்பாக இருக்கும். போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். கார், பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் கிட்டும்.

பெண்கள்

பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத தனவரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். உற்றார் உறவினர்களிடையே நல்ல பெயரும் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய பொருட் சேர்க்கைகளும், ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டாகி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மாணவ- மாணவியர்

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். மேற்கல்வியில் புதிய சாதனைகள் செய்ய வாய்ப்பு அமையும். நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழச்சி அளிப்பதாக அமையும். விளையாட்டு துறைகளில் மாநில அளவில் வெற்றி பெற கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக அமையும்.

ஜனவரி

உங்கள் ராசியாதிபதி குரு 9-ல் சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமதநிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 30-12-2018 இரவு 08.19 மணி முதல் 02-01-2019 அதிகாலை 03.23 மணி வரை மற்றும் 27-01-2019 அதிகாலை 02.39 மணி முதல் 29-01-2019 காலை 08.59 மணி வரை.

பிப்ரவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு 9-ல் குரு 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களும் கல்வியில் உயர்வடைவார்கள். பிரதோஷகால விரதம் மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 23-02-2019 பகல் 11.27 மணி முதல் 25-02-2019 மாலை 04.42 மணி வரை.

மார்ச்

ராசியாதிபதி குரு 9-ல், சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். 7-ஆம் தேதி முதல் 4-ல் ராகு, 10-ல் கேது  சஞ்சரிக்க இருப்பதால்  தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகள் சற்று சாதகமற்று செயல்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 22-03-2019 இரவு 10.02 மணி முதல் 25-03-2019 அதிகாலை 01.08 மணி வரை.

ஏப்ரல்

ராசிக்கு 3-ல் செவ்வாய் 10-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 19-04-2019 காலை 08.25 மணி முதல் 21-04-2019 பகல் 11.10 மணி வரை.

மே 

ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 16-05-2019 மாலை 04.58 மணி முதல் 18-05-2019 இரவு 08.30 மணி வரை.

ஜுன்

ராசிக்கு 9-ல் குரு, மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய வல்லமையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 12-06-2019 இரவு 11.20 மணி முதல் 15-06-2019 அதிகாலை 04.02 மணி வரை.

ஜுலை

ராசிக்கு 9-ல் குரு, 5-ல் புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 10-07-2019 அதிகாலை 04.45 மணி முதல் 12-07-2019 காலை 09.55 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், 9-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய், 17-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் அமையும். அசையும் அசையா சொத்துக்களாலும் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் சற்றே அலைச்சல்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 06-08-2019 பகல் 11.00 மணி முதல் 08-08-2019 மாலை 03.25 மணி வரை.

செப்டம்பர்

இம்மாதம் 6-ல் செவ்வாய், சூரியன் 9-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன்பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 02-09-2019 இரவு 07.25 மணி முதல் 04-09-2019 இரவு 10.15 மணி வரை மற்றும் 30-09-2019 அதிகாலை 05.45 மணி முதல் 02-10-2019 காலை 07.10 மணி வரை.

அக்டோபர்

ராசியாதிபதி குரு 9-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். முருகனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 27-10-2019 மாலை 04.30 மணி முதல் 29-10-2019 மாலை 05.35 மணி வரை.

நவம்பர்

இம்மாதம் 7-ல் சூரியன் 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 5-ஆம் தேதி முதல் ராசியாதிபதி குரு 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கை கால் சோர்வு மந்தநிலை போன்றவை ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு  பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 24-11-2019 அதிகாலை 01.45 மணி முதல் 26-11-2019 அதிகாலை 03.45 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 8-ல் செவ்வாய், 10-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் எற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவையற்ற பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். குரு, சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 21-12-2019 காலை 08.25 மணி முதல் 23-12-2019 பகல் 11.50 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9,

கிழமை – வியாழன், ஞாயிறு

திசை – வடகிழக்கு

நிறம் – மஞ்சள், சிவப்பு

கல் – புஷ்ப ராகம்

தெய்வம் – தட்சிணாமூர்த்தி

புத்தாண்டு பலன் – 2019 கும்பம் 

புத்தாண்டு பலன் – 2019 கும்பம் 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கும்பம்  அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, எதிலும் ஆலோசித்து செயல்படுபவராகவும், பிறர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் விளங்கும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தன லாபாதிபதியான குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு தொழில் ரீதியாக கடுமையான நெருக்கடியினை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் உங்கள் ராசியாதிபதி சனிபகவான் லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். கூட்டாளிகளால் சில விரயங்கள் உண்டானாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். போட்டிகளால் வர வேண்டிய வாய்ப்புகள் சற்று தாமதப்படும். வரும் 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது 11-ஆம் வீட்டில் சனி சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பது நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத திடீர் தன வரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் சில நேரங்களில் மனஅமைதி குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சிறிது ஆறுதல் தரக்கூடிய சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மற்றவர்களுக்கு பொருளுதவி செய்வது, கொடுக்கல்- வாங்கலில் வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றினை சிறிது காலத்திற்கு தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, உயரதிகாரிகளிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது போன்றவற்றால் பணியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். இந்த வருட இறுதியில் 05.11.2019-ல் குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாவது மிகவும் சிறப்பான அமைப்பாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் நலனில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். ஜல தொடர்பான பாதிப்புகளும் உஷ்ண தொடர்பான பாதிப்புகளும் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த வீண் செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உடல் சோர்வு உண்டாகும் என்றாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத திடீர் உதவிகள் கிட்டும். புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு அமையும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சமாளிக்க முடியாமல் திண்டாட நேரிடும். எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியிருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். விடுப்பு எடுக்க முடியாதபடி கெடுபிடிகள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். 

தொழில் வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும் போட்டிகளும் அதிகரிக்கும். தொழிலாளர்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். நம்பியவர்கள் மூலம் எதிர்பாராத உதவி கிடைக்கும். பெரிய முதலீடுகளில் ஆரம்பிக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த வங்கி கடன்கள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறைகளில் சுமாரான லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல்கள் உண்டாகும். நம்பியவர்களே துரோகம் செய்ய கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியாது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும்.

அரசியல்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்ள நிறைய பாடுபட வேண்டியிருந்தாலும் மக்களின் ஆதரவு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் காரியங்களை ஒழுங்காக செய்து முடிக்க சற்று தாமதநிலை உண்டாகும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும். இதனால் பொருளாதார நிலையில் சங்கடங்கள் உண்டாகும். மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது நல்லது.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். நெல் முதல் தானியங்கள் வரை. காய் முதல் பழ வகைகள் வரை சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருக்கு ஏற்ற விலையை பெற முடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத தன சேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி சுபிட்சமும் யாவும் சிறப்படையும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு தொழில் ரீதியாக அதிக போட்டி பொறாமைகள் நிலவினாலும் வரவேண்டிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளியூர், வெளிநாட்டு பயணம் அதிக அலைச்சலையும் விரயத்தையும் ஏற்படுத்தும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் சில தடைகளுக்குப் பின் வந்து சேரும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர கார், பங்களா போன்றவற்றை வாங்க முடியும்.

பெண்கள்

குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணவரவுகளும் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும்.

மாணவ- மாணவியர்

முயன்று படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் நடந்து கொள்வது உத்தமம். உல்லாச பயணங்களால் ஓரளவு மகிழ்ச்சி உண்டாகும்.

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதும், மாதமுற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதில் தடைகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 24-01-2019 இரவு 11.50 மணி முதல் 27-01-2019 அதிகாலை 02.39 மணி வரை.

பிப்ரவரி

இம்மாதம் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதாலும் 5-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் நினைத்த காரியங்களை நிறைவேற்றி விட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப்பலனை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 21-02-2019 காலை 10.23 மணி முதல் 23-02-2019 பகல் 11.27 மணி வரை.

மார்ச்

ராசிக்கு 3-ல் செவ்வாய் 11-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 7-ஆம் தேதி முதல் கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கைகள் அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். குருவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 20-03-2019 இரவு 09.36 மணி முதல் 22-03-2019 இரவு 10.02 மணி வரை.

ஏப்ரல்

இம்மாதம் ராசிக்கு 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 17-04-2019 காலை 07.15 மணி முதல் 19-04-2019 காலை 08.25 மணி வரை.

மே

ராசிக்கு 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்வதாலும் பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமதநிலை உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபமும் எதிர்பார்த்த வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 14-05-2019 பகல் 02.30 மணி முதல் 16-05-2019 மாலை 04.58 மணி வரை.

ஜுன்

இம்மாதம் புதன் 4,5-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும் 11-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதாலும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 10-06-2019 இரவு 08.00 மணி முதல் 12-06-2019 இரவு 11.20 மணி வரை.

ஜுலை

ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாவதால் சிறிது மருத்துவ செலவு ஏற்படும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 08-07-2019 அதிகாலை 01.45 மணி முதல் 10-07-2019 அதிகாலை 04.45 மணி வரை.

ஆகஸ்ட்

ராசிக்கு 6-ல் செவ்வாய், சூரியன், 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 04-08-2019 காலை 09.30 மணி முதல் 06-08-2019 பகல் 11.00 மணி வரை மற்றும் 31-08-2019 இரவு 07.20 மணி முதல் 02-09-2019 இரவு 07.25 மணி வரை.

செப்டம்பர்

உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 11-ல் சனி, கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். தடைபட்ட திருமண சுபகாரிய முயற்சிகளில் நற்பலன் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 28-09-2019 காலை 06.20 மணி முதல் 30-09-2019 அதிகாலை 05.45 மணி வரை.

அக்டோபர்

ராசிக்கு 9-ல் புதன், 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 25-10-2019 மாலை 04.20 மணி முதல் 27-10-2019 மாலை 04.30 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 11-ல் சனி, கேது, 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 5-ஆம் தேதி முதல் குரு 11-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செய்ய முடியும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும், மகிழ்ச்சியும் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 22-11-2019 அதிகாலை 00.05 மணி முதல் 24-11-2019 அதிகாலை 01.45 மணி வரை.

டிசம்பர்

மாதகோளான சூரியன் 10,11-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் குரு, சனி, கேது சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளில் அனுகூலபலனை அடைய முடியும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். பகைமை பாராட்டியவர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். முருகனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 19-12-2019 அதிகாலை 05.40 மணி முதல் 21-12-2019 காலை 08.25 மணி வரை.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,7,8

கிழமை – வெள்ளி, சனி

திசை – மேற்கு

நிறம் – வெள்ளை, நீலம்

கல் – நீலக்கல்,

தெய்வம் – ஐயப்பன்

புத்தாண்டு பலன் – 2019  தனுசு

புத்தாண்டு பலன் – 2019  தனுசு

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசுராசி நேயர்களே சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்பவராகவும் கள்ளம் கபடமின்றி உண்மையாக பழகுபவராகவும் உள்ள உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் ஜென்மசனி நடைபெறுவதும், உங்கள் ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தலை வலி, சோர்வு போன்றவை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். நெருங்கியவர்களுக்கும் உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுவதால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். வரும் 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைய கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படுவதோடு எதிர்பார்த்தபடி நல்ல வரன்களும் அமையாது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்ய கூடும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டே லாபங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம் 

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் அவ்வப்போது தோன்றினாலும் எதையும் சமாளித்து சுறுசுறுப்புடன் செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது அலைச்சலைக் குறைக்கும். எடுக்கும் முயற்சிகளில் போட்டிகள் நிலவுவதால் மன அமைதி குறையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது தக்க சமயத்தில் உதவிகரமாக அமையும்.

குடும்பம் பொருளாதாரநிலை

உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதாரநிலை திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின்பே நற்பலனை அடைய முடியும். புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு உதவிகரமாக அமையும். புதிய வீடு மனை வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

உத்தியோகம்

பணியில் பல சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூடுதல் பொறுப்புகள் அதிகமாவதால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி விடுப்பு எடுக்க நேரிடும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைப்பதால் எதையும் முடிந்த அளவு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளையும், மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிட்டாலும் வாய்ப்புகள் தடைபடாது. எதிர்பார்த்த உதவிகள் தாமதத்திற்குப் பின் கிட்டும். அரசு வழியில் அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபங்களை பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் அபிவிருத்தினை பெருக்க முடியும்.

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும், முன் ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பதால் நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களையும் வசூலிக்க சற்று இழுபறி நிலை ஏற்படும். வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியாது. வம்பு வழக்குகளில் தீர்ப்பு தாமதப்படும்.

அரசியல்

அரசியல்வாதிகளின் பெயர் புகழுக்கு களங்கம் வரக்கூடும் என்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடு பட்டாவது காப்பாற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். அமைச்சர்களின் கெடுபிடிகள் சற்று அதிகரிக்கும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவிற்கு மகசூல் இருக்காது. புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். காய், கனி, பூ வகைகள் மூலம் ஒரளவுக்கு லாபங்களைப் பெற முடியும். கால்நடைகளாலும் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றாலும் சுமாரான லாபம் கிட்டும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூட தாமதநிலை ஏற்படும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் புதிய வாய்ப்புகள் தாமதப்படும். எவ்வளவு முயற்சி செய்தாலும் எதிர்பார்த்த வசூலை பெற முடியாமல் படங்கள் பாதிப்பு அடையும். ரசிகர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

பெண்கள்

பெண்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். புகுந்த வீட்டிலும் பிறந்த வீட்டிலும் நிம்மதியற்ற நிலையே உண்டாகும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் சிறப்பாகவே அமையும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் மனநிம்மதி குறைவு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் நிம்மதியானநிலை இருக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் கவனம் செலுத்த முடியாதபடி மந்த நிலை ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் உண்டாகும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.

 

ஜனவரி.

ஜென்ம ராசியில் சனி, சூரியன் 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது. அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்தநிலை உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் முழு முயற்சியுடன் படிப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 21-01-2019 அதிகாலை 00.05 மணி முதல் 22-01-2019 இரவு 11.32 மணி வரை.

பிப்ரவரி 

ஜென்ம ராசியில் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாதபிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 17-02-2019 பகல் 11.24 மணி முதல் 19-02-2019 பகல் 11.03 மணி வரை.

மார்ச் 

ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன் மாதமுற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். 7-ஆம் தேதி முதல் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சாரம் செய்ய இருப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்ச¬ல்களை குறைத்து கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 16-03-2019 இரவு 08.38 மணி முதல் 18-03-2019 இரவு 09.45 மணி வரை

ஏப்ரல்

ஏழரைசனி தொடருவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களிலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்ற விட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் தேடும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவதில் தாமதநிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். ராகு கேது வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.

மே

இம்மாதம் 4, 5-ல் புதன், சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதும், மாதபிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் அமையும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலையே இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 10-05-2019 காலை 08.35 மணி முதல் 12-05-2019 பகல் 11.53 மணி வரை.

ஜுன்

இம்மாதம் மாதமுற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற வழியில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 06-06-2019 பகல் 02.50 மணி முதல் 08-06-2019 மாலை 05.22 மணி வரை.

ஜுலை

உங்களுக்கு ஜென்ம சனி நடைபெறுவதாலும், 7-ல் சூரியன், ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்யவும்-.

சந்திராஷ்டமம் – 03-07-2019 இரவு 11.10 மணி முதல் 06-07-2019 அதிகாலை 00.15 மணி வரை மற்றும் 31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்மசனி நடைபெறுவதும், 7-ல் ராகு, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைபப் பெற முடியும். சிவ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 27-08-2019 இரவு 07.40 மணி முதல் 29-08-2019 இரவு 08.10 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் ராகு 12-ல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு உற்சாகமின்மை போன்றவை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். மாதபிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 24-09-2019 அதிகாலை 04.50 மணி முதல் 26-09-2019 காலை 06.40 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசிக்கு 10-ல் செவ்வாய் 10, 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.         

சந்திராஷ்டமம் – 21-10-2019 பகல் 11.40 மணி முதல் 23-10-2019 மாலை 03.15 மணி வரை.

நவம்பர்

இம்மாதம் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் பூமி மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். 5-ஆம் தேதி முதல் குரு ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பல பெரிய மனிதர்களின் உதவி கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 17-11-2019 மாலை 05.05 மணி முதல் 19-11-2019 இரவு 09.20 மணி வரை.

டிசம்பர் 

ஜென்மசனி நடைபெறுவதும், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 14-12-2019 இரவு 11.15 மணி முதல் 17-12-2019 அதிகாலை 02.45 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -1,2,3,9

நிறம் –  ஆழ்சிவப்பு, மஞ்சள்

கிழமை – செவ்வாய், வியாழன்

திசை – தெற்கு

கல் – பவளம்

தெய்வம்- முருகன்

புத்தாண்டு பலன் – 2019 துலாம்

புத்தாண்டு பலன் – 2019 துலாம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

துலாம்  சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே, பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றலும், நேர்மையையே குறிக்கோளாக கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோகக்காரகனாக விளங்கும் சனிபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் வாழ்வில் ஏற்றமிகு பலனை அடைவீர்கள். கேந்திர ஸ்தானமான 4, 10-ல் சஞ்சரிக்கும் கேது, ராகு 07.03.2019 முதல் மாறுதலாகி கேது 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றியினைப் பெற முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுப காரியங்கள் கை கூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். சொந்த வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் அமையும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலமானப் பலன்களை அடைவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். செய்யும் தொழில் வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தி பெருகும். லாபங்களும் திருப்திகரமாக இருக்கும். கூட்டாளிகளும், வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு மனநிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிட்டும். எந்தவொரு பணிகளையும் சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிட்டும். 

உடல் ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்களில் வெற்றியை உண்டாக்கும். அன்றாட செயல்களில் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்று உங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். தொலைதூர பயணங்களால் சற்று சோர்வு ஏறபட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை

கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக அமையும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அற்புதமாக இருக்கும். உற்றார் உறவினர்களின் அன்பும், அரவணைப்பும் மகிழ்ச்சியை உண்டாக்கும். வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்து காத்திருந்த சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் வந்து சேரும். செலவுகள் கட்டுகடங்கி இருப்பதால் சேமிக்க முடியும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் ஒத்துழைப்பையும் பெறமுடியும். சிலருக்கு வேண்டிய இட மாற்றங்ககளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த கால பிரச்சினைகள் விலகி எதிலும் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் அமையும். தொழிலை விரிவு செய்யும் நோக்கம் பலன் அளிக்கும். கூட்டுத்தொழில் மிகவும் அற்புதமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகினாலும் போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல்கள் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய தொகைகளும் தடையின்றி வசூலாகும்.

அரசியல்

உங்களின் பெயர், புகழ் உயரும் காலம் ஆகும். தொண்டர்களின் ஆதரவு நற்பலனை உண்டாக்கும். அமைச்சர்களின் ஆதரவும், பெரிய மனிதர்களின் நட்பும் கிடைக்கும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து மக்கள் மத்தியில் உயர்ந்த செல்வாக்கினை பெறுவீர்கள்.

விவசாயிகள்

விவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கு ஏற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பாராத அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்பு செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும்.

கலைஞர்கள்

உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இசை துறையிலும், பாடல் துறையிலும் உள்ளவர்கள் ரசிகர்களின் பேராதரவைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். சுகவாழ்வு, சொகுசுவாழ்வு சிறப்பாக அமையும்.

பெண்கள்

உடல் நிலை அற்புதமாக அமையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். புதிய பொருட் சேர்க்கைகளும் உண்டாகும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகம் செய்பவர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேலும் சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். மந்தநிலை மறையும். நண்பர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். அரசு உதவியும் சலுகைகளும் கிடைக்கும். விளையாட்டு துறையிலும், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி போன்றவற்றிலும் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் மேன்மை உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். திருமண சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவவை சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 16-01-2019 இரவு 08.09 மணி முதல் 18-01-2019 இரவு 11.33 மணி வரை.

பிப்ரவரி 

புதன் 4,5-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும், ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் திருமண சுப காரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள், எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 13-02-2019 அதிகாலை 04.19 மணி முதல் 15-02-2019 காலை 09.32 மணி வரை.

மார்ச் 

ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் சுப காரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். 7-ஆம் தேதி முதல் கேது 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 12-03-2019 காலை 10.24 மணி முதல் 14-03-2019 மாலை 04.58 மணி வரை.

ஏப்ரல் 

மாதமுற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்வதாலும் 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 08-04-2019 மாலை 03.53 மணி முதல் 10-04-2019 இரவு 10.33 மணி வரை.

மே 

ராசிக்கு 3-ல் சனி, கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் மாத கோளான சூரியன் 7, 8-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் ஓரளவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றுவார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்தாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெற முடியாமல் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை ஏற்படும். குரு, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 05-05-2019 இரவு 10.30 மணி முதல் 08-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.

ஜுன் 

குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு போன்றவை ஏற்படும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். மற்றவர்களை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 02-06-2019 காலை 06.45 மணி முதல் 04-06-2019 பகல் 11.40 மணி வரை மற்றும் 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.

ஜுலை

ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளி வட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்கள் முயன்று படிப்பது கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.

ஆகஸ்ட் 

ஜென்ம ராசிக்கு 10,11-ல் செவ்வாய், சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 23-08-2019 காலை 08.55 மணி முதல் 25-08-2019 மாலை 04.13 மணி வரை.

செப்டம்பர் 

ராசிக்கு 2-ல் குரு, 11-ல் செவ்வாய், சூரியன் சஞ்சாரம் செய்வதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் ஏற்படும். சொந்தவீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 19-09-2019 இரவு 07.28 மணி முதல் 21-09-2019 இரவு 11.40 மணி வரை.

அக்டோபர் 

ஜென்ம ராசியில் புதன், 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளியூர், வெளிநாட்டிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 16-10-2019 இரவு 08.45 மணி முதல் 19-10-2019 அதிகாலை 05.25 மணி வரை.

நவம்பர்

ராசியாதிபதி சுக்கிரன் 2-ல், சனி, கேது 3-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 5-ஆம் தேதி முதல் குரு 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைக்கவும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சற்று முழு முயற்சியுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருகனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 13-11-2019 அதிகாலை 03.10 மணி முதல் 15-11-2019 பகல் 11.03 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும், மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குரு 3-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிட்டும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்வதில் மந்தநிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 10-12-2019 பகல் 11.20 மணி முதல் 12-12-2019 மாலை 06.25 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்    – 5,6,7,8

நிறம் – வெள்ளை, பச்சை

கிழமை – வெள்ளி, புதன்

திசை                 – தென் கிழக்கு

கல்      – வைரம்

தெய்வம் – லட்சுமி

 

புத்தாண்டு பலன் – 2019 கன்னி

புத்தாண்டு பலன் – 2019 கன்னி

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கன்னி    உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எவ்வளவு அவசரமிருந்தாலும் பரபரப்பு இல்லாமல் சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் குரு, சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.  தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதால் நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு போன்றவை ஏற்படும். உடல் நிலையும் சோர்வாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வீண் செலவுகள் உண்டாகும். வரும் 07.03.2019-ல் உண்டாக கூடிய சர்ப கிரக மாற்றத்தின் மூலம் 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. கணவன்- மனைவி இடையே உண்டாக கூடிய கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களிடம் தேவையில்லாத பகை ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அவ்வளவு எளிதில் அனுகூலப்பலனை அடைய முடியாது. நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல் ஏற்படும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் தடைக்கு பின் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக போட்டி பொறாமைகள் நிலவும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது, கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். புதிய இடம் புரியாத மொழி என பல்வேறு இன்னல்களை சந்திப்பீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்

உடல் நிலை சுமாராக தான் இருக்கும். வாயு, உஷ்ண சம்மந்தமான பாதிப்புகளால் சற்று மருத்துவ செலவுகளும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தாமதப்பலன் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறிது மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். நெருங்கியவர்களுக்கு உடல்நிலை பாதிப்பதால் மன அமைதி குறையும். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் கூடும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். புத்திர வழியில் செலவுகள் இருந்தாலும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஒரு நேரம் ஆதரவாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்ப்படுத்துவார்கள். பொருளாதார நிலை சுமாராகவே அமையும். தேவையற்ற செலவுகளை குறைப்பதால் மட்டுமே அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் உதவி சற்று கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் வேலைபளுவும் கூடுதல் பொறுப்புகளும் அதிகரித்தாலும் உங்கள் பெயர் பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்யப்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க சிரமம் ஏற்பட்டாலும் உங்கள் பேச்சாற்றலால் அனைவரின் ஆதரவைப் பெறுவீர்கள். சில சமயங்களில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் அதிகாரிகளின் ஆதரவைப் பெற முடியாமல் திண்டாட நேரிடும். பொறுப்புகள் கூடும் காலம் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் மந்தமான நிலையை சந்தித்தாலும் எதிர்பாராத லாபங்களையும் அடைவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் நிறைவேறும். சில போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி விடுவீர்கள்.

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றால் சுமாரான லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும், வாக்குறுதி கொடுப்பது போன்றவ்றறையும் தவிர்த்து விடுவது நல்லது. கொடுத்த கடன்கள் தடைகளுக்குப் பின் வசூலாகும்.

அரசியல்

இதுவரை இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தேவையற்ற சேர்க்கைகளையும், நட்புகளையும் தவிர்ப்பது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவை பெற முடியும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலங்கள் அதிகரிக்கும். 

விவசாயிகள்

மகசூல் சற்று சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலை போகும். பங்காளிகளை அனுசரித்துச் செல்வதும் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள். ஆழ்கிணறு போடுவது புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும் என்பதால் இருப்பதை சிறப்பபுடன் பயன்படுத்தி கொள்வத நல்லது. புதிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். இடைவிடாத உழைப்பால் உடல் நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். கார் பங்களா போன்றவற்றினால் வீண் விரயங்களை சந்தித்தாலும் சொகுசு வாழ்வு பாதிப்படையாது.  

பெண்கள்

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் அனுசரித்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் நிலை சுமாராக இருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தடைகளுக்குப் பின் கிட்டும். புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு வீண் சங்கடங்கள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

மாணவ- மாணவியர்

கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதால் கல்வியில் முழுகவனம் செலுத்த முடியும். நண்பர்களின் ஆலோசனை நற்பலனை தரும்.

ஜனவரி 

உங்கள் ராசியாதிபதி புதன் 4-ல், ராகு 11-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேற தாமதம் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 14-01-2019 பகல் 12.53 மணி முதல் 16-01-2019 இரவு 08.09 மணி வரை.

பிப்ரவரி 

ஜென்ம ராசிக்கு 11-ல் ராகு, 4-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும், மாதபிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு ஆகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் தாமதப்படும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 10-02-2019 இரவு 07.37 மணி முதல் 13-02-2019 அதிகாலை 04.19 மணி வரை.

மார்ச் 

ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், மாதமுற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற வழியில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் முயன்று படித்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 10-03-2019 அதிகாலை 01.19 மணி முதல் 12-03-2019 காலை 10.24 மணி வரை.

ஏப்ரல் 

மாதகோளான சூரியன் 7, 8-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதும், 4-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். புத்திரர்களாலும் நிம்மதி குறையும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 06-04-2019 காலை 07.23 மணி முதல் 08-04-2019 மாலை 03.53 மணி வரை.

மே

ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன் 4-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். வீடு வாகனங்களால் வீண் விரயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 03-05-2019 பகல் 02.39 மணி முதல் 05-05-2019 இரவு 10.30 மணி வரை மற்றும் 30-05-2019 இரவு 11.04 மணி முதல் 02-06-2019 காலை 06.45 மணி வரை.

ஜுன்

மாதகோளான சூரியன் 9, 10-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும், பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். முருகனை வழிபடுவது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம் – 27-06-2019 காலை 07.44 மணி முதல் 29-06-2019 மாலை 04.03 மணி வரை.

ஜுலை

ராசிக்கு 11-ல் செவ்வாய், புதன், 10, 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது, பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது சிவனை வணங்குவது நல்லது.

சந்திராஷ்டமம் – 24-07-2019 மாலை 03.40 மணி முதல் 27-07-2019 அதிகாலை 01.10 மணி வரை.

ஆகஸ்ட்

ராசிக்கு 10-ல் ராகு, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 3-ஆம் தேதி முதல் 11-ல் புதன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 20-08-2019 இரவு 10.30 மணி முதல் 23-08-2019 காலை 08.55 மணி வரை.

செப்டம்பர்

இம்மாதம் 3-ல் குரு, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். கூட்டாளிகளும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. சிவவழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 17-09-2019 அதிகாலை 04.20 மணி முதல் 19-09-2019 இரவு 07.28 மணி வரை.

அக்டோபர் 

ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் 4-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் இதுவரை சந்தித்த சோதனைகள் சற்றே குறையும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 14-10-2019 காலை 10.20 மணி முதல் 16-10-2019 இரவு 08.45 மணி வரை.

நவம்பர்

இம் மாதம் 10-ல் ராகு, மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களும் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். 5-ஆம் தேதி முதல் குரு 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலை பளுவும் குறையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 10-11-2019 மாலை 05.20 மணி முதல் 13-11-2019 அதிகாலை 03.10 மணி வரை.

டிசம்பர்

சுக்கிரன் 4,5-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும், மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவினைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 08-12-2019 அதிகாலை 01.30 மணி முதல் 10-12-2019 பகல் 11.20 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 4,5,6,7,8

நிறம் – பச்சை, நீலம்

கிழமை – புதன், சனி

கல் – மரகத பச்சை

திசை – வடக்கு

தெய்வம்- ஸ்ரீ விஷ்ணு

புத்தாண்டு பலன் – 2019 சிம்மம்

புத்தாண்டு பலன் – 2019 சிம்மம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சிம்மம்   மகம்,  பூரம்,  உத்திரம் 1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, அஞ்சா நெஞ்சமும் தாராள மனப்பான்மையும், பெருந்தன்மையும் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் குரு, 5-ல் சனி சஞ்சரிப்பது அவ்வளவு சாதமான அமைப்பு என்று கூற முடியாது. வரும் 07.03.2019-ல் ஏற்பட இருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு பகவான் 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் எதையும் ஓரளவுக்கு சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் முடிந்த வரை ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பிறகே அனுகூலப்பலன் உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் நெருங்கியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் மற்றவர்களுக்கு பண உதவி செய்வது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போவதால் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் தேவையற்ற பிரச்சினைகளை சந்தித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். இந்த வருட இறுதியில் 05.11.2019-ல் ஏற்படவிருக்கும் குரு பெயர்ச்சியின் மூலம் குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்படையும். அஜீரண கோளாறு, தூக்கமின்மை, மன அமைதி குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகளும், வீண் விரயங்களும் உண்டாகும். மனைவிக்கு வயிறு கோளாறு, மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் உடல் அலைச்சலை குறைக்க முடியும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது மன உளைச்சலை குறைக்கும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் விலகும். உறவினர்களின் வருகை அதிகமாகி வீண் செலவுகள் உண்டாகும். பொருளாதார நிலையில் சங்கடங்கள் நிலவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தையில் தடைக்கு பின் அனுகூலபலன் உண்டாகும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி இருக்கும். புத்திரர்களும் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட மாட்டார்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அவப்பெயர்களால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தாமதப்படும். தேவையற்ற இடமாற்றத்தால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் அதனால் அனுகூலமும் இருக்கும். அது மட்டுமின்றி பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். உயர்அதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

தொழில் வியாபாரம்  

தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற இடையூறுகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் வீண் விரயம் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். நவீன கருவிகளும் பழுதடைந்து வீண் செலவுகளை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் கடின உழைப்பிற்கு பின்பு அனுகூலப்பலனை பெற முடியும். நெருக்கடி நிலைகளை சமாளிக்க கடன் வாங்கினாலும், அதை திருப்தி செலுத்த கூடிய அளவிற்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் சிந்தித்து செயல் பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். எதிர்பார்த்த லாபம் தடைகளுக்குப் பின் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் மற்றவர்களை நம்பி வாக்குறுதி, முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். வம்பு வழக்குகளில் இழுபறியான நிலை நீடிக்கும். பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அரசியல்

அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவை பெற முடியும் மேடை பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். அமைச்சர்களின் ஆதரவு குறையும். பொருளாதார நிலையில் மறைமுக வருவாய்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின்பு அனுகூலம் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகள் சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும் மகசூல் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கு ஏற்ற விலையை சந்தையில் பெற முடியாமல் போகும் என்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்த முடியாமல் போகும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் கை நழுவி போகும். இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வது நல்லது. உடல் நிலை பாதிப்படையும். எதிர்பாராத உதவிகளால் கொடுத்த வாக்கு உறுதிகளை காப்பாற்ற முடியும். பொருளாதார நிலையில் சங்கடங்கள் உண்டாகும். வரவேண்டிய பாக்கி தொகைகளில் இழுபறியான நிலை உண்டாகும்.

பெண்கள்

புகுந்த வீட்டில் நிம்மதியற்ற நிலை ஏற்பட்டாலும் பிறந்த வீட்டின் ஆதரவு மகழ்ச்சி அளிக்கும். எடுக்கும் காரியங்களில் தடைக்கு பின்பு நற்பலன் ஏற்படும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது.  புத்திர வழியில் வீண் செலவுகள் மனசஞ்சலங்கள் உண்டாகும். வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு, மாதவிடாய் பிரச்சினை போன்றவற்றால் மருத்துவ சற்று செலவுகளை சந்திக்க நேரிடும். பண வரவு ஏற்ற இறக்கமாக இருக்குமு.

மாணவ- மாணவியர்

மாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகம் வைத்து கொள்ள முடியாத நிலை உண்டாகும். மதிப்பெண்கள் குறைய கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சற்றே நிம்மதி அளிக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

ஜனவரி

சுகஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், ராசியாதிபதி சூரியன் மாதபிற்பாதியில் 6-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஓரளவுக்கு நற்பலன்களை ஏற்படுத்தும் என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலங்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது  உத்தமம்.

சந்திராஷ்டமம் – 12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.

பிப்ரவரி

பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் 6-ல் கேது சஞ்சரிப்பதும், ராசியாதிபதி சூரியன் மாதமுற்பாதியில் 6-ல் சஞ்சாரம் செய்வதும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் நெருங்கியவர்களால் நற்பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 08-02-2019 காலை 08.18 மணி முதல் 10-02-2019 இரவு 07.37 மணி வரை.

மார்ச்

உங்கள் ராசிக்கு 4-ல் குரு 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். 7-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் ராகு 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலன்களை பெற முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு பிரச்சனைகள், வாக்குவாதங்கள் போன்றவை ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் சற்று தாமத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி எந்த வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்கள் முழு முயற்சியுடன் படித்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ பெருமானை வணங்குதல் உத்தமம்.

சந்திராஷ்டமம் – 07-03-2019 பகல் 02.15 மணி முதல் 10-03-2019 அதிகாலை 01.19 மணி வரை.

ஏப்ரல் 

இம்மாதம் அதிசாரமாக 5-ல் குரு சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடனிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 03-04-2019 இரவு 08.48 மணி முதல் 06-04-2019 காலை 07.23 மணி வரை.

மே

இம்மாதம் 10, 11-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. பெண்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நினைத்ததை சாதிக்க முடியும். அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 01-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 03-05-2019 பகல் 02.39 மணி வரை மற்றும்  28-05-2019 பகல் 12.18 மணி முதல் 30-05-2019 இரவு 11.04 மணி வரை.

ஜுன்

ராசியாதிபதி சூரியன் 10, 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வதும் பல்வேறு வகையில் நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பெற முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கும். விநாயகர் வழிபாடு உத்தமம்.

சந்திராஷ்டமம் – 24-06-2019 இரவு 08.20 மணி முதல் 27-06-2019 காலை 07.44 மணி வரை.

ஜுலை

ராசிக்கு 11-ல் சூரியன், சுக்கிரன், ராகு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.

ஆகஸ்ட்

ராசிக்கு 11-ல் ராகு சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்றாலும், 12-ல் செவ்வாய், சூரியன், சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகலாம். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில் வியாபாரத்திலும் கடுமையான நெருக்கடி ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறலாம். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 18-08-2019 காலை 10.10 மணி முதல் 20-08-2019 இரவு 10.30 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசியில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். முன்கோபத்தை குறைப்பது பெரியவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் போன்றவற்றை வாங்க முடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபிட்சத்தை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம் – 14-09-2019 மாலை 04.10 மணி முதல் 17-09-2019 அதிகாலை 04.20 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசிக்கு 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் கைகூடும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும்.  மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 11-10-2019 இரவு 10.25 மணி முதல் 14-10-2019 காலை 10.20 மணி வரை.

நவம்பர் 

ஜென்ம ராசிக்கு 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன், 5-ஆம் தேதி முதல் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபத்தையும் பெற முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்ற குறையும்.  உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை தட்டி செல்வார்கள்.  ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 08-11-2019 அதிகாலை 05.30 மணி முதல் 10-11-2019 மாலை 05.20 மணி வரை.

டிசம்பர் 

ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் குரு, 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வாய்ப்புகளும் கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 05-12-2019 பகல் 01.20 மணி முதல் 08-12-2019 அதிகாலை 01.30 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9

நிறம் – வெள்ளை, சிவப்பு

கிழமை – ஞாயிறு, திங்கள்

கல் – மாணிக்கம்

திசை- கிழக்கு

தெய்வம் – சிவன்

 

புத்தாண்டு பலன் – 2019 கடகம்.

புத்தாண்டு பலன் – 2019 கடகம்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கடகம்.  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே, விடா முயற்சியுடன் செயல்பட்டு எதிலும் வெற்றிகளை குவிக்க கூடிய திறமைசாலிகளான உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும், ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதாலும் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். தாராளமான தனவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். தற்போது 1, 7-ல் சஞ்சரிக்கும் சர்ப கிரகங்கள் வரும் 07.03.2019 முதல் மாறுதலாகி கேது 6-லும், ராகு 12-லும் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற உறவுகளும் மீண்டும் வந்து நட்பு கரம் நீட்டுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெற்று மனதில் பூரிப்பு உண்டாகும். வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். அசையா சொத்துக்கள் வழியில் இருந்து வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வந்து தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை நிலவுவதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கஷ்டங்களும், போட்டிகளும் விலகி எதிர்பார்த்த லாபங்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் ஏற்றமிகு பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் அனுகூலமான இடமாற்றமும் எளிதில் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் மனநிறைவை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உங்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கடந்த கால உடல் நல பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் குறையும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரநிலை

உங்கள் ராசிக்கு 5-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், தாராள தனவரவுகளும் உண்டாகும். புதிய பொருட் சேர்க்கைகள் அமையும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பணி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவர்களின் நோக்கம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்றபடி வேலை வாய்ப்பு கிட்டும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் தொழிலை அவிபிருத்தி செய்யும் நோக்கம் நிறைவேறும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் நல்ல லாபம் உண்டாகும். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மறைமுக போட்டி பொறாமைகள் விலகி வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பொருளாதார மேன்மையும் உண்டாகும்.

கமிஷன்- ஏஜென்ஸி

குரு, சனி சாதகமாக சஞ்சரிப்பதால் கமிஷன்- ஏஜென்ஸி கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பெரிய தொகைகளையும் எளிதாக ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு புகழ் பெருமை உயரும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அனுகூலம் தரும். மறைமுக வருவாய்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சாதகமான பலனை ஏற்படுத்தும். கட்சி பணிகளுக்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலனை அளிக்கக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். மகசூல் பெருகும். விளை பொருளுக்கு ஏற்ற விலையினை சந்தையில் பெறுவீர்கள். கால்நடைகளாலும் லாபம் அமையும். புதிய பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். அசையாச் சொத்து வகையிலிருந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் அனைத்தும் விலகும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு தடைப்பட்ட பணவரவுகள் கிடைக்கும். எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமைந்து பொருளாதார நிலை உயரும். இசை துறை, நடன துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

பெண்கள் 

பெண்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். வண்டி வாகனம் வாங்க கூடிய உன்னத அமைப்பு உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகி மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். நல்ல நண்பர்களின் நட்புக்கள் கிட்டும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளைப் பெறுவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். ஆரோக்கியத்தில் மந்த நிலை உண்டானாலும் எடுக்கும் காரியத்தை திறம்பட செய்து முடித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ராகு, கேதுவுக்கு சர்பசாந்தி செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 09-01-2019 பகல் 01.14 மணி முதல் 12-01-2019 அதிகாலை 02.03 மணி வரை.

பிப்ரவரி

இம்மாதம் ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு, பலவகையில் லாபகரமான பலன்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 05-02-2019 இரவு 07.35 மணி முதல் 08-02-2019 காலை 08.18 மணி வரை.

மார்ச்

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, சஞ்சரிப்பதாலும் 10,11-ல் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். 1, 7-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது 7-ஆம் தேதி முதல் மாறுதலாகி கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறைந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 05-03-2019 அதிகாலை 01.45 மணி முதல் 07-03-2019 பகல் 02.15 மணி வரை.

ஏப்ரல் 

ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, கேது, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். இம்மாதம் மாதபிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது.  மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம் – 01-04-2019 காலை 08.22 மணி முதல் 03-04-2019 இரவு 08.48 மணி வரை மற்றும் 28-04-2019 மாலை 03.45 மணி முதல் 01-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.

மே

மாதகோளான சூரியன் சாதகமாக 10,11-ல் சஞ்சரிப்பதாலும், 9,10-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 25-05-2019 இரவு 11.44 மணி முதல் 28-05-2019 பகல் 12.18 மணி வரை.

ஜுன்

மாதகோளான சூரியன் மாத முற்பாதியில் 11-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 22-06-2019 காலை 07.40 மணி முதல் 24-06-2019 இரவு 08.20 மணி வரை.

ஜுலை

ஜென்ம ராசியில் புதன், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். குரு பகவானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 15-08-2019 இரவு 09.27 மணி முதல் 18-08-2019 காலை 10.10 மணி வரை.

செப்டம்பர்

பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சிறப்பாக கிடைக்கும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 12-09-2019 அதிகாலை 03.28 மணி முதல் 14-09-2019 மாலை 04.10 மணி வரை.

அக்டோபர்

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், சூரியன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சாரம் செய்வதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை முதலீடு செய்து நல்ல லாபம் காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 09-10-2019 காலை 09.40 மணி முதல் 11-10-2019 இரவு 10.25 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற்றத்தை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. 5-ஆம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 05-11-2019 மாலை 04.45 மணி முதல் 08-11-2019 அதிகாலை 05.30 மணி வரை.

டிசம்பர் 

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 03-12-2019 அதிகாலை 00.55 மணி முதல் 05-12-2019 பகல் 01.20 மணி வரை மற்றும் 30-12-2019 காலை 09.35 மணி முதல் 01-01-2020 இரவு 09.40 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9

நிறம் – வெள்ளை, சிவப்பு

கிழமை – திங்கள்,வியாழன்

கல் – முத்து

திசை – வடகிழக்கு

தெய்வம் – வெங்கடாசலபதி

 

புத்தாண்டு பலன் – 2019 மிதுனம்

புத்தாண்டு பலன் – 2019 மிதுனம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மிதுனம்   மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள்,  திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

 அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, சிறப்பான அறிவு ஆற்றலால் பலரை வழி நடத்தும் திறமை கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமாக 6-ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதும், 7-ஆம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். 2, 8-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது வரும் 07.03.2019 முதல் 1, 7-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. புத்திர வழியில் மன சஞ்சலங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூட இடையூறுகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. அசையா சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டி பொறாமைகளும் உண்டாவதால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தொழிலாளர்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடித்தால் நல்ல பெயரை எடுக்க முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. 05.11.2019-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குருபகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆண்டின் இறுதியில் உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மனைவி வழியில் உடல் நிலை பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் கவனமாக நடந்து கொள்வதே நல்லது. தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதன் மூலம் உடல்நிலையும், மனநிலையும் சிறப்பாக அமையும்.

குடும்பம் பொருளாதாரநிலை

பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும், குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் வீண் விரயங்களும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ராகு கேது சாதகமற்று சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும், குடும்பத்தில் வீண் பிரச்சினைகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் சிறு தடைக்கு பின் சாதகப்பலன்கள் உண்டாகும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். வேலைபளு அதிகரித்தாலும் சிரமம் பாராது எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பதவி உயர்வுகளால் பொறுப்புகள் அதிகரிக்கும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு தாமதப்படும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். அந்நிய நாட்டு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபத்தை அடைய முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதமாக அமையும். பெரிய தொகைகள் கொண்டு செய்யும் முயற்சிகளில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். மறைமுக எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும்.

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சற்று தடைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருந்தாலும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாவதில் தடைகள் ஏற்படும்.

அரசியல் 

உங்கள் பதவிகளுக்கு சிறுசிறு பிரச்சனைகள் தோன்றும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும், தலைவர்களின் ஆதரவுகளும் சிறப்பாக இருக்கும். மக்கள் மத்தியில் நல்லதொரு செல்வாக்கினைப் பெறுகின்ற நிலை உண்டாகும். 

விவசாயிகள்

பயிர் விளைச்சல்களில் நிறைய இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் சிறுசிறு சங்கடங்கள், வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும், உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். காய், கனி, பூ வகைகளாலும் கால் நடைகளாலும் ஓரளவுக்கு லாபம் அமையும்,

கலைஞர்கள்

புதிய வாய்பபுகள் உங்களை தேடி வந்து பூரிப்படைய செய்யும். எதிர்பாராத பண வரவுகளால் பொருளாதார நிலை உயரும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பாக இருக்கும். இசை துறையில் உள்ளவர்களுக்கும் முன்னேற்றமான பலன்களே உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும்.

பெண்கள்

பெண்களுக்கு உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றால் மருத்துவ செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் தருவதை தவிர்க்கவும். பொருளாதார நிலையில் சில சங்கடங்கள் இருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். புத்திர பாக்கியம் சற்று தாமதப்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நல்லது நடக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். படித்த பாடங்களை மனதில் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்கள் சகவாசத்தையும் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் குறையும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற முடியும்.

ஜனவரி

உங்கள் ராசியாதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்றாலும் குரு 6-ல் இருப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 07-01-2019 அதிகாலை 00.25 மணி முதல் 09-01-2019 பகல் 01.14 மணி வரை.

பிப்ரவரி

லாப ஸ்தானத்தில் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். 7-ல் சனி சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, சோர்வு, கை, கால் வலி போன்ற பாதிப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்கள் உண்டாகும். கொடுத்த பணத்தை திரும்ப வெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 03-02-2019 காலை 06.39 மணி முதல் 05-02-2019 இரவு 07.35 மணி வரை.

மார்ச்

செவ்வாய் 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு லாபங்களை பெற முடியும் என்றாலும் 6-ல் குரு, 7-ல் சனி சஞ்சரிப்பதும், 2, 8-ல் சஞ்சரிக்கும் ராகு கேது வரும் 7-ஆம் தேதி முதல் மாறுதலாகி ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேதுவாக சஞ்சரிக்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய தாமதநிலை ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 02-03-2019 பகல் 12.40 மணி முதல் 05-03-2019 அதிகாலை 01.45 மணி வரை மற்றும் 29-03-2019 இரவு 07.23 மணி முதல் 01-04-2019 காலை 08.22 மணி வரை.

ஏப்ரல்

இம்மாதம் அதிசாரமாக குரு 7-ல் சஞ்சாரம் செய்வதும், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாதகோளான சூரியன் 10, 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 29-03-2019 இரவு 07.23 மணி முதல் 01-04-2019 காலை 08.22 மணி வரை மற்றும் 26-04-2019 அதிகாலை 03.14 மணி முதல் 28-04-2019 மாலை 03.45 மணி வரை.

மே

மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசிக்கு 10, 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 23-05-2019 பகல் 11.45 மணி முதல் 25-05-2019 இரவு 11.44 மணி வரை.

ஜுன்

ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமதநிலை ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஏற்பட கூடிய வாக்கு வாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற சற்று தாமத நிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 19-06-2019 இரவு 08.00 மணி முதல் 22-06-2019 காலை 07.40 மணி வரை.

ஜுலை

ஜென்ம ராசியில் ராகு, சூரியன், சுக்கிரன், 2-ல் செவ்வாய், 7-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது சிறப்பு. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 17-07-2019 அதிகாலை 03.15 மணி முதல் 19-07-2019 பகல் 02.55 மணி வரை.

ஆகஸ்ட் 

இம்மாதம் 9-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 13-08-2019 காலை 09.25 மணி முதல் 15-08-2019 இரவு 09.27 மணி வரை.

செப்டம்பர் 

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது உத்தமம். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 09-09-2019 மாலை 03.10 மணி முதல் 12-09-2019 அதிகாலை 03.28 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மேலதிகாரிகளிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. விநாயகர் வழிபாடு நல்லது.

சந்திராஷ்டமம் – 06-10-2019 இரவு 09.35 மணி முதல் 09-10-2019 காலை 09.40 மணி வரை.

நவம்பர் 

இம்மாதம் 5-ஆம் தேதி முதல் 7-ல் குரு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 03-11-2019 அதிகாலை 05.25 மணி முதல் 05-11-2019 மாலை 04.45 மணி வரை மற்றும் 30-11-2019 பகல் 02.30 மணி முதல் 03-12-2019 அதிகாலை 00.55 மணி வரை.

டிசம்பர் 

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். முருக வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம் – 27-12-2019 இரவு 11.45 மணி முதல் 30-12-2019 காலை 09.35 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8,

நிறம் – பச்சை, வெள்ளை

கிழமை – புதன், வெள்ளி

கல் – மரகதம்

திசை – வடக்கு

தெய்வம் -விஷ்ணு

புத்தாண்டு பலன் – 2019 ரிஷபம்

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

புத்தாண்டு பலன் – 2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையே அதிகம் விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் முழுவதும் உங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தேவையற்ற ஆரோக்கிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் சனி உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும். உங்களது கடன் பிரச்சினைகள் குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விருப்பமும் நிறைவேறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கை கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புத்திர பாக்கியமும் உண்டாவதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். வரும் 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்கள் உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பபாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமானப் பலன்களை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். வெளி வட்டாரத் தொடர்புகளால் அனுகூலங்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு முடக்கங்கள் ஏற்பட்டாலும் லாபங்கள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படும் அளவிற்கு உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களால் சற்று மருந்து செலவுகள் ஏற்பட்டாலும் உற்சாகம் குறையாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உணவு விஷயத்தில் கட்டுபாடாக இருந்தால் நல்ல ஆரோக்கியம் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தாராள தன வரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். வண்டி வாகனம் வாங்கும் யோகமும், வீடுமனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனும் உண்டாகும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்கள் அனுகூலமான பலனை அடைவார்கள் என்றாலும் கூடுதல் பொறுப்புகளும் வேலைபளுவும் சற்று அதிகரித்தே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வும், மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். பேச்சில் சற்று கவனமாக நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும்.

தொழில் வியாபாரம் 

தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்தித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். எதிர்பாராத பணவரவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு அமையும். கூட்டு தொழில் செய்பவர்கள் சற்று அலைச்சலை சந்திக்க நேரிடும் என்றாலும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியினை ஏற்படுத்தும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கமிஷன்- ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும். பெரிய தொகைகளையும் எளிதாக ஈடுபடுத்தி லாபங்களை அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் வெளியாட்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும்.

அரசியல்

உங்களின் செல்வம் செல்வாக்கு உயர கூடிய காலம் என்றாலும் மக்களின் தேவையறிந்து அவற்றை பூர்த்தி செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உங்களின் பேச்சுகளுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உயர்வை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களால் சற்று அலைச்சல் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் பட்டபாட்டிற்கான பலன்களைப் பெற்று விடுவீர்கள். வங்கிக் கடன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்க தாமதம் ஆகும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் நோக்கங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. புழு பூச்சிகளின் தொல்லைகளால் சில வீண் விரயங்களும் உண்டாகும்.

கலைஞர்கள் 

தொழிலில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் சிக்கல்கள் குறையும். தடைப்பட்ட பண வரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கும். உடன் இருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை பெறுவீர்கள். நீங்கள் நடித்த படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும்.

பெண்கள் 

குடும்ப வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மனம் பூரிப்படையும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து புதிய பொருட்சேர்க்கைகள் உண்டாகும். பணி புரியும் பெண்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற முடியும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற பொழுது போக்குகளில் நேரத்தை செலவழிக்காமல் பாடங்களில் முறையுடன் கவனம் செலுத்துவதால் அனைவரின் ஆதரவையும் பெற முடியும்.

ஜனவரி

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபமும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை மற்றும் 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை.

பிப்ரவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவானுக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை மற்றும் 28-02-2019 அதிகாலை 00.46 மணி முதல் 02-03-2019 பகல் 12.40 மணி வரை.

மார்ச்

மாத கோளான சூரியன் சாதகமாக 10, 11-ல் சஞ்சரிப்பதும், 7-ல் குரு, 9-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பலவழிகளில் தேடி வரும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். இம்மாதம் 7-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 27-03-2019 காலை 08.19 மணி முதல் 29-03-2019 இரவு 07.23 மணி வரை.

ஏப்ரல்

இம்மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதும், 10,11-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்தும் நல்ல அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வதால் அவர்களால் நற்பலன்களை பெற முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 23-04-2019 மாலை 05.14 மணி முதல் 26-04-2019 அதிகாலை 03.14 மணி வரை.

மே

உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சனி, கேது, 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்க்கவும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 21-05-2019 அதிகாலை 02.30 மணி முதல் 23-05-2019 பகல் 11.45 மணி வரை.

ஜுன்

உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு, 8-ல் சனி கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 17-06-2019 காலை 10.42 மணி முதல் 19-06-2019 இரவு 08.00 மணி வரை.

ஜுலை

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 14-07-2019 மாலை 05.25 மணி முதல் 17-07-2019 அதிகாலை 03.15 மணி வரை.

ஆகஸ்ட்

இம்மாதம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், சூரியன், 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் நல்ல லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 10-08-2019 இரவு 11.05 மணி முதல் 13-08-2019 காலை 09.25 மணி வரை.

செப்டம்பர் 

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 4, 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். 8-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.  சனிக்குரிய பரிகாரங்களை செய்து நல்லது.

சந்திராஷ்டமம் – 07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 04-10-2019 பகல் 12.20 மணி முதல் 06-10-2019 இரவு 09.35 மணி வரை மற்றும் 31-10-2019 இரவு 09.30 மணி முதல் 03-11-2019 அதிகாலை 05.25 மணி வரை.

நவம்பர்

மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும், 10-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். 5-ஆம் தேதி முதல் குரு 8-ஆம் வீட்டில் சஞசாரம் செய்ய இருப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 28-11-2019 காலை 07.35 மணி முதல் 30-11-2019 பகல் 02.30 மணி வரை.

டிசம்பர்

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்றாலும் 8-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். சிவனை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம் – 25-12-2019 மாலை 04.40 மணி முதல் 27-12-2019 இரவு 11.45 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8.

நிறம் – வெண்மை, நீலம்,

கிழமை – வெள்ளி,சனி

கல் – வைரம்,

திசை – தென்கிழக்கு,

தெய்வம் – விஷ்ணு, லட்சுமி