மீனம் – புத்தாண்டு பலன் – 2020

மீனம் – புத்தாண்டு பலன் – 2020

கணித்தவர்

ஜோதிட மாமணி

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

கம்பீரமான தோற்றமும் பிறரை வசீகரிக்க கூடிய அழகும் கொண்ட மீன ராசி நேயர்களே! நவகிரகங்களில் முழு சுபகிரக தனகாரகன் என வர்ணிக்கப்படும் குரு பகவானின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் லாப ஸ்தானமான 11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் எதிலும் லாபங்களை அடையும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் உங்களை தேடி வந்து கடந்த கால கடன்கள் குறையும் யோகம், அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் நிலை உருவாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் இருந்தாலும் எதையும் எதிர் கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். சர்ப்ப கிரகமான ராகு சுகஸ்தானமான 4-லும், கேது 10-லும் வரும் 23-09-2020 வரை சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் ராசியாதிபதி குரு திருக்கணிதப்படி 20-11-2020 முடிய ஜீவன ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 10-ஆம் வீட்டில்  சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தாலும் குரு உங்கள் ராசியாதிபதி என்பதால் அடைய வேண்டிய இலக்கை அடைத்து விடுவீர்கள். தொழிலில் சற்று நெருக்கடிகள் இருந்தாலும் பொருட் தேக்கங்கள் ஏற்படாமல் லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதங்களுக்குப் பின் கிடைக்கும். வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமானப் பலனைப் பெறலாம். தக்க சமயத்தில் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கும் குரு லாப ஸ்தானத்தில் அதிசாரமாக திருக்கணிதப்படி 30-03-2020 முதல் 14-05-2020 முடியவும் அதனை தொடர்ந்து வக்ர கதியில் 12-09-2020 முடியவும், அதன் பின்பு 20-11-2020 முதல் லாப ஸ்தானத்தில் (மகர ராசியில்) சஞ்சரிக்க உள்ள காலத்தில் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும் அமைப்பு, குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூட கூடிய யோகம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் தேக ஆரோக்கியம் ஒரளவுக்குச் சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற அலைச்சல்களால் இருப்பதை அனுபவிக்க இடையூறு உடல் அசதி ஏற்படும். எடுக்கும் காரியங்களில் சிறு தடையும் எதிர்ப்புகளும் இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றமடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் கடந்த காலங்களில் இருந்த மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். பண வரவுகள் தேவைகேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை குறைத்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ முடியும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் ஏப்ரல் மே மாதங்களில் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகம்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் எதிலும் சற்றுக் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் ஏற்படும். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. எந்தவொரு பணியில் ஈடுபட்டாலும் கடின முயற்சிகளை மேற்கொண்டு முன்னேற்றங்களை அடைவீர்கள்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும் புதிய முயற்சிகளையும் கவனமுடன் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் சற்று குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதிலும் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. வம்பு வழக்குகளில் இருந்த இழுபறி நிலை உங்களுக்கு சாதகமாக முடியும்.

அரசியல்

எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் பெற்று நல்ல பதவியை அடைவீர்கள். நினைத்த காரியங்களை நிறைவேற்றி விட முடியும். எதிலும் கவனத்துடன் செயல்பட்டால் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது சிறப்பு.

கலைஞர்கள்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, நேரத்திற்கு உணவு உன்பது உத்தமம். எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டி இருந்தாலும் அடைய வேண்டியதை அடைந்து விடுவீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், உடற் சோர்வு உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாகவே இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகள் ஏற்படுவதால் அறுவடையில் தாமதம் உண்டாகும். விளை பொருளுக்கேற்ற விலையினை சந்தையில் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலைச்சல் இருக்கும் என்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை தவிக்கலாம். அசையா சொத்துக்கள் ரீதியாக சுப செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் ஏப்ரல் மே மாதங்களில் கை கூடும்.

மாணவ மாணவியர்

மாணவர்கள் முழு முயற்சியுடன் பாடுபட்டால் நினைத்ததை சாதிக்க முடியும் என்றாலும் மனது அலைபாயக் கூடிய காலம் என்பதால் தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்க்கலாம். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. சுற்றுலா போன்ற உல்லாசப் பயணங்களில் கவனமுடன் நடந்து கொள்வது நன்மை அளிக்கும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளைப் பெற முடியும்.

மாதப்பலன்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் ஏற்படும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வகையில் லாபம் கிட்டும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 17-01-2020 பகல் 01.49 மணி முதல் 19-01-2020 மாலை 05.47 மணி வரை.

பிப்ரவரி. 

சனி 11-ல், மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 10-ல் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. புதிய விடு, மனை வாங்கும் விஷயத்தில் சற்று கவனம் தேவை. விஷ்ணு வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 13-02-2020 இரவு 08.22 மணி முதல் 15-02-2020 இரவு 11.18 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். சனி 11-ல், செவ்வாய் 10, 11-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைப்பதோடு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. திருமண முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். குரு பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 12-03-2020 காலை 05.35 மணி முதல் 14-03-2020 காலை 06.41 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு செவ்வாய், குரு, சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள தடைகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சிறப்பான பணவரவால் பொருளாதாரம் மேம்படும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்கள் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 08-04-2020 மாலை 04.33 மணி முதல் 10-04-2020 மாலை 04.26 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு குரு அதிசாரமாக லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், சனி 11-ல், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை நல்லபடியாக பெருக்க உதவும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். துர்கையம்மனையும் விஷ்ணுவையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 06-05-2020 அதிகாலை 03.15 மணி முதல் 08-05-2020 அதிகாலை 03.13 மணி வரை.

ஜுன்.

சூரியன் மாத முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதும் புதன் 4-ல், சனி 11-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 02-06-2020 பகல் 12.00 மணி முதல் 04-06-2020 பகல் 01.08 மணி வரை மற்றும் 29-06-2020 மாலை 06.25 மணி முதல் 01-07-2020 இரவு 08.55 மணி வரை.

ஜுலை.

ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதும், நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நற்பலனை தரும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்கு பின் தான் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வு தாமதப்படும். சிவ வழிபாட்டையும், முருக வழிபாட்டையும் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 26-07-2020 இரவு 11.50 மணி முதல் 29-07-2020 அதிகாலை 02.48 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-லும், மாத பிற்பாதியில் சூரியன் 6-லும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகளில் தடை இருக்காது. போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 23-08-2020 காலை 06.05 மணி முதல் 25-08-2020 காலை 08.15 மணி வரை.

செப்டம்பர்.

பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். உங்கள் பலமும் வலிமையும் கூடும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 19-09-2020 பகல் 02.40 மணி முதல் 21-09-2020 பகல் 03.15 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு 1, 2-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, தேவையற்ற நெருக்கடி உண்டாகும். ராகு 3-ல், சனி 11-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவி உங்களுக்கு கிடைத்து எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எந்தவொரு புதிய முயற்சிகளிலும் சிந்தித்து செயல்பட்டால் சாதகப் பலனைப் பெற முடியும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 17-10-2020 அதிகாலை 01.25 மணி முதல் 19-10-2020 அதிகாலை 00.45 மணி வரை.

நவம்பர்.

ஜென்ம ராசியில் செவ்வாய், மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. 3-ல் ராகு, சனி 11-ல் சஞ்சரிப்பதும் 20-ஆம் தேதி முதல் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலப்பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் லாபங்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். முருக பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 13-11-2020 பகல் 12.30 மணி முதல் 15-11-2020 பகல் 11.58 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். மாத பிற்பாதியில் சூரியன், புதன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 10-12-2020 இரவு 09.50 மணி முதல் 12-12-2020 இரவு 10.40 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9            கிழமை – வியாழன், ஞாயிறு    திசை – வடகிழக்கு

கல் – புஷ்ப ராகம்     நிறம் – மஞ்சள், சிவப்பு     தெய்வம் –  தட்சிணாமூர்த்தி

 

கும்பம் – புத்தாண்டு பலன் – 2020

கும்பம் – புத்தாண்டு பலன் – 2020

கணித்தவர்

ஜோதிட மாமணி

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்களே! நவகிரகங்களில் ஆயுள் ஆரோக்கியத்திற்கு காரகனான சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குருபகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையாக பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கிய சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தி ஆகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்த விதமான எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 3, 5, 7-ஆம் வீடுகளை பார்ப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த காலங்களில் நிலவிய போட்டிகள் குறைந்து லாபகரமான பலன்கள் உண்டாகும். வேலையாட்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்டு வந்த வாய்ப்புகள் தற்போது கிடைத்து நல்ல நிலை அடைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.

உங்கள் ராசியாதிபதி சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி தொடங்க உள்ளதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன்களை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் சிலருக்கு குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு சனி ராசியாதிபதி என்பதால் ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்களுக்கு அதிக கெடுதிகளை செய்ய மாட்டார். சர்ப்ப கிரகமான ராகு பஞ்சம ஸ்தானமான 5-ல் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதால் சிலருக்கு அஜீரண கோளாறு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் மிகவும் சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பாராத வகையில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் நன்மையான பலன்களே அமையும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் உங்களால் சமாளித்து விட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்படலாம். உங்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களை பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது கிடைத்து மனநிம்மதி ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இனையும் வாய்ப்பு உண்டாகும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் பல வகையில் லாபங்களை பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும். லாபங்கள் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்களில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றாலும் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். கடந்த கால வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு செல்வம் செல்வாக்கு பெயர், புகழ், யாவும் உயரக்கூடும். உடனிருப்பவர்கள் மிகவும் சாதகமாக செயல்படுவார்கள். எதிர் அணியினரால் வீண் பிரச்சினைகளும் மன சஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கட்சியின் வளர்ச்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேரிடும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புக்கள் தடையின்றி கிடைக்கும் என்றாலும் கையில் இருக்கும் வாய்ப்புக்களை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்து சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற முடியும்.  பட்டபாட்டிற்குகான பலனை தடையின்றி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கும். அசையா சொத்து விஷயங்களில் பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்கள்

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெற முடியும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

மாணவ மாணவியர்

மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றி மேல் வெற்றியினை பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பழகும் நண்பர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது சிறப்பு.

மாதப்பலன்

ஜனவரி. 

உங்கள் ராசிக்கு குரு, சனி, கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு போட்டிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருக வழிபாடு உத்தமம்.

சந்திராஷ்டமம் – 15-01-2020 காலை 11.28 மணி முதல் 17-01-2020 பகல் 01.49 மணி வரை.

பிப்ரவரி. 

உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய், லாப ஸ்தானத்தில் குரு, கேது சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நல்ல லாபம் கிட்டும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். துர்கையம்மன் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 11-02-2020 இரவு 07.43 மணி முதல் 13-02-2020 இரவு 08.22 மணி வரை.

மார்ச்.

லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், குரு, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகங்கள் உண்டாகும். குடும்ப ஒற்றுமை சற்று குறையும். முடிந்த வரை முன்கோபத்தை குறைத்துக் கொண்டு உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பண விஷயங்களில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். சிவ வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 10-03-2020 காலை 06.22 மணி முதல் 12-03-2020 காலை 05.35 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமானப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 06-04-2020 மாலை 05.32 மணி முதல் 08-04-2020 மாலை 04.33 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், 11-ல் கேது, மாத முற்பாதியில் 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு முன்னேற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. முருக வழிபாட்டையும் துர்கை வழிபாட்டையும் மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 04-05-2020 அதிகாலை 03.08 மணி முதல் 06-05-2020 அதிகாலை 03.15 மணி வரை மற்றும் 31-05-2020 காலை 10.20 மணி முதல் 02-06-2020 பகல் 12.00 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை தரும் அமைப்பு என்றாலும் மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமையும். குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 27-06-2020 மாலை 03.50 மணி முதல் 29-06-2020 மாலை 06.25 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-ல், கேது 11-ல், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களையும் தவிர்த்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. முருக பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 24-07-2020 இரவு 09.35 மணி முதல் 26-07-2020 இரவு 11.50 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் உள்ள பாதிப்புகள் படிப்படியாக குறையும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். முருகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 21-08-2020 அதிகாலை 05.15 மணி முதல் 23-08-2020 காலை 06.05 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் தொழில் பொருளாதார நிலை லாபகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். இம்மாதத்தில் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், சிறு சிறு மருத்துவ செலவுகளும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெறலாம். சிவ பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 17-09-2020 பகல் 03.08 மணி முதல் 19-09-2020 பகல் 02.40 மணி வரை.

அக்டோபர்.

பாக்கிய ஸ்தானமான 9-ல் புதனும் லாப ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகளில் சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 15-10-2020 அதிகாலை 02.03 மணி முதல் 17-10-2020 அதிகாலை 01.25 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். முருக வழிபாடு செய்வது, மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 11-11-2020 பகல் 12.00 மணி முதல் 13-11-2020 பகல் 12.30 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. செவ்வாய் 2-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகத்தில் கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். துர்க்கையம்மன் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 08-12-2020 இரவு 07.30 மணி முதல் 10-12-2020 இரவு 09.50 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8             கிழமை – வெள்ளி, சனி         திசை – மேற்கு

கல் – நீலக்கல்  நிறம் – வெள்ளை, நீலம்          தெய்வம் – ஐயப்பன்

 

மகரம் புத்தாண்டு பலன் – 2020

மகரம் புத்தாண்டு பலன் – 2020

கணித்தவர்

ஜோதிட மாமணி

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய லட்சியங்களைத் தவறாமல் நிறைவேற்றக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே. சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குருபகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும், ராசியாதிபதி சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பது உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக கெடுதலை செய்ய மாட்டார். உடல் ஆரோக்கிய ரீதியாக சோர்வு, சுறுசுறுப்பு இல்லாத நிலை இருக்கும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அன்றாட பணிகளில் ஈடுபாடு அற்ற நிலை இருக்கும் என்பதால் முடிந்த வரை அதிக பெறுப்புகளை எடுத்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் நிலை, வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் சர்ப்ப கிரகமான ராகு ருணரோக ஸ்தானமான 6-ல் வரும் 23-09-2020 வரை சாதகமாக சஞ்சாரிப்பதாலும் அதன் பின்பு கேது 11-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி ஆகும். உற்றார் உறவினர்களாலும், குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறுசிறு உதவிகள் கிடைப்பதால் ஒரளவுக்கு மன நிம்மதி உண்டாகும்

     பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவும், கொடுக்கல்- வாங்கல் விஷத்தில் கவனத்துடன் இருப்பது மற்றவர்களுக்கு பண உதவி செய்வது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக கடுமையாக உழைக்க வேண்டிய காலமாகும். தேவையற்ற பொருட் தேக்கத்தால் அடைய வேண்டிய லாபத்தை அடைய இடையூறு உண்டாகும். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் எதிலும் பெறுமையுடன் செயல்படுவது நல்லது. ராகு சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். தொழில் ரீதியாக அதிக முதலீடு கொண்ட செயல்களை தள்ளி வைப்பது மிகவும் நல்லது. அப்படி ஈடுபட்டே ஆக வேண்டும் என்றால் உங்கள் பெயரில் செய்யாமல் மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது உத்தமம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையீடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்பால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய நிலை உண்டாகும். திருமண போன்ற சுப காரியங்களுக்கான முயற்சியில் தடைகள் ஏற்படும் என்றாலும் ஏப்ரல் மே மாதங்களில் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு.   

உடல் ஆரோக்கியம்

ஆரோக்கிய பாதிப்பால் உடல் சோர்வு ஏற்படும் என்றாலும் உங்களது மனோ தைரியத்தால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் விரயங்கள், மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

பொருளாதார ரீதியாக நெருக்கடி தேவையற்ற பிரச்சினையால் எல்லாம் இருந்தும் அனுபவிக்கத் தடைகள் உண்டாகும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவால் உங்களது அனைத்து பிரச்சினைகளும் குறையும். ஏப்ரல் மே மாதங்களில் திருமண சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உத்தியோகம்

மேலதிகாரிகளின் கெடுபிடிகள், வேலைபளு போன்றவைகளால் பல சங்கடங்களை சந்தித்தாலும் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்க இடையூறுகள் உண்டாகும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும். ஊதிய உயர்வுகள் தக்க சமயத்தில் கிடைக்கும் என்றாலும் குடும்பத்தில் ஏற்படும் வீண் செலவுகளால் தேவையற்ற நெருக்கடி உண்டாகி மன நிம்மதி குறையும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டி பொறாமைகள், அலைச்சல் டென்ஷன் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றங்களை அடைவீர்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் சாதகமான பலன் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

பணவரவுகளில் இழுபறி நிலை தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்களின் உதவியால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து எதையும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்

கட்சி பணிக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் செலவுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிர்பாராத உதவிகளால் பொருளாதார நிலையில் மேம்பாடுகள் உண்டாகி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம்.

கலைஞர்கள்

கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் மன அமைதியை குறைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சற்று இழுபறி நிலையில் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் அனுகூலங்கள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி இருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் நீர் வரத்து குறையும் என்றாலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினை பெறுவீர்கள். பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய யோகம் ஏற்படும் என்றாலும் அதற்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். அரசு வழியில் கிடைக்கும் உதவியால் இருக்கும் நெருக்கடிகள் சற்று குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஏப்ரல் மே மாதங்களில் நல்ல வரன்கள் தேடி வரும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டிய காலமிது. மந்த நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நட்புக்களால் வீண் பழிச் சொற்கள் உண்டாகும் என்பதால் எச்சிரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு நன்றாக இருக்கும்.

மாதப்பலன்

ஜனவரி. 

உங்கள் ராசிக்கு ராகு 6-ல், செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 13-01-2020 காலை 09.55 மணி முதல் 15-01-2020 காலை 11.28 மணி வரை.

பிப்ரவரி.

ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடனும், கவனமுடனும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். எதிர்பாராத வீண் விரயங்களும் அதிகரிக்கும். பண வரவுகளில் பற்றாகுறை ஏற்படும். ராகு 6-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 09-02-2020 இரவு 07.43 மணி முதல் 11-02-2020 இரவு 07.43 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நவீனகரமான பொருட் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். குரு, சனி சாதகமற்று இருப்பதால் பணவிஷயத்தில் கவனமாக செயல்பட்டால் ஏற்றமிகுந்த பலன்களை அடையலாம். முருக வழிபாடும் விநாயக வழிபாடும் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 08-03-2020 காலை 06.52 மணி முதல் 10-03-2020 காலை 06.22 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 5-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 04-04-2020 மாலை 05.08 மணி முதல் 06-04-2020 மாலை 05.32 மணி வரை.

மே.

உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல்கள், ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். பண விஷயத்தில் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 02-05-2020 அதிகாலை 01.05 மணி முதல் 04-05-2020 அதிகாலை 03.08 மணி வரை மற்றும் 29-05-2020 காலை 06.59 மணி முதல் 31-05-2020 காலை 10.20 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-லும், ராகு 6-லும் சஞ்சரிப்பது மட்டுமின்றி இம்மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். தடைபட்ட சுபகாரியங்கள் கூட கைகூடும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் திருப்திகரமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் உண்டாகும். பொன், பொருள் ஆடை, ஆபரண சேர்க்கைகள் யாவும் அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்க வேண்டுமென்ற கனவும் நினைவாகும். தொழில் உத்தியோகம் செய்பவர் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் லாபங்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியையும் முருக கடவுளையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 25-06-2020 பகல் 12.25 மணி முதல் 27-06-2020 மாலை 03.50 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு செவ்வாய் 3-லும், சுக்கிரன் 5-லும் சஞ்சரிப்பதால் நல்ல பணவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றம் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மந்த நிலைகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்து கெடுபிடிகள் விலகும். விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம் – 22-07-2020 இரவு 07.15 மணி முதல் 24-07-2020 இரவு 09.35 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் இருக்கும் என்றாலும் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலையானது ஒரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சற்றுக் கவனமுடன் இருந்தால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடக்கப் பழகிக் கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் லாபங்கள் தடைப்படாது. சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 19-08-2020 அதிகாலை 04.10 மணி முதல் 21-08-2020 அதிகாலை 05.15 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சிவபெருமானையும் முருகரையும் வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 15-09-2020 பகல் 02.25 மணி முதல் 17-09-2020 பகல் 03.08 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் கேது, 10-ல் புதன், மாத பிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறைந்து சாதகமான பலன்கள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் ஒரளவுக்கு குறைந்து முன்னேற்றமான நிலைகள் ஏற்படும். எடுக்கும் காரியங்களை சிறப்புடன் முடிக்க முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றிகளைப் பெற முடியும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். முருக பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 12-10-2020 பின்இரவு 12.30 மணி முதல் 15-10-2020 அதிகாலை 02.03 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று திருப்தியான நிலை இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலமான பலன்களை அடைய முடியும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கடன்கள் படிப்படியாக குறையும். மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 09-11-2020 காலை 08.43 மணி முதல் 11-11-2020 பகல் 12.00 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் 3-ல் செவ்வாய், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் வலமான பலன்களை பெறுவீர்கள். சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறி மனமகிழ்ச்சியை உண்டாக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால பிரச்சினைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் நிம்மதி நிலவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் திருப்திகரமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். துர்கையம்மன் வழிபாடு நன்மைகளை தரும்.

சந்திராஷ்டமம் – 06-12-2020 பகல் 02.45 மணி முதல் 08-12-2020 இரவு 07.30 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் –  5,6,8     நிறம் – நீலம், பச்சை       கிழமை – சனி, புதன்

கல் – நீலக்கல்   திசை – மேற்கு             தெய்வம் – விநாயகர்

தனுசு  – புத்தாண்டு பலன் – 2020

தனுசு  – புத்தாண்டு பலன் – 2020

கணித்தவர்

ஜோதிட மாமணி

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

எதையும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து அறியும் திறமை கொண்ட தனுசு ராசி நேயர்களே! நவகிரகங்களில் முழு சுபராக விளங்கும் குரு பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி குரு திருக்கணிதப்படி 20-11-2020 முடிய ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் கடந்த கால வீண் விரயங்கள் சற்று குறைந்து படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் உண்டாகும். அதிக அலைச்சல் இருக்கும் என்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது சிறப்பு. பண வரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குருபகவான் 5, 7, 9-ஆம் வீடுகளை பார்ப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் சுபசெலவிற்காக கடன் வாங்க நேரிடும்.

ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் தன ஸ்தானமான 2-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி முடிந்து பாதச்சனி தொடர உள்ளது.  சர்ப்ப கிரகமான ராகு 7-லும், கேது ஜென்ம ராசியிலும் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக படிப்படியான முன்னேற்றம் இருக்கும் என்றாலும் பெரிய முதலீடுகளில் ஈடுபடும் போது உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வேலையாட்களால் நிம்மதி குறையும் என்பதால் மிகவும் கவனமாக செயல்படவும். கூட்டு தொழில் செய்பவர்கள் எதிலும் நிதானமாக இருப்பது மூலம் ஏற்றத்தை அடைய முடியும். உத்தியோத்தில் நல்ல வாய்ப்புகளை பெறும் அமைப்பு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் நிலை உண்டாகும் என்றாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும், நேரத்திற்கு உணவு உன்ன முடியாது. உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மிது வீண் பழி சொற்களை சொல்வார்கள் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு தன ஸ்தானத்தில் அதிசாரமாக திருக்கணிதப்படி 30-03-2020 முதல் 14-05-2020 முடியவும் அதன் பின்பு 20-11-2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்க உள்ள காலத்தில் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் நிலை, சகல விதத்திலும் மேன்மை அடையும் வாய்ப்பு உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், உடல் சோர்வு உண்டாகும். நேரத்திற்கு உணவு உன்ன முடியாத அளவிற்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்களின் முன் கோபத்தால் தேவையற்ற வாக்குவாதங்களும் வீண் பிரச்சினைகளும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உத்தியோகம்

எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் என்றாலும் வீண் பழிச் சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு பணியில் ஈடுபாடற்ற சூழ்நிலை உண்டாகும். உடல் அசதி காரணமாக சில நேரங்களில் பணியில் கவன குறைவு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.

தொழில் வியாபாரம்

எதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். நிறைய போட்டி பொறாமைகளை எதிர் கொள்ள நேரிடும். தொழில் வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை விலகும். லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

கொடுக்கல்- வாங்கல்

கொடுக்கல்- வாங்கலில் சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. அவ்வப்போது தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். கடன்கள் படிப்படியாக குறையும்.

அரசியல்

மக்களின் ஆதரவைப் பெற அரும்பாடுபட வேண்டி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற தடைகள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் ஒரளவுக்கு செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கலைஞர்கள்

கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது நல்லது. எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். எதிர்பாராத பயணங்களால் சற்று அலைச்சல், உடற் சோர்வு உண்டாகும்.

விவசாயிகள்

கடந்த காலங்களில் இருந்த வம்பு பிரச்சினைகள் யாவும் விலகி லாபம் பெருகும். உழைப்பிற்கேற்ற பலன்களை அடைய முடியும். பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத ஏற்படக் கூடிய செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். பங்காளிகளிடம் கருத்த வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானமாக இருக்கவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். பேச்சில் பொறுமை காப்பது உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

மாணவ மாணவியர்

ஆரோக்கிய ரீதியாக இருக்கும் சிறுசிறு பாதிப்புகளால் சில நேரங்களில் விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும், தேவையற்ற நட்புகளை தவிர்க்க வேண்டிய காலமாகும். கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும், பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மன நிம்மதியை தரும்.

மாதப்பலன்

ஜனவரி.

உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சுக்கிரன், புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். சிவனை வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 11-01-2020 காலை 07.52 மணி முதல் 13-01-2020 காலை 09.55 மணி வரை.

பிப்ரவரி. 

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல பணவரவை தந்து உங்களுக்குள்ள நெருக்கடிகளை குறைக்கும் அமைப்பாகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 07-02-2020 மாலை 06.24 மணி முதல் 09-02-2020 இரவு 07.43 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் பல்வேறு வகையில் அனுகூலங்களை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவச் செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். நெருங்கியவர்களால் ஒரளவுக்கு அனுகூலங்களை பெறுவீர்கள். தொழிலில் போட்டி நிலவினாலும் நஷ்டம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 06-03-2020 அதிகாலை 04.55 மணி முதல் 08-03-2020 காலை 06.52 மணி வரை.

ஏப்ரல்.

ஜென்ம ராசிக்கு செவ்வாய், சனி 2-லும், சூரியன் 4-லும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். பொருளாதார ரீதியாக மேன்மைகள் ஏற்படும். பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் விலகும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்து நிம்மதி குறையும். துர்கை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 02-04-2020 பகல் 01.33 மணி முதல் 04-04-2020 மாலை 05.08 மணி வரை மற்றும் 29-04-2020 இரவு 07.57 மணி முதல் 02-05-2020 அதிகாலை 01.05 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதாலும் வரும் 4-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் தொழில் பொருளாதார ரீதியாக மேன்மை, குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளை பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உடல் அசதி உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 27-05-2020 அதிகாலை 01.25 மணி முதல் 29-05-2020 காலை 06.59 மணி வரை.

ஜுன்.

உங்களுக்கு இம்மாத முற்பாதியில் செவ்வாய் 3-ல், சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பதாலும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதாலும் அனைவரின் ஆதரவையும் பெற முடியும். பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்து கொண்டால் லாபத்தினை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 23-06-2020 காலை 07.35 மணி முதல் 25-06-2020 பகல் 12.25 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், குடும்பத்தில் ஒற்றுமை குறையும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிப்பதால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 20-07-2020 மாலை 03.28 மணி முதல் 22-07-2020 இரவு 07.15 மணி வரை.

ஆகஸ்ட்.

ஜென்ம ராசியில் குரு மாத முற்பாதியில் 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உடல் சோர்வு ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது சிறப்பு. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து நடப்பது உத்தமம். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 17-08-2020 அதிகாலை 00.50 மணி முதல் 19-08-2020 அதிகாலை 04.10 மணி வரை.

செப்டம்பர்.

உங்களுக்கு இம்மாதத்தில் சூரியன் 9, 10-லும், புதன் 10, 11-லும் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். தனவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. தொழிலில் இருந்த நெருக்கடிகள் குறைந்து லாபத்தினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.

சந்திராஷ்டமம் – 13-09-2020 காலை 10.35 மணி முதல் 15-09-2020 பகல் 02.25 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 6-லும், இம்மாதத்தில் சூரியன் 10, 11-லும், புதன் 11-லும் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் அதன் மூலம் சாதகமான பலன்களும் அமையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். முருகரையும் விநாயகரையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 10-10-2020 இரவு 07.10 மணி முதல் 12-10-2020 பின்இரவு 12.30 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு ராகு 6-லும், புதன் 11-லும், மாத முற்பாதியில் சூரியன் 11-லும் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனைப் பெற முடியும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சுமாரான லாபத்தினை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 07-11-2020 அதிகாலை 01.49 மணி முதல் 09-11-2020 காலை 08.43 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சிவ வழிபாடும், முருக வழிபாடும் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 04-12-2020 காலை 07.20 மணி முதல் 06-12-2020 பகல் 02.45 மணி வரை மற்றும் 31-12-2020 பகல் 01.37 மணி முதல் 02-01-2021 இரவு 08.15 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9            நிறம் – மஞ்சள், பச்சை    கிழமை – வியாழன், திங்கள்

கல் – புஷ்ப ராகம்     திசை – வடகிழக்கு           தெய்வம் – தட்சிணா மூர்த்தி

விருச்சிகம் – புத்தாண்டு பலன் – 2020

விருச்சிகம் – புத்தாண்டு பலன் – 2020

கணித்தவர்

ஜோதிட மாமணி

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

பார்ப்பதற்கு வெகுளி போல் இருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான குரு பகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்களின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு போன்ற அனைத்தும் உயரும் ஆண்டாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் அமையும். கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் மறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் எல்லாம் எளிதில் கைகூடும்.

ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதாலும் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த ஏழரைச்சனியானது முழுமையாக முடிவதாலும் தொழில் வியாபார ரீதியாக கடந்த கால சோதனைகள் எல்லாம் முற்றிலும் மறைந்து எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். தொழிலில் லாபங்கள் அதிகரித்து உங்களுக்கு உள்ள கடன்கள் எல்லாம் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த சம்பள பாக்கிகள் மற்றும் நிலுவை தொகைகள் எல்லாம் கிடைத்து பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிறப்பான பதவி உயர்வுகள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையும் அமைப்பு உண்டாகும். பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும், பரிசுகளையும் அடைய முடியும்.

இந்த ஆண்டில் தொழில், உத்தியோகம் மற்றும் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும் என்றாலும் சர்ப்ப கிரகமான ராகு 8-லும் கேது 2-லும் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதாலும் அதன்பின்பு ராகு 7-லும் கேது ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுப்பாடுகள் உண்டாகும். கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் எல்லா காரியங்களிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைப் பெற முடியும். நீண்ட நாட்களாக சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல் நிலை சிறப்பாகி மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்கள் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருப்பதால் மன நிம்மதி, மகிழ்ச்சியும் ஏற்படும்.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதி நவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை யாவும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஏற்றங்களை அடைய முடியும்.

உத்தியோகம்

கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் முற்றிலும் மறைந்து செய்யும் பணியில் கௌரமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு படுத்தும் யோகம் ஏற்படும். உங்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். 

கொடுக்கல்- வாங்கல்

பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகி உங்களுக்கு உள்ள சிக்கல்கள் எல்லாம் முழுமையாக குறையும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்த லாபம் காண முடியும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

உங்களின் பெயர் புகழ் உயரக் கூடிய காலமாக இந்த ஆண்டு இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய்களும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

கலைஞர்கள்

வரவேண்டிய பணவரவுகளில் இருந்த இழுபறி நிலை விலகி தக்க நேரத்தில் வந்து சேரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து பெயர் புகழ் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் யோகம் உண்டாகும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்ல நிலை ஏற்பட்டு மன நிம்மதி உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்கள் கைகூடும். பண விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் மன நிம்மதி உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். திருமணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியம் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும்.

மாணவ- மாணவியர்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று படிக்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாகும்.

மாதப்பலன்

ஜனவரி. 

உங்கள் ராசிக்கு குரு, புதன் தன ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கடந்த காலத்தில் இருந்த பொருளாதார நெருக்கடிகள், அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலையைக் கொடுக்கும். பண வரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 09-01-2020 அதிகாலை 03.49 மணி முதல் 11-01-2020 காலை 07.52 மணி வரை.

பிப்ரவரி. 

உங்கள் ராசிக்கு குரு 2-ல், சனி 3-ல், புதன் 4-ல் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு மேலோங்கும் இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். இதனால் கடந்த காலங்களில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் விலகி முன்னேற்றமானப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து உதவி கரம் நீட்டுவார்கள். பொன், பொருள் சேரும். உணவு விஷயத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். முருக கடவுளை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 05-02-2020 பகல் 02.00 மணி முதல் 07-02-2020 மாலை 06.24 மணி வரை.

மார்ச்.

உங்களுக்கு குரு தன ஸ்தானத்தில், சனி 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், மாத முற்பாதியில் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உடல் சோர்வு ஏற்படும். முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் மருத்துவ செலவுகள் குறையும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. நவகிரக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 03-03-2020 இரவு 11.03 மணி முதல் 06-03-2020 அதிகாலை 04.55 மணி வரை மற்றும் 31-03-2020 காலை 06.05 மணி முதல் 02-04-2020 பகல் 01.33 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசியதிபதி செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் மேன்மையை தரக்கூடிய இனிய அமைப்பாகும். பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும். குடும்பத்தில் அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். மகாலட்சுமி, முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 27-04-2020 பகல் 11.45 மணி முதல் 29-04-2020 இரவு 07.57 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். சனி பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்தால் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். ஆடம்பர பொருட் சேர்க்கைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் சாதகப்பலன்களை அடைய முடியும். விநாயகரையும் துர்கையையும் வழிபடுவது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம் – 24-05-2020 மாலை 05.34 மணி முதல் 27-05-2020 அதிகாலை 01.25 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசியதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதும், சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு பொருளாதார ரீதியாக தேவையற்ற நெருக்கடி, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும் என்பதால் எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பதும் உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது மூலம் வீண் விரயங்களை குறைக்க உதவும். விஷ்ணு வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம் – 21-06-2020 அதிகாலை 00.35 மணி முதல் 23-06-2020 காலை 07.35 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் கடன்கள் வாங்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்த வரை சிக்கனமாகவும் ஆடம்பர செலவுகளைக் குறைத்து கொள்வதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபங்களை பெற முடியும். சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 18-07-2020 காலை 09.00 மணி முதல் 20-07-2020 மாலை 03.28 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு தனக்காரகன் குரு பகவான் 2-ல் சஞ்சரிப்பதும், இம்மாதத்தில் சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். எதையும் சமாளித்து ஏற்றமானப் பலனை பெறுவீர்கள். சுக்கிரன், ராகு 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும் என்றாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடையலாம். முருக பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 14-08-2020 மாலை 06.05 மணி முதல் 17-08-2020 அதிகாலை 00.50 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் ஆட்சிப் பெற்று சஞ்சரிப்பதும், குரு 2-ல், சனி 3-ல், சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய காலமாகும். பொருளாதார உயர்வுகளும் அரசு வழியில் அனுகூலங்களும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 11-09-2020 அதிகாலை 02.38 மணி முதல் 13-09-2020 காலை 10.35 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு குரு 2-ல், சனி 3-ல், மாத முற்பாதியில் சுக்கிரன் 10-ல், சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணம் வரவு தாராளமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சொந்த வீடு, மனை வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 08-10-2020 காலை 09.45 மணி முதல் 10-10-2020 இரவு 07.10 மணி வரை.

நவம்பர்.

உங்களுக்கு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு, மாத முற்பாதியில் சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் வீண் குழப்பங்கள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுபகாரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நற்பெயர் கிடைக்காது. உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். பணவரவுகளில் நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் சனி 3-ல், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். முருக வழிபாடு, சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 04-11-2020 மாலை 03.44 மணி முதல் 07-11-2020 அதிகாலை 01.49 மணி வரை.

டிசம்பர்.

உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் முடிப்பதற்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும். வரவுக்கு மீறிய செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் இருப்பது உத்தமம். விநாயகரை வழிபடுவது மூலம் நற்பலன் உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 01-12-2020 இரவு 09.37 மணி முதல் 04-12-2020 காலை 07.20 மணி வரை மற்றும் 29-12-2020 அதிகாலை 04.40 மணி முதல் 31-12-2020 பகல் 01.37 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9          நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள்,      கிழமை – செவ்வாய், வியாழன்

கல் – பவளம்,         திசை – தெற்கு        தெய்வம் – முருகன்

 

துலாம் – புத்தாண்டு பலன் – 2020

துலாம் – புத்தாண்டு பலன் – 2020

கணித்தவர்

ஜோதிட மாமணி

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

மகிழ்ச்சியையோ துக்கத்தையோ பெரிதுபடுத்தாமல் அனைத்தையும் சமமாக பாவிக்கும் பண்பு கொண்ட துலா ராசி நேயர்களே! சுக வாழ்விற்கும் சொகுசு வாழ்விற்கும் காரகனான சுக்கிரனின் ராசியில் பிறந்த நீங்கள் இயற்கையிலே ஆடம்பர பிரியர், வரும் 2020-ஆம் ஆண்டில் தனகாரகன் குருபகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களது இயற்கை சுபாவத்தை சற்று மாற்றி கொண்டு எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக சற்று தேக்க நிலை நிலவினாலும் சர்ப்ப கிரகமான கேது பகவான் முயற்சி ஸ்தானமான 3-ல் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, எதிர்பாராத வகையில் பொருளாதாரா உதவிகள் கிடைத்து உங்களது அனைத்து குடும்ப தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்களின்றி வாழ முடியும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் தங்கு தடையின்றி கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் நிலவினாலும் எதிர் நீச்சல் போட்டாவது லாபத்தை பெறுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கெண்டால் ஏற்றத்தை அடைய முடியும். வேலையாட்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு ஆறுதலை தரும். உத்தியோக ரீதியாக உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது மிகவும் உத்தமம். வீண் பழிச் சொற்களை சந்தித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். சிலர் வேண்டிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் சுக ஸ்தானமான 4-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதாலும் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்குவதாலும் அலைச்சல், டென்ஷன், உடல் சோர்வுகள் போன்றவை ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் அதிக முதலீடு கொண்ட செயல்களில் நிதானத்துடன் செயல்படுவதும் நல்லது. எதிலும் தனித்து செயல்படாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செயல்படுவதும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் வலமான பலனை உங்களுக்கு ஏற்படுத்தும்.    

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு ஏற்றத்தை அடைவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

பொருளாதார ரீதியாக பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.

உத்தியோகம்

பணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் அலைச்சல், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் நல்ல வாய்ப்புகளும் சிறு தடைகளுக்குப் பின் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் சற்று தாமதமாக கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகி ஏற்றம் அடைவீர்கள்.

அரசியல்

பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருக்காது. எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். பெரியோர்களின் ஆசியால் ஒரளவுக்கு நற்பலன்களை அடைய முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடைவீர்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு.

கலைஞர்கள்

பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்கள் பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்களால் மன அமைதி குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் உடன் இருப்பவர்களிடம் பேச்சில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் உதவியால் உங்களின் நெருக்கடிகள் சற்று குறையும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் நெருங்கியவர்களின் உதவியால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும், திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பெரியோர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதாக அமையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.

மாதப்பலன்

ஜனவரி. 

உங்கள் ராசியதிபதி சுக்கிரன் இம்மாதம் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், முயற்சி ஸ்தானமான 3-ல் மாத முற்பாதியில் சூரியன், சனி சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண விஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். துர்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 06-01-2020 இரவு 08.36 மணி முதல் 09-01-2020 அதிகாலை 03.49 மணி வரை.

பிப்ரவரி. 

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதும் வரும் 8-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எதிர்பாராத லாபங்கள் தேடி வரும். குடும்பத்தில் சுபசெலவுகளை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி வெற்றிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 03-02-2020 அதிகாலை 05.40 மணி முதல் 05-02-2020 பகல் 02.00 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது 3-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை பெறுவீர்கள். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும்.

சந்திராஷ்டமம் – 01-03-2020 பகல் 01.18 மணி முதல் 03-03-2020 இரவு 11.03 மணி வரை மற்றும் 28-03-2020 இரவு 07.30 மணி முதல் 31-03-2020 காலை 06.05 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு கேது 3-லும், மாத முற்பாதியில் சூரியன் 6-லும் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில்  திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 25-04-2020 அதிகாலை 01.15 மணி முதல் 27-04-2020 பகல் 11.45 மணி வரை.

மே.

கேது 3-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்றாலும் சூரியன் 7, 8-லும் சுக்கிரன் 8-லும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 22-05-2020 காலை 07.35 மணி முதல் 24-05-2020 மாலை 05.34 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு 3-ல் கேது 9-ல் புதன் சஞ்சரிப்பதும், 18-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவதும், மற்றவர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைக்கும். தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்களில் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. சிவனையும் முருகனையும் வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 18-06-2020 மாலை 03.05 மணி முதல் 21-06-2020 அதிகாலை 00.35 மணி வரை.

ஜுலை.

கேது 3-லும், செவ்வாய் 6-லும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். மாத கோளான சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலையும் லாபங்களும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 15-07-2020 இரவு 11.18 மணி முதல் 18-07-2020 காலை 09.00 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக வலமான பலன்கள் உண்டாகும். உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். பணவரவுகள் சரளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். துர்க்கை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 12-08-2020 காலை 07.35 மணி முதல் 14-08-2020 மாலை 06.05 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். பணம் பல வழிகளில் தேடி வருவதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்கள் வாங்குவீர்கள். புத்திர வழியில் பூரிப்பும் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உன்னதமான உயர்வு உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். செவ்வாய் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முருக கடவுளை வழிபடுவதும், துர்க்கையம்மனை வழிபடுவதும் உத்தமம்.

சந்திராஷ்டமம் – 08-09-2020 மாலை 03.10 மணி முதல் 11-09-2020 அதிகாலை 02.38 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 8-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வீண்பழிகளைச் சுமக்க நேரிடும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். சிவன், துர்க்கை வழிபாடு நல்லது.

சந்திராஷ்டமம் – 05-10-2020 இரவு 09.40 மணி முதல் 08-10-2020 காலை 09.45 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதாலும் வரவுக்கு மீறிய செலவுகள், வீண் அலைச்சல்கள் உண்டாகும். செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களது பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களும் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது மூலம் வீண் சிக்கல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 02-11-2020 அதிகாலை 03.40 மணி முதல் 04-11-2020 மாலை 03.44 மணி வரை மற்றும் 29-11-2020 காலை 10.02 மணி முதல் 01-12-2020 இரவு 09.37 மணி வரை.

டிசம்பர்.

உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். நெருங்கியவர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்ளுதல் நல்லது. அம்மனை வழிபாடு செய்வதும், ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதும் உத்தமம்.

சந்திராஷ்டமம் – 26-12-2020 மாலை 05.17 மணி முதல் 29-12-2020 அதிகாலை 04.40 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 4,5,6,7,8         நிறம் – வெள்ளை, பச்சை  கிழமை – வெள்ளி, புதன்

கல் – வைரம்         திசை – தென் கிழக்கு       தெய்வம் – லக்ஷ்மி

கன்னி – புத்தாண்டு பலன் – 2020

கன்னி – புத்தாண்டு பலன் – 2020

கணித்தவர்

ஜோதிட மாமணி

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய நற்பண்புகளைக் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2020-ஆம் ஆண்டில் நவகிரகங்களில் தேவகுரு எனவும் பொன்னவன் எனவும் போற்றப்படும் ஆண்டு கோளான குரு பகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதாலும், சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 10-லும், கேது 4-லும் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதாலும் பண வரவுகள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க வீண் இடையூறுகள் உண்டாகும். வேலைபளு காரணமாக நேரத்திற்கு உணவு உன்ன முடியாத அளவிற்கு இடையூறு உண்டாகும். வண்டி வாகனங்கள் மூலமும், வீடுகளை பழது பார்ப்பதற்காகவும் செலவுகள் செய்ய நேரிடும்.

ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் அளவிற்கு துணிவும் தைரியமும் கொடுக்கும். எதிர்பாராத சிறு சிறு உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களது பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும் என்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை நிலவும், மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் வேலையாட்களின் ஒத்துழைப்பால் எதையும் எதிர் கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும், மேலதிகாரிகளின் ஆதரவு திருப்திகரமாக இருப்பதால் மன அமைதி உண்டாகும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் குரு பஞ்சம ஸ்தானமான 5-ல் அதிசாரமாக திருக்கணிதப்படி 30-03-2020 முதல் 14-05-2020 முடியவும் அதனை தொடர்ந்து வக்ர கதியில் 12-09-2020 முடியவும், அதன் பின்பு 20-11-2020 முதல் 5-ல் (மகர ராசியில்) சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, திருமணம் போன்ற சுப காரியங்கள் எளிதில் கைகூடும் வாய்ப்பு உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீடு, பூமி, வாகனம் போன்றவற்றால் சிறு சிறு செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அனுகூலமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

உத்தியோகம்

உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் பணியில் கவனம் செலுத்துவதில் இடையூறுகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நிலையும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியூர் செல்லும் சூழ்நிலை உண்டாகும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் இருக்காது. புதிய ஒப்பந்தங்களில் கையொழுத்திடும் போது கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செய்யவும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் சிறு சிறு அனுகூலங்கள் ஏற்பட்டாலும் நிறைய அலைச்சல்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.

கொடுக்கல்- வாங்கல்

பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது நிதானித்து செயல்படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடும் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அரசியல்

பெயர் புகழ் சுமாராக இருக்க கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறையப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது சாதித்து விடுவீர்கள். வீண் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.

கலைஞர்கள்

பணவரவுகள் திருப்தி அளிப்பதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அலைச்சல், டென்ஷன், நேரத்திற்கு உணவு உன்ன முடியாத நிலை ஏற்படும் என்றாலும் அதனால் சாதகபலனும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். பத்திரிகைகளில் வரும் தேவையற்ற கிசுகிசுக்களால் மனச் சஞ்சலங்கள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற இயலாது. பட்டபாட்டிற்கான முழு பலனை அடைய இடையூறு உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்கள்

உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் இடையூறு ஏற்பட்டாலும் ஏப்ரல், மே மாதங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் ஞாபக மறதி ஏற்பட்டு படித்ததெல்லாம் தக்க சமயத்தில் ஞாபகத்திற்கு வராமல் போகும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுப்பதில் சிரமம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். விளையாட்டுப் போட்டிகளின் போது கவனமுடன் செயல்படுவது நல்லது.

மாதப்பலன்

ஜனவரி. 

உங்கள் ராசியதிபதி புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். உடல் அரோக்கியத்தில் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் யாருக்கும் முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. சிவனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 04-01-2020 காலை 10.05 மணி முதல் 06-01-2020 இரவு 08.36 மணி வரை மற்றும் 31-01-2020 இரவு 06.09 மணி முதல் 03-02-2020 அதிகாலை 05.40 மணி வரை.

பிப்ரவரி. 

ளுங்கள் ராசிக்கு குரு 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கம் உண்டாகாது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 28-02-2020 பின்இரவு 01.08 மணி முதல் 01-03-2020 பகல் 01.18 மணி வரை.

மார்ச்.

மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். செவ்வாய், குரு 4-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

சந்திராஷ்டமம் – 26-03-2020 காலை 07.16 மணி முதல் 28-03-2020 இரவு 07.30 மணி வரை.

ஏப்ரல்.

குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதும் தாராள தனவரவை உண்டாக்கும் அமைப்பாகும். சுபகாரியங்கள் கைகூட கூடிய வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்து காத்திருந்த நல்லசெய்தி ஒன்று கிடைக்கப் பெற்று மனநிறைவு தரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும் லாபங்களும் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 22-04-2020 பகல் 01.18 மணி முதல் 25-04-2020 பின்இரவு 01.15 மணி வரை.

மே.

குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதும், வரும் 4-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். நெருங்கியவர்கள் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் ஒரளவுக்கு குறைந்து லாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி நிலவும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். பணவரவுகள் நன்றாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 19-05-2020 இரவு 07.54 மணி முதல் 22-05-2020 காலை 07.35 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும், ராசியதிபதி புதன் 10-ல் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எந்தவொரு காரியத்திலும் துணிந்து செயல்பட்டு வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். புத்திர வழியில் மன சஞ்சலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 16-06-2020 அதிகாலை 03.18 மணி முதல் 18-06-2020 மாலை 03.05 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகம் அமையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் தொடர்புகளால் லாபமும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். குரு பகவான் வழிபாடு சுபிட்சத்தை அளிக்கும்.

சந்திராஷ்டமம் – 13-07-2020 பகல் 11.15 மணி முதல் 15-07-2020 இரவு 11.18 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும் சூரியன் லாப ஸ்தானத்தில் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழிலில் போட்டிகள் அதிகரித்தாலும், எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 09-08-2020 இரவு 07.05 மணி முதல் 12-08-2020 காலை 07.35 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு செவ்வாய் 8-ல், மாத முற்பாதியில் சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடிய நிலை உண்டாகும். எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது-. குடும்பத்தில் புத்திர வழியில் சில நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேக்க நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 06-09-2020 அதிகாலை 02.20 மணி முதல் 08-09-2020 மாலை 03.10 மணி வரை.

அக்டோபர்.

உங்களுக்கு ஜென்ம ராசியில் மாத முற்பாதியில் சூரியன் சஞ்சரித்தாலும், 2-ல் புதன், 3-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் உங்களுடைய நெருக்கடிகள் குறையும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் அமையும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருக்கும் நெருக்கடிகள் குறையும். சிவ வழிபாடு நன்மை தரும்.

சந்திராஷ்டமம் – 03-10-2020 காலை 08.50 மணி முதல் 05-10-2020 இரவு 09.40 மணி வரை மற்றும் 30-10-2020 பகல் 02.58 மணி முதல் 02-11-2020 அதிகாலை 03.40 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசியதிபதி புதன் 2-லும், கேது 3-லும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை மேலோங்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி, மறைமுக எதிர்ப்புகள் விலக கூடிய அமைப்பு, உடல் ஆரோக்கியத்தில் பலமும் வலிமையும் கூடக் கூடிய வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 26-11-2020 இரவு 09.20 மணி முதல் 29-11-2020 காலை 10.02 மணி வரை.

டிசம்பர்.

குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-லும், கேது 3-லும் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் குடும்பத்தில் கைகூடும். மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பாகும். பொருளாதாரம் மேம்படும். கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழிலில் இருந்த போட்டிகள் விலகி அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வுகளை அடைவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். துர்கையம்மனையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம் – 24-12-2020 அதிகாலை 04.33 மணி முதல் 26-12-2020 மாலை 05.17 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,7,8          நிறம் – பச்சை, நீலம் கிழமை – புதன், சனி

கல் –  மரகத பச்சை திசை – வடக்கு       தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு

சிம்மம் – புத்தாண்டு பலன் – 2020

சிம்மம் – புத்தாண்டு பலன் – 2020

கணித்தவர்

ஜோதிட மாமணி

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

வாழ்வில் பலமுறை தோல்வியை சந்தித்தாலும் துணிந்து நின்று போராடக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! நவகிரகங்களில் ராஜாவான சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமான குருபகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று  சஞ்சரிப்பதாலும், ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் ருண ரோக ஸ்தானமான 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதாலும், சர்ப்ப கிரகமான ராகு லாபஸ்தானமான 11-ல் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதாலும் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்க கூடிய ஆண்டாக 2020-ஆம் ஆண்டு இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், எதிலும் துணிந்து செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கேது 5-ல் சஞ்சரிப்பதால் சிலருக்கு வயிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். கணவன்— மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  சிலருக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்ட புத்திர பாக்கியம் இவ்வாண்டில் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்களையும் நவீனகரமான பொருட்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும்.

தொழில். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருந்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் விலகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். சிலர் நினைத்த இடத்திற்கு மாற்றலாகி குடும்பத்தோடு சேருவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து உங்களது கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளில் நல்லதொரு தீர்வு உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். எதிலும் புது தெம்புடனும் பொலிவுடனும் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கும் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவ செலவுகள் யாவும் குறையும். உணவு விஷயங்களில் கட்டுபாட்டுடன் இருப்பதும் நேரத்திற்கு உணவு உட்கொள்வதும் அஜீரண கோளாறுகள் உண்டாகுவதை தவிர்க்க உதவும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கை கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைப் பாராட்டுவார்கள். சொந்த பூமி மனை வாங்கக் கூடிய யோகங்களும் உண்டாகும்.

உத்தியோகம்

பணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். செய்யும் பணிக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றம் கிட்டும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளை பெற முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும். நல்ல வேலையாட்களும் கிடைப்பார்கள்.

கொடுக்கல் வாங்கல்

இந்தாண்டில் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் கிடைக்கும். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் வெற்றிக் கிட்டும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றியும் சிறப்பான லாபங்களும் உண்டாகும்.

அரசியல்

உங்களது பெயர் புகழ் யாவும் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் எல்லாம் எளிதில் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கும் சென்று வரக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

கலைஞர்கள்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும், பாராட்டுதல்களும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செல்ல நேரிடும். கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் மறைந்து மன நிம்மதி உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்றப் பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலை அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளையும் தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.

மாணவ மாணவியர்

மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைய முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை பெற்று பாராட்டுதல்களை அடைவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும்.

மாதப்பலன்

ஜனவரி. 

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணவரவுகளில் சரளமான நிலை இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பயணங்களால் சாதகப்பலனை அடைவீர்கள். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 01-01-2020 இரவு 09.38 மணி முதல் 04-01-2020 காலை 10.05 மணி வரை மற்றும் 29-01-2020 அதிகாலை 05.29 மணி முதல் 31-01-2020 மாலை 06.09 மணி வரை.

பிப்ரவரி. 

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சூரியன், சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திருமணம் தடைபட்டவர்களுக்கு இம்மாதம் தடை விலகி நற்பலன் அமையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் லாபங்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 25-02-2020 பகல் 12.27 மணி முதல் 28-02-2020 அதிகாலை 01.08 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும்  பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.  சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைவார்கள். சிவ வழிபாட்டையும், விநாயகர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 23-03-2020 மாலை 06.37 மணி முதல் 26-03-2020 காலை 07.16 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமும், எந்தவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய தைரியமும் உண்டாகும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் இருந்து போட்டி பொறாமைகளும் குறையும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். விஷ்ணு வழிபாடு செய்வது,  சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.

சந்திராஷ்டமம் – 20-04-2020 அதிகாலை 00.37 மணி முதல் 22-04-2020 பகல் 01.18 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு சனி 6-லும், சுக்கிரன் 10-லும், ராகு 11-லும் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக வலமான பலன்களை பெறுவீர்கள். பல்வேறு வகையில் முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணம் பல வழிகளில் தேடி வரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான பலனைப் பெறுவார்கள். சேமிப்புகள் பெருகும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 17-05-2020 காலை 07.15 மணி முதல் 19-05-2020 இரவு 07.54 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசியதிபதி சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் புதன், ராகு 11-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். கூட்டாளிகளிடம் ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். குரு பகவானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 13-06-2020 பகல் 02.45 மணி முதல் 16-06-2020 அதிகாலை 03.18 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசியதிபதி சூரியன், ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் சனி, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செவ்வாய் 8-ல் இருப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது சிறப்பு. முருக கடவுளை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 10-07-2020 இரவு 10.55 மணி முதல் 13-07-2020 பகல் 11.15 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு சனி 6-ல், சுக்கிரன், ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பொருளாதார மேன்மை, நினைத்தது நிறைவேறக் கூடிய வாய்ப்பு ஏற்படும். மாத முற்பாதியில் 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வதால் அனுகூலப் பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். விநாயக பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 07-08-2020 காலை 06.58 மணி முதல் 09-08-2020 இரவு 07.05 மணி வரை.

செப்டம்பர்.

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், சனி 6-ல், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு செய்து வந்தால் மங்களங்கள் பெருகும்.

சந்திராஷ்டமம் – 03-09-2020 பகல் 02.15 மணி முதல் 06-09-2020 அதிகாலை 02.20 மணி வரை மற்றும் 30-09-2020 இரவு 08.35 மணி முதல் 03-10-2020 காலை 08.50 மணி வரை.

அக்டோபர்.

ஜென்ம ராசியில் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக மேன்மையை தரும் அமைப்பாகும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். சூரியன் மாத பிற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன் இல்லாத கன்னிய வாழ்க்கை அமையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பெயர், புகழ் உயரும். விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 28-10-2020 அதிகாலை 02.30 மணி முதல் 30-10-2020 பகல் 02.58 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசியதிபதி சூரியன் மாத முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சனி சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் வெற்றி மேல் வெற்றி தரும் அமைப்பாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத் தொடர்புகளில் சாதகப்பலன் ஏற்படும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் அனுகூலப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விநாயகர் வழிபாட்டையும் முருக வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 24-11-2020 காலை 08.52 மணி முதல் 26-11-2020 இரவு 09.20 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதும் அலைச்சலை தரும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தாமதப்படும்.  பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 21-12-2020 மாலை 04.30 மணி முதல் 24-12-2020 அதிகாலை 04.33 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9             நிறம் – வெள்ளை, சிவப்பு          கிழமை – ஞாயிறு, திங்கள்

கல் –  மாணிக்கம்          திசை – கிழக்கு       தெய்வம் – சிவன்

கடகம் – புத்தாண்டு பலன் – 2020

கடகம் – புத்தாண்டு பலன் – 2020

கணித்தவர்

ஜோதிட மாமணி

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

விடா முயற்சியுடன் செயல்படும் திறனும் உயர்ந்த இலட்சியங்களும் கொண்ட கடக ராசி நேயர்களே! சந்திரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு பொன்னவன் என போற்றக்கூடிய குருபகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களது பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருக்க வேண்டிய ஆண்டாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. அதிக அலைச்சலால் உடல் சோர்வு உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. சர்ப்ப கிரகமான கேது பகவான் ருணரோக  ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எல்லா வகையிலும் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தி ஆகும். உறவினர்களின் உதவிகளால் எதையும் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும்.

திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் சனி சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். வேலையாட்களை அனுசரித்து செல்வது, கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்வது மூலம் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை சமாளிக்க முடியும். குரு பார்வை 2, 10, 12-ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் போட்டி பொறாமைகள் நிலவினாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் அமைப்பு, பயணங்களால் மேன்மை அடையும் யோகம் உண்டாகும். நல்ல பதவி, மதிப்பு மரியாதை இருக்கும் என்றாலும் வர வேண்டிய சம்பள பாக்கிகள் சற்று தாமதமாக வரும். உழைப்பிற்கான ஊதியம் மற்றும் சன்மானம் கிடைக்க சிறுசிறு தடைகள் ஏற்படும்.     

உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கும் குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் அதிசாரமாக திருக்கணிதப்படி 30-03-2020 முதல் 14-05-2020 முடியவும் அதனை தொடர்ந்து வக்ர கதியில் 12-09-2020 முடியவும், அதன் பின்பு 20-11-2020 முதல் 7-ல் (மகர ராசியில்) சஞ்சரிக்க உள்ள காலத்தில் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும் இக்காலத்தில் தாராள தன வரவு ஏற்பட்டு சகலவிதத்திலும் மேன்மை, கடன்கள் குறையும் அமைப்பு, குடும்பத்தில் மங்களகரமான சுபநிகழ்ச்சிகான முயற்சிகள் மேற்கொண்டால் வெற்றி, பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி சிறுசிறு பாதிப்புகளை எதிர் கொள்ள நேரிட்டாலும் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பதால் மன அமைதி ஏற்படும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் அதன் மூலம் உங்கள் வாழ்வில் வளர்ச்சி உண்டாகும் என்பதால் சிந்தித்து செயல்பட்டால் நன்மை கிடைக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடைகள் இருந்தாலும் ஏப்ரல், மே மாதங்களில் நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள்.

உத்தியோகம்

பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன் படுத்திக் கொள்வது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையீடு செய்யாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தொழில் வியாபாரம்

உங்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடக் கூடிய ஆற்றல் ஏற்படும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து செல்வதும் தட்டி கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு திருப்திகரமாக இருக்காது என்பதால் பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும்.

அரசியல்

மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்படுவது. தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காது இருப்பது நல்லது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டி இருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

எடுக்கும் முயற்சிகளில் தாமத நிலையும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் வளமான பலனை பெற முடியும். தூர பயணங்களால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகளால் படபிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி இருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகளிடம் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாது இருப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் எதிலும் ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். முடிந்த வரை குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது மிகவும் நல்லது.

மாணவ- மாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு குறைந்தாலும் முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றி பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். பயணங்களின் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதங்களுக்கு பின் தான் கிடைக்கும்.

மாதப்பலன்

ஜனவரி. 

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன், சனி 6-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்களின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் தராள தனவரவுகள் உண்டாவதால் எதையும் சமாளித்து விட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 26-01-2020 மாலை 05.39 மணி முதல் 29-01-2020 அதிகாலை 05.29 மணி வரை.

பிப்ரவரி. 

உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற பிரச்சினைகளையும் அலைச்சல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். துர்கையம்மன் வழிபாடு செய்வது நன்மை அளிக்கும்.

சந்திராஷ்டமம் – 23-02-2020 அதிகாலை 00.29 மணி முதல் 25-02-2020 பகல் 12.27 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார ரீதியாக ஏற்றம், புத்திர வழியில் பூரிப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற கூடிய வாய்ப்பு, நவீனகரமான பொருட்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பூர்வீக சொத்து  ரீதியாக உள்ள சிக்கல் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் செயல்பட முடியும். சிவ பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 21-03-2020 காலை 06.20 மணி முதல் 23-03-2020 மாலை 06.37 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதும் சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரும் அமைப்பாகும். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிலருக்கு வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 17-04-2020 பகல் 12.17 மணி முதல் 20-04-2020 அதிகாலை 00.37 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு குரு அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதும் சூரியன், புதன் இம்மாதத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி முன்னேற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும் அபிவிருத்தியையும் பெற முடியும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 14-05-2020 இரவு 07.20 மணி முதல் 17-05-2020 காலை 07.15 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நற்பலன்களை அடைய முடியும் என்றாலும் மாத முற்பாதியில் செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோக ரீதியாக உயர்வுகளை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் சுப முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சரளமான நிலையிருக்கும். அசையா சொத்துகளால் ஒரளவுக்கு லாபம் உண்டாகும். விஷ்ணு பகவானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 11-06-2020 அதிகாலை 03.40 மணி முதல் 13-06-2020 பகல் 02.45 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 08-07-2020 பகல் 12.30 மணி முதல் 10-07-2020 இரவு 10.55 மணி வரை.

ஆகஸ்ட்.

ஜென்ம ராசியில் சூரியன், 6-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். முன்கோபத்தையும் பேச்சையும் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் ஒரளவுக்கு நற்பலனை பெற முடியும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். 6-ல் கேது, 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் சிக்கல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் அதிகரிக்கும். வீண் பழிகளை சுமக்க கூடிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை. சிவ வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 04-08-2020 இரவு 08.45 மணி முதல் 07-08-2020 காலை 06.58 மணி வரை.

செப்டம்பர்.

ஜென்ம ராசியில் சுக்கிரன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சி அளிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். அலைச்சல், டென்ஷன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப் பெற்று பெயர், புகழ் உயரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கடன்கள் படிப்படியாக குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மூலம் உண்டாக கூடிய பிரச்சினைகள் குறையும்.

சந்திராஷ்டமம் – 01-09-2020 அதிகாலை 03.49 மணி முதல் 03-09-2020 பகல் 02.15 மணி வரை மற்றும் 28-09-2020 காலை 09.40 மணி முதல் 30-09-2020 இரவு 08.35 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு 9, 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களின் பலமும் வளமும் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பணவரவுகளால் பிரச்சினைகள் குறையும். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவிகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சி அளிக்கும். முருகனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 25-10-2020 மாலை 03.25 மணி முதல் 28-10-2020 அதிகாலை 02.30 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் உத்தியோக ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களால் லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. மாணவர்களும் நற்பலனை அடைவார்கள். சூரியன் மாத முற்பாதியில் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்,  டென்ஷன்கள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகும். சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் சிறப்பான பலன்களை தரும்.

சந்திராஷ்டமம் – 21-11-2020 இரவு 10.25 மணி முதல் 24-11-2020 காலை 08.52 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு, கடந்த கால நெருக்கடிகள் விலகும் நிலை உண்டாகும். பொருளாதார நிலை மேம்படுவதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்குதல், புது வீடு குடிபுகும் யோகம் போன்றவை உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழிலில் வியாபார ரீதியாக ஏற்றமிகுப் பலன்களை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 19-12-2020 காலை 07.15 மணி முதல் 21-12-2020 மாலை 04.30 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9     நிறம் – வெள்ளை, சிவப்பு   கிழமை – திங்கள், வியாழன்

கல் –  முத்து          திசை – வடகிழக்கு        தெய்வம் – வெங்கடாசலபதி

மிதுனம் – புத்தாண்டு பலன் – 2020

மிதுனம் – புத்தாண்டு பலன் – 2020

கணித்தவர்

ஜோதிட மாமணி

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சமூக பணிகளில் ஆர்வமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! வரும் 2020-ம் ஆண்டில் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம், பொருளாதார ரீதியாக உயர்வுகள், கடன்கள் படிப்படியாக குறைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் கைகூடி மன மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பொன் பொருள் சேரும். வீடு, மனை, வாகனங்கள் வாங்கக் கூடிய அமைப்பு உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடி வரும் நிலைமை ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். உத்தியோக ரீதியாக எதிர்பாராத உயர்வுகளை அடைவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரித்து உங்களுக்கு அஷ்டமச்சனி நடக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும்-. தேவையற்ற அலைச்சல் ஏற்படும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் போகும். வண்டி வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது நிதானமாக செல்வது, முடிந்த வரை இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சர்ப்ப கிரகமான ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-லும் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இடையே தேவையில்லாத கருத்து வேறுப்பாடுகள் மேலோங்கும். ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் சண்டை ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. குறிப்பாக மனைவி (கணவன்) வழி உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும் காலம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது.

உடல் ஆரோக்கியம்

குரு சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியினை பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மன கவலை உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுபிட்சமான நிலை இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடந்த கால கடன்கள் குறையும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி தரும் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்களால் தேவையற்ற நிம்மதி குறைவு உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலன்கள் கிடைக்கும். சிறு சிறு ஆரோக்கிய பாதிப்பால் வேலையில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் போகும் என்பதால் முடிந்த வரை சக ஊழியர்களை அனுசரித்து செல்வது பெறுப்புகளை குறைத்து கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்

எடுக்கும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு ஏற்றம் பெறுவீர்கள். வேலையாட்களால் சில இடையூறுகள் நிலவினாலும் எதையும் சமாளித்து லாபங்களை அடைவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும். கூட்டாக தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருப்பதால் பண புழக்கம் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் நட்பும் நற்பலனை உண்டாக்கும். காண்டிராக்ட் கமிஷன் ஏஜென்ஸி போன்ற துறைகளில் சிறப்பான லாபம் அமையும். போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தை பெற முடியும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். 

அரசியல்

எதிர்பாராத கௌரவ பதவிகள் தேடி வரும். கட்சி பணிகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றிகளை பெறுவீர்கள். மக்களின் ஆதரவைப் பெற புதுபுது முயற்சிகளை கையாள்வீர்கள்.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்பட்டாலும் போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்து சேரும். நடிப்பு துறையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இசை, நடனம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஒரளவுக்குச் சிறப்பாக இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று குறைந்து லாபகரமான பலனை அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். வேலையாட்களின் செயல்கள் உங்கள் மன அமைதியை குறைக்கும். பங்காளிகளிடம் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.

பெண்கள்

பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்ப தேவைகள் எல்லா பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்தால் சேமிக்க முடியும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பெருமை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு நிம்மதி குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்.

மாணவ மாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பினை பெறுவீர்கள். உடன்பயிலும் மாணவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நினைத்த கல்வியினை தேர்ந்தெடுத்து படிக்க முடியும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது.

மாதப்பலன்

ஜனவரி. 

உங்கள் ராசியதிபதி புதன் குரு சேர்க்கைப் பெற்று 7-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நற்பலனை தரும். தாராள தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 24-01-2020 காலை 07.39 மணி முதல் 26-01-2020 மாலை 05.39 மணி வரை.

பிப்ரவரி. 

உங்கள் ராசியதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும், குரு 7-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் தாராள தனவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உறவினர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 20-02-2020 பகல் 01.52 மணி முதல் 23-02-2020 அதிகாலை 00.29 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார ரீதியாக உயர்வு உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பது அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 18-03-2020 இரவு 07.25 மணி முதல் 21-03-2020 காலை 06.20 மணி வரை.

ஏப்ரல்.

மாத கோளான சூரியன் இம்மாதம் 10, 11-ல் சஞ்சரிப்பது தொழில் வியாபார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பாராத வகையில் வெற்றிகளைப் பெறுவீர்கள். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமை உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகளில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றாலும் குரு, செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பாராட்டுகள் கிடைக்கும். தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 15-04-2020 அதிகாலை 01.57 மணி முதல் 17-04-2020 பகல் 12.17 மணி வரை.

மே.

மாத முற்பாதியில் சூரியன், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் உத்தியோக ரீதியாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குரு 8-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த கெடுபிடிகள் விலகி பதவி உயர்வுகள் கிட்டும். பயணங்களால் சாதகமானப் பலன்கள் அமையும். முருக பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 12-05-2020 காலை 10.16 மணி முதல் 14-05-2020 இரவு 07.20 மணி வரை.

ஜுன்.

சூரியன், சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதும் குரு 8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் கடன் வாங்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

சந்திராஷ்டமம் – 08-06-2020 இரவு 07.45 மணி முதல் 11-06-2020 அதிகாலை 03.40 மணி வரை.

ஜுலை.

செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பு மரியாதை மேலோங்கும். நண்பர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள், நெருக்கடிகள் யாவும் விலகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சூரியன், ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 06-07-2020 அதிகாலை 05.00 மணி முதல் 08-07-2020 பகல் 12.30 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் உன்னதமான அமைப்பாகும். உங்களது பலமும் வளமும் கூடும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 02-08-2020 பகல் 12.55 மணி முதல் 04-08-2020 இரவு 08.45 மணி வரை மற்றும் 29-08-2020 இரவு 07.13 மணி முதல் 01-09-2020 அதிகாலை 03.49 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் வலமான பலன்களை பெறுவீர்கள். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சரளமாக அமைந்து நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூரிப்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பால் நற்பலன் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபகரமான பலன்களை அடையலாம். விஷ்ணு வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம் – 26-09-2020 அதிகாலை 00.40 மணி முதல் 28-09-2020 காலை 09.40 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசியதிபதி புதன் 5-லும், குரு 7-லும், செவ்வாய் 10, 11-லும் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் நிலை உண்டாகும். எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். செல்வம் செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருப்பதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 23-10-2020 காலை 07.00 மணி முதல் 25-10-2020 மாலை 03.25 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசியதிபதி புதன் 5-ல், செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக ரீதியாக பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். விஷ்ணு வழிபாடும் முருக வழிபாடும் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 19-11-2020 பகல் 03.30 மணி முதல் 21-11-2020 இரவு 10.25 மணி வரை.

டிசம்பர்.

மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நல்ல பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிறைந்திருக்கும். பணவரவுகள் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவில் கிடைக்கும். குரு 8-ல் இருப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்குச் சிறுசிறு அலைச்சல் டென்ஷன் அதிகரித்தாலும் அடைய வேண்டிய முன்னேற்றங்களை அடைந்து விடுவீர்கள். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 17-12-2020 அதிகாலை 01.48 மணி முதல் 19-12-2020 காலை 07.15 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8,             நிறம் – பச்சை, வெள்ளை, கிழமை – புதன், வெள்ளி

கல் – மரகதம்  திசை – வடக்கு              தெய்வம் – விஷ்ணு