மீனம்     – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

மீனம்     – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4, 10-ல் சஞ்சரிக்கும் ராகு கேது தற்போது ஏற்படும் இடபெயர்ச்சி மூலம் திருக்கணிதப்படி வரும்   23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் ராகுவும், 9-ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வது மிகவும் அற்புதமான அமைப்பாகும். ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு தற்போது லாப ஸ்தானமான 11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறி சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். உங்களுக்கு இது நாள் வரை இருந்த அலைச்சல்கள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் நலமாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பணவரவுகள் மிக சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடந்த கால கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடைவதால் பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த வேலைபளு குறைந்து உயர்வுகளும் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்.  புதிய வேலை தேடுபவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். சிலர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இனைவார்கள்.

            உங்கள் ராசியாதிபதி குரு (மகர ராசியில்) வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் மற்றும் வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும் என்பதால் இக்காலத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். சிலருக்கு சொந்த வீடு வாகணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் விலகி குடும்பத்தில் மகிழச்சி ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் கைகூடுவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். சுப காரியங்கள் தடபுடலமாக நடைபெறும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமைசிறப்பாக இருக்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் யாவும் குறையும்.

உத்தியோகம்

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி உண்டாகும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சிறப்பான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயமானப் பலன்களைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகள் மறையும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை மிகவும் முன்னேற்றகரமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

அரசியல்

பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். பத்திரிக்கையாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டு. காய், கனி விளைச்சல் சிறப்பாக இருக்கும் கால் நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும். கடன் சுமைகள் குறையும்.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்கு வராமல் தடைபட்டு கொண்டிருந்த பணத்தொகைகளும் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார் பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். இசை துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். கடன்களும் குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கடந்த காலங்களில் இருந்த பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவ மாணவியர்

நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்கள் ஏற்படும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், 9-ல் கேது கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சனி லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வரும் 20-11-2020 முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் பூரிப்பும், பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.  உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 9-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது மட்டுமின்றி சனி 11-ல் சஞ்சரிப்பதும் வரும் 06-04-2021 முடிய குரு 11-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபம் அதிகரிக்கும். வெளியூர் முலம் நல்ல செய்தி கிடைக்கும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு இட மாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 9-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் சனி 11-ல் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி இருக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குரு அதிசாரமாக 12-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 9-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றி விட முடியும். சனி 11-ல் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வரும் 20-11-2021 முதல் குரு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பு உண்டாகும் என்றாலும் அதன் மூலம் கடன் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறும் வாய்ப்பு உண்டாகும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 9-ல் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் 11-ல் சனி சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளால் நல்லது நடக்கும். குரு 12-ல் சஞ்சரிப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும்.  பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் லாபங்கள் பெருகும். வேலையாட்களால் அனுகூலப்பலன் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து நிம்மதியுடன் பணி புரிய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்   – 1,2,3,9,

கிழமை – வியாழன், ஞாயிறு

திசை             – வடகிழக்கு

நிறம்             – மஞ்சள், சிவப்பு

கல்     – புஷ்ப ராகம்

தெய்வம் – தட்சிணாமூர்த்தி

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ராசியதிபதி மட்டுமின்றி சில நாட்கள் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணிவதும். குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும்.

கும்பம்   – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கும்பம்   – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, தற்போது ஏற்பட உள்ள ராகு கேது பெயர்ச்சி மூலம் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). ராகு ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும், கேது ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதும், ராசியாதிபதி சனி 12-ல் சஞ்சரித்து உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுவதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்வர்களால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது-. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின்பு அனுகூலப் பலன் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. ஆன்மீக தெய்வீக தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

            தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கூட்டாளிகளையும், வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலைபளு அதிகமாக இருப்பதால் உடல்நிலை சோர்வடையும். எடுக்கும் பணிகளை திறம்பட செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மூலம் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.

            தற்போது லாப ஸ்தானமான 11-ல் குரு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 20-11-2020 முதல் குரு 12-லும் அதன் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க இருப்பதால் பண கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது. திருமண முயற்சியில் இடையூறு இருக்கும் என்றாலும் குரு ஜென்ம ராசியில் அதிசாரமாக (கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிப்பது மூலம் தனது 7-ஆம் பார்வையாக 7-ஆம் வீட்டை பார்க்கும் காலத்தில் சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்£டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும் என்பதால் உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். தேவையற்ற மனக்குழப்பங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது சற்று ஆறுதலை தரும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும் விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நற்பலன் கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் சுமாராக நடைபெறும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் நீங்கள் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. கூட்டாளிகள் ஆதரவு சற்று சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் எதிர்பார்க்கும் லாபம் ஓரளவுக்கு கிட்டும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாமல் போகும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரிடும். தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தினை அடைய முடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாவதால் அவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். மேடை பேச்சுக்களில் கவனமுடன் இருப்பது, பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும்-. என்றாலும் பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உடன் பழகுபவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விலை பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்க சிரமம் ஏற்படும்.  காய், கனி, பூ போன்றவற்றாலும் கால் நடைகளாலும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். சில இடங்களில் நீர் வரத்து குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். புதிய பூமி மனை, வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகளில் இழுபறியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகபோக வாழ்வை அனுபவிக்க இடையூறு ஏற்படும். இசைத் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் மற்ற பிரச்சினைகளை மன தைரியத்துடன் எதிர் கொள்ள முடியும்.  புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயப்பலனை அடைய முடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் நல்ல நண்பர்களை தோந்தெடுத்து பழகுவது உத்தமம். கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் இடையூறுகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

உங்கள் ராசிக்கு ராகு 4-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 10-ல் கேது கேட்டை நட்சத்திரத்திலும் ராசியாதிபதி சனி 12-லும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்க தடைகள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறு மன நிம்மதி குறைவு ஏற்படும். நெருங்கியவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 20-11-2020 முதல் 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு நற்பலன்களை பெற முடியும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாககூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்று பாடுபட வேண்டியிருக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 4-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 10-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ராசியாதிபதி சனி 12-ல் குரு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், அலைச்சல், டென்ஷன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர் கொள்வீர்கள்.  பண வரவுகள் சுமாராக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்களுக்கு பிறகு அனுகூலப் பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்றாலும் எந்த செயலிலும் அதிக அக்கறை எடுத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 4-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 10-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால்  எதையும் சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றங்கள் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் அகல கால் வைக்காமல் பொறுமையுடன் செயல்பட்டால் அனுகூலங்களை அடையலாம். திருமண சுபகாரிய முறய்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் இருக்கும். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 4-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 10-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக அலைச்சல், சுகவாழ்வு பாதிப்பு, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். சனி 12-ல் சஞ்சரித்து ஏழரைச்சனி நடப்பதால் நீங்கள் எதிலும் கோபப்படாமல் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வரும் 20-11-2021 முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது மூலம் 7-ஆம் வீட்டை பார்க்கும் என்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

ராகு உங்கள் ராசிக்கு 4-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 10-ல் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதாலும் எந்த செயல் செய்வதென்றாலும் கவனத்துடன் செய்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் அலைச்சல் அதிகப்படியாக இருக்கும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்து 5,7,9-ஆம் ஸ்தானங்களை பார்ப்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர் கொள்வீர்கள். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது விட்டு கொடுத்து நடந்து கொள்வது மூலம் சில முன்னேற்றங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தள்ளி வைப்பது சிறப்பு. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,7,8

கிழமை – வெள்ளி, சனி

திசை – மேற்கு

நிறம் – வெள்ளை, நீலம்

கல் – நீலக்கல்,

தெய்வம் – ஐயப்பன்

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 4-லும் கேது 10-லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது. ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது நல்லது. முடிந்த வரை விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை  தானம் தருவது நல்லது.

ஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.

குரு வரும் 20-11-2021 முதல் சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.

 

தனுசு   – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

தனுசு   – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, சர்ப கிரகமான கேது ராகு உங்கள் ராசிக்கு 1, 7-ல் சஞ்சரிப்பதால் பல இன்னல்களை சந்தித்து வரும் உங்களுக்கு தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் திருகணிதப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). ராகு ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டிற்கும் கேது 12-ஆம் வீட்டிற்கும் செல்கின்றனர். இதனால் உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றங்கள் உறுதியாக ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் இனையும் நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் இருந்த மன கசப்புகள் விலகி சுமுக நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.

             உங்கள் ராசிக்கு சனி 2-ல் சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் பாதச்சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களிடம் பேசும் போது நிதானமாக இருப்பது, உங்கள் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.  பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் இருந்தால் சாதகப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியான வளர்ச்சியை அடைய முடியும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்க்கும் உயர்வினை அடையலாம்.

            தற்போது உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி குரு பகவான் வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் அடுத்து வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க உள்ளதால் பொருளாதார ரீதியாக மேன்மைகளை அடையும் வாய்ப்பு, கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும் நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிட்டும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு அமையும்.

            குரு வரும் (அதிசாரமாக கும்ப ராசியில் ) 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க உள்ளதால் இக்காலத்தில் பொருளாதார ரீதியாக சற்று தேக்கங்கள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.  

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். கடந்த கால அலைச்சல் டென்ஷன்கள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவ செலவுகள் மறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

பண வரவுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகம்

பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதிலும் திறம்பட செயல்பட முடியும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருப்பதால் லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள் என்றாலும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும்.

அரசியல்

பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகுவதால் அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும் என்றாலும் கவனத்துடன் பேசுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பத்திரிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உடனிருப்பவர்கள் அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையும் கிட்டும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும். வர வேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை இருந்தாலும் வர வேண்டிய நேரத்தில் கைக்கு கிடைக்கும். படப்பிடிப்பிற்காக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கார் பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களிடம் சற்று அனுசரித்து செல்வது நல்லது. பொன் பொருள் சேரும். தாய் வழி சொத்துக்களால் அனுகூலப்பலன்களை பெற முடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப்பலன் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளைப் பெறுவார்கள். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும். 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 6-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 12-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் வரும் 20-11-2020 முதல் ராசியாதிபதி குரு 2-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் குறையும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் செயல்படுவதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறந்து அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் லாபம் சிறப்பாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு ரோகிணி நட்சத்திரத்திலும், 12-ல் கேது கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், ராசியாதிபதி குரு 2-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உங்கள் ராசிக்கு சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதற்கு முன் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு ரோகிணி நட்சத்திரத்திலும், 12-ல் கேது அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் சற்று தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

உங்கள் ராசிக்கு ராகு 6-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 12-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு அனுகூலங்களை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 20-11-2021 முதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவதால் தொழில் வியாபாரத்தில் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக பாடுபட வேண்டியிருக்கும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சூரியன் நட்சத்திரத்திலும், 12-ல் கேது குரு நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணவரவுகள் தக்க சமயத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவுகளை எதிர் கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டானாலும் குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் அனுகூலமான பலன்கள் கிட்டும். தொழில் ரீதியாக நெருக்கடிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது மூலம் திறம்பட செயல்பட முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9   

நிறம் – மஞ்சள், பச்சை  

கிழமை – வியாழன், திங்கள்

கல் – புஷ்ப ராகம்

திசை – வடகிழக்கு                  

தெய்வம் – தட்சிணா மூர்த்தி

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை, போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது, சர்ப சாந்தி செய்வதும், விநாயகரை வழிபடுவது நல்லது.

ஏழரை சனியில் பாதசனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. திருப்பதி ஏழு மலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்பு நிற ஆடை அணிவது நல்லது.

 

மகரம்   – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

மகரம்   – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இதுநாள் வரை 6, 12-ல் சஞ்சரித்த ராகு கேது தற்போது ஏற்பட உள்ள இடபெயர்ச்சியால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 5-ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் வாழ்வில் எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். கேது 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொண்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். ராகு 5-ல் இருப்பதால் வயிறு பாதிப்பு, உற்றார் உறவினர்கள் பகை, பூர்வீக சொத்து ரீதியாக பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் நிம்மதி குறைவு ஏற்படலாம். உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு சனி திருக்கணிப்படி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே இருப்பதை தக்க வைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். உழைப்பிற்கான பலனை அடைய இடையூறு ஏற்படும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும் என்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உங்களுக்கு கடன்கள் அதிகரிக்கலாம் என்பதால் பொதுவாக உங்கள் பெயரில் கடன் வாங்குவதை தவிர்ப்பது அப்படி வாங்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது நல்லது.

இக்காலத்தில் தன காரகன் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் பண வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் கிடைக்கும். எதிலும் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் தீவிர முயற்சிக்கு பின்பு நல்லது நடக்கும். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் ரீதியாக சிறிது மன நிம்மதி குறைவு ஏற்படும்,

உத்தியோகம்

பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் உங்களது உடல் நிலை ஒத்துழைக்காது. எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளு குறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்போது பயன்படுத்தி கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.

தொழில் வியாபாரம்

செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் உங்களது உழைப்பு சற்று அதிகமாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சினைகளை சமாளிக்க முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி பொறாமைகளால் மனநிம்மதி குறையும். நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். அதிக முதலீடு விஷயத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனத்துடன் செயல்பட்டால் லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்ற விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

மேலிடத்தில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பங்கம் ஏற்படாது. மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

உழைப்பு அதிகமாக இருந்தாலும் பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து சென்றால் அவர்களது ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் தக்க நேரத்தில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் பங்காளிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்

கிடைத்த வாய்ப்புகளை கைநழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். சுக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட திருமண சுப காரியங்களில் தடை விலகி கைகூடும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். பண வரவுகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொண்டு உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகளால் பல நன்மைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் நற்பலன் கிடைக்கும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் உங்கள் ராசிக்கு 5-ல் ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 11-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஒரளவுக்கு கிடைத்து உங்களது அனைத்து தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். நவீன கரமான பொருட்களை வாங்குவீர்கள். பங்காளிகளிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற முடியும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்றாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

உங்கள் ராசியில் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ராகு 5-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 11-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு அதிசாரமாக 06-04-2021 முதல் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க உள்ளதால் குடும்பத்தில் மங்களகரமாக சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் கிட்டும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். மற்றவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையே இருக்கும். வீடு வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ராகு 5-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 11-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். குரு வக்ர கதியில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடைபெற்றாலும் ராகு 5-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 11-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் இருக்கும் நெருக்கடிகள் குறைந்து ஏற்றங்கள் ஏற்படும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு வரும் 20-11-2021 முதல் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சோர்வு மந்த நிலை விலகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிலும் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் அனுகூலப்பலன் பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

உங்கள் ராசிக்கு 5-ல் ராகு கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 11-ல் விசாக நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதாலும், ஆண்டு கோளான குரு 2-ல் சஞ்சாரம் செய்வதாலும் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறிது மந்த நிலை இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். வேலையாட்களின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8

கிழமை – சனி, புதன்

திசை – மேற்கு

நிறம் – நீலம், பச்சை

கல் – நீலக்கல்

தெய்வம் – விநாயகர்

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 5-ல் சஞ்சாரம் செய்வதால் ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்கள், மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது, ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது நல்லது.

ஏழரை சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்புநிற ஆடை அணிவது நல்லது.

 

விருச்சிகம்   – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

விருச்சிகம்   – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 8, 2-ல் சஞ்சரித்த ராகு, கேது, தற்போது ஏற்படும் ராகு கேது பெயர்ச்சியால் திருக்கணிப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). சர்ப கிரங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது சிறப்பு. அதிலும் குறிப்பாக புதுமண தம்பதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திடீரெண்டு உணர்ச்சி வசப்படும் நிலை ஏற்படும் என்பதால் உங்கள் முன் கோபத்தை குறைத்து கொண்டு குடும்பத்தில் பெரியவர்களிடம் பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது, வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.  உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் ஒரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அலர்ஜி பிரச்சினை, மனைவிக்கு உடம்பு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.

            குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலையை சர்ப கிரகங்கள் உங்களுக்கு ஏற்படுத்தினாலும் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் சஞ்சரிக்கும் கிரகமான சனி உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எளிதில் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம் என்பதால் அவர்களை கலந்து ஆலோசித்து எந்த முடிவுகளையும் எடுப்பது மிகவும் சிறப்பு. பெரிய முதலிடுகளை ஈடுபடுத்தி தொழிலை மேன்மைபடுத்தி கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கு ஏற்ற உயர்வுகளை பெறுவார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

            இக்காலங்களில் குரு சஞ்சாரம் எப்படி இருக்கிறது என பார்த்தால் குரு வரும் 20-11-2020 முடிய உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வது மட்டும் தான் சாதகமான அமைப்பு அதன் பின்பு குரு 3 மற்றும் 4-ல் சஞ்சராம் செய்வதால் பண வரவுகள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கடினமாக முயற்சித்தால் தான் ஒரு சிறு செயலையும் செய்து முடிக்க முடியும். பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் தேவையற்ற மன கவலை உண்டாகும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் நிலை சற்று சாதகமாக இருக்கும் கடந்த கால சோர்வுகள் விலகி நீங்கள் சற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் முன் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மனைவி பிள்ளைகளுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தேவையற்ற குழப்பங்களால் மன நிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால்  அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகம்

பணியில் வேலைபளு அதிகமாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் உங்களது நெருக்கடிகளை குறைக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு மனைவி பிள்ளைகளை விட்டு வெளியிடங்களில் தங்க நேரிடும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி ஏற்றம் அடைவீர்கள் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபங்களை அடைவீர்கள். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் கவனமாக செயல்படுவது நல்லது. கடந்த கால வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.  கொடுத்த கடன்கள் வசூலாகும்.

அரசியல்

பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் காலமாக இருக்கும். கட்சி பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்வீர்கள். முன்கோபத்தை குறைத்து கொள்வது, மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உடன் பழகுபவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது, பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாது இருப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். பொருளாதார ரீதியாக மேன்மைகள் ஏற்படும் என்றாலும் நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் எதையும் சமாளித்து விட முடியும்.

கலைஞர்கள்

தகுந்த கதா பாத்திரங்கள் கிடைத்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவீர்கள். போட்டி, பொறாமைகள் அதிகமாக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் உங்களிடம் இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமையும். வரவேண்டிய பணத் தொகைகள் கிடைத்து கடன்கள் குறையும். அதிக அலைச்சலால் சுகபோக வாழ்க்கையில் சிறிது பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

பெண்கள்

உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால கடன்களை குறைக்க முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், கை, கால் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண் பெற்று நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல் நிலை மந்தமாக இருக்கும் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் கவனம் தேவை. பெரிய மனிதர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

ஜென்ம ராசியில் கேது கேட்டை நட்சத்திரத்திலும் ராகு 7-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது, கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி வலுவாக சஞ்சரிப்பது சகல விதத்திலும் வெற்றிகளை குவிக்கும் சிறப்பான அமைப்பாகும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நல்ல அனுகூலமான பலன்களை அடைய முடியும். தொழில் வளர்ச்சிக்கான நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். வாகனங்களில் செல்கின்ற போது நிதானத்துடன் இருப்பது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 7-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், குரு 3-ல் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். சில நெருக்கடிகள் இருந்தாலும் சனி 3-ல் சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து லாபங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகரிக்கும். பணியில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பதும் நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ஜென்ம ராசியில் கேது அனுஷ நட்சத்திரத்திலும், ராகு 7-ல் ரோகிணி நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனைப் பெற முடியும். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். சனி 3-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் இக்காலத்தில் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். கடன்கள் சற்றே குறையும். தேவையில்லாத அலைச்சல்கள் இருக்கும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ஜென்ம ராசியில் கேது அனுஷ நட்சத்திரத்திலும், ராகு 7-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி உங்கள் ராசிக்கு 3-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய சூழ்நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் கை கூட இடையூறு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு இருந்தாலும் உங்களது அன்றாட செயல்களில் சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை ஏற்படும். கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் எதிலும் அவர்களை கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

ஜென்ம ராசியில் கேது விசாக நட்சத்திரத்திலும் ராகு 7-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியதுவம் கொடுத்தால் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ள முடியும். உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் வலமான வாழ்வை அடைய முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். புதிய இடம் பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவதோடு பள்ளி கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பார்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -1,2,3,9

நிறம் –  ஆழ்சிவப்பு, மஞ்சள்

கிழமை – செவ்வாய், வியாழன்

திசை – தெற்கு

கல் – பவளம்

தெய்வம்- முருகன்

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சாரம் செய்வதால் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 20-11-2020 முதல் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும்.

துலாம்   – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

துலாம்   – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

முன்கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, இதுநாள் வரை 3, 9-ல் சஞ்சரித்த கேது, ராகு தற்போது ஏற்படும் மாறுதலால் திருக்கணிப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). சர்ப கிரகங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 8-ஆம் வீட்டிலும், கேது 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளதால் வரும் நாட்களில் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது, சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது உத்தமம்.

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்த்தஷ்டமச்சனி நடைபெறுவதால் பொருளாதார ரீதியாக தேக்க நிலை, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பணி புரியும் இடத்தில் பிறர் விஷயங்களில் தலையிடாது  இருப்பது நல்லது. வேலைபளு அதிகமாக இருக்கும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும்.

உங்கள் ராசிக்கு குரு 4-ஆம் வீட்டில் வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் மற்றும் வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலங்களில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை (அதிசாரமாக கும்ப ராசியில்) மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருக்கும் காலத்தில் பண வரவுகளில் இருந்த தேக்க நிலை விலகி அனுகூலங்கள் ஏற்படும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்க பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுப காரியங்களில் நிலவிய தடைகள் விலகி நல்லது நடக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்லது நடக்க கூடிய வாய்ப்புகள் அமையும். கடன்களும் ஒரளவுக்கு குறையும். தொழில் வியாபாரத்தில் சற்று முன்னேற்றங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் உள்ள பிரச்சினைகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். மனைவி பிள்ளைகளுக்கு உண்டாக கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது, பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப்பலன்களை அடைய முடியும்.

உத்தியோகம்

பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சுமராக இருக்கும் என்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சலும் அதன் மூலம் வீண் செலவுகளும் ஏற்படும் என்பதால் முடிந்த வரை தூர பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று  தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளால் இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் மன நிம்மதி ஏற்படும்.

அரசியல்

மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். பண வரவுகள் சுமாராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பயணங்களால் அலைச்சல் வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பொது இடங்களில் பேசும் போது பேச்சில் கவனமாக இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

விவசாயிகள்

விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடு படவேண்டி இருக்கும். தக்க நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். முதலீடு விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பங்காளிகளை அனுசரித்து செல்வது மூலம் எதையும் எதிர் கொள்ள முடியும்.

கலைஞர்கள்

பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சுமாராக அமையும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. போட்டிகள் அதிகம் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.

பெண்கள்

கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, கணவர் வழி உறவினர்களிடம் பேச்சில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவை விட செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து  கொள்வது நல்லது. மாணவ மாணவியர்

கல்வியில் கவனமாக செயல்பட்டால் தான் முன்னேற்றத்தை அடைய முடியும். திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்றாலும் படிப்பிற்கு அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

உங்கள் ராசிக்கு ராகு 8-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 2-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் ஜென்ம ராசிக்கு 4-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சியில் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலப்பலனை அடைய முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் சற்று மந்த நிலையை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். 

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 2-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் 4-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும்.   உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வரும் 06-04-2021 முதல் குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 2-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும், 4-ல் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளித்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். முடிந்தவரை உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குரு அதிசாரமாக 14-09-2021 முடிய 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எந்த பிரச்சினையும் சமாளித்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகி விடும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்து கொண்டு கல்வியில் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 8-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 2-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் சனி 4-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் குரு 20-11-2021 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் நல்லது நடந்து மகிழ்ச்சி ஏற்படும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சற்று குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பெண்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில்- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரித்து அர்த்தாதஷ்டம சனி நடப்பதும், ஜென்ம ராசிக்கு ராகு 8-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 2-ல் விசாக நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு ஆகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை தவிர்ப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தன காரகன் குரு 5-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதோடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். திருமண சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் நற்பலனை அடையலாம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்   – 5,6,7,8

நிறம்             – வெள்ளை, பச்சை

கிழமை – வெள்ளி, புதன்

திசை             – தென் கிழக்கு

கல்     – வைரம்

தெய்வம் – லட்சுமி

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.

 

மேஷம்   – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

மேஷம்   – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

எதிலும் தைரியத்துடன் செயல்படும் திறன் கொண்டவராகவும், தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்தில் இருந்தும் காப்பாற்றக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்டவராகவும் விளங்கும் மேஷ ராசி நேயர்களே, இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரித்த சர்ப கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). ராகு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறைவு, ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஏற்படும் சிறுசிறு சிக்கல்களை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

            ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனமாக கையாள்வது சிறப்பு. வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். 

எது எப்படி இருந்தாலும் தனகாரகன் குரு வரும் 20-11-2020 வரை பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் அடுத்து லாப ஸ்தானமான 11-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி அளிக்கும் நிகழச்சிகள் நடைபெறும். நவீன பொருட்கள், வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகம் சிலருக்கு உண்டாகும். எடுக்கும் பணிகளை சிறப்புடன் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பொன் பொருள் சேரும்.

குரு (மகர ராசியில்) வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் மற்றும் வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலங்களில் பண விஷயங்களில் கவனமுடன் இருப்பது, எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சற்று சுமாராக இருக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது, பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், அலர்ஜி ஏற்படலாம் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சில நேரங்களில் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது, மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு 2021 ஏப்ரலுக்கு பின்பு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுபகாரியம் கைகூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்

செய்யும் பணியில் சில நிம்மதி குறைவுகளை சந்திக்க நேர்ந்தாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியிடங்களில் தங்கி பணிபுரிய நேரிடும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து  செல்வது நல்லது.  வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கடன்கள் ஒரளவுக்கு குறையும். தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படவும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். நம்பியவர்களே பண விஷயத்தில் நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். கொடுத்த பணத்தை பல்வேறு தடைகளுக்குப் பின்பே வசூலிக்க முடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். பெயர் புகழ் கௌரவ பதவிகள் தேடி வரும் என்றாலும் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். எது பேசுவது என்றாலும் சிந்தித்து பேச்சினால் நற்பலனை அடைய முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். உடன் இருப்பவர்களிடமும் பங்காளிடமும் பேச்சில் கவனத்துடன் இருப்பதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. காய்கனிகளாலும், கால்நடைகளாலும் லாபத்தை அடைய முடியும்.

கலைஞர்கள்

உங்கள் உழைப்பிற்பான பலனை பெற முடியும். சிறு சிறு தடைகள் இருக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தினால் 2021 ஏப்ரலுக்கு பின்பு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளால்  ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகள் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். இழந்தவற்றை மீட்க கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சல்கள் இருந்தாலும் அதனால் ஆதாயம் இருக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும்.  மங்களகரமான சுப காரியங்கள் 2020 ஏப்ரலுக்கு பின் கைகூடும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, கணவர் வழி உறவினர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்து ரீதியாக நற்பலன் கிடைக்கும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சற்று மந்தநிலை ஏற்படும் என்பதால் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். தேவையற்ற நட்புக்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லும். வண்டி வாகனங்களில் செல்லும் போதும் நிதானம் தேவை.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் ராசியாதிபதி செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிஷத்திலும், கேது 8-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் பொருளாதரா ரீதியாக ஏற்ற இறக்கமானப் பலன்களையே பெற முடியும் என்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் நிதானமாக செயல்படுவது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. தன காரகன் குரு வரும் 20-11-2020 வரை பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்வதால் எந்த பிரச்சினையும் எதிர்கொண்டு நற்பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் சோர்வு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும் வாய்ப்பு ஏற்படும் என்றாலும் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சிறிது நாள் இருக்க நேரிடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 2-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 8-ல் கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றும் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய வாய்ப்பு உண்டு. அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வரும் 06-04-2021 முதல் குரு அதிசாரமாக 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்று அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 2-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 8-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மூலம் நல்லது நடக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகலாம். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. வரும் 14-09-2021 வரை குரு அதிசாரமாக 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில்- வியாபாரத்தில் எதிர்பாராத நன்மைகள் ஏற்பட்டு அனுகூலங்களை அடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 2-ல் கிருத்திகை நட்சத்திரத்தில், கேது 8-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கட்டுப்பாடு தேவை. முடிந்த வரை தூர பயணங்களை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். 10-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் வரும் 20-11-2021 முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலையில் நல்லதொரு மாற்றம் உண்டாகி பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தொழில்- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் மேன்மைகளை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். தேவையற்றப் பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

உங்கள் ராசிக்கு ராகு 2-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 8-ல் விசாக நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் 11-ல் குரு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று சாதகமான பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. முடிந்த வரை மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் ஏற்படும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் மேன்மைகளை அடைவார்கள். கடந்த கால பொருட் தேக்கம் விலகி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளி மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். வேலைபளு இருந்தாலும் சம்பள உயர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9,           

நிறம் – ஆழ் சிவப்பு

கிழமை – செவ்வாய்

கல் – பவளம்

திசை – தெற்கு

தெய்வம் – முருகன்

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

சனி 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.