2019 டிசம்பர் மாத ராசிப்பலன்

2019- டிசம்பர் மாத ராசிப்பலன்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

ராகு
திருக்கணித கிரக நிலை

 

சனி குரு கேது சுக்கி

 

சூரிய செவ் புதன் (வ)

கிரக   மாற்றம்

05-12-2019 விருச்சிகத்தில் புதன் காலை 10.34 மணிக்கு

15-12-2019 மகரத்தில் சுக்கிரன் மாலை 05.58 மணிக்கு

16-12-2019 தனுசில் சூரியன் மாலை 03.28 மணிக்கு

25-12-2019 தனுசில் புதன் மாலை 03.46 மணிக்கு

25-12-2019 விருச்சிகத்தில் செவ்வாய் இரவு 09.29 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் ராசியதிபதி செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதும்  ஒற்றுமை குறைவை ஏற்படுத்தும் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களிடம் பார்த்து பழகுவது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. சுப காரிய முயற்சிகள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

பரிகாரம் –   சிவ பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது, பிரதோஷ விரதமிருப்பது நல்லது. கார்த்திகை தீப நன்னாளில் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்தால் நன்மைகள் பல உண்டாகும்.

சந்திராஷ்டமம்    — 23-12-2019 பகல் 11.50 மணி முதல் 25-12-2019 மாலை 04.40 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மாத முற்பாதியில் சூரியன் 7-ல் சஞ்சரிப்பதாலும் 8-ல் குரு, சனி, கேது சஞ்சரிப்பதாலும் பண விஷயத்தில் மட்டும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும் என்றாலும் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு தேவையற்ற பொழுது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும்.

பரிகாரம் –   துர்கையம்மன் வழிபாட்டையும் சனி பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் துயரங்கள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்    — 25-12-2019 மாலை 04.40 மணி முதல் 27-12-2019 இரவு 11.45 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் குரு, மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். பொருளாதார மேன்மையால் வாழ்க்கை தரம் உயரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் சாதகப்பலன் உண்டாகும். கணவன்– மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெறு முடியும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சிலரின் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம் –   சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்    — 30-11-2019 பகல் 02.30 மணி முதல் 03-12-2019 அதிகாலை 00.55 மணி வரை மற்றும் 27-12-2019 இரவு 11.45 மணி முதல் 30-12-2019 காலை 09.35 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடையும் யோகம் உண்டு. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டிகள் விலகி சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் திரும்ப கிடைக்கும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம் –   கந்த கடவுளாம் முருக பெருமானை செவ்வாய்க்கிழமைகளில வணங்கி வழிபட்டால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்    — 03-12-2019 அதிகாலை 00.55 மணி முதல் 05-12-2019 பகல் 01.20 மணி வரை மற்றும் 30-12-2019 காலை 09.35 மணி முதல் 01-01-2020 இரவு 09.40 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 5-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதும் தாராள தனவரவுகளை அடையும் யோகத்தை தரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உடலில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறு முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சாதகப்பலன் ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம்.

பரிகாரம் –   விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது, சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்    — 05-12-2019 பகல் 01.20 மணி முதல் 08-12-2019 அதிகாலை 01.30 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் கடந்த கால சோதனைகள் சற்று குறைந்து மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். இதுவரை இருந்த பிரச்சினைகள் எல்லாம் குறைந்து அனுகூலங்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விட முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் –   சனி பகவானுக்கு க-ருப்பு வஸ்திரம் சாற்றி எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்    — 08-12-2019 அதிகாலை 01.30 மணி முதல் 10-12-2019 பகல் 11.20 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி கேது மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தயாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடனை பெறுவதில் இருந்த இடையூறுகள் விலகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப் பலனை பெறுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம்.

பரிகாரம் –   விஷ்ணு பகவானையும் மகா லட்சுமி தேவியையும் வணங்கி வழிபட்டால் குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

சந்திராஷ்டமம்    — 10-12-2019 பகல் 11.20 மணி முதல் 12-12-2019 மாலை 06.25 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு, மாத முற்பாதியில் சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பது வலமான பலன்களை உங்களுக்கு தரும் அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் நன்றாக இருந்து எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் கொண்டால் அவர்கள் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளித்து விடுவீர்கள். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் –   சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ காலங்களில் கோவில்களில் சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தருவது மிகவும் நன்மையை அளிக்கும். கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை சென்று வருவது நல்லது.

சந்திராஷ்டமம்    — 12-12-2019 மாலை 06.25 மணி முதல் 14-12-2019 இரவு 11.15 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம சனி நடப்பதும், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் வீண் வாக்குவாதங்கள் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். குடும்பத்தினரிடமும், உற்றார் உறவினர்களிடமும் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும்.

பரிகாரம் – சனி பகவானை வழிபடுவதாலும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதாலும் சிறப்பான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம்    — 14-12-2019 இரவு 11.15 மணி முதல் 17-12-2019 அதிகாலை 02.45 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.  சொந்த தொழில் செய்பவர்கள் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபத்தை அடைவார்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் சனி, குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். சுப காரியங்கள் சிறு தடை தாமதத்திற்கு பின் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியில் ஆதாயங்கள் கிட்டும்.

பரிகாரம் –   சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வணங்கி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்    — 17-12-2019 அதிகாலை 02.45 மணி முதல் 19-12-2019 அதிகாலை 05.40 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, குரு, கேது சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் வலமான பலன்களை பெறுவீர்கள். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும்.

பரிகாரம் –   செவ்வாய்க்கிழமைகளில் துர்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

சந்திராஷ்டமம்    — 19-12-2019 அதிகாலை 05.40 மணி முதல் 21-12-2019 காலை 08.25 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 10-ல் சனி, குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். பொருளாதார ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சற்று இறக்கமாகவே இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது, பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பரிகாரம் –   முருக வழிபாடு செய்வது, சஷ்டி, கிருத்திகை விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்    — 21-12-2019 காலை 08.25 மணி முதல் 23-12-2019 பகல் 11.50 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

01.12.2019 கார்த்திகை 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

02.12.2019 கார்த்திகை 16 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

06.12.2019 கார்த்திகை 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

08.12.2019 கார்த்திகை 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

11.12.2019 கார்த்திகை 25 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

15.12.2019 கார்த்திகை 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை

29.12.2019 மார்கழி 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

30.12.2019 மார்கழி 14 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

Today Rasi palan 04-11-2017

இன்றைய ராசிப்பலன் –  04.11.2017

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை — 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

04-11-2017, ஐப்பசி -18, சனிக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 10.53 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பரணி நட்சத்திரம் பின்இரவு 01.05 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. சனி ப்ரீதி நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சந்தி

 

                திருக்கணித கிரக நிலை

04.11.2017

ராகு
கேது
சனி   புதன் சூரிய சுக்கி குரு  செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  04.11.2017

மேஷம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்களது மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொண்டால் ஏற்படும் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியம் கைகூடும்.

கடகம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சனைகள் வந்தாலும் லாபம் பாதிப்படையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி

இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளிநபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.

துலாம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கனுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். கடன் குறையும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். வருமானம் பெருகும்.

தனுசு

இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

மகரம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

கும்பம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களின் செயல்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

Today Rasi palan 03.11.2017

இன்றைய ராசிப்பலன் –  03.11.2017

முனைவர் முருகு பால முருகன்

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

03-11-2017, ஐப்பசி -17, வெள்ளிக்கிழமை, சதுர்த்தசி திதி பகல் 01.47 வரை பின்பு பௌர்ணமி. அசுவினி நட்சத்திரம் பின்இரவு 03.28 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பின்இரவு 03.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்-2, ஜீவன்- 1. பௌர்ணமி. அன்னாபிஷேகம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம் –  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சந்தி

 

                திருக்கணித கிரக நிலை

03.11.2017

ராகு
கேது
சனி   புதன் சூரிய சுக்கி குரு  செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  03.11.2017

மேஷம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வு ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

மிதுனம்

இன்று உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு ஊதிய உயர்வு உண்டாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

கன்னி

இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

துலாம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சிலருக்கு வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

விருச்சிகம்

உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

தனுசு

உங்கள் குடும்பத்தில் தாராள தன வரவும், லஷ்மிகடாட்சமும் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.  திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.

மகரம்

இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் ஏற்படக் கூடும். உத்தியோகத்தில் சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன்பிரச்சனை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கப்பெறும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும். முன்கோபத்தை குறைப்பது உத்தமம்.

Today rasi palan 02-11-2017

இன்றைய ராசிப்பலன் –  02.11.2017

இன்றைய  பஞ்சாங்கம்

02-11-2017, ஐப்பசி -16, வியாழக்கிழமை, திரியோதசி திதி மாலை 04.11 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 06.56 வரை பின்பு ரேவதி நட்சத்திரம் பின்இரவு 05.29 வரை பின்பு அசுவினி. சித்தயோகம் பின்இரவு 05.29 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சந்தி

 

                திருக்கணித கிரக நிலை

02.11.2017

ராகு
கேது
சனி   புதன் சூரிய குரு  சுக்கி செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  02.11.2017

மேஷம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிப்படையாது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவிகள் மூலம் கடன் பிரச்சனை தீரும். தெய்வ வழிபாடு நல்லது.

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்சனைகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் சற்று குறையும்.

சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். புது முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்க்கவும்.

கன்னி

இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் தீரும்.

விருச்சிகம்

இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். வெளியூர் பயணங்களினால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதங்கள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் வெளிவட்டார நபர்கள் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும்.

மகரம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் கிடைக்கும். புத்திரர்களால் பெருமை சேரும். உத்தியோத்தில் புதிய நட்பு மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட கூடும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

மீனம்

இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

Today rasi palan 01.11.2017

இன்றைய ராசிப்பலன் –  01.11.2017

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன் cell: 0091  7200163001. 9383763001,

 இன்றைய  பஞ்சாங்கம்

01-11-2017, ஐப்பசி -15, புதன்கிழமை, துவாதசி திதி மாலை 05.57 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 07.40 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் காலை 07.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சந்தி

 

                திருக்கணித கிரக நிலை

01.11.2017

ராகு
கேது
சனி சூரிய குரு புதன்  சுக்கி செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  01.11.2017

மேஷம்

இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

சிம்மம்

இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

கன்னி

இன்று வேலையில் உங்கள் திறமைகளுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமா£க இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.

மகரம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

கும்பம்

உங்களுக்கு இன்று பணவரவு சுமாராகத்தான் இருக்கும். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பண பிரச்சினையை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும்.

Today Rasi palan 31.10.2017

இன்றைய ராசிப்பலன் –  31.10.2017

முனைவர் முருகு பால முருகன்  cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

31-10-2017, ஐப்பசி -14, செவ்வாய்கிழமை, ஏகாதசி திதி மாலை 06.56 வரை பின்பு வளர்பிறை துவாதசி. சதயம் நட்சத்திரம் காலை 07.37 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 0. ஏகாதசி விரதம். பெருமாள் – முருக வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 சந்தி  திருக்கணித கிரக நிலை

31.10.2017

ராகு
கேது
சனி சூரிய குரு புதன்  சுக்கி செவ்

 

இன்றைய ராசிப்பலன் – 31.10.2017

மேஷம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நட்பு உண்டாகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலையில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தையில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கன்னி

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் அனுபவமுள்ள பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைபடலாம். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சனை ஓரளவு குறையும்.

விருச்சிகம்

இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள்.

தனுசு

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வரும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமற்ற பலன் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளிப்பீர்கள். தெய்வ வழிபாடு நல்லது.

Today Rasi palan 30-10-2017

இன்றைய ராசிப்பலன் –  30.10.2017

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை — 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 இன்றைய  பஞ்சாங்கம்

30-10-2017, ஐப்பசி -13, திங்கட்கிழமை, தசமி திதி இரவு 07.04 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அவிட்டம் நட்சத்திரம் காலை 06.44 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 சந்தி  திருக்கணித கிரக நிலை

30.10.2017

ராகு
கேது
சனி சூரிய குரு புதன்  சுக்கி செவ்

 

 

இன்றைய ராசிப்பலன் –  30.10.2017

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை கூடும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கடன்கள் குறையும்.

கடகம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.  வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

சிம்மம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபம் பெருகும்.

கன்னி

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

இன்று எதிர்பாராத பணவிரயங்கள் கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் பிரச்சனைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

Today Rasi palan 29.10.2017

இன்றைய ராசிப்பலன் –  29.10.2017

இன்றைய  பஞ்சாங்கம்

29-10-2017, ஐப்பசி -12, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி மாலை 06.21 வரை பின்பு வளர்பிறை தசமி. நாள் முழுவதும் அவிட்டம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1/2. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

                திருக்கணித கிரக நிலை

29.10.2017

ராகு
சந்தி கேது
சனி சூரிய குரு புதன்  சுக்கி செவ்

இன்றைய ராசிப்பலன் –  29.10.2017

மேஷம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.

கடகம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடல்நிலை சீராகும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனை தீரும்.

கன்னி

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன நிம்மதி குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.  வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.

மகரம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணி சுமை குறையும்.

மீனம்

இன்று எந்த ஒரு செயலிலும் ஈடுபாடில்லாமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

Today rasi palan 28-10-2017

இன்றைய ராசிப்பலன் –  28.10.2017

முனைவர் முருகு பால முருகன்   cell: 0091  7200163001. 9383763001,

 இன்றைய  பஞ்சாங்கம்

28-10-2017, ஐப்பசி -11, சனிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.51 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 05.03 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். வாஸ்து நாள் காலை 7.47 மணி முதல் 8.23 மணி வரை. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

                திருக்கணித கிரக நிலை

28.10.2017

ராகு
சந்தி கேது
சனி சூரிய குரு புதன்   சுக்கி செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  28.10.2017

மேஷம்

இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாரத்ததை விட லாபம் பெருகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

சிம்மம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

துலாம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணி சுமை கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் முன்னேற்றமும் லாபமும் ஏற்படும்.

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.

மகரம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று சுபசெய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். வியாபாரத்தில்  கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை தரும்.

மீனம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். நினைத்த காரியம் நிறைவேறும்.

November Month Rasi palan 2017

 நவம்பர் மாத ராசிப்பலன் – 2017

ராகு
 

கேது 

   

 

சனி  குரு

புதன் 

சூரிய

செவ் சுக்கி

கிரக மாற்றம்

02-11-2017 விருச்சிகத்தில் புதன் அதிகாலை 12.44 மணிக்கு 

02-11-2017 துலாத்தில் சுக்கிரன் இரவு 12.00 மணிக்கு

16-11-2017 விருச்சிகத்தில் சூரியன் பகல் 12.22 மணிக்கு

24-11-2017 தனுசில் புதன் பகல் 01.54 மணிக்கு

26-11-2017 விருச்சிகத்தில் சுக்கிரன் இரவு 10.09 மணிக்கு

30-11-2017 துலாத்தில் செவ்வாய் அதிகாலை 05.21 மணிக்கு

மேஷம்  அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, முன் கோபம் அதிகம் இருந்தாலும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட உங்களுக்கு இம்மாதம் ஜென்ம ராசிக்க 6-ல் செவ்வாய், 7ல்  குரு  சஞ்சாரம்  செய்வதால்  பொருளாதார  நிலை  சிறப்பாகஇருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாதகோளான சூரியன் சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவினை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களின் வருகை மன மகிழ்ச்சியை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் தடையின்றி கை கூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலித்துவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் சற்ற கடின முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம்.  சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  18.11.2017 மதியம் 12.50 மணி முதல் 20.11.2017 இரவு 12.44 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 6-ல்  சூரியன்  சஞ்சாரம்  செய்வதும்ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றுவதால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உறவினர்களும் சில நேரங்களில் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலமான பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலைபளு கூடுதலாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பரிகாரம்.  இம்மாதம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  20.11.2017 இரவு 12.44 மணி முதல் 23.11.2017 பகல் 01.41 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ஆம்  பாதங்கள்,  திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் 

  அன்புள்ள மிதுன ராசி நேயர்களே மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி காரியங்களை சாதித்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5-ல் குரு சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். தொழிலாளர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். விளையாடும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்.  சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம்  23.11.2017 பகல் 01.41 மணி முதல் 26.11.2017 அதிகாலை 01.59 வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய் 6-ல்  சனி  சஞ்சாரம்  செய்வது  நல்ல  அமைப்பு  என்றாலும்  சூரியன் சாதகமற்று சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளை தாண்டி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். முன் கோபத்தை குறைப்பது முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடுவதில் சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.

பரிகாரம்.  ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  26.11.2017 அதிகாலை 01.59 மணி முதல் 28.11.2017 பகல் 11.17 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே வைராக்கியமான குணமும், வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 3-ல்  குரு  சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6-ல்  கேது  சஞ்சரிப்பதும்  மாத முற்பாதியில் 3-ல்  சூரியன்  சஞ்சாரம்  செய்வதும்  ஓரளவுக்கு  நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவும் என்றாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை நிலவும்.

பரிகாரம். குரு ப்ரீதி, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  01.11.2017 அதிகாலை 01.46 மணி முதல் 03.11.2017 அதிகாலை 05.33 மணி வரை.  மற்றும் 28.11.2017 பகல் 11.17 மணி முதல்  30.11.2017 மாலை 04.17 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும், அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் குரு 11-ல்  ராகு  சஞ்சாரம்  செய்வதும்   மாத பிற்பாதியில் 3-ல்  சூரியன்  சஞ்சாரம்  செய்ய  இருப்பதும்  அற்புதமான  அமைப்புஎன்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அவர்களால் சாதகப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக அமைவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்களுக்கு அரசு வழியில் கல்விக்காக உதவிகள் கிட்டும்.

பரிகாரம். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்  03.11.2017 அதிகாலை 05.33 மணி முதல் 05.11.2017 காலை 06.32 மணி வரை.மற்றும்  30.11.2017 மாலை 04.17 மணி முதல் 02.12.2017 மாலை 05.32 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் ஜென்ம ராசியில் சூரியன், 12-ல்  செவ்வாய்  சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது  நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகி ஒற்றுமை குறைவு ஏற்படும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சனைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால்  மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  05.11.2017 காலை 06.32 மணி முதல் 07.11.2017 காலை 06.44 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாதகோளான சூரியன் சாதகமற்று சஞ்சரித்தாலும் ஜென்ம ராசிக்கு 3-ல் கேது 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது ஓரளவுக்கு  சாதகமான  அமைப்பு  என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் தடையின்றி வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுத்தால் தேவையற்ற பிரசங்சனைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்திலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.

பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை மேற்கொள்வது சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  07.11.2017 காலை 06.44 மணி முதல் 09.11.2017 காலை 08.03 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, சூரியன் 10-ல் செவ்வாய்  சஞ்சாரம்  செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. எடுக்கும் சுபகாரியங்களில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.  தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். சற்று அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். நல்ல நட்புகள் தேடி வரும்.

பரிகாரம். விநாயகரையும் அம்மனையும் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  09.11.2017 காலை 08.03 மணி முதல் 11.11.2017 பகல் 11.44 மணி வரை.

மகரம்    உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 10-ல் புதன் சஞ்சாரம் செய்வதும் நல்ல  அமைப்பு  என்றாலும் குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் தேவையற்ற வீண் செலவுகள் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்க தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாகவே செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் தடையின்றி வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கப் பெறும். வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம்.

பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை மேற்கொள்வது தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  11.11.2017 பகல் 11.44 மணி முதல் 13.11.2017 மாலை 06.02 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே வேகமாக பேசினாலும், திருத்தமாகவும், திறம்படவும் பேசக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பது உடல்  ஆரோக்கியத்தில்  சிறுசிறு  பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் 9-ல் குரு 6-ல் ராகு  சஞ்சாரம் செய்வதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மன¬வியிடையே ஒற்றுமை பலப்படும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே மறையும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  13.11.2017 மாலை 06.02 மணி முதல் 16.11.2017 அதிகாலை 02.32 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே மற்றவர்களின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7-ல் செவ்வாய் 8-ல் குரு சூரியன் சஞ்சாரம்  செய்வது  சாதகமற்ற  அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயங்களை அடையலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் விலகி புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயரதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும்.  தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். 

பரிகாரம். சிவ பெருமானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  16.11.2017 அதிகாலை 02.32 மணி முதல் 18.11.2017 மதியம் 12.50 மணி வரை

சுப முகூர்த்த நாட்கள்

01.11.2017 ஐப்பசி 15 ஆம் தேதி புதன்கிழமை துவாதசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

02.11.2017 ஐப்பசி 16 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

03.11.2017 ஐப்பசி 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

09.11.2017 ஐப்பசி 23 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டிதிதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். தேய்பிறை

16.11.2017 ஐப்பசி 30 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம்.தேய்பிறை

23.11.2017 கார்த்திகை 07 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமிதிதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

29.11.2017 கார்த்திகை 13 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை