குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – மிதுனம்

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – மிதுனம்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

மிதுனம்   மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

நல்ல அறிவாற்றலும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஆண்டுக்கோளான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்)  ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாவதோடு, கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு கண்ட சனி நடைபெறுகிறது. தற்போது 2,8- ல் சஞ்சரிக்கும் சர்ப கிரகங்களான ராகு, கேது 13-2-2019 முதல் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாவதால் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் நிம்மதி குறைவுகள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின்பே நற்பலனை அடைய முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். குருபார்வை 2, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, பெரிய தொகைளை ஈடுபடுத்தி புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலங்கள் அதிகரிக்கும். உத்தியோகம் செய்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வாய்ப்புக்காக காத்து இருக்காமல் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்

ஆரோக்கியம் ஓரளவுக்குத் தான் சிறப்பாக அமையும். வயிறு கோளாறு உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்பு, ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். மனைவி பிள்ளைகளுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் வம்பு பிரச்சினைகள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். 

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே அடிக்கடி உண்டாக கூடிய வாக்கு வாதங்களால் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களும் தேவையே இல்லாமல் வம்பு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவே கஷ்டபட வேண்டியிருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். புத்திர வழியிலும் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.

கமிஷன்- ஏஜென்சி

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் எச்சரிக்கை தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றில் ஈடுபடாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடலாம்.

தொழில் வியாபாரம்

தொழிலில் நிறைய நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் தொழிலில் மந்த நிலை நிலவும். கூட்டாளிகள் ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் வேலையாட்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் நெருக்கடிகள் தொடரும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எவ்வளவு தான் சோதனைகளை சந்தித்தாலும் எதையும் எதிர்கொண்டு லாபங்களை பெறக்கூடிய அளவிற்கு ஆற்றலையும் துணிவையும் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்

பணியில் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். உயரதிகாரிகளின் நெருக்கடி அதிகரிப்பதால் வேலை பளு அதிகரிக்கும். அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல் நிலை சோர்வடையும். சில நேரங்களில் வீண்பழிச் சொற்களும் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். திறமைகளை வெளிபடுத்த இயலாமல் தடைகள் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய உயர்வுகளையும் பிறர் தட்டி செல்வார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற பணி அமைவதில் தடைகள் உண்டாகும்.

அரசியல்

பணவரவுகளுக்கு தடைகள் நிலவினாலும் பதவிக்கு இடையூறு வராது. உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் செயல்படுவதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் உத்தமம். கட்சி பணிகளுக்காக அலைச்சல்கள் அதிகரிக்கும். மறைமுக வருவாய்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும் என்பதால் எதிலும் அதிக கவனம் தேவை. மக்களின் ஆதரவை பெற அவர்களின் தேவையறிந்து செயல்படுவது மிகவும் உத்தமம். எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. எதிரிகளின் பலம் அதிகரித்து உங்களின் பலம் குறையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது. சிறிது லாபத்தைக் காணவே நிறைய பாடுபட வேண்டியிருக்கும். கால் நடைகளாலும் வீண் விரயங்கள் உண்டாகும். அரசு வழியில் சுமாரான உதவியே கிடைக்கும். பூமி, நிலம் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகளிடையே வீண் விரோதம் உண்டாகும். தேவைக்கேற்ற வேலை ஆட்கள் கிடைக்காமல் நடக்க வேண்டிய வேலைகள் தடைப்படும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் தேவையற்ற பிடிவாதங்களை தளர்த்தி கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதே நல்லது. வரவேண்டிய சம்பள பாக்கிகளில் தாமதநிலை ஏற்படுவதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் உத்தமம். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் ஏற்படகூடிய காலம் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு பிரச்சினைகளை உண்டாக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் போது  பேச்சில் நிதானம் தேவை. திருமணம் போன்ற சுப காரியங்களான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. புத்திரர்களால் சில நேரங்களில் மனசஞ்சலங்கள் உண்டாக கூடும். பணவரவுகள் சுமாராகவே இருக்கும் என்பதால் ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் மந்த நிலைகள் ஏற்பட கூடும் என்றாலும் விடாமுயற்சியுடன் பாடுபட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்த்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும். வீணான பொழுது போக்குகள் உங்களின் மனநிலையை மாற்றுவதுடன் வீண் சஞ்சலங்களையும் ஏற்படுத்தும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற எதிர்நீச்சல் போட வேண்டும். பணவரவுகள் ஒரளவுக்கு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது, பண விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. சனி 7-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போட்டிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். குரு பகவானை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

குருபகவான் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6-ல்  சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது. அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்தநிலை உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். சர்பகிரகங்களும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதாரநிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

குருபகவான் உங்கள் ராசியாதிபதி புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6-ல் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் ஓரளவுக்கு நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சனி 7-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் எதையும் சமாளித்து விட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சனைகளால் நடக்க விருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். வரும் 13-2-2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

இக்காலங்களில் குருபகவான் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 7-ல் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபத்தினைப் பெற முடியும்-. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். சர்ப சாந்தி செய்வது ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

குரு இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் சகல விதத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த உயர்வுகளை அடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் லாபம் தாமதப்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை

குருபகவான் ராசியாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சனி கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற மனசஞ்சலங்களை சந்திக்க நேரிடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். துர்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது. கண்டசனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது வெங்கடாசலபதி வழிபாடு மேற்கொள்வது நல்லது. 13-02-2019 முதல் சர்பகிரகங்கள் சாதமின்றி சஞ்சரிக்க இருப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம். ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது சிறப்பு.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8,             நிறம் – பச்சை, வெள்ளை,        கிழமை – புதன், வெள்ளி

கல் – மரகதம்             திசை – வடக்கு                 தெய்வம் – விஷ்ணு

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 ரிஷபம் 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதிலும், அழகாக தன்னை அலங்கரித்து கொள்வதிலும், அதிக ஆர்வம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றக்கூடிய குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்)  உங்கள் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். இதுவரை தடைபட்டு கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் அனைத்தும் கைகூடி தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கும், 3, 11-ஆம் வீடுகளுக்கும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் ராகு- கேது மாற்றத்தால் ராகு 2-ஆம் வீட்டிலும் கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உங்களுக்கு அஷ்டம சனி தொடருவதால் எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம் என்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவார்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்படுவது கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மூலம் நற்பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அவ்வபோது சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் சிறிது மருத்துவ செலவுகளுக்கு பின் குணமாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வயதில் மூத்தவர்களாலும் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடலாம். தூரத்து உறவினர்கள் அல்லது வயதானவர்கள் மூலம் மன கவலை ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடபுடலாக நிறைவேறி மகிழ்ச்சியை உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு, சுப நிகழ்ச்சி போன்றவை நடைபெறும். கடந்த கால கடன்களும் படிப்படியாக குறையும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. நெருங்கியவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் அவர்களால் அனுகூலங்களை பெற முடியும். வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும்.

கமிஷன்- ஏஜென்சி

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளாலும் சாதகமான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில தடைகள் ஏற்பட்டாலும் தாமதங்களுக்கு பிறகு வசூலித்து விட முடியும். வம்பு வழக்குகளில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள்.

தொழில் வியாபாரம்

தொழிலில் நிறைய போட்டிகளை சந்தித்தாலும் கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள். தொழிலை விரிவு செய்வதற்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் சற்று அலைச்சல் டென்ஷன்கள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்த சேரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால்  அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

உத்தியோகம்

பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயர்வுகள் தடைப்படாது. உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருப்பர்களின் ஒத்துழைப்புகளும் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடும். பணி நிமித்தமாக இடமாற்றங்களும் உண்டாக கூடும். புதிய வேலை தேடுபவர்களும் தகுந்த வாய்ப்பினை பெறுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவு சிறப்பாக இருக்கும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு சற்று ஏற்ற இறக்கமான பலன்களே கிட்டும். பதவிக்கோ, மக்களின் ஆதரவுக்கோ குறை இருக்காது என்றாலும் கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் திறம்பட செய்து முடிக்க முடியும்.

விவசாயிகள்

விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பதால் லாபமும் சிறப்பாகவே அமையும். பொருளாதார மிகுதியால் பூமி, மனை, வாங்குவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலப் பலன் உண்டாகும். பங்காளிகளிடையே இருந்த பிரச்சினைகள் யாவும் விலகி ஒற்றுமை பலப்படும். கடன்கள் குறையும்.

கலைஞர்கள்

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடிய வாய்ப்புகள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சில நேரங்களில் போட்டிகளும், பணவரவுகளில் நெருக்கடிகளும் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பயணங்களாலும் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். வீடு, கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிப்புகள் பெருகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

மாணவ மாணவியர்

மாணவர்கள் கல்வியில் நல்ல மேன்மையினை அடைய முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவித் தொகைகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும். விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் சாதனைகளை செய்வீர்கள்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் குரு தனது சொந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். 8-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வதால் எல்லா வகையிலும் நன்மைகள் கிட்டும்.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

ஜென்ம ராசிக்கு 7-ல் குருபகவான் உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

இக்காலங்களில் ஜென்ம ராசிக்கு 7-ல் குருபகவான் தன, பஞ்சம ஸ்தானாதிபதியான புதனின் நட்சத்திரத்தில்  சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடை யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அஷ்டமசனி நடைபெறுவதும் வரும் 13.2.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் ராகு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை, கை, கால் அசதி, சோர்வு போன்றவை ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது.  மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. 

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

இக்காலங்களில் குருபகவான் தன் சொந்த வீடான தனுசு ராசியில் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சாரம் செய்வதாலும், அஷ்டமசனி நடைபெறுவதாலும் உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட் பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் வீண் செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதும், அஷ்டமசனி நடைபெறுவதும், சர்பகிரகங்கள் சாதகமன்றி சஞசரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டி வரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வகையில் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது, அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறைவாகவே இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019

குருபகவான் ஜென்ம ராசிக்கு 7-ல் உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது. சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். 13-02-2019 முதல் சர்பகிரகங்கள் சாதமின்றி சஞ்சரிக்க இருப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8             நிறம் – வெண்மை, நீலம்,          கிழமை – வெள்ளி, சனி

கல் –  வைரம்              திசை – தென்கிழக்கு,                  தெய்வம் – விஷ்ணு, லக்ஷ்மி

 

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – மேஷம் 

குரு பெயர்ச்சி பலன்  2018 – 2019 – மேஷம் 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அஞ்சா நெஞ்சம் கொண்டு எதிலும் துணிவுடன் செயல்பட கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் இதுவரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரித்ததால் பல நற்பலன்களை வழங்கினார் என்றாலும் வாக்கிய கணிதப்படி வரும்(திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) 04-10-2018 முதல் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவில் சிறுசிறு நெருக்கடிகளை சந்திப்பீர்கள். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதங்களுக்கு பின்பே கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை உண்டாகி மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மனைவிக்கும் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாக கூடிய சூழ்நிலை ஏற்படும். குருபகவான் 2, 4, 12-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்கு பிறகு நற்பலன் கிடைக்கும். சுக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. சனி பகவான் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அமையும். தந்தை, தந்தை வழி உறவுகளிடைய சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்ப கிரக மாற்றத்தால் ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமான பலனை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும் என்றாலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ள அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் அதனால் மன நிம்மதியும் உண்டாகும். குரு 8-ல் சஞ்சரித்தாலும் உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் எதையும் சமாளித்து விட முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், ஜீரணமின்மை, உடல் சோர்வு, மந்தமான நிலை போன்றவற்றால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவ செலவுகள் உண்டாவதால் மன நிம்மதியற்ற நிலையே நீடிக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் வீண் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறைவு உண்டாகாது.  தந்தை, மற்றும் தந்தை வழி உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவுகள் தாராளமாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள்.

கமிஷன்- ஏஜென்சி

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமிது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதிலேயே வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம்

எடுக்கும் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். அதிகமான உழைப்பினை மேற்கொண்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். போட்டி பொறாமை அதிகரிக்க கூடிய காலம் என்பதால் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்து கொள்வது நல்லது. வேலையாட்களும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். வெளியூர் வெளிநாடு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு அனுகூலங்களை பெற முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு செய்யும் நோக்கங்களை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலைபளு அதிகரிப்பதால் உடல் நிலையில் சோர்வு உண்டாகி அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை சற்று தாமதமாக கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை பிரிய நேரிடும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் சற்று தாமதப்படும்.

அரசியல்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. மக்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு திருப்தியாக இருப்பதால் எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக முயற்சிகளை எதிர்கொள்ள நேரிடும். பத்திரிக்கை செய்திகளாலும் தேவையற்ற வதந்திகளாலும் மன நிம்மதி குறையும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் உழைப்பிற்கேற்ற பலனை பெறமுடியாமல் போகும். பூமி, மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் வம்பு வழக்குகள் ஏற்படும். விளை பொளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். பயிர்களை இன்சூரன்ஸ் செய்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் மானியங்கள் தடைக்குப் பின் கிடைக்கும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்து காத்திருந்த பட வாய்ப்புகள் ஓரளவுக்கு கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகளால் சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். வரவேண்டிய பணத் தொகைகளும் சற்று தாமதப்படுவதால் சில நேரங்களில் கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களிடம் பழகும் போதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும் போதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற கிசு கிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் சில தடைகளுக்கு பின் நிறைவேறும். பணவரவில் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். பிள்ளைகளால் மன சஞ்சலங்களையும் எதிர்கொள்வீர்கள். தங்களுடைய மனக்குறைகளை கூட தகுதியானவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று அதிக கவனம் எடுக்க வேண்டிய காலமாகும். மந்த நிலை, ஞாபக மறதி போன்றவற்றால் மதிப்பெண்கள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது, பெற்றோர் சொல்படி நடப்பது நல்லது. விளையாட்டில் கவனம் தேவை.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை

உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சாரம் செய்வதால் அவ்வளவாக சாதக பலன்களை பெற முடியாது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை

குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 10,11-க்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதும், 9-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று குறையும். கூட்டாளிகளிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் தேடும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவதில் தாமத நிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும், பொழுது போக்குகளையும் தவிர்த்து விடுவது உத்தமம். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை

குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 3, 6 -க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதும், 9-ல் சனி சஞ்சாரம் செய்தும் ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெறும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். 13.2.2019-ல் ஏற்படும் சர்பகிரக மாற்றத்தால் ராகு 3-ல் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை

இக்காலங்களில் குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் தன் சொந்த வீடான தனுசு ராசியில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்றே குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும்  கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை

குரு இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை

ஜென்ம ராசிக்கு 8-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3,6-க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு, 9-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்வர்களாலும் சிறுசிறு மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்யவும். ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9, நிறம் – ஆழ்சிவப்பு                                 கிழமை – செவ்வாய்

கல் – பவளம்               திசை – தெற்கு                           தெய்வம் – முருகன்