விளம்பி வருட பலன்கள் 2018-2019 மீனம் 

விளம்பி வருட பலன்கள் 2018-2019

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

கம்பீரமான தோற்றமும், பிறரை வசீகரிக்க கூடிய அழகான உடல் அமைப்பும் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் முழுவதும் சனிபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், உங்கள் ராசியாதிபதி குருபகவான் ஆண்டின் முற்பாதியில் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் கேது பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பண வரவுகள் சுமாராகத்தான் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் உண்டாக கூடிய தேவையற்ற வாக்கு வாதங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு வேலைபளு அதிகரிப்பதோடு தேவையற்ற பிரச்சினைகளையும் சந்திக்க கூடிய நிலை ஏற்படும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனுகூலமற்ற பலன்களை சந்திக்க நேரிடும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேற கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை, பொருளாதார ரீதியாக உயர்வுகள், கடன்கள் படிப்படியாக குறைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பொன் பொருள் சேரும். வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய அமைப்பு உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். உத்தியோக ரீதியாக எதிர்பாராத உயர்வுகளை அடைவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்.

உடல் ஆரோக்கியத்தில் ஒரளவுக்கு சிறப்பான நிலை இருக்கும் என்றாலும் அடிக்கடி ஏதாவது சிறு சிறு பாதிப்பு உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் ஏற்பட்டு சேமிப்புக் குறையும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது மூலம் மன நிம்மதி உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை;

பணவரவுகள் திருப்தியளிப்பதாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் புரட்டாசி மாதத்திற்கு பிறகு கைகூடும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குழந்தை பாக்கியமும் உண்டாகும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். முடிந்த வரை உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கொடுக்கல்வாங்கல்

ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்த்த லாபத்தை பெறுவதில் இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு சரளமான நிலை உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போதும், பண விஷயத்தில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுக்கும் போதும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எந்தவொரு புதிய முயற்சிகளிலும் வீண் இழப்புகளை சந்திக்க நேரிடும். ஆண்டின் முற்பாதியில் நெருக்கடி நிலையை சந்தித்தாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு படிப்படியான முன்னேற்றத்தை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிட்டும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் முற்பாதியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் நிம்மதி குறைவு ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பே கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

பெண்கள்

குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். புத்திர வழியில் சிறுசிறு மனச் சஞ்சலங்கள் தோன்றி மறையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் நல்ல வரன்கள் தேடி வரும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது.

அரசியல்

எடுக்கும் எந்தவொரு பணியையும் சிறப்பாகச் செய்து முடிக்க முடியாமல் மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். பத்திரிகைகளால் உங்களுக்கு அவப்பெயர்கள் உண்டாகும். வரும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு  பொருளாதார நிலை மேம்படும். செல்வாக்கு உயரும். எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கும். மேடை பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது, உடனிப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமையும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று இருந்தாலும் எதையும் சமாளிப்பீர்கள். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சியை தரும். எல்லா வகையிலும் லாபங்களையும் முன்னேற்றங்களையும் பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்

ஆண்டின் தொடக்கத்தில் மற்றக் கலைஞர்களுடன் ஏற்படும் போட்டிகளால் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு உங்களுக்கு அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கும். வரவேண்டிய பணத்தொகைகள் சில தடைகளுக்குப் பின் வந்து சேரும். படபிடிப்புகளுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். கார், பங்களா போன்றவற்றை வாங்க முடியும்.

மாணவமாணவியர்

கல்வியில் அதிக ஈடுபாடு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஒரளவுக்கு முன்னேற்றப் பலனை அடைய முடியும். சிலருக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புக்கள் ஏற்பட்டு பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நல்ல நண்பர்களாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. வியை£ட்டு போட்டிகளில் பரிசுகளை தட்டி செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிட்டும்.

சித்திரை

தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது பிரச்சினைகளை குறைக்கும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும். துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

வைகாசி 

முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பெற சற்றே தாமத நிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

ஆனி 

ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் இடமாற்றங்களும், உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். குருபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

ஆடி 

இம்மாதம் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், 11-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு அனுகூலங்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடிகள் நிலவினாலும் மந்தநிலை ஏற்படாது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி

இம்மாதம் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் சூரியன், 11-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். நவீன பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குருபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

புரட்டாசி 

இம்மாதம் ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் குரு, சுக்கிரன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் உங்கள் ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு 9-ல் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

ஐப்பசி 

ஜென்ம ராசிக்கு 9-ல் குரு, 11-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

கார்த்திகை 

ராசிக்கு 9-ல் குரு, புதன் 11-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும். உற்றார், உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். எதிர்பாராத தனவரவுகளால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மார்கழி 

ராசிக்கு 9-ல் குரு, புதன் 10-ல் சூரியன், 11-ல் கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

தை 

இம்மாதம் உங்கள் ராசிக்கு 9-ல் குரு, சுக்கிரன், 11-ல் சூரியன், கேது சஞ்சாரம் செய்வதால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துகள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் சிறப்பான லாபம் அமையும். கடன்கள் யாவும் குறையும். உடல் நிலையில் சற்றே கவனம் செலுத்தவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

மாசி

உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 10-சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். 2-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியும் பெருகும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 10-கேது சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்று கூற முடியாது. முருக வழிபாடு செய்வது நல்லது.

பங்குனி 

ராசிக்கு 9-ல் ராசியாதிபதி குரு, 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பு என்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும் பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நற்பலனை உண்டாக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்    – 1,2,3,9,

கிழமை  – வியாழன், ஞாயிறு

திசை   – வடகிழக்கு

நிறம்    – மஞ்சள், சிவப்பு

கல்     – புஷ்ப ராகம்

தெய்வம் – தட்சிணாமூர்த்தி

 

விளம்பி வருட பலன்கள் 2018-2019 கும்பம் 

விளம்பி வருட பலன்கள் 2018-2019

கும்பம்  அவிட்டம் 3,4-ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்

பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் முழுவதும் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதுமட்டுமின்றி ராகு பகவான் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் முற்பாதியில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நற்பலன்களை அள்ளி தரும் காலமாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறி மட்டில்லா மகிழ்ச்சியினை அடைவீர்கள்.

பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சுபகாரியங்களும் கைகூடக்கூடிய வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். உற்றார், உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கிருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி உங்கள் பலமும் வலிமையும் கூடும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் மேற்கொள்ளும் பயணங்களால் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு நல்ல பெயரை எடுப்பார்கள். எதிர்பார்க்கும் உயர் பதவிகளும், ஊதிய உயர்வுகளும், இட மாற்றங்களும் கிடைக்கப் பெறும். வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு சிறுசிறு போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஆண்டின் பிற்பாதியில் சற்று கவனமுடன் செல்படுவது நல்லது.

உடல் ஆரோக்கியம்;

உடல் ஆரோக்கியத்தில் இருந்த கடந்த கால பாதிப்புகள் விலகி சிறப்பான ஆரோக்கியத்தை பெறுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியினை அடைவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் நோயின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை;

திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்த உறவினர்கள் தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கடன்கள் யாவும் குறையும். பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத மகிழ்ச்சி தரும் சுபசெய்திகள் வந்து சேரும்.

கொடுக்கல்வாங்கல்

காண்டிராக்ட் கமிஷன் ஏஜென்சி போன்ற துறைகளில் சிறப்பான லாபம் கிடைக்கும். போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருப்பதால் பண புழக்கம் சிறப்பாக இருக்கும். கொடுத்த பணத்தை தடையின்றி வசூலிக்க முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பும் நட்பும் நற்பலனை உண்டாக்கும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளை பெற முடியும்.  தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் மேலும் முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு வழியில் கடனுதவி கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் வேலைபளு குறைவதால் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் அபிமானியாக மாறுவீர்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலன்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.

பெண்கள்

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். மணவயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் பூரிப்பினை பெறுவீர்கள். பணவரவுகள் சரளமாக இருப்பதால் சேமிக்க முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலம் உண்டாகும். உற்றறர் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

அரசியல்

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகளை பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பாராத கௌரவ பதவிகள் தேடி வரும். கட்சி பணிகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதோடு அவர்களின் ஆதரவைப் தொடர்ந்து பெறுவதற்காக புதுபுது முயற்சிகளை கையாள்வீர்கள். பணவரவுகளும் தாராளமாக இருக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருப்பதால் சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலை கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகளும் கிடைக்கும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வேலையாட்களின் உதவி கிடைக்கும். பொருளதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் புதிய வாய்ப்புகள் மூலம் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்து சேரும். சொகுசு கார், பங்களா போன்றவற்றை வாங்க முடியும். நடிப்பு துறையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இசை, நடனம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.

மாணவமாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பினை பெறுவீர்கள். உடன் பயிலும் மாணவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். விளையாட்டு போட்டிகளிலும் வெற்றிகளை தட்டி செல்ல முடியும். அரசு வழியில் எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கும். நினைத்த கல்வியினை தேர்ந்தெடுத்து படிக்க முடியும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும்.

சித்திரை

முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் ராகு, 9-ல் குரு 11-ல் செவ்வாய், சனி சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகம் அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். அரசு வழியில் அனுகூலங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர்களுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

வைகாசி 

பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு, 9-ல் குரு, 11-ல் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

ஆனி 

ராசிக்கு 5-ல் புதன் 6-ல் சுக்கிரன், ராகு, 9-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உடல் நிலை சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பயணங்களால் புதிய அனுபவங்கள் கிட்டும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

ஆடி 

ராசிக்கு 6-ல் ராகு, சூரியன், 9-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளும் சாதகமாக இருப்பார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி 

இம்மாதம் ராசிக்கு 6-ல் ராகு, புதன், 9-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

புரட்டாசி 

ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்றாலும் 8-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையே பெற முடியும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.

ஐப்பசி 

ராசிக்கு 9-ல் சுக்கிரன், புதன், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமத நிலை நிலவும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் லாபங்களை பெற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

கார்த்திகை 

இம்மாதம் ராசிக்கு 10-ல் சூரியன், புதன் 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பெருகும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்து நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்யவும்.

மார்கழி

ஜென்ம ராசிக்கு 9-ல் சுக்கிரன், 11-ல் சனி, சூரியன் சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் உண்டாகி புதிய வாய்ப்புகள் கிட்டும். உடல் நிலை ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

தை 

ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சனி, புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளும் சாதகமாக இருப்பார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

மாசி

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் 11-ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன்பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ஜென்ம ராசிக்கு 11-ல் கேது சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

பங்குனி

தன ஸ்தானமான 2-ல் புதன், 3-ல் செவ்வாய் 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். நவீன பொருட் சேர்க்கைகள் அமையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலித்து விட முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  – 5,6,7,8,

கிழமை – வெள்ளி, சனி

திசை  – மேற்கு

நிறம்  – வெள்ளை, நீலம்

கல்   – நீலக்கல்

தெய்வம் – ஐயப்பன்

 

விளம்பி வருட பலன்கள் 2018-2019 மகரம்

விளம்பி வருட பலன்கள் 2018-2019

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்

எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய லட்சியங்களைத் தவறாமல் நிறைவேற்றக் கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் முழுவதும் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் விரயசனி நடைபெறுகிறது. ஆண்டின் முற்பாதியில் ஆண்டு கோளான குரு பகவான் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதுமட்டுமின்றி ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும். தொழில், உத்தியோகம் செய்பவர்களும் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.  கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் அனுகூலமற்ற பலன்களை சந்திக்க நேரிடும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக இருந்த முடக்கங்கள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் அமையும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி சரளமான நிலை இருக்கும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். வம்பு வழக்குகளில் சாதகமானப் பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அமையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. உங்களுக்கு ஏழரை சனியில் விரயசனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் புரட்டாசி மாதம் ஏற்படவிருக்கும் குருப் பெயர்ச்சியால் ஒரளவுக்கு சாதகமானப் பலன்களை அடைய முடியும். குடும்பத்தில் இருக்க கூடிய மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சி அளிக்கும். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.

கொடுக்கல்வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் ஆண்டின் தொடக்கத்தில் வீண் விரயங்களை எதிர் கொண்டாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. புரட்டாசி மாதத்திற்கு பிறகு எதிலும் மேன்மையான பலன்களை பெற முடியும். நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் எதிர்பார்த்த லாபங்களை பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். பயணங்களால் சாதகப்பலன்கள் கிடைக்கும்.

உத்தியோகம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் பிற்பாதியில் அனுகூலப் பலனை பெற முடியும். பணியில் திறம்பட செயல்படுவதால் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும்.  வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. சில நேரங்களில் சிறுசிறு தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும்.

பெண்கள்

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் தடைகள் நிலவினாலும் பிற்பாதியில் ஒரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகி கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை.

அரசியல்

ஆண்டின் தொடக்கத்தில் பலவித சோதனைகளை சந்திக்க நேர்தாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு படிப்படியான முன்னேற்றத்தை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் எதிர்நீச்சல் போட்டாவது முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். அலைச்சல் அதிகரிப்பதால் ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது மிகவும் நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் நீர்வரத்து குறையும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினை பெறுவீர்கள். புதிய பூமி, மனை, நவீன கருவிகள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். கடன்கள் குறையும்.

கலைஞர்கள்

தேவையற்ற பிரச்சினைகளால் பெயர், புகழ் மங்க கூடிய சூழ்நிலைகள் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டாலும் பிற்பாதியில் ஒரளவுக்கு நல்ல வாய்ப்புகளை பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டாலும் பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். பொருளாதாரநிலை சிறப்படையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகி உடல் நலம் பாதிப்படையும்.

மாணவமாணவியர்

கல்வியில் சற்று மந்த நிலை ஏற்படும் என்பதால் கடும் முயற்சிகளை மேற்கொள்வது நல்வது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் இருப்பது சிறப்பு. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் ஆண்டின் பிற்பாதியில் கிடைக்கும். உடல் நிலை சற்று பாதிப்படையும். நல்ல நண்பர்களாக தேர்ந்தெடுத்து பழகுவது நல்லது.

சித்திரை 

உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிவரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும். சிவ பெருமானை வழிபடவும்.

வைகாசி 

இம்மாதம் ஜென்ம ராசிக்கு 4-ல் புதன், 6-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் மறைமுக எதிர்ப்புகள் குறையும். கணவன்– மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வர வேண்டிய லாபம் வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது சிறப்பு. முருகப் பெருமானை வழிபடவும்.

ஆனி 

உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு  என்பதால் பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கணவன்– மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை தடையின்றி வசூலித்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபடவும்.

ஆடி 

ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 7-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமலிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி

ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு செலவுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைபளுவும் குறையும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதன் மூலம் அலைச்சல்களை தவிர்க்கலாம். சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.

புரட்டாசி 

ராசிக்கு 9-ல் சூரியன், 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிக்க இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் முன்னேற்றங்கள் ஏற்படும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

ஐப்பசி 

ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்– மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

கார்த்திகை 

இம்மாதம் ராசிக்கு 11-ல் குரு, சூரியன், புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது யாவும் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

மார்கழி 

ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்– மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

தை 

உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் நற்பலன்களைப் பெற முடியும். தாராள தனவரவுகள் உண்டாவதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களை அடைவீர்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

மாசி 

தன ஸ்தானமான 2-ல் புதன், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

பங்குனி 

முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் ராகு, 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்களும் கூட்டாளிகளும் அனுகூலமாக செல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தினமும் வினாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண்  – 5,6,7,8

கிழமை – சனி, புதன்

திசை  – மேற்கு

நிறம்  – நீலம், பச்சை

கல்   – நீலக்கல்

தெய்வம் – ஐயப்பன்

 

விளம்பி வருட பலன்கள் 2018-2019 தனுசு 

விளம்பி வருட பலன்கள் 2018-2019

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

எதையும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து அறியும் திறமை கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடத்தின் முற்பாதியில் உங்கள் ராசியாதிபதி குரு பகவான் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் நற்பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அழகான புத்திர பாக்கியம் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சிலருக்கு பூமி மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும்.

சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருகிறது. இதனால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் தான் வெற்றியினை அடைய முடியும். இது மட்டுமின்றி 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதும், வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகளால் கடன்கள் உண்டாகக் கூடிய சூழ்நிலை உண்டாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாக கூடிய தேவையற்ற வாக்கு வாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு அதிக மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். ஆன்மீக, தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குருபகவான் ஆண்டின் பிற்பாதியில் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ராசியாதிபதியாகி தனக்கு நட்பு வீடான செவ்வாய் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடிகளையும் சமாளித்து ஏற்றம் பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புக்கள் தோன்றினாலும், சில மருத்துவ செலவுகளுக்குப் பின் குணமடையும். குடும்பத்தில் உள்ளவர்களால் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் தேவையற்ற பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். நெருங்கியவர்களின் ஆதரவு மனநிம்மதியை உண்டாக்கும். திருமண சுபகாரியங்கள் கை கூடும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். முன்கோபத்தைக் குறைத்து கொண்டு எதிலும் நிதானமாக செயல்பட்டால் சாதகப்பலனைப் பெறலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. 

கொடுக்கல்வாங்கல்

கொடுக்கல்- வாங்கல்களில் சரளமான நிலை இருக்கும். பெரிய அளவில் லாபத்தைப் பெறமுடியா விட்டாலும் போட்ட முதலீடுகளுக்கு நஷ்டம் ஏற்படாது. புரட்டாசி மாதம் முதல் சற்று பணவரவுகளில் நெருக்கடிகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது. மற்றவர்களிடம் அவப்பெயர் ஏற்படும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக பொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 

தொழில் வியாபாரம்

இந்த ஆண்டின் முற்பாதியில் தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் நல்ல லாபம் கிட்டும். பயணங்களாலும் ஒரளவுக்கு நற்பலனை பெறமுடியும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் தேடி வந்து லாபம் தரும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு முடிந்த வரை கூட்டாளிகளையும் உடன் இருக்கும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் லாபம் குறையும். 

உத்தியோகம்

ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து வேலைபளு குறையும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு உங்களுக்கு பணியில் தேவையற்ற பிரச்சினைகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பெண்கள்

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால், விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. நெருங்கியவர்களால் தேவையற்ற மனச் சஞ்சலங்கள் உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் புரட்டாசி மாதத்திற்குப் பின் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். புத்திரர்களால் சிறுசிறு மனச் சஞ்சலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

அரசியல்

ஆண்டின் தொடக்கத்தில் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பிறரின் ஏச்சுப் பேச்சுக்களுக்கு செவி சாய்க்காமல், தங்கள் காரியங்களில் கருத்துடன் செயல்படுவது நல்லது. புரட்டாசி மாதத்திற்கு பிறகு நீங்கள் கண்டிப்பாக மேடைப் பேச்சுகளிலும், மற்றவர்களிடமும் பேசும் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைகளில் வரும் தவறான செய்திகளால் மனநிம்மதிக் குறைவுகள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும். வாய்கால் வரப்பு பிரச்சினைகளால் சிறுசிறு வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும்.

கலைஞர்கள்

கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, சரியான நேரத்தில் படபிடிப்பில் கலந்து கொள்வது நல்லது. எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருப்பதால் சற்றே நிம்மதி குறைவு உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பயணங்களால் சற்றே அலைச்சல் அதனால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும்.

மாணவ மாணவியர்

கல்வி பயிலுபவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஞாபகமறதி, கவனக்குறைவு போன்றவற்றால் மதிப்பெண்கள் குறையும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மனநிம்மதி அளிப்பதாக அமையும். பயணங்களில் கவனம் தேவை. தகுதியற்ற நண்பர்களின் சேர்க்கையானது உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்கும். நல்ல நண்பர்களாக தேர்ந்தெடுத்து பழகுவது நல்லது.

சித்திரை 

ஜென்ம ராசியில் செவ்வாய், சனி, 8-ல் ராகு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருக்கும். குரு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வைகாசி 

ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன் 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சினைகள் யாவும் குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமத நிலை உண்டாகும். பொன், பொருள், வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

ஆனி

ஜென்ம ராசிக்கு 7-ல் புதன், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது

ஆடி 

ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத உதவிகள் சிலவற்றை பெற முடியும். பல பொது நலக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் அதன் மூலம் லாபத்தை அடைய முடியும். அசையும் அசையா சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலப் பலனை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.

ஆவணி 

இம்மாதம் ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை ஒரளவுக்கு நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் இல்லாமல் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சற்று மந்தமான  நிலையில் நடைபெற்றாலும் லாபம் கிட்டும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

புரட்டாசி 

ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் ஏற்படும் என்பதால் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்க உள்ளதால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது. 

ஐப்பசி 

ஜென்ம ராசிக்கு 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகி மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பொருளாதாரநிலை சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மூலம் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். எந்தவித போட்டிகளையும் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். வெளியூர் தொடர்புடையவைகளால் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

கார்த்திகை 

இம்மாதம் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். ஜென்ம ராசிக்கு 2-ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும், கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்களும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் தடைப்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.

மார்கழி 

இம்மாதம் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

தை

குடும்ப ஸ்தானமான 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். குரு 12-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பண விஷயங்களில் கவனமுடன் நடந்து கொண்டால் எதையும் சாதிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மாசி

ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

பங்குனி

ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 4-ல் புதன், சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலனை தரும் அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  – 1,2,3,9

கிழமை – வியாழன், திங்கள்,

திசை  –  வடகிழக்கு,

நிறம்  – மஞ்சள், சிகப்பு,

கல்   – புஷ்ப ராகம்,

தெய்வம் – தட்சிணா மூர்த்தி

விளம்பி வருட பலன்கள் 2018-2019 விருச்சிகம்

விளம்பி வருட பலன்கள் 2018-2019

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

பார்ப்பதற்கு வெகுளி போல் இருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் உங்களுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அளிப்பதாகவே இருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் பாதசனி தொடருகிறது. இதுமட்டுமின்றி ஆண்டின் தொடக்கத்தில் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குருபகவான் வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்றாலும் குரு உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகம் என்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்த்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதால் தேவையற்ற மருத்துவ செலவுகளை எதிர் கொள்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது.

கேது பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். மணவயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பிறகு சுபகாரியங்கள் கைகூடும். அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் வீண் செலவுகள் உண்டாக கூடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த பணத்தொகைகளை வசூலிப்பதில் இழுபறியான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியான முன்னேற்றத்ததை அடைவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. கூட்டாளிகள் மற்றும் தொழிளாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தான் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க கூடிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெறும்.

உடல் ஆரோக்கியம்;

தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவற்றால், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடக் கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் அவ்வப்போது சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மன நிம்மதி குறைவுகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ள கூடிய வலிமையும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை;

கணவன்- மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களால் கடன்கள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே அனுகூலப் பலனை அடைய முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

கொடுக்கல்வாங்கல்

கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிறுசிறு பிரச்சனைகளை சந்திப்பீர்கள். கமிஷன், ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்கள் எந்தவொரு புதிய முயற்சியிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டி பொறாமைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் போன்றவை யாவும் உண்டாகும் என்றாலும் நண்பர்கள் மூலம் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெற முடியும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய நவீன கருவிகள் வாங்குவதற்காக எதிர்பார்க்கும் கடனுதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். 

உத்தியோகம்

மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைபளு அதிகரிக்கும். நிறைய நேரம் உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் யாவும் தடை தாமதங்களுக்குப் பின்பே கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகளும் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும்.

அரசியல்

கட்சி பணிக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய நேரிடும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியை பெற முடியும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். மக்களின் ஆதரவைப் பெற அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. எதிர்பார்க்கும் பதவிகள் தாமதப்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் தாமதமாக கிடைக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகளை சமாளித்து விடுவீர்கள். பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. முடிந்த வரை தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. விளைபொருளுக்கேற்ற விலையினை சந்தையில் பெற முடியாமல் போகும்.

கலைஞர்கள்

கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக நிறைய பிரச்சினைகளையும் போட்டிகளையும் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உங்கள் திறமைகளுக்கு தீனி போடும் வகையில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்களை பிறர் தட்டி செல்வதால் சற்றே நிம்மதி குறைவு உண்டாகும். பொருளாதார நிலை எற்ற இறக்கமாக இருக்கும்.

மாணவமாணவியர்

கல்வி பயிலுபவர்கள் சற்று கடின முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூட முடியும். நண்பர்களால் நற்பலன்கள் கிடைக்கும்.

சித்திரை

இம்மாதம் ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 19-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதையும் ஓரளவுக்கு சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் எதையும் சமாளித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் ஓரளவுக்கு எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வைகாசி 

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். விண் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஆதாயங்கள் உண்டு. ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

ஆனி

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதையும் சமாளித்து விட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்கள் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகி வீண் அலைச்சல்கள் ஏற்படும். சனிபகவானை வழிபாடு செய்வது உத்தமம்.

ஆடி

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 9-ல் புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமான அமைப்பு என்பதால் தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையான சூழ்நிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே நற்பலன் அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி

இம்மாதம் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். கூட்டாளிகளும் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபாடு செய்யவும்.

புரட்டாசி 

ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் நிலையும் சுறுசுறுப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும், பொன், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கடன்கள் குறைத்து கண்ணியமான வாழ்க்கை அமையும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்க உள்ளதால் ஒரளவுக்கு நற்பலன் ஏற்படும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

ஐப்பசி 

ஜென்ம ராசியில் குரு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் சிறுசிறு தடைகளுக்குப்பின் வந்து சேரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

கார்த்திகை 

ஜென்ம ராசியில் குரு, சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். புதிய வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப் போகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

மார்கழி 

ஜென்ம ராசியில் குரு, 2-ல் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை சோர்வு போன்றவை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை சற்று அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழிலில் போட்டிகளை எதிர்கொண்டே லாபத்தினைப் பெற முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

தை 

தன ஸ்தானமான 2-ல் புதன், 3-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பிவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

மாசி 

ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், 3-ல் கேது, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் சற்று கவனம் இருப்பது நல்லது. குரு பகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

பங்குனி 

இம்மாதம் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண்    – 1,2,3,9,

நிறம்    – ஆழ்சிவப்பு, மஞ்சள்

கிழமை  – செவ்வாய், வியாழன்

திசை   – தெற்கு

கல்     – பவளம்

தெய்வம் – முருகன்

விளம்பி வருட பலன்கள் 2018-2019 துலாம்

விளம்பி வருட பலன்கள் 2018-2019

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்

மகிழ்ச்சியையோ துக்கத்தையோ பெரிதுபடுத்தாமல் அனைத்தையும் சமமாக பாவிக்கும் பண்பு கொண்ட துலா ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியும், ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமுமான சனிபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் தொழிலாளர்களின் ஆதரவும் மென்மேலும் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் பதவி உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும்.

ஆண்டின் தொடக்கத்தில் பொன்னவன் என போற்றக்கூடிய குருபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை, உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டாலும் வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற பல நாள் கனவுகளும் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். சர்ப கிரகமான கேது 4-ஆம் வீட்டிலும், ராகு 10-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், தொழில் ரீதியாக மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் சனியின் சாதகமான சஞ்சாரத்தால் எந்த விதமான பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் ;

உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் மிகவும் சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பாராத வகையில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் நன்மையான பலன்களே கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் உங்களால் சமாளித்து விட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை;

ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சுமாராக இருந்தாலும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் சிறப்பாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர பாக்கியம் அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன்கள் படிப்படியாக குறையும்.

கொடுக்கல்வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சிந்தித்து செயல்பட்டால் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதிக்கு மேல் மேன்மையான பலன்களை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல்களில் எந்த பிரச்சினையும் இருக்காது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் பல வகையிலும் லாபங்களை பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமானப் பலன்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்பட முடியும். வேலைபளுவும் குறைவாகவே இருக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவமான பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது புரட்டாசி மாதம் 25-ஆம் தேதிக்கு மேல் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிட்டும்.

பெண்கள்

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் கைகூடும். நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

அரசியல்

அரசியல்வாதிகளின் செல்வம், செல்வாக்கு பெயர், புகழ், யாவும் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உடனிருப்பவர்கள் மிகவும் சாதகமாக செயல்படுவார்கள். கட்சியின் வளர்ச்சிக்காக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். எதிர்பார்க்கும் பதவிகளும் தேடி வரும். மறைமுக வருவாய் அதிகரிப்பதால் பொருளாதார நிலை உயரும். 

விவசாயிகள்

பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருப்பதால் சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலைப் பெற்று லாபம் உண்டாகும். பட்டபாட்டிற்கான பலனை தடையின்றி பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். அசையா சொத்து விஷயங்களில் இருந்த தேவையற்ற வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். புதிய நவீன முறைகளை கையாண்டு விளைச்சளை பெருக்கும் ஆற்றல் உண்டாகும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். வரவேண்டிய பணவரவுகள் சற்று இழுபறி நிலையில் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் மேன்மை ஏற்படும். புதிய கார் பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் யாவும் மறையும்.

மாணவமாணவியர்

கல்வி பயிலுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிட்டும். கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றி மேல் வெற்றியினை பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். நல்ல நண்பர்களின் சகவாசத்தால் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். சுற்றுலா தளங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும்.

சித்திரை

ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.  புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

வைகாசி

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 7-ல் புதன் சஞ்சரிப்பதும், ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலிருந்த நெருக்கடிகள் குறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும்.  நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். தொழில் வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைவார்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

ஆனி 

இம்மாதம் ராசிக்கு 3-ல் சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன் சஞ்சரிப்பதும் 10-ல் ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் செல்வம், செல்வாக்கு உயரும். தாராள தன வரவுகளால் பொருளாதார மேம்படும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகளையும் வாங்க முடியும். பூர்வீக சொத்துகளாலும் லாபங்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு மணமாகக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபார செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

ஆடி 

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 10-ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தினை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

ஆவணி

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 10-ல் புதன் 11-ல் சூரியன், சஞ்சாரம் செய்வதால் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெற கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகி சுபிட்சமான நிலையிருக்கும். 7ம் வீட்டை குரு பார்வை செய்வதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை அடைவார்கள்.  தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

புரட்டாசி 

சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டி வரும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகள் நிலவும் என்றாலும் சனி 3-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த லாபத்தினையும் பெற முடியும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

ஐப்பசி 

தன ஸ்தானமான 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வேலைப் பளு குறையும். சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது.

கார்த்திகை 

ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். 2-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். பிரதோஷகால விரதம் இருப்பது நல்லது.

மார்கழி 

இம்மாதம் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 3-ல் சனி, சூரியன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். தினமும் விநாயகரை வழிபடுவது, துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

தை

ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் கடந்த காலப் பிரச்சினைகள் குறையும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

மாசி 

இம்மாதம் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 5-ல் புதன் சஞ்சரிப்பதால் பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி உயர்வுகளும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக இருக்கும். தேக ஆரோக்கியமும் நல்ல முறையில் இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் கேது 3-ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். முருக வழிபாடு செய்வது நல்லது.

பங்குனி 

இம்மாதம் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, கேது 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். முருக வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண்   – 5,6,7,8

நிறம்   – வெள்ளை, பச்சை,

கிழமை – வெள்ளி, புதன்,

திசை   – தென் கிழக்கு,

கல்     – வைரம்

தெய்வம் – லட்சுமி

 

விளம்பி வருட பலன்கள் 2018-2019 -கன்னி

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்

சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய நற்பண்புகளைக் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடத்தின் தொடக்கத்தில் பொன்னவன் என போற்றக்கூடிய குருபகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார ரீதியாக உயர்வான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருவதால் சிறப்பான மணவாழ்க்கை அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.  அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம், இருக்கும் வீட்டை புதுப்பிக்கும் அமைப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகி பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். இது மட்டுமின்றி ராகு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபங்கள் பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் சிறப்பான நற்பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். இடம் விட்டு இடம் மாறக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி 4-ல் சஞ்சரித்து உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், சோர்வு, கை, கால் மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் ராசியாதி புதனுக்கு சனி நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. குரு மாற்றத்திற்கு பிறகு தொழில், உத்தியோக ரீதியாக நெருக்கடிகள், பணவரவில் தடைகள், குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் போன்றவை ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். ஆண்டின் முற்பாதியில் சாதகமானப் பலன்களை அடைந்தாலும் பிற்பாதியில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகள் உண்டாக கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டு சில மருத்துவ செலவுகளுக்குப் பின் குணமாக கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மன நிம்மதி குறையும். பயணங்களாலும் அலைச்சல் டென்ஷன் உடல் சோர்வு உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

பண வரவுகள் ஆண்டின் முற்பாதியில் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். சுப காரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். புத்திரர்களால் சில கவலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் வாழ்வில் நற்பலனை அடைய முடியும்.

கொடுக்கல்வாங்கல்

இந்த ஆண்டு முற்பாதியில் குரு சாதகமாக சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் நற்பலன் கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பிறரை நம்பி பண விஷயத்தில் முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதில் முன்னெச்சரிக்கை தேவை. கொடுத்த கடனை வசூலிப்பதில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

தொழில் வியாபாரம்

எதிலும் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினை பெற முடியும். புதிய முயற்சிகளில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபங்கள் உண்டாகும். நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழிலாளர்களின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் அபிவிருத்தி குறையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அரசு வழியில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகம்

எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், உத்தியோக உயர்வுகளும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். தேவையற்ற இடமாற்றங்களால் சற்றே அலைச்சல் டென்ஷன் மற்றும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை சற்றுக் குறைத்து கொள்ளலாம்.

பெண்கள்

மணவயதை அடைந்தவர்களுக்கு திருமண சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்ற பண விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்

மக்களின் ஆதரவுகளை பெற அவர்களின் தேவையறிந்து அவற்றை பூர்த்தி செய்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் நடப்பதும், உடனிருப்பவர்களிடம் எச்சிரிக்கையுடன் இருப்பதும் நல்லது. கட்சிகாக நிறைய வீண் செலவுகளும் செய்ய வேண்டி இருக்கும். எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் பதவிகளை காப்பாற்றி கொள்ள முடியும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். புதிய நவீன முறைகளை பயன்படுத்தும் முயற்சிகளில் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். வேலையாட்களின் உதவி எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். அரசு வழியில் கடனுதவி கிட்டும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் இந்த ஆண்டு முற்பாதியில் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகளால் படபிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிக்கும் நிலை, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மாணவமாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு குறைந்தாலும் முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றி பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். பயணங்களின் போது கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதங்களுக்கு பின் தான் கிடைக்கும்.

சித்திரை

ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையில் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சற்று மந்த நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் நிறைய போட்டிகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பொறுப்பேற்க வேண்டியிருக்கும். பிரதோஷ கால வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

வைகாசி 

ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 9-ல் சூரியன், 10ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நவீன பொருட் சேர்க்கைகள் கிட்டும். உற்றார் உறவினர்களின் வரவுகள் மகிழ்ச்சியை  அளிக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வேலையாட்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

ஆனி

ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 10-ல் சூரியன், புதன், 11-ல் சுக்கிரன் ராகு சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் இக்காலங்களில் பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தடையின்றி மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதனால் அனுகூலப்பலனைப் பெறுவீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

ஆடி 

இம்மாதம் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 11-ல் சூரியன், புதன், ராகு சஞ்சாரம் அற்புதமான அமைப்பு என்பதால் செல்வம், செல்வாக்கு உயரும். தாராள தன வரவுகளைக் கொடுக்கும். குடும்பத்தில் சிறப்பான ஒற்றுமை உண்டாகும். பொருளாதார மேன்மைகளால் கடன்கள் நிவர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகளையும் வாங்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு மணமாகக் கூடிய வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேரும். தொழில், வியாபார செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். ஆஞ்நேயரை வழிபடுவது நல்லது.

ஆவணி

ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 11-ல் புதன், ராகு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். தேவையற்ற நெருக்கடிகள் குறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களிடமிருந்தும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். மறைமுக போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைவார்கள். அலைச்சல்கள் அதிகரித்தாலும் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். அம்மன் வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.

புரட்டாசி 

இம்மாதம் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.  உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வெளிவட்டாரம் விரிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

ஐப்பசி 

ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்பதால் எதிர்பார்க்கும் நற்பலன்களை சிறுசிறு தடைகளுக்குப் பின் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகி எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு, வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்தே லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

கார்த்திகை 

இம்மாதம் உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் 11-ல் ராகு சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக நிவர்த்தியாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது, பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

மார்கழி 

ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வது சற்று சாதகமான அமைப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலை இருக்கும். பிள்ளைகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சிவ பெருமானை வழிபபாடு செய்வது நல்லது.

தை

இம்மாதம் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் குரு, களத்திர ஸ்தானமான 7-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

மாசி

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும்.  குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும், பொன், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாகக் செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் கேது 4-ல் ராகு 10-ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

பங்குனி

ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பணவரவுகளும் தேவைக்கு ஏற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்    –  5,6,7,8

நிறம்    –  பச்சை, நீலம்

கிழமை  – புதன், சனி

கல்     –  மரகத பச்சை

திசை   – வடக்கு

தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு

விளம்பி வருட பலன்கள் 2018-2019 சிம்மம்    

விளம்பி வருட பலன்கள் 2018-2019

சிம்மம்     மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்

வாழ்வில் பலமுறை தோல்வியை சந்தித்தாலும் துணிந்து நின்று போராடக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பாகும். குரு ஆண்டின் தொடக்கத்தில் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களை எதிர் நீச்சல் போட்டே முடிக்க வேண்டியிருக்கும். வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் அவ்வளவு அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின்னே நற்பலன் கிடைக்கும். பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமைவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் கிட்டும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

கேது பகவான் ருண ரோகஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பாராத உயர்வுகளையும், லாபங்களையும் பெற முடியும். வேலையாட்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். வேலைபளு அதிகரிக்கும் என்பதால் பணியில் கவனமுடன் நடந்து கொள்வது, உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், சோர்வு, மந்தநிலை போன்றவை தோன்றும். சில நேரங்களில் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். இந்த வருடம் முழுவதும் தனக்காரகன் குருபகவான் சாதகமற்று சஞ்சரிப்பதால் முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைப்பது, பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். சிறுசி-று பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உணவு விஷயங்களில் கட்டுபாட்டுடன் இருப்பதும், நேரத்திற்கு உணவு உட்கொள்வதும், அஜீரண கோளாறுகள் உண்டாவதை தவிர்க்க உதவும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறிது மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து கடன்கள் சற்று குறையும். புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

கொடுக்கல்வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றியும் ஓரளவுக்கு லாபமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சுமாரான நிலையில் இருக்கும். இதுவரை இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக உங்களுக்கு அமையும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அனுகூலமும் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளை பெற முடியும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது.

உத்தியோகம்

இந்த ஆண்டு உங்களுக்கு ஏற்ற இறக்கமானப் பலன்களை தருவதாக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். சிலர் நினைத்த இடத்திற்கு மாற்றலாகி குடும்பத்தோடு சேருவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது, உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது.

பெண்கள்

கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் கைகூடும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் சற்று மருத்துவ செலவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்கலாம்.

அரசியல்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும் என்பதால் அவர்களின் ஆதரவினைப் பெறுவீர்கள். பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலம் ஆகும். மேடை பேச்சுகளில் சற்று கவனமுடன் பேசுவது நல்லது. சில நேரங்களில் கட்சி பணிக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலையும் அதனால் வீண் விரயங்களும் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் குறையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய உழைக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். போட்ட முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாது. புதிய யுக்திகளை கையாண்டு உற்பத்தியை பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.

கலைஞர்கள்

தேவையற்ற எதிர்ப்புகள் மறைவதால் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும், பாராட்டுதல்களும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கும் படப்பிடிப்பு விஷயமாக செல்ல நேரிடும். வரவேண்டிய பணத்தொகைகள் கைக்கு கிடைக்கப் பெற்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

மாணவமாணவியர்

கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். கல்விக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகள் நிலவும். பள்ளி கல்லூரி வாயிலாக இன்ப சுற்றுலா மேற்கொள்ளும் வாய்ப்பும் அதனால் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். புதிய நண்பர்களின் நட்பால் சாதக பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

சித்திரை

ராசியாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், 6-ல் கேது சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமுடனிருப்பது உத்தமம். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் நல்லது. புத்திர வழியில் மனக்கவலைகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் இருப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வைகாசி 

ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது ராசியாதிபதி சூரியன் 10-ல், சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பது  நல்ல அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். சிலருக்கு சொந்த வீடு, கார் போன்றவை வாங்கும் வாய்ப்பு கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உங்களுக்குள்ள கடன்கள் சற்று குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் உள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகள் சாதகமாக அமைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

ஆனி

உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 11-ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்யவது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெற முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தின் மகிழ்ச்சி சிறப்பாகவே இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல அனுகூலங்களை பெற முடியும்.  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.

ஆடி 

ஜென்ம ராசியில் சுக்கிரன், ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டானாலும் சிறிது மருத்துவ செலவுகளுக்குப் பின் குணமடையும். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நற்பலன் உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல்களில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

ஆவணி 

தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பிரதோஷ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

புரட்டாசி 

ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும். 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால்  குடும்பத்தில் பொருளாதார நிலை ஒரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது மனநிம்மதியைத் தரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ஐப்பசி 

ராசியாதிபதி சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும், செவ்வாய் 6-ல் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு நல்லது நடக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப் பெறும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

கார்த்திகை

ராசியாதிபதி சூரியன் 4-ல் சஞ்சரிப்பதும், செவ்வாய் 7-ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெற முடியும். பணம் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் கொடுக்கல்– வாங்கலில் கவனம் தேவை. எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

மார்கழி 

ஜென்ம ராசிக்கு 4-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு நற்பலன்களை பெற முடியும். 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிவபொருமானை வழிபடுவது நல்லது.

தை

ஜென்ம ராசிக்கு 5-ல் புதன், 6-ல் சூரியன், கேது சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் எதிலும் லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடை விலகி நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். போட்டிகள் குறையும். பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது

மாசி 

சுக ஸ்தானமான 4-ல் குரு சஞ்சரிப்பதும் ராசியாதிபதி சூரியன் 7-ல் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றர் உறவினர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ராகு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் சற்று கவனமுடனிருப்பது உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நற்பலனை தரும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

பங்குனி

ஜென்ம ராசிக்கு 4-ல் குரு, சஞ்சரிப்பதும் ராசியாதிபதி சூரியன் 8-ல் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் அடிக்கடி மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள் என்றாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பண விஷயத்தில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகி அபிவிருத்திகள் குறையக் கூடிய சூழ்நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். அலைச்சல், டென்ஷன்களும் அதிகரிக்கும். அம்மன் வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  – 1,2,3,9

நிறம்  – வெள்ளை, சிவப்பு

கிழமை – ஞாயிறு, திங்கள்

கல்   – மாணிக்கம்

திசை  – கிழக்கு

தெய்வம் – சிவன்

விளம்பி வருட பலன்கள் 2018-2019 – கடகம் 

கடகம்     புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

விடா முயற்சியுடன் செயல்படும் திறனும், உயர்ந்த இலட்சியங்களும் கொண்ட கடக ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார ரீதியாக மேன்மை உண்டாகி கடன்கள் அனைத்தும் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி பெற முடியும். செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் போட்டி பொறாமைகள் யாவும் விலகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் அபிவிருத்தியும் பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைய முடியும். உத்தியோகம் செய்பவர்களும் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்.

                ஆண்டின் தொடக்கத்தில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும் என்றாலும் வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்தும் தடையின்றி கைகூடும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர பாக்கியமும் அமையும். நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பகைமை பாராட்டியவர்களும் நட்பு கரம் நீட்டுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம், பொன் பொருள் சேர்க்கை யாவும் அமையும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகி நல்ல லாபம் கிட்டும். கொடுத்த தொகைகளும் தடையின்றி வசூலாகும்.  இந்த ஆண்டில் ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படுவதால் அடிக்கடி மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் அன்றாட பணிகளில் தடையின்றி செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் நலமாக இருப்பார்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகுவதால் மன நிம்மதி ஏற்படும். பிறரிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை 

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகும். கடன்கள் குறையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. தடைப்பட்ட சுப காரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை பெறுவீர்கள். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கொடுக்கல்வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறைகளில் உள்ளவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சற்று நிதானத்தை கடைபிடித்தால் புரட்டாசி மாதம் முதல் நல்ல லாபத்தினை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். கொடுத்த தொகைகளை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகவே இருக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரிங்களில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டுத் தொழில் செய்வர்கள் கூட்டாளிகளால் நல்ல அனுகூலங்களை பெறுவார்கள். மறைமுக எதிப்புகள் விலகி போட்டிகள் குறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் வேலை பளு குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வர வேண்டிய நிலுவைத் தொகைகள் தடையின்றி வந்து சேரும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைபட்ட திருமண சுப காரியங்கள் புரட்டாசி மாதத்திற்கு மேல் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணி புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

அரசியல்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தக்க சமயத்தில் நிறைவேற்றுவதால் மக்களின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் புரட்டாசி மாதம் முதல் சில திருப்புமுனைகள் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் வெற்றியும், பொருளாதார ரீதியாக மேன்மைகளும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். மான்புமிகு பதவிகளும் தேடி வரும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்த படி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் தடையின்றி அடைய முடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். பொருளாதாரநிலை உயர்வடையும். புதிய பூமி மனை போன்றவற்றையும் வாங்க கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கப் பெறும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த பெயர் புகழைப் பெற முடியும். வர வேண்டிய பாக்கி பணத்தொகைகள் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையானது உயரும். சக கலைஞர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வதன் மூலம் போட்டி பொறாமைகள் குறையும். நடனம், இசை போன்ற துறைகளில் உள்ளவர்களும் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். புதிய கார் பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள்.

மாணவமாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றங்களை அடைய முடியும். உடன் பழகும் நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். விளையாட்டுத் துறைகளில் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் தட்டி செல்வீர்கள். கல்விக்காக சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆசிரியர்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள்.

சித்திரை

ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், சனி, 10-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். துர்கை அம்மனை வழிபடவும்.

வைகாசி 

ஜென்ம ராசிக்கு 6-ல் சனி 10-ல் புதன், 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பண வரவில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் மேன்மை அடையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ஆனி

ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

ஆடி

ஜென்ம ராசியில் சூரியன், ராகு 7-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் தடைபடும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பிறர் தட்டி செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வடைய முடியும். முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

ஆவணி 

ஜென்ம ராசிக்கு 6-ல் சனி சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குடும்ப ஸ்தானமான 2-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். நெருங்கியவர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது.  தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப்பின் கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

புரட்டாசி

இம்மாதம் ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சாரம் செய்து நல்ல அமைப்பு என்பதால் பண வரவில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் தடையின்றி வெற்றி கிட்டும். தினமும் விநாயகரை வழிபடவும்.

ஐப்பசி 

சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சாரம் செய்வதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். துர்கை அம்மனை வழிபடவும்.

கார்த்திகை 

ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வம்பு வழக்குகளில் சாதகப்பலன் அமையும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

மார்கழி 

பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, 6-ல் சூரியன், சனி சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் லாபங்கள் அடைவீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு கிட்டும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

தை 

ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, 6-ல் சனி, புதன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் உடல் நிலை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதாரம் உயர்வடையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெற்று லாபம் பெருகும். விரோதிகளும் நண்பர்களாகச் செயல்படுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

மாசி

ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் கேது 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

பங்குனி 

ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதும், 10, 11-ல் செவ்வாய் சாதகமாக சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மைகளும் கூட்டாளிகளால் லாபங்களும் உண்டாகும். புதிய நவீன கருவிகளை வாங்கிப் போடுவீர்கள். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் ஏற்படும். பணம் தாராளமாக வருவதால் கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றிக் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணம் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்      – 1,2,3,9,

நிறம்    – வெள்ளை, சிவப்பு

கிழமை              – திங்கள், வியாழன்

கல்        – முத்து

திசை   – வடகிழக்கு

தெய்வம்- வெங்கடாசலபதி

 

விளம்பி வருட பலன்கள் 2018-2019 மிதுனம்  

விளம்பி வருட பலன்கள் 2018-2019

மிதுனம்       மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

                மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சமூக பணிகளில் ஆர்வமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே!  உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடத்தின் முற்பாதியில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபார ரீதியாகவும் உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். பணயங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஆதாயங்களை பெற முடியும். சிலருக்கு அசையா சொத்துகளால் அனுகூலம், வண்டி வாகன சேர்க்கை போன்ற யாவும் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சற்று தாமபட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிட்டும்.  புதிய  வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

                சனிபகவான் 7-ல் சஞ்சரிப்பதால் கண்ட சனி நடைபெறுவதும், ஜென்ம ராசிக்கு 2, 8-ல் ராகு, கேது சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல்நிலை பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைத்து கொள்வது உத்தமம். தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். கண்ட சனி நடைபெற்றாலும் சனிபகவான் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார்.

                வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் தேவையற்ற விரயங்களை தவிர்க்க முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவுகளுக்குப் பின் குணமடையும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். புரட்டாசி மாதம் முதல் சில எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையக்கூடும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஆண்டின் முற்பாதியில் அற்புதமாக அமையும். சுப காரியங்கள் நடைபெறும். புரட்டாசி மாதம் முதல் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும் என்பதால் முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கொடுக்கல்வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றில் ஆண்டின் முற்பாதியில் லாபமும் அனுகூலமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல்களில் நல்ல லாபம் கிட்டும். பணபுழக்கம் சிறப்பாக இருக்கும். புரட்டாசி மாதம் முதல் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பெரிய தொகைகளை முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் ஆண்டின் முற்பாதியில் லாபமும் முன்னேற்றமும் பெருகும். பெரிய அளவில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி உயர்வடையும். புரட்டாசி மாதம் முதல் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். வேலையாட்களிடமும், கூட்டாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக அமையும். உங்களுக்கு வேலைப்பளு சற்று அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். புரட்டாசி மாதம் முதல் எதிர்பாராத இடமாற்றங்களால் சிலருக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும்.

பெண்கள்

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் அமையும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சி உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களை வாங்க முடியும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும்.

அரசியல்

எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து ஏற்றம் பெற முடியும். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சாதிக்க முடியுமென்றாலும், கட்சிக்காக செய்யும் செலவுகளில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. புரட்டாசி மாதம் முதல் உடனிருப்பவர்களின் முகஸ்துதிகளுக்கு மயங்காமல் சிந்தித்து செயல்பட்டால் பதவிகளை சிறந்த முறையில் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியிலும் பல மானிய உதவிகள் கிடைக்கப் பெறும். உழைப்பிற்கேற்றப் பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் நிறைவான லாபம் கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புரட்டாசி மாதம் முதல் புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

கலைஞர்கள்

பணவரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பயணங்களால் மகிழ்ச்சியும் சாதகபலனும் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்க முடியும். புரட்டாசி மாதம் முதல் முடிந்த வரை தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். பத்திரிகைகளில் வரும் தேவையற்ற கிசுகிசுக்களால் மன சஞ்சலங்கள் ஏற்படும்.

மாணவ மாணவியர்

கல்வி பயிலுபவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ஆசிரியர்களையும் பெரியவர்களையும் மதித்து நடப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பதன் மூலம் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

சித்திரை

ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, எதிலும் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.

வைகாசி

ஜென்ம ராசியில் சுக்கிரன், 5-ல் குரு, 11-ல் புதன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும்.  அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சனி 7ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சிவ வழிபாடு தொடர்ந்து செய்வது நல்லது.

ஆனி

ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமான பலன்களையே அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். முடிந்தவரை குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் எதையும் எளிதில் வென்றுவிட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் மருத்துவ செலவுகளுக்குப் பின் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். முருகனை வழிபடுவது உத்தமம்.

ஆடி

ஜென்ம ராசிக்கு 2-ல் புதன், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல மேன்மை உண்டாகும். துர்கை அ¬ம்மனை வழிபடுவது நல்லது.

ஆவணி

இம்மாதம் ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும், பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்யவும்.

புரட்டாசி 

இம்மாதம் உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.  உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மேலோங்கும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

ஐப்பசி 

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும்.  உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

கார்த்திகை 

இம்மாதம் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

மார்கழி 

குடும்ப ஸ்தானமான 2-ல் ராகு, 6-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

தை

ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 6-ல் குரு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் மன நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குலதெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது உத்தமம்.

மாசி 

இம்மாதம்  9-ல் சூரியன், புதன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறைவு அதிகரிக்கும்.  தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

பங்குனி

ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி நற்பலனை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும்.  தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண்  – 5,6,8,

நிறம்  – பச்சை, வெள்ளை

கிழமை – புதன், வெள்ளி

கல்   – மரகதம்

திசை  – வடக்கு

தெய்வம் – விஷ்ணு