மீனம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

மீனம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் முன்னேற்றங்கள் உண்டாவதுடன் எதையும் எதிர்கொள்ள கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும்.

உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும் சுகவாழ்வு சொகுசுவாழ்வு சற்று பாதிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்படும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் குறைந்து லாபங்கள் பெருகும். பல புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். முடிந்தவரை கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வதன் மூலம் தேக்கநிலை ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும்.

திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாவதோடு உற்றார் உறவினர்களால் மன சஞ்சலங்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். புத்திர வழியில் வீண் மன சஞ்சலங்கள் ஏற்படும். திருக்கணிதப்படி தை மாதம் 10-ஆம் தேதி (24-01-2020) ஏற்படவுள்ள சனிமாற்றத்தின் மூலம் சனி லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக குறையும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரண கோளாறு கை கால் அசதி போன்றவை உண்டாகினாலும், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் விரயங்கள், மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் குறையும்.

குடும்பம் பொருளாதாரநிலை

கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயங்களை அடைய முடியும்.

உத்தியோகம்

பணியில் தேவையற்ற குழப்பங்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் இவற்றால் மன உளைச்சல்கள் போன்றவை ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து முன்னேற கூடிய ஆற்றல் உண்டாகும். எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக விலகும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள், இடமாற்றங்கள் போன்றவை கிடைக்கப் பெறும். புதிய வேலைத் தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

தொழில் வியாபாரம்

தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஆதாயத்தையும் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். சில நேரங்களில் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும்.

அரசியல்

கட்சிப் பணிகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலையில் சரளமான நிலை இருப்பதால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மக்களின் ஆதரவினைப் பெற முடியும். எதிர்பாராத உயர் பதவிகளும் கிடைக்கும். பெயர், புகழ் உயரும். பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவுகளும் சிறப்பாக அமையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் நீர்வரத்து குறையும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினை பெற்று விடுவீர்கள். புதிய பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் மண வழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்-  மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று பொருளாதாரம் உயரும்.

மாணவ- மாணவிகள்

கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டிய காலமிது. மந்த நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நட்புக்களால் வீண் பழிச் சொற்களும், அவமானபடக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

மாதப்பலன்

சித்திரை

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் என்றாலும் 2-ல் சூரியன், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அனைவரிடமும் விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வைகாசி 

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 9-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் எதிர்பார்த்த லாபத்தை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகளும், கௌரவமான பதவிகளும் கிடைக்கும். அனுகூலமான பயணங்களும் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

ஆனி           

சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதுடன் குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் அமையும். குரு 9-ல் இருப்பதால் மணவயதை அடைந்தவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியுடன் இருக்க முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

ஆடி            

ராசிக்கு 5-ல் செவ்வாய், சூரியன், 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். புதிய பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும். சிலருக்கு நினைத்தவரை கைப்பிடிக்கும் யோகமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் விலகி வம்பு வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி  

ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், சூரியன் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் மறைமுக எதிர்ப்புகள் குறையும். அரசு வழியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளிலும் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் கௌரவமான பதவிகளில் அமரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

புரட்டாசி

ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 7-ல் புதன், சுக்கிரன், 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சொந்தமாக பூமி மனை வாங்கும் வாய்ப்பு அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் அளிக்கும். சிவ பெருமானை வழிபடவும்.

ஐப்பசி    

களத்திர ஸ்தானமான 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 9-ல் குரு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். பணவரவுகளிலும் சரளமான நிலையிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். திருமண சுபகாரியங்களுக்கான பேச்சு வார்த்தைகளில் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை எடுத்து கொள்வது, முன்கோபத்தை குறைப்பது நல்லது. புத்திர வழியில் பூரிப்பும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும். 19-ஆம் தேதி முதல் குரு 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிறிது தேக்கம் உண்டாகும். தட்சிணாமுர்த்தியை வழிபடவும்.

கார்த்திகை    

பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களால் அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தர கூடிய சம்பவங்கள் நடைபெறும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற்று மகிழ்வார்கள். பொருளாதாரம் உயர்வடையும். துர்க்கையம்மனை வழிபடவும்.

மார்கழி  

ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். புதிய வீடு, மனை, வண்டி வாகனங்களை வாங்கும் யோகமும் உண்டாகும். சிலர் கட்டிய வீட்டை புதுப்பிக்க முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனைத்து வகையிலும் அனுகூலங்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களை அடைந்து விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சிறப்பாக இருப்பதால் வேலைப்பளு குறைவதுடன் மனதில் உற்சாகமும் பிறக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

தை       

பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்த இடங்களுக்கு இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் பொருளாதார மேன்மையும் உண்டாகும். பொன், பொருள் சேரும். சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கைகூடும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

மாசி            

ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தாமதமாக கைகூடும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

பங்குனி

ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய், 11-ல் சனி, 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதில் நிதானம் தேவை. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும், வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதும் நல்லது. பல்வேறு பொதுநல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்    – 1,2,3,9,

கிழமை  – வியாழன், ஞாயிறு

திசை   – வடகிழக்கு

நிறம்    – மஞ்சள், சிவப்பு

கல்     – புஷ்ப ராகம்

தெய்வம் – தட்சிணாமூர்த்தி

கும்பம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

கும்பம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள்,  சதயம்,  பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

வெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களுக்கு நற்பலனை ஏற்படுத்தும் ஆண்டாகவே அமையும். ஆண்டின் முற்பாதியில் குரு 10-ல் சஞ்சரித்தாலும் சனி, கேது லாபஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு எதிர்பார்த்த வரன்கள் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், பொன் பொருள் சேர்க்கையும் அமையும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொட்டதெல்லாம் துலங்கும். தொழில் வியாபாரத்திலுள்ள எதிர்ப்புகள் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகப்பலன் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை நிலவும். உயர் அதிகாரிகளின் ஆதரவும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படக் கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் உங்களிடம் அன்பாக நடத்தும் கொள்வதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது.

குடும்ப பொருளாதார நிலை

திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும், அன்யோன்யமும் அதிகரிக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தி உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

உத்தியோகம்

பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக் கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைபளு குறையும்.

தொழில் வியாபாரம்

பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். அரசு வழியில் அனுகூலம் கிட்டும். புதிய கிளைகளை நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சிலருக்குள்ள கடன் பிரச்சினைகளும் தீர்வடையும். இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத தன வரவுகளால் பொருளாதார நிலை மேன்மையடையும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்

பெயர் புகழ் உயரக் கூடிய காலமாகும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு வீண் செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும் மறைமுக வருவாய்களும் பெருகும். பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விடுவீர்கள். புதிய நவீன முறைகளை பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்குவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலை மிகவும் அற்புதமாக அமையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம், குடும்பத்திற்கு தேவையான அதி நவீனப் பொருட்கள் போன்ற யாவும் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும்.

மாணவ- மாணவிகள்

மாணவ- மாணவிகள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பரிசுகளை தட்டிக் செல்வீர்கள். சிலருக்கு உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

மாதப்பலன்

சித்திரை

மாதகோளான சூரியன் 3-ல் சஞ்சரிப்பதாலும், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் நினைத்தது நிறைவேறும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலர் அசையும், அசையா சொத்துகளை வாங்கிச் சேர்ப்பீர்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். முருகப் பெருமானை வழிபடவும்.

வைகாசி 

லாப ஸ்தானமான 11-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்றாலும் 4-ல் சூரியன் சஞ்சா£ரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூமி, நிலம், வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சற்று வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். முருகனை வழிபடுவது நல்லது.

ஆனி           

ராசிக்கு 4-ல் சுக்கிரன், 11-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனை உண்டாக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ஆடி            

ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய், 11-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பு என்பதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே இருந்து வந்த பகைமை விலகி ஒற்றுமை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ஆவணி

ராசிக்கு 11-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்றாலும் 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியம் நடைபெறுவதில் சில தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்தால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். சிவனை வழிபடவும்.

புரட்டாசி

ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் 11-ல் சனி, கேது சஞ்சாரம் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப்பின் நல்ல வரன்கள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துகளில் உள்ள வம்பு வழக்குகள் சற்று இழுபறி நிலையில் இருக்கும். சிவனை வழிபடவும்.

ஐப்பசி    

ஜென்ம ராசிக்கு 9, 10-ல் புதன், சுக்கிரன் 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகளும் அனுசரணையாக இருப்பார்கள். பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். 19-ஆம் தேதி முதல் குரு 11-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

கார்த்திகை    

உங்கள் ராசிக்கு 11-ல் குரு, சனி, கேது 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், கடன்களும் குறையும். அசையும் அசையா சொத்துகள் சேரும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சிலர் நினைத்தவரை கைப்பிடிப்பர். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

மார்கழி  

ராசிக்கு 11-ல் குரு, சனி, சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களின் உடல் நலமும் சிறப்படையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எல்லா வகையிலும் மேன்மையும் உயர்வும் உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்கள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

தை       

லாப ஸ்தானமான 11-ல் குரு, கேது சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் சுபிட்சமான நிலையிருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த திருமண சுபகாரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லா விதமான தேவைகளும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகளும் வாங்குவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங்களும் தடையின்றி கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிவ பெருமானை வழிபாடு செய்யவும்.

மாசி            

ராசிக்கு 2-ல் சுக்கிரன் 11-ல் குரு, செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதிலும் முன்னேற்றமான நிலை ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் எல்லாத் தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபகாரியங்களும் சிறப்பாக கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் வரவேண்டிய ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி வந்து சேரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெற முடியும். பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் நல்லது.

பங்குனி

லாப ஸ்தானமான 11-ல் குரு, செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் உறவினர்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  – 5,6,7,8,

கிழமை – வெள்ளி, சனி

திசை  – மேற்கு

நிறம்  – வெள்ளை, நீலம்

கல்   – நீலக்கல்

தெய்வம் – ஐயப்பன்

மகரம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

மகரம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

ஆக்கும் சக்தியும், அழிவதை தடுக்கும் சக்தியும் கொண்ட மகர ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடம் 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும், ஆண்டின் முற்பாதியில் குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த கெடுபிடிகள் வம்பு வழக்குகள் யாவும் விலகும்.

உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உங்கள் ஜென்ம ராசிக்கு 12-ல் சனி சஞ்சரித்து ஏழரை சனியில் விரயசனி நடைபெறுவதால் தேவையற்ற வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பயணங்களில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் அக்கறை எடுத்த கொள்வது நல்லது. சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்யமாட்டார் என்றாலும் எந்தவொரு விஷயங்களிலும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதையும் எதிர் கொண்டு வெற்றிப் பெறக்கூடிய வலிமையை பெறுவீர்கள். 12-ல் கேது சஞ்சரிப்பதால் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்புகளும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இட மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிட்டும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குருபகவான் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் கடனில்லாத கண்ணியமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டபடியே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட முடியாத அளவிற்கு மனக்குழப்பங்களும், நிம்மதி குறைவும் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைக்க முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள்.

உத்தியோகம்

பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையீடு செய்யாமல் இருப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தொழில் வியாபாரம்

கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து செல்வதும் தட்டி கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி விடக் கூடிய ஆற்றல் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் சரளமாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும் என்றாலும் சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்படுவது தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காது இருப்பது நல்லது. பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு உங்களுக்கு மகிழ்ச்சினை ஏற்படுத்தும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாது இருப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். முடிந்த வரை குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது மிகவும் நல்லது. திருமண சுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் கைகூடும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

மாணவ- மாணவிகள்

கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பயணங்களில் சற்று நிதானமுடன் செயல்படுவது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில் ஒரளவுக்கு உதவிகள் கிட்டும்.

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இல்லை. பண வரவுகள் சுமாராக இருக்கக் கூடிய காலம் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சற்று வேலைபளு அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வைகாசி 

ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

ஆனி           

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் லாபத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று கைநிறைய சம்பாதிப்பார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ஆடி            

குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சூரியன், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் ஏற்படும் என்றாலும் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் தடையின்றிப் பெற முடியும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.

ஆவணி  

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை அனுகூலமாக இருக்கும். இம்மாதம் சூரியன், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபட முடியும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்து வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றிக் கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம்-. பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். சிவபொருமானை வழிபடுவது நல்லது.

புரட்டாசி

ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் 11-ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களைக் குறைக்க முடியும். சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உறவினர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து விட முடியும். சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸதர்களுக்கு பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்-. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

ஐப்பசி    

ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு, ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். வரும் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால் குரு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

கார்த்திகை    

ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய், 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிட்டும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன்களை அடைய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

மார்கழி  

ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் 12-ல் சூரியன், குரு, சனி சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகளையும் உண்டாக்கும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலமான பலன் அமையும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சிவ பொருமானை வழிபடுவது நல்லது.

தை 

ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். 12-ல் குரு சனி சஞ்சரிப்பதால் சுகவாழ்வில் பாதிப்பு, அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமற்ற பலன் உண்டாகும். கணவன்- மனைவி எதிலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்துவிட முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர் என்றாலும் சற்றே அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத விரயங்கள் ஏற்படகூடிய காலம் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது உத்தமம். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் சற்றே குறையும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

மாசி

ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களை அடைய முடியும் என்றாலும் ஜென்ம ராசியில் சனி, 12-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமை சிறப்பாக அமையும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால்  பலவகையில் நற்பலன்களைப் பெற முடியும். உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

பங்குனி

மாதகோளான சூரியன் 3-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் நினைத்தது நிறைவேறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் எந்தவொரு காரியத்தையும் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் ஒற்றுமை சிறப்பாக அமையும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் போட்டிகள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருகப் பெருமானை வழிபடவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண்  – 5,6,7,8

கிழமை – சனி, புதன்

திசை  – மேற்கு

நிறம்  – நீலம், பச்சை

கல்   – நீலக்கல்

தெய்வம் – ஐயப்பன்

 

தனுசு – விகாரி வருட பலன்கள் 2019-2020

தனுசு – விகாரி வருட பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

தனுசு  மூலம்,  பூராடம்,  உத்திராடம் 1-ஆம் பாதம்

கள்ளம் கபடமின்றி உண்மையை மட்டுமே பேசும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டில் நீங்கள் உங்கள் வாழ்வில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதும், 7-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். குருபகவானும் 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருக்கணிதப்படி இவ்வருடம் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைப்பது, அதிகப்படியாக கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம்.

திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்பட்டாலும் சிறுசிறு தடைகளுக்குப் பின் ஆண்டின் பிற்பாதியில் குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் திருமணம் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு ஆதாயங்களைப் பெறுவீர்கள். சொந்த பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் முடிந்தவரை பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது, பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் வரவேண்டிய லாபங்கள் கைக்கு வந்து சேரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்பு உடையவற்றால் சற்று அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் முலம் ஆதாயப் பலன்களையும் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து பணியில் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். உங்களின் முன்கோபத்தால் தேவையற்ற வாக்குவாதங்களும் குடும்பத்தில் பிரச்சனைகளும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், சண்டை, சச்சரவுகளும் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் சில தடை தாமங்களுக்குப் பின் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

உத்தியோகம்

பணியில் நிம்மதி குறைவுகள், வீண் பழிச் சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு எதிலும் ஈடுபாடற்ற நிலை உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் ஏற்படும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடை தாமங்களுக்குப் பின் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதால் அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம்

கூட்டுத் தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சில சிக்கல் ஏற்படும். நிறைய போட்டி பொறாமைகளையும் மறைமுக எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். எதிலும் சிந்தித்து செயல்படுவது  கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது உத்தமம்.

கொடுக்கல்- வாங்கல்

கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள் தோன்றும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின் வசூலித்து விடுவீர்கள். அவ்வப்போது தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் படிபடியாக நிவர்த்தியாகும்.

அரசியல்

மக்களின் ஆதரவைப் பெறவே அரும்பாடுபட வேண்டியிருந்தாலும் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் ஒரளவுக்கு அவர்களின் செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தாலும் மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராமல் ஏற்படக் கூடிய செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். உங்களுக்குள்ள வம்பு பிரச்சினைகள் யாவும் ஓரளவுக்கு விலகும். கால்நடைகளால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பொன் பொருள் யாவும் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகங்கள் உண்டாகும். தாய் வழியில் ஆதரவு கிட்டும். புத்திர பாக்கியம் ஏற்பட்டு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

மாணவ- மாணவிகள்

கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருந்தாலும் அயாராத உழைப்பால் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாரட்டுதல்களை பெறுவீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது உத்தமம்.

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் ஏழரைச் சனி நடைப்பெற்றாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பண வரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

வைகாசி 

மாத கோளான சூரியன் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது சாதகமான பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நற்பலன் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்றே குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ஆனி           

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைப்பெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பயணங்களின் போது கவனமுடன் நடந்து கொள்வது வேகத்தைக் குறைப்பது நற்பலனை தரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.

ஆடி            

உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பது, தேவையற்ற அலைச்சல்களை குறைப்பது உத்தமம். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் வர வேண்டிய லாபம் தடையின்றி வந்தடையும்.  குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்.  முருகனை வழிபடுவது நல்லது.

ஆவணி  

ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் ஓரளவு குறையும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். சிவ பெருமானை வழிபடவும்.

புரட்டாசி

உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் சேருவார்கள். சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்திலிருந்த கடன் சுமைகள் குறைந்து மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் அனைத்தும் தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள், சேரும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

ஐப்பசி    

செவ்வாய் 10-ல், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். 19-ஆம் தேதி முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். விநாயகரை தினமும் வழிபடவும்.

கார்த்திகை    

ஜென்ம ராசியில் குரு, சனி சஞ்சரித்தாலும் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். அரசு வழியில் சில உதவிகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மார்கழி  

ஜென்ம ராசியில் சூரியன், சனி, குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். முன்கோபத்தை குறைப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதுடன் குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் வாங்கும் நிலை ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

தை       

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெற முடியும். பண வரவுகள் சற்று தாராளமாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடவும்.

மாசி            

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் நற்பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சுப காரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களன் ஆதரவுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

பங்குனி

ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளளவர்களிடம் தேவையற்ற வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தாது இருப்பது உத்தமம்.  தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுவதுடன் போட்டிகளும் அதிகரிக்கும். கூட்டாளிகளால் நற்பலன் அமையும். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். வேலைபளு சற்றே அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  – 1,2,3,9

கிழமை – வியாழன், திங்கள்,

திசை  –  வடகிழக்கு,

நிறம்  – மஞ்சள், சிகப்பு,

கல்   – புஷ்ப ராகம்,

தெய்வம் – தட்சிணாமூர்த்தி

விருச்சிகம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

விருச்சிகம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

விருச்சிகம்   விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

நகைச்சுவை உணர்வும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளும், உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். இது மட்டுமின்றி சனியும், கேதுவும் 2-ஆம் வீட்டிலும், ராகு 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற நெருக்கடிகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். இதுமட்டுமின்றி ஏழரைசனியில் பாதசனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு ஆகும். இதனால் ஆண்டின் தொடக்கத்தில் சற்று சோதனையான பலன்களை சந்திப்பீர்கள்.

திருக்கணிதப்படி ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குருபகவான் தனஸ்தானமான 2-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பது நல்ல அமைப்பாகும். இதனால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து பொருளாதார நிலை மேன்மையடையும். திருக்கணிதப்படி வரும் தை மாதம் 10-ஆம் தேதி 24-01-2020 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் உங்களுக்கு நடைபெற்று கொண்டு இருக்கும் ஏழரைசனி முழுமையாக முடிவடைந்து விடுவதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் பகலவனை கண்ட பனி போல மறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிட்டும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும்.

கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் மந்தநிலை நிலவினாலும் பிற்பாதியில் சிறப்பான லாபங்களைப் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்பு உடையவைகளால் அனுகூலப்பலன் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள், சற்று மந்த நிலை, கைகால் அசதி போன்றவை ஏற்படும். அஜீரண கோளாறுகள் உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் எந்தவித மருத்துவ செலவுகளும் ஏற்படாது. அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது போன்றவற்றால் நிம்மதி நிலவும்.

குடும்பம் பொருளாதார நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள், திருமணத் தடைகள் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் சுபிட்சமான நிலை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

உத்தியோகம்

பணியில் சற்று வேலைபளு அதிகரிப்பதுடன், எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். திறமைக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும்.

தொழில் வியாபாரம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும், ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் மேன்மைகளை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலங்கள் ஏற்படும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும் என்றாலும் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடந்து கொண்டால் சிறப்பான நற்பலன்களை பெற முடியும்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும், பிற்பாதியில் தாராள தன வரவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். நெருக்கடிகள் விலகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவற்றிலும் தடை தாமதங்களுக்குப் பின்பே வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.

அரசியல்

கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், கௌரவம் புகழ் யாவும் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மக்களின் ஆதரவை பெறுவீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன்மூலம் ஆதாயங்களும் உண்டாகும். பத்திரிக்கை நண்பர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஒரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிரை காப்பாற்ற அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கப் பெற்று அனைத்தையும் சரி செய்ய முடியும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழிலாளர்களின் உதவி கிடைக்கும். கால்நடைகளாலும், காய், கனி, பூ வகைகளாலும் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. ஆண்டின் முற்பாதியில் பணவரவுகளில் சற்று நெருக்கடிகள் ஏற்பட்டாலும், பிற்பாதியில் தாராள தன வரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் குடியேறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும் என்றாலும் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது.

மாணவ- மாணவிகள்

கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அடைய நினைத்த மதிப்பெண்களை அடைந்து விட முடியும். கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம்.

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான பணவரவுகளையும், எதையும் எதிர்கொள்ள கூடிய பலத்தையும் தரும் அமைப்பாகும். குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் குறைவாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலப்பலன் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும். வேலைப்பளு குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளிடன் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்கிக்கொள்ள முடியும்.  கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். முருகனை வழிபடவும்.

வைகாசி 

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் முடிந்த வரை பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணியில் வேலைபளு அதிகப்படியாக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளால் தேவையற்ற சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

ஆனி           

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது, 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப் பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வண்டி, வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது நிதானம் தேவை. சிவனை வழிபடுவது நல்லது.

ஆடி            

உங்கள் ராசியாதிபதி செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள பிரச்சினைகள் சற்று குறையும். எல்லா வகையிலும் லாபம் கிட்டும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். துர்க்கையம்மனை வழிபடவும்.

ஆவணி  

ராசியாதிபதி செவ்வாய், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் லாபத்தை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.  பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.  தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.

புரட்டாசி

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் லாபகரமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். முருகனை வழிபடுவது உத்தமம்.

ஐப்பசி    

ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதாலும் இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால் குரு 2-ஆம் வீட்டிற்கு செல்வதாலும் உங்களுக்குள்ள நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அம்மனை வழிபாடு செய்யவும்.

கார்த்திகை    

ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தனக்காரகன் குரு பகவான் 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். சுப காரியங்கள் கைகூடும். இழந்த பொருட்களை மீட்க முடியும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். அசையும் அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மார்கழி  

ராசிக்கு 2-ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என்றாலும் 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் மட்டுமே ஒற்றுமையான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதையும் சமாளிக்கக் கூடிய அளவிற்கு எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன்கள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். முருகப் பெருமானை வழிபடவும்.

தை       

ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். திருக்கணிதப்படி இம்மாதம் 10-ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் ஏழரைசனி முழுமையாக முடிவதால் குடும்பத்தில் தடைபட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். வீடு வாகனங்களை வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டி, பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் மறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். துர்கை அம்மனை வழிபடவும்.

மாசி            

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். அசையா சொத்துகளால் தேவையற்ற விரயங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாகச் செயல்படுவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

பங்குனி

தன ஸ்தானமான 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதும் இம்மாதம் 9-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம்  செய்ய இருப்பதும் தொழில் வியாபாரத்தில் நற்பலனை தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபத்தை அடைய முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. முருகப் ªருமானை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண்    – 1,2,3,9,

நிறம்    – ஆழ்சிவப்பு, மஞ்சள்

கிழமை  – செவ்வாய், வியாழன்

திசை   – தெற்கு

கல்     – பவளம்

தெய்வம் – முருகன்

துலாம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

துலாம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

துலாம்   சித்திரை 3,4-ஆம் பாதங்கள்,  சுவாதி,  விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

எதிலும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட துலா ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டில் சனி, கேது சஞ்சரிப்பதும் தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், எதிலும் துணிந்து செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். எல்லா வகையிலும் லாபங்கள் பெருகுவதால் பொருளாதாரம் மேன்மையடையும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்ய முடியும்.

திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்களுக்கான முயற்சிகள் தடையின்றி கைகூடி தக்க சமயத்தில் நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்களை வாங்கி சேர்ப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 முதல் (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) குரு பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பண விஷயத்தில் வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். புதிய முயற்சிகளை கையாண்டு தொழிலை விரிவு செய்யும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் அனைத்தும் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் அடைவார்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கை தரம் உயர்வடையும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் குறைந்து படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை நீடிப்பதால் மனநிம்மதி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைப் பாராட்டுவார்கள். சொந்த பூமி, மனை வாங்கக் கூடிய யோகங்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

உத்தியோகம்

பணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், உத்தியோக உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். செய்யும் பணிகளுக்கு தகுந்த பாராட்டுதல்களும் உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலை பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் தடையின்றி நிறைவேறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும்.

தொழில் வியாபாரம்

நல்ல வாய்ப்புகள் தேடி வருவதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். புதிய நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலங்கள் உண்டாகும். பயணங்களால் நற்பலன்களை அடைவீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி அனுகூலப்பலன்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். இழுபறி நிலையில் உள்ள வம்பு வழக்குகளில் தடையின்றி வெற்றிக் கிட்டும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதிகள் கொடுப்பது போன்றவற்றால் ஆதாயங்களை அடைவீர்கள்.

அரசியல்

பெயர் புகழ் யாவும் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் யாவும் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று வரக் கூடிய யோகம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கட்சி பணிகளுக்காக செலவு செய்வதில் தொய்வு ஏற்படாது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் பல மானிய உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்றப் பலன்களை அடைவதால் மனநிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் நிறைவான திருப்தி கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபத்தினை அடைவீர்கள்.

பெண்கள்

உடல் நிலை சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளை தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். புத்திர பாக்கியம் அமையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சொந்த வீடு வாகனங்களை வாங்கும் வாய்ப்பு அமையும்.

மாணவ- மாணவிகள்

மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைய முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை பெற்று பாராட்டுதல்களை அடைவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளின் மூலம் அனுகூலம் கிட்டும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

மாதப்பலன்

சித்திரை

ராசிக்கு 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் எல்லா தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். செவ்வாய் 8-ல் இருப்பதால் பயணங்களில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் வேலையாட்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். நவீன பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். விநாயகரை வழிபடவும்

வைகாசி 

ஜென்ம ராசிக்கு 2-ல் குரு 3-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் போட்டி பொறாமைகளையும் சமாளித்து முன்னேறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடனில்லாத கன்னியமான வாழ்க்கை அமையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர வழியில் பூரிப்பும், கணவன்- மனைவியிடையே அன்யோன்யமும் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும்.  8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களில் கவனமாக இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

ஆனி           

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது, 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் சென்று வரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சி ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.

ஆடி            

உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் -சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எல்லா வகையிலும் மேன்மை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் திறம்பட செயல்படுவார்கள். பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும்.  தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ஆவணி  

ஜென்ம ராசிக்கு 11-ல் சூரியன் ஆட்சி பெற்று உடன் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். 3-ல் சனி சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களால் நல்ல செய்தி கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளைக் எளிதில் காப்பாற்ற முடியும். உணவு விஷயத்தில் கவனமுடன் இருந்தால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். துர்க்கையம்மனை வழிபடவும்.

புரட்டாசி

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதால் லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் நினைத்த இடமாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் பெறுவார்கள். பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சூரியன், சுக்கிரன் 12-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. விநாயகரை வழிபடவும்.

ஐப்பசி    

சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் லாபங்கள் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பும் உற்சாகமும் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். பொன், பொருள் சேரும். இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால் குரு 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். சிவனை வழிபடுவது நற்பலனை தரும்.

கார்த்திகை    

ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. சனி, கேது 3-ல் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். தாராள தன வரவுகளால் பொன், பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. அரசு வழியில் ஆதரவு கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.

மார்கழி  

ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை பெறுவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். புத்திர வழியில் மன நிறைவு தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

தை       

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் நற்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

மாசி            

உங்கள் ராசிக்கு குரு 3-ல் சஞ்சாரம் செய்வது பணவரவுகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றாலும் 3-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சாரம் செய்வதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றத்தை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். மற்றவர்களை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்யவும்.

பங்குனி

ராசியாதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 6-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை மேன்மையடையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். சிலருக்கு இடமாற்றங்களும் கிடைக்கும். கடன்கள் படிப்படியாக குறைவதால் சேமிப்பும் பெருகும். அசையும் அசையா சொத்துகள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு மேம்படும். குருபகவானை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண்   – 5,6,7,8

நிறம்   – வெள்ளை, பச்சை,

கிழமை – வெள்ளி, புதன்,

திசை   – தென் கிழக்கு,

கல்     – வைரம்

தெய்வம் – லட்சுமி

 

கன்னி – விகாரி வருட பலன்கள் 2019-2020

கன்னி – விகாரி வருட பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

எப்பொழுதும் குஷியான மனநிலையுடனும், தெம்புடனும் செயல்படுபவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே!  உங்களுக்கு என் இதயத் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களுக்கு ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதும் சர்பகிரகங்களான ராகு, கேதுவும், குரு பகவானும் சாதகமின்றி சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். எதிர்பாராத பண வரவுகள் உண்டாவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் பல தடை தாமதங்களை சந்தித்தே அனுகூலப்பலனைப் பெற முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களால் பல நற்பலன்களை அடைய முடியும்.

திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் சுகஸ்தானமான 4-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும் சாதமான அமைப்பு என்று கூற முடியாது. கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும்.  எடுக்கும் முயற்சிகளில் தடைதாமதங்களுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சற்றே மந்தநிலையை சந்தித்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தி பெருகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைக்க தாமதநிலை ஏற்படும் என்றாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கை, கால் அசதி சோர்வு போன்றவை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலை சோர்வடையும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றத்தை அடைவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

இந்த ஆண்டில் குடும்பத்தில் சற்று சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது, கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகம்

பணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் பிரச்சினைகள், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விட முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்கு கிடைக்கும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்க்கொள்ளும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.

அரசியல்

பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை தடைகளுக்குப் பின்பே காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய அதிகம் பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த லாபங்களையும் தடைகளுக்குப் பின் பெற்று முன்னேற்றங்களை அடைய முடியும். கடன்கள் படிப்படியாக குறையும். கால்நடைகளால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத தனவரவு உண்டாகி குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியம் நடைபெற சற்று காலதாமதம் ஆனாலும் நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

மாணவ- மாணவிகள்

கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி மேற்கொள்ளும் காரியங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்றாலும் போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளின் உதவியால் அனுகூலங்களை அடைவார்கள். வண்டி வாகனங்கள் மூலம் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். சிவ பெருமானை வழிபடவும்

வைகாசி 

மாத கோளான சூரியன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ள கூடிய நற்பலன் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். உடல் ஆரேக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்லதொரு ஏற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் லாபங்கள் தடைப்படாது. கொடுக்கல்- வாங்கலில் திருப்திகரமான நிலையில் இருக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும், விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொள்வது சிறப்பு.

ஆனி           

சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும், 7-ஆம் தேதி முதல் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். பணவரவுகளும் சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் அனுகூலங்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் உதவியால் நல்லது நடக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியாகப் பணியாற்ற முடியும். ஊதிய உயர்வுகள் தடையின்றி கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ஆடி            

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில்  சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி  

விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது, கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டவாதுடன் குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களால் நிம்மதிக் குறைவு ஏற்படக்கூடும் என்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. 11-ல் புதன் இருப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்படக்கூடும் என்பதால் பெரிய முதலீடுகள் ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

புரட்டாசி

ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் 10-ல் ராகு சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்-. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளும் கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளை சந்தித்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும்.  உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குபின் வெற்றி கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சிவ வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

ஐப்பசி    

புதன், சுக்கிரன் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். சூரியன் 2-ல் இருப்பதால் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. 19-ஆம் தேதி முதல் குரு 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற முடியும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

கார்த்திகை    

உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடையும் வாய்ப்பு இம்மாதத்தில் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். கடன்களும் குறையும். கொடுக்கல்- வாங்கல் சிறப்படையும். 4-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறுவர். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

மார்கழி  

சுக ஸ்தானமான 4-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

தை       

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 5-ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கூட்டாளிகள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகளைப் பெற முடியும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களை அடையலாம். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.  விநாயகரை வழிபடுவது நல்லது.

மாசி            

மாத கோளான சூரியன், ராசியாதிபதி புதன் சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், குரு, கேது சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருக்கும் என்றாலும் எதையும் சமாளிப்பீர்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றவதும், முருக வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.

பங்குனி

ஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்– மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார ரீதியாக தேக்க நிலை ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிவ வழிபாடு தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்    –  5,6,7,8

நிறம்    –  பச்சை, நீலம்

கிழமை  – புதன், சனி

கல்     –  மரகத பச்சை

திசை   – வடக்கு

தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு

 

சிம்மம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

சிம்மம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

சிம்மம்    மகம்,    பூரம்.   உத்திரம்1-ஆம் பாதம்

உயர்ந்த எண்ணங்களுடன், பிறர் மெச்சும் படியாக வாழக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டின் முற்பாதி வரை குரு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் லாபங்கள் எதிலும் சிறப்பாக அமையும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது, நேரத்திற்கு உணவு உண்பது, தேவையற்ற அலைச்சல்களை குறைப்பது நல்லது. ஆண்டின் முற்பாதியில் உங்கள் வாழ்வில் சிறுசிறு நெருக்கடிகள் குழப்பங்கள் நிலவினாலும் திருக்கணிதப்படி குரு வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துக்களாலும் ஒரு சிலருக்கு ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் பல புதிய யுக்திகளை கையாளுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருப்பதால் எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர் பதவிகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். திருக்கணிதப்படி தை மாதம் 10-ஆம் தேதி 24-01-2020 ஏற்படவுள்ள சனிமாற்றத்தின் மூலம் சனி ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக குறையும். உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவுகளுக்குப் பின் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படக் கூடிய ஆற்றல் உண்டாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் ஓரளவு மறையும். அனைவரும் உங்களிடம் அன்பாக நடத்தும் கொள்வதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குடும்ப பொருளாதார நிலை

திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் நல்ல வரன்கள் தேடி வரும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும், அன்யோன்யமும் அதிகரிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தியும் உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

உத்தியோகம்

பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவும் குறையும்.

தொழில் வியாபாரம்

ஆண்டின் தொடக்கத்தில் சற்று மந்தநிலை நிலவினாலும் பிற்பாதியில் பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். புதிய கிளைகளையும் நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பிற்பாதியில் மிகச் சிறப்பாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சிலருக்குள்ள கடன் பிரச்சினைகளும் தீர்வடையும். இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத தன வரவுகளால் பொருளாதார நிலை மேன்மையடையும். சேமிப்பு பெருகும்.

அரசியல்

உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாகும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு வீண் செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும் பொருளாதார நிலை உயர்வாகவே இருக்கும். மேடை பேச்சுக்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விடுவீர்கள். நவீன முறைகளை பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடும். சொந்த பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் ஆதாயங்கள் கிட்டும்.

பெண்கள்

உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். ஆண்டின் பிற்பாதியில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம், குடும்பத்திற்கு தேவையான அதி நவீனப் பொருட்கள் போன்ற யாவும் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மாணவ- மாணவிகள்

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை நிலவினாலும் திறம்பட சிறப்புடன் செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிப் பரிசுகளை தட்டிக் செல்வீர்கள். சிலருக்கு உயர் கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு பாதிப்பு, கை, கால் அசதி உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு.

வைகாசி 

உங்கள் ராசியாதிபதி சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும், செவ்வாய், ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரகூடிய சம்பவங்கள் நடைபெறும். இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் கிட்டும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகுவதுடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும். விநாயகரை வழிபடுவதும், அஷ்டலட்சுமியை வழிபடுவதும் சிறப்பு

ஆனி           

உங்கள் ராசியாதிபதி சூரியன்- ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் யாவும் குறையும். குரு 4-ல் இருப்பதால் பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபம் கிட்டும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. விநாயகரை வழிபாடு செய்வதும், தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நற்பலனை தரும்.

ஆடி            

ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களது பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பலரை வழிநடத்திச் செல்லக் கூடிய கௌரவமான பதவிகளை வகிப்பீர்கள். சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். குரு சுக ஸ்தானமான 4-ல் இருப்பதால் பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மேலதிகாரிகளிடம் பேசும் போது மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. புத்திர வழியில் நிம்மதி குறைவு உண்டாகும். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி  

ஜென்ம ராசியில் சுக்கிரனும், 11-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும். சூரியன், செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து லாபங்களைப் பெறுவீர்கள். பயணங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நற்பலனைத் தரும். முருக வழிபாடு செய்வது நல்லது.

புரட்டாசி

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில், பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் யாவும் விலகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் சிவனையும் வழிபடவும்.

ஐப்பசி    

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் உன்னதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பு கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக நிலவிய தடைகள் எல்லாம் விலகி குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சியும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் ஏற்படும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றல் உண்டாகும்.  முருக வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

கார்த்திகை    

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் புதன், 11-ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள், செய்யும் தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் நற்பலன் கிடைக்கும். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் எதையும் சமாளிப்பீர்கள். சிவ வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

மார்கழி  

உங்கள் ராசியாதிபதி சூரியன்- குரு சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொட்டதெல்லாம் துலங்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

தை       

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும், ராசியாதிபதி சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெறும்.  விநாயகரையும் முருகரையும் வழிபாடு செய்வது நல்லது.

மாசி            

ராசிக்கு 5-ல் குரு, 7-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் ரீதியாக மேன்மை உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். பொன் பொருள் சேரும். புத்திர வழியில் மகிழ்ச்சியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய திருமண சுப காரியங்களும் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

பங்குனி

உங்கள் ராசிக்கு 5-ல் குரு 11-ல் ராகு சஞ்சரிப்பது அனுகூலத்தை தரும் அமைப்பு என்பதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றிக் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலங்களை அடைவீர்கள். ராசியாதிபதி சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமைக் குறையாது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதாரநிலை உயரும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  – 1,2,3,9

நிறம்  – வெள்ளை, சிவப்பு

கிழமை – ஞாயிறு, திங்கள்

கல்   – மாணிக்கம்

திசை  – கிழக்கு

தெய்வம் – சிவன்

 

கடகம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

கடகம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

உயர்ந்த லட்சியங்களை கொண்டவராகவும், விடா முயற்சியுடன் செயல்படுவராகவும் விளங்கும் கடக ராசி நேயர்களே! உங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களின்  செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் போன்ற அனைத்தையும் உயர்த்தும் ஆண்டாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனியும், கேதுவும் சஞ்சரிப்பதாலும், பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சாரம் செய்வதாலும் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வடையும்.

உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சொந்த பூமி, மனை வாங்கும் வாய்ப்பும் அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருப்பதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடி வரும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும், உயர் பதவிகளையும் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். திருக்கணிதப்படி குரு வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று ஏற்ற இறக்கமான நிலை ஏற்படும் என்றாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் எல்லா காரியங்களில் வெற்றிகளைப் பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களும் விண் செலவுகளின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதிநவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை போன்ற யாவும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும்.

உத்தியோகம்

பணியில் கௌரவமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடி வரும். குருபெயர்ச்சிக்குப் பின் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது, பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.

அரசியல்

உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய்களும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடுவதால் சற்றே அலைச்சல் உண்டாகும். மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கு ஏற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. கால்நடைகளால் லாபம் கிட்டும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடையே இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். திருமணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. புதிய ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் கிட்டும்.

மாணவ- மாணவிகள்

கல்வியில் முதன்மை பெற்று விளங்கி பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர்களுக்கு சென்று கல்வி கற்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொட்டதெல்லாம் துலங்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் இனிமையானப் பலன்களைப் பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

வைகாசி 

ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலப்பலன் ஏற்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறைவதோடு குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

ஆனி           

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது இருப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டானாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை குறைக்கலாம். முருகப் பெருமானையும் சிவனையும் வழிபடுவது நல்லது.

ஆடி            

ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை உயர்வடைவதால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிலருக்கு பயணங்கள் மேற்கொள்ளும் யோகமும், பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். சிவ பெருமானை வழிபடவும்.

ஆவணி  

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை தரும். சூரியன், செவ்வாய் 2-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிட்டும். பணவிஷயங்களில் இருந்த நெருக்கடிகள் யாவும் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்களும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.  சிவ வழிபாடு செய்வது நல்லது.

புரட்டாசி

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் இருந்தப் பிரச்சினைகள் விலகி கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலை பளு குறையும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்தியாகும். முருக பெருமானை வழிபடுவது நல்லது.

ஐப்பசி    

செவ்வாய் 3-லும், சனி, கேது 6-லும் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். எந்த வித பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். பொருளாதார நிலையில் நல்ல மேன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். 19-ஆம் தேதி முதல் குரு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்-  வாங்கலில் கவனம் தேவை. சிவ வழிபாடு செய்யவும்.

கார்த்திகை    

உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்களை அடைவீர்கள். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் சற்றே விலகும். எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு அனுகூலங்களைப் பெற முடியும். பண வரவுகளில் ஏற்றத் தாழ்வான நிலையிருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். முருக வழிபாடு செய்வது நல்லது.

மார்கழி  

உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது, சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நிலைமையை சமாளித்து விட முடியும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களின் ஆதரவு ஒரளவுக்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதவீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்றே தேக்க நிலை ஏற்பட்டாலும் லாபம் குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அம்மன் வழிபாடு, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

தை       

கேது 6-ல் இருப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் உண்டாகும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

மாசி            

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் ஏற்றங்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுக வாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் இருக்காது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படவும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினை பெற முடியும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது சிறப்பு. விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

பங்குனி

கேது 6-ல் சஞ்சரிப்பதும், 9-ல் சூரியன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நற்பலன்களை உங்களுக்கு தரும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, முன் கோபத்தை குறைப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்      – 1,2,3,9,

நிறம் – வெள்ளை, சிவப்பு

கிழமை   – திங்கள், வியாழன்

கல் – முத்து

திசை     – வடகிழக்கு

தெய்வம்- வெங்கடாசலபதி

மிதுனம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

மிதுனம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

மிதுனம்  மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள்திருவாதிரை,   புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

வசீகரமான கண்களும், சிறந்த பேச்சாற்றலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டில் ஜென்ம ராசிக்கு 7-ல் சனி சஞ்சரிப்பதும், 6-ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். இதுமட்டுமின்றி ஜென்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும், சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் வியாபார ரீதியாகவும் கூட்டாளிகளால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும்.

திருக்கணிதப்படி வரும் ஐப்பசி 19-ஆம் தேதி 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குரு மாற்றத்திற்கு பின்பு பொருளாதார நிலை மேன்மையடையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருவதால் குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே இருந்த வாக்குவாதங்கள் மறைந்து ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்களும், புத்திர வழியில் மகிழ்ச்சித் தரகூடிய சம்பவங்களும் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களும் சேரும். உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் அவர்களால் அனுகூலப்பலனை பெற முடியும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே அலைச்சல்கள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிட்டும். கூட்டாளிகளிடம் இருந்த பிரச்சினைகள் மறைந்து அபிவிருத்தி பெருகும். நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களால் சிறுசிறு இடையூறுகளை சந்தித்தாலும் எதிர்பார்த்த உயர்வுகளை தடையின்றி அடைவார்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை நல்லபடி பயன்படுத்தி கொண்டால் நல்ல உயர்வுகளை பெறுவார்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமிது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். கை கால் மூட்டுகளில் வலி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், வயிறு கோளாறு போன்றவையும் உண்டாகும். எல்லா இருந்தும் அனுபவிக்க இயலாமல் போகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது போன்றவற்றால் நிம்மதி நிலவும்.

குடும்பம் பொருளாதார நிலை

திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் அமையும். சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையாது. கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகம்

பணியில் வேலைபளு சற்று அதிகரிக்கும் என்பதால் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். ஆண்டின் பிற்பாதியில் எதிர்பார்க்கும் சம்பள உயர்வுகள் கிடைக்கும். அனைவரிடமும் பேசும் போது சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்தாலும் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலப்பலனை அடைவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

கொடுக்கல்வாங்கல்

தொடக்கத்தில் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. குரு பெயர்ச்சிக்குப்பின் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு, வழக்கு பிரச்சினைகளில் சற்று இழுபறியான நிலை ஏற்பட்டாலும் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

பெயர் புகழ் மங்க கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி இருந்தாலும் அதற்கு ஏற்ற வருவாய்களும் கிட்டும். குருப்பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் சற்று ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலமானப் பலன்களைப் பெருவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பத்திரிக்கை நண்பர்களால் அனுகூலமானப் பலனை பெருவீர்கள்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராகத் இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகள் ஏற்படும். தகுந்த நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காததால் அறுவடையில் தாமதம் உண்டாகும் என்றாலும் ஒரளவுக்கு எதையும் சமாளித்து எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும். ஆண்டின் பிற்பாதியில் அரசு வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிட்டும். பங்காளிகளை அனுசரித்து செல்வது உத்தமம்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிக்க முடியும். குருப் பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதோடு கடன்களும் குறையும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

மாணவமாணவிகள்

கல்வியில் சற்று ஈடுபாடற்ற நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்படும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். கல்விக்காக வெளியூர் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால் சிலருக்கு அலைச்சல்கள் உண்டாகும். நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது மூலம் அனுகூல பலனை அடையலாம்.

மாதப்பலன்

சித்திரை   

மாத கோளான சூரியன் லாப ஸ்தானத்திலும் சுக்கிரன் 10-லும் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலங்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு போன்றவை உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முன் கோபத்தைக் குறைப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தெய்வ காரியங்களுக்காக சிறுசிறு செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். ஆஞ்சநேயரையும் அம்மனையும் வழிபடவும்.

வைகாசி 

ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதால் கூட்டாளிகளின் ஆதரவுடன், அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். முருகப் பெருமானை வழிபடவும்.

ஆனி                       

சூரியன், ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைப்பது சிறப்பு. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குரு 6-ல் இருப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, கை கால் அசதி போன்றவை ஏற்படுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. முருகப் பெருமானை வழிபடுவது நல்லது-.

ஆடி             

ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனமாக இருப்பது உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சனி, கேது 7-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எதிலும் விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் வீண் பழிகளை சுமக்க வேண்டி இருப்பதால் மனசஞ்சலங்கள் உண்டாகும். எந்தவொரு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். சுப காரியங்களில் தாமதம் உண்டாகும். அம்மனை வழிபடுவது நல்லது.

ஆவணி     

முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு இருக்கும் தடைகள் எல்லாம் விலகி சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். பண வரவுகள் தாராளமாகவே இருக்கும். குரு 6-ல் உள்ளதால் ஆடம்பர செலவுகள் செய்வதையும் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்துவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் கிடைக்கும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது

புரட்டாசி   

சுக்கிரன், புதன் 4, 5-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்கு மேலோங்கும். பணவரவுகள் தடையின்றி இருப்பதால் கடன்கள் குறைவதோடு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு சொந்த பூமி, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். சூரியன் 4-ல், சனி, கேது 7-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு நிம்மதி குறைவுகள் இருக்கும் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் பிரச்சினைகளை சந்தித்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். சிவ பெருமானையும், விநாயகரையும் வழிபடுவது நல்லது.

ஐப்பசி         

இம்மாத தொடகத்தில் புதன், சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். 19-ஆம் தேதி ஏற்படகூடிய குரு பெயர்ச்சியால் குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் உள்ள நெருக்கடிகள் யாவும் மாத பிற்பாதியில் முழுமையாக குறைந்து மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் குறைந்து நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சிவ பெருமானையும் முருகரையும் வழிபடவும்.

கார்த்திகை          

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக உயர்வுகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்களது பலமும் வலிமையும் கூடக்கூடிய காலமாகும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற வம்வு வழக்குகள் மறையும். 7-ல் சனி, கேது இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். உறவினர்களின் அதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் பதவிகள் கிட்டும். துர்கையம்மனையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.

மார்கழி     

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் நல்லது நடக்கும் யோகம் இம்மாதத்தில் உண்டு. 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரிதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விட கூடிய ஆற்றலும் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் உயர்வுகளைப் பெற்று முன்னேற்றம் அடைவார்கள். சூரியன், சனி 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்களை குறைத்து கொள்ள முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

தை               

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தடையின்றி இருப்பதால் கடன்கள் குறைவதோடு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளையும் பெற முடியும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பெரிய மனிதர்களின் நட்புகளால் நற்பலன்கள் உண்டாகும். சூரியன் அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

மாசி                        

உங்கள் ராசியாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும், 7-ல் குரு, 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் ரீதியாக முன்னேற்றமும் தாராள தனவரவுகளும் உண்டாகும். தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பொது நலக் காரியங்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வழியில் ஆதரவு கிட்டும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

பங்குனி

சூரியன் 10-ல், சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். போட்டி பொறாமைகளை சமாளித்து அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வண்டி வாகனங்களால் சுப செலவுகள் உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபடுவதால் நற்பலனை அடைய முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண்  – 5,6,8,

நிறம்  – பச்சை, வெள்ளை

கிழமை – புதன், வெள்ளி

கல்   – மரகதம்

திசை  – வடக்கு

தெய்வம் – விஷ்ணு