வார ராசிப்பலன்- பிப்ரவரி 17 முதல் 23 வரை 

வார ராசிப்பலன்பிப்ரவரி 17 முதல் 23 வரை 

மாசி 5 முதல் 11 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ் சந்தி
புதன் சூரிய திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது 
சனி சுக்கி குரு

               

கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மிதுனம்            15-02-2019 காலை 09.32 மணி முதல் 17-02-2019 பகல் 11.24 மணி வரை.

கடகம்                17-02-2019 பகல் 11.24 மணி முதல் 19-02-2019 பகல் 11.03 மணி வரை.

சிம்மம்               19-02-2019 பகல் 11.03 மணி முதல் 21-02-2019 காலை 10.23 மணி வரை.

கன்னி                21-02-2019 காலை 10.23 மணி முதல் 23-02-2019 பகல் 11.27 மணி வரை.

துலாம்               23-02-2019 பகல் 11.27 மணி முதல் 25-02-2019 மாலை 04.42 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

17.02.2019 மாசி 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

18.02.2019 மாசி 06 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்தசி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

22.02.2019 மாசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருதியை திதி ஹஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை தரும் அமைப்பாகும். சகல விதத்திலும் ஏற்றத்தை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். நல்ல வரன்கள் தேடி வரும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் லாபம் சிறப்பாக இருக்கும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப உயர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்– 17, 21, 22, 23.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

எந்த கஷ்டத்தையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவிற்கு சகிப்பு தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் சூரியன், புதன் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களது செயல்கள் அனைத்திலும் பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பண வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். பொன், பொருள் சேரும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிலருக்கு பதவியுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் தேவயற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். லட்சுமி வழிபாடு மற்றும் சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்–        17, 18, 19, 23.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசை துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் முன்னேற்றத்தை தரும் அமைப்பாகும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி  கிட்டும். பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள் என்றாலும் அளவோடு வைத்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சனிப்ரீதியாக விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்–        17, 19, 20, 21.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

கோபமாகவும் வேகமாகவும் பேசினாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். மாத கோளான சூரியன் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் சற்று தாமதப்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ மற்றும் அம்பிகை வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள்–        17, 18, 19, 22, 23.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதாலும் குரு 4-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற கவலைகள் ஏற்படலாம். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். உடனிருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்தால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவிகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்று பாடுபட வேண்டியிருக்கும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்–        19, 20, 21, 23.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

அனைவரிடத்திலும் அன்பும் பண்பும், மரியாதையும் கொண்டவராகவும், தெய்வ பக்தி உடையவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் 11-ல் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உங்களுக்கு உள்ள சிக்கல்கள் எல்லாம் குறைந்து அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிடைத்தாலும் லாபங்கள் தடைப்படாது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். சிலரின் பூமி, மனை வாங்கும் எண்ணம் சிறு தாமதத்திற்கு பின் நிறைவேறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விநாயகர் வழிபாடு முருக வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்–        17, 18, 19, 22, 23.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தம்முடைய எந்த பொருட்களையும் கேட்பவருக்கு தானமளிக்க கூடிய பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும் குரு 2-ல் சஞ்சரிப்பதும் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை தரும் அமைப்பாகும். வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்–        18, 19, 20, 23.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எவ்வளவு தான் கற்றறிந்து இருந்தாலும் அகம்பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் குருவும், 4-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், பொருளாதார ரீதியாக நெருக்கடி உண்டாகும். நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும் 3-ல் கேது சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக பாடுபட வேண்டியிருக்கும். சிவன் மற்றும் சனி பகவான் வழிபாடு செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள்–        20, 21, 22, 23.

சந்திராஷ்டமம்          15-02-2019 காலை 09.32 மணி முதல் 17-02-2019 பகல் 11.24 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது மூலம் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவிற்கு சாதகமாக இருக்கும். குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்–        21, 22, 23.

சந்திராஷ்டமம்–         17-02-2019 பகல் 11.24 மணி முதல் 19-02-2019 பகல் 11.03 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய யோகம் உண்டு என்றாலும் 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு நிம்மதி குறைவுகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனைப் பெற முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். கடன்கள் சற்றே குறையும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்–        17, 18, 23.

சந்திராஷ்டமம்–         19-02-2019 பகல் 11.03 மணி முதல் 21-02-2019 காலை 10.23 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் விலகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டி, பொறாமைகள் குறைந்து தொழில் மேன்மையடையும். பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்தால் சுபிட்சம் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்–        17, 18, 19, 20.

சந்திராஷ்டமம்          21-02-2019 காலை 10.23 மணி முதல் 23-02-2019 பகல் 11.27 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் பல்வேறு வகையில் நற்பலன்களை தரும் அமைப்பாகும். பணவரவில் முன்னேற்றம், தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் போன்றவை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் சாதகமான செயல்பாட்டால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் மங்களங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்         19, 20, 21, 22.

சந்திராஷ்டமம்–         23-02-2019 பகல் 11.27 மணி முதல் 25-02-2019 மாலை 04.42 மணி வரை.

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கன்னி

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கன்னி

கன்னி    உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

அழகிய உடல்வாகும், நீல விழியும், சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 11லும், கேது 5லும் சஞ்சாரம் செய்தனர். வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டிலும், கேது 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறிவிட முடியாது இதனால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். சனி ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதாலும், அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றப் பலனை அடைய முடியும். குரு 29-10-2019 முதல் சுக ஸ்தானமான 4 -ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது இதனால் பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்க பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் -மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் முடிந்த வரை பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும் என்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். செய்யும் தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபமே அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைப்பது நல்லது. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பணிபுரியுமிடத்தில் பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நல்லது. வேலைபளு அதிகமாக இருக்கும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும் என்பதால் உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். தேவையற்ற மனக்குழப்பங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகளில் மனதை செலுத்துவது உத்தமம்.

குடும்பம் பொருளாதாரநிலை

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும் விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நற்பலன் கிடைக்கும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் சுமாராக நடைபெறும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் எதிர்பார்க்கும் லாபம் ஓரளவுக்கு கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.

கொடுக்கல்வாங்கல்

பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாமல் போகும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரிடும். தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தினை அடைய முடியும்.

அரசியல்

மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாவதால் அவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். மேடை பேச்சுக்களில் கவனமுடன் இருப்பது, பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும்-. என்றாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். உடன் பழகுபவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விலை பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்க சிரமம் ஏற்படும்.  காய், கனி, பூ போன்றவற்றாலும் கால் நடைகளாலும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். சில இடங்களில் நீர் வரத்து குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். புதிய பூமி மனை, வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகளில் இழுபறியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகபோக வாழ்வை அனுபவிக்க இடையூறு ஏற்படும். இசைத் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஓற்றுமை குறையாது. புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயப்பலனை அடைய முடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் நல்ல நண்பர்களை தோந்தெடுத்து பழகுவது உத்தமம். கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் இடையூறுகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 4-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. சர்ப சாந்தி செய்வது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 4-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 3-ல் குரு, 4-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம்.  திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் சில பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்-.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 4-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 3-ல் குரு, 4-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையே பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும்.  எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். 29-10-2019 முதல் குரு 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் ஒரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை இருந்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 4-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும்,  4-ல் குரு, சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சினைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிறுசிறு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். நேரத்திற்கு உணவு உண்பது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 10-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 4-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி அடையும் என்றாலும் அதற்காக கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 4,5,6,7,8

நிறம் – பச்சை, நீலம்

கிழமை – புதன், சனி

கல் – மரகத பச்சை

திசை – வடக்கு

தெய்வம்- ஸ்ரீ விஷ்ணு

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

சனி பகவான் 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.

குரு பகவான் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணியவும் அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 சிம்மம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 சிம்மம்

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

வாழ்வில் எதையாவது சாதித்து கொண்டே இருக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இது நாள் வரை 6, 12-ல் சஞ்சரித்த கேது, ராகு வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை உங்கள் ஜென்ம ராசிக்கு 11–ல் ராகுவும் 5-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். 4-ல் குரு, 5-ல் சனி சஞ்சரிப்பதால் குடும்ப வாழ்வில் எதிர்பாராத சிறுசிறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும்.

குரு 29-10-2019 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பூர்வீக சொத்து விஷயங்களில் தொடக்கத்தில் சில பிரச்சினைகளை சந்தித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் சிறப்பாக அமையும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்க சற்று தாமதநிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளில் தொய்வு ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை

கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் குருபெயர்ச்சிக்குப் பின் (29-10-2019) மணமாகாதர்களுக்கு மணமாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார் பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர பாக்கியம் அமையும்.

உத்தியோகம்

பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கை தரம் உயரும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளு குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்றபடி வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

தொழில் வியாபாரம்

செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். தொழிலாளர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி பொறாமைகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடன் உதவி கிடைக்கும். புதிய யுக்திகளை கையாளும் வாய்ப்பு அமையும்.

கொடுக்கல்வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்ற விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

மேலிடத்தில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பங்கம் ஏற்படாது. மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். மறைமுக வருவாய் பெருகும்.

விவசாயிகள்

உழைப்பு அதிகமாக இருந்தாலும் பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்கள்

கிடைத்த வாய்ப்புகளை கைநழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். சுக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலம் கிட்டும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள். மாணவ மாணவியர்

கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகளால் பல நன்மைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் நற்பலன் அமையும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 5-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் தேவையயற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமையும், நிம்மதியும் சிறப்பாகவே இருக்கும். அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற நோக்கங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 5-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் அமையும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 5-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்த வரை அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். 29-10-2019 முதல் 5-ல் குரு சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 5-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். கூட்டாளிகள் தேவையற்ற வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது நல்லது.       

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 11-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 5-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் கிட்டும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனை தரும். வெளி வட்டார தொடர்புகளும் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கல்வி தரமும் உயர்வடையும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9

நிறம் – வெள்ளை, சிவப்பு

கிழமை – ஞாயிறு, திங்கள்

கல் – மாணிக்கம்

திசை- கிழக்கு

தெய்வம் – சிவன்

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 5-ல் சஞ்சரிப்பதால் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது. சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது. சர்ப சாந்தி செய்வது நல்லது.

 

வார ராசிப்பலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை 

வார ராசிப்பலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை 

தை 6 முதல் 12 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ்
திருக்கணித கிரக நிலை

 

ராகு
சூரிய புதன் கேது 
சனி குரு  சுக்கி சந்தி

கிரக மாற்றம்

29–01-2019 தனுசு சுக்கிரன் இரவு 11.28 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

துலாம்            27-01-2019 அதிகாலை 02.39 மணி முதல் 29-01-2019 காலை 08.59 மணி வரை.

விருச்சிகம்                29-01-2019 காலை 08.59 மணி முதல் 31-01-2019 மாலை 06.40 மணி வரை.

தனுசு               31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

27.01.2019 தை 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

30.01.2019 தை 16 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

01.02.2019 தை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதி பலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் ஒன்று சேரும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலை இருந்தாலும் அன்றாட பணிகளை செய்ய முடியும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 27, 28.

சந்திராஷ்டமம் –   29-01-2019 காலை 08.59 மணி முதல் 31-01-2019 மாலை 06.40 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்பு தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக நற்பலன்களை தரும் அமைப்பாகும். தொழில், வியாபார ரீதியாக மேன்மை, புதிய வாய்ப்புகளை அடையும் யோகம் உண்டாகும். இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான உறவு உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள். சனி பகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29, 30, 31.

சந்திராஷ்டமம் –   31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சூரியன், கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த விஷயத்திலும் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செவ்வாய் 10-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மன அமைதி குறையலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 29, 30, 31, 1, 2.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதாலும் தற்போது உள்ள சின்ன சின்ன பிரச்சினைகள் கூட குறைந்து சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள், உடன் பிறந்தவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். தாராள தனவரவால் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பூமி மனை வாங்கும் எண்ணங்களும் நிறைவேறும். மாணவர்கள் முயன்று படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 1, 2.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், கேது சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை எளிதில் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் இருக்கும் தடைகள் விலகி ஏற்றங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும், பொழுது போக்குகளையும் தவிர்த்தால் படிப்பில் முன்னேற்ற அடையலாம். துர்கையம்மன் வழிபாடு மேற்கொண்டால் துயரங்கள் விலகும்.

வெற்றி தரும் நாட்கள் – 27, 28.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு தான் கற்றறிந்து இருந்தாலும் எந்தவித அகம் பாவமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். குரு 3-ல் சஞ்சரிப்பதால் முடிந்தவரை வீண் செலவுகளை தவிர்ப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலன் கிட்டும். அசையும் அசையா சொத்துக்களால் லாபம் உண்டாகும். கடன்கள் குறையும். எடுக்கும் காரியங்களில் சிறிய தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் எதிர்பார்க்கும் லாபங்களை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகத்தில் சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 29, 30, 31.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் பண்பு கொண்டவராகவும் விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சகல விதத்திலும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்தால் நற்பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் – 27, 28, 1, 2.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற வழியில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகச் சிறப்பு. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதும், கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவதும் நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு கூடினாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டால் செல்வ நிலை உயரும்.

வெற்றி தரும் நாட்கள் – 29, 30, 31.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனி நடப்பதாலும் 2-ல் சூரியன் 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவு தேவைகேற்றபடி இருந்தாலும் குரு 12-ல் இருப்பதால் பணவிஷயத்தில் நிதானமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் லாபம் குறையாது. கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் சற்று தாமதமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிமித்தமாக சிறு சிறு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படலாம். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 27, 28, 1, 2.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதும் 3-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் சுபிட்சமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்ழ்டழழழ். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். புத்திரர்கள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணங்களால் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போட்டிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். சிவ வழிபாடு மேன்மையை உண்டாக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29, 30, 31.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் 2-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது உழைப்பிற்கான பலனை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெற சற்றே எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் நிலவினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை அடைவதில் சிறு தடை தாமதங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் – 29, 30, 31, 1, 2.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தாராள தனவரவு, தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகள் நண்பர்களாக மாறுவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். அம்மன் வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 1, 2.

சந்திராஷ்டமம் –   27-01-2019 அதிகாலை 02.39 மணி முதல் 29-01-2019 காலை 08.59 மணி வரை.

 

வார ராசிப்பலன் — ஜனவரி 13 முதல் 19 வரை 

வார ராசிப்பலன்ஜனவரி 13 முதல் 19 வரை 

மார்கழி 29 முதல் தை 5 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சந்தி செவ்
திருக்கணித கிரக நிலை

13.01.201

ராகு
கேது 
சூரிய சனி புதன் குரு  சுக்கி

கிரக மாற்றம்

14–01-2019 மகர சூரியன் இரவு 07.51 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மீனம்                  12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.

மேஷம்             14-01-2019 பகல் 12.53 மணி முதல் 16-01-2019 இரவு 08.09 மணி வரை.

ரிஷபம்              16-01-2019 இரவு 08.09 மணி முதல் 18-01-2019 இரவு 11.33 மணி வரை.

மிதுனம்            18-01-2019 இரவு 11.33 மணி முதல் 21-01-2019 அதிகாலை 00.05 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

13.01.2019 மார்கழி 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.15 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு புதன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் வரும் 14-ஆம் தேதி முதல் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு ஆரோக்கிய குறைவுகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்- மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உங்கள் ராசியதிபதி செவ்வாய் 12-ல் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது. திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். தொழில் வியாபார ரீதியாக உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தாமதமாக கிடைக்கும் என்றாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது நல்லது. அம்மன் வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்        14, 15, 16, 19.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், குரு சேர்க்கைப் பெற்று 7-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். வரும் 14-ஆம் தேதி முதல் 8-ல் சஞ்சரித்த சூரியன் 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று சாதகமான பலனை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் சற்று குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்        13, 14, 17, 18.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7-ல் சனி சஞ்சரிப்பதும் வரும் 14-ஆம் தேதி முதல் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படக்கூடும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும்.  ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. சிவ வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்        13, 14, 15, 16, 19.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். பணம் பல வழிகளில் தேடி வரும். ஆடம்பர தேவைகள் கூட பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உங்கள் ராசிக்கு சூரியன், கேது 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். புத்திர வழியில் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்        14, 15, 16, 17, 18.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் வரும் 14-ஆம் தேதி முதல் 6-ல் சஞ்சரிப்பதாலும் சுக்கிரன் 4-ல் புதன் 5-ல் சஞ்சரிப்பதாலும் தொழில் ரீதியாக பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தாராள தனவரவு உண்டாகி பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வீடு மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். செவ்வாய் 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மன அமைதியை அளிப்பதாக அமையும். கொடுக்கல்— வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்        17, 18, 19.

சந்திராஷ்டமம்         12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் 4-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலப் பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் உங்கள் ராசிக்கு குரு சாதகமற்று இருப்பதால் அகல கால் வைக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது. செய்யும் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். உடனிருப்பவர்களையும், உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. மாணவர்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்–       13, 19.

சந்திராஷ்டமம்         14-01-2019 பகல் 12.53 மணி முதல் 16-01-2019 இரவு 08.09 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களது செயல்களால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லது பல நடக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறப்புக்கள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளாலும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பாலும் அபிவிருத்தி பெருகி முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். துர்கையம்மன் வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்        13, 14, 15, 16.

சந்திராஷ்டமம்–        16-01-2019 இரவு 08.09 மணி முதல் 18-01-2019 இரவு 11.33 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், வரும் 14-ஆம் தேதி முதல் 3-ல் சூரியன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது, கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்        15, 16, 17, 18.

சந்திராஷ்டமம்         18-01-2019 இரவு 11.33 மணி முதல் 21-01-2019 அதிகாலை 00.05 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் 8-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வீண் விரயங்கள் உண்டாககூடும். வரும் 14-ஆம் தேதி முதல் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்ககூடும் என்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களையும், உற்றார், உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்றாலும் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையிடாமல் தம் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்        17, 18, 19.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சுக்கிரன், குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பண வரவானது சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக சிந்தித்துச் செயல்பட்டால் தான் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். குடும்பத்தினரையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்        13, 14, 19.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, லாப ஸ்தானத்தில் சனி, புதன் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகளும் விலகும். மாணவர்களிடமும் இருந்த மந்த நிலை நீங்கி படிப்பில் சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் ஈடுபட்டு நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். அம்மன் வழிபாடு நல்லது.

வெற்றி தரும் நாட்கள்        14, 15, 16.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பகவான் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதும் 14-ஆம் தேதி முதல் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் சிறப்பான பணவரவு, எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள், பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். அசையும் அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சனி பகவான் வழிபாடும், சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்–       13, 14, 17, 18.

Vaara Rasi Palan (23-12-2018 to 29-12-2018) | Weekly Astrosign Predictions

https://www.youtube.com/watch?v=Pmm_aursDYA&t=22s

வார ராசிப்பலன் – டிசம்பர் 23 முதல் 29 வரை 

வார ராசிப்பலன்டிசம்பர் 23 முதல் 29 வரை 

மார்கழி 8 முதல் 14  வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சந்தி
செவ் திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது 
சனி சூரிய குரு புதன் சுக்கி

கிரக மாற்றம் 

23-12-2018 மீனத்தில்  செவ்வாய் பகல் 12.57 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மிதுனம்            22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.

கடகம்                24-12-2018 மதியம் 01.01 மணி முதல் 26-12-2018 மதியம் 01.41 மணி வரை.

சிம்மம்               26-12-2018 மதியம் 01.41 மணி முதல் 28-12-2018 மதியம் 03.48 மணி வரை.

கன்னி                28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.16 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

27.12.2018 மார்கழி 12 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ராசியதிபதி செவ்வாய் 12-லும் குரு 8-லும் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் நிலவும் நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்து லாபகரமான பலன்கள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். அதிக முதலீடு கொண்ட செயல்களை செய்யாமல் இருப்பதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கும். மாணவர்களின் படிப்பில் இருந்த மந்தநிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  23, 24, 28, 29.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, புதன் சஞ்சரிப்பதாலும் வரும் 23-ஆம் தேதி முதல் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக அமைந்து உங்களது பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சிறப்பான லாபம் கிட்டும். தாராள தனவரவால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். சிவ வழிபாடு, சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்           24, 25, 26.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் குரு 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டானாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே திறம்பட செயல்பட முடியும். தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும் வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        23, 24, 27, 28.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

நல்ல கற்பனை திறனும், ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய சிறப்பான வாரமாக இவ்வாரம் இருக்கும். இதுவரை 8-ல் சஞ்சரித்த செவ்வாய் வரும் 23-ஆம் தேதி முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த சிறு சிறு பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் நன்றாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சற்று கடின முயற்சி மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        24, 25, 26, 29.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 5-ல் சஞ்சரிப்பதாலும் வரும் 23-ஆம் தேதி முதல் அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பதும் நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது. உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைக்குப்பின் கிட்டும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. அம்மன் வழிபாட்டையும் முருக வழிபாட்டையும் செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –        23, 24, 26, 27.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு ஓரளவு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        23, 24, 25, 29.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் குரு 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். பணவரவுக்கு பஞ்சமில்லாமல் உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்— மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப்பெறும். உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாகவும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடந்த கால தேக்கங்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வரும் 23-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகள் எல்லாம் முழுமையாக மறையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        24, 25, 26, 27, 28.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன் 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளகூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைக்கலாம். திருமண சுப காரியங்களில் சற்று தாமதநிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் அவர்கள் மூலம் வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளை தவிர்ப்பது சிறப்பு. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        27, 28, 29,

சந்திராஷ்டமம்         22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சரளமான பணவரவு ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்ணைப் பெற முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபாடு செய்தால் நற்பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –        23, 28, 29.

சந்திராஷ்டமம்         24-12-2018 மதியம் 01.01 மணி முதல் 26-12-2018 மதியம் 01.41 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் குரு, புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களும் படிப்பில் முழு ஈடுபாடு செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சிவ வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        23, 24, 25.

சந்திராஷ்டமம்         26-12-2018 மதியம் 01.41 மணி முதல் 28-12-2018 மதியம் 03.48 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        24, 25, 26, 27.

சந்திராஷ்டமம்         28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.16 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு, புதன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் சிறப்பான பணவரவு, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் இவ்வாரத்தில் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கூட எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகி சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறலாம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். மகாலட்சுமி வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        26, 27, 28, 29.

 

Today rasi palan – 20.12.2018

Today rasi palan – 20.12.2018

இன்றைய ராசிப்பலன் –  20.12.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

20-12-2018, மார்கழி 05 , வியாழக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 04.35 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 03.04 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை விரதம். பிரதோஷம். சிவ-முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சந்தி
செவ் திருக்கணித கிரக நிலை

20.12.2018

ராகு
கேது 
சனி சூரிய குரு புதன் சுக்கி

இன்றைய ராசிப்பலன் –  20.12.2018

மேஷம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளை விற்பதில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம்

இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.

சிம்மம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கன்னி

இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 09.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், கவலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 09.58 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது. வெளிப் பயணங்களில் கவனம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். கூட்டாளிகளின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வந்து சேரும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நண்பர்களின் சந்திப்பு நற்பலனை அளிக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

மீனம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்-றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் உண்டாகும். தொழிலில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.

சூரியனும் தொழில் அமைப்பும்

தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்