வார ராசிப்பலன்- – ஏப்ரல் 7 முதல் 13 வரை 

வார ராசிப்பலன்- – ஏப்ரல் 7 முதல் 13 வரை 

பங்குனி 24 முதல் 30 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சூரிய சந்தி செவ் ராகு
புதன் சுக்கி திருக்கணித கிரக நிலை

 

கேது குரு சனி

கிரக   மாற்றம்

10-04-2019 குரு வக்ர ஆரம்பம் இரவு 10.08 மணிக்கு

12-04-2019 மீனத்தில் புதன் அதிகாலை 04.24 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மேஷம்    06-04-2019 காலை 07.23 மணி முதல் 08-04-2019 மாலை 03.53 மணி வரை.

ரிஷபம்    08-04-2019 மாலை 03.53 மணி முதல் 10-04-2019 இரவு 10.33 மணி வரை.

மிதுனம்   10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.

கடகம்     13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

10.04.2019 பங்குனி 27 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களையும் உடனிருப்பவர்களையும் அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 8, 11, 12.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறமுடியும். மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் முருக வழிபாடு செய்வதும் மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10, 13.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்குப் பின் சாதகப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டு வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 7, 8, 11, 12.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்ககூடிய அமைப்பாகும். எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். விஷ்ணு வழிபாட்டையும் லட்சுமி வழிபாட்டையும் செய்தால் குடும்பத்தில சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 8, 9, 10, 13.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்கின்ற போது நிதானம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். 7-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது சிக்கல்கள் குறையும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவாலயங்களுக்கு சென்று சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    9, 10, 11, 12.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடி, குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பார்வதி தேவியை வணங்குவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    11, 12, 13.

சந்திராஷ்டமம் – 06-04-2019 காலை 07.23 மணி முதல் 08-04-2019 மாலை 03.53 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கி புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கடன்களும் சற்று குறையும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற கடின உழைப்பு தேவை. துர்கையம்மனை வழிபட்டு வந்தால் துயரங்கள் நீங்கும்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 13.

சந்திராஷ்டமம் –      08-04-2019 மாலை 03.53 மணி முதல் 10-04-2019 இரவு 10.33 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முடிந்தவரை முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களையும் நெருங்கியவர்களையும் அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். மாணவர்கள் எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சனிபகவான் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 8, 9, 10.

சந்திராஷ்டமம் –      10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பது தேவையற்ற அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. கொடுத்த வாக்கை காபாற்ற சற்று சிரமபட வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பெரிய முதலீடு கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    9, 10, 11, 12.

சந்திராஷ்டமம் –      13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக நிலவிய மறைமுக நெருக்கடிகள் எல்லாம் விலகி நிம்மதி ஏற்படும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். முடிந்தவரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, சனி கவசங்கள் படிப்பது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 11, 12, 13.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சனி, கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைத்து பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்தக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறமுடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். முருக வழிபாடு செய்வது சஷ்டி விரதம் மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    7, 8, 13.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்து வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10.

வார ராசிப்பலன் – மார்ச் 17 முதல் 23 வரை 

வார ராசிப்பலன் – மார்ச் 17 முதல் 23 வரை 

பங்குனி 3 முதல் 9 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சூரிய செவ் ராகு
புதன்(வ) திருக்கணித கிரக நிலை

 

சந்தி
  சுக்கி
சனி கேது குரு

கிரக   மாற்றம்

22–03–2019 கும்பத்தில் சுக்கிரன் அதிகாலை 3.44 மணிக்கு

22–03–2019 ரிஷபத்தில் செவ்வாய் மாலை 3.05 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

கடகம்       16-03-2019 இரவு 08.38 மணி முதல் 18-03-2019 இரவு 09.45 மணி வரை.

சிம்மம்      18-03-2019 இரவு 09.45 மணி முதல் 20-03-2019 இரவு 09.36 மணி வரை.

கன்னி      20-03-2019 இரவு 09.36 மணி முதல் 22-03-2019 இரவு 10.02 மணி வரை.

துலாம்      22-03-2019 இரவு 10.02 மணி முதல் 25-03-2019 அதிகாலை 01.08 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

17.03.2019 பங்குனி 03 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

22.03.2019 பங்குனி 08 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியை திதி ஹஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி, கேது 9-ல் இருப்பதால் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது, பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 21, 22, 23.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 9-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் ஏற்றமிகுந்த பலன்களை எளிதில் அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் படிப்பார்கள். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  17, 18, 23.   

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் 10-லும், செவ்வாய் 11-லும் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப காரியங்கள் சிறு தடைக்கு பின் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் நிறைவேறும்.  உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். துர்கையம்மன் வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்தால் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  19, 20.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, கேது, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்கு பெயர் புகழ் அனைத்தும் கூடக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். பொன், பொருள், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான பதவி உயர்வுகளையும் அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். துர்கையம்மனை வழிபடுவதும், ஏகாதசி அன்று பெருமாள் வழிபாடு மேற்கொள்வதும் சிறப்பான பலன்களை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –  17, 18, 21, 22.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் 4-ல் குரு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இ-ருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டி உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தடை தாமதத்திற்குப் பின் கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை குறைத்து கொள்வது நல்லது. சனி மற்றும் சிவ வழிபாட்டை மேற்கொள்வது, பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  19, 20, 23.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்— மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். புத்திரர்களால் மன நிம்மதி குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குரு 3-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானை வழிபடுவது மற்றும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  17, 18, 21, 22.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சனைகள் யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. செவ்வாய் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெற முடியும். முன் கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். வருகின்ற பங்குனி உத்திரம் அன்று முருக கடவுளை வணங்கினால் சகல நன்மைகளும் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  17, 18, 19, 20, 23.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகளால் லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மட்டும் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். சனி 2-ல் இருப்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது, குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதன் மூலம் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும் கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  19, 20, 21, 22.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். ஜென்ம ராசியில் சனி, கேது, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படும். பணம் வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். குரு 12-ல் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் கல்வியில் உயர்வடைய முடியும். சிவ வழிபாடு செய்வது பிரதோஷ காலங்களில் நந்தி வழிபாடு மேற்கொள்வதும் மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  21, 22, 23.

சந்திராஷ்டமம் –   16-03-2019 இரவு 08.38 மணி முதல் 18-03-2019 இரவு 09.45 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் நிலையில் சோர்வு, மந்தநிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்று குறையும்.  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி விளையாட்டு துறைகளிலும் உயர்வடைவார்கள். விநாயக பெருமானையும் முருக கடவுளையும் வணங்கி வழிபட்டால் காரிய தடைகள் விலகும்.

வெற்றி தரும் நாட்கள் –  17, 18, 23.

சந்திராஷ்டமம் –   18-03-2019 இரவு 09.45 மணி முதல் 20-03-2019 இரவு 09.36 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை பெறுவீர்கள். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அனைத்தையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று இடையூறுகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாட்டையும் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  17, 18, 19, 20.

சந்திராஷ்டமம் –   20-03-2019 இரவு 09.36 மணி முதல் 22-03-2019 இரவு 10.02 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுத்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் போது கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது, சனிக்கவசங்கள் படிப்பது நன்மையை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –  19, 20, 21, 22.

சந்திராஷ்டமம் – 22-03-2019 இரவு 10.02 மணி முதல் 25-03-2019 அதிகாலை 01.08 மணி வரை.

வார ராசிப்பலன் — பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை 

வார ராசிப்பலன் — பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை 

மாசி 12 முதல் 18 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ்
சூரிய புதன் திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது 
சனி சுக்கி குரு   சந்தி

 

கிரக மாற்றம்

24–2–2019 மகரத்தில் சுக்கிரன் இரவு 10.45 மணிக்கு

25–2–2019 மீனத்தில் புதன் காலை 08.53 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

துலாம்      23-02-2019 பகல் 11.27 மணி முதல் 25-02-2019 மாலை 04.42 மணி வரை.

விருச்சிகம்  25-02-2019 மாலை 04.42 மணி முதல் 28-02-2019 அதிகாலை 00.46 மணி வரை.

தனுசு       28-02-2019 அதிகாலை 00.46 மணி முதல் 02-03-2019 பகல் 12.40 மணி வரை.

மகரம்             02-03-2019 பகல் 12.40 மணி முதல் 05-03-2019 அதிகாலை 01.45 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

24.02.2019 மாசி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

எந்த ஒரு விஷயத்திலும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே மாத கோளான சூரியன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்பட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை தரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குரு பகவான் வழிபாடு அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  24, 2.

சந்திராஷ்டமம் –   25-02-2019 மாலை 04.42 மணி முதல் 28-02-2019 அதிகாலை 00.46 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக விலகி முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். சனி பகவான் வழிபாடும், ல-ட்சுமி வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  24, 25, 26, 27.

சந்திராஷ்டமம் –   28-02-2019 அதிகாலை 00.46 மணி முதல் 02-03-2019 பகல் 12.40 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, செவ்வாய் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல்– வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  26, 27, 28, 1.

சந்திராஷ்டமம் –   02-03-2019 பகல் 12.40 மணி முதல் 05-03-2019 அதிகாலை 01.45 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் சனி 6-ல், செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். சூரியன் 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். தூர பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். சிவ வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  28, 1, 2.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 4-ல் குரு சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களால் நெருக்கடி, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். நீங்கள் எதிலும் அவசரபடாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் இருந்தால் தான் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை திரும்ப கேட்டால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  24, 25, 2.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம், செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதும் வண்டி வாகனங்களில் செல்கின்ற போது கவனமாக இருப்பதும் உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். தூர பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சலை குறைக்கலாம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  25, 26, 27.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மை, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். செவ்வாய் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தாராள தனவரவுகளால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிறு தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  24, 25, 28, 1.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

முன்கோபம் உடையவராகவும், எளிதில்  உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடி, நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும் என்றாலும் உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றலை அடைவீர்கள். குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடும், சனி பகவான் வழிபாடும் மேற்கொண்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –  26, 27, 2.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடையும் யோகம் உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுதால் மகிழ்ச்சி நிலவும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் சில உதவிகள் தடையின்றி கிட்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவுகள்  மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். சனிப்ரீதியாக விநாயகர் வழிபாடும் ஆஞ்சநேயர் வழிபாடும் செய்து வந்தால் செல்வ நிலை உயரும்.

வெற்றி தரும் நாட்கள் –  24, 25, 28, 1, 2.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையே காணப்படும் என்றாலும் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். முன்கோபத்தை குறைப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு தேவையற்ற பொழுது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும். சிவ ஸ்தலங்களுக்கு செல்வது முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  24, 25, 26, 27.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்– மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியிலும் ஆதாயங்கள் கிட்டும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  26, 27, 28, 1.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.

மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன  ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குரு 9-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும். முருக வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள் –  28, 1, 2.

சந்திராஷ்டமம் –   23-02-2019 பகல் 11.27 மணி முதல் 25-02-2019 மாலை 04.42 மணி வரை.

 

வார ராசிப்பலன் – பிப்ரவரி 10 முதல் 16 வரை 

வார ராசிப்பலன்பிப்ரவரி 10 முதல் 16 வரை 

தை 27 முதல் மாசி 4 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

சந்தி செவ்
புதன் திருக்கணித கிரக நிலை

 

ராகு
சூரிய கேது 
சனி சுக்கி குரு

கிரக மாற்றம்

13–2–2019 கும்பத்தில் சூரியன் காலை 08.48 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மீனம்                  08-02-2019 காலை 08.18 மணி முதல் 10-02-2019 இரவு 07.37 மணி வரை.

மேஷம்             10-02-2019 இரவு 07.37 மணி முதல் 13-02-2019 அதிகாலை 04.19 மணி வரை.

ரிஷபம்              13-02-2019 அதிகாலை 04.19 மணி முதல் 15-02-2019 காலை 09.32 மணி வரை.

மிதுனம்            15-02-2019 காலை 09.32 மணி முதல் 17-02-2019 பகல் 11.24 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

10.02.2019 தை 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

11.02.2019 தை 28 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

15.02.2019 மாசி 03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத கோளான சூரியன் இவ்வாரம் 10, 11-ல் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்கள் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறுவதால் சிறப்பான லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 11, 12, 15, 16.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொண்டால் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்           10, 13, 14.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உங்களுக்கு அனுகூலங்களை தரும். 8-ல் சஞ்சரிக்ககூடிய சூரியன் வரும் 13-ஆம் தேதி முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க உள்ளதால் இருக்கும் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப் பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        10, 11, 12, 15, 16.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

நல்ல கற்பனை திறனும், சிறப்பான ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5-ல் குரு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், கேது இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டால் அனுகூலங்களை அடையலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். விஷ்ணு வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        11, 12, 13, 14.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த எதிர்ப்புகள், போட்டி பொறாமைகள் மறையும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. கணவன்- மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        13, 14, 15, 16.

சந்திராஷ்டமம்         08-02-2019 காலை 08.18 மணி முதல் 10-02-2019 இரவு 07.37 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள், எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். வரும் 13-ஆம் தேதி முதல் சூரியன் ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிக்க உள்ளதால் எதையும் சமாளிக்கும் பலமும் வலிமையும் கூடும். உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து கஷ்டங்கள் குறையும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களால் ஏமாற்றம் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய பொருட் தேக்கம் இருக்காது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        10, 15, 16.

சந்திராஷ்டமம்         10-02-2019 இரவு 07.37 மணி முதல் 13-02-2019 அதிகாலை 04.19 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சுக ஸ்தானமான 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் உடனிருப்பவர்களிடம் கருத்து வேறுபா-டு உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சிறு தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். சிவ வழிபாடு முருக வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        10, 11, 12.

சந்திராஷ்டமம்         13-02-2019 அதிகாலை 04.19 மணி முதல் 15-02-2019 காலை 09.32 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்திய சாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் பரிபூரண வெற்றி கிடைக்கும். உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். நெருங்கியவர்களிடம் பேசுகின்ற போது நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். சனி பகவான் வழிபாடும் மகாலட்சுமி வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        11, 12, 13, 14.

சந்திராஷ்டமம்         15-02-2019 காலை 09.32 மணி முதல் 17-02-2019 பகல் 11.24 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது உத்தமம். வரும் 13-ஆம் தேதி முதல் சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க உள்ளதால் குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றங்கள் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு அம்மன் வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        13, 14, 15, 16.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் உண்டாகி உங்களது தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்-.

வெற்றி தரும் நாட்கள் –        10, 15, 16.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        11, 12.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் அமைதி இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் அடைய முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதியுடன் பணியாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        10, 13, 14.

வார ராசிப்பலன்- பிப்ரவரி 3 முதல் 9 வரை  2019

வார ராசிப்பலன்– பிப்ரவரி 3 முதல் 9 வரை  2019

தை 20 முதல் 26 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ்
திருக்கணித கிரக நிலை

 

ராகு
சூரிய புதன் கேது  சந்தி
சனி சுக்கி  குரு 

 

கிரக மாற்றம்

5-2-2019 மேஷத்தில் செவ்வாய் இரவு 11.48 மணிக்கு

7-2-2019 கும்பத்தில் புதன் பகல் 10.10 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மகரம்                                03-02-2019 காலை 06.39 மணி முதல் 05-02-2019 இரவு 07.35 மணி வரை.

கும்பம்               05-02-2019 இரவு 07.35 மணி முதல் 08-02-2019 காலை 08.18 மணி வரை..

மீனம்                  08-02-2019 காலை 08.18 மணி முதல் 10-02-2019 இரவு 07.37 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

06.02.2019 தை 23 ஆம் தேதி புதன்கிழமை துவிதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனிபரணிகிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து அனுகூலங்கள் ஏற்படும். தாராள தனவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        3, 4, 5, 6, 7.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணிமிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இ-ருப்பதாலும் 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். கடந்த சில நாட்களாக இருக்கும் மனகுழப்பங்கள் குறையும். சிறப்பான பணவரவால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் அனுகூலங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு தேர்வில் வெற்றி பெறுவார்கள். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் ––       6, 7, 8, 9.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள்திருவாதிரைபுனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 8-ல் சூரியன், கேது சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் செவ்வாய் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாட்டையும் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        8, 9.

சந்திராஷ்டமம் –         03-02-2019 காலை 06.39 மணி முதல் 05-02-2019 இரவு 07.35 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம்பூசம்ஆயில்யம்.

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும் என்றாலும் இவ்வாரத்தில் சூரியன் கேது 7-ல் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடனில்லாத வாழ்க்கை அமையும். முடிந்த வரை குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சிவ வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        3, 4, 5.

சந்திராஷ்டமம் –         05-02-2019 இரவு 07.35 மணி முதல் 08-02-2019 காலை 08.18 மணி வரை.

சிம்மம் மகம்பூரம்உத்திரம் 1-ஆம் பாதம்.

பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், கேதுவுடன் 6-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். பொன் பொருள் சேரும். புதிய மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நல்ல மதிப்பெண்களும் கிட்டும். முருக வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        3, 4, 5, 6, 7.

சந்திராஷ்டமம் –         08-02-2019 காலை 08.18 மணி முதல் 10-02-2019 இரவு 07.37 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள்அஸ்தம்சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவி போகலாம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் மன உளைச்சல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன் மூலம் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கடின உழைப்புடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொண்டால் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        6 ,7, 8, 9.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள்சுவாதிவிசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சனி சேர்க்கைப் பெற்று 3-ஆம் வீட்டில் இருப்பதும் தனகாரகன் குரு தன ஸ்தானமான 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் கைகூடும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்கள் மூலம் சிறு விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவதோடு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் அடைய முடியும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        8, 9.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம்அனுஷம்கேட்டை.

என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். ராசியதிபதி செவ்வாய் 6-ஆம் தேதி முதல் 6-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிக்க இருப்பது அனுகூலமான பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சற்று அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது உத்தமம். சனி வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        3, 4, 5.

தனுசு  மூலம்பூராடம்உத்திராடம் 1-ஆம் பாதம்.

எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதாலும் 2-ல் சூரியன் 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடியான காலமாகும். போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். சிவ மற்றும் முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        6, 7.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள்திருவோணம்அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து லாபகரமான பலன்களை அடைவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        3, 4, 5, 8, 9.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம்பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சனி, சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். வரும் 6-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் சிறு சிறு தடைகள் விலகி ஏற்றங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சம், தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள். முருக வழிபாடு மேன்மையை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –        6, 7.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம்உத்திரட்டாதிரேவதி .

சமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், கேது, புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்களை பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        3, 4, 5. 8, 9.

வார ராசிப்பலன்- ஜனவரி 20 முதல் 26 வரை 

வார ராசிப்பலன்ஜனவரி 20 முதல் 26 வரை 

தை 6 முதல் 12 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ் சந்தி
திருக்கணித கிரக நிலை

 

ராகு
சூரிய கேது 
சனி புதன் குரு  சுக்கி

கிரக மாற்றம்

20–01-2019 மகர புதன் இரவு 09.06 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மிதுனம்            18-01-2019 இரவு 11.33 மணி முதல் 20-01-2019 இரவு 12.05 மணி வரை.

கடகம்                20-01-2019 இரவு 12.05 மணி முதல் 22-01-2019 இரவு 11.32 மணி வரை.

சிம்மம்               22-01-2019 இரவு 11.32 மணி முதல் 24-01-2019 இரவு 11.50 மணி வரை.

கன்னி                24-01-2019 இரவு 11.50 மணி முதல் 27-01-2019 அதிகாலை 02.39 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

23.01.2019 தை 09 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

முன் கோபம் அதிகம் இருந்தாலும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சூரியன், கேது தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 8-லும் செவ்வாய் 12-லும் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் கவனமாக செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களே உங்களுக்கு சங்கடங்களை உண்டாக்குவார்கள் என்பதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பணவரவுகள் ஓரளவிற்கு சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறமையுடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        20, 25, 26.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத பண்பும் தன்மையான குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசியை குரு பார்வை செய்வதும் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். சிறப்பான பணவரவும், சேமிப்புகள் அதிகரிக்கும் யோகமும் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று வாழ்க்கை தரம் உயரும். ராகு 3-ல் இருப்பதால் உங்களது முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் நோக்கங்களும் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை சோர்வு போன்றவை உண்டாகலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வதும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        21, 22.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி காரியங்களை சாதித்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் குரு 8-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. செவ்வாய் 10-ல் இருப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் யோகம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விடுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உறவினர்கள் மூலம் சில நேரங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, மற்றவர்களை அனுசரித்து செல்வது  உத்தமம். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல், வண்டி வாகனங்கள் மூலமாக விரயங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. பணம் கொடுக்கல்— வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்-. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        20, 23, 24.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் 6-ல் சனி சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். பொருளாதார ரீதியாகவும் அனுகூலங்களை அடைவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். சூரியன், கேது 7-ல் இருப்பதால் கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்பெற்று இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். சிவ வழிபாடும், அம்மன் வழிபாடும் மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        21, 22, 25, 26.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் எதையும் சமாளித்து தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், கேது சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதும் சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக மேன்மையான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் நல்ல லாபத்தை காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        20, 23, 24.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும், அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பதும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் கணவன்– மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிக்கனமாக இ-ருப்பதும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும் நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        20, 21, 22, 25, 26.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி 4-ல் புதன் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிர்ப்புகள் விலகும் நிலை உண்டாகும். எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய அளவுக்கு உங்கள் பலமும் வளமும் கூடும். குரு 2-ல் இருப்பதால் மங்களகரமான நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆடை அபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுதிடுவீர்கள். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        21, 22, 23, 24.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, மாத கோளான சூரியன், கேது சேர்க்கைப் பெற்று 3-ல் இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றங்களை அடைவீர்கள். சுக்கிரன் ஜென்ம ராசியில் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது உத்தமம். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        23, 24, 25, 26.

சந்திராஷ்டமம்         18-01-2019 இரவு 11.33 மணி முதல் 20-01-2019 இரவு 12.05 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு இந்த வாரத்தில் தேவையற்ற மனகுழப்பங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும் என்பதால் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் உங்களது நெருக்கடிகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை நிலவும். சிவ வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –        20, 25, 26.

சந்திராஷ்டமம்         20-01-2019 இரவு 12.05 மணி முதல் 22-01-2019 இரவு 11.32 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

அன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அற்புதமான பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றலாம். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும், இடமாற்றமும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் மங்களங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்           20, 21, 22.

சந்திராஷ்டமம்         22-01-2019 இரவு 11.32 மணி முதல் 24-01-2019 இரவு 11.50 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

வேகமாக பேசினாலும், திருத்தமாகவும், திறம்படவும் பேசக் கூடிய கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 10-ல் சுக்கிரன் 11-ல் சனி சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் யோகம், நினைத்ததை செயல்படுத்த கூடிய திறன் இந்த வாரத்தில் உண்டு. நீங்கள் நினைத்தது நடக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்களின் வருகை மனமகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் பேசும் போது பேச்சில் சற்று கவனமாக இருப்பது நல்லது. மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த கடன்களை வசூலித்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்           21, 22, 23, 24.

சந்திராஷ்டமம்         24-01-2019 இரவு 11.50 மணி முதல் 27-01-2019 அதிகாலை 02.39 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.

மற்றவர்களின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன், புதனுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் தொழில் வியாபாரத்தில் லாபத்தை ஏற்படுத்தும்  அமைப்பாகும். வெளி தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளும் சாதகமாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தேவைகள் பூர்த்தியாவதுடன் அசையும் அசையா சொத்துக்களும் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சிறு சிறு மனக்கவலைகள் உண்டாகலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பிறகு அனுகூலப்பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        23, 24, 25, 26.

 

வார ராசிப்பலன் – ஜனவரி 6 முதல் 12 வரை 2019 

வார ராசிப்பலன் – ஜனவரி 6 முதல் 12 வரை 2019 

மார்கழி 22 முதல் 28 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ்
திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது 
சூரிய சனி புதன் சந்தி குரு சுக்கி

 

                               

கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

தனுசு        04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை.

மகரம்              07-01-2019 அதிகாலை 00.25 மணி முதல் 09-01-2019 பகல் 01.14 மணி வரை.

கும்பம்      09-01-2019 பகல் 01.14 மணி முதல் 12-01-2019 அதிகாலை 02.03 மணி வரை.

மீனம்        12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம்   அசுவனிபரணிகிருத்திகை 1-ஆம் பாதம்.

நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளி தொடர்புகளால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது உத்தமம். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். கொடுக்கல்- வாங்கலில் மற்றவர்களை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        7, 8, 9, 10, 11.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணிமிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். கொடுத்த கடன்களும் வசூலாகும். சூரியன், சனி 8-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் வயிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் விலகி சாதகப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். சிவ பெருமானையும் சனி பகவானையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        9, 10, 11, 12.

சந்திராஷ்டமம் –         04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள்திருவாதிரைபுனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் ராகு 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவு, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குரு 6-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சிவ வழிபாட்டையும் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        6, 12.

சந்திராஷ்டமம் –         07-01-2019 அதிகாலை 00.25 மணி முதல் 09-01-2019 பகல் 01.14 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம்பூசம்ஆயில்யம்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குரு பகவான் 5-ல் சாதகமாக இருப்பதால் திருமண முயற்சிகளில் நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி நிலவும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கான பலனை எளிதில் அடைவீர்கள். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பர். அம்மன் வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        6, 7, 8.

சந்திராஷ்டமம் –         09-01-2019 பகல் 01.14 மணி முதல் 12-01-2019 அதிகாலை 02.03 மணி வரை.

.

சிம்மம் மகம்பூரம்உத்திரம் 1-ஆம் பாதம்.

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 4-ல் சுக்கிரன் 6-ல் கேது சஞ்சரிப்பதும் வலமான பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சினைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் இருக்காது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். மாணவர்களுக்கு பெற்றோர்கள் மூலம் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாட்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        7, 8, 9, 10, 11.

சந்திராஷ்டமம் –         12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள்அஸ்தம்சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் 4-ல் சஞ்சரிப்பதாலும் 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். சூரியன் 4-லும் செவ்வாய் 7-லும் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, வீண் அலைச்சல் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்கு பிறகு அனுகூலப்பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக செயல்பட்டால் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிவ வழிபாட்டையும், முருக வழிபாட்டையும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        9, 10, 11, 12.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள்சுவாதிவிசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் மறைமுக எதிர்ப்புகள், பிரச்சினைகள் எல்லாம் விலகி எல்லா வகையிலும் ஏற்றங்களை பெறுவீர்கள். உங்களது பலமும் வலிமையும் கூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் தக்க சமயத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். அம்மன் வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        6, 12.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம்அனுஷம்கேட்டை.

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 3-ல் கேது சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சனி, சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி சங்கு மலர்களால் அர்ச்சனை செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் ––       7, 8, 9.

தனுசு  மூலம்பூராடம்உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவும். எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்து வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் ––       6, 9, 10, 11.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள்திருவோணம்அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் இருந்த தடைகள் விலகி வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சிறப்பான பணவரவால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். 7-ல் ராகு 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சனி பகவானை வழிபடுவதும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் ––       7, 8, 9, 12.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம்பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், தொழில் ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்ளால் அனுகூலப் பலன் உண்டாகும். சிறப்பான பணவரவால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி  லாபம் அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் ––       6, 9, 10, 11.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம்உத்திரட்டாதிரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீனராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு பகவான் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைவேறும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டிகள் வம்பு வழக்குகள் எல்லாம் குறைந்து லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம். துர்கையம்மனுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் ––       6, 7, 8, 12.

வார ராசிப்பலன்- டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை 

வார ராசிப்பலன்டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை 

மார்கழி 15 முதல் 21 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ்
திருக்கணித கிரக நிலை

30.12.2018

ராகு
கேது 
சூரிய சனி குரு புதன்   சுக்கி சந்தி

 

கிரக மாற்றம் 

01-01-2019 தனுசில் புதன் காலை 09.50 மணிக்கு

01-01-2019 விருச்சிகத்தில் சுக்கிரன் இரவு 08.43 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

கன்னி                28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.19 மணி வரை.

துலாம்               30-12-2018 இரவு 08.19 மணி முதல் 02-01-2019 அதிகாலை 03.23 மணி வரை.

விருச்சிகம்     02-01-2019 அதிகாலை 03.23 மணி முதல் 04-01-2019 பகல் 12.54 மணி வரை.

தனுசு                  04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

31.12.2018 மார்கழி 16 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

02.01.2019 மார்கழி 18 ஆம் தேதி புதன்கிழமை துவாதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

03.01.2019 மார்கழி 19 ஆம் தேதி வியாழக்கிழமை திரியோதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் விரய ஸ்தானமான 12-லும் தனகாரகன் குரு 8-லும் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனமாக செயல்படுவது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்து இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைக்குப் பின் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் சாதகமான செயல்பாட்டால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        30, 31, 1.

சந்திராஷ்டமம்         02-01-2019 அதிகாலை 03.23 மணி முதல் 04-01-2019 பகல் 12.54 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

எந்த கஷ்டத்தையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவிற்கு சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் பலமாக சஞ்சரிப்பதும் குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாத கோளான சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றி கொள்ள முடியும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சிவ வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்தால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        31, 1, 2, 3.

சந்திராஷ்டமம்         04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசை துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் ராகு 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, நெருங்கியவர்களால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய வாரமாக இவ்வாரம் இருப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்களும், உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்றாலும் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக பாடுபட வேண்டியிருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        2, 3, 4, 5.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

கோபமாகவும் வேகமாகவும் பேசினாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு பலமாக சஞ்சரிப்பதும் ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். சிறப்பான பணவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். உடலில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருப்பதால் கடந்த கால நெருக்கடிகள் குறைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த உயர்வுகள் சிறு தடைக்குப் பின் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அம்மன் வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்து வந்தால் மேன்மைகளை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –        30, 4, 5.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 5-லும் கேது 6-லும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஏற்படும் தேவையற்ற வாக்கு வாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். திருமணம் முயற்சிகளில் தாமத பலன்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் 8-ல் இருப்பதால் பயணங்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம். முருக கடவுளையும் சனி பகவானையும் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        31, 1.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

அனைவரிடத்திலும் அன்பும் பண்பும், மரியாதை கொண்டவராகவும், தெய்வ பக்தி உடையவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்களுக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனைப் பெற முடியும். வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றியினை அடையலாம். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப ஊதிய உயர்வும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        30, 2, 3, 4.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தம்முடைய எந்த பொருட்களையும் கேட்பவருக்கு தானமளிக்க கூடிய பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சனி, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாராமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குரு 2-ல் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி மேன்மையடையும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள். நவகிரகங்களில் சர்ப்ப கிரகங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        31, 1, 4, 5.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எவ்வளவு தான் கற்றறிந்து இருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கேது 3-லும் வரும் 1-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால் ஒருசில உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உறவினர்கள் ஓரளவு சாதகமாகச் செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துகளால் சிறு சிறு செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்வதில் எந்த தடையும் இருக்காது. உத்தியோகஸ்தர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். சனி பகவானை வழிபடுவதும், சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        30, 2, 3.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பதன் மூலம் ஏற்படும் சிறுசிறு நெருக்கடிகளை சமாளிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –        30, 31, 1, 5.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நற்பலன்கள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, சிறப்பான பணவரவால் அனைத்து பிரச்சினைகளும் விலகி மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள் என்றாலும் அளவோடு வைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் நல்ல லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மேலதிகாரிகளிடம் மட்டும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –                        31, 1, 2, 3.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக லாபகரமான பலன்களை பெறுவீர்கள். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது உத்தமம். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –                        2, 3, 4, 5.

சந்திராஷ்டமம்         28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.19 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும் 10-ல் சூரியன் 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு நிலவிய தடைகள் எல்லாம் விலகி எல்லா வகையிலும் நற்பலன்களை அடைவீர்கள். குரு பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். முருக வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டால் மங்களங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        30, 4, 5.

சந்திராஷ்டமம்         30-12-2018 இரவு 08.19 மணி முதல் 02-01-2019 அதிகாலை 03.23 மணி வரை.

 

வார ராசிப்பலன் – டிசம்பர் 23 முதல் 29 வரை 

வார ராசிப்பலன்டிசம்பர் 23 முதல் 29 வரை 

மார்கழி 8 முதல் 14  வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சந்தி
செவ் திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது 
சனி சூரிய குரு புதன் சுக்கி

கிரக மாற்றம் 

23-12-2018 மீனத்தில்  செவ்வாய் பகல் 12.57 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மிதுனம்            22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.

கடகம்                24-12-2018 மதியம் 01.01 மணி முதல் 26-12-2018 மதியம் 01.41 மணி வரை.

சிம்மம்               26-12-2018 மதியம் 01.41 மணி முதல் 28-12-2018 மதியம் 03.48 மணி வரை.

கன்னி                28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.16 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

27.12.2018 மார்கழி 12 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ராசியதிபதி செவ்வாய் 12-லும் குரு 8-லும் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் நிலவும் நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்து லாபகரமான பலன்கள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். அதிக முதலீடு கொண்ட செயல்களை செய்யாமல் இருப்பதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கும். மாணவர்களின் படிப்பில் இருந்த மந்தநிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  23, 24, 28, 29.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, புதன் சஞ்சரிப்பதாலும் வரும் 23-ஆம் தேதி முதல் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக அமைந்து உங்களது பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சிறப்பான லாபம் கிட்டும். தாராள தனவரவால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். சிவ வழிபாடு, சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்           24, 25, 26.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் குரு 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டானாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே திறம்பட செயல்பட முடியும். தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும் வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        23, 24, 27, 28.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

நல்ல கற்பனை திறனும், ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய சிறப்பான வாரமாக இவ்வாரம் இருக்கும். இதுவரை 8-ல் சஞ்சரித்த செவ்வாய் வரும் 23-ஆம் தேதி முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த சிறு சிறு பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் நன்றாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சற்று கடின முயற்சி மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        24, 25, 26, 29.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 5-ல் சஞ்சரிப்பதாலும் வரும் 23-ஆம் தேதி முதல் அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பதும் நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது. உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைக்குப்பின் கிட்டும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. அம்மன் வழிபாட்டையும் முருக வழிபாட்டையும் செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –        23, 24, 26, 27.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு ஓரளவு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        23, 24, 25, 29.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் குரு 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். பணவரவுக்கு பஞ்சமில்லாமல் உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்— மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப்பெறும். உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாகவும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடந்த கால தேக்கங்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வரும் 23-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகள் எல்லாம் முழுமையாக மறையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        24, 25, 26, 27, 28.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன் 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளகூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைக்கலாம். திருமண சுப காரியங்களில் சற்று தாமதநிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் அவர்கள் மூலம் வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளை தவிர்ப்பது சிறப்பு. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        27, 28, 29,

சந்திராஷ்டமம்         22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சரளமான பணவரவு ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்ணைப் பெற முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபாடு செய்தால் நற்பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –        23, 28, 29.

சந்திராஷ்டமம்         24-12-2018 மதியம் 01.01 மணி முதல் 26-12-2018 மதியம் 01.41 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் குரு, புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களும் படிப்பில் முழு ஈடுபாடு செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சிவ வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        23, 24, 25.

சந்திராஷ்டமம்         26-12-2018 மதியம் 01.41 மணி முதல் 28-12-2018 மதியம் 03.48 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        24, 25, 26, 27.

சந்திராஷ்டமம்         28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.16 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு, புதன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் சிறப்பான பணவரவு, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் இவ்வாரத்தில் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கூட எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகி சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறலாம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். மகாலட்சுமி வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        26, 27, 28, 29.

 

வார ராசிப்பலன் – டிசம்பர் 9 முதல் 15 வரை 

வார ராசிப்பலன் – டிசம்பர் 9 முதல் 15 வரை 

கார்த்திகை 23 முதல் 29 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ் திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது 
சனி சந்தி சூரிய குரு புதன்   சுக்கி

 

கிரக மாற்றம்  இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

தனுசு                  08-12-2018 காலை 06.04 மணி முதல் 10-12-2018 மாலை 05.20 மணி வரை.

மகரம்                                10-12-2018 மாலை 05.20 மணி முதல் 13-12-2018 காலை 06.17 மணி வரை.

கும்பம்               13-12-2018 காலை 06.17 மணி முதல் 15-12-2018 மாலை 06.45 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

09.12.2018 கார்த்திகை 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

12.12.2018 கார்த்திகை 26 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

13.12.2018 கார்த்திகை 27 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

14.12.2018 கார்த்திகை 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி, லாப ஸ்தானத்தில் ராசியதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சுக்கிரன் 7-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஓற்றுமை, மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய அமைப்பு இவ்வாரத்தில் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். குரு, சூரியன் சாதகமற்று இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்        11, 12, 13, 14, 15.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் 3-ல் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து ஆடம்பர தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். அம்மன் வழிபாடும், சனிபகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்        13, 14, 15.

சந்திராஷ்டமம் 08-12-2018 காலை 06.04 மணி முதல் 10-12-2018 மாலை 05.20 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சனி சஞ்சரிப்பதால் முடிந்த வரை உடன் இருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அசையா சொத்துகளால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்        9, 10.

சந்திராஷ்டமம்  10-12-2018 மாலை 05.20 மணி முதல் 13-12-2018 காலை 06.17 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். ஜென்ம ராசியில் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், வாகனத்தில் செல்கின்ற போது நிதானத்துடன் செல்வதும் நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடமும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்        9, 10, 11, 12.

சந்திராஷ்டமம்  13-12-2018 காலை 06.17 மணி முதல் 15-12-2018 மாலை 06.45 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும் என்றாலும் 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதும், சிக்கனத்தை கடைபிடிப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சிவ பெருமானையும், முருக கடவுளையும் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்        11, 12, 13,             14, 15.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவால் உங்களது கடந்த கால பிரச்சினைகள் குறையும் அமைப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்        13, 14, 15.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் ஜென்ம ராசியில் சாதகமாக சஞ்சரிப்பதும் 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதும் உங்களுக்கு வலமான பலன்களை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்        9, 10.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், குரு சஞ்சரிப்பதாலும் 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள், வாக்குவாதங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி எந்த வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்        11, 12.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பண வரவுகளில் இருந்த தேக்கங்கள் நீங்கி சரளமான நிலை இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு ஏழரைச் சனி நடப்பதாலும் 12-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதாலும் பணவிஷயத்தில் மிகவும் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்        9, 10, 13, 14, 15.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், குரு, புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவதன் மூலம் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்படுவார்கள். விநாயகர் வழிபாடு செய்து வந்தால் காரிய தடை விலகும்.

வெற்றி தரும் நாட்கள்        11, 12.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 10-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வதால் அவர்களால் நற்பலன்களை பெற முடியும். பொன், பொருள் சேர்க்கை அமையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்        9, 10, 13, 14, 15.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பகவான் சூரியன், புதனுடன் 9-ல் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பது மட்டுமின்றி தடைப்பட்ட சுபகாரியங்களும் எளிதில் கைகூடும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிறப்பான பண வரவால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்        9, 10, 11, 12.