வார ராசிப்பலன் – அக்டோபர் 20 முதல் 26 வரை

வார ராசிப்பலன் – அக்டோபர் 20 முதல் 26 வரை

ஐப்பசி 3 முதல் 9 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சந்தி ராகு
திருக்கணித கிரக நிலை

 

சனி கேது குரு  சூரிய புதன் சுக்கி செவ்

 

கிரக மாற்றம்

23-10-2019 விருச்சிகத்தில் புதன் இரவு 11.12 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மிதுனம்     19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.

கடகம்       21-10-2019 பகல் 11.40 மணி முதல் 23-10-2019 மாலை 03.15 மணி வரை.

சிம்மம்      23-10-2019 மாலை 03.15 மணி முதல் 25-10-2019 மாலை 04.20 மணி வரை.

கன்னி      25-10-2019 மாலை 04.20 மணி முதல் 27-10-2019 மாலை 04.30 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

24.10.2019 ஐப்பசி 07 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியான மேன்மையான பலன்களை தரும் அமைப்பாகும். சூரியன் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். பொன் பொருள் சேரும். புதிய மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நல்ல மதிப்பெண்களும் கிட்டும். தட்சிணாமூர்த்தி வழிபாடும் சிவ வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  20, 21, 26.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும், குரு பகவான் 7-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் ஏற்றத்தை உண்டாக்கும் அமைப்பாகும். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். 2-ல் ராகு, 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சற்று அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். அசையும்  அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது உத்தமம். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –  21, 22, 23.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு 6-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  20, 21, 24, 25.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்களை பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  22, 23, 26.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து லாபகரமான பலன்கள் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  20, 24, 25.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாட்டையும் முருக வழிபாட்டையும் மேற்கொண்டால் வாழ்வில் வலமான பலன்களை பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள் –  20, 21, 22, 26.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராசியதிபதி சுக்கிரன் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் உங்களுக்கு ஏற்றத்தை தரக்கூடிய சிறப்பான அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றியும், தாராள தனவரவுகள் உண்டாகும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து அனுகூலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். மகா லட்சுமி தேவியை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  21, 22, 23, 24.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, 12-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வது என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைத்து உங்களுடைய நெருக்கடிகள் குறையும். முடிந்த வரை வீண் செலவுகளை குறைப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாட்டையும் நந்தி வழிபாட்டையும் மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  24, 25, 26.   

சந்திராஷ்டமம் –   19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சம்,  தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள். சனி பகவான் வழிபாட்டையும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும் செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  20, 25, 26.

சந்திராஷ்டமம் –   21-10-2019 பகல் 11.40 மணி முதல் 23-10-2019 மாலை 03.15 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், புதன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் கைகூடும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்ககூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். கொடுத்து கடன்களும் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவதோடு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் அடைய முடியும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வழிபட்டு வந்தால் தொல்லைகள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  20, 21, 22.

சந்திராஷ்டமம் –   23-10-2019 மாலை 03.15 மணி முதல் 25-10-2019 மாலை 04.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். நெருங்கியவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். கடந்த சில நாட்களாக இருக்கும் மனகுழப்பங்கள் குறையும். சிறப்பான பணவரவால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் அனுகூலங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு தேர்வில் வெற்றி பெறுவார்கள். துர்கையம்மனை ராகு காலங்களில் வழிபட்டு வந்தால் இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.

வெற்றி தரும் நாட்கள் –  22, 23, 24.

சந்திராஷ்டமம் –   25-10-2019 மாலை 04.20 மணி முதல் 27-10-2019 மாலை 04.30 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

சமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், பொருளாதார ரீதியாக நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவி போகலாம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் மன உளைச்சல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பொருளாதார நிலையானது சற்று சாதகமாக இருந்து உங்களது அனைத்து நெருக்கடிகளும் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கடின உழைப்புடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும். பிரதோஷ நாளில் சிவ வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள் –  23, 24, 25, 26.

 

Vaara Rasi Palan (29-09-2019 to 05-10-2019)

Vaara Rasi Palan (08-09-2019 to 14-09-2019)

வார ராசிப்பலன் – செப்டம்பர் 8 முதல் 14 வரை

வார ராசிப்பலன் – செப்டம்பர் 8 முதல் 14 வரை 

ஆவணி 22 முதல் 28 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

ராகு
திருக்கணித கிரக நிலை

 

சூரிய புதன் செவ் சுக்கி
கேது சந்தி சனி (வ) குரு

கிரக மாற்றம்

10-09-2019 கன்னியில் சுக்கிரன் அதிகாலை 01.41 மணிக்கு

11-09-2019 கன்னியில் புதன் காலை 04.59 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

தனுசு       07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.

மகரம்            09-09-2019 மாலை 03.10 மணி முதல் 12-09-2019 அதிகாலை 03.28 மணி வரை.

கும்பம்      12-09-2019 அதிகாலை 03.28 மணி முதல் 14-09-2019 மாலை 04.10 மணி வரை.

மீனம்        14-09-2019 மாலை 04.10 மணி முதல் 17-09-2019 அதிகாலை 04.20 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

08.09.2019 ஆவணி 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

11.09.2019 ஆவணி 25 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

12.09.2019 ஆவணி 26 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை

13.09.2019 ஆவணி 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு சர்ப கிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 5-ல் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். 5-ல் சூரியன், 8-ல் குரு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபககாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த லாபங்கள் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். நவகிரகங்களில் குரு பகவானுக்கும், சனி பகவானுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  9, 10, 11, 12, 13.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று இவ்வாரத்தில் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும் குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பயணங்களால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படலாம். கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். அரசு வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் அம்பிகையையும் வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –  12, 13, 14.

சந்திராஷ்டமம் –   07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தனாமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெற்று முன்னேறுவீர்கள். உடல் நிலையில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். சனி, கேது 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். சனி பகவான் வழிபாட்டை மேற்கொள்வதும், தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  8, 14.

சந்திராஷ்டமம் –   09-09-2019 மாலை 03.10 மணி முதல் 12-09-2019 அதிகாலை 03.28 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை பெற்று கடந்த கால சோதனை எல்லாம் மறையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வேலையாட்களை மட்டும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் குடும்ப ஓற்றுமை சற்று குறையும். 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவ வழிபாடு செய்வது, பௌர்ணமியன்று கிரிவலம் வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10, 11.

சந்திராஷ்டமம் –   12-09-2019 அதிகாலை 03.28 மணி முதல் 14-09-2019 மாலை 04.10 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

பிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு சுக்கிரன், புதன் ஜென்ம ராசியிலும், 2-லும் சஞ்சரிப்பதும், ராகு 11-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்வதும் முருக வழிபாடு செய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  9, 10, 11, 12, 13.

சந்திராஷ்டமம் –   14-09-2019 மாலை 04.10 மணி முதல் 17-09-2019 அதிகாலை 04.20 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் மூலமும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முருக கடவுளை வணங்கி வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  12, 13, 14.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்களுக்கு தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலமானப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  8, 9, 14.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதும் புதன், சுக்கிரன் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் விலகி சாதகமான பலன்களை அடைவீர்கள். உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு பொறுப்பான பதவி உயர்வுகளும் கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –– 9, 10, 11.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9, 10-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்ககூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. விநாயகர் வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –– 8, 9, 12, 13.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தனக்காரகன் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பர தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். சூரியன், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் இருப்பது, பௌர்ணமியன்று கிரிவலம் வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –– 10, 11, 14.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக அமையப்பெற்று பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் செல்வ நிலை உயரும்.

வெற்றி தரும் நாட்கள் –  8, 12, 13.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .   

சமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  8, 9, 10, 11.

வார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை 

வார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை 

ஆடி 12 முதல் 18 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சந்தி ராகு
திருக்கணித கிரக நிலை

 

செவ் சூரிய

புதன் (வ) சுக்கி

கேது

சனி (வ)

குரு(வ)

 

கிரக மாற்றம்

30-07-2019 மிதுனத்தில் புதன் பகல் 12.00 மணிக்கு

01-08-2019 புதன் வக்ர முடிவு காலை 09.27 மணிக்கு

03-08-2019 கடகத்தில் புதன் காலை 06.00 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

ரிஷபம்         27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.

மிதுனம்         29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.

கடகம்          31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை.

சிம்மம்         02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

28.07.2019 ஆடி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

29.07.2019 ஆடி 13 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரனும், 3-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சிறப்பான பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். முடிந்தவரை பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலமும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –          29, 30.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும், பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். துர்கையம்மனையும் சனி பகவானையும் வணங்கி வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –          28, 31, 1.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றலும், சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் திறனும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாரம் என்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழுவ கூடும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் இறையருள் பரிபூரணமாக கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –          29, 30, 2, 3.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நினைத்தது நடக்கும் யோகம், தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் அமைப்பு உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். முருக வழிபாட்டையும் துர்கையம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டால் குடும்பத்தில் சுபசெய்திகள் வந்து சேரும்.

வெற்றி தரும் நாட்கள் –          28, 31, 1.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்றாலும் விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது பல்வேறு நெருக்கடிகளை உண்டாக்கும். எதிலும் நிதானமாக செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் நெருங்கியவர்கள் மூலமாக கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வணங்கினால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –          28, 29, 30, 2, 3.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தொழில் வியாபாரத்தில் லாபகரமான நிலை உண்டாகும். இருக்கும் பிரச்சினைகள் குறைந்து ஏற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து மனமாறி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். சிலருக்கு வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சனி பகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –          29, 30, 31, 1.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, சகல விதத்திலும் ஏற்றம் அடையக்கூடிய நல்ல வாரமாக இவ்வாரம் இருக்கும். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டால் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகளிலும் சாதிக்க முடியும். அம்மன் வழிபாடு செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –          31, 1, 2, 3.

சந்திராஷ்டமம் – 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் சிறு சிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பேச்சில் கவனமாக இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருந்தாலும் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –          28, 2, 3.

சந்திராஷ்டமம் – 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு இவ்வாரத்தில் ஜென்ம ராசியில் சனி, கேது, அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். தொழில், வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலங்கள் ஏற்பட்டாலும் அலைச்சல்களும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் சற்று பொறுப்புடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று விட முடியும். முருக வழிபாட்டை மேற்கொண்டால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

வெற்றி தரும் நாட்கள் –          28, 29, 30.

சந்திராஷ்டமம் – 31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –          29, 30, 31, 1.

சந்திராஷ்டமம் – 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய, அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி, கேது 11-ல் இருப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சாதகமான பலன்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைப்பதுடன் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலப்பலன் உண்டா-கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நற்பலனை அடைவீர்கள். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். மகா லட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். செல்வ நிலை உயரும்.

வெற்றி தரும் நாட்கள் –          31, 1, 2, 3.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

தயாள குணம், பொறுமை, தன்னம்பிக்கை, உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதாலும் பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகி உங்களது அனைத்து பிரச்சினைகளும் விலக கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சூரியன், செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் வழியில் சாதகப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அம்மன் வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம். ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –     28, 2, 3.

வார ராசிப்பலன் – ஜுலை 21 முதல் 27 வரை 

வார ராசிப்பலன் – ஜுலை 21 முதல் 27 வரை 

ஆடி 5 முதல் 11 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

ராகு சுக்கி
சந்தி திருக்கணித கிரக நிலை

 

செவ் சூரிய

புதன் (வ)

கேது

சனி (வ)

குரு(வ)

 

கிரக மாற்றம்

23-07-2019 கடகத்தில் சுக்கிரன் பகல் 12.49 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

கும்பம்      19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.

மீனம்       22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.

மேஷம்     24-07-2019 மாலை 03.40 மணி முதல் 27-07-2019 அதிகாலை 01.10 மணி வரை.

ரிஷபம்     27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

21.07.2019 ஆடி 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம்.  தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இவ்வாரத்தில் சூரியன், செவ்வாய் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் நலத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்– வாங்கல் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் –  21, 25, 26.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் விலகி மனமகிழ்ச்சி அடைவீர்கள். பனவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி மற்ற கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். சனி பகவான் வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  22, 23, 27.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது பிரச்சினைகள் விலகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ பெருமானை வணங்குவதும் முருக வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –  22, 23, 24, 25, 26.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்ப்பதும், சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றங்களை உங்களுக்கு தரும் அமைப்பாகும். தற்போது நிலவும் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொள்வதாலும், உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்   25, 26, 27.

சந்திராஷ்டமம் –   19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் சில ஏற்படும் என்றாலும் சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் சிறப்பான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சஷ்டி அன்று முருக பெருமானை வணங்கி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  21, 27.

சந்திராஷ்டமம் –   22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாராள தனவரவுகள் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்வதில் எந்த தடையும் இருக்காது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். சனிக்கிழமை சனிபகவானை வழிபடுவதும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் நன்மையை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள்   21, 22, 23.

சந்திராஷ்டமம் – – 24-07-2019 மாலை 03.40 மணி முதல் 27-07-2019 அதிகாலை 01.10 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும் தொழில் வியாபார ரீதியாக வெற்றி மேல் வெற்றி தரும் அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வளர்ச்சிக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். தாராள தனவரவுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்மன் வழிபாட்டையும், விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்   22, 23, 24, 25, 26.

சந்திராஷ்டமம் –   27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டு. போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும். கூட்டாளிகளும் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். சிறப்பான பண வரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். சனி, கேது 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது நிதானத்தை கடைப்பிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கினால் சகல நன்மைகளும் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  24, 25, 26, 27.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரமாகும். தேவையற்ற அலைச்சல்கள், வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். முடிந்த வரை புதிய முயற்சிகளை தவிர்ப்பது பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் கிட்டும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் ஆதரவால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான நிலை இருக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு செய்வது, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  21, 27.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் ராகு, 7-ல் சுக்கிரன், 11-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் உன்னத அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவான் வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  22, 23, 24.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவிடையே இருந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் சந்தோஷமும் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். வியாழக்கிழமை குருபகவான் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்   21, 25, 26.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், சூரியன், புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் எந்தவித பிரச்சனைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தாராள தனவரவால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து சென்றால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். முடிந்த வரை உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த கடன்க-ளும் வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  22, 23, 27.

 

வார ராசிப்பலன் – ஜுலை 14 முதல் 20 வரை 

வார ராசிப்பலன் – ஜுலை 14 முதல் 20 வரை 

ஆனி 29 முதல் ஆடி 4 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சூரிய ராகு சுக்கி
திருக்கணித கிரக நிலை

 

செவ்

புதன் (வ)

கேது சனி (வ) குரு(வ)

சந்தி

கிரக மாற்றம்

17-07-2019 கடகத்தில் சூரியன் அதிகாலை 04.33 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

விருச்சிகம்  12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.

தனுசு       14-07-2019 மாலை 05.25 மணி முதல் 17-07-2019 அதிகாலை 03.15 மணி வரை.

மகரம்            17-07-2019 அதிகாலை 03.15 மணி முதல் 19-07-2019 பகல் 02.55 மணி வரை.

கும்பம்      19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

15.07.2019 ஆனி 30 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்தசி திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

19.07.2019 ஆடி 03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருதியை திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம்.  தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும் என்றாலும் 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 17-ஆம் தேதி முதல் 4-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் உங்களுக்கு தேவையற்ற அலைச்சலை தரும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற கடின உழைப்பு தேவை. முருக வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  17, 18, 19, 20.

சந்திராஷ்டமம் –   12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் இருக்கும் சிறு சிறு நிம்மதி குறைவுகள் விலகி மன அமைதி உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  19, 20.

சந்திராஷ்டமம் –   14-07-2019 மாலை 05.25 மணி முதல் 17-07-2019 அதிகாலை 03.15 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், ராகு, தன ஸ்தானமான 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. தேவையில்லாத அலைச்சல்கள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்– மனைவியிடையே வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். குரு 6-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். போட்டிகள் இருந்தாலும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். பிரதோஷத்தன்று சிவ வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –  14, 15, 16.

சந்திராஷ்டமம் ––  17-07-2019 அதிகாலை 03.15 மணி முதல் 19-07-2019 பகல் 02.55 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் சகலவித செல்வத்தையும் அடையும் யோகம் உண்டு. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்பு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்ப ஒற்றுமை குறையலாம். செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சற்று முழு முயற்சியுடன் ஈடுபடுவது நல்லது. துர்கையம்மனுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  15, 16, 17, 18.

சந்திராஷ்டமம் –   19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் தனசேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது தேவைகள் பூர்த்தியாகும். வரும் 17-ஆம் தேதி வரை சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உடல் நிலையில் சோர்வு, மந்த நிலை போன்றவை உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் உண்டாகும். எந்தவித போட்டிகளையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். உத்தியோத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். வேலைபளு குறையும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது, கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். விஷ்ணு பகவானையும் லட்சுமி தேவியையும் வணங்கி வழிபட்டால் கவலைகள் நீங்கும் செல்வ நிலை உயரும்.

வெற்றி தரும் நாட்கள் –  17, 18, 19, 20.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண் படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும் வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடும் வாரமாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சிரமமின்றி முடித்து விடுவீர்கள். தாராள தனவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவனர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  14, 19, 20.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. அசையும் அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடும் அம்பிகை வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  15, 16.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் 9-ஆம் வீட்டிற்கு செல்வதால் இருக்கும் பிரச்சினைகள், ஆரோக்கிய குறைபாடுகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்படுவதால் உங்களது தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபமும் கிட்டும். கடன் பிரச்சினைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருக வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  14, 17, 18, 19.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். ஆடம்பர செல்வுகளை குறைத்துக் கொண்டால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து ஓரளவு லாபங்களை பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை ஏற்படும். சிவ வழிபாடு செய்வது பௌர்ணமியன்று கிரிவலம் வருவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  15, 16, 20.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவு அனுகூலப் பலனை அடைவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் குறைத்து கொள்வது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி எள் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  14, 17, 18.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பாகும். உங்கள் ராசிக்கு வரும் 17-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நீங்கள் எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். தாராள தனவரவு ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். சிறப்பான பணவரவால் இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிபடியாக குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளாலும் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் கிட்டும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் யாவும் தடையின்றி கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  14, 15, 16, 20.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 5-ல் புதன் 9-ல் குரு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிதாக வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  15, 16, 17, 18.

வார ராசிப்பலன் – ஜுலை 7 முதல் 13 வரை

வார ராசிப்பலன் – ஜுலை 7 முதல் 13 வரை 

ஆனி 22 முதல் 28 வரை  

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

சூரிய ராகு சுக்கி
திருக்கணித கிரக நிலை

 

செவ் புதன்
சந்தி
கேது சனி (வ) குரு (வ)

கிரக மாற்றம்

08-07-2019  புதன் வக்ர ஆரம்பம் அதிகாலை 04.36 மணிக்கு

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

சிம்மம்    06-07-2019 அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.

கன்னி     08-07-2019 அதிகாலை 01.45 மணி முதல் 10-07-2019 அதிகாலை 04.45 மணி வரை.

துலாம்    10-07-2019 அதிகாலை 04.45 மணி முதல் 12-07-2019 காலை 09.55 மணி வரை.

விருச்சிகம்     12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

08.07.2019 ஆனி 23 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

11.07.2019 ஆனி 26 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சினைகள் யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தனவரவு தாராளமாக இருக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –    8, 9, 10, 11.

சந்திராஷ்டமம் – 12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், ராகு, 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலனை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –    10, 11, 12, 13.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தலாம். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் உண்டாகும் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவக்கூடும் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சனி பகவானை வழிபட்டால் சங்கடங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 12, 13.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் உண்டாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். ஆறுமுக கடவுளை வழிபட்டால் ஆனந்தமான செய்திகள் தேடி வரும்.

வெற்றி தரும் நாட்கள் –    8, 9.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், ராகு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தாராள தனவரவு தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான நிலை ஏற்படும்.  கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். கிடைக்க வேண்டிய லாபங்களும் தடையின்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். பணவரவு சிறப்பான நிலையிருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பும் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குரு பகவானை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 10, 11.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன் பொருள் வாங்கி சேர்ப்பீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்களும் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். அரசு வழியிலும் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த தடைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    8, 9, 12, 13.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் அனுகூலத்தை தரும் அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் சுமைகள் குறையும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வார்கள். சிவ வழிபாடும் அம்பிகை வழிபாடும் செய்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 10, 11.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, கேது, 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகும் என்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவிஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பது சிறப்பு. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படலாம். மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. விநாயகரை வழிபட்டு வந்தால் காரிய தடைகள் விலகும், வெற்றிகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 8, 9, 12, 13.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படக்கூடிய வாரமாக இவ்வாரம் இருப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ பெருமானையும் முருக பெருமானையும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    8, 9, 10, 11.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது எல்லா வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். குரு 11-ல் இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பனவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். அசையும் அசையா சொத்துக்களாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானையும் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் வழிபட்டால் நன்மைகள் பல அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –    10, 11, 12, 13.

சந்திராஷ்டமம் – –     06-07-2019 அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றங்களை பெறுவீர்கள். உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் நற்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். துர்கையம்மனை வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 12, 13.

சந்திராஷ்டமம் –      08-07-2019 அதிகாலை 01.45 மணி முதல் 10-07-2019 அதிகாலை 04.45 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் 5-ல் புதன் 9-ல் குரு சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தாராள தனவரவுகள் கிடைத்து கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் ஓரளவு குறையும். சூரியன், ராகு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே சுமுகமான உறவிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாட்டையும் விநாயகர் வழிபாட்டையும் மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 8, 9.

சந்திராஷ்டமம் – 10-07-2019 அதிகாலை 04.45 மணி முதல் 12-07-2019 காலை 09.55 மணி வரை.