Today rasi palan – 06.02.2020

Today rasi palan – 06.02.2020

இன்றைய ராசிப்பலன் –  06.02.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

06-02-2020, தை 23, வியாழக்கிழமை, துவாதசி இரவு 08.24 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. திருவாதிரை பின்இரவு 01.21 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 01.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சுக்கி ராகு சந்தி
புதன் திருக்கணித கிரக நிலை

06.02.2020

சனி சூரிய
கேது குரு செவ்

இன்றைய ராசிப்பலன் – 06.02.2020

மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் நிமித்தமாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணிச்சுமை காரணமாக அலைச்சல், சோர்வு உண்டாகலாம். தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும்.

கடகம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.

கன்னி

இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது கடன் பெறுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

தனுசு

இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மகரம்

இன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். உத்தியோகத்தில் சுலபமான காரியங்கள் கூட காலதாமதமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் செய்ய நேரிடும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிப்பு பெருகும்.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *