Today rasi palan – 07.05.2018

Today rasi palan – 07.05.2018

இன்றைய ராசிப்பலன் –  07.05.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

07-05-2018, சித்திரை 24, திங்கட்கிழமை, சப்தமி திதி மாலை 06.28 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. நாள் முழுவதும் திருவோணம் நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். நடராஜர் அபிஷேகம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

புதன் சூரிய சுக்கி
                திருக்கணித கிரக நிலை

07.05.2018

 

 

ராகு
செவ் சந்தி கேது
சனி (வ) குரு (வ)      

 

இன்றைய ராசிப்பலன் –  07.05.2018

மேஷம்

இன்று வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செய்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

கடகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் வழியாக  அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல், வீண் செலவுகள் உண்டாகலாம். சிக்கனமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எடுக்கும் காரியங்களில் கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோக ரீதியான முயற்சிக்கு அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

மகரம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். இதுவரை எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பராக மாறும் சூழ்நிலை ஏற்படும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொன் பொருள் சேரும்.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *