Today rasi palan – 10.01.2018

Today rasi palan – 10.01.2018

இன்றைய ராசிப்பலன் –  10.01.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

10-01-2018, மார்கழி 26, புதன்கிழமை, நவமி திதி மாலை 05.25 வரை பின்பு தேய்பிறை தசமி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 05.01 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. தனியநாள். சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

                திருக்கணித கிரக நிலை

10.01.2018

ராகு
கேது
சூரிய சனி

சுக்கி புதன்

செவ் சந்தி குரு

     

இன்றைய ராசிப்பலன் –  10.01.2018

மேஷம்

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

ரிஷபம்

இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கடகம்

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று கடன் பிரச்சினைகள் குறையும்.

கன்னி

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நவீனகரமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.  தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பயணங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *