Today rasi palan – 11.06.2019

Today rasi palan – 11.06.2019

இன்றைய ராசிப்பலன் –  11.06.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

11-06-2019, வைகாசி 28, செவ்வாய்க்கிழமை, நவமி திதி இரவு 08.19 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் பிற்பகல் 01.00 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பிற்பகல் 01.00 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சூரிய சுக்கி செவ் ராகு புதன்
திருக்கணித கிரக நிலை

11.06.2019

கேது சனி (வ) குரு (வ) சந்தி

இன்றைய ராசிப்பலன் – 11.06.2019

மேஷம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபசெலவுகள் ஏற்படும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.

ரிஷபம்

இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

மிதுனம்

இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும்.

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

துலாம்

இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். கடன்கள் ஒரளவு குறையும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவியால் நற்பலன் ஏற்படும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு  சுமாராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட கால தாமதமாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

மீனம்

இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் பிரச்சினைகள் தீரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *