Today rasi palan – 12.01.2018

இன்றைய ராசிப்பலன் –  12.01.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

12-01-2018, மார்கழி 28, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 09.23 வரை பின்பு தேய்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் காலை 07.27 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. சர்வ ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

                திருக்கணித கிரக நிலை

12.01.2018

ராகு
கேது
சூரிய சனி

சுக்கி புதன்

சந்தி

 

செவ் குரு

     

இன்றைய ராசிப்பலன் –  12.01.2018

மேஷம்

இன்று நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் தாமத பலனே ஏற்படும். உங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும்பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

மிதுனம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். உற்றார் உறவினர்களுடன் இருந்த மன-ஸ்தாபங்கள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கடன் பிரச்சனை குறையும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற  செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும்.

கன்னி

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.

துலாம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறைந்து லாபம் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் வெளி வட்டார நட்பு உண்டாகும். நினைத்தது நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.

தனுசு

இன்று தொழில் ரீதியாக அலைச்சலும் மனக்குழப்பமும் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சனைகள் ஓரளவு தீரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

கும்பம்

இன்று வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *