Today rasi palan – 13.08.2019

Today rasi palan – 13.08.2019

இன்றைய ராசிப்பலன் –  13.08.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

13-08-2019, ஆடி 28, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பகல் 01.46 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 05.18 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 05.18 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

ராகு

 

திருக்கணித கிரக நிலை

13.08.2019

சூரிய சுக்கி

புதன்

செவ்
கேது சந்தி

சனி  (வ)

குரு

இன்றைய ராசிப்பலன் –  13.08.2019

மேஷம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். வராத பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

இன்று பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

கடகம்

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வேலையில் உங்கள் திறமைகேற்ப ஊதியம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் வெற்றி பெற்று மன நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.

துலாம்

இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

மகரம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் செய்ய நேரிடும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொன் பொருள் சேரும்.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *