Today Rasi palan 13.11.2017

இன்றைய ராசிப்பலன் –  13.11.2017

இன்றைய  பஞ்சாங்கம்

13-11-2017, ஐப்பசி -27, திங்கட்கிழமை, தசமி திதி பகல் 12.25 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பூரம் நட்சத்திரம் பகல் 11.50 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

                திருக்கணித கிரக நிலை

13.11.2017

 

ராகு
கேது சந்தி
சனி 

 

 

புதன் சூரிய சுக்கி குரு  செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  13.11.2017

மேஷம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு ஏற்படும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

ரிஷபம்

இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

கடகம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஓரளவு தீரும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில்  எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாய் இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப்பெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

கும்பம்

இன்று மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.

மீனம்

இன்று பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நிறைவேறும்.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *