Today rasi palan – 17.08.2020

Today rasi palan – 17.08.2020

இன்றைய ராசிப்பலன் –  17.08.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

17-08-2020, ஆவணி 01, திங்கட்கிழமை, திரியோதசி திதி பகல் 12.36 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 06.44 வரை பின்பு பூசம் நட்சத்திரம் பின்இரவு 05.43 வரை பின்பு ஆயில்யம். அமிர்தயோகம் காலை 06.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

செவ் சுக்கி ராகு
திருக்கணித கிரக நிலை

17.08.2020

புதன் சந்தி
 சனி (வ) சூரிய
குரு (வ) கேது

இன்றைய ராசிப்பலன் –  17.08.2020

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபம் அடையலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் முயற்சிகள் நன்மை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய வாய்ப்புகளால் வருமானம் பெருகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் வழியில் சுபசெய்திகள் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பட்டால் லாபம் அடைவீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைவீர்கள். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறை நீங்கும். கடன்கள் ஓரளவு குறையும். மனஅமைதி இருக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். தொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

தனுசு

இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.

மகரம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் மன கஷ்டங்கள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.  பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *