Today rasi palan – 26.04.2019

Today rasi palan – 26.04.2019

இன்றைய ராசிப்பலன் –  26.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

26-04-2019, சித்திரை 13, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 02.40 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 11.14 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் இரவு 11.14 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

புதன் சுக்கி சூரிய செவ் ராகு
திருக்கணித கிரக நிலை

26.04.2019

  சந்தி
சனி கேது குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  26.04.2019

மேஷம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

ரிஷபம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் சில இடையூறுகள் உண்டாகலாம். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும்.

மிதுனம்

இன்று உடலில் சிறு உபாதைகள் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்  செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம்.

கடகம்

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வழியில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்

இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். எதிலும் கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். கடன் பிரச்சினை ஓரளவு தீரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

தனுசு

இன்று நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கொடுத்த கடனை வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் குறையும்.

மகரம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும்.

கும்பம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க சில இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

மீனம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *