Diamond

வைரம்  Diamond

சுக்கிரனுக்குரிய கல்லான வைரத்தின் ஆங்கிலப் பெயர் டைமண்ட் ஆகும். வைரத்தைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. வைரம் அதிக கடினத்தன்மை வாய்ந்தது என்பதால், வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்.

நிறமற்ற, நீலம் அல்லது சிவப்பு நீல ஒளியைக் கொண்ட, கரும்புள்ளிகள் இல்லாத வைரமே மிகவும் சுபமான வைரமாகும். மஞ்சள், சிவப்பு ஒளி தரும் வைரம், அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றலைத் தருகிறது. வெண்மையான வைரம் மதம் மற்றும் ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்கு ஏற்றது. மஞ்சள் நிறம் மட்டும் கொண்ட வைரம் வெற்றியையும் செல்வ செழிப்பினையும் தரும். சிற்றின்ப நோய்கள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய் போன்ற நோய்களும் வைரத்தை அணிவதால் குணமாகும். ஆண் குழந்தையை விரும்புபவர்கள் சிறு கருமை கலந்த வைரங்களை அணிவது நன்மையளிக்கும். வைரம் அணிபவர்களை விஷ ஜந்துக்கள் மற்றும் தீய ஆவிகள் தீண்டாது.

இந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில் எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது. வைரத்தின் தெளிவு நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள் தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும். விலை உயர்ந்த வைர வியாபாரத்தை உலக அளவில் கட்டுப்படுத்தும் நிறுவனமாக லண்டனில் தலைமையகத்தை கொண்ட பீபர்ஸ் விளங்குகின்றது.

நம்நாட்டைப் பொறுத்தவரை கோடுகள், புள்ளிகள் ஏதும் இல்லாமலிருந்தால் அவை நல்ல வைரம் என்றும் அணியத் தகுந்தவை என்றும் எண்ணி வாங்கி அணிந் கொள்கிறோம். ஆனால் அயல் நாட்டினர் வைரத்தின் ஜொலிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். வைரத்தை ரிஷபம், துலாம் ராசிகளில் பிறந்தவர்களும் சுக்கிரன் சுபராக இருந்து சுக்கிர திசை நடப்பில் உள்ளவர்களும் 6,15,24 ஆம் எண்ணில் பிறந்தவர்களும் அணிவது சிறப்பு. வைரத்தை தங்கம் அல்லது பிளாட்டினத்தில் பதித்து மோதிர விரல் அல்லது நடு விரலில் வெள்ளிக்கிழமைகளில், சுக்கிர ஓரையில் அணிந்து கொள்வது நல்லது.

வைரம் தன் மீது படும் ஒளியை முழுயாக எதிரொலிப்பு செய்வதால் வைரத்தின் வழியே எந்தவொரு பொருளையும் பார்க்க இயலாது. புளு ஜாகர் எனப்படும் வைரம் தான் உலகிலேயே விலை உயர்ந்ததாகும்.  இது காலை நேர சூரிய ஒளியில் நீல நிற ஒளி உமிழும் தன்மையுடையதாகும. வைரத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா தான் ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு காலியாகி விட்டதால் ஒரிஸாவில் மீண்டும் வைரங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை கண்டு பிடித்துள்ளனர்.

ஒரு காரட் (0.2 கிராம்) பட்டை தீட்டப்பட்ட வைரத்தைப் பெறுவதற்கு 30 டன் எடையுள்ள பாறை மற்றும் மணலை பிரித்தெடுத்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது.  அதன் பின்னர் பட்டை தீட்டி, பலர் கை மாறி மாறி விற்பனைக்கு வருவதால்தான் வைரத்தின் விலை பல மடங்காக உள்ளது. சுத்தமான வைரங்களைக் கண்டு பிடிக்க டைமண்ட் டெஸ்டர்களும் தற்போது உபயோகத்திற்கு வந்து விட்டதால் அந்த கருவியைக் கொண்டு சுத்தமான ஒளி, ஒலி அமைப்பை கண்டுபிடித்து விடலாம். வைரத்திற்கு எளிதில் வெப்பத்தை கடத்தும் தன்மை உள்ளதாலேயே மேற்கண்ட பரிசோதனையைச் செய்து போலியா, ஒரிஜினலா என கண்டறிய முடிகிறது.

வெண்மையாகவும் தீவு போன்ற வடிவம் கொண்ட வைரம் தோஷமுள்ளதானதால் இதை அணிவதால் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஜிர்கான், வைரத்தை வாங்க இந்த ஜிர்கான் கற்களை வாங்கி அணியலாம். ஜிர்கான் கற்களும் பளபளப்பும், கடினத் தன்மையும் கொண்டது. வைரத்தைப் போலவே நற்பலனை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *