Aayilyam natchathira palangal

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

இருப்த்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஒன்பதாவது இடத்தை பெறுவது ஆயில்ய  நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டி, டு, டே, டோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மெ, மை ஆகியவை யாகும்.

குண அமைப்பு;  ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித்தைகளையும் கற்றறியக்கூடிய ஆர்வமும் இருக்கும். அழகிய கண்களையும் சுருட்டை முடியையும் கொண்டவர்கள். எதிரிகளையும் நண்பர்களாக்கி கொள்வார்கள். தங்களுடை கனிவான பேச்சினால் கல்லையும் கரைய வைக்கும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் மன வலிமை¬யும், உடல் வலிமையும் ஒருக்கே பெற்றவர்கள். எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள கூடிய திறனிருக்கும். நாளை நடப்பதை கூட முன் கூட்டியே அறிவர். மற்றவர்களின் ஆலோசனைகளை எளிதில் ஏற்க மாட்டார்கள் கண்களால் ஆயிரம் கதை பேசுவார்கள். சற்றே சஞ்சல குணமும் உண்டு. இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேரிப்பவர்கள் பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

குடும்பம்;     ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் விரைவிலேயே திருமண வாழ்க்கை அமைந்து விடும். இளமையில் வறுமை வயப்பட்டாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் இவர்களின் தேவைகளுக்காக அதிகம் செலவு செய்தால் பல தகிடு தத்த வேலைகளிலும் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள். பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்கள். ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதால் வண்டி வாகனம், பூமி மனை அனைத்தையும் சேர்ப்பார்கள். வாழ்க்கையையும் திட்டமிட்டு வாழ்வார்கள் நொறுக்கு தீனி விரும்பிகள் என்பதால் எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டு கொண்டேயிருப்பார்கள்.

தொழில்;     ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் நீதி நேர்மை தவறாமல் நாணயத்துடன் நடப்பார்கள். மனசாட்சிக்கு மீறி எந்த பணியிலும் ஈடுபடமாட்டார்கள். குறிப்பாக கெட்டவர்களுக்கு துணை போக மாட்டார்கள். அதிக மன தைரியம் கொண்டவர்கள் இவர்களில் பலர் கல்லூரிகளில் பேராசியர்களாகவும், ஆய்வு கூடத்தில் அறிவியல் அறிஞர்களாகவும், இருப்பார்கள். மற்றவர்களை போல நடித்து காட்டுவதிலும், பழமொழிகளை உதாரணமாக கொண்டு பேசுவதிலும் வல்லவர்கள். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள். பெயர் புகழ் அந்தஸ்து யாவும் பெருகும். அதிகாரமிக்க பதவிகளிலும் அமர்வார்கள். பலரை நிர்வாகிக்கும் ஆற்றல் ஆலோசனை கூற கூடிய வல்லமையும் உண்டாகும் மெக்கானிக்கல், பொறியியல் துறைகளிலும் வல்லவர்கள்.

நோய்கள்;      இவர்களுக்கு, நுரையீரல், வயிறு, உணவு குழாய் மற்றும் குடலுக்கு இடையிலுள்ள ஜவ்வு கல்லீரல், கணையம், ஈரல் போன்ற பாகங்களில் பிரச்சனைகள் உண்டாவதுடன், மூச்சு விடுவதில் சிக்கல்களும், மூட்டுகளில் வலியும், கால்களில் வீக்கமும், நரம்பு சம்மந்த பிரச்சனைகளும் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும்.

திசை பலன்கள்;     ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை வரும். இதன் மொத்த வருடங்கள் 17 என்றாலும் பிறந்த நேரத்தைக் கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள புதன்  தசா காலங்களை அறியலாம். முதல் திசையாக வரும் புதன் திசை காலங்களில் கல்வியில் உயர்வு நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று பண்டைய நூல்களில் எழுதியிருந்தாலும் அது உண்மையா என்ற பல கேள்விகள் இன்றும் உள்ளது.

     இரண்டாவதாக வரும் கேது திசையானது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் கேது திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கல்வியில் மந்த நிலை ஆகியவை உண்டாகும்.

     மூன்றாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை, செல்வம் செல்வாக்கு சேரும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

     சூரியன் 6வருடம் சந்திரன் 10 வருடம் செவ்வாய் 7 வருடம் என நடைபெறும் இத்திசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் மேன்மையான பலன்களை பெற முடியும். பலமிழந்திருந்தால் அதற்கேற்றபடி நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்.

     ஆயில்ய நட்சத்திர காரங்களுக்கு ராகு திசை மாரக திசையாகும். ஆயில்ய நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் இரவு பதினோறு மணியளவில் வானத்தில் காணலாம்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்     நவ கிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

வழி பாட்டு  ஸ்தலங்கள்

சங்கரன் கோவில்;

     திருநெல்வேலிக்கு  வடக்கே 50.கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலத்தில் சங்கரலிங்கத்துக்கும், கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணன் சந்தியில் வழங்கப்படும் புன்னை மரப்பட்டையில் செல்லரித்து உருவான புற்று மண் பிரசாதம் எல்லா வித நோய்களையும் தீர்க்கும்.

புள்ள பூதங்குடி;

     கும்பகோணத்து வடமேற்கில் 11.கி.மீ தொலையில் உள்ள புஜாங்க சயனராக காட்சி தரும் ஸ்ரீராமர் ஸ்தலம் இங்கும் புண்ணை மரம் உள்ளது.

திருப்புகலூர்;

     திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள அக்னிஸ்வரர் அருள் பாலிக்கும் ஸ்தலம்.

நாகூர்;

     நாகை மாவட்டம் நாகபட்டினத்திற்கு வடக்கே 4.கி.மீ தொலைவில் உள்ள நாகநாதர் நாகவல்லி உள்ள ஸ்தலம். தல மரம் புன்னை.

திருவாரூர்;

     அருகிலுள்ள எண்கண் என்ற ஊரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமிகள் ஸ்தலம். இவற்றை வழிபாடு செய்வது சிறப்பு.

கூற வேண்டிய மந்திரம்

     ஓம் ஸஹஸ்ரபனாய வித்மஹே

     சர்ப்ப ராஜாய தீமஹி

     தந்நோ அனந்த ப்ரசோதயாத்

ஆயில்ய நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

     அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *