மீனம் – புத்தாண்டு பலன் – 2020

மீனம் – புத்தாண்டு பலன் – 2020

கணித்தவர்

ஜோதிட மாமணி

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

கம்பீரமான தோற்றமும் பிறரை வசீகரிக்க கூடிய அழகும் கொண்ட மீன ராசி நேயர்களே! நவகிரகங்களில் முழு சுபகிரக தனகாரகன் என வர்ணிக்கப்படும் குரு பகவானின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் லாப ஸ்தானமான 11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் எதிலும் லாபங்களை அடையும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் உங்களை தேடி வந்து கடந்த கால கடன்கள் குறையும் யோகம், அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் நிலை உருவாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் இருந்தாலும் எதையும் எதிர் கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். சர்ப்ப கிரகமான ராகு சுகஸ்தானமான 4-லும், கேது 10-லும் வரும் 23-09-2020 வரை சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் ராசியாதிபதி குரு திருக்கணிதப்படி 20-11-2020 முடிய ஜீவன ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 10-ஆம் வீட்டில்  சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தாலும் குரு உங்கள் ராசியாதிபதி என்பதால் அடைய வேண்டிய இலக்கை அடைத்து விடுவீர்கள். தொழிலில் சற்று நெருக்கடிகள் இருந்தாலும் பொருட் தேக்கங்கள் ஏற்படாமல் லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதங்களுக்குப் பின் கிடைக்கும். வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமானப் பலனைப் பெறலாம். தக்க சமயத்தில் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கும் குரு லாப ஸ்தானத்தில் அதிசாரமாக திருக்கணிதப்படி 30-03-2020 முதல் 14-05-2020 முடியவும் அதனை தொடர்ந்து வக்ர கதியில் 12-09-2020 முடியவும், அதன் பின்பு 20-11-2020 முதல் லாப ஸ்தானத்தில் (மகர ராசியில்) சஞ்சரிக்க உள்ள காலத்தில் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும் அமைப்பு, குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூட கூடிய யோகம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் தேக ஆரோக்கியம் ஒரளவுக்குச் சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற அலைச்சல்களால் இருப்பதை அனுபவிக்க இடையூறு உடல் அசதி ஏற்படும். எடுக்கும் காரியங்களில் சிறு தடையும் எதிர்ப்புகளும் இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றமடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் கடந்த காலங்களில் இருந்த மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். பண வரவுகள் தேவைகேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை குறைத்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ முடியும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் ஏப்ரல் மே மாதங்களில் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகம்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் எதிலும் சற்றுக் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் ஏற்படும். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. எந்தவொரு பணியில் ஈடுபட்டாலும் கடின முயற்சிகளை மேற்கொண்டு முன்னேற்றங்களை அடைவீர்கள்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும் புதிய முயற்சிகளையும் கவனமுடன் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் சற்று குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதிலும் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. வம்பு வழக்குகளில் இருந்த இழுபறி நிலை உங்களுக்கு சாதகமாக முடியும்.

அரசியல்

எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் பெற்று நல்ல பதவியை அடைவீர்கள். நினைத்த காரியங்களை நிறைவேற்றி விட முடியும். எதிலும் கவனத்துடன் செயல்பட்டால் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது சிறப்பு.

கலைஞர்கள்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, நேரத்திற்கு உணவு உன்பது உத்தமம். எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டி இருந்தாலும் அடைய வேண்டியதை அடைந்து விடுவீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், உடற் சோர்வு உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாகவே இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகள் ஏற்படுவதால் அறுவடையில் தாமதம் உண்டாகும். விளை பொருளுக்கேற்ற விலையினை சந்தையில் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலைச்சல் இருக்கும் என்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை தவிக்கலாம். அசையா சொத்துக்கள் ரீதியாக சுப செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் ஏப்ரல் மே மாதங்களில் கை கூடும்.

மாணவ மாணவியர்

மாணவர்கள் முழு முயற்சியுடன் பாடுபட்டால் நினைத்ததை சாதிக்க முடியும் என்றாலும் மனது அலைபாயக் கூடிய காலம் என்பதால் தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்க்கலாம். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. சுற்றுலா போன்ற உல்லாசப் பயணங்களில் கவனமுடன் நடந்து கொள்வது நன்மை அளிக்கும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளைப் பெற முடியும்.

மாதப்பலன்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் ஏற்படும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வகையில் லாபம் கிட்டும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 17-01-2020 பகல் 01.49 மணி முதல் 19-01-2020 மாலை 05.47 மணி வரை.

பிப்ரவரி. 

சனி 11-ல், மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 10-ல் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. புதிய விடு, மனை வாங்கும் விஷயத்தில் சற்று கவனம் தேவை. விஷ்ணு வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 13-02-2020 இரவு 08.22 மணி முதல் 15-02-2020 இரவு 11.18 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். சனி 11-ல், செவ்வாய் 10, 11-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைப்பதோடு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. திருமண முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். குரு பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 12-03-2020 காலை 05.35 மணி முதல் 14-03-2020 காலை 06.41 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு செவ்வாய், குரு, சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள தடைகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சிறப்பான பணவரவால் பொருளாதாரம் மேம்படும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்கள் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 08-04-2020 மாலை 04.33 மணி முதல் 10-04-2020 மாலை 04.26 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு குரு அதிசாரமாக லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், சனி 11-ல், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை நல்லபடியாக பெருக்க உதவும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். துர்கையம்மனையும் விஷ்ணுவையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 06-05-2020 அதிகாலை 03.15 மணி முதல் 08-05-2020 அதிகாலை 03.13 மணி வரை.

ஜுன்.

சூரியன் மாத முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதும் புதன் 4-ல், சனி 11-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 02-06-2020 பகல் 12.00 மணி முதல் 04-06-2020 பகல் 01.08 மணி வரை மற்றும் 29-06-2020 மாலை 06.25 மணி முதல் 01-07-2020 இரவு 08.55 மணி வரை.

ஜுலை.

ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதும், நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நற்பலனை தரும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்கு பின் தான் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வு தாமதப்படும். சிவ வழிபாட்டையும், முருக வழிபாட்டையும் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 26-07-2020 இரவு 11.50 மணி முதல் 29-07-2020 அதிகாலை 02.48 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-லும், மாத பிற்பாதியில் சூரியன் 6-லும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகளில் தடை இருக்காது. போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 23-08-2020 காலை 06.05 மணி முதல் 25-08-2020 காலை 08.15 மணி வரை.

செப்டம்பர்.

பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். உங்கள் பலமும் வலிமையும் கூடும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 19-09-2020 பகல் 02.40 மணி முதல் 21-09-2020 பகல் 03.15 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு 1, 2-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, தேவையற்ற நெருக்கடி உண்டாகும். ராகு 3-ல், சனி 11-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவி உங்களுக்கு கிடைத்து எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எந்தவொரு புதிய முயற்சிகளிலும் சிந்தித்து செயல்பட்டால் சாதகப் பலனைப் பெற முடியும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 17-10-2020 அதிகாலை 01.25 மணி முதல் 19-10-2020 அதிகாலை 00.45 மணி வரை.

நவம்பர்.

ஜென்ம ராசியில் செவ்வாய், மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. 3-ல் ராகு, சனி 11-ல் சஞ்சரிப்பதும் 20-ஆம் தேதி முதல் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலப்பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் லாபங்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். முருக பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 13-11-2020 பகல் 12.30 மணி முதல் 15-11-2020 பகல் 11.58 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். மாத பிற்பாதியில் சூரியன், புதன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 10-12-2020 இரவு 09.50 மணி முதல் 12-12-2020 இரவு 10.40 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9            கிழமை – வியாழன், ஞாயிறு    திசை – வடகிழக்கு

கல் – புஷ்ப ராகம்     நிறம் – மஞ்சள், சிவப்பு     தெய்வம் –  தட்சிணாமூர்த்தி

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *