Pearl

முத்து(Pearl) சந்திரன்

வெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை வடிவத்தில் சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பிக்குள் நுழையும் அந்நிய பொருள் சிப்பியின் உட்புறம் உறுத்துவதால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக உருவாகிறது. கடல்நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை.  இந்தியாவில் அதிகமாக தூத்துக்குடியில் தான் முத்து குளித்தல் நடைபெறுகிறது. சிப்பியில் உருவாகும் முத்துக்களில் உருண்டை வடிவமுள்ள முத்துக்களே சிறப்பானவை. மிகவும் உயர்ந்த வகை முத்துக்களை, ஆணி முத்து என்று அழைக்கின்றனர். இந்த ஆணி முத்து அளவில் சற்-று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் காணப்படும். முத்துக்களைப் பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில்  அவற்றின் வடிவ அமைப்பைக் கொண்டு அழைக்கிறார்கள். அரை வட்டம் உள்ள முத்தை பட்டன் முத்து என்பார்கள். ஒழுங்கான வடிவம் இல்லாத முத்தை Barogue pearl  என்று  கூறுகிறார்கள். சில முத்துக்கள் கருமை, பால் நிறம், இளம் சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. நல்ல முத்தை மேல் நோக்கி உற்று பார்க்கும் போத வானவில்லைப் போல ஏழு நிறங்கள் தெரியும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஷீன் என்று பெயரிட்டுள்ளனர்.

உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுது தான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்று தான்.

இயற்கையாக முத்து கிடைக்க அதிக காலம் காத்திருப்பதைவிட செயற்கை முறையில் முத்து சிப்பியைத் துளையிட்டு அந்நிய பொருளை உட்புக வைத்து, அவற்றை முத்தாக மாற்றி செயற்கை முறையில் இயற்கை முத்தைப் பெறக்கூடிய வழியாகும். இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை 1920ஆம் வருடம் முதலே தயார் செய்கிறார்கள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை முத்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள்.

இங்கு தயாரிக்கப்படும் செய்ற்கை முத்துக்களை நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால், இதற்கு ஹைதராபாத் முத்துக்கள் என்றே பெயர் வந்து விட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இறக்கை முத்தைப்போலவே விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சில முத்துக்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.

ஹைதராபாத் முத்துக்களை மோதிரமாகவும், கழுத்தில் அணியும் மாலைகளாகவும், காதில் அணியும் கம்மல்களாகவும் தங்கம் அல்லது வெள்ளியில் பதித்தும் அணியலாம். முத்தை மோதிரமாக அணிவதென்றால், மோதிரவிரல் அல்லது நடுவிரலில் அணியலாம். இவற்றின் எடை 2,4,6,9 ரட்டிஸ்களாக  இருப்பது நல்லது. நவரத்தினங்களில் சந்திரனுடைய ஆதிக்கத்திற்குரிய ரத்தினம் முத்தாகும்.

முத்தின் நன்மைகள்

முத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பபை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப் பேறும் உண்டாகும்.

முத்து உடலுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் முகத்திற்கு வசீகரத்தையும் உடலழகையும் கொடுக்கிறது.

யாரெல்லாம் முத்து அணியலாம்?

முத்துக்களை சந்திரனுடைய வீடான கடக ராசியில் பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும், சந்திரனால் பாதிக்கப்பட்டவர்களும் அணிவது மிகவும் நல்லது. அதுபோல எண்கணிதப்படி 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ரத்தினம் முத்தே ஆகும்.

முத்துக்கள் சீக்கிரத்தில் நிறம் மங்குவதில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் நிறம் மங்கும் எடை குறையும். முத்தை பயன் படுத்தாத போது ஒரு பஞ்சிலோ, துணியிலோ சுற்றி வைத்தால் இயற்கை தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். சோப்பு நீரோ ஏனைய கெமிக்கல் பொருட்களோ முத்தை பாதிக்கும் தன்மை கொண்டவையாகும்.

முத்திற்கு பதிலாக சந்திரகாந்த கல்லையும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் மூன்ஸ்டோன் என அழைக்கப்படும் இக்கல் நிறத்தில் சற்று மங்கலாக இருந்தாலும் சந்திரன் போன்றே அழகுடையதாக இருக்கிறது.

Ruby

மாணிக்கம் (Ruby) சூரியன்

மாணிக்கத்திற்கு ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்று பெயர். மாணிக்கம் சிவப்பு நிறமுடைய, பூமியில் விளையக்கூடிய ஒரு கல்லாகும். ரோஸ் கலந்த சிவப்பு நிறமுடையதாகவும் அல்லது சுத்த சிவப்பு நிறமுடையதாகவும் விளங்கும் இக்கற்கள் ஒளி ஊடுருவக்கூடியதாகவும், ஒளி ஊடுருவ இயலாத கல்லாகவும் இரு வகையாக கிடைக்கிறது. வெல்வெட் போன்ற தன்மையும் வைரத்திற்கு அடுத்த கடினத் தன்மையையும் கொண்டது மாணிக்கக் கல்லாகும்.              

மாணிக்கம் மிகுந்த உயர்தரமானது. தற்போது கிடைப்பது அரிதாக இருப்பதால் இதற்கு இது தான் விலை என்று நிர்ணயிக்க முடிவதில்லை. அதனால் தான் மாணிக்கத்தை விலையில்லா மாணிக்கம் என்கிறார்கள். மாணிக்கத்தை கேரட் முறையில்தான் மதிப்பீடு செய்கிறார்கள். உண்மையான உயர்ந்த வகை மாணிக்கக் கற்கள் வைரத்தை விடவும் விலை உயர்ந்ததாகும். மாணிக்கம் பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கின்றன.

உயர்தர மாணிக்கங்கள் சாதாரண வெளிச்சத்தில் ஒரு சிவப்பு நிறத்தையும், அதிக வெளிச்சத்தில் நல்ல ஜொலிக்கும் சிகப்பையும் காட்டும். இந்தியாவில் தரம் குறைந்த ரூபிகளும், மற்றும் நல்ல அரிய வகையுள்ள ரூபிகளும் கிடைக்கின்றது. தரம் குறைந்த ரூபிகளுக்கு மைசூர் ரூபி என்று பெயர். இதில் ஒளியோ கவர்ச்சியோ இருக்காது. நேராக பூமியிலிருந்து கிடைக்கும் எந்தவொரு ரத்தினமும் ஒழுங்கற்றதாகத்தான் இருக்கும். அவற்றை சரியான முறையில் பட்டை தீட்டி பாலிஷ் செய்தால் மட்டுமே கற்களுக்கு அழகும் கவர்ச்சியும் உண்டாகும்.

மாணிக்கம் அலுமியம் டிரை ஆக்ஸைடு என்ற வேதிப்பொருளால் ஆனது. கெராண்டம் என்கிற வகையைச் சேர்ந்த மாணிக்கக் கற்கள் புறா இரத்த நிறத்தில் கிடைப்பது முதன்மை தரம் ஆகும். கரும்புள்ளிகள் உடைய மாணிக்கத்தை அணிந்தால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பலவாறு பழுதடைந்த மாணிக்கம் இறப்பைக்கூட தந்து விடும். மாணிக்கத்தை கையில் அணிந்திருக்கும் போது அதன் நிறம் மங்கினால் அவருக்கு துன்பங்கள் ஏற்படும். அந்த துன்பம் நீங்கிவிட்டால் மாணிக்கக்கல் மீண்டும் தன்னுடைய பழைய நிறத்தை அடைந்து விடும்.

யார் மாணிக்கக்கல் அணியலாம்?

சூரியனுடைய பிரதிநிதி கல்லாக மாணிக்கம் உபயோகப்படுகிறது. சூரியனின் வீடான சிம்ம ராசியில் பிறந்தவர்களும் சூரிய திசை நடப்பில் உள்ளவர்களும், எண் கணிதப்படி 1,10,19,28ஆம் எண்ணில் பிறந்தவர்களும் மாணிக்க கல்லை அணிந்து கொள்வது நல்லது. இதனால் சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது.

மாணிக்கக் கல்லின் நன்மைகள்

மருத்துவ ரீதியாக உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, மூலம், இருதயநோய், தோல்வியாதி, கண்நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாணிக்கக் கல்லை அணிந்தால் நோய்களின் பிடியிலிருந்து ஓரளவுக்குத் தப்பித்துக் கொள்ளலாம்.

மாணிக்கக் கல்லை தங்கத்தில் பதித்து உடலில் படும்படி அணிந்து கொண்டால் நல்ல உடல் நலம், மன உறுதி, நட்பு, காதல், பாசம் போன்றயாவும் சிறப்பாக அமையும்.  இருதயத்தையும், ரத்த ஓட்டத்தையும் வலுவடையச் செய்கிறது. மன அழுத்தம், சோகம், தேவையற்ற புலனின்ப நாட்டம் போன்றவற்றைக் குறைத்து தைரியத்தையும் வீரத்தையும் தருகிறது. மாணிக்கம் சூரியனின் ஆதிக்கம் என்பதால் பெயரையும் புகழையும் உயரத்த்துவதுடன் சமுதாயத்தில் கௌரவமிக்க பதவிகளை வகிக்கும் ஆற்றலையும் கொடுக்கிறது. மழலைச் செல்வமும் சிறப்பாக அமைகிறது.

ஒரு சில மாணிக்கங்களை வெட்டிப் பார்த்தால் ஆறு கீற்றுகள் உடைய  நட்சத்திரத்தை  பார்க்கலாம். இந்த வகை மாணிக்கக் கல்லை நட்சத்திர மாணிக்கம் என்று அழைக்கிறார்கள். மாணிக்கம் ஒரு பிரகாசமான, கடினமான, காலமெல்லாம் நிலைத் திருக்கக்கூடிய, அணியத்தகுந்த ஓர் அபூர்வ ரத்தினமாகும்.

மாணிக்கத்தை தங்கத்தில் பதித்து உடலில் படும் படியாக மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். அதன் எடை 3 அல்லது 5 ரத்திகள் இருப்பதே நல்லது. மிக விலை உயர்ந்த மாணிக்கக் கல்லை வாங்க இயலாதவர்கள் அதற்குப் பதிலாக கார்னட் என்ற கல்லை வாங்கி அணியலாம். இந்த கல் சிவப்பு நிறத்தில் பவழத்தினைப் போன்று சற்று கூடுதலாக கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். குற்றமில்லாத கார்னட் கற்கள் மாணிக்கத்தை போலவே நற்பலனை அளிக்கும் தன்மை வாய்ந்ததாகும். மாணிக்கக் கல்லை  அணியும்போது சூரியனுக்குரிய ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஓரையில் அணிந்துகொள்வது நல்லது.

நவரத்தினங்கள்

நவரத்தினங்களால் விளையும் நன்மைகள்

வாழ்க்கை வண்டியானது நம்பிக்கை என்னும் சக்கரத்தில்தான் சுழன்று கொண்டிருக்கின்றது. என்னால் இது முடியும், நான் இதைச் சாதிப்பேன், வாழ்க்கையில் நானும் உயர்வடைவேன் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியங்கள். லட்சியங்கள் இல்லாத வாழ்க்கை தண்ணீர் இல்லாத  ஓடையைப் போன்றது. வறண்ட வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை.  எதையாவது சாதிக்க வேண்டுமென்பதே ஒவ்வொருவரின் கனவாகும். பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் வாழும் நாட்களானது லட்சியங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

ஆனால் நினைத்தவுடன் நம் லட்சியங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிட முடியாது. கேட்டவுடன் எதுவும் கிடைத்து விடாது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும். இறைவன் இருக்கின்றானா? இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்வதைவிட, நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை நம்பினால் போதும். அது எந்த உருவத்தில் இருந்தாலும் சரி.

மழை பெய்வதும், குழந்தை பிறப்பதும் நம் கையில் இல்லை என்பார்கள். ஒரு குழந்தை பூமியில் பிறந்தவுடன் அந்த தேதி, மாதம், வருடம், நேரம், பிறந்த ஊர் ஆகியவற்றை வைத்து ஜெனன ஜாதகம் என்ற ஒன்றைக் கணிக்கிறோம். அந்த குழந்தை பிறந்த நேரத்தில் என்ன நட்சத்திரம் உள்ளதோ அதுவே அக்குழந்தையின் ஜெனன நட்சத்திரம் ஆகும். நவக்கிரகங்களில் அந்த நட்சத்திரம் எந்த கிரகத்திற்குரியதோ, அந்த கிரகத்தின் திசைதான் அக்குழந்தைக்கு முதலில் நடைபெறும். இது தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது. ஒரு மனிதனுக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும், அவனது வாழ்வில் கிடைக்கும் வெற்றிகளை வைத்தே அவனுடைய பெயரையும் புகழையும் உயர்த்தும் நல்வாழ்வு கிடைக்கும்.

அதுவே தொட்டதெல்லாம் தோல்வியாகும் போது மனம் உடைந்து போகிறான். ஏனிந்த அவலநிலை என யோசிக்கிறான்.  உடல் நிலை சரியில்லாதபோது டாக்டரைத் தேடி ஓடுவதைப் போல வாழ்க்கை நிலை சரியில்லாதபோது அவனுடைய ஜெனன ஜாதகம் என ஒன்றிருப்பது அவனின் நினைவுக்கு வரும். 

அப்பொழுது ஜெனன ஜாதகம் கிரக நிலைகள் என்ன திசையில் நடைபெறுகிறது, அத்திசையில் விளையும் நன்மை தீமைகள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்வதுடன் நவரத்தினங்களைப் பற்றியும் கேள்விப்படுகிறோம். நடைபெறும் திசை பலமற்று இருந்தால், அத்திசையை பலப்படுத்துவதற்காக அத்திசைக்குரிய நவரத்தினக் கல்லை அணிந்து கொண்டால் வாழ்வில் உள்ள பிரச்சினைகள் குறையும் என்பதையும் உணர்கிறோம்.

நவரத்தினங்கள் அணிவதிலும் நிறைய விதிமுறைகள் உள்ளன. பலர் நவரத்தினங்களை ஒன்றாக சேர்த்து அணிகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். எல்லா நவரத்தினங்களும் ஒரே நேரத்தில் நல்லதைத் செய்யும் எனக்கூற முடியாது. சில ரத்தினங்கள் அந்த ஜாதகருக்கு தோஷத்தை தருவதாக இருந்தால் நற்பலன்கள் ஏற்படுவதற்கு பதில் எதிர்மறையான பலன்களை உண்டாக்கிவிடும். அதாவது எலி வலைக்கு பயந்து புலி வலையில் தலை வைத்ததைப் போல ஆகும். சாதாரணமாக ஒரு இரத்தினத்தை ஒரு கேரட்டிற்கு மேல்தான் அணிய வேண்டும்.

அது போல எண்கணிதப்படி இரத்தினங்கள் அணிவதும் நற்பலனைத் தரும். எண்கணிதப்படி இரத்தினங்கள் அணிவதால் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும். நட்சத்திரத்தின் அடிப்படையிலும் நவரத்தினங்களை தேர்வு செய்யமுடியும். அதிலும் குறிப்பாக நமக்கு என்ன திசை நடக்கிறதோ, அந்த திசை எந்த கிரகத்தின் ஆதிக்கத்திற்குரியதோ, அதற்கேற்ற ரத்தினங்களை அணிந்து கொள்வதே நல்லது. அப்பொழுதுதான் அந்த கிரகத்திற்குரிய பலனை முழுமையாக அடைய முடிகிறது.

சிலர் தவைலிக்கு கடையில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டேன். சரியாகி விட்டது. ஆனால் மீண்டும் வந்து விட்டது என கூறுவார்கள். அதுபோல நாமே ஒன்றை முடிவு செய்து ஏதாவது ஒரு கல்லை வாங்கி அணிந்து கொண்டு இது இப்படி, அது அப்படி என புலம்புவதை விட நல்ல ஜோதிடராக பார்த்து கலந்தாலோசித்து அதற்கேற்றவாறு நவரத்தினங்களை அணிவது சிறப்பு.

நவரத்தினங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் உள்ளதாக பல ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன. நமது ரிஷிகளும், பல கணித வல்லுனர்களும் ஜோதிட கலையை மேம்படுத்தி உள்ளனர். அவர்கள் ஜோதிடத்தைப் பல பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவற்றுள் ரத்தினக் கற்கள் பற்றிய குறிப்புகளும் முக்கியமானதாகும். மனித தோற்றம் எவ்வளவு பழமையானதோ, ரத்தினக் கல்லும் அவ்வளவு பழமையானதாகும்.

 

எப்படி அணிவது?

நவரத்தினங்களைச் சரியான ஜோதிடர்களை பார்த்து வாங்கும் போது அவர்களே நவரத்தினங்களை பூஜையில் வைத்து அதற்கேற்ற சக்திகளை ஏற்றி நல்லபடியாக வாழ்க்கை வளம்பெற செய்து தருவார்கள். நாமே கடையில் சென்று வாங்கும் போது வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜையறையில் வைத்து இறைவனை வழிபட்டு சுத்தமான பசும்பாலில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் சுப ஓரையில் அந்த ரத்தினத்திற்குரிய விரலில் அணிந்து கொள்வது நல்லது. எந்தக்கை, மற்றும் எந்த விரலில் ரத்தினக்கல் மோதிரங்களை அணிய வேண்டும் என்பதிலும் சில விதிமுறைகள் உள்ளன.  அதாவது வலது கை குருவாலும், இடது கை சுக்கிரனாலும் ஆளப்படுகின்றது.  உடலின் உயிர் சக்தியானது அதிகமாவது அல்லது குறைவதை வலது மற்றும் இடது கைகள் குறிக்கின்றன.

தீய கிரகத்தின் திசை நடைபெற்று அந்த தீய விளைவைக் குறைக்க ஒரு ரத்தினம் அணிய வேண்டியிருந்தால் அதனை இடது கையில் அணிய வேண்டும்.

பலம் பெற்ற கிரகத்தின் திசை நடைபெற்று அதன் பலத்தை மேலும் அதிகரிக்க அத்திசைக்குரிய கிரகத்தின் ரத்தினத்தை வலது கையில் அணிய வேண்டும்.

அதேபோல அசுபத் தன்மையுடைய கிரகத்தின் அசுபத் தன்மையைக் குறைக்க அந்த கிரகத்திற்கு எதிரான இரத்தினத்தை அணிவதும் நற்பலனை ஏற்படுத்துவதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.

உதாரணமாக, ராகு திசை நடந்து ராகு அந்த ஜாதகருக்கு அசுபராக இருந்தால் கனக புஷ்ப ராகம் அல்லது புஷ்பராக கல்லை வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும். ஏனென்றால் புஷ்பராகம் குருவின் ரத்தினமாகும். குருவும், ராகுவும்  பகைவர்கள். இதனால் சுபகிரகமாகிய குருவின் ரத்தினத்தை அணிவதால் ராகுவால் உண்டாகக்கூடிய அசுப தன்மைகள் குறையும்.

 

Today rasi palan – 25-01-2018,

Today rasi palan – 25-01-2018,

இன்றைய ராசிப்பலன் –   25-01-2018,

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

25-01-2018, தை 12, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பகல் 03.14 வரை பின்பு வளர்பிறை நவமி. அசுவினி நட்சத்திரம் காலை 08.21 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் காலை 08.21 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. வாஸ்து நாள் காலை 10.47 மணிக்கு மேல் 11.23 மணிக்குள். சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சந்தி
திருக்கணித கிரக நிலை

25.01.2018

 

ராகு
சூரிய கேது  சுக்கி
புதன் சனி செவ் குரு

இன்றைய ராசிப்பலன் –  25.01.2018

மேஷம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.

ரிஷபம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சினைகள் குறையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கடன் வாங்குவதோ கொடுப்பதோ தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

துலாம்

இன்று எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்& வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்ககூடும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

மகரம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

கும்பம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.

மீனம்

இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் தீரும்.

Vaara rasi palan January 28 to February 3

வார ராசிப்பலன்ஜனவரி 28 முதல்  பிப்ரவரி 3 வரை 

தை 15 முதல் 21 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சந்தி
                திருக்கணித கிரக நிலை

 

ராகு
சூரிய கேது புதன் சுக்கி
சனி   செவ் குரு    

               

கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

ரிஷபம்              26-01-208 மதியம் 01.15 மணி முதல் 28-01-2018 மதியம் 02.58 மணி வரை.

மிதுனம்            28-01-2018 மதியம் 02.58 மணி முதல் 30-01-2018 மதியம் 03.00 மணி வரை.

கடகம்                30-01-2018 மதியம் 03.00 மணி முதல் 01-02-2018 மதியம் 03.07 மணி வரை.

சிம்மம்               01-02-2018 மதியம் 03.07 மணி முதல் 03-02-2018 மாலை 05.08 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம்  அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடையமுடியும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். முருக வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்        28, 29,

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

எந்த கஷ்டத்தையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவிற்கு சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் சாதகப்பலன் கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள் என்றாலும் அளவோடு வைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும் சூழ்நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் சிறு தாமதத்திற்குப் பின் கிடைக்கப்பெறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்– 28, 30, 31, 1.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசை துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதாலும் சிறப்பான பணவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு 8-ல் சூரியன் கேது சஞ்சரிப்பதால் உடலில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பதும் நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருப்பதால் கடந்த கால நெருக்கடிகள் குறைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் சற்று தாமதத்திற்கு பிறகு கிடைக்கப்பெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் அவர்கள் எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்வதும், விநாயகர் துதிகளை படிப்பதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்– 28, 29, 30, 2, 3.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

கோபமாகவும் வேகமாகவும் பேசினாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. சனி 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவிற்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கையம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள்–       28, 30, 31, 1.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் கேது சேர்க்கைப் பெற்று 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். திருமண சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். என்றாலும் குரு பகவான் 3-ல் சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனமாக செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் சாதகமான செயல்பாட்டால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்– 28, 29, 30, 2, 3.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அனைவரிடத்திலும் அன்பும் பண்பும், மரியாதையும் கொண்டவராகவும், தெய்வ பக்தி உடையவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குரு பகவான் 2-ல் வலுவாக இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனி பகவானை வழிபாடு செய்வதும் சனிகவசங்கள் படிப்பதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் ––       28, 29, 30, 31, 1.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

தம்முடைய எந்த பொருட்களையும் கேட்பவருக்கு தானமளிக்க கூடிய பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல் டென்ஷன் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய வாரமாக இவ்வாரம் இருப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. பல்வேறு பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளகூடிய வலிமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்களும், உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக பாடுபட வேண்டியிருக்கும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்– 30, 31, 1, 2, 3.

சந்திராஷ்டமம் –         26-01-208 மதியம் 01.15 மணி முதல் 28-01-2018 மதியம் 02.58 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் தேவையற்ற இடையூறுகள் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்களால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து குடும்பத்தில் நிம்மதி குறையலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சூரியன் 3-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவிகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தாமத பலன்களையே பெற முடியும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாககூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்று பாடுபட வேண்டியிருக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம். குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வணங்குவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்–       1, 2, 3.

சந்திராஷ்டமம் –         28-01-2018 மதியம் 02.58 மணி முதல் 30-01-2018 மதியம் 03.00 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதாலும் 2-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்து கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறையும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறுவதால் லாபம் சிறப்பாக அமையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்– 28, 29.

சந்திராஷ்டமம்         30-01-2018 மதியம் 03.00 மணி முதல் 01-02-2018 மதியம் 03.07 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத திடீர் தனசேர்க்கை ஏற்பட்டு அனுகூலங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றி கொள்ள முடியும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனைப் பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். கடன்கள் சற்றே குறையும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சிவ வழிபாடு செய்வது பிரதோஷ விரதம் மேற்கொள்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள்–       28, 29, 30, 31.

சந்திராஷ்டமம் –         01-02-2018 மதியம் 03.07 மணி முதல் 03-02-2018 மாலை 05.08 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதாலும் 9-ல் குரு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். என்றாலும் சூரியன் சாதகமற்று இருப்பதால் அகலகால் வைக்காமல் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றியினை அடையலாம். வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நல்ல பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். பல புதிய வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப ஊதிய உயர்வும் கிடைக்கப்பெறும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சிவ வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்–       30, 31, 1, 2, 3.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்கள் கைகூடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி மேன்மையடையும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்தால் மேன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்–       2, 3.

Avittam natchathira palangal

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

   எழுதியவர்

முனைவர் முருகுபாலமுருகன்,

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்மூன்றாவது இடத்தை பெறுவது அவிட்ட நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இது  ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதில் 1,2 ஆம் பாதங்கள் மகர ராசிக்கும்  3,4 ஆம் பாதங்கள் கும்ப ராசிக்கும் சொந்த மானதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் க, கி, கு, கூ ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஞ, ஞா, கே ஆகியவைகளாகும்.

குண அமைப்பு

    அவிட்டம் செவ்வாய் பகவானின் நட்சத்திரம் என்பதால் பல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். பிறருடைய முகத்தை நேருக்கு நேர்ப் பார்த்து பேசுவார்கள். மெதுவாக நடப்பார்கள், ஆடை ஆபரணங்கள் மீது அதிக விருப்பம் உடையவர்கள். தன் பேச்சாற்றலால் எதிரிகளை ஒட ஒட விரட்டுவார்கள். அழகும் அறிவும் நிறைந்தவர்கள்.  மற்றவர்களின் சொத்துக்கு ஆசை படாதவர்கள். அடுத்தவர் தன்னைபற்றி விமர்சனம் செய்தாக பொருத்து கொள்ள மாட்டார்கள். உலகமே தலை கீழாக கவிழ்ந்தாலும் அஞ்சாமல் இருப்பார்கள். அடுத்தவர்களின் உதவியை எதிர் பார்க்க மாட்டார்கள். ஜாதி, இனம், மொழி மீது அதிக பற்றுதல் இருக்கும். மதியாதவர்களின் வாசற்படியை கூட மதிக்க மாட்டார்கள். வலிய சண்டைக்கு போகாவிட்டாலும் வந்த சண்டையை விட மாட்டார்கள். அனாவசியமாக பிறருக்கு செலவு வைக்கவும் மாட்டார்கள், தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் போராடி வெற்றி பெற கூடியவர்கள். அனுபவ அறிவாளி மற்றவர்களுக்கும் வழி காட்டுவார்கள். அவிட்டத்தில் பிறந்தவர்கள் தவிட்டு பானையிலும் தங்கம் எடுப்பார்கள். செல்வாக்கும் சேரும்.

குடும்பம்;

  அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவி, பிள்ளை மற்றும் பெற்றோர், சகோதரர் என கூட்டாக வாழ்வதில் ஆர்வம் காட்டுவார்கள். குற்றம் செய்பவர்களை தண்டிக்க தவறாக முன்கோபிகள். தாய் தந்தையை ஆயுள் காலம் வரை பேணி காப்பார்கள். கோபமிருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பதற்கேற்ப குடும்பத்திலுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார்கள். உற்றார் உறவினர்களை விட மற்றவர்கள் மீது அதிக பாசம் இருக்கும். யாரையும் சார்ந்து வாழ பிடிக்காதவர்கள் சமூக சீர்திருத்த வாதியாகவும் மூட நம்பிக்கைகளை வேரோடு கலைபவர்களாகவும் இருப்பார்கள். பகட்டான வாழ்க்கையும்,  பஞ்சு மெத்தை உறக்கமும் இவர்களுக்கு பிடிக்காது. இலவசம் பொருட்களை வாங்க மாட்டார்கள். பொய் பேசுபவர்களை கண்டால் பொங்கி எழுவார்கள்.

தொழில்;

      அவிட்ட நட்சத்திர காரர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் விளங்குவார்கள். பூமி மீது தீராத மோகம் உண்டு. பலர் நாட்டை காக்கும் ராணவ படைகளில் அதிகாரிகளாக விளங்குவார்கள். காவல் துறையிலும், சமூகத்தை காக்கும் இயக்கங்களிலும் சேர்ந்து பணியாற்றுவார்கள். கடின உழைப்பை விரும்புவார்கள். முத்து பவழம் போன்றவற்றிலும் லாபம் பெறுவார்கள். விளையாட்டு துறைகளிலும் அதிக ஆர்வம் இருக்கும். மாநில அளவில் பல பரிசுகளை தட்டி செல்வார்கள். எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். 22 வயது வாழ்வில் போராட்டங்களை சந்தித்தாலும் 37 வயதிலிருந்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தினைப் பெறுவார்கள். அரசியலிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். அடிமைத்தனம், மூடநம்பிக்கை இவற்றிலிருந்து வெளியேறி வாழ்வில் முன்னேற்ற மடைவார்கள்.

நோய்கள்;

  அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, கை கால்களில் வலியும் நரம்புகளில் பிரச்சனையும், இருதய சம்மந்தப்பட்ட ரத்த  சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் ஏற்படும். மயக்கம், தலைசுற்றல், இருதய துடிப்பு அதிகமாதல் போன்றவற்றாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

திசைப் பலன்கள்;

    அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திராதிபதி என்பதால் முதல் திசையாக வரும் செவ்வாய் திசையின் காலங்கள் 7 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். இத்திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். சிறு வயது என்பதால் உஷ்ண சம்மந்த பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும்.

    இரண்டாவதாக வரும் ராகு திசை காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையும், பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும், பெற்றோர் சொல் கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்.

    மூன்றாவதாக வரும் குரு திசை காலங்களில் சற்று கல்வியில் உயர்வும் திருமண சுப காரியம் நடைபெறும் அமைப்பும் கொடுக்கும். 16 வருடம் நடைபெறும் குரு திசை காலங்கள் ஏற்ற இறக்கமும் நிறைந்தாக இருக்கும்.

  நான்காவதாக வரும் சனி திசை காலங்களில் பல முன்னேற்றங்கள் பொருளாதார மேன்மைகள் உண்டாகும் என்றாலும், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகளை எதிர்கொள்ள  நேரிடும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. சனி ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். உடனிருப்பவர்களாலும் தொழிலாளர்களாலும் அனுகூலம் கிட்டும். பழைய இரும்பு பொருட்களாலும் லாபங்கள் கிடைக்கும்.

விருட்சம்;

      அவிட்ட நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் வன்னி மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை ரிஷப லக்னம் உதயமாகி அரை நாழிகை சென்று செப்டம்பர் மாதத்தில் இரவு 11 மணிக்கு வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

    அவிட்ட நட்சத்திரத்தில் தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம் உபநயனம், குழந்தைக்கு மொட்டையடித்தல் காது குத்துதல் பெயர் வைத்தல் பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். மருந்துண்பது, வண்டி வாகனம் வாங்குவது பயணங்கள் மேற் கொள்வது ஆகியவற்றையும் செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருவான்மியூர்;

     சென்னைக்கு தெற்கில் 8 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை ஸ்தலம். வன்மீகர், மருந்தீஸ்வரர், பால் வண்ண நாதர் என்ற பெயர்களுடன் ஈசன் அமைந்த ஸ்தலம் அன்னை திரிபுர சுந்தரி.

திருகாட்டுப்பள்ளி;

     தஞ்சை மாவட்டம், திருவையாற்றுக்கு மேற்கில் 10 கி.மீ தொலைவில் அக்னீஸ்வரர் அருள் புரியும் ஸ்தலம்.

கொடுமுடி;

                பாண்டி கொடுமுடி என்று அழைக்கபடும் கொங்கு நாட்டில் மகுடேஸ்வரர் சௌந்தர நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருப்பூந்துருந்தி;

                திருவையாருக்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் புஷ்பவன நாதர், அழகாலமர்ந்த நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

கூற வேண்டிய மந்திரம்

                ச்ரவிஷ்டா தேவதா; வந்தே

                வஸிந் ரதவராஸ்ரிதான்!

                சங்கம் சக்ராங்கிதகரான்

                க்ரீ டோஜ்வல மஸ்தகான்!!

பொருந்தாத நட்சத்திரங்கள்

                மிருக சீரிஷம், சித்திரை  அவிட்டம் நட்சத்திரங்கள் பொருந்தாது.

Rahukalam Yamakandam Today 24.01.2018

Date: 24.01.2018

Day: Wednesday

ராகு காலம் மதியம் 12:00 to 1:30 PM
எமகண்டம் காலை 7:30 to 9 AM
குளிகை காலை 10:30 AM to 12

 

Rahu Kaalam Noon 12:00 to 1:30 PM
Yamagandam 7:30 AM to 9 AM
Gulikai 10:30 AM to 12 Noon

 

Goto Main Page

Today rasi palan – 24.01.2018

இன்றைய ராசிப்பலன் –  24.01.2018

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

24-01-2018, தை 11, புதன்கிழமை, சப்தமி திதி மாலை 04.17 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. ரேவதி நட்சத்திரம் காலை 08.34 வரை பின்பு அசுவினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. ரத சப்தமி. சூரிய வழிபாடு நல்லது. கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சந்தி
திருக்கணித கிரக நிலை

24.01.2018

 

ராகு
சூரிய கேது  சுக்கி
புதன் சனி செவ் குரு

 

இன்றைய ராசிப்பலன் –  24.01.2018

மேஷம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். 

ரிஷபம்

இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை சமாளிக்கலாம். வியாபாரம் ரீதியாக கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

இன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

கடகம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

கன்னி

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வெளிப் பயணங்களில் கவனம் தேவை. வீண் பேச்சை குறைப்பது நல்லது.

துலாம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.

தனுசு

இன்று தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்ககூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தாராள தன வரவால் கடன்கள் குறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது,

மகரம்

இன்று பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சனைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்வதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.

Thiruvonam natchathira palangal

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

எழுதியவர்

முனைவர் முருகுபாலமுருகன்,

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்ரெண்டாவது இடத்தை பெறுவது திருவோண நட்சத்திரமாகும். திரு என்ற அடைமொழியுடன் விளங்கும். இதன் நட்சத்திராதிபதி சந்திர பகவானாவார். இது மகர ராசிக்குரிய நட்சத்திரமாகும். உடலில் தொடை, தொடை எலும்பு சுரப்பிகள், முட்டிகள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றன. இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் ஜீ, ஜே, ஜோ, கா ஆகியவை தொடர் எழுத்துக்கள் க,கா,கி,கீ ஆகியவை.

குண அமைப்பு;

      திருவோணம் நட்சத்திராதிபதி சந்திரன் என்பதால் விதவிதமான வாசனை பொருட்களை விரும்பி பூசிக் கொள்வார்கள்.  அடிக்கடி கோபப்பட்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள். தூய்மையான ஆடை  அணிவதில் அதிக விருப்பம் இருக்கும். தனக்கென தனிக் கொள்கை உடையவர்கள். எதிலும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். கருமியாக இருந்தாலும் வாடிய பயிரை கண்ட போது வருந்திய வல்லல் போல எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாருடைய மனதையும் புண் படுத்தாமல் இதமாக பேசி பழகுவார்கள். ஒணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் பெயர் புகழை பெறுவார்கள். எந்தவொரு உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். நல்ல நீதிமான்கள், பசியை பொருத்து கொள்ள முடியாது. பாலால் ஆன இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள். அழகான உடல்வாகும் எப்பொழுதும் புன்னகையுடன் விளங்கும் முகமும் இருக்கும் இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். நவீன ரக ஆடைகளையே விரும்பி அணிவார்கள்.

குடும்பம்;

    திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்களால் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். மனைவி மீதும் தாயின் மீதும் அதிக பாசம் இருக்கும். பழி பாவத்திற்கு அஞ்சி நடப்பார்கள். 16 வயது முதல் 23 வயது வரை தேவையற்ற நட்பால் பாதை மாறக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்ற மடைவார்கள். நீண்ட தலை முடியும், அழகிய முகமும் இருக்கும். சில நேரங்களில் முன்னுக்கு முரணாக பேசுவதால் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ஆடை ஆபரணங்களை விரும்பி அணிவார்கள். மனைவிக்கு பயந்து நடப்பதுடன் அவள் மீது அதிக பாசமும் வைத்திருப்பார்கள், பிள்ளைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவார்கள். நவீன ரக வீட்டு பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். குடும்பத்தின் ஆதரவை பெற்று சீரும் சிறப்பாக வாழ்வார்கள் உறவினர்களையும் நேசிப்பார்கள்.

தொழில்;

     திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி வாகை சூடுவார்கள். மக்களை நேசிப்பவராகவும், சமூக நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்கள். புலவராகவும் பண்டிதர்களாகவும் சிறந்து விளங்குவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய தொழில் நுட்ப சாதனங்கள் வாங்கி பிரம்மாண்டமாக தொழில் நடத்துவார்கள். சிறு வயதிலிருந்தே இசை, ஒவியம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும். கலைஞர்களையும் ஊக்குவிப்பார்கள். 24 வயதிலிருந்து நல்ல மாற்றங்களும் வசதியான வேலை, நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும்படி வாழ்வில் முன்னேறுவார்கள். பலர் முனைவர் பட்டம் பெற்று மொழி ஆராய்ச்சி அகழ்வராய்ச்சி,  கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவற்றிலும் தொழிலதிபர், வங்கி பணி, எழுத்தாளர் பேராசியர்களாகவும் ஜொலிப்பார்கள்.

நோய்;

  திருவோண நட்சத்திரகாரர்களுக்கு அடிக்கடி உடல் நிலையில் ஜல தொடர்புடைய பாதிப்புகள் சிறுநீரக கோளாறு உண்டாகும். மனக்குழப்பங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு மனநிம்மதி குறையும். சிலருக்கு பரம்பரை வியாதிகளான சர்க்கரை வியாதி ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.

திசைப் பலன்கள்;

                திருவோண நட்சத்திரதிபதி சந்திரன் என்பதால் முதல் திசையாக வரும் சந்திர திசையின் மொத்த காலங்கள் 10 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இத்திசை காலங்களில் சிறு சிறு ஜல தொடர்புடைய பாதிப்புகளும், தாய்க்கு சோதனைகளும் உண்டாகும்.

                இரண்டாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சமும் ஏற்படும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும்.

            மூன்றாவதாக வரும் ராகு திசை காலங்கள் மொத்தம் 18 வருடங்களாகும். இக்காலங்கள் ஏற்ற இறக்க மானப் பலன்களைப் பெற முடியும். கல்வியில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.

      நான்காவதாக வரும் குரு திசை காலங்கள் சாதனைகள் பல செய்ய வைக்கும். பொருளாதார மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.

    ஐந்தாவதாக வரும் சனி திசை காலங்கள் சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் உயர்வும் மக்களிடையே நற்பெயரும் உண்டாகும்.

செய்ய வேண்டிய  நல்ல காரியங்கள்

    திருவோண நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், விவாகம், பூ முடித்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயரிட்டு தொட்டிலிடுதல், மொட்டையடித்து காது குத்துதல்,புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்றவை நல்லது. வங்கியில் சேமிப்பு  தொடங்குதல் மாடு ஆடு வாங்குதல், குளம், கிணறு வெட்டுதல், வாசற்கால் வைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புதுமனை புகுதல், விதை விதைத்தல், விருந்துண்ணல், புனித யாத்திரை செல்லுதல், உபநயனம் செய்தல் கல்வி, நாட்டியம் ஆகியவற்றை கற்க தொடங்குதல் போன்றவை நற்பலனை உண்டாக்கும்.

விருட்சம்;

     திருவோண நட்சத்திரத்தின் ஸ்தல விருட்சம் பாலுள்ள எருக்கு மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை செப்டம்பர் மாதம் இரவு 9.30 மணிக்கு மேல் உச்சியில்  காணலாம்.

பரிகார ஸ்தலங்கள்

திருமுல்லைவாயில்;

     சென்னைக்கு மேற்க்கில் ஆவடியை ஒட்டியுள்ள ஸ்தலம் மாசில மணீசுவரர்&கொடியிடை நாயகி அருள் பாலிக்கும் எருக்கல் செடியை தல விருட்சமாக கொண்ட ஸ்தலம்

எருக்கத்தம் புலியும்;

      கடலூர் மாவட்டம் விருதாசலத்திற்கு தெற்கே 12 கி.மீ தொலைவிலுள்ள ராஜேந்திர பட்டினம் என்ற எருக்கத்தம் புலியூரில் நீல கண்டேசு வரும் நீலமலர் கண்ணி அம்பிகையும் அருள் பாலிக்கும் திருத்தலம்.

கூறவேண்டிய மந்திரம்

                சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம்

                ச்ரவண நட்சத்திர வல்லடம்

                விஷணும் கமலபத்ராஷம்

                தீயா யேத் கருட வாகனம்

பொருந்தாத  நட்சத்திரங்கள்

                ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் பொருந்தாது.

Rahukalam Yamakandam Today 23.01.2018

Date: 23.01.2018

Day: Tuesday

 

ராகு காலம் மதியம் 3 to 4:30 PM
எமகண்டம் காலை 9 to 10:30 AM
குளிகை மதியம் 12:00 to 1:30 PM

 

Rahu Kaalam 3 PM to 4:30 PM
Yamagandam 9 AM to 10:30 AM
Gulikai Noon 12:00 to 1:30 PM

 

Goto Main Page