Vaara rasi palan Dec 10 to 16

வார ராசிப்பலன்

டிசம்பர் 10 முதல் 16 வரை   2017

கார்த்திகை 24 முதல் மார்கழி 1 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை — 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

சந்தி
திருக்கணித கிரக நிலை

 

ராகு
கேது

 

சனி 

புதன் வ

 

சூரிய

சுக்கி

குரு

செவ்

கிரக மாற்றம்

11-12-2017 விருச்சிகத்தில் புதன் (வ) அதிகாலை 04.18 மணி

16-12-2017 தனுசில் சூரியன் அதிகாலை 03.01 மணி

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

சிம்மம்               08.12.2017 மாலை 06.28 மணி முதல் 10.12.2017 இரவு 11.42 மணி வரை

கன்னி 10.12.2017 இரவு 11.42 மணி முதல் 13.12.2017 காலை 08.08 மணி வரை

துலாம்                13.12.2017 காலை 08.08 மணி முதல் 15.12.2017 மாலை 06.53 மணி வரை

விருச்சிகம்      15.12.2017 மாலை 06.53 மணி முதல் 18.12.2017 காலை 07.04 மணி வரை

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

13.12.2017 கார்த்திகை 27 ஆம் தேதி புதன்கிழமை ஏகாதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம்.தேய்பிறை

14.12.2017 கார்த்திகை 28 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம்.தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி  செவ்வாய் 7-லும், மாத கோளான சூரியன் 8-லும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத சூழ்நிலை உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். குரு 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 11, 12, 13, 14.

சந்திராஷ்டமம்         15.12.2017 மாலை 06.53 மணி முதல் 18.12.2017 காலை 07.04 மணி வரை

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சுக்கிரன் 7-ல் இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்றே குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும் உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்க முடியும். குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வணங்கினால் நன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        13, 14, 15, 16.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத் துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 6-ல் மாத கோளான சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        10, 16.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி மற்றவர்களால் ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரனும், 6-ல் சனியும் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் நற்பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும் என்றாலும் 4-ல் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் அனுகூலப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        11, 12.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 4-லும், 3-ல் குருவும் சஞ்சரிப்பதால் பணவரவில் இடையூறுகள், நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு போன்றவை உண்டாகும். இருப்பதை அனுபவிக்க முடியாத அளவிற்கு அலைச்சல்கள் ஏற்படும். செவ்வாய் 3-ல் இருப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை நிலவினாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் கவனமுடன் இருப்பது உத்தமம். பிரதோஷ விரதமிருப்பது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        10, 13, 14, 15.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

எவ்வளவு தான் கற்று அறிந்து இருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் மகிழ்ச்சி பூரிப்பு உண்டாகும். 3-ல் சூரியன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கித்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் சற்றே விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் சாதகமான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். முருக வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        11, 12, 16.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடு பட்டாவது காப்பாற்றும் பண்பும் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 2-லும், 3-ல் சனியும் சஞ்சரிப்பதால் சாதகமான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு, மந்த நிலை தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்ற விட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        10, 13, 14, 15.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய், குரு சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள், உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செவுகளை குறைத்து கொண்டு சிக்கனமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். சூரிய வழிபாடு நன்மையை தரும்.

வெற்றி தரும் நாட்கள் –        10, 11, 12, 16.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராசியதிபதி குரு, செவ்வாயுடன் இருப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். தாராள பணவரவு உண்டாகி உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் நிலையில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். சூரியன் 12-ல் இருப்பதால் முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபகரமான பலன்களை அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் தேவையற்றப் பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        11, 12, 13, 14, 15.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறலாம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொன், பொருள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உங்கள் மீது இருந்த பழிச்சொல் விலகி நற்பெயர் எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலை பளுவும் குறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        13, 14, 15, 16.

சந்திராஷ்டமம்–        08.12.2017 மாலை 06.28 மணி முதல் 10.12.2017 இரவு 11.42 மணி வரை

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதும், 10-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் சற்றே விலகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் கடன் உதவிகளும் தடையின்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தமான நிலையே இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகமாக இருக்கும் என்றாலும் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து விடுவது உத்தமம். விநாயகர் வழிபாடு செய்வதால் நற்பலன்கள் கிட்டும்.

வெற்றி தரும் நாட்கள் –        10, 16.

சந்திராஷ்டமம் –       10.12.2017 இரவு 11.42 மணி முதல் 13.12.2017 காலை 08.08 மணி வரை

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு 8-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் 9-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றலை பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனமாக செயல்படுவது உத்தமம். முருக கடவுள் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 10, 11, 12.

சந்திராஷ்டமம் –       13.12.2017 காலை 08.08 மணி முதல் 15.12.2017 மாலை 06.53 மணி வரை

 

Today rasi palan – 09.12.2017

Today rasi palan – 09.12.2017

இன்றைய ராசிப்பலன் –  09.12.2017

 

இன்றைய  பஞ்சாங்கம்

09-12-2017, கார்த்திகை 23, சனிக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 01.41 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. மகம் நட்சத்திரம் மாலை 05.40 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் மாலை 05.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1/2. சனிபகவான் வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

                திருக்கணித கிரக நிலை

09.12.2017

 

ராகு
கேது சந்தி
புதன்(வ) சனி   சூரிய சுக்கி

 

செவ்

குரு

 

இன்றைய ராசிப்பலன் –  09.12.2017

மேஷம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினை குறைந்து மனநிம்மதி உண்டாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் நற்செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள்.

கன்னி

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.  அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று  சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் நிலை உருவாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

Today rasi palan – 08.12.2017

Today rasi palan – 08.12.2017

இன்றைய ராசிப்பலன் –  08.12.2017

இன்றைய  பஞ்சாங்கம்

08-12-2017, கார்த்திகை 22, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 02.52 வரை பின்பு தேய்பிறை சப்தமி. ஆயில்யம் நட்சத்திரம் மாலை 06.27 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 0. சஷ்டி விரதம். முருக- நவகிரக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

                திருக்கணித கிரக நிலை

08.12.2017

 

ராகு சந்தி
கேது
புதன்(வ) சனி   சூரிய சுக்கி

 

செவ்

குரு

 

இன்றைய ராசிப்பலன் –  08.12.2017

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். திடீர் பயணம் உண்டாகும். பழைய கடன்கள் குறையும்.

சிம்மம்

இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.

துலாம்

இன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப்பெறும். பொன் பொருள் சேரும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வேலைபளு சற்று குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகரம்

இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். உத்தியோகத்தில்  சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். செய்ய நினைக்கும் செயல்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும்.

Today rasi palan – 07.12.2017

இன்றைய ராசிப்பலன் –  07.12.2017

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

07-12-2017, கார்த்திகை 21, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி காலை 07.15 வரை பின்பு பஞ்சமி திதி பின்இரவு 04.45 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூசம் நட்சத்திரம் இரவு 07.54 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

                திருக்கணித கிரக நிலை

07.12.2017

 

ராகு சந்தி
கேது
புதன்(வ) சனி   சூரிய சுக்கி

 

செவ்

குரு

 

இன்றைய ராசிப்பலன் –  07.12.2017

மேஷம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் உங்களின் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

ரிஷபம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.

கடகம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன நிம்மதி கெடும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.

துலாம்

இன்று பிள்ளைகளால் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். கடன் பிரச்சனைகள் தீரும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

தனுசு

இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

மகரம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லை சற்று குறையும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

Today rasi palan -06.12.2017

Today rasi palan -06.12.2017

இன்றைய ராசிப்பலன் –  06.12.2017

இன்றைய  பஞ்சாங்கம்

06-12-2017, கார்த்திகை 20, புதன்கிழமை, திரிதியை திதி பகல் 10.19 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 09.56 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சந்தி
                திருக்கணித கிரக நிலை

06.12.2017

 

ராகு
கேது
புதன்(வ) சனி   சூரிய சுக்கி

 

செவ்

குரு

 

இன்றைய ராசிப்பலன் – 06.12.2017

மேஷம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இ-ருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. அரசு வழி உதவிகள் கிடைக்கப்பெறும். கடன்கள் குறையும்.

சிம்மம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோக ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். திடீர் பணவரவுகள் உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று நீங்கள் சிறு மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.31 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.31 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.

மகரம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மன அமைதி ஏற்படும். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

Today rasi palan – 05.12.2017

Today rasi palan – 05.12.2017

இன்றைய ராசிப்பலன் –  05.12.2017

 

இன்றைய  பஞ்சாங்கம்

05-12-2017, கார்த்திகை 19, செவ்வாய்கிழமை, துதியை திதி பகல் 01.46 வரை பின்பு தேய்பிறை திரிதியை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 12.28 புனர்பூசம். மரணயோகம் இரவு 12.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சந்தி
                திருக்கணித கிரக நிலை

05.12.2017

 

ராகு
கேது
புதன்(வ) சனி   சூரிய சுக்கி

 

செவ்

குரு

 

இன்றைய ராசிப்பலன் –  05.12.2017

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

ரிஷபம்

இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.

மிதுனம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். லாபம் பெருகும். புதிய பொருள் வீடு வந்து சேரும். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

சிம்மம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

கன்னி

இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி கூடும்.

துலாம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

தனுசு

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

மகரம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சனைகள் குறையும்.

கும்பம்

இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பணப்பிரச்சனையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனை தீரும்.

மீனம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவு அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.

Mesha rasi – New year rasi palan – 2018

2018 புத்தாண்டுப் பலன்கள்- மேஷம் 
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
வாக்கு சாதுர்யமும், வசீகரப் பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2018-ஆம் ஆண்டுமுழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் அமைப்பாகும். இதுமட்டுமின்றி குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். திருமணவயதை அடைந்தவர்களுக்குத் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். நல்ல வரன்கள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். புத்திர பாக்கியம் அமையும். புத்திரவழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், அசையாசொத்து வகையில் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். என்றாலும் அதன்மூலம் அனுகூலப்பலன்களையும் பெறுவீர்கள். உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்துவிடமுடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் குரு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.

உடல் ஆரோக்கியம்
சனி 9-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குரு சமசப்தம ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. இதனால் குடும்பத்தில் ஏற்படும் மருத்துவச்செலவுகளும் உங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.

குடும்பம், பொருளாதார நிலை
பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை எளிதில் அமையும். அசையாச்சொத்து வகையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் லாபம் கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், புத்திரவழியில் மகிழ்ச்சியும் அமையும். வருடக் கடைசியில் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு 8-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் ஆடம்பரச்செலவுகளைக் குறைத்துக் கொள்வது, நெருங்கியவர்களிடம் கவனமுடன் இருப்பது நல்லது.

உத்தியோகம்
இந்த வருடம் உத்தியோகஸ்தர்களுக்கு அற்புதமான பதவி உயர்வுகளையும், பாராட்டுதல்களையும் அள்ளித்தருவதாக அமையும். திறமைக்கேற்ற கௌரவமான நிலையினை அடைவீர்கள். ஊதிய உயர்வுகளால் பொருளாதாரநிலை உயர்வடையும். புதிய வேலை வாய்ப்பும் எதிர்பார்த்தபடியே கிட்டும். நல்ல நிர்வாகத்திறனும் பலரை அதிகாரம் செய்யக்கூடிய ஆற்றலும் உண்டாகும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உங்களின் கௌரவத்திற்கு நல்லது.

தொழில், வியாபாரம்
குரு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் தொழில், வியாபார ரீதியாக ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் வெல்லக்கூடிய ஆற்றலும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

பெண்களுக்கு
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகளும் பூர்த்தியாகும். மணமாகாத கன்னியருக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர் அழகான புத்திரனைப் பெற்றெடுப்பர். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் அமையும். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 

கொடுக்கல்- வாங்கல்
தனகாரகன் குரு பகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவை சரளமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் தாரளமாக லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளையும் தடையின்றி ஈடுபடுத்தமுடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். குரு மாற்றத்திற்குப் பிறகு அதாவது அக்டோபருக்குப் பிறகு கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு
நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். மக்கள் செல்வாக்குக்குக் காரகனாகிய சனி பகவான் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு மேன்மையை உண்டாக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைத் தடையின்றிக் காப்பாற்றிவிடுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கட்சிப் பணிக்காக எதிர்பாராத வீண்செலவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதால் பணவிஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு
விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக்கடன்களும் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பூமி, மனை வாங்கும் யோகம் உண்டு என்றாலும் சில தடைகளுக்குப் பின் வாங்குவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்களையும் நிறைவேற்ற முடியும்.ஆடு, மாடு போன்ற கால்நடைகளாலும் சிறப்பான லாபம் கிட்டும். கடன்களை அடைக்கக்கூடிய அளவிற்கு ஆற்றலும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு
இந்த ஆண்டு கலைஞர்களுக்கு அபரிமிதமான செல்வாக்கினை உண்டாக்கும் ஆண்டாக அமையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமைக்கேற்ற கதாபாத்திரங்களும் கிடைக்கப்பெறும். குரு மாற்றத்திற்குப் பிறகு அதாவது அக்டோபருக்குப் பிறகு பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக்கூடும் என்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதைக் குறைத்துக்கொள்வது நல்லது.

மாணவ- மாணவியருக்கு
கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். நல்ல நண்பர்களின் நட்பு உங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும். விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். கல்விக்காகச் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் கிட்டும்.
மாதப் பலன்கள்

ஜனவரி: மாதம் ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 9-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடையமுடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனைப் பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக் கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்துகொள்வார்கள். அபிவிருத்தியும் ஓரளவுக்குப் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 12-1-2018 அதிகாலை 12.49 மணி முதல் 14-1-2018 மதியம் 1.11 மணி வரை.

பிப்ரவரி: மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 7-ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் அற்புதமான நற்பலன்களைப் பெறமுடியும். தாராள தனவரவுகள் உண்டாவதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் – மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 8-2-2018 காலை 7.45 மணி முதல் 10-2-2018 இரவு 7.49 மணி வரை.

மார்ச்: இம்மாதம் 7-ல் குரு சஞ்சரிப்பதும் மாதக்கோளான சூரியன் மாத முற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகளில் சரளமான நிலை உண்டாகும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளையும் தடையின்றி மேற்கொள்ளலாம். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளைப்பெற சற்றே தாமதம் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 7-3-2018 மாலை 4.07 மணி முதல் 10-3-2018 அதிகாலை 3.23 மணி வரை. 

ஏப்ரல்: ஜென்ம ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் இருப்பதும் மாதக் கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகக்கூடும். எதிலும் சிந்தித்து செயல்படவும். சனி 9-ல் உள்ளதால் தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். அசையும், அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 4-4-2018 அதிகாலை 1.09 மணி முதல் 6-4-2018 பகல் 11.38 மணி வரை. 

மே: ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். என்றாலும் சுக்கிரன் 2-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெறமுடியும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூட சற்று தாமதம் உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண்பிரச்சினைகள் உண்டாவதைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் செய்துமுடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்கமுடியும். சிவவழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 1-5-2018 காலை 9.35 மணி முதல் 3-5-2018 இரவு 7.48 மணி வரை மற்றும் 28-5-2018 மாலை 4.38 மணி முதல் 31-5-2018 அதிகாலை 3.08 மணி வரை. 

ஜூன்: ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் – மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல் – வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 24-6-2018 இரவு 10.31 மணி முதல் 27-6-2018 காலை 9.31 மணி வரை. 

ஜூலை: ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வதும், குரு 7-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் கிடைக்கப்பெறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் – வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 22-7-2018 அதிகாலை 4.14 மணி முதல் 24-7-2018 மதியம் 3.25 மணி வரை. 

ஆகஸ்ட்: இம்மாதம் 4-ல் புதன், 7-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் எல்லா நன்மையும் கிட்டும்.
சந்திராஷ்டமம்: 18-8-2018 காலை 10.57 மணி முதல் 20-8-2018 இரவு 9.37 மணி வரை. 

செப்டம்பர்: ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 10-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு  வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பணம் கொடுக்கல் – வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். சனிக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 14-9-2018 இரவு 7.12 மணி முதல் 17-9-2018 அதிகாலை 4.51 மணி வரை. 

அக்டோபர்: ஜென்ம ராசிக்கு 10-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும்.எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப்பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலைநாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் 11-ஆம் தேதிமுதல் குரு 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதால் வீண்விரயங்களைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். 
சந்திராஷ்டமம்: 12-10-2018 அதிகாலை 4.31 மணி முதல் 14-10-2018 மதியம் 1.11 மணி வரை. 

நவம்பர்: மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும், 8-ல் குரு சஞ்சாரம் செய்வதால் வீண்அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் 6-ஆம் தேதி முதல் செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள், வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் அமைவதில் தாமதம் உண்டாகும். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். கொடுக்கல் – வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன் இல்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவவழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 8-11-2018 மதியம் 1.39 மணி முதல் 10-11-2018 இரவு 9.56 மணி வரை. 

டிசம்பர்: ஜென்ம ராசிக்கு 7-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். கணவன் – மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் – வாங்கல் போன்றவற்றில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் எல்லா நன்மையும் கிட்டும்.
சந்திராஷ்டமம்- 5-12-2018 இரவு 9.20 மணி முதல் 8-12-2018 காலை 6.04 மணி வரை. 
அதிர்ஷ்டம் அளிப்பைஎண் – 1, 2, 3, 9, நிறம் – ஆழ்சிவப்பு, கிழமை- செவ்வாய், கல் – பவளம்,   திசை –   தெற்கு, தெய்வம் – முருகன்.

Today rasi palan – 04.12.2017

Today rasi palan – 04.12.2017

இன்றைய ராசிப்பலன் –  04.12.2017

இன்றைய  பஞ்சாங்கம்

04-12-2017, கார்த்திகை 18, திங்கட்கிழமை, பிரதமை திதி மாலை 05.29 வரை பின்பு தேய்பிறை துதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 03.19 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சந்தி
                திருக்கணித கிரக நிலை

04.12.2017

 

ராகு
கேது
புதன்(வ) சனி   சூரிய சுக்கி

 

செவ்

குரு

 

இன்றைய ராசிப்பலன் – 04.12.2017

மேஷம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடையலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். மன அமைதி குறையும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவி இன்று உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளி மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். புத்திர வழியில் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும். பழைய கடன்கள் குறையும். அமைதி நிலவும்.

கடகம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். சொத்து சம்மந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். பணப் பிரச்சனைகள் குறையும்.

கன்னி

இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

துலாம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 4.49 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்

இன்று எந்த ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 4.49 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

தனுசு

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். பணவரவு தாரளமாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும். சேமிப்பு கூடும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.

கும்பம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் வருமானம் பெருகும்.

மீனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

Meena rasi – Sani peyarchi 2017 to 2020

மீனம்
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 

கனிந்த பார்வையும், மலர்ந்த முகமும், கம்பீரமானத் தோற்றமும் கொண்ட மீன ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி பகவான் வாக்கியப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளால் லாபங்கள் குறையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலைகளால் மந்த நிலை நிலவுவதோடு அபிவிருத்திக் குறையக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்கமுடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். உடன்பணிபுரிபவர் களால் வேலைப்பளு அதிகரித்து நீண்ட நேரம் உழைக்க வேண்டி யிருக்கும். இதனால் உடல்நிலை சோர்வடையும். புதிய வேலை தேடு பவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேற தாமதம் ஏற்படும். 

சனி ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உங்கள் ராசியதிபதி குரு பகவான் 5-10-2018 முதல் 28-10-2019 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இக்காலங்களில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். தடைப்பட்டத் திருமண சுப காரியங்கள் கைகூடும். நல்லவரன்கள் தேடிவரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களின் ஆதரவு கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில், வியாபாரத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல லாபம் கிட்டும். தற்போது 5,11-ல் சஞ்ரிக்கும் ராகு, கேது  13-2-2019 முதல் 1-9-2020 வரை 4,10-ல் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.  

உடல் ஆரோக்கியம் 

  உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும் என்றாலும் எடுக்கும் காரியங்களில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் ஓரளவுக்கு எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.

குடும்பம், பொருளாதாரநிலை
குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண் டால் அனுகூலமான நற்பலனைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்திளிப்பதாகவே அமையும். திருமண சுபகாரியங்களுக் கான முயற்சிகளில் வெற்றி கிட்டும்.  குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் சேமிக்கமுடியும். 

கொடுக்கல்- வாங்கல்
  பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக்கூடியக்காலம் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பவர்கள் பெரிய தொகை ஈடுபடுத்தும்போது மிகவும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே லாபம் அடையமுடியும். உங்களுக்கு தேவையற்ற வம்பு, வழக்குகளும் அதிகரிக்கும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். 

தொழில், வியாபாரம் 
  செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப்போகும். இதனால் அபிவிருத்தி குறைந்து பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படும். தொழிலாளர்களும் வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மனசஞ் சலங்கள் உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப் படும். வங்கிக் கடன்களை செலுத்த முடியாத அளவிற்கு லாபம் குறையும். 

உத்தியோகம் 
  உத்தியோகஸ்தர்கள் பணியில் முழுமனநிறைவற்ற நிலை உண்டாகும். பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்தே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். உடல்நிலையில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதி காரிகள் செய்யும் கெடுபிடிகளால் மனநிலையில் நிம்மதிக்குறைவு ஏற்படும். நீண்டநாட்களாக கிடைக்காமலிருந்த நிலுவைத்தொகைகளும் கைக்குக் கிடைக்கப்பெறும்.

பெண்கள்
நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் சில தடைகளை சந்திக்க நேரி டும். உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மருத்துவச் செல வுகள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளால் சேமிப்பு குறையும். பணிபுரியும் பெண்கள் உத்தியோகத்தில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. 

அரசியல்
அரசியல்வாதிகளின் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களே துரோகம் செய்ய எண்ணுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் தாமதப்படும். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

விவசாயிகள்
 விவசாயிகளுக்கு விளைச்சல்கள் சுமாராக இருக்கும். சந்தையில் விளைபொருட்களுக்கு ஏற்ற விலை எதிர்பார்த்தபடி கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். அரசுவழியில் வரவிருந்த மானிய உதவிகளும் தாமதப்படும். சேமிப்பு குறையும். 

கலைஞர்கள்
வரவேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப்போகும். கையிலிருக்கும் வாய்ப்புகளை சரியாகப் பார்த்துக்கொள்வது நல்லது. நினைத்த கதாபாத்திரத்திரங்களில் நடிக்க முடியாது. பொருளாதார நிலையிலும் இடையூறுகள் நிலவுவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். சக நடிகர்களுடன் கவனமுடன் பழகுவது நல்லது.

மாணவ- மாணவியர்
  நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.அரசுவழியில் வரவேண்டிய உதவிகள் தாமதப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் தேடிவரும். உடன்பழகும் நண்பர்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும் என் பதால் கவனம் தேவை. பயணங்களின்போது வேகத்தைக் குறைப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கவனமுடனிருக்கவும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை
  சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களை அடையமுடியும். இதுமட்டுமன்றி குரு பகவானும் ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் மற்றும் அசையா சொத்துவகையில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். உற்றார் -உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும் என்றாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதால் உங்கள் திறமையால் எதையும் சமாளித்து ஏற்றங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண்செலவுகளைத் தவிர்த்தால் மட்டுமே சேமிக்கமுடியும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப்போகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை
  சனி பகவான் இக்காலங்களில் தொழில் ஸ்தானமான 10-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.  உத்தியேகஸ்தர்களுக்கும் பணியில் இருந்த நெருக் கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குரு 8-ல் சஞ்சரித்தாலும் 4-7-2018 வரை  வக்ரகதியில் இருப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகி குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தடபுடலாக நடைபெறும். கடன்கள் ஓரளவுக்குக் குறைவதால் சேமிக்க முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். 

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை
 சனி பகவான் கேது நட்சத்திரமான மூலத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். பணியில் ஒரு நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். 8-ல் சஞ்சரிக்கும் குரு 5-10-2018 முதல், பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் பிரச்சினைகள் அனைத்தும் மறைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலையிலிருந்த தடைகள் விலகும். செல்வம், செல் வாக்கு உயரக்கூடிய யோகம் உண்டாகும்.புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலை உண்டாகும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை
  சனி பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு 9-ல் சஞ்சரிப்பதால் இருந்து வந்த தேவையற்ற பிரச்சினைகள் அனைத்தும் விலகி எல்லா வகையிலும் மேன்மையான பலன்களை அடை வீர்கள். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும். மங்களகரமான நிகழ்ச்சிகள் நிறைவேறி குடும்பத்தில் மனநிறைவை உண்டாக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். வீடு,மனை, வாகனம் வாங்கும் யோகம் அமையும். பொன்பொருள் சேரும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக அமையும். எதிபாராத திடீர் தனவரவுகள் ஏற்பட்டு செல்வம், செல்வாக்கும் உயரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் குறையும். கூட்டாளி களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். துர்க்கையம்மனை வழிபடுவது மன நிறைவைத் தரும். 

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை
  ஜென்ம ராசிக்கு 10-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குருவும் சாதகமாக 9-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் தடபுடலாக நடந்தேறும். உற்றார்- உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாக்கும். உடல்நிலை அற்பதமாக அமைந்து எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். வெளிநாட்டுத் தொடர்புகளும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், அபிவிருத்தியும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் திருப்தியான நிலை இருக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை
  சனி பகவான் மூல நட்சத்திரத்தில் சர்ப்பகிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று ஜீவன ஸ்தானமான 10-ல் சாதகமற்று சஞ்சரித்தாலும் ராசியதிபதி குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களுக்கு வெற்றிமேல் வெற்றிகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும். செல்வம், செல்வாக்கு பெருகும். வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். நினைத்த காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோ கஸ்தர்கள் சிறுசிறு தடைக்குப் பின் உயர்வுகளைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் நிதானமாக செயல்பட்டால் ஏற்றங்களைப் பெறலாம். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை
  சனி பகவான் சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரித்தாலும் குரு 9-ல் இருப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த வீடு, பூமி, மனை யாவும் வாங்கும் பாக்கியம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வர்களால் லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். 29-10-2019 முதல், குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நவகிரக சாந்தி செய்வது உத்தமம். 

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை
  சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் குரு, கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெறமுடியும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவதன்மூலம் வீண் விரயங்களை குறையும். தொழில், வியாபாரம் செய்கின்றவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகக்கூடும். அசையா சொத்து வகையில் வீண் செலவுகள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப் படையும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை
 சனி பகவான் ஜென்ம ராசிக்கு 10-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். தொழிலாளர்களின் ஒத்து ழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன  நிம்மதியுடன் செயல்படமுடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். கணவன்- மனைவி ஒற்றுமை நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். ராகு-கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை
  சனி பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் ராகு முயற்சி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்தால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியும் லாபமும் கிட்டும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடைவிலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் லாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இட மாற்றங்களை அடையமுடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வெளிவட்டாரம் விரிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை
 சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் வீண்பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். கொடுக்கல்-வாங்கலும் சரளமாக நடைபெறும். மணமாகாதவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். புத்திரவழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் சற்று அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களும் வேலைப்பளுவும் குறையும். சனிக்குப் பரிகாரம் செய்யவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் : 1, 2, 3, 9, கிழமை : வியாழன், ஞாயிறு, திசை : வடகிழக்கு   கல் : புஷ்ப ராகம், நிறம் : மஞ்சள், சிவப்பு, தெய்வம் :  தட்சிணாமூர்த்தி.

Kumba rasi – Sani peyarchi 2017 to 2020

கும்பம்
அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்
உயர்ந்த பண்பும், பொறுமையும், பிறர் விஷயங்களில் அத்துமீறித் தலையிடாத நற்குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! இதுவரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில், உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவந்த உங்கள் ராசியதிபதி சனி பகவான் வாக்கியப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை உங்கள் ராசிக்கு லாபஸ் தானமான 11-ல் சஞ்சரிக்க உள்ளதால் இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் பகலவனைக் கண்ட பனிபோல விலகிவிடும். உங்களது செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். தொழில், வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும்விலகி தொட்டதெல்லாம் லாபத்தையே கொடுக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது பொன்னான காலமாகும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் அனைத்தும் நினவாகும். எதிர்பார்த்த உயர்வுகளையும், இட மாற்றங்களையும் தடையின்றிப் பெறமுடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருக்கும் ஊழியர்களின் ஒத்துழைப்புகளும் வேலைப் பளுவைக் குறைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். 
   சனி சாதகமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் சர்ப்ப கிரகமான ராகு 12-2-2019 வரை 6-லும், 13-2-2019 முதல் 1-9-2020 வரை கேது லாபஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருப்பதும், குரு பகவான் 4-10-2018 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிலும், 29-10-2019 முதல் 15-11-2020 வரை லாபஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும்.சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புரிந்துகொள்ளாமல் பிரிந்துசென்ற உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகளையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.  கொடுக்கல்-வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய முதலீடு களை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமான பலனைப் பெறமுடியும். பெயர், புகழ் அனைத்தும் உயரும்.

உடல் ஆரோக்கியம்   
    உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். புதுத்தெம்பும் உற்சாகமும் ஏற்படும்.  நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். மங்களகரமான காரியங்கள் நடைபெற்று உங்களின் கடமைகளை நிறைவேற்றிய திருப்தி ஏற்படும்.

குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் சுபிட்சமும், லஷ்மி கடாட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். பொருளாதார நிலை திருப்தி கரமாக அமைந்து வீடு, மனை,வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும்.

கொடுக்கல்- வாங்கல்
  கொடுக்கல்-வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணலாம். கொடுத்த கடன்களும் வீடு தேடிவரும்.  விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். நல்ல நட்புகளால் நற்பலன் அமையும். எதிர்பாராத தனவரவு களும் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்புக் கிட்டும்.

தொழில், வியாபாரம் 
  தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளி களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய தொழில் தொடங்க, பெரிய தொகை ஈடுபடுத்தி அபிவிருத்திச் செய்ய அற்புதமான காலமாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளும் லாபத்தை ஏற்படுத்தும். முதலாளி -தொழிலாளி இடையே உள்ள உறவு திருப்தி கரமாக அமைந்து மேன்மேலும் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

உத்தியோகம் 
  உத்தியோகஸ்தர்களுக்குச் செய்யும் பணியில் திருப்தியான நிலை இருக்கும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும். எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகளும் கிட்டும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று உயர்வடைவார்கள்.

பெண்கள்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் கிட்டும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணிபுரிபவர் களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். 

அரசியல் 
  பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை தடை யின்றிக் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளை சிறப்பாகச் செய்யமுடியும். கட்சி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எந்த வித பிரச்சினைகளும் இன்றி சாதனை செய்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். 

விவசாயிகள்
 பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். விளைப்பொருளுக்கு சற்று கூடுதலான விலை சந்தையில் கிடைக்கும். தாராள தனவரவுகளால் நவீன யுக்திகளைக் கையாளமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் கிடைக்கும். வீடு, மனை, புதிய நிலம் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கடன்கள் குறையும்.

கலைஞர்கள் 
  புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்கள் கனவுகள் நனவாகும். நினைத்த அளவிற்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலை வாரி வழங்குவதால் ரசிகர்களின் ஆதரவு பெருகும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். ஆடம்பரக் கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சின்னத்திரையில் இருப்பவர்களாலும் ஜொலிக்கமுடியும். 

மாணவ – மாணவியர்
  கல்வியில் பல சாதனைகளைச் செய்யமுடியும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பீர்கள். அரசுவழியில் கிடைக்கப்பெறும் உதவிகள் தக்கசமயத்தில் உதவும். விளையாட்டுப்போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல் களையும் பெறமுடியும். நல்ல நட்புகளால் நற்பலன்கள் தேடி வரும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை
  சனி பகவான் மூல நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதும் மிக அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ள முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அழகான குழந்தை பாக்கியமும் கிட்டும். பணம் கொடுக்கல்-வாங்கலிலும் பெரிய தொகை ஈடுபடுத்தமுடியும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர முடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை
  சனி பகவான் லாப ஸ்தானத்தில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும். 6-ல் ராகு சஞ்சரிப்பதும், 9-ல் குரு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் திருப்தியளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. எந்த பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். திறமைக்கு பாராட்டுதல்கள் கிடைக்கும்.  எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் முன்னேற்றம் உண்டாகும். சனிப்ரீதியாக விநாயகரை வழிபடுவது சிறப்பு.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை
  ராசியதிபதி சனி பகவான் மூல நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் அனுகூல மான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக அமையும். தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யமுடியும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். பொன் பொருள் சேரும். புத்திரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அசையா சொத்து வகையில் லாபம் அமையும். உற்றார் -உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படு வார்கள். 9-ல் சஞ்சரிக்கும் குரு 5-10-2018 முதல் 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. விநாயகரை வழிபடுவது உயர்வைத் தரும்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை
  உங்கள் ராசியாதிபதி சனி பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த தடைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். நண்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் அனுகூலமாக அமை வார்கள். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. சுபகாரியங்கள் தடை களுக்குப் பின்பு கைகூடி மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். உடல்நிலையில் மிகச்சிறப்பாக அமையும். 13-2-2019 முதல், கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் எல்லாவகையிலும் லாபம் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, உத்தியோகஸ்தர்கள் பணியில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை
  11-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவைத் தடையின்றிப் பெறமுடியும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் 10-ல் குரு இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக ஏற்படும் பயணங்களால் அலைச்சல் அதிகரித் தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு நற்பலனும் அமையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பைப் பெற சில சிரமங்களை அடைய நேரிடும். உத்தியோ கஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்வீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை
  சனி பகவான் சர்ப்ப கிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்பத்தில்  சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலையிலிருந்த தடைகள் விலகும். உற்றார்- உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவு களைக் குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நிலவி னாலும் எதிர்நீச்சல் போட்டு லாபம் பெறுவீர்கள். கூட்டாளிகளால் ஓரளவுக்கு நற்பலன்களைப் அடைவீர்கள். உத்தியோக ரீதியாக எதிர் பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை
  உங்கள் ராசியதிபதி சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் கனவுகள் நனவாகும். தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். பொருளாதாரநிலை சிறப்பாக அமையும். வீடு,மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கப் பெற்று சேமிப்பு பெருகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். 29-10-2019 முதல் குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணம் பலவழி களில் தேடிவரும். பெரிய மனிதர்களின் நட்புக் கிட்டும். தொழில், வியா பாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் நற்பலனைப் பெறுவார்கள். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை
  உங்கள் ராசியதிபதி சனி பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் குரு கேது சேர்க்கை பெற்று  சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பணம் பலவழிகளில் தேடிவரும். எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தடையின்றிக் கிட்டும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் அமையும். மணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் கைகூடும். பொருளாதார நிலையில் முன்னேற்றங்கள் உண்டாகி புதிய பொருள் சேர்க்கைகளை அடைவீர்கள். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மிகப்பெரிய பலன்களை அடைவார்கள். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலம் என்பதால் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகஸ் தர்கள் உயர்வான நிலைகளை அடைவார்கள். கடன்கள் குறைவதால் சேமிப்புகள் பெருகும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை
  சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரித்தாலும் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதாலும், குரு பகவானும் 11-ல் சஞ்சரிப்பதாலும்  இக்காலங்களில் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மண மானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் நவீன பொருட் சேர்க்கைகள் அமையும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய கூட்டாளிகளால் அபிவிருத்தி பெருகும். வேலையாட்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்-வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் தடைப்பட்டுக் கொண்டி ருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு யாவும் கிடைக்கும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை
 சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் குரு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் அனுகூலமான நற்பலன்களைத் தடையின்றிப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைக் கொடுக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சிலருக்கு சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் அமையும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும், அரசுவழியில் ஆதாயங்களும் தேடிவரும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை
  சனி பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் இக்காலங்களிலும் நன்மையான பலன்களை அடையமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும் சுபிட்சமான நிலை உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில்  தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். புதிய பூமி, மனை,வாகனங்களையும் வாங்க முடியும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவி யிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறை யாது. தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப் புகள் தடையின்றி வரும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ் தர்கள் பணியில் நிம்மதியான நிலையை அடைவார்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் எந்தவொரு பணியையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் : 5, 6, 8,      கிழமை : வெள்ளி, சனி, திசை : மேற்கு, கல் : நீலக்கல்      நிறம் : வெள்ளை, நீலம், தெய்வம் : ஐயப்பன்.