Poosam natchathira palangal

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

     இருபத்தேழு  நட்சத்திரங்களின் வரிசையில் எட்டாவது இடத்தை பெறுவது பூச நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு, நெஞ்செலும்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஹீ, ஹே, ஹோ, ட ஆகியவை தொடர் எழுத்துக்கள் கொ, கௌ ஆகியவையாகும்.

குண அமைப்பு;      பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால் மனதில் ஏதோவொரு சோகம் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும் என்றாலும் எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வை காணாமல் விடமாட்டார்கள். இந்த நட்சத்தரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு என்பதால் சமுதாயத்தில் பெயர் புகழை எளிதில் பெறுவார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். மற்றவர்களுக்கு சவாலாக விளங்கும் விஷயங்கள் இவர்களை பொறுத்த வரை மிகவும் எளிமையானதாக இருக்கும். நன்னெறிவும் ஒழக்கமும் தவறாதவர்கள். தயவு தாட்சண்யம் பார்பத்திலும் மனசாட்சிக்கு பயந்து நடப்பதிலும் விரும்தோம்பலிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். வாசனை திரவியங்களை அதிகம் விரும்புவார்கள். சகல விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் என்றாலும் சட்டென முன் கோபம் வந்து கெடுத்து விடும். சுய கௌரவத்தை விட்டு கொடுக்காமல் தன்னம்பிக்கையும் தளராத தைரியமும் கொண்டு பூஜ்ஜியத்திலிருந்தாலும் ராஜ்ஜியத்தை பிடிப்பார்கள். முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

குடும்பம்;     காதலில் தோல்வியுற்றவராக இருந்தாலும் வரும் வாழ்க்கையிடம் இன்புறவே நடந்து கொள்வார்கள். காம வேட்கை அதிக மிருந்தாலும் பரிசுத்தமானவர்கள். தாத்தா பாட்டி, தாய் தந்தை, மனைவி பிள்ளைகள், பேரன் பேத்திகள் என கூட்டு குடும்பமாக கும்பலில் வாழவே விரும்புவார்கள். குடும்பத்தில் எந்தவொரு விஷேசம் என்றாலும் அது தன்னால் தான் நடந்தாக பெருமைபட்டு கொள்வார்கள். அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். புதுமை விரும்பிகள் என்பதால் குடும்பத்திற்கு தேவையான சின்ன சின்ன பொருட்களை கூட பார்த்து பார்த்து வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்கள் செய்த உதவிகளை மறக்காமல்  தக்க சமயத்தில் அவர்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள். குடும்ப தலைவன் என்ற பொறுப்பை விட்டு கொடுக்க மாட்டார்கள். பசியை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது  என்றாலும் அமிர்தமென்றாலும், விஷயமென்றாலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்தே உண்பார்கள். நண்பர்களுக்கு எதிலும் முன்னுரிமை கொடுப்பார்கள்.

தொழில்;     பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரிப்பர் என்பதால் கதை கவிதை கட்டுரை எழுதுவதெல்லாம் சாதாரண விஷயமாகும்.  இளமை வாழ்வில் பல போராட்டாங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் நன்றாக சம்பாதிக்கும் யோகம் உண்டு. சினிமா துறையில் இயக்குனர், கதாநாயகன், கதையாசிரியர், பாடலாசிரியர் என பலவகையில் புகழ் பெறுவார்கள். மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் எவ்வளவு சாதித்தாலும் சம்பாதித்தாலும் தன்னடக்கத்துடனேயே இருப்பார்கள். இரும்பு சார்ந்த துறை, கப்பல் துறை, கடலில் எண்ணெய் ஆய்வு செய்யும் துறை போன்றவற்றிலும் ஈடுபட்டு நிறைய சம்பாதிப்பார்கள்.

நோய்கள்;     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காச நோய், ரத்த சோகை, மார்க புற்று நோய், தோல் வியாதி, மஞ்சள் காமாலை விக்கல், இருமல் போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும்.

திசை பலன்கள்;    பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சனி திசை வரும். சனி திசை மொத்தம் 19 வருடங்களாகும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு சனி திசை எத்தனை வருடங்கள் நடைபெறும் என்பதினை அறியலாம். சனி திசை காலங்களில் பெற்றோருக்கு சோதனைகள், உற்றார் உறவினர்களிடையே கருத்து  வேறுபாடுகள், கல்வியில் மந்த நிலை, பேச்சில் வேகம் போன்றவை ஏற்படும் என்றாலும் சனி பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களிலிருந்தால் நல்லது அடைய முடியும்.

இரண்டாவதாக வரும் புதன் திசை காலங்களில் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும் வாழ்வில் நன்மை தீமை இரண்டும் கலந்தப் பலன்களை பெற முடியும்.

முன்றாவதாக வரும் கேது திசை காலங்களில் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சனைகள், எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

நான்காவதாக வரும் சுக்கிர திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது, சொந்த தொழில் தொடங்கும் யோகம், பூமி வீடு, வண்டி வாகன சேர்க்கை போன்றவை யாவும் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும்.

சூரிய திசையும், சந்திர திசையும் ஒரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும். சமுதாயத்தில் ஒர் உயர்வான நிலையிலேயே இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

பூச நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் அரச மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் சுமார் பத்தரை மணியளவில் வானத்தில் பார்க்க முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்    மஞ்சள் நீராட்டு, திருமணம், சீமந்தம் பெயர் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம், வண்டி வாகனம், வீடு மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், மனை கோலுதல், வங்கியில் சேமிப்பு தொடங்குதல், விதை விதைத்தல், உயர் பதவிகளை வகித்தல், விருந்துண்ணல், புதிய பணியில் சேருதல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில் தொடங்கலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருச்சேறை;

      கும்பகோணம், திருவாரூர் சாலையில் 15.கி.மீ தெலைவில் அமைந்துள்ள சாரநாகத பெருமாள் மற்றும் காவிரித்தாய் வீற்றிருக்கும் திருஸ்தலம்

ஒழுந்தியாப்பட்டு;

     திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் வழயில் உள்ள அரசிலி நாதர் பெரிய நாயகி குடி கொண்டுள்ள ஸ்தலம்

கோனேரி ராஜபுரம்;

      கும்பகோணம்& காரைக்கால் சாலையில் எஸ் புதூர் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள உமாமகேஸ்வரர் மங்களாம்பிகை அருள் பாலிக்கும் ஸ்தலம்

திருச்சி;     விருதுநகர் அருப்பு கோட்டைக்கு தென் மேற்கில் உள்ள திருமேனி நாதர் துனை மாலை நாயகி குடி கொண்டுள்ள ஸ்தலம்

      மேற்கூறிய கோயில்களின் ஸ்தல விருட்சம் அரசமரமாகும் ஆதலால் இக்கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன்களை அடைய முடியும்

குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருசெந்தூரில் நடைபெறும் தைபூசத் திருவிழாவில் பங்கு கொண்டு வழிபாடு செய்வது சிறப்பு

கூற வேண்டிய மந்திரம்

    ஓம் நமோ பகவதே தட்சிணா மூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஜ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா

பூச நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்    பரணி, அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

 

 

Birth Date palan 4, 13, 22, 31.

எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என  நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு. 4,13,22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D,M,T. ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.

குண அமைப்பு நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்ட வட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தைய«£, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையேலல பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலைநிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள். சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்பள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும்.

இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்கமாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு.  அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறிவிட முடியாது. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே  அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள்.

உடலமைப்பும், ஆரோக்கியமும்  நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத்தோற்றமு இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கு கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுற பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். மன உளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். காரசாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு போன்றவைகளால்  அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.

குடும்ப வாழ்க்கை  நான்காம் எண்ணுரிக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்ட சாலிகள் என்றே  கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றார7போல இவர்களுகுகு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராக இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.

பொருளாதாரம்  நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும் இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராளமனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும் என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.

தொழில்  நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர் களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும், ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ், பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.

நண்பர்கள், பகைவர்கள்  நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்வவு உண்டு. 5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1,29 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

ராகுவுக்குரிய காலம்  ராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடைகயாது. ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.

ராகுவுக்குரிய திசை  தெற்கு திசை ராகுவுக்குரியது. பாலைவனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள், உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.

ராகுவுக்குரிய அதிர்ஷ்ட கல்  நான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயரும். அனைத்து நற்பலன்களும் உண்டாகும்.

பரிகாரங்கள்  நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி, 1,10,19,28

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

அதிர்ஷ்ட திசை – கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு

அதிர்ஷ்ட கல் – கோமேதகம்

அதிர்ஷ்ட தெய்வம் – துர்க்கை

Today Rasi palan 30-10-2017

இன்றைய ராசிப்பலன் –  30.10.2017

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)

Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை — 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 இன்றைய  பஞ்சாங்கம்

30-10-2017, ஐப்பசி -13, திங்கட்கிழமை, தசமி திதி இரவு 07.04 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அவிட்டம் நட்சத்திரம் காலை 06.44 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 சந்தி  திருக்கணித கிரக நிலை

30.10.2017

ராகு
கேது
சனி சூரிய குரு புதன்  சுக்கி செவ்

 

 

இன்றைய ராசிப்பலன் –  30.10.2017

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை கூடும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கடன்கள் குறையும்.

கடகம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.  வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

சிம்மம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபம் பெருகும்.

கன்னி

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

இன்று எதிர்பாராத பணவிரயங்கள் கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் பிரச்சனைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

Punarpoosam natchathira palangal

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

     இருபத்தேழு நட்சத்திரங்களில் ஏழாவது இடத்தை பெறுவது புனர்பூச நட்சத்திரமாகும். இதன் அதிபதி குருபகவானாவார். இது ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. புனர்பூச நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்கள் மிதுன ராசியிலும், 4ம் பாதம் மட்டும் சந்திரனின் ராசியான கடகத்திலும் உள்ளது. இதில் 1,2,3ம் பாதங்கள் உடலில் காது தொண்டை, தோள் மார்பு போன்றவற்றையும், 4&ம் பாதம் நுரையீரல் மார்பு, வயிறு கல்லீரல் போன்றவற்றையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கே, கோ, ஹ, ஹி ஆகியவை தொடர் எழுத்துக்கள் கெ,கை ஆகியவையாகும்.

குணஅமைப்பு;     புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் என்பதால் பலருடன் நட்பாக பழகும் இயல்பும், பொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் இருக்கும். நன்றி மறக்காதவர்கள். பிறருக்கு நன்மை செய்யும் குணமிருக்கும். அழகான அங்க லட்சனங்கள் அமைந்திருக்கும். சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடப்பார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படகூடியவர்கள். அதிக தன் மானம் உள்ளவர்கள் என்பதால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். எதிரிகளிடம் எப்பொழுதும் கவனமாக நடந்து கொள்வார்கள். ஒருவரை பார்த்தவுடன் அவரிடம் உள்ள நல்லது கெட்டதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். பொதுவாகவே மௌனமாக எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். படிப்பறிவு, எழுத்தறிவு இவற்றை விட அனுபவ அறிவே அதிகமிருக்கும் மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள்.

குடும்பம்;     புனர்பூச நட்சத்திரகாரர்களுக்கு காதல் செய்ய கூடிய அமைப்பு உண்டு என்றாலும் பெற்றோருக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் காதலையே தியாகம் செய்வார்கள். திருமண வாழ்க்கை நன்றாக அமையும். சிக்கனமானவர் என்றாலும் மனைவி பிள்ளைகளின் தேவையறிந்தும், உணர்வுகளை புரிந்து கொண்டும் செலவு செய்ய தயங்க மாட்டார்கள். குடும்பத்தேவைகளை சரியாக பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கும் முன்னுதாரணமாக நேர்மையுடன் வாழ்வார்கள். 37 வயதிலிருந்து செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் அமையும்.

தொழில்;     புனர்பூச நட்சத்திரகாரர்கள் அரசு பணிகளில் இருப்பவர்களை விட, தனியார் துறைகளில் பணிபுரிபவர்களே அதிகம். தெரியாது என்று எதையும் ஒதுக்கீடு வைக்காமல் எந்த வேலையையும் எளிதில் கற்று கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். யாருக்கும் அஞ்சாமல் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பலரை வழி நடத்தும் ஆற்றல் உள்ளவர்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பைனான்ஸ் போன்ற துறைகளிலும், வங்கி, வர்த்தகதுறை, நீதித்துறை மதம் சார்ந்த கல்வித்துறை போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கதை கவிதை எழுதுவதிலும் கதைகள் சொல்வதிலும் வல்லவர்களாக இருப்பதால் இதனாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டு மற்றவர்களுக்கு கீழ் அடிமையாக பணிபுரிய விரும்ப மாட்டார்கள். உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

நோய்கள்;      சிலருக்கு சிறு வயதிலேயே முடக்கு வாதங்கள் ஏற்படகூடிய சூழ்நிலை உண்டாகும். நுரையிரலில் பாதிப்பு உண்டாகும். அதிக இனிப்பு வகைகளை விரும்பி உண்பதால் சர்க்கரை நோயும் தாக்கும்.

திசை பலன்கள்;       புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக குரு திசை வரும். குரு திசை மொத்தம் 16 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு குரு திசை எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்பதனை அறியலாம். குரு பலம் பெற்று அமைந்து பிறக்கும் போதே குரு திசை வருமேயானால் கல்வியில் நல்ல மேன்மை, பெற்றோர் பெரியோர்களை மதிக்கும் பண்பு, எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

    இரண்டாவதாக வரும் சனி திசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சொந்த தொழில் செய்யும் யோகம், பூமி மனை வாங்கும் யோகம், செய்யும் தொழிலில் உயர்வு சமுதாயத்தில் பெயர் புகழ் மேன்மையடையும் வாய்ப்பு போன்றவை உண்டாகும்.

    மூன்றாவது திசையாக வரும் புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை பெற முடியும்.

    நான்காவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு சமூக நல சேவைகளில் நாட்டம் கொடுக்கும். என்றாலும் ஆரோக்கிய ரீதியாகவும் சில பிரச்சனைகள் உண்டாகும்.

    ஐந்தாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்கள் வாழ்வில் பலவிதமான முன்னேற்றத்தை கொடுக்கும். சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும்.

    மேற்கூறிய தசா காலங்களில் அந்த கிரகங்கள் பலம் பெற்று சுபர் பார்வையுடன் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை அடைய முடியும். இல்லை எனில் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தே முன்னேற வேண்டியிருக்கும்.

    புனர்பூச நட்சத்திரர்களின் ஸ்தல விருட்சம் மூங்கிலாகும். இதை வழிபட்டு வந்தால் நற்பலன்களை அடையலாம். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதத்தில் சுமார் பன்னிரெண்டு மணியளவில் வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;    விவாகம், சீமந்தம், பூ முடித்தல், புதிய ஆபரணம் வாங்குதல், பெயர் சூட்டுதல், பந்த கால் நடுதல் கிரக பிரவேசம், வியாபாரம் தொடங்குதல், மாடு வாங்குதல், அதிகார பதவிகளை ஏற்று கொள்ளுதல், வேத சாஸ்திரங்களை கற்றல் போன்றவற்றை புனர்பூச நட்சத்திரத்தில் செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள் 

திருந்து தேவன் குடி;         கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நண்டாங் கோயிலில் குடிகொண்டுள்ள அருமருந்துடையார். அருமருந்து நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருவேட்களம்;     கடலு£ர் மாவட்டம், சிதம்பரத்திற்கு கிழக்கில் 3,கி.மீ தொலைவிலுள்ள பாசுபதேசுவரர் அன்னை நல்ல நாயகி எழுந்தருளியுள்ள திருக்கோயில்

திருவெண்ணெய் நல்லூர்     விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூருக்கு தென்கிழக்கில் 20.கி.மீ தொலைவிலுள்ள இருபாபுரீசுவரர்&மங்களாம்பிகை அருள் பாலிக்கும் திருத்தலம்.

திருப்பாச்சூர்;     சென்னைக்கு மேற்கில் 50.கி.மீ தொலைவிலுள்ள தீண்டாத் திருமேனியாக மூங்கில் அடியில் முளைத் தெழுந்த பாசூர்நாதர் திருக்கோயில் ஆகியவையாகும். இக்கோயில்களில் எல்லாம் மூங்கில் ஸ்தல மரமாக உள்ளது.

கூற வேண்டிய மந்திரம்;

   ஓம் தசரத குமாராய வித்மஹே

                ஸ்தா வல்லபாய தீமஹி

                தன்னோ ராம ப்ரசோத யாத்

புனர்பூச நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்                     கிருத்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர ஆண் பெண்களை திருமணம் செய்ய கூடாது.

 

Birth Date palan 3,12,21,30.

எண் 3 (3, 12, 21, 30)  ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என மூன்று வகையாகப்பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் முழக்கம் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவை இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. முன்றாம் எண்ணில் பிறந்தவர்கள்  குருவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள்  C, G, L, S. ஆகியவை. 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.

குண அமைப்பு மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும், அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள். தன்னைச் சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். எந்த காரித்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. சுயநலம் பாராமல் உதவி செய்யக்கூடிய குண மிருப்பதால், இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம். முகஸ்துதிக்கு  அடிமையாவார்கள். உண்மையே பேசி நீதிநியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள். பெரிய கருத்தரங்குகளிலும் மணிக்கணக்கில்பேசக்கூடிய திறமை இருக்கும். எவ்வளவு வேமாகப்பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். தரம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி  பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள்.

இவர்களிடம் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல கடுமையானதாக இருக்கும். முன் கோபக்காரர்கள். ஆனாலும் கோபம் தணிந்து பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள்  தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பு இருந்தாலும் அடிமைத் தொழில் செய்வது அறவே பிடிக்காது. பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.

உடலமைப்பும் ஆரோக்கியமும் மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரத்தை உடையவர்கள், நீண்ட கழுத்தும், திரண்ட புஜங்களும் கூரிய மூக்கும், நல்ல நிறமம் இருக்கும். இவர்கள் குரலில் அதிகாரமும், கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். தலையில் சீக்கிரமே வழுக்கை விழும்.  சாதாரணமாக சரும நோய் தோன்றும். நரம்புத் தளர்ச்சி, மூட்டு வாதம் முதலியவை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும்.  இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது-

குடும்ப வாழ்க்கை மூன்றாம் எண்ணில்  பிறந்தவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக  சமாளித்து விடுவார்கள். காதல் விவாகாரங்களில் ஈடுபட்டாலும் ஒர சிலருக்கு மட்டுமே காதல் திருமணம் கைகூடும். பலருக்கு வெவவரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்ல ªய்வ நம்பிக்கை மிக்கவராகவும், கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து வ செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும். சில நேரங்களில் அவர்களுடன் ஒத்துப் போக முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.

பொருளாதாரம் மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். எதிர்பாரத வகையில் திடீர் தனவரவுகளையும் கிடைக்கப்பெறுவார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் பணமுடை இருக்காது. பல்வேறு பொதுக்காரலியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.

தொழில் மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்தி சாலிகள் என்பதால் இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும்போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்புயாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்திலிருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும்.

நண்பர்கள், பகைவர்கள் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்துடன் பழக்க்கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வார்கள். நன்றிக்கு உதாரணமாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1,2, 9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நட்பாக இருப்பாரர்கள்.  5,6 ம் எண்ஙணில் பிறந்தவர்களுடன் இவர்களால் ஒத்துப் பேகமுடியாது.

குருவுக்குரிய காலம் நவம்பர் மாதம் 22 ந்தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு மாத காலமும், மற்றும் பிப்ரவரி 19 ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலான காலமும் குருவைச்  சேர்ந்தவை. பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்கள். வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள்.

குருவுக்குரிய திசை குருவுக்குரிய திசை வடகிழக்கு மூலை எனக்குறிப்பிடக்கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட கல்  குருவுக்குரிய ரத்தினம் புஷபராகம் ஆகும். புஷ்பராக கல் பதிந்த மோதிரம், சங்கிலி போன்றவற்றை அணிந்து  கொள்வதால் எல்லாவகையிலும் மேன்மைகளையும், வெற்றிகளையும் அடையலாம்.

பரிகாரங்கள்  குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மல்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது உத்தமம். குருவுக்கு ப்ரீதியாக  தட்சிணாமூர்த்தியையும், வழிபடலாம். ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி, 3,12,21,30

அதிர்ஷ்ட நிறம் – பொன் நிறம், மஞ்சள்

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட கிழமை – வியாழன்

அதிர்ஷ்ட கல் – புஷ்பராகம்

அதிர்ஷ்ட தெய்வம் – தட்சிணாமூர்த்தி

Today Rasi palan 29.10.2017

இன்றைய ராசிப்பலன் –  29.10.2017

இன்றைய  பஞ்சாங்கம்

29-10-2017, ஐப்பசி -12, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி மாலை 06.21 வரை பின்பு வளர்பிறை தசமி. நாள் முழுவதும் அவிட்டம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1/2. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

                திருக்கணித கிரக நிலை

29.10.2017

ராகு
சந்தி கேது
சனி சூரிய குரு புதன்  சுக்கி செவ்

இன்றைய ராசிப்பலன் –  29.10.2017

மேஷம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.

கடகம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடல்நிலை சீராகும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனை தீரும்.

கன்னி

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன நிம்மதி குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.  வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.

மகரம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணி சுமை குறையும்.

மீனம்

இன்று எந்த ஒரு செயலிலும் ஈடுபாடில்லாமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

Birth Date palan 2,11,20,29.

எண் 2 ( 2,11, 20, 29) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

இரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என இரண்டின் மகிமையும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ம் எண்ணின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் ஆவார். 2ம் எண்ணுக்குரிய கிரகம் சந்திரன். இரண்டாம் எண்ணுக்குரிய  ஆங்கில எழுத்துக்கள் B K R  ஆகியவை.

குண அமைப்பு 2ம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால் நீர் எப்படி நிலையில்லாமல் ஓடுகிறதோ அதுபோல சற்று சலன நெஞ்சம் கொண்டவர்களாவே காணப்படுவார்கள். சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள். அவசரக்காரர்கள் அல்ல. எந்த வொரு காரியத்தையும் தீர ஆலோசித்து செயல்படுவார்கள். இதனால் எவ்வளவு எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் துணிந்து நின்று போராடி வெற்றியைடைவார்கள்.  சுயநலம் இல்லாமல் எதையும் தியாகம் செய்யத் துணிவதால் வாழ்க்கையில் அவ்வப்போது ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும்.

இவர்களுக்கு அபார ஞாபக சக்தி உண்டு. எப்போதும் சற்று குழப்பவாதியாகவே இருப்பார்கள். இரக்க குணம் உடையவர்கள் ஆதலால் எளிதில்  உணர்ச்சி வசப்படுவார்கள். எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் அதிகம் உண்டு.

வேடிக்கையாக பேசக்கூடியவர்கள். பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். சாந்தம், சகிப்புத் தன்மை, மேலோரிடத்தில் மரியாதை, கடவுள் பக்தி அதிகம் இருக்கும். பழைய ஞாபகங்களை அடிக்கடி நினைவுக்கு  கொண்டு வந்து சிறு விஷயங்களுக்காக அதிக கவலைப்படுபார்கள். தம்முடைய கருத்துக்களை நேரிடையாக வெளியிடாமல் மறைமுகமாக வெளியிடுவார்கள். அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருந்தாலும் சற்று பயந்த சுபாவம் இவர்களுக்கு உண்டு. கடுமையான பணிகளையும் சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள். தன் முயற்சியில் தோல்வி அடைந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். தூக்கத்திலும் சுய உணர்வு  பெற்றவர்கள். கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றுவார்கள், சொன்ன சொல்லை காப்பாற்ற தவறியவர்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. மிகுந்த கலாரசனை உடையவர்கள். ஆதலால்  சங்கீதம், நனடம், நாடகத்துறை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். எதிலும் தற்பாப்புடன் செயல்படும் இவர்கள் வீண் வம்புக்குச் செல்லமாட்டார்கள். பழைய பொருட்களை சேகரித்து வைப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். பேச்சைக்கூட அளந்து தான் பேசுவார்கள். பல சமயம் துணிச்சலான காரியங்களைச் செய்தாலும் சில சமயங்களில் கோழையாக மாறி விடுவார்கள். இது போன்ற பய உணர்ச்சிகளையும் மென்மையான சுபாவங்களையும் மாற்றிக் கொள்ள வலிமை வாய்ந்த நேர் எண்ணில் பெயர் வைப்பது அவசியம்.

குடும்ப வாழ்க்கை  இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கற்பனைத் திறன் உள்ளவர்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உள்ளவர்கள். குடும்பத்தை பொறுப்போடு நடத்தி செல்வார்கள். சில நேரங்களில் குடும்பத்திலுள்ள வர்களிடம் கோபம் கொண்டு கடினமான வார்த்தைகளை பிரயோகித்த விடுவதால் நெருக்கமானவர்களிடம் விரோதத்தையும் சம்பாதித்து விடுவார்கள். சுக சௌகரியங்களைப் பெருக்கி கொள்ளவும், வாழ்க்கைய¬ ஆடம்பரமாக வாழவும் நிறைய செலவு செய்வார்கள். குடும்பத்தில் ஏற்படக்கூடிய அமைதிக் குறைவுக்கு  முக்கிய காரணம் 2ம் எண்ணில் பிறந்தவராகத்தான் இருக்கு முடியும்.  தான் என்ற அகங்காரமும், பிடிவாத குணமும் இவர்களுக்கு அதிகம் இருப்பதால் எல்லா நேரமும் எல்லோரிடமுமு வர்களால் ஒத்துப்போக முடியாது. வீண் பிடிவாதத்தை விடுத்து அனைவரையும் அனுசரித்து நடந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக அமையும்.

உடல் அமைப்பு ஆரோக்கியம்  இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள்  சந்திரனின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் என்பதால் மற்றவர்களை வசீகரப்படுத்தக் கூடிய அழகான உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தரமான உயரம், சிறிய கழுத்து, கூர்மையான மூக்கு, குவிந்த உதடுகள், அழகான கண்கள் மற்றும் புருவங்கள் அமையப் பெற்றவராக இருப்பார்கள். மெலிந்த குரலில்  பேசுவார்கள். சந்திரன் நீர்காரகன் என்பதால்  இவர்கள் குளிர்ந்த பானங்கள், ஐஸ்க்ரீம் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதனால் இவர்கள் அடிக்கடி சளி, சுரம், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், தொண்டைவலி,  தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். சாதாரணமாக இவர்களுக்கு ஜீரண உறுப்புகளும், சிறுநீரகமும் கோளாறு பண்ணிவிடும். 2ம்  எண்ணில் பிறந்தவர்கள் முடிந்தவரை மதுவை தொடவே கூடாது. மது பழக்கத்திற்கு ஆளானால் இவர்களை மீட்கவே முடியாமல் போகும். உயிரையே கூட குடித்து விடும். எனவே கட்டுப்பாட்டுடன் நடந்து காள்வது நல்லது.

பொருளதாரம் இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் பணத்தை எந்த விதத்திலாவது சம்பாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரமாக செலவு செய்வதால் சேமிப்பு குறைவாகவே இருக்கும்  பிறருக்கு கொடுக்க வேண்டிய  கடன்களை இவர்கள் தவறாமல் கொடுத்தாலும், இவருக்கு வரவேற்டிய பண தொகைகளை வசூலிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகும். பண விஷயத்தால் நெருங்கி பழகுபவர்களிடம் அடிக்கடி மனஸ்தாபங்கள் உண்டாகும். எப்பொழுதும் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவதே நல்லது.

தொழில் இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள் என்பதால் அதிக கற்பனைத் திறன் இருக்கும். இவர்கள் கதை, வசனம் பாடல்கள் போன்றவற்றை எழுதலாம். சந்திரன் ஜல ராசி என்பதால் பால் வியாவவாரம், குளிர்பான விற்பனை, ஐஸ் தொழிற்சாலை, தூய நீர் தயாரித்தல் போன்றவை இவர்களுக்கு பொருத்தமான தொழிலாக அமையும். நல்ல வருவாயும் உண்டாகும்.  அறிவிப்பாளர் தொழிலும் ஏற்றம் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு கடல் கடந்து சென்று சம்பாதிக்கக்கூடிய யோகமும் அமையும். சிலருக்கு அரசாங்க உத்தியோகங்களும் கிடைக்கப்பெறும்.

நண்பர்கள், பகைவர்கள் இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்கள். ஆதலால் எதிலும் குழப்பவாதியாகவே இருப்பார்கள். யாரிடமும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழகமாட்டார்கள். அப்படி நெருங்கி பழகிவிட்டால் அவ்வளவு எளிதில் பிரியமாட்டார்கள்.  நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். இவர்களுக்கு 1,5 ல் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 4,7 போன்ற எண்களில் பிறந்தவர்கள் வர்களிடம் ஒத்துப்போக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அதிக இரக்க மனம் கொண்டவர்கள். ஆதலால் நண்பர்களால் சில நேரங்களில் ஏமாற்றப்படுவார்கள்.

சந்திரனுக்குரிய காலம் ஆங்கில வருட ரீதியாக ஜுன் மாதம் 21ம் தேதி முதல் ஜுலை மாதம் 22ம் தேதி வரையிலான காலம் சந்திரனுக்கு உரியது. திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாளாகும்.  சந்திரன் இரவில் பலம் உள்ளவன்.

சந்திரனுக்குரிய திசை சந்திரனுக்குரிய  திசை வடக்கு திசையாகும். 2ம் எண் உள்ளவர்கள் வடக்கு நோக்கி பிராயணம் செய்து எந்த பணிகளைத் துவக்கினாலும் நல்ல லாபத்தையும் வெற்றிகளையும் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட கல் சந்திரனின் எண்ணான 2 ஐ உடையவர்கள் அதிர்ஷ்ட கல்லாக முத்தை வெள்ளியில் பதிது மோதிரமாக தோலில் படும் படி அணிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் நோய்கள்  குறையும். மன அழுத்தங்கள், குழப்பங்கள் விலகி நல்ல தெளிவு கிடைக்கும்.

பரிகாரங்கள் சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாக இருப்பதால், அந்நாட்களில் துர்க்கா பூஜை செய்தல் நல்லது. வெங்கடாசலபதியையும் வழிபாடு செய்வது மன சஞ்சலங்களை குறைக்கும்.

அதிர்ஷ்டம் தருபவை 

அதிர்ஷ்ட தேதி, 1,10,19,3, 12,21,30

அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை, பொன் நிறம்

அதிர்ஷ்ட திசை – தென் கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை – திங்கள், வியாழன்

அதிர்ஷ்ட கல் – முத்து, சந்திரகாந்தகல்

அதிர்ஷ்ட தெய்வம் – வெங்கடாசலபதி, துர்க்கை

Birth Date palan 1,10,19,28

எண் ஜோதிடமும் வாழ்க்கை ரகசியங்களும்

எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

அரிது அரிது  மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறந்தலரிது என்ற ஔவையின் வாக்கினிற்கேற்ப ஆறறிவுள்ள மனிதர்களாய் பிறந்து வாழும் நாம் நம்மால் முடிந்த அளவிற்கு நல்ல காரியங்களை செய்திடல் வேண்டும்.  பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் வாழ்க்கையை நல்ல படியாக வாழ வேண்டும். நாம் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் நம்முடைய பெயர் புகழ் நிலைத்திருக்கும் படி வாழ்ந்தால் நம்முடைய பிறந்த நாளை மற்றவர்கள் நினைவு கூர்ந்து கொண்டாடி மகிழ்வார்கள். நாம் பிறந்த தேதியைக் கொண்டு தான் வருடா வருடம் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். நாம் பிறக்கும் போதிருந்த நாள் நட்சத்திரம் மாறினாலும் வருடாவருடம் தேதியையும் மாதத்தையும் நினைவில் கொண்டு பிறந்த நாளை கொண்டாடி மகிழ்கிறோம்.

ஜோதிட ரீதியாக பார்க்கும் பொழுது ஒவ்வொரு எண்ணில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. அந்தந்த எண்ணிற்கேற்ப அவரவரின் இயல்புகளும் அமைந்திருக்கும். ஒன்றாம் எண்ணிலிருந்து 31 ஆம் எண்வரை எந்த எண்ணில் பிறந்திருந்தாலும் அதன் கூட்டுத் தொகையானது ஒன்றிலிருந்து 9 வரையே இருக்கும். அதாவது 1, 10, 19, 28 போன்ற தேதிகளில் ஒருவர் பிறந்திருந்தால் அவர் 1ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவராவார்.

பிறந்த தேதிகள்                            ஆதிக்க எண்

2,11,20,29,                                                            2

3,12,21,30                                                             3

4,13,22,31                                                             4

5,14,23                                                                  5

6,15,24                                                                  6

7,16,25                                                                  7

8,17,26                                                                  8

9,18,27                                                                  9

இந்தந்த எண்ணில் பிறந்தவர்கள், இந்தந்த எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்கள் என தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இப்புத்தகத்தில் ஒவ்வொரு எண்ணில் பிறந்தவர்களுக்கான குண அமைப்புகள், உடல் ஆரோக்கியம், இவர்களுக்கு அமையும் குடும்பம், பொருளாதாரநிலை, நண்பர்கள், பகைவர்கள் போன்றவையாவும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அது போல அந்தந்த எண்ணிற்குரிய அதிபதி, அதிர்ஷ்டகல் நிறம், திசை, கிழமை, வழிபட வேண்டிய தெய்வம், செய்ய வேண்டிய பரிகாரங்கள் போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்து பயன் பெறுவோமா? இதில் அதிர்ஷ்டகரமாக பெயர் வைத்துக் கொள்வது எப்படி என்பதையும் தெரிந்துகொள்வோம்.

எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற  எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய  தேதிகளில் பிறந்தவர்கள்  ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் A, J, I, Y, Q  ஆகியவை.

குண அமைப்பு 1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அது போல பலருக்கும் நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றம் அளிப்பார்கள். வம்புச் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை  விடவும் மாட்டார்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவர். தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பர்.  முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும் கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்த செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு. பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய தவறுகளை பெரிதாக்கிவிடுவார்கள்.

தமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படுவார்கள். தனக்கு இடையூறு செய்தவர்களை பந்தாடிய பிறகு தான் நிம்மதி அடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் சரிசமமாக பழக மாட்டார்கள். தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் கூடியவர்கள். இவர்களுடைய போக்கு சிலருக்கு நியாயமாக தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோன்றும். வாழ்வில் பலமுறை தேர்ற்றாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் மற்றவர்களின் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். வயது, அனுபவம் உதாரண குணமும் அமையும். இவர்களிடம் வஞ்சனை சூது, முதலியவற்றை காண்பது அரிது. வெள்ளை உள்ளம் கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செவ்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு. எதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

உடல் அமைப்பு ஆரோக்கியம் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்தை உடையவராக இருப்பார்கள். உடலுக்கேற்ற உயரமும், பருமனும், கனிந்த பார்வையும், உருண்டை முகமும் இருக்கும். நிமிர்ந்த நடையும் தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடிய குணமும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். கண்ணாடி அணிய நேரிடும். இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களும், ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்களும், அஜீரண கோளாறு போன்ற நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, புளிப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள். ஆதலால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது-. உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும் உண்டாகக்கூடும் என்பதால் குளிர்ச்சியான பொருட்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.

குடும்ப வாழ்க்கை ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கலாரசனை உடையவர்கள். ஆகையால் இளமையில் அடிக்கடி காதல் வயப்படுவதும், காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அனேகமாக இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். கூட்டுக் குடும்பத்தை விட எதிலும் தனித்து வாழ வேண்டும் என்பதே இவர்களின் விரும்பம். தனித்து வாழ்ந்தாலும் மற்றவர்களை ஆதரிக்கும் பொறுப்பிலிருந்து செய்து முடிப்பார்கள். திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி சில நேரங்களில் கவலைகளை உண்டாக்கும். அனுசரித்து நடக்கக்கூடிய வாழ்க்கை துணை வாய்த்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை அமைதியானதாக இருக்கும்.

பொருளாதாரம் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலை ஒரே சீராக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையையும், உயர்தரமான ஆடை அணிகலன்கள் அணிவதையுமே விரும்புவார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். கடன்கள் அதிகம் ஏற்படாது. ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.

தொழில் ஒன்றாம் எண் சூரியனின் ஆதிக்கம் கொண்டது. எதிலும் முதன்மையாக செயல்படக்கூடிய திறன் கொண்டவர்கள், வாழ்வில் அதிகம் சம்பாதிக்கும் திறமை, நல்ல உயர்வான பதவிகள், பலரை நிர்வகிக்கும் பொறுப்புயாவும் அமையும். அரசியல் சம்மந்தப்பட்ட துறைகளில் நல்ல முன்னேற்றம் கிட்டுமி. அரசு உத்தியோகமும் இவர்களுக்கு அமையும். சித்த மருத்துவம் ஹோமியோபதி போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு அதிகாரமிக்க பதவிகளை அடைவார்கள். தேவை யற்ற எதிர்ப்புகளும் இருக்கும்.

நண்பர்கள் பகைவர்கள் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு அதிகாரகுணம் இருக்கும். இவர்களை அனுசரித்து நடப்பவர்கள் மட்டுமே இவர்களுக்கு நண்பர்களாக இருக்க முடியும்.  2,9,3 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நண்பர்களாகவும் 4,5,7,8 ஆகிய எண்களில் இவர்களுடன் ஒத்து பழக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல நட்புகள் கிடைக்கும்.

சூரியனுக்குரிய காலம் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில வருட ரீதியாக ஜீலை 22 முதல் ஆகஸ்டு 22 தேதிவரை சூரியனுக்குரிய காலமாகும். ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குடையது.

சூரியனுக்குரிய திசை சூரியனுடைய திசை கிழக்கு. பிரார்த்தனை செய்யும் இடம், பூஜை அறை, சமையல் அறை போன்றவை6 சூரியனுக்குரியவை. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் கிழக்கு பக்கமாக தொடங்கினால் அற்புதமான நற்பலனை அடையலாம்.

அதிர்ஷ்ட கல் சூரியனின் ஆதிக்கமான எண் 1ல் பிறந்ரரவர்கள் அதிர்ஷ்ட கல்லாக மாணிக்கத்தை செப்பு உலோகத்தில் பதித்து அணிய வேண்டும். இந்த அதிர்ஷ்ட கல்லை அணிவதன் மூலம்மனோதைரியம், சாந்தமான குணம், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி போன்ற  நற்பலன்கள் உண்டாகும். உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்நோய் போன்றவை விலகும். தனவரவும்,  நன்மதிப்பும் உண்டாகும்.

பரிகாரங்கள் ஓன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரிய தேவனுக்கு பரிகாரம் செய்வது நல்லது. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி – 1,10, 19, 28

அதிர்ஷ்ட நிறம் – இளஞ்சிவப்பு, மஞ்சள்

அதிர்ஷ்ட திசை – கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு

அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்

அதிர்ஷ்ட தெய்வம் – சிவன்

Today rasi palan 28-10-2017

இன்றைய ராசிப்பலன் –  28.10.2017

முனைவர் முருகு பால முருகன்   cell: 0091  7200163001. 9383763001,

 இன்றைய  பஞ்சாங்கம்

28-10-2017, ஐப்பசி -11, சனிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.51 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 05.03 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். வாஸ்து நாள் காலை 7.47 மணி முதல் 8.23 மணி வரை. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

                திருக்கணித கிரக நிலை

28.10.2017

ராகு
சந்தி கேது
சனி சூரிய குரு புதன்   சுக்கி செவ்

 

இன்றைய ராசிப்பலன் –  28.10.2017

மேஷம்

இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாரத்ததை விட லாபம் பெருகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

சிம்மம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

துலாம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணி சுமை கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் முன்னேற்றமும் லாபமும் ஏற்படும்.

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.

மகரம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று சுபசெய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். வியாபாரத்தில்  கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை தரும்.

மீனம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். நினைத்த காரியம் நிறைவேறும்.

November Month Rasi palan 2017

 நவம்பர் மாத ராசிப்பலன் – 2017

ராகு
 

கேது 

   

 

சனி  குரு

புதன் 

சூரிய

செவ் சுக்கி

கிரக மாற்றம்

02-11-2017 விருச்சிகத்தில் புதன் அதிகாலை 12.44 மணிக்கு 

02-11-2017 துலாத்தில் சுக்கிரன் இரவு 12.00 மணிக்கு

16-11-2017 விருச்சிகத்தில் சூரியன் பகல் 12.22 மணிக்கு

24-11-2017 தனுசில் புதன் பகல் 01.54 மணிக்கு

26-11-2017 விருச்சிகத்தில் சுக்கிரன் இரவு 10.09 மணிக்கு

30-11-2017 துலாத்தில் செவ்வாய் அதிகாலை 05.21 மணிக்கு

மேஷம்  அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, முன் கோபம் அதிகம் இருந்தாலும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட உங்களுக்கு இம்மாதம் ஜென்ம ராசிக்க 6-ல் செவ்வாய், 7ல்  குரு  சஞ்சாரம்  செய்வதால்  பொருளாதார  நிலை  சிறப்பாகஇருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாதகோளான சூரியன் சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவினை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களின் வருகை மன மகிழ்ச்சியை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் தடையின்றி கை கூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலித்துவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் சற்ற கடின முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம்.  சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  18.11.2017 மதியம் 12.50 மணி முதல் 20.11.2017 இரவு 12.44 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 6-ல்  சூரியன்  சஞ்சாரம்  செய்வதும்ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றுவதால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உறவினர்களும் சில நேரங்களில் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலமான பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலைபளு கூடுதலாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பரிகாரம்.  இம்மாதம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  20.11.2017 இரவு 12.44 மணி முதல் 23.11.2017 பகல் 01.41 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ஆம்  பாதங்கள்,  திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் 

  அன்புள்ள மிதுன ராசி நேயர்களே மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி காரியங்களை சாதித்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5-ல் குரு சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். தொழிலாளர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். விளையாடும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்.  சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம்  23.11.2017 பகல் 01.41 மணி முதல் 26.11.2017 அதிகாலை 01.59 வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய் 6-ல்  சனி  சஞ்சாரம்  செய்வது  நல்ல  அமைப்பு  என்றாலும்  சூரியன் சாதகமற்று சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளை தாண்டி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். முன் கோபத்தை குறைப்பது முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடுவதில் சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.

பரிகாரம்.  ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  26.11.2017 அதிகாலை 01.59 மணி முதல் 28.11.2017 பகல் 11.17 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே வைராக்கியமான குணமும், வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 3-ல்  குரு  சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6-ல்  கேது  சஞ்சரிப்பதும்  மாத முற்பாதியில் 3-ல்  சூரியன்  சஞ்சாரம்  செய்வதும்  ஓரளவுக்கு  நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவும் என்றாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை நிலவும்.

பரிகாரம். குரு ப்ரீதி, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  01.11.2017 அதிகாலை 01.46 மணி முதல் 03.11.2017 அதிகாலை 05.33 மணி வரை.  மற்றும் 28.11.2017 பகல் 11.17 மணி முதல்  30.11.2017 மாலை 04.17 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும், அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் குரு 11-ல்  ராகு  சஞ்சாரம்  செய்வதும்   மாத பிற்பாதியில் 3-ல்  சூரியன்  சஞ்சாரம்  செய்ய  இருப்பதும்  அற்புதமான  அமைப்புஎன்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அவர்களால் சாதகப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக அமைவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்களுக்கு அரசு வழியில் கல்விக்காக உதவிகள் கிட்டும்.

பரிகாரம். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்  03.11.2017 அதிகாலை 05.33 மணி முதல் 05.11.2017 காலை 06.32 மணி வரை.மற்றும்  30.11.2017 மாலை 04.17 மணி முதல் 02.12.2017 மாலை 05.32 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் ஜென்ம ராசியில் சூரியன், 12-ல்  செவ்வாய்  சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது  நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகி ஒற்றுமை குறைவு ஏற்படும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சனைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால்  மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  05.11.2017 காலை 06.32 மணி முதல் 07.11.2017 காலை 06.44 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாதகோளான சூரியன் சாதகமற்று சஞ்சரித்தாலும் ஜென்ம ராசிக்கு 3-ல் கேது 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது ஓரளவுக்கு  சாதகமான  அமைப்பு  என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் தடையின்றி வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுத்தால் தேவையற்ற பிரசங்சனைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்திலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.

பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை மேற்கொள்வது சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  07.11.2017 காலை 06.44 மணி முதல் 09.11.2017 காலை 08.03 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, சூரியன் 10-ல் செவ்வாய்  சஞ்சாரம்  செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. எடுக்கும் சுபகாரியங்களில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.  தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். சற்று அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். நல்ல நட்புகள் தேடி வரும்.

பரிகாரம். விநாயகரையும் அம்மனையும் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  09.11.2017 காலை 08.03 மணி முதல் 11.11.2017 பகல் 11.44 மணி வரை.

மகரம்    உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 10-ல் புதன் சஞ்சாரம் செய்வதும் நல்ல  அமைப்பு  என்றாலும் குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் தேவையற்ற வீண் செலவுகள் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்க தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாகவே செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் தடையின்றி வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கப் பெறும். வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம்.

பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை மேற்கொள்வது தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  11.11.2017 பகல் 11.44 மணி முதல் 13.11.2017 மாலை 06.02 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே வேகமாக பேசினாலும், திருத்தமாகவும், திறம்படவும் பேசக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பது உடல்  ஆரோக்கியத்தில்  சிறுசிறு  பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் 9-ல் குரு 6-ல் ராகு  சஞ்சாரம் செய்வதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மன¬வியிடையே ஒற்றுமை பலப்படும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே மறையும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  13.11.2017 மாலை 06.02 மணி முதல் 16.11.2017 அதிகாலை 02.32 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே மற்றவர்களின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7-ல் செவ்வாய் 8-ல் குரு சூரியன் சஞ்சாரம்  செய்வது  சாதகமற்ற  அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயங்களை அடையலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் விலகி புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயரதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும்.  தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். 

பரிகாரம். சிவ பெருமானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  16.11.2017 அதிகாலை 02.32 மணி முதல் 18.11.2017 மதியம் 12.50 மணி வரை

சுப முகூர்த்த நாட்கள்

01.11.2017 ஐப்பசி 15 ஆம் தேதி புதன்கிழமை துவாதசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

02.11.2017 ஐப்பசி 16 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

03.11.2017 ஐப்பசி 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

09.11.2017 ஐப்பசி 23 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டிதிதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். தேய்பிறை

16.11.2017 ஐப்பசி 30 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம்.தேய்பிறை

23.11.2017 கார்த்திகை 07 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமிதிதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

29.11.2017 கார்த்திகை 13 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை