Today rasi palan – 13.04.2019

Today rasi palan – 13.04.2019

இன்றைய ராசிப்பலன் –  13.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

13-04-2019, பங்குனி 30, சனிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.41 வரை பின்பு வளர்பிறை நவமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 08.58 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஸ்ரீ ராம நவமி. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சூரிய புதன் செவ் ராகு
சுக்கி திருக்கணித கிரக நிலை

13.04.2019

சந்தி
கேது சனி குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  13.04.2019

மேஷம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். அசையா சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் சற்று குறையும். பொன் பொருள் சேரும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரநிலை மேலோங்கி இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபார வளர்ச்சிக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் வேற்று மொழி நபர்களின் உதவியால் அனுகூலங்கள் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதையும் நிதானமாக செய்வது நல்லது. பணியில் கவனம் தேவை.

மகரம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

மீனம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்ப தேவைகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

வார ராசிப்பலன் – ஏப்ரல் 14 முதல் 21 வரை 

வார ராசிப்பலன் – ஏப்ரல் 14 முதல் 21 வரை 

சித்திரை 1 முதல் 7 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சூரிய புதன் செவ் ராகு
சுக்கி திருக்கணித கிரக நிலை

14.04.2019

சந்தி
கேது சனி குரு(வ)

கிரக   மாற்றம்

14-4-2019 மேஷத்தில் சூரியன் பகல் 02.09 மணிக்கு

16-4-2019 மீனத்தில் சுக்கிரன் அதிகாலை 01.04 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

கடகம்      13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.

சிம்மம்      15-04-2019 அதிகாலை 05.57 மணி முதல் 17-04-2019 காலை 07.15 மணி வரை.

கன்னி      17-04-2019 காலை 07.15 மணி முதல் 19-04-2019 காலை 08.25 மணி வரை.

துலாம்      19-04-2019 காலை 08.25 மணி முதல் 21-04-2019 பகல் 11.10 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

17.04.2019 சித்திரை 04 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

18.04.2019 சித்திரை 05 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசி திதி ஹஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. அதிசாரமாக குரு 9-லும், சுக்கிரன் லாப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. முருக வழிபாடும் விஷ்ணு வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  17, 18, 19, 20.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொளாதார நிலை மேலோங்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சாதகமான பலன்களை அடையலாம். சொந்த பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு கைநழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது நல்லது. சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் சென்றால் மேன்மையான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் –  14, 19, 20.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் புதன் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் கைகூடும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் ஏற்பட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  15, 16.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது, 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். அம்மன் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  14, 17, 18.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிறப்பான பணவரவு, இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நல்ல லாபத்தினை அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதோடு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு கரம் நீட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். சிவ வழிபாடு செய்வது, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  15, 16, 19, 20.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முடிந்த வரை நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறப்பு. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அடைய வேண்டிய லாபத்தை அடைவார்கள். வர வேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதம் ஏற்பட்டாலும் வேலைபளு சற்று குறையும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது, பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  14, 17, 18.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

பேச்சிலும் செயலிலும் முடிந்த வரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதும் 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றியினை தரும் அமைப்பாகும். வலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் சற்று குறையும். கணவன்– மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் இருப்பது நல்லது. பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –  14, 15, 16, 19, 20.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களுடைய நெருக்கடிகள் குறையும். எந்த சிக்கலையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஏற்படும் சிறு சிறு விரயங்களை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய மருத்துவ செலவுகள் உண்டாகாது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கையும் காபாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் வழியிலும் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பே கிடைக்கும். சனி பகவான் வழிபாடு செய்வது, சனிக்கவசங்கள் படிப்பது நன்மையை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –  15, 16, 17, 18.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் புதன் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் எதிர்பாராத தனசேர்க்கை கிடைக்கும் என்றாலும் ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், உடனிருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் –  17, 18, 19, 20.

சந்திராஷ்டமம் – 13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கைகூட தாமத நிலை உண்டாகும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விடுவீர்கள். பிரதோஷ தினத்தன்று சிவ பெருமானையும், நந்தி வழிபாட்டையும் மேற்கொண்டால் சகல பிரச்சினைகளும் விலகும். பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  14, 19, 20.

சந்திராஷ்டமம் – 15-04-2019 அதிகாலை 05.57 மணி முதல் 17-04-2019 காலை 07.15 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, கேது சஞ்சரிப்பதும் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். சிறப்பான பண வரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விஷ்ணு வழிபாடு செய்வது, ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –  14, 15, 16.

சந்திராஷ்டமம் – 17-04-2019 காலை 07.15 மணி முதல் 19-04-2019 காலை 08.25 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி சிறப்பாக கிடைக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது சிறப்பு. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது உத்தமம். சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி உண்டாகும். சிவ வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்வது நல்லது. பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வந்தால் மனமகிழும் மாற்றங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –  15, 16, 17, 18.

சந்திராஷ்டமம் – 19-04-2019 காலை 08.25 மணி முதல் 21-04-2019 பகல் 11.10 மணி வரை.

 

Today rasi palan – 12.04.2019

Today rasi palan – 12.04.2019

இன்றைய ராசிப்பலன் –  12.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

12-04-2019, பங்குனி 29, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 01.24 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. திருவாதிரை நட்சத்திரம் காலை 09.54 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  

சூரிய புதன் செவ் சந்தி ராகு
சுக்கி திருக்கணித கிரக நிலை

12.04.2019

கேது சனி குரு(வ)

இன்றைய ராசிப்பலன் – 12.04.2019

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழிலில் சற்று மந்த நிலை காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும். மன நிம்மதி ஏற்படும்.

மிதுனம்

இன்று நீங்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் வழியில்  மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள்.

கடகம்

இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்

இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவர். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை.

தனுசு

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நற்பலன்கள் உண்டா-கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

 

Today rasi palan – 11.04.2019

Today rasi palan – 11.04.2019

இன்றைய ராசிப்பலன் –  11.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

11-04-2019, பங்குனி 28, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 02.42 வரை பின்பு வளர்பிறை சப்தமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 10.25 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சூரிய செவ் சந்தி ராகு
புதன் சுக்கி திருக்கணித கிரக நிலை

11.04.2019

கேது சனி குரு(வ)

இன்றைய ராசிப்பலன் –  11.04.2019

மேஷம்

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில்  முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சுப காரியங்கள் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணியில் கவனம் தேவை.

தனுசு

இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். புதிய பொருட்கள் சேரும். கூட்டு தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பெற்றோர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

Today rasi palan – 10.04.2019

Today rasi palan – 10.04.2019

இன்றைய ராசிப்பலன் –  10.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

10-04-2019, பங்குனி 27, புதன்கிழமை, பஞ்சமி திதி பகல் 03.36 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. ரோகிணி நட்சத்திரம் காலை 10.33 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஸ்ரீ லட்சுமி பஞ்சமி. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சூரிய சந்தி செவ் ராகு
புதன் சுக்கி திருக்கணித கிரக நிலை

10.04.2019

கேது குரு சனி

இன்றைய ராசிப்பலன் –  10.04.2019

மேஷம்

இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மிதுனம்

இன்று உங்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளை பெறுவீர்கள். கடன்கள் ஓரளவு குறையும்.

கடகம்

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும்.

சிம்மம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் உள்ள மந்தநிலை மாறும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன் திரும்ப பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மன அமைதி பெற தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

துலாம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் செய்ய நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களால் இருந்த பிரச்சினைகள் விலகும். திடீர் பயணம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடன்பிறப்புகள் வழியில் சுப செலவுகள் வந்து சேரும். தொழில் வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறைய சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது.

கும்பம்

இன்று உங்களுக்கு வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழிலில் உங்கள் மதிப்பு கூடும். குடும்பத்தில் தாராள பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

Today rasi palan – 09.04.2019

Today rasi palan – 09.04.2019

இன்றைய ராசிப்பலன் –  09.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

09-04-2019, பங்குனி 26, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி மாலை 04.07 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. கிருத்திகை நட்சத்திரம் காலை 10.19 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் காலை 10.19 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. அங்கார சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சூரிய சந்தி செவ் ராகு
புதன் சுக்கி திருக்கணித கிரக நிலை

09.04.2019

கேது குரு சனி

இன்றைய ராசிப்பலன் –  09.04.2019

மேஷம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும்.

ரிஷபம்

இன்று மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.

கன்னி

இன்று நீங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். புதிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். சேமிப்பு குறையும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உடன்வேலை செய்பவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சினை சற்று குறையும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் முழுமனதுடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும்.  வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும்.

மகரம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். எளிதில் முடியும் காரியம் கூட தாமதமாக முடியும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தொழிலில் இருந்த மந்த நிலை மாற சற்று கூடுதல் முயற்சி தேவை. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளிமாநில நண்பர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் சுமை ஓரளவு குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நபர்கள் அறிமுகம் உண்டாகும்.

Today rasi palan – 08.04.2019

Today rasi palan – 08.04.2019

இன்றைய ராசிப்பலன் –  08.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

08-04-2019, பங்குனி 25, திங்கட்கிழமை, திரிதியை திதி மாலை 04.16 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பரணி நட்சத்திரம் காலை 09.43 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் காலை 09.43 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சூரிய சந்தி செவ் ராகு
புதன் சுக்கி திருக்கணித கிரக நிலை

08.04.2019

கேது குரு சனி

இன்றைய ராசிப்பலன் –  08.04.2019

மேஷம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நவீன பொருட்களை வாங்குவீர்கள்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு காலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

சிம்மம்

இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். மாணவர்களின் படிப்பில் சற்று மந்தநிலை காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கன்னி

இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.54 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தாமதப் பலன் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு செய்வது உத்தமம்.

துலாம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 03.54 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் வசூலாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மன-ஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.

மகரம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.

மீனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெற முடியும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும்.

Today rasi palan – 07.04.2019

Today rasi palan – 07.04.2019

இன்றைய ராசிப்பலன் –  07.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

07-04-2019, பங்குனி 24, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி மாலை 04.01 வரை பின்பு வளர்பிறை திரிதியை.  அஸ்வினி நட்சத்திரம் காலை 08.44 வரை பின்பு பரணி. சித்தயோகம் காலை 08.44 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

சூரிய சந்தி செவ் ராகு
புதன் சுக்கி திருக்கணித கிரக நிலை

07.04.2019

கேது குரு சனி

இன்றைய ராசிப்பலன் –  07.04.2019

மேஷம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சற்று குறையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களும் நிறைவேறும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களின் ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

துலாம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினைகள் குறையும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.

தனுசு

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது.

மகரம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களின் உதவியுடன் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

Today rasi palan – 06.04.2019

Today rasi palan – 06.04.2019

இன்றைய ராசிப்பலன் –  06.04.2019

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

06-04-2019, பங்குனி 23, சனிக்கிழமை, பிரதமை திதி பகல் 03.23 வரை பின்பு வளர்பிறை துதியை. ரேவதி நட்சத்திரம் காலை 07.22 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் காலை 07.22 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். யுகாதி தெலுங்கு வருட பிறப்பு.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சூரிய சந்தி செவ் ராகு
புதன் சுக்கி திருக்கணித கிரக நிலை

06.04.2019

சனி கேது குரு

இன்றைய ராசிப்பலன் –  06.04.2019

மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில்  முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் பிரச்சினைகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ள நெருகக்கடிகள் குறையும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணியில் கவனம் தேவை.

துலாம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுப காரியங்கள் எளிதில் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பெற்றோர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

மீனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் மனநிம்மதி சற்று குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

 

வார ராசிப்பலன்- – ஏப்ரல் 7 முதல் 13 வரை 

வார ராசிப்பலன்- – ஏப்ரல் 7 முதல் 13 வரை 

பங்குனி 24 முதல் 30 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சூரிய சந்தி செவ் ராகு
புதன் சுக்கி திருக்கணித கிரக நிலை

 

கேது குரு சனி

கிரக   மாற்றம்

10-04-2019 குரு வக்ர ஆரம்பம் இரவு 10.08 மணிக்கு

12-04-2019 மீனத்தில் புதன் அதிகாலை 04.24 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மேஷம்    06-04-2019 காலை 07.23 மணி முதல் 08-04-2019 மாலை 03.53 மணி வரை.

ரிஷபம்    08-04-2019 மாலை 03.53 மணி முதல் 10-04-2019 இரவு 10.33 மணி வரை.

மிதுனம்   10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.

கடகம்     13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

10.04.2019 பங்குனி 27 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களையும் உடனிருப்பவர்களையும் அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 8, 11, 12.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறமுடியும். மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் முருக வழிபாடு செய்வதும் மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10, 13.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்குப் பின் சாதகப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டு வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 7, 8, 11, 12.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்ககூடிய அமைப்பாகும். எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். விஷ்ணு வழிபாட்டையும் லட்சுமி வழிபாட்டையும் செய்தால் குடும்பத்தில சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 8, 9, 10, 13.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்கின்ற போது நிதானம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். 7-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது சிக்கல்கள் குறையும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவாலயங்களுக்கு சென்று சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    9, 10, 11, 12.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடி, குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பார்வதி தேவியை வணங்குவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    11, 12, 13.

சந்திராஷ்டமம் – 06-04-2019 காலை 07.23 மணி முதல் 08-04-2019 மாலை 03.53 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கி புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கடன்களும் சற்று குறையும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற கடின உழைப்பு தேவை. துர்கையம்மனை வழிபட்டு வந்தால் துயரங்கள் நீங்கும்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 13.

சந்திராஷ்டமம் –      08-04-2019 மாலை 03.53 மணி முதல் 10-04-2019 இரவு 10.33 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முடிந்தவரை முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களையும் நெருங்கியவர்களையும் அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். மாணவர்கள் எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சனிபகவான் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –    7, 8, 9, 10.

சந்திராஷ்டமம் –      10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பது தேவையற்ற அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. கொடுத்த வாக்கை காபாற்ற சற்று சிரமபட வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பெரிய முதலீடு கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    9, 10, 11, 12.

சந்திராஷ்டமம் –      13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக நிலவிய மறைமுக நெருக்கடிகள் எல்லாம் விலகி நிம்மதி ஏற்படும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். முடிந்தவரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, சனி கவசங்கள் படிப்பது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 11, 12, 13.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சனி, கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைத்து பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்தக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறமுடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். முருக வழிபாடு செய்வது சஷ்டி விரதம் மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –    7, 8, 13.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்து வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10.