Today Rasi Palan 27.10.2017

இன்றைய ராசிப்பலன் –  27.10.2017

முனைவர் முருகு பால முருகன்

 இன்றைய  பஞ்சாங்கம்

27-10-2017, ஐப்பசி -10, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 02.45 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.41 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் பின்இரவு 02.41 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

                திருக்கணித கிரக நிலை

27.10.2017

ராகு
கேது
சந்தி சனி சூரிய குரு புதன்   சுக்கி செவ்

மேஷம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய சொத்துக்கள் வாங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலனை தரும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

கடகம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொன் பொருள் சேரும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஊழியர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் உதவியால் கடன்சுமை ஓரளவு குறையும்.

துலாம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை அனுசரித்து சென்றால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

விருச்சிகம்

இன்று மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். வீட்டில் ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சிக்கனமுடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் கிட்டும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகளால் அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

கும்பம்

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

மீனம்

இன்று வியாபாரத்தில் உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *