Magara rasi – Sani peyarchi 2017 to 2020

மகரம்
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்
இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனத்தெளிவு கொண்ட மகர ராசி நேயர்களே! லாப ஸ்தானமான 11-ல் இதுவரை சஞ்சரித்து வந்த உங்கள் ராசியதிபதி சனி வாக்கியப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை விரயஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி தொடங்கி உள்ளது. மகர ராசிக்கு சனி ராசியதிபதி என்பதால் அதிககெடுபலன்களை ஏற்படுத்தமாட்டார். தொழில், வியாபார நிலையில் மந்தமான நிலைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். எதிர்பாராத வீண் விரயங்களைக் கொடுக்கும். கடன்கள் ஏற்படும். உடல் நிலையில் சோர்வு, கை, கால் அசதி போன்றவை ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் தெம்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கக்கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது உத்தமம். குடும்பத்தில் உண்டாகக்கூடிய கருத்து வேறுபாடுகளால் மனநிம்மதியற்ற நிலை உண்டாகும். நெருங்கியவர்களை மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கத் தாமதம் உண்டாவதோடு தேவையில்லாத இடமாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப்போகும்.
    சனி விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு பகவான் 5-10-2018 முதல் 28-10-2019 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் இக்காலங்களில் எதிலும் சற்று அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்கு ஏற்றம் கொடுக்கும். தடைப்பட்டத் திருமண சுப காரியங்கள் தடைவிலகி கைகூடும். நல்லவரன்கள் தேடிவரும். சிலருக்கு விரும்பியவர்களையே கைப்பிடிக்கும் வாய்ப்புகள் அமையும். நெருங்கியவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். புத்திரபாக்கியமும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம்  முன்னேற்றமடையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது வீண்அலைச்சலைக் குறைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தற்போது 1, 7-ல் சஞ்சரிக்கும் கேது, ராகு  13-2-2019 முதல் 1-9-2020 வரை ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால்  மறைமுக எதிர்ப்புகள், கடன் பிரச்சினைகள் யாவும் சற்றுக் குறையும்.

உடல் ஆரோக்கியம்  
  உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவு களை உண்டாக்கும் என்றாலும் அன்றாடப் பணிகளில் தெம்புடனேயே செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் உண்டாகக்கூடிய பிரச்சினைகளால் டென்ஷனும் மனக்கவலையும் உண்டாகும். 

குடும்பம், பொருளாதாரநிலை 
  குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். பணவரவுகளில் நெருக் கடிகள் தோன்றுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.உற்றார்-உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். சுபகாரியங்கள் தடையுடன் நிறைவேறும். 

கொடுக்கல்- வாங்கல்
  கமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் போன்ற துறைகளில் ஓரளவுக்கு லாபம் காணமுடியும். கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத சூழ் நிலைகள் உண்டாகும். பணவிஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய் வார்கள். கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை என்பதுபோலாகும். வீண்விரயங்கள் உண்டாகும். உங்களுக்கு ஏற்படக்கூடிய வீண் வம்பு, வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.

தொழில், வியாபாரம் 
  தொழில், வியாபாரத்தில் மந்தமான நிலை நிலவினாலும் தேக்க மின்றி லாபம் காணமுடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கூட்டாளி களிடமும், உடன்பணிபுரியும் தொழிலாளிகளிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள்.

உத்தியோகம் 
  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதுடன் கூடுதல் பொறுப்புகளும் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டி வரும். பணயில் சற்று கவனமுடன் செயல்படுவதே நல்லது. உடல் நலக் குறைவுகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தானிருக்கும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க நேரிடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

பெண்கள் 
 பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தியளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். பணவரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். ஆடை ஆபரணங்களும், நவீன பொருட்சேர்க்கைகளும் உண்டாகும். தேவை யற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.

அரசியல்
  கட்சியில் எதிர்பாராத சிக்கல்களை சந்திக்க நேர்ந்தாலும் உங்கள் பேச்சுத்திறமையால் எதையும் சாதித்துவிடுவீர்கள். எதிலும் சற்று எச்சரிக் கையுடன் நடந்து கொள்வது உத்தமம். மக்களின் தேவைகளை நிறை வேற்றி நற்பெயர் எடுப்பீர்கள். உடனிருப்பவர்களால் பெயர், புகழுக்கு, பங்கம் ஏற்படலாம். மேடைப் பேச்சுகளில் நிதானத்தைக் கையாள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

விவசாயிகள்
  விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபங்கள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்கள் கிடைக்க சிரமம் உண்டாகும். உங்கள் உடல்நிலையும் பாதிப்படைவதால் சரிவரப் பணிகளைச் செய்துமுடிக்க முடியாது.பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பங்காளிகளை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது.

கலைஞர்கள்
  நல்ல வாய்ப்புகள் கைநழுவிப்போனாலும் இருக்கும் வாய்ப்புகளை வைத்தே முன்னேறிவிடுவீர்கள். இரவு பகலாக உழைக்க வேண்டி யிருப்பதால் உடல்நிலை சற்று சோர்வடையும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். போட்டிகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் அலைச்சல்களும் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தொகை சற்று இழுபறிக்குப்பின் கிடைக்கும். சேமிக்க முடியாது.

மாணவ- மாணவியர்
  கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதன்மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனம் தேவை. கவனம் சிதறும். தேவையற்ற நட்புகள் உங்களை வேறுபாதைக்கு இழுத்துச்செல்லும். முடிந்தவரை வீண்பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை
  சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் பணவரவைக் காட்டிலும் எதிர்பாராத வீண்செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. குருவும் சாதகமின்றி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகளையும், மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைப்படும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் நிலவும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதம் ஏற்படும். விநாயகர், தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை
  விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். குரு 4-7-2018 வரை வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் சிறப்பாகக் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். பணம் பலவழிகளில் தேடிவரும். பொன்பொருள் சேரும். நீண்டநாட்களாக எண்ணிய எண்ணங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நனவாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிட்டும். நண்பர்களின் ஆதரவுகள் நற்பலனை உண்டாக்கும். கடன்கள் சற்றுக் குறையும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து, விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.  துர்க்கையம்மனை வழிபடுவது மிகவும் உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை
  சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் குருவின் வீடான ஜென்ம ராசிக்கு சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் 5-10-2018 முதல், குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக அமைந்து கடன்கள் குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். சிலருக்கும் அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர் களுக்குப் பணியில் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். துர்க்கையம்மனை வழிபடவும்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை
  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 12-ல் சஞ்சரித்தாலும் குரு 11-ல் சாதமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர் புடையவர்களால் லாபம் உண்டாகும். ஜென்ம ராசிக்கு 1,7-ல் சஞ்சரிக்கும் கேது- ராகு 13-2-2019 முதல், ராகு 6-ல், கேது 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் வெற்றிமேல் வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்கள் உதவிகரமாக இருப் பார்கள். ஆடை ஆபரணம் சேரும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். சனிக்குப் பரிகாரமாக ஆஞ்சநேயர் வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை
 சனி பகவான் 12-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக அமையும். புதிய பொருட் சேர்க்கைகள் உண்டாகும். பொன் பொருள் சேரும். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உற்றார்- உறவினர் ஆதரவு சிறப்பாக அமைந்து உற்சாகத்தை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களில் வெற்றிமேல் வெற்றியை அடையமுடியும்.தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் நிறைய போட்டிகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.  உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட உயர்வுகள் கிட்டும். வேலைப்பளு குறையும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குரு பகவான் 11-ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் 6-8-2019 வரை வக்ரகதியிலிருப்பதால் எதிலும் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை
 சனி பகவான் சர்ப்ப கிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று விரய ஸ்தானமான 12-ல் சாதகமற்று சஞ்சரித்தாலும், 6-ல் ராகு, 11-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களுக்கு எதிரிகளை வெல்லக்கூடிய பலமும் வலிமையும் கூடும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். நெருங்கியவர்கள் அனுசரித்து நடப்பதால் அனுகூலமான பலனை அடை வீர்கள். எதிர்பாராத பணவரவுகள் தேடிவரும். உத்தியோகஸ்கத்தில் உயர்வுகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில், வியா பாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடித்து ஏற்றமிகு பலனை அடைவீர்கள். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக்கொள்வதும் வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமுடனிருப்பது நல்லது. விநாயகரை வழிபடவும்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை
  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. 6-ல் ராகு, 11-ல் குரு  சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். இல்வாழ்வில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். புத்திர பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் அன்பும் ஆலோசனைகளும் நற்பலனை அளிப்பதாக அமையும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறு வார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். 29-10-2019 முதல், குரு 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சனி பகவான் வழிபாடு செய்யவும்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை
  சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 12-ல் குரு, கேது சேர்க்கை பெற்று  சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பொறுப்பேற்க வேண்டியிருக்கும். அசையும், அசையா சொத்துகளாலும் வீண்விரயங்கள் உண்டாகும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடினமுயற்சிக்குப் பின்பு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும் என்றாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை
  ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்துசேரும். கூட்டாளிகளையும் தொழிலாளர் களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குரு 12-ல் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சுமாராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களில் தாமதம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது ஏற்றத்தைத் தரும்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை
  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 12-ல் சஞ்சரித்தாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர்களையும் அனுசரித்துச் செய்ய வேண்டியவரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர் களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்றுத் தாமதப்படும். பிறர்செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு விஷயத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை
 சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 12-ல் சஞ்சரிப்பதாலும் குரு ஜென்ம ராசியல் சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்-மனைவிடையே வீண்வாக்குவாதங்கள் தோன்றும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் கைகூடும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகளால் சுபச்செலவு ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதால் லாபம் குறையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். குரு, சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் : 5, 6, 8, நிறம் : நீலம், பச்சை, கிழமை : சனி, புதன், கல் : நீலக்கல்,        திசை : மேற்கு, தெய்வம் : விநாயகர்.
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *